Yarl Forum
புரியுமா புதிர்? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31)
+--- Thread: புரியுமா புதிர்? (/showthread.php?tid=1000)

Pages: 1 2


- வர்ணன் - 02-07-2006

ukraj Wrote:நான் இந்த களத்தை வெகுநாட்களாக பார்த்து வருகின்றேன். இங்கு பெரும்பாலானவர்கள் பொழுது போக்கவே வருகின்றனர். அவர்கள் பொழுது போக்ககவே தமிழ் தேசியம் தொடர்பாக கருத்தாடுகின்றனர்.

தமிழ்த்தேசியம் தொடர்பாக வேலைத்திட்டங்களை செய்வதில்லை. (சும்மா ரீல் விடவேண்டாமட நாங்கள் வெளியில சொல்வதில்லை என்று). அண்மையில் கள உறவுகளால் பலபக்கங்களில் எழுதப்பட்ட தைபொங்கல் ஒன்றுகூடலுக்கு என்ன நடந்தது?
http://www.yarl.com/forum/viewtopic.php?t=8138
NTT தொடர்பாக எழுதப்பட்ட வீர வசனங்கள் எத்தனை?
http://www.yarl.com/forum/viewtopic.php?t=8167
எமது தேசம் தொடர்பாக எழுதியவர்கள் எத்தனைபேர்?
http://www.yarl.com/forum/viewtopic.php?t=9354

இது தேசியத்தின் பால்
பிரித்தானிய தகவலில் எழுதியவர்கள் எத்தனைபேர்?http://www.yarl.com/forum/viewtopic.php?t=3105&start=195

யு-கே-ராஜ் -அவர்களே
தேசவிடுதலைக்கு ஆதரவாய் இருப்பவர்களை - ஊக்குவிக்கவும்- அவர்களை ஒருங்கிணைப்பதும் தான் -யாழ்களத்தின் கடமை -என்பது என் எண்ணம்!

பொழுது போக்க வருகிறோமா?

ஹ்ம்ம்- பொழுது போக்கணும் என்றால்-
கணனியை பாவனையில் வைத்திருப்பவர்கள்-
தேசியத்துக்கு வலுவூட்டும்- யாழ் களத்துக்கா வர நினைப்பார்கள்?

தேசத்தை நேசிப்பவர்கள்-இங்கு வருகிறார்கள்-!
தேசத்தை காட்டிகொடுத்து- மஹிந்த-ராஜ பக்ஸ விடம் -கொழும்பு -7 இல் இலவச-சொகுசு வீடு வாங்கவும் சிலர் வருகிறார்கள்!

மற்றும்படி -மேலே-ஏதேதோ சொன்னீர்கள்- கீழே பதில் இருக்கு பாருங்கள்!

தமிழ்தேசிய திட்டங்களாவன- இணையங்களை முதல்நிலை படுத்தி- அதனூடு- செயற்திட்டங்களை வகுத்து வளர்வன -அல்ல-சகோதரா-!

அதனை சிலர் செய்கிறார்கள்- எங்களுக்கு எதிராய்- அந்த உப்புச்சப்பு அற்ற வேலைகளை செய்பவர்கள்- யாரென்று உங்களுக்கு தெரியாம போயிடுமா என்ன?- Arrow யு-கே-ராஜ்!


- ukraj - 02-07-2006

உங்களுக்கு தெரிந்ததெல்லாம் குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டத்தான்.


- ukraj - 02-07-2006

இன்றைய சூழலில் இணையம் எவ்வளவு முக்கியமானது என்று இன்னும் உமக்கு புரியவில்லை என்பதை நினைக்க கவலையாக இருக்கிறது.
<b>நேற்று NTT இல் நடந்த நிலவரம் </b>நிகழ்ச்சியில் அந்த பெண்மணி சொன்ன கருத்துக்களை விளங்கிக் கொள்ளக்கூடிய அறிவு கூட உங்களிடம் இல்லாதிருப்பதை முன்னிட்டு என்னால் வருத்தப்பட மட்டுமே முடியும்.


- ukraj - 02-07-2006

நீங்கள் கூறுகின்ற தமிழ்தேசிய திட்டங்களை நடைமுறைப்படுத்த ஊடகத்தின் பங்கு மிகவும் அவசியமானது.

