Yarl Forum
விண்ணியல் விநோதங்கள்... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=25)
+--- Thread: விண்ணியல் விநோதங்கள்... (/showthread.php?tid=7732)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17


- vasisutha - 09-22-2005

நன்றி குருவிகள்..
இப்படி அடிக்கடி சந்திரனுக்கு போகிறார்கள் சரி..
அங்கு என்னதான் செய்யப் போகிறார்கள்..?


- வெண்ணிலா - 09-22-2005

vasisutha Wrote:நன்றி குருவிகள்..
இப்படி அடிக்கடி சந்திரனுக்கு போகிறார்கள் சரி..
அங்கு என்னதான் செய்யப் போகிறார்கள்..?

உங்களை குடியமர்த்தப் போகிறார்கள். கவனம்.


- Mathan - 09-22-2005

இந்தியாவும் சந்திரனுக்கு ஆளில்லாத விண்கலத்தை அனுப்ப முயற்சிப்பதாக இணையதளம் ஒன்றில் படித்தேன்


- kurukaalapoovan - 09-23-2005

என்ன BBC மதன் வழமையா எல்லாத்துக்கும் ஆதாரம் கேப்பீங்கள் இதுக்கு விட்டுட்டியள்? சும்மா ஒரு பரபரப்புக்கு யாரும் சொல்லி இருக்க மாட்டினமோ? :wink:


- Mathan - 09-26-2005

இது BBC இல் வந்தது அதால் ஆதாரம் கேட்கலை. அதில்லை செய்மதி அனுப்பியுள்ள நிலையில் சந்திரனுக்கான முயற்சி நடைமுறை சாத்தியமானது தான்


- Eelathirumagan - 09-30-2005

நண்பர்களே
எமது சூரிய குடும்பத்தையும் பால்வெளியையும் தாண்டி அண்டவெளியில் என்னதான் நடக்கின்றது என்பதுபற்றி யாராவது எழுதலாமே. உதாரணமாக space twist, space and time contraction, black holes, etc


- kuruvikal - 10-13-2005

<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40899000/jpg/_40899594_ap_wide203.jpg' border='0' alt='user posted image'>

சீன தனக்கே சொந்தமான முறையில் இரண்டு விண்வெளி வீரர்களையும் ஒரு விண்ணியல் நிலையத்தையும் மிக ரகசியமாகத் திட்டமிட்டு விண்ணுக்கு வெற்றிகரமா அனுப்பி இருக்கிறது...! இப்போ இரண்டு தினங்களாக சொந்தவிண் நிலையத்துடன் விண்ணில் சஞ்சரிக்கும் இரண்டு சீன விண்வெளி வீரர்களும் விரைவில் பிறிதொரு கலம் மூலம் பூமிக்கு திரும்பவுள்ளனர்..!

இதில் சீனா தனக்கான ஒரு சாதனையை நிகழ்த்தி உள்ளது..! அதிக காலம் தனது சொந்த நாட்டு வீரர்களை விண்ணில் சஞ்சரிக்க விட்டதே அந்த சீனச் சாதனையாகும்..!

இதற்கு முன்னர் 2003 இலும் சீனா தனது விண்வெளி வீரரை விண்ணுக்கு அனுப்பியிருந்தது..! இம்முறை விண்வெளி நிலையத்துடன் அனுப்பி இருப்பதும்...குறிப்பிட்ட விண் நிலையம் தொடர்ந்து விண்வெளியில் சஞ்சரித்து சீனாவுக்காக ஆய்வுகளைச் செய்யவுள்ளதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்..!

விண்ணுக்கு அனுப்பப்பட்ட வீரர்கள் சீன விமானப்படை வீரர்களாக அதிக காலம் பணியாற்றியவர்களாவர்..!

ரஷ்சியா அமெரிக்காவைத் தொடர்ந்து தனது சொந்த முயற்சியில் மனிதனை விண்ணுக்கு அனுப்பிய பெருமை சீனாவையே சாரும்..!

<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40902000/gif/_40902138_shenzhou_vi2_inf416.gif' border='0' alt='user posted image'>

சீன விண்வெளி வீரர்களுடன் விண்ணில் சஞ்சரிக்கும் சீன விண்வெளி நிலையம்...! ரஷ்சிய மிர் விண் நிலையத்தை ஒத்ததாக கருதலாம்..!

