![]() |
|
நடப்பு அரசியல் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: நடப்பு அரசியல் (/showthread.php?tid=7366) |
- Mathan - 04-05-2004 AJeevan Wrote:[quote=BBC]யார் மகிந்த ராஜபக்ஷவா? இன்னும் முடிவாகவில்லை. ஆனால் சந்திரிகா நேற்றிலிருந்து மகிந்த ராஜபக்ஷவுடன் பேசிக் கொண்டிருக்கிறார். அது என்னவென்று அடுத்தவர்களுக்கே தெரியவில்லை. சிலவேளை அவரை சமாதானப்படுத்தும் முயற்சியாக இருக்கலாம். எது இருப்பினும் JVP இன்றைய வெற்றியில் முக்கிய பங்கு வகித்திருப்பதை எவராலும் மறுக்க முடியாது. இவர்களையும் தவிர்த்து, சிங்கள மக்கள், ஒரு சிங்கள கத்தோலிக்கரோ அல்லது கிறிஸ்தவரோ கூட அதிபராகவோ அல்லது பிரதமராகவோ வரக்கூடாது என்ற எண்ணத்துடன் வாழும் போது ஒரு தமிழர் இவர்களால் நியமிக்கப்படுவார் என்ற பேச்சு, வாக்கு வேட்டைக்கான ஒரு விளம்பர தந்தரமாகவே கருதலாம். அப்படியான ஒரு முடிவு வருமானால் அடுத்த தேர்தல் உடனடியாக வருவதற்கு அதுவே வாய்ப்பை உருவாக்கும். அல்லது 2 வருடத்துக்கு மட்டுமே செல்லுபடியாகும் அதிபர் நிலையிலுள்ள சந்திரிகா, அதிபர் பதவியையே கூண்டோடு அழித்து விட்டு வருவதற்கு முன், ஒரு முத்திரை(Stamp)யாக கதிர்காமரை தற்போதைக்கு பயன்படுத்தலாம்?????????????? <span style='font-size:25pt;line-height:100%'> இதுவும் அரசியல்தான் சாமி</span> பிரதமர் பதவிக்கு போட்டியிடும் மகிந்த ராஜபக்ஷ மற்றும் அனுராவை சமாளிப்பதற்காக பிரதமர் பதவி கதிர்காமருக்கு கொடுக்கப்படலாம். அதனுடன் கதிர்காமர் ஜேவிபியுடன் சுமூகமான உறவுகளை கொண்டுள்ளதுடன் அவர் சந்திரிகாவின் விசுவாசியும் கூட. ஜனாதிபதி, பிரதமர் இருவரும் ஒரே கட்சியாக இருக்கும்போது பிரதமருக்கு பெரிய முக்கியத்துவம் இருக்காது. சந்திரிகாவின் ஜனாதிபதி பதவி இன்னும் 2 வருடத்தில் முடிந்துவிடும். அதன் பின் அவர் அந்த பதவிக்கு போட்டியிட முடியாது. அப்போது அவர் நிறைவேற்று ஜனாதிபதி பதவியை மாற்றிவிட்டு பிரதமராக பதவியேற்க முயற்சிப்பார் என்றே நானும் நினைக்கின்றேன், சந்திரிகாவின் தற்போதைய தேவை தற்காலிக 2 வருட பிரதமரே, - Mathan - 04-05-2004 adipadda_tamilan Wrote:Kalai Wrote:BBC Wrote:<b>தமிழர் அடுத்த பிரதமர்?</b> நீங்கள் விரும்புவது விரும்பாதது வேறு. கதிர்காமர் பிரதமர் பதவி ஏற்றால் தமிழர் இலங்கையில் பிரதமரானர் என்றே வெளி உலக ஊடகங்கள் குறிப்பிடும். - Mathan - 04-05-2004 AJeevan Wrote::?: மட்டக்களப்பில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட தமிழ் வேட்பாளரின் புதைக்கப்பட்ட உடலை யாரோ தோண்டியெடுத்து எரித்திருப்தாக சில தகவல்கள் வருகிறது. விபரம் தெரிந்தவர்கள் கூறுவீர்களா? vasisutha Wrote:அன்னை புூபதியின் இடத்திற்குபக்கத்திலேயே அவரின் உடலும் புதைக்கப்பட்டது. நேற்று இரவு யாரோ சிலர் அதை மீண்டும் வெளியே எடுத்து