Yarl Forum
தமிழீழ வைப்பகம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=19)
+--- Thread: தமிழீழ வைப்பகம் (/showthread.php?tid=1007)

Pages: 1 2


- aathipan - 03-28-2006

விடுதலைப்புலிகளால் கிளிநொச்சிக்கு நல்ல முன்னேற்றம் தான் ..... அன்றைய கிளிநொச்சி எப்படி இருந்தது... இடிந்து போன கடைகள் தகரத்தால் ஆன பஸ்நிலையம். கூடவே இராணுவமுகாம். எப்போதும் பயந்த்துடன் பயணம்செய்யும் மக்கள். ஆறுகட்டைக்கு முதலே இறங்கி நடக்கவைத்து சோதிக்கும் இராணுவ சோதனைச்சாவடி..... அப்பப்பா பயங்கரம்


- தூயவன் - 03-28-2006

வழிகாட்டி அட்டைகள் அமைக்கப்பட்ட விதத்தில் சிறு வருத்தும் உண்டு. பெரும்பாலும் புலிகளின் நிர்வாகப் பகுதியில் ஆங்கிலமும் தமிழும் ஒரே அழவாகவோ, அல்லது தமிழ்பெரிய எழுத்திலும் ஆங்கிலம் சிறிதாகவும் தான் எழுதப்படும். ஆனால் இங்கே காசாளர் என்பனவெல்லாம் சிறிய தமிழ் எழுத்துக்களால் எழுதப்பட்டிருக்கின்றனவே!!

உரியவர்கள் கவனத்தில் கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.


- மின்னல் - 03-28-2006

aathipan Wrote:விடுதலைப்புலிகளால் கிளிநொச்சிக்கு நல்ல முன்னேற்றம் தான் ..... அன்றைய கிளிநொச்சி எப்படி இருந்தது... இடிந்து போன கடைகள் தகரத்தால் ஆன பஸ்நிலையம். கூடவே இராணுவமுகாம். எப்போதும் பயந்த்துடன் பயணம்செய்யும் மக்கள். ஆறுகட்டைக்கு முதலே இறங்கி நடக்கவைத்து சோதிக்கும் இராணுவ சோதனைச்சாவடி..... அப்பப்பா பயங்கரம்

ஆதிபன் அதைவிட ஓயாத அலைகள் 02 நடவடிக்கை மூலம் கிளிநொச்சி முற்றுமுழுதாக அழிந்த நிலையிலேயே மீட்கப்பட்டிருந்தது.

குண்டு துழைக்காத கட்டடங்களே இல்லை என்னும் அளவிற்கு மிக மோசமான அழிவைச் சந்தித்த கிளிநொச்சி, கிடைக்கப்பெற்ற சிறு ஓய்வு(போர்) காலத்தில் பல கட்டுமானங்களோடு, தற்போதைய நிழல் தமிழீழ அரசின் தலைநகராக தலைநிமிர்ந்து நிற்கிறது.


- I.V.Sasi - 03-29-2006

இந்த படங்களை பார்த்தால் பிக்குமாருக்கு என்னும் கடுப்பு ஏறும் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->