சும்மா எங்கடை ஆட்களின்ர கதவில போய் தட்டுவதில் எந்த பிரயோசனமும் இல்லை. வெளியில் நடப்பவற்றை உற்றுப் பாருங்கள். சிந்திக்கப்பழகுங்கள்.

சரி நீங்கள் கூறுவது போல் தமிழ்தேசிய திட்டங்களுக்கு இணையங்கள் அவசியம் இல்லையெனின் ஏன் நூற்றுக்கணக்கான இணையங்கள் தமிழில் உலவுகின்றன?
பொழுது போக்கிற்காகவே என்பதை ஏறறுக்கொள்கிறீர்களா?


- வர்ணன் - 02-07-2006

<b>சரி நீங்கள் கூறுவது போல் தமிழ்தேசிய திட்டங்களுக்கு இணையங்கள் அவசியம் இல்லையெனின் ஏன் நூற்றுக்கணக்கான இணையங்கள் தமிழில் உலவுகின்றன? </b>

மின்சார கண்ணா ராஜ்-
நீங்க ஏதோ ஒரு முடிவோட வந்திருக்கிங்க எண்டு மட்டும் தெரியுது:!

நூற்றுக்கணக்கான தமிழ் இணையங்கள் உலவ வெளிக்கிட்டது- எல்லாம் ஒரே நோக்கம் கொண்டா?

அல்லது - இணையங்களின் உதவியால்தான் நாங்க சிங்களவனை அடிச்சு கலைச்சோமா- பெருமளவு எங்க நில பரப்பில இருந்து?

சகோதரா- உங்களை விடவோ- இல்ல -

உலகத்தில் எல்லாரயும் விடவோ - எனக்கு எந்த அறிவும் இல்லை!
இதை -பகிரங்கமா ஒப்புக்கொள்ளுறதில எனக்கு எந்த வெட்கமும் இல்ல-!
8)


- தூயவன் - 02-07-2006

ukraj Wrote:நான் இந்த களத்தை வெகுநாட்களாக பார்த்து வருகின்றேன். இங்கு பெரும்பாலானவர்கள் பொழுது போக்கவே வருகின்றனர். அவர்கள் பொழுது போக்ககவே தமிழ் தேசியம் தொடர்பாக கருத்தாடுகின்றனர்.

தமிழ்த்தேசியம் தொடர்பாக வேலைத்திட்டங்களை செய்வதில்லை. (சும்மா ரீல் விடவேண்டாமட நாங்கள் வெளியில சொல்வதில்லை என்று). அண்மையில் கள உறவுகளால் பலபக்கங்களில் எழுதப்பட்ட தைபொங்கல் ஒன்றுகூடலுக்கு என்ன நடந்தது?
http://www.yarl.com/forum/viewtopic.php?t=8138
NTT தொடர்பாக எழுதப்பட்ட வீர வசனங்கள் எத்தனை?
http://www.yarl.com/forum/viewtopic.php?t=8167
எமது தேசம் தொடர்பாக எழுதியவர்கள் எத்தனைபேர்?
http://www.yarl.com/forum/viewtopic.php?t=9354
பிரித்தானிய தகவலில் எழுதியவர்கள் எத்தனைபேர்?http://www.yarl.com/forum/viewtopic.php?t=3105&start=195


மன்னிக்க வேண்டும். யுகேராஜ்

யாழ்களத்தின் பொங்கல் ஒன்று கூடலுக்கு இளைஞன் எடுத்த முயற்சி வரவேற்கப்பட்டாலும், அது எவ்வித பலனையும் இப்போதைக்கு தராது என்பதால் தான் கள உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லை. மற்றும் சுனாமி முடிந்து ஒரு வருட காலத்தில் அவ்வகையான நிகழ்ச்சியை ஒழுங்கு செய்வதும் சரியாகப் படவில்லை.

மற்றது நீர் சொல்வது போல போராட்டத்துக்கு எம் களஉறவுகள் பங்களிப்பு வழங்காமல் இருக்கின்றனர் என்ற எடுத்தஎடுப்பிலான வாதம் ஏற்புடையதல்ல. பெரும்பாலானவர் இயலுமான உதவிகளைச் செய்து கொண்டிருக்கிறனர். ஆனால் இதைப் பகிரங்கப்படுத்தி, புகழ் தேடவேண்டிய தேவை அவர்களுக்கு இல்லை. அப்படி புகழ் தேடவேண்டியவர்களாக தமிழீழத்தின் வரலாற்றில் தாங்களும் இடம்பெற வேண்டும் என்று தற்புகழ்ச்சி தேடும் நபர்களுக்குத் தான் அது தேவையானதாக இருக்கும்.

