![]() |
|
சுட்ட கவிதை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: சுட்ட கவிதை (/showthread.php?tid=7322) |
- அனிதா - 08-24-2005 கவிதை நன்று... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Vishnu - 08-24-2005 எனதறைச் சன்னலுக்கு வெளியே சன்னமாய் நனைகிறது உலகம். எதிர்வீட்டு ஓட்டின் மேல் எதுகைத் தாளமிடும் மழைத்துளியும் எங்கிருந்தோ சுப்ரபாதமும் இசையாய் இணைந்து சப்தங்கலள் என்னுள் சந்தோஷம் தூண்ட..... விடிகாலை மழையில் விபரம் புரியா கனவுகளுடன் விவரிக்கவொண்ணா சிலிர்ப்பு என்னுள். என் காதல் கனாக்காலங்களும் என் கவிதைக் களங்களும் என் மனங்கவர் மாந்தரும் என் இதயங்கவர் இசையுமாய் என்னுள் ஏதெதோ மதர்த்த குழப்பங்கள். மடி நிறையப் புத்தகங்கள் . என் மனம் நிறையக் கனவுகள். மனம் கிறங்கி நான் நாற்காலி மடியில் ஞானம் தேடும் புத்தனாய் ஞாலம் வேண்டும் கிறுக்கனாய் என் மோனக் குதிரையில் என் கவிதைக் காதலியுடன் கம்பீரப் பிருத்வியாய். கவிதைச் சம்யுக்தையின் காலொடிக்கும் ஜெயச்சந்திரத் தகப்பனாய் என் தகப்பனின் கடிந்த குரல் என்னை கட்டாந்தரையில் தள்ள...... இனிய மழையே! இதம் தரு கனவுகள் ஈந்த போதி மரமே! ஞானமும் ஞாலமும் ஞாபகமும் திறனும் கவியும் கல்வியும் ஏன் காதலும் தந்த கருணையே! விடை பெறுகிறேன் நான். இனியொரு நாள் இடையூறுகளேதுமின்றி இன்பமாய்ச் சந்திப்போம். பிறிதொரு நாள் பிரிப்பார் யாருமின்றி பிரியமாய்ச் சந்திப்போம். நான் என் கவிதைகளுடனும், நீ எனக்குத் தரவிருக்கும் கனவுகளுடனும் மட்டும். நன்றி இனியன் - கீதா - 08-24-2005 உங்கள் கவிதைக்கு நன்றி அண்ணா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> .................... jothika - கீதா - 08-24-2005 நினைவு எனது இதய நதியில் ஓடமாய் உன் நினைவுகள் என்றும் ஓடிக் கொண்டே இருக்கும் ................ jothika - vimalan - 08-24-2005 <b>சுமை</b> குடையும் ஒரு சுமைதான் மழை இல்லாத போது பட்டமும் ஒரு சுமைதான் வேலை இல்லாத போது அழகும் ஒரு சுமைதான் இரசிகன் இல்லாத போது வாழ்வும் ஒரு சுமைதான் சுவை இல்லாத போது - Birundan - 08-25-2005 நண்றாக இருக்கின்றது வாழ்த்துக்கள். - Jenany - 08-25-2005 எல்லா கவிதைகளும் ரொம்ப நல்லா இருக்கு.... - Remo - 08-27-2005 எல்லாக் கவிதையும் நன்றாக இருக்கு வாழ்த்துக்கள் - Rasikai - 09-06-2005 [size=18]<b>நீ வருவாய் என்ற நம்பிக்கையில்;............... </b> என் உதடுகள் எதையோ உச்சரிக்கத் துடித்தது என்ன என வினாவினேன் அது உன் பெயரைத்தான் உச்சரிக்கத் துடித்தது. எனது பேனா எதையோ எழுதி விடத் துடித்தது என்ன என வினாவினேன் அதுவும் உன் பெயரைத்தான் எழுதி விடத் துடித்தது. என் உள்ளம் எதையோ சொல்லிவிடத் துடித்தது என்ன என வினாவினேன் அதுவும் உன் நினைவுகளைத்தான் அள்ளித் தெளித்து நின்றது. இப்படி எல்லாமே உன்னைச் சுற்றி வரும்போது நீ மட்டும் மௌனக் கடலினுள் முக்குளித்துக் கிடக்கின்றாய். என் கண்ணீரைக் காண்பதில் உனக்கென்ன