எரித்துவிட்டு போயிருக்கிறார்கள். ராஜன் சந்தியமூர்த்திக்கு மாமனிதர் பட்டம் கொடுக்கப்பட்டதாக படித்தேன். - vallai - 04-05-2004 கருணாத்தம்பி தனக்குத்தானே தேசபிதா எண்டு பட்டம் குடுத்தது போலத்தான் உதுவும் மாமனிதர் எண்ட பதவிக்கு புலிக்கு வால் பிடிக்க மட்டும் தெரிஞ்சால் போதாது நாலு பேருக்கு நல்லதும் செய்யவேணும் - Mathan - 04-05-2004 adipadda_tamilan Wrote:BBC Wrote:தேர்தல் முடிந்து முடிவுகளும் வெளிவந்துவிட்டது. தேர்தல் முடிவை வைத்து சில விடயங்களை பேசுவோமா? உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.===================================================== மட்டக்கிளப்பு (4 எம்பி), அம்பாறை (1 எம்பி) மாவட்ட எம்பிக்களுடன் கருணா தரப்பு கூட்டம் ஒன்றை நடாத்தவுள்ளது. இவர்கள் கருணா தரப்பின் ஆணையின் கீழ் செயல்படலாம். மற்றும் தமிழர் கூட்டமைப்புக்கு கிடைத்த தேசிய பட்டியல் ஆசனங்களில் ஒன்றை அம்பாறை மாவட்டத்துக்கு வழங்குமாறு சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த தேசிய பட்டியல் பதவிகள் யாருக்கு என்று இன்னும் கூட்டமைப்பு அறிவிக்கவில்லை, அது ஜோசப் பரராஜசிங்கத்துக்கு கூட வழங்கப்படலாம். - adipadda_tamilan - 04-06-2004 BBC Wrote:-----------------------------adipadda_tamilan Wrote:Kalai Wrote:BBC Wrote:<b>தமிழர் அடுத்த பிரதமர்?</b> ஆம், பிபிசி நீங்கள் சொல்லுவதும் சரிதான். ஆனால் கடைசியாக் கிடைத்த செய்திகளின்படி மகிந்த பிரதமராக்கப்பட்டிருப்பதாக அறிகிறேன். - adipadda_tamilan - 04-06-2004 BBC Wrote:------------------------------------------------adipadda_tamilan Wrote:BBC Wrote:தேர்தல் முடிந்து முடிவுகளும் வெளிவந்துவிட்டது. தேர்தல் முடிவை வைத்து சில விடயங்களை பேசுவோமா? உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.===================================================== மட்டக்களப்பு 4 எம்பிக்களில் ஒருவர் கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் தலைமைக்கு விசுவாசமாக வேறு இடம் சென்று விட்டதாகவும் அறியக்கூடியதாகவுள்ளது. மற்றவர்களும் இப்படி செய்யமாட்டர்கள் என்பதற்கு எதுவிதமான உறுதியுமில்லை. மற்றது, தேசியப்பட்டியலில் ஒரு எம்பியை அம்பாறைக்கு கேட்டிருக்கிறார்கள் என்பதும் அறிந்ததுதான் அப்படி கொடுக்கும்போது அது முன்னைனாள் எம்பி சந்திரனெருவுக்கே போய்ச்சேரும். அப்படி அவ்ரோ அல்லது ஜோசப்போ வருமிடத்து அவர்கள் தலைமைக்குத்தான் தங்களது சப்போர்ட்டை கொடுப்பார்கள் என்பது உறுதி. எனவே மற்ற நால்வரும் ஒரு பக்கம் நின்றாலும் அவர்களை எதிர்க்க ஒருவர் வருவார். இதனால் ஒருதலைப்பட்சமாக மற்ற 4 பேரினாலும் ஒரு முடிவும் எடுக்கமுடியாமலும் போகலாம்(இந்த நால்வரும் எந்தனெரமும் மாறலாம் என்பதையும் நாம் இங்கு