1. Forward orbital module - crew live and work in this section, which contains scientific equipment. In future missions, this module may remain in space as part of a Chinese space station.
2. Re-entry capsule - contains seats for three crew
3. Propulsion module - contains spacecraft's power unit and liquid fuel rocket system
4. Solar panels - spacecraft carries two sets with a total area of 40 square metres, which generate an average 1.5kW of power

தகவல் - பிபிசி.கொம்

http://news.bbc.co.uk/1/hi/world/asia-paci...fic/4337190.stm


- Rasikai - 10-13-2005

தகவலுகு நன்றிகள் குருவிகாள்


- RaMa - 10-14-2005

தகவலுக்கு நன்றி


- Mathan - 10-19-2005

வெள்ளிக்கு விண்கலம்

<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/10/20051018112825venusnasa_203.jpg' border='0' alt='user posted image'>
<b>வெள்ளியின் சிவந்த பரப்பு</b>

பூமி கிரகத்திற்கு மிக நெருங்கிய கிரகமான வெள்ளி கிரகத்திற்கு ஒரு விண்கலம் ஒன்றினை அனுப்ப ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் தயாராகி வருகிறது.

எதிர்வரும் அக்டோபர் 26ம் தேதி கஸாகஸ்தானில் உள்ள பைகானார் விண்வெளி தளத்தில் இருந்து ரஷிய ராக்கெட் ஒன்றின் மூலமாக வீனஸ் எக்ஸ்பிரஸ் என்கிற இந்த விண்கலம் விண்ணில் ஏவப்பட இருக்கிறது.

அதன் பின்னர் அடுத்த ஆண்டு வெள்ளி கிரகத்தின் சுற்றுப்பாதையில் இந்த ஆய்வு விண்கலம் செல்லும்.

அதி உயர் உபகரணங்களைக் கொண்டு வெள்ளி கிரகத்தின் பல்வேறு தன்மைகளை இந்த விண்கலம் ஆய்வு செய்யும்.

வெள்ளியின் உஷ்ணம் அதிகரிக்க காரணமான கீரின் ஹவுஸ் வாயுக்கள் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தின என்பதை ஆராய்ந்தால், பூமியில் ஏற்படும் மாறுதல்களைக் கண்காணிக்க உதவியாய் இருக்கும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/10/20051018112812venus203.jpg' border='0' alt='user posted image'>
<b>விண்கலம்</b>

வெளிப்புறமாக பார்க்கையில் வெள்ளியும், பூமியும் ஒரே போலத் தோற்றமளிக்கும், ஏறக்குறைய ஒரே அளவு, எடை மேலும் இவை உருவான விதமும் ஒரே மாதிரிதான் என்று கூறப்படுகிறது.

ஆனால், வெள்ளி கிரகத்தில் கடும் வெப்பம் நிலவுகிறது. அங்குள்ள வெப்ப நிலை 460 டிகிரி செண்டிகிரேட்.

இது தவிர அதனுடைய அடர்த்தியான வளி மண்டலத்தில், கடலின் அடியில் ஒரு கிலோமீட்டர் ஆழத்தில் இருக்கும் அழுத்தம் போல, கடும் அழுத்தம்.

இதற்கு முன்னதாக அமெரிக்காவின் மெகல்லன் விண்கலம் வெள்ளி கிரகத்தின் அமைப்பினை விரிவாக ஆராய்ந்து வரைபடம் தயாரித்தது.

வெள்ளி கிரகத்தில் எரிமலைக் குழம்புகள் ஓடுவதாகவும் சென்ற முறை செய்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ஐரோப்பிய விண்கலமானது வெள்ளி கிரகத்தில் இருக்கும் எரிமலைகளைப் பற்றி விரிவாக ஆராய இருக்கிறது.

பிபிசி தமிழ்


- Rasikai - 10-19-2005

தகவலுக்கு நன்றி மதன்


- RaMa - 10-20-2005

தகவலுக்கு நன்றி மதன்


- kuruvikal - 10-21-2005

<b>Europe's Venus mission delayed</b>

<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40919000/jpg/_40919556_vex_esa_203.jpg' border='0' alt='user posted image'>

The launch of Europe's first mission to Venus, due to have taken place next Wednesday, has been postponed.
The European Space Agency (Esa) has not yet announced a new date for the launch, only that it will be delayed by "several days".

