![]() |
|
நடப்பு அரசியல் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: நடப்பு அரசியல் (/showthread.php?tid=7366) |
- Eelavan - 04-02-2004 தமிழர் தரப்புக்கு என்று எதனைச் சொல்கிறீர்கள் எப்பிடியிருப்பினும் மலையக மக்கள் முன்னணியோ,E.P.D.P,சங்கரியின் சுயேச்சைக் கட்சியோ,மேல்மாகாண மக்கள் முன்னணியோ தேர்தல் முடிவடைந்தபின் தமிழ்ர் தரப்பாக இருக்கப்போவதில்லை அரசமைக்கும் ஏதாவது ஒரு கட்சியுடன் ஐக்கியமாகிவிடுவார்கள் தமிழர் தரப்பாக தனித்து நிற்கக் கூடிய தமிழ்க் கூட்டமைப்புக்கு கிடைக்கக் கூடிய இடங்கள் மொத்தமாக 20 இது ஒன்று கூடலாம் அல்லது குறையலாம் யாழ் நிலைமை கேட்டீர்களானால் தமிழ்க் கூட்டமைப்பிற்கு 8 E.P.D.P,அல்லது சங்கரி 1 ஒரு சிறிய அலசலுக்குப் பின்னர் மற்ற மாவட்டங்களினதும் எதிர்வுகூறல்களைத் தருகின்றேன் - Mathan - 04-02-2004 சில கட்சிகள் தேர்தலுக்குபின்பு அரசமைப்பவர்களுடன் இணைந்து விடலாம் என்பது உண்மைதான். நான் மலையம் தவிர்ந்த மற்ற இடங்களில் பொதுவாக எத்தனை உறுப்பினர்கள் தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பதையே கேட்டேன். அம்பாறை மட்டக்கிளப்பு பிரைச்னை காரணமாக அந்த பகுதிகளில் தமிழ் மக்களின் பிரநிதித்துவம் குறையலாம். அந்த இடங்களை முஸ்லீம் பெறும் சாத்தியம் இருக்கின்றது. அம்பாறை மட்டக்கிளப்பு மாவட்டங்களில் ஒரு தமிழர் வாக்களிக்காமல் விடும்போது அது முஸ்லீம் பிரதிநிதித்துவத்தை கூட்டுகின்றது. - Eelavan - 04-02-2004 தேர்தலில் தமிழ்க்கூட்டமைப்பிற்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படும் ஆசனங்கள் யாழ்ப்பாணம் 8 வன்னி 3/4 திருகோணமலை 2 மட்டக்களப்பு 3/4 அம்பாறை 1 தே.ப. 1 மொத்தம் 17/20 - Mathan - 04-02-2004 தேசிய பட்டியல் ஆக ஒன்றுதானா? - Eelavan - 04-02-2004 வன்னியின் வாக்குகள் எதிர்பார்ப்பிற்கமைய கிடைத்து மட்டக்களப்பிலும் அம்பாறையிலும் பிந்திய நிலவரங்களும் சரியாக இருந்தால் இரண்டு கிடைக்க சாத்தியக்கூறு உண்டு - Mathan - 04-02-2004 இணையத்தில் பார்த்த மாதிரி தேர்தல் முடிவு - Eelavan - 04-02-2004 இது எந்த இணையத்திலிருந்து பெற்ற தகவல் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லையே யாரால் மேற்கொள்ளப்பட்ட கணிப்பீடு - Mathan - 04-02-2004 Eelavan Wrote:இது எந்த இணையத்திலிருந்து பெற்ற தகவல் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லையே மின்னஞ்சல் மூலம் கிடைத்தது. மற்றய தகவல்கள் என்னிடம் இல்லை. - Mathan - 04-02-2004 தற்போதைய தபால் மூல வாக்குகளின் முடிவை பார்த்தால் சந்திரிகாவின் கட்சிக்கே கூடுதல் ஆசனங்கள் கிடைக்கும் போல இருக்கின்றது. - Mathan - 04-03-2004 மற்றய முடிவுகளும் சந்திரிகாவுக்கு சாதகமான நிலைமையையே காட்டுகின்றன. - vasisutha - 04-03-2004 பிபிசி எங்கே காணவில்லை? இரவிரவாய் தேர்தல் முடிவு கேட்டுக் கொண்டிருந்து விட்டு இப்பொழுது நித்திரையோ? - anpagam - 04-03-2004 'பி.