கவனத்திலெடுக்க வேண்டும்). முக்கியமானது என்னெண்டா, இப்ப எந்த முக்கிய அரசியல் கட்சிக்கும் தமிழரின் சப்போர்ட் தேவைப்படுவதுமாதிரி தெரியவில்லை. - Mathan - 04-06-2004 adipadda_tamilan Wrote:BBC Wrote:------------------------------------------------adipadda_tamilan Wrote:BBC Wrote:தேர்தல் முடிந்து முடிவுகளும் வெளிவந்துவிட்டது. தேர்தல் முடிவை வைத்து சில விடயங்களை பேசுவோமா? உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.===================================================== தமிழ் கூட்டமைப்பின் ஆதரவின்றி மகிந்த் ராஜபக்ஷ ஆட்சியமைக்க கூடியதாக இருந்ததாலேயே தமிழ் கூட்டமைப்பு பிளவுபடகூடிய சந்தர்பம் உருவாகவில்லை என்று நான் நினைக்கின்றேன். கூட்டமைப்பு எம்பிக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்று இருந்திருந்தால் சந்திரிகா கிழக்கின் 5 எம்பிக்களின் ஆதரவை கேட்டிருக்ககூடும். எப்படியே பிளவுபடகூடிய சந்தர்ப்பம் உருவாகவில்லை. அது நல்லதுதான். இப்போது தமிழ் கூட்டமைப்பு முன்னால் இருக்கும் அடுத்த கேள்வி யார் தேசிய பட்டியல் எம்பி என்பது. இதற்கு கிழக்கில் இருந்து ஜோசப் பரராஜசிங்கத்தின் பெயர் அடிபடுகின்றது. தேர்தலில் தோற்ற அவர் தேசிய பட்டியல் எம்பியாக நியமிக்கபடக்கூடாது என்று கிழக்கில் இருந்து (அல்லது கருணா தரப்பில் இருந்து) குரல் கேட்கின்றது. இதைபற்றி உங்கள் கருத்துக்கள் என்ன? - vallai - 04-06-2004 எலக்ஷனிலை நிற்கவே பயந்து பின் கதவாலை உள்ளை வந்த கதிர்காமனுக்கே ஒரு பார்லிமென்றை கட்டிமேய்க்கிற பதவி கிடைக்கலாம் எண்டால் துணிஞ்சு நிண்ட அந்த மனுசனுக்குக் குடுக்கலாம் என்ரை கருத்து முஸ்லிம் ஆக்கள் நிண்டாலும் தோத்துப் போச்சினம் அவையள்ளை ஒருத்தருக்கு குடுக்கலாம் ஒண்டு பாருங்கோ கடைசி வரைக்கும் மாறமாட்டன் எண்டு சத்தியம் வாங்கிப் போட்டுத் தான் குடுக்கவேணும் - yarl - 04-06-2004 கிழக்கில் கோயில் கோயிலா கிராமம் கிராமமாக வெட்டேக்கே கிடந்து அல்லல்பட்டது அந்த மனுசன்தான்அவருக்கு கிட்டாவிட்டால் அது வேறேதொரு ஒரு பொலிட்டிக் என எண்ணவேண்டியதுதான். - nalayiny - 04-06-2004 [size=18]<b>BRAVO </b><!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :wink:
- vanathi - 04-06-2004 இவங்களோடு கவனமாயிருக்க வேணும். கவுந்தவங்களுக்கு வெளிச்சம். - adipadda_tamilan - 04-07-2004 BBC Wrote:adipadda_tamilan Wrote:BBC Wrote:------------------------------------------------adipadda_tamilan Wrote:BBC Wrote:தேர்தல் முடிந்து முடிவுகளும் வெளிவந்துவிட்டது. தேர்தல் முடிவை வைத்து சில விடயங்களை பேசுவோமா? உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.