The probe is to blast off aboard a Russian Soyuz rocket from Baikonur Cosmodrome in Kazakhstan.

It will slip into orbit around Venus next year, using science instruments to study the planet from space.

Esa said the delay had been prompted by the discovery that insulation from the rocket launcher had contaminated the Venus Express spacecraft.

"The satellite is contaminated, so they will have to dismantle and re-mount it again," a spokesperson for the space agency told the BBC News website.

Venus Express will also need to be cleaned up to remove any trace of the insulation.

The contaminating material either came from the rocket's upper "Fregat" stage, which helps to boost the satellite into its intended orbit, or from the fairings, which protect the spacecraft during launch.

The spacecraft will carry out the first global investigation of Venus' atmosphere, to shed light on how the planet evolved its hellish climate.

Composed chiefly of carbon dioxide, Venus' atmosphere generates intense greenhouse warming, whereby trapped solar radiation heats the surface of the planet to an average of temperature of 467C.

Experts think Venus could teach us more about how the Earth's climate will respond to the release of greenhouse gases resulting from human activities.

After separation of the Soyuz rocket's three lower stages, the upper "Fregat" stage with the orbiter mounted on top enters a sub-orbital trajectory.

After two burns, Fregat will launch the spacecraft into an escape trajectory that takes it directly to Venus.

In about five months, Venus Express will reach its target and enter an elliptical polar orbit around our nearest planetary neighbour.

bbc.com


- Mathan - 10-22-2005

[size=13]குருவிகள்,

இவ்வளவு காலமும் விண்ணியல் தொடர்பான நல்ல கருத்துகளை தந்திருக்கின்றீர்கள், நீங்கள் மற்றய தலைப்புகளில் ஏற்பட்ட பிரச்சனைகளுக்காக இவற்றை நீங்கள் முழுமையாக ஆங்கிலத்தில் இணைத்தால் இவ்வளவு நாளும் நீங்கள் தந்த தகவல்களில் நோக்கத்தையே மறக்கடிக்க செய்யும். அதனால் வழக்கம் போல் தொடர்ந்து தமிழில் தகவல்களை தாருங்கள்,

நன்றி.


- kuruvikal - 10-26-2005

<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40947000/jpg/_40947496_express_203.jpg' border='0' alt='user posted image'>

முற்றிலும் ஐரோப்பிய மாணவர்களால் வடிவமைக்கப்பட்ட சிறிய விண்கலம் (மைக்குரோ சற்றலைட்- 50 கிலோ எடையுள்ளது)- Student Space Exploration and Technology Initiative (SSETI) - Express ரஷ்சிய உந்து வாகனம் மூலம் விண்ணுக்குச் செலுத்தப்படவுள்ளது..! சுமார் 10 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 100 மாணவர்கள் இந்த விண்கலத்தை வடிவமைத்துள்ளதுடன் இது இவர்கள் தொடரவுள்ள சிக்கலான விண்கல வடிவமைப்பின் முதல் படி என்றும்..ஐரோப்பிய மாணவர்களின் விண் ஆய்வுத் திறனை வளர்க்கும் நோக்கிலும் இந்த நிகழ்ச்சித்திட்டம் ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிலைய ஆதரவுடன் செயற்படுத்தப்படுகிறதாம்...!

http://news.bbc.co.uk/1/hi/sci/tech/4375986.stm


- Rasikai - 10-26-2005

தகவலுக்கு நன்றி குருவிகள்


- RaMa - 10-27-2005

தகவலுக்கு நன்றி குருவிகள்


- kurukaalapoovan - 10-27-2005

Surrey பல்கலைக்கழகம் உலகிலேயோ முதலாவதாக சொந்த மாக செய்மதி தாயரித்தது மாதிரமல்ல சுற்றுப்பாதையில் விட்டாப்பிறகு (after orbit deployment) அதை தொடர்ந்து பராமரிக்கும் திறமை கொண்டதாக கேள்விப்பட்டேன்.