பி.சி தமிழ்ச் சேவை மீது தமிழ் மக்கள் விசனம் ' இந்த காரணத்தால் அவருக்கு அப்பெயரில் அவருக்கே வெறுப்போ... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink: :mrgreen: sorry BBC <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- anpagam - 04-03-2004 <img src='http://www.thinakural.com/2004/April/03/moorthy.gif' border='0' alt='user posted image'> - Eelavan - 04-03-2004 நீலக்குஞ்சுதான் என்று தெரிந்துவிட்டது ஆனால் எழுந்து நடக்குமா முடக்குவாதத்தால் படுத்துவிடுமா தெரியவில்லை - Mathan - 04-03-2004 vasisutha Wrote:பிபிசி எங்கே காணவில்லை? இரவிரவாய் தேர்தல் முடிவு கேட்டுக் கொண்டிருந்து விட்டு இப்பொழுது நித்திரையோ? நகரத்தை விட்டு வெளியே சென்றிருந்த்தால் களத்திற்கு வரமுடியவில்லை. - Mathan - 04-04-2004 தேர்தல் முடிந்து முடிவுகளும் வெளிவந்துவிட்டது. தேர்தல் முடிவை வைத்து சில விடயங்களை பேசுவோமா? உங்கள் கருத்துக்களை எழுதுங்கள். 1) தமிழர் கூட்டமைப்பின் வெற்றி 2) சங்கரியின் தோல்வி 3) ஜோசப் பரராஜசிங்கத்தின் தோல்வி 4) ஈ.பி.டி.பியின் தோல்வியும் மற்றும் அது பெற்ற ஒரு ஆசனம் 5) சந்திரிகா தலைமையிலான கட்சியின் வெற்றி - சிங்கள மக்கள் புலிகளுடனான பேச்சுக்களை ஏற்றுக்கொள்ளவில்லையா? - Mathan - 04-04-2004 தமிழர் கூட்டமைப்பின் 5 எம்பிக்கள் சந்திரிகா கூட்டணியை ஆதரிக்க கூடும் என்று ஒரு வதந்தி உலாவுகின்றது. இது இன்றைய சண்டே டைம்ஸ் பத்திரிகையிலும் வெளிவந்திருக்கின்றது. - Kalai - 04-04-2004 தமிழ்க் கூட்டமைப்பின் 5 பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திரிகா கூட்டணியை ஆதரிப்பார்கள் என்பது சாத்தியப்படாத ஒரு விடயம். அவர்கள் அப்படி ஆதரவு கொடுக்க முயற்சி செய்வார்கள் எனில் கட்சி அவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்து எம்பி பதவியிலிருந்து நீக்க முடியும். - Mathan - 04-04-2004 தமிழ்நாதத்தின் இன்றைய பொன்மொழி 'நம்முடைய செருப்பைத் தைப்பதற்கு அத்தொழிலை நன்றாகப் பழகிய தொழிலாளியிடமே கொடுக்கிறோம். ஆனால் ஒரு நாட்டின் ஆட்சிப் பொறுப்பை பசப்பில் பேசி ஓட்டைப் பறிக்கும் வாயாடியிடமே கொடுக்கிறோம்!" - பிளேட்டோ நன்றி - தமிழ்நாதம் - thampu - 04-04-2004 BBC Wrote:தமிழ்நாதத்தின் இன்றைய பொன்மொழி அன்பர் பிபிசி தாங்கள் தமிழ்நாதம் இணைய தளத்தில் இருந்து கொண்டுவந்திருக்கும் பிளேட்டோவின் மேற்கோள் என குறிப்பிடும் வாக்கியத்திற்கு சொந்தகாரன் பிளேட்டோவாக இருக்க சாத்தியங்கள் மிகமிக அரிதே. அவரின் காலகட்டதில் மக்கள் வாக்களிக்கும் ஜனநாயக முறைமை கருநிலையில்தான் இருந்திருக்க சாத்தியம். |