எனவே மேலெழுந்த வாரியாக குற்றச்சாட்டுக்களை வைப்பதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்


- ukraj - 02-07-2006

தூயவா சுனாமி<b>(நடந்த 1வருடத்திற்குள் )</b> நினைவு <b>(நிகழ்ச்சிகள்)</b>என்று நிகழ்வு நடாத்தியோர் முட்டள்கள். அப்படித் தானே?

நீங்கள் நினைப்பது போல் நான் பண உதவிகளை குறிப்பிடவில்லை. சென்ற ஞாயிற்றுக் கிழமை நடந்த நிலவரம் நிகழ்வை பாருங்கள். அந்த பெண் கூறிய கருத்துக்களை செவிமடுங்கள்.

<b>நான் கூறிப்பிட(அல்லது நினைத்து எழுத) தவறிய விடயம்.</b>


- அருவி - 02-07-2006

ukraj Wrote:நீங்கள் தான் முதலில் இந்த தலைப்பை உருவாக்கி உங்கள் அச்சத்தை வெளிக்காட்டியுள்ளீர்கள்.

இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டுமெனின் மாற்றுக் கருத்துக் கொண்;டோரையும் உள்வாங்க வேண்டும்.

மாற்று்கருத்து என்பதற்கு தெளிவான விளக்கம் தாருங்கள் அதுபற்றி அதற்குப் பின் கதைப்போம். மாற்றுக்கருத்து என்று உங்கள் குப்பைகளை எங்கள் தலைகளில் கொட்ட நினைக்காதீர்கள்.


- அருவி - 02-07-2006

ukraj Wrote:தூயவா சுனாமி நினைவு என்று நிகழ்வு நடாத்தியோர் முட்டள்கள். அப்படித் தானே?

நீங்கள் நினைப்பது போல் நான் பண உதவிகளை குறிப்பிடவில்லை. சென்ற ஞாயிற்றுக் கிழமை நடந்த நிலவரம் நிகழ்வை பாருங்கள். அந்த பெண் கூறிய கருத்துக்களை செவிமடுங்கள்.

சுனாமி நினைவு நிகழ்வையும் யாழ்கள பொங்கல் விழாவினையும் ஒன்றாக எண்ணி கருத்துவைக்கிறீர்களே :roll: :wink: :roll:


- தூயவன் - 02-07-2006

[quote="ukraj"]தூயவா சுனாமி நினைவு என்று நிகழ்வு நடாத்தியோர் முட்டள்கள். அப்படித் தானே?

நீங்கள் நினைப்பது போல் நான் பண உதவிகளை குறிப்பிடவில்லை. சென்ற ஞாயிற்றுக் கிழமை நடந்த நிலவரம் நிகழ்வை பாருங்கள். அந்த பெண் கூறிய கருத்துக்களை செவிமடுங்கள்.[/quote

நான் பொங்கல் நிகழ்வு பற்றி மட்டும் தானே சொல்லியிருக்கின்றேன். அப்படியிருக்க சுனாமியை ஏன் இழுத்துப் பேசுகின்றீர்கள் என்று புரியவில்லை!


- ஈழமகன் - 02-08-2006

ராஜ் முதலில தமிழ் தேசியம் என்றால் என்ன? இதனால் நீர் விளங்கிக் கொண்டது என்ன?


- ukraj - 02-08-2006

<b>பொங்கல் விழா</b> ஒரு கொண்டாட்டமாக ஆரம்பிக்கப்பட்டாலும் பின்னர் அது கள உறவுகளால் தமிழ் மக்களுக்கு பயன் தரகூடியவாறு அமையவேண்டும் என்று கள உறவுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

எனவே <b>பொங்கல் விழா</b> என்று தலைப்பிட்டு எழுதியவர் ஒரு கொண்டாட்டமாக கருதி தொடக்கினாலும் பின்னர் அது கள உறவுகளால் மாற்றியமைக்கப்பட்டது.


- Mathan - 02-10-2006

இந்த தலைப்பில் கள உறுப்பினர்கள் அவசியமற்ற மோதல்களை தவிர்த்து கொள்ளுங்கள் நன்றி