Yarl Forum
சுட்ட கவிதை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: சுட்ட கவிதை (/showthread.php?tid=7322)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20


- Malalai - 08-08-2005

tamilini Wrote:
Quote:மின்னலாக தோன்றிய உன் உருவம்
ஆழமாக என் மனதில் பதிந்திடவே
ஏன் மின்னலாய் வந்தது.?? ஒரு படத்தை சுடுறது தானே.. மின்னல் கண்ணைப்பறிச்சிடுமே அதுதான். மழலை களத்தில இன்னும் போடவில்லைப்போல.. :

மின்னலாத்தான் அக்கா தெரிஞ்சிது முதல்ல....ஒரு படத்தை சுடுறது? சுடுறது என்றால் நிறைய சுட்டுடணும் அக்கா...ஏன் என்றால் ஒன்றை சுட்டாலும் சுட்டது என்றுதான் பெயர்...நூறை சுட்டாலும் சுட்டது என்று தான் பெயர்...என்னத்தை அக்கா போடலை நான் இன்னும்? :wink: :wink: :wink: :wink:


- Malalai - 08-08-2005

Quote:நன்றி மழலை

இணைத்த வசிக்கு நன்றி சொல்லவேணுமெல்லவா ?

Quote:நல்ல கவிதைகள் மதன் அண்ணா..அன்ட் மழலை

நன்றிகள் :wink:


- Malalai - 08-08-2005

Quote:இதை இப்ப தான் கண்டன். ஏன் நமக்கு பிடிச்சவங்களப்பத்தி எழுதிறானே அதுக்கென்ன.. ஆனா நான் எங்க எழுதினன் அதுவும் வருணிச்சு ஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ

நான் சொன்னது சரியாப் போச்சு...நல்லா வாங்கிக் கட்டுறார் அக்காட்ட....:wink:


- tamilini - 08-08-2005

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->

மின்னலாத்தான் அக்கா தெரிஞ்சிது முதல்ல....ஒரு படத்தை சுடுறது? சுடுறது என்றால் நிறைய சுட்டுடணும் அக்கா...ஏன் என்றால் ஒன்றை சுட்டாலும் சுட்டது என்றுதான் பெயர்...நூறை சுட்டாலும் சுட்டது என்று தான் பெயர்...என்னத்தை அக்கா போடலை நான் இன்னும்?
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
மின்னலாய் பாத்தியள் என்றா புரிஞ்சிட்டு எப்படிப்பாத்தியள் என்று. அம்மா தாயி நான் சொன்னது படம் ஒன்றை சுடுறது தானே என்று. :wink:


- Malalai - 08-08-2005

சுடவில்லை அக்கா..ஆனா இருக்காமலும் இல்லை.....(என்ன குழப்புறனா?...எல்லாம் என்ட அண்ணாட்ட பழகினது தான்.....மலரண்ணியை எனக்கு தெரியும் என்று டுப் விட்டுட்டு ஆள் எஸ்க்கேப்...கன நாளாக் காணலை வரட்டும்....வரட்டும்....மலரண்ணியைப் பற்றி கவலைப்படாமல் போய்ட்டார்....) :wink:


- Mathan - 08-19-2005

<span style='font-size:25pt;line-height:100%'>நினைவு

என் காதலியை வற்புறுத்தி கேட்டதற்கு அவள் சமைத்த கவிதை :

அவள் : படித்துவிட்டு சிரிக்க கூடாது!

நான் : கண்டிப்பாக சிரிப்பேன்.

அவள் : ம்ம்ம் போடா...காட்டமாட்டேன்...

நான் : காட்ட வேண்டாம் கொஞ்சம் திரும்பு...உன் நெஞ்சிலிருந்து நானே படித்துக்கொள்கிறேன்...

அவள் : முடியாது (சொல்லியபடி திரும்ப நான் படித்த அவள் வரைந்த கவிதை)

என்னை நினைத்து
ஒரு கவிதை
எழுது என்றான்...
அவன் நினைவே
ஒரு கவிதை
என்பதறியாமல்!