===================================================== ++++++++++++++++++++++++++++++++++++++++ என்னைப்பொறுத்தவரை பரராஐசிங்கத்துக்கு எம்பி பதவி கொடுக்க வேண்டாம் என்று சொல்லுவது ஒரு தனிப்பட்டவரினதோ அல்லது நாலைந்துபேரின் கருத்தாகவே இது இருக்கும்போல் உள்ளது. ஏனெனில் அவருக்கு மக்களின் சப்போர்ட் எப்போவும் நிறைய உண்டென்றுதான் இன்றுவரை நான் அறியக்கூடியதாக உள்ளது. அத்துடண் நீங்கள் கேட்டீர்களோ தெரியாது, கிழக்கு பல்க்லைக்கழக மாணவர்களும் அவரைத்தான் விரும்புகிறார்கள். அவரில் மக்களுக்கு நம்பிக்கை இல்லை என சொல்வது ஒரு மாயை...முற்றுமுழுதான பொய்யாகத்தான் பார்க்கக் கூடியதாகவுள்ளது. - adipadda_tamilan - 04-07-2004 vallai Wrote:என்ரை கருத்து முஸ்லிம் ஆக்கள் நிண்டாலும் தோத்துப் போச்சினம் அவையள்ளை ஒருத்தருக்கு குடுக்கலாம் +++++++++++++++++++++++++++++++++++++ சரியாத்தான் அறிஞ்சு வச்சிருக்கிறியள்.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :roll:
- Mathan - 04-07-2004 தேசிய பட்டியல் எம்பி பதவியை யாருக்கு கொடுத்தாலும் அவர் கட்சி கட்டுப்பாட்டை மீறி நடந்தால் அதை திருப்பி வாங்க கட்சிக்கு சட்டரீதியான உரிமை உண்டு என்று சொல்கின்றார்கள். அதனால் எம்பி பதவியை பெறுபவர்கள் மாறிவிட்டால் என்ன செய்வது என்று யோசிக்க தேவையில்லை என்றூ நினைக்கின்றேன். - Mathan - 04-07-2004 இலங்கையின் புதிய வெளியுறவு அமைச்சராக கதிர்காமர் நியமிக்கப்பட்டிருக்கின்றார் என்று செய்திகள் வந்துள்ளன. முன்பு அவர் வெளியுறவு அமைச்சராக இருந்தபோது மிக திறமையாக செயற்பட்டு புலிகளை பல நாடுகளில் தடை செய்ய வைத்தார். அவரது பிரச்சாரங்கள் வெளிநாடுகளின் புலிகளுக்கு சிரமங்களை உண்டாக்கியது என்றே கூறலாம். அதன்பின் ரணிலின் ஆட்சிக்காலத்தில் புலிகள் சமாதான நடவடிக்கை மற்றும் பல சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு பழைய ஆதரவு நிலைமையை மீள கட்டியெழுப்பி வந்துள்ளார்கள். இந்த நிலைமையில் கதிர்காமர் மீண்டும் வெளியுறது அமைச்சுக்கு வந்துள்ளார். இது எவ்வகையான பாதிப்பை புலிகளுக்கு ஏற்படுத்தும்? - Mathan - 04-08-2004 தேர்தல் முடிந்துவிட்டதால் வாக்கு எண்ணிக்கையை கீழே போட்டுவிட்டு Poll ஐ எடுத்து விடலாம் என்று நினைக்கின்றேன். Poll :: இந்தமுறை தேர்தலில் தமிழ் மக்களின் ஓட்டு யாருக்கு? தமிழர் கூட்டமைப்பு 69% [ 16 ] ஈ.பி.டி.பி 4% [ 1 ] சங்கரியின் சுயேச்சை குழு 21% [ 5 ] ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான முன்ணணி 4% [ 1 ] சுதந்திரக்கட்சி தலைமையிலான முன்ணணி 0% [ 0 ] மற்றயவை 0% [ 0 ] - Mathan - 04-08-2004 இராவணன் மேலே இருக்கும் Poll ஐ எடுத்து விடுகின்றீர்களா? - இராவணன் - 04-08-2004 எடுத்தாச்சு <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Mathan - 04-08-2004 மகி நூடுல்ஸ் மாதிரி இரண்டு நிமிடத்தில் செய்துவிட்டீர்கள். மிக்க நன்றி. |