சுற்றுப்பாதையை வைத்து 4 தரமாக பிரிக்கலாம் செய்மதிகளை:
GEO (Geosynchronous geostationary)
ஒளி ஒலிபரப்புச் செய்மதிகள்

MEO (Medium earth orbit)
GPS, mapping, imaging, remote observation/sensing, spy

LEO (Lower earth orbit)
செய்மதிக் கைத்தொலைபேசி சேவைகளை (GMPCS)வழங்கும் செய்மதிகள், Iridium, ACeS

HEO (Highly eleptical Orbit)
சோவியத்äனியன் அதிகம் பாவித்தாக கூறப்படுகிறது. MEO வுக்கும் GEO வுக்கும் இடைப்பட்ட தேவையை பூர்த்தி செய்கிறது?


- kuruvikal - 10-28-2005

<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40958000/jpg/_40958482_mars_hubble_203.jpg' border='0' alt='user posted image'>

அடுத்த 13 வருடங்களுக்கு நடக்க முடியாத ஒரு அனுபவத்தை தரிசிக்க விருப்பமா... தயாராகுங்கள்...! செவ்வாய்க் கோள் எமது பூமியை வரும் ஞாயிற்றுக்கிழமை முற்பகல் (ஐரோப்பாவில்) வாக்கில் அதன் சுற்றுப்பாதை வழியே பயணித்து அண்மிக்க இருக்கிறது..! அவ்வேளை இக்கோளை நீங்கள் வெற்றுக் கண்ணாலோ...தொலைநோக்கி கொண்டோ வழமையைவிட தெளிவாகக் காணலாம்..! காலநிலை ஒத்துழைத்தால் நீங்களும் முயன்று பாருங்களேன்..! சக்திவாய்ந்த தொலைநோக்கிகள் கொண்டு செவ்வாயின் மேற்பரப்பு தரைத்தோற்ற அம்சங்களையும் காணலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது..!

இத்தோற்றப்பாட்டின் போது பூமிக்கும் செவ்வாய்க்கும் இடையேன தூரம் 69.4 மில்லியன் கிலோமீற்றர்கள் மட்டுமே..! வழமையான இடைத்தூரம் 225 மில்லியன் கிலோமீற்றர்கள்..!

படம் மற்றும் செய்தி..பிபிசி இணையத்தளம்..!


- Rasikai - 10-28-2005

<b>பூவிக்கு அருகில் அமைந்துள்ள செவ்வாய்க் கோள் நாளைய தினம்</b>

<img src='http://img493.imageshack.us/img493/3504/sevaikirakam8un.gif' border='0' alt='user posted image'>

பூவிக்கு அருகில் அமைந்துள்ள செவ்வாய்க் கோள் நாளைய தினம்(29.10.05) பூமிக்கு மிக சமீபமாக வரவுள்ளது.
இந்த கிடைத்தற்கரிய சந்தர்ப்பத்தை இலங்கை மக்கள் வெறும் கண்ணால் பார்க்க முடியும் என ஆத்தர் சி க்ளாக் நிலையம் தெரிவித்துள்ளது. நாளை இரவு (29.10.05) 7 மணியளவில் கீழ் வானின் தென்பகுதியிலிருந்து 15 பாகை மேற்குப் பகுதியில் செம்மஞ்சல் நிறத்தில் இந்தக் கோளை இலங்கையர்கள் அவதானிக்க முடியும். செவ்வாய்க் கோள் மிகவும் பிரகாசமானது என்பதால் ஏனைய கோள்களைவிட மிகவும் தெளிவாக காட்சியளிக்கும் என ஆத்தர் சி க்ளாக் நிலையம் தெரிவித்துள்ளது. பூமிக்கு அருகில் செவ்வாய்க்கிரகம் நெருங்கும் போது இந்த இரு கோள்களுக்கிடையிலான தூரம் 96 தசம் 4 மில்லியன் கிலோமீற்றராக குறைவடையும் என அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது. முன்னதாக 2003ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 28ம் திகதி பூமிக்கு அருகே செவ்வாய்க் கிரகம் தோன்றியது. இனி எதிர்காலத்தில் 2018ம் ஆண்டில் 58 தசம் 8 மில்லியன் கிலோமீற்றர் தொலைவில் செவ்வாய்க்கிரகம் தோன்றும் போதும் இலங்கையர்களால் இதனைப் பார்க்க முடியும் என அறிவிக்கப்படுகின்றது.


http://www.newstamilnet.com/index.php?suba...t_from=&ucat=1&