![]() |
|
நடப்பு அரசியல் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: நடப்பு அரசியல் (/showthread.php?tid=7366) |
- Mathan - 03-30-2004 Mathivathanan Wrote:BBC Wrote:கருத்து நீக்கப்பட்டுள்ளது - மோகன்Kanani Wrote:BBC Wrote:BBC Wrote:யாழ் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களை இலங்கை நேரப்படி செவ்வாய் இரவு 12 மணிக்கு முதல் மட்டக்களப்பை விட்டு வெளியேறுமாறும் அவர்கள் அசையும் சொத்துக்கள் மற்றும் அசையாச் சொத்துக்கள் அனைத்தையும் விட்டுவிட்டு வெறுமனே நபருக்கு 500 ரூபாய்களை மாத்திரம் எடுத்துச் செல்லவேண்டும் என்றும் கருணாவின் குழுவினர் அறிவித்துள்ளதாக செய்தி ஒன்று வெளிவந்துள்ளது, இதை பத்தி உங்க கருத்து என்ன? பொது பிரைச்சனை தீரும்போது வேறுபாடுகள் தலைதூக்குவது சகஜம், எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம். - yarlmohan - 03-30-2004 முடிந்துபோனதும், தவறுக்கு வருத்தம் தெரிவித்த கருத்து மீண்டும் எடுக்கப்பட்டுள்ளது. - பிரதேச வாதத்தினை தீவிரப்படுத்தம் கருத்துக்கள் , நியயப்படுத்தும் கருத்துக்கள் போன்ற காரணத்தால் கருத்து மூடப்படுகின்றது. - yarlmohan - 03-30-2004 சில கருத்துக்களின் நீக்கத்தின்பின் மீண்டும் திறக்கப்படுகின்றது. - Mathan - 03-30-2004 மிக்க நன்றி - Mathan - 03-30-2004 அரசாங்க ஊடகங்கள் சந்திரிகாவின் கூட்டணிக்கு சார்பாக நடப்பதால் அவற்றை தேர்தல் ஆணையாளர் பொறுப்பேற்றார். அதை பத்தி கொழும்பு ஆங்கில பத்திரிகையில் வெளியானா கார்ட்டூன். சந்திரிகாவின் கூட்டணி தேர்தல் சின்னம் இலை என்பது குறிப்பிடத்தக்கது. <img src='http://www.dailymirror.lk/2004/03/31/imgs/cartoonl.jpg' border='0' alt='user posted image'> நன்றி - டெய்லி மிரர் - anpagam - 03-30-2004 கருத்து நீக்கப்பட்டுள்ளது - மோகன் .... ஏன் எனக்கு நய்நா.... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :mrgreen: :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> 8)
- kuruvikal - 03-31-2004 இந்தப் பகுதியைப் பற்றி முதலில எச்சரித்திருந்தம்....இதில சில பேர் கருத்தாளர்கள் அல்ல குழப்பகாரர்கள் என்றும் சொல்லி இருந்தம்....நீங்கள் ..களநிர்வாகத்தினர்...கேக்கல்ல..இப்ப கஷ்டப்பட்டிருக்கிறியள்....! வருத்தந்தான்....உண்மையா நடுநிலை பேசுறவையை இலகுவாக் கண்டு பிடிச்சிடலாம் அதே போல நடுநிலை என்ற போர்வைக்குள் உள்ள வேடதாரிகளை தொடர்ச்சியா கவனிச்சாக் கண்டுபிடிச்சிடலாம்.....! தொடர்ந்து கவனியுங்கோ.....! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
- Shan - 03-31-2004 ஒரு தனி நபரிற்காக ஒரு சமூகம் தற்போது பலியாகிறது. ஒரு தனி நபர் தன் மீது சுமத்திய குற்றங்களுக்கு தக்க பதில் தராது இவ்வாறு நடாத்துவது நல்லதல்ல. வடக்கு கிழக்கு பிரிவினை பின் வடக்கில் உள்ள வடக்கு கிழக்கு, கிழக்கில் உள்ள வடக்கு கிழக்கு இப்படி தொடருமே ஒளிய இது நிற்க்ப்போவதில்லை. யாழ் மாவட்ட மக்கள் பாரிய எந்த துரோகத்தையும் கிழக்கு மக்களுக்கு செய்யவி;ல்லை. யாழ் தலைமை யாழ் ஆதிக்கம் என்பது போராட்டத்திற்கு முன்னைய நிலைப்பாடுகள். ஆனால் போராட்டம் ஆரம்பித்த பின் தமிழ் தேசியமே முன்னெடுக்கப்பட்டது. அணைந்து போன பிரதேச வாதம் மீண்டும் தட்டியெழுப்பியது சுயநலமே. வன்னிக்கு கலைமை வரவளைத்த போது தட்டிக்கழித்து விட்டு பின்னர் ஆயிரம் போராளிகளை வன்னிக்கு அனுப்பு சொன்னார்கள் அது இது என்று புலுடா விட்டு பிரதேச வாத்ததை கிழப்பியவர்கள் அதை அணையவிடாது தடு;க்க எடுத்த அடுத்த முயற்றியே இது. இது மண்கவ்வும் நாள் வெகுவிரைவில்.. - Mathan - 03-31-2004 தற்போதைய நிலவரப்படி தமிழர் கூட்டமைப்பு முன்ணணியில் இருக்கின்றது. ஓட்டு போடாதவர்கள் போடுங்கள். - vallai - 03-31-2004 அப்ப வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம் கொள்கை வெல்வதே நான் கொண்ட லட்சியம் எண்டு பாடலம் - kuruvikal - 03-31-2004 <span style='color:red'>யாழ். தேர்தல் தொகுதியில் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட சிங்களவர்கள் யாழ். பயணம் ஈ.