நான் : டேய்...நல்ல வந்திருக்கு

அவள் : பொய்...எனக்காக பொய் சொல்ல வேண்டாம்

நான் : பொய்தான்...அழகிடம் வெட்கத்தால் இன்னமும் அழகூட்ட பொய் சொல்லலாம்

அவள் : பொறுக்கி...

நான் : ஆமாம் நான் பொறுக்கி...பொறுக்கி...கிடைத்த தெய்வம் நீ

அய்யோ தாங்கலே!
கொஞ்சம் நிறுத்தேண்டா
கத்திக் கொண்டு ஓடுகிறது காதல்...

முடிந்தால் யாரவது
காதலை தடுத்து நிறுத்தி
என்னிடம் ஒப்படையுங்களேன்
இவள் அழகிடம்
என்னை சிறைபடுத்தியதற்கு
இன்னும் இப்படி பேசிப் பேசி
பல தண்டனைகள்
தரவேண்டும் காதலுக்கு!

- ப்ரியன்</span>


- sinnathambi - 08-19-2005

[quote=Mathan]<span style='font-size:25pt;line-height:100%'>நினைவு

என் காதலியை வற்புறுத்தி கேட்டதற்கு அவள் சமைத்த கவிதை :

அவள் : படித்துவிட்டு சிரிக்க கூடாது!

நான் : கண்டிப்பாக சிரிப்பேன்.

அவள் : ம்ம்ம் போடா...காட்டமாட்டேன்...

நான் : காட்ட வேண்டாம் கொஞ்சம் திரும்பு...உன் நெஞ்சிலிருந்து நானே படித்துக்கொள்கிறேன்...

அவள் : முடியாது (சொல்லியபடி திரும்ப நான் படித்த அவள் வரைந்த கவிதை)

என்னை நினைத்து
ஒரு கவிதை
எழுது என்றான்...
அவன் நினைவே
ஒரு கவிதை
என்பதறியாமல்!

நான் : டேய்...நல்ல வந்திருக்கு

அவள் : பொய்...எனக்காக பொய் சொல்ல வேண்டாம்

நான் : பொய்தான்...அழகிடம் வெட்கத்தால் இன்னமும் அழகூட்ட பொய் சொல்லலாம்

அவள் : பொறுக்கி...

நான் : ஆமாம் நான் பொறுக்கி...பொறுக்கி...கிடைத்த தெய்வம் நீ

அய்யோ தாங்கலே!
கொஞ்சம் நிறுத்தேண்டா
கத்திக் கொண்டு ஓடுகிறது காதல்...

முடிந்தால் யாரவது
காதலை தடுத்து நிறுத்தி
என்னிடம் ஒப்படையுங்களேன்
இவள் அழகிடம்
என்னை சிறைபடுத்தியதற்கு
இன்னும் இப்படி பேசிப் பேசி
பல தண்டனைகள்
தரவேண்டும் காதலுக்கு!

- ப்ரியன்</span>

:?: :?: :roll: :?: Idea :?:


- ப்ரியசகி - 08-19-2005

Quote:என்னை நினைத்து
ஒரு கவிதை
எழுது என்றான்...
அவன் நினைவே
ஒரு கவிதை
என்பதறியாமல்!

நல்ல வரிகள்


- வெண்ணிலா - 08-19-2005

ப்ரியசகி Wrote:
Quote:என்னை நினைத்து
ஒரு கவிதை
எழுது என்றான்...
அவன் நினைவே
ஒரு கவிதை
என்பதறியாமல்!

நல்ல வரிகள்


ம்ம்ம்ம் நல்ல வரிகள்


- Vishnu - 08-19-2005

வித்தியாசமான கவிதை.. நல்ல இருக்கு..


- ragavaa - 08-19-2005

சுட்ட கவிதையில் இருந்து மீண்டும்
Mathan Wrote:இவர் தான் இலங்கையின் சுப்பிரமணிய சுவாமி

<img src='http://kavithai.yarl.net/archives/kathirkamar.jpg' border='0' alt='user posted image'>

பேரு கதிர்காமன்
ஊரு கொழும்பு
உத்தியோகம் நிரம்பிய
மேல்தட்டு வர்க்கம்

தமிழனென்றால்?
வன் ஒப் த சிரிலங்கன் எதினிக் குறூப்
என்று சொல்வார்
உண்மையிலேயே அறியார்

இதுவரை சொன்னதுதான்
பொய்யும் புரட்டுமெண்டா
இப்போது சொவதும்
பழைய குருடி
கதைதானே ஐயா.

இலங்கையில் ஒன்று சொல்வார்
இந்தியாவில் இன்னொன்று சொல்வார்
அமெரிக்கா போனபின்பு
அனைத்தையும் மறந்திடுவார்.

புலியென்றால் கிலியென்பார்
தடி கொண்டு அடியென்பார்
தமிழர் கொலையாமென்றால்
இல்லையில்லை சும்மா என்பார்

நானே ஒரு தமிழன்
எனக்கிங்கு கேடில்லை
பிள்ளை குட்டிகளுடன்
சுதந்திரமாய் இருக்கின்றேன்.

தே பீப்பிள்ஸ்
எல்.டி.டீ
சும்மா சும்மா
பொம்ப் வைக்குதென்பார்.

அமெரிக்காவால் வந்ததுமே
ஆரம்பிப்பார் பழங்கதையை
பேச்சுவார்த்தை மேசைக்கு
எப்போதும் நாங்க தயாரென்பார்.

போற வாற இடமெல்லாம்
புறணி பாடிவிட்டு
வந்திறங்கிய பின்னாலே
வெத்திலை வைத்திடுவார்.

ஐ.நாவுக்கு ஆசைப்பட்டார்
ஐயாவுக்கு கிடைக்கவில்லை
பிரதமர் பதவியுமோ
பிய்ந்த பழம் செருப்பாச்சு

இன்னமுமா ஏறவில்லை
உம்முடைய மண்டைக்கு
உமக்கெங்கே ஏறும்
உண்மைக் கதையளெல்லாம்

நீர்தானே
உம் காலைத் தூக்கி
உம்மினத்துக்கே
மூத்திரம் அடிக்கும்
ஆள்???

நன்றி - ஈழநாதனின் வலைப்பூ



- Mathan - 08-20-2005

அட சுட்டு போட்ட எனக்கே மறந்து போச்சு. மேற்கோள் காட்டியதுக்கு நன்றி


- KULAKADDAN - 08-20-2005

சுட்ட கவிதைக்கு நன்றி


- கீதா - 08-20-2005

(வருவாயா)
......................


கண்னைத் திறந்தேன்
உன்னைக் கண்டேன்

இன்பத்தை தேடினேன்
புன்னகை அடைந்தேன்

அகிம்சையை விரும்பினேன்
சமாதனத்தை கிட்டினேன்

அன்பே யாசித்தேன்
மகிழ்ச்சியில் விழுந்தேன்

நட்பை யாசித்தேன்
நேசத்தை பார்த்தேன்

காதலை சுவாசித்தேன்
காதலியாக வருவாயா



அன்புடன்
jothika


- Birundan - 08-20-2005

கவிதை நண்று சுட்டதா சுடாததா? வாழ்த்துக்கள் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- கீதா - 08-20-2005

என் சொந்தக் கவிதை பிருந்தன் அண்ணா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


----------------
jothika


- Birundan - 08-20-2005

தொடர்ந்து எழுதுங்கள், வளம்பெற வாழ்த்துக்கள். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Jenany - 08-21-2005

ஓஒ.. சொந்த கவிதையா தங்கையே??? நல்லா இருக்கு...தொடர்ந்து எழுதுங்கள்.....


- Mathan - 08-21-2005

சொந்த கவிதையா நல்லது தொடர்ந்து எழுதுங்கள். எழுத எழுத எழுத்து கூர்மையடையும்


- ப்ரியசகி - 08-21-2005

ஜோ..கவிதை நல்லா இருக்கு தங்கா