ஆனந்தம்? என்னை ஏமாற்றி விடுவதில் உனக்கென்ன பேரின்பம்? உன் எண்ணங்களைச் சுமந்தபடி நான் ஏகாந்தமாய் அழுவது உனக்கு நன்றாய்த் தெரியும். இருப்பினும் நினைவுகளை புதைக்கத் துடிக்கிறாய். எனக்குத் தெரியும் உன்னாலும் ஒருபோதும் முடியாது என்று. உன் உள்ளப் பெட்டகத்தை ஓர் முறை மெல்லத் திறந்து பாரேன். அங்கே நிறைந்து கிடக்கும் காதல் பூக்களெல்லாம் இன்னமும் வாடாத மலர்களாய் உன்னைப் பார்த்துச் சிரிக்கும். ஒத்துக் கொள்கிறாயா? இப்போது சொல்.......... நீ ஏன் உன்னை ஏமாற்றுகிறாய்? ஏன் உன் சின்ன உள்ளத்தை சித்திரவதை செய்கின்றாய்? இதற்கும் மௌனித்து நிற்கின்றாயா? நொடிக்கு நூறு முறை உன் நினைவுகளை எல்லாம் கற்கண்டை சுமக்கும் எறும்பைப் போல் நெஞ்சினில் சுமந்து கொண்டு கொதிக்கும் பாலைவனத்தில் கருகி விழுந்த பூவாக....... எப்படியும் நீ வருவாய் என்ற நம்பிக்கையில் உனக்காகக் காத்திருக்கிறேன். - Rasikai - 09-06-2005 நொடிக்கு நூறு முறை உன் நினைவுகளை எல்லாம் கற்கண்டை சுமக்கும் எறும்பைப் போல் நெஞ்சினில் சுமந்து கொண்டு கொதிக்கும் பாலைவனத்தில் கருகி விழுந்த பூவாக....... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> அழகான, மனதை உருக்கும் கவிதை வரிகள் - அனிதா - 09-06-2005 ம்ம்ம் நல்ல கவி வரிகள்... நன்றி ரசிகை அக்கா... - வெண்ணிலா - 09-07-2005 Quote:உன் எண்ணங்களைச் சுமந்தபடி நல்ல கவி. வாழ்த்துக்கள் ரசிகை. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathan - 09-07-2005 கவிதைக்கு நன்றி ரசிகை. - Thala - 09-07-2005 [quote] எனக்குத் தெரியும் உன்னாலும் ஒருபோதும் முடியாது என்று. உன் உள்ளப் பெட்டகத்தை ஓர் முறை மெல்லத் திறந்து பாரேன். தன் காதல் மீதான நம்பிக்கை வரிகள்(வலிகள்) நல்ல கவிதை நண்றி ரசிகை.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Jenany - 09-07-2005 ரசிகை கவிதை நல்லா இருக்கு. - கீதா - 09-07-2005 கவிதை நன்றாக இருக்கின்றன நன்றி - கீதா - 09-10-2005 ஒட்டாதே காதலியே இனி அனுப்பும் கடிதங்களுக்கு தபால் தலை ஒட்டாதே உன் இதயம் சுமந்து வரும் கடிதங்களுக்கு அவர் ஓங்கிக்குத்துவதை தாங்க முடிய வில்லை - கீதா - 09-10-2005 குற்றம் -------------- என்னதான் அருகிலிருந்தாலும் இமையை கண் பார்த்ததில்லை அது கண்ணின் குற்றமா அல்லது தன்னை வெளிப்படுத்தாத இமையின் குற்றமா அதுபோல் இவ்வளவு அருகிலிருந்தும் என்னையும் என் காதலையும் புரிந்து கொள்ளாதது உங்கள் குற்றமா அல்லது அதை வெளிப்படுத்தாத என் குற்றமா - nallavan - 09-11-2005 என்னங்கோ, உதுகள எங்கயிருந்து பொறுக்கினியள் எண்டும் போடுங்கோவன், இல்லாட்டி நீங்கள்தான் உதக் கிறுக்கினதெண்டெல்லோ சனம் நினைக்கப்போகுது. - lollu Thamilichee - 09-11-2005 ஆஆஆஆஆஆஆஆ ரொம்ப சுட்டுட்டுது :-) ம்ம்ம்ம் எங்க வீட்டில கண்ணாடி இருக்கு கண் பார்கும் :-) உங்க வீட்டில எப்படி??? நல்லா இருக்கு கவி எங்களுக்கு எல்லாம் எழுத வராது மா :-( |