பி.டி.பி.யின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா, வேட்பாளர் ஆனந்தசங்கரி உட்பட பேரினவாதத்திற்குத் துணைபோகும் சிலர் கொடுத்த கடுமையான அழுத்தத்தின் விளைவாக, யாழ். தேர்தல் தொகுதியில் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட, 10 சிங்களவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்று தேர்தல் வன்முறை கண்காணிப்பு நிலையம் அறிவித்துள்ளது. தேர்தல் வன்செயல்களைக் கண்காணிப்பதற்கான மத்திய நிலையத்தின் இத்திடிர் முடிவு தமிழ்ப்பகுதிகளில் கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. ஈ.பி.டி.பி. டக்ளஸ் தேவானந்தா, ஆனந்தசங்கரி உட்பட வேறுசில வட்டாரங்களினாலும் கொடுக்கப்பட்ட அழுத்தத்தை அடுத்தே நிலையத்தின் தலைவர் பாக்கிய சோதி சரவணமுத்து சிங்களக் கண்காணிப்பாளர்களை வடக்கே அனுப்பும் முடிவுக்கு வந்தார் எனக் கூறப்படுகிறது. இதுவரை நடைபெற்ற எந்தத் தேர்தல்களின்போதும் சிங்களக் கண்காணிப்பாளர்களை வடக்குக்கு இந்நிலையம் அனுப்பவில்லை. சர்வதேசக் கண்காணிப்பாளர்களோடு உள்ளுர் தமிழ்க் கண்காணிப்பாளர்கள் சிலர் சேர்ந்தே கடந்த காலங்களில் வடக்கின் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுவந்தனர். ஆனால், உள்ளுர் தமிழ்க் கண்காணிப்பாளர்களில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும், சிங்கள மற்றும் முஸ்லிம் கண்காணிப்பாளர்கள் வடக்கில் பணியாற்ற அழைக்கப்பட வேண்டும் என்றும், டக்ளஸ் தேவானந்தா அண்மைக் காலத்தில் வலியுறுத்தி வந்தார். சுயேட்சை வேட்பாளர் ஆனந்தசங்கரியும் இந்த வேண்டுகோளை விடுத்திருந்தார். இந் நிலையில் சர்வதேசக் கண்காணிப்பாளர்கள் ஐவர் மட்டுமே தேர்தல் வன்செயல்களைக் கண்காணிக்கும் மத்திய நிலையத்தினால் இம்முறை வடக்கில் பணியில் அமர்த்தப்படுவர் எனக் கூறப்பட்டு வந்தது. எனினும், தேர்தலுக்கு இரண்டு நாள் இருக்கையில், இறுதி நேரத்தில், பத்து சிங்களக் கண்காணிப்பாளர்களை வடக்கே பணிக்கு அவசர அவசரமாக அனுப்பிவைக்க நிலையத்தின் தலைவர் பாக்கியசோதி சரவணமுத்து நடவடிக்கை எடுத்திருக்கிறார் எனக் கூறப்படுகிறது. தேர்தல் வன்செயல்களைக் கண்காணிக்கும் மத்திய நிலையத்தினால் சர்வதேச கண்காணிப்பாளர்கள் ஐவருக்கு மேலதிகமாக சிங்களக் கண்காணிப்பாளர்கள் பத்துப்பேர் இம்முறை வடக்கில் கண்காணிப்பில் ஈடுபடுவர். தமிழர்கள் எவரும் இந்தக் கண்காணிப்பாளர்கள் பட்டியலில் இடம்பெறவில்லை. இந்தப் பத்து சிங்கள கண்காணிப்பாளர்கள் கொடுக்கும் அறிக்கையை வைத்து, யாழ். தொகுதியில் நடந்த வன்முறைகளை ஆராயவுள்ளதால், இது யாழ். தமிழ் மக்களுக்கு எதிரான ஒரு நடவடிக்கையாக அமையுமென்றும், தமிழ் தேசிய கூட்டமைப்பு முழு ஆசனங்களையும் கைப்பற்றும் பட்சத்தில், சிங்களக் கண்காணிப்பாளர்களின் கூற்றை வைத்து, தேர்தல் முடிவுகளை செல்லுபடியற்றதாக அறிவிக்க வாய்ப்புள்ளதாக அவதானிகள் கருத்துக் கூறியுள்ளார்கள். --------------------------------------------------- <b>[size=14]தமிழினமே ஏன் இந்த நிலை உனக்கு...தன்னினத்தையே இன்னோர் இனம் கொண்டு கண்காணிப்பவன் நாளை உங்களின் பிரதிநிதிகளாக பாராளுமன்றம் போவதற்காய் தேர்தலில்....என்னே வேடிக்கை...சன நாய் அகத்தின் மாஜாலாம் கோலோஞ்சி விட்டதோ.....வெறும் 15 கள்ள வாக்குகளால் பாராளுமன்றம் போய் சுகபோகம் கண்டபோது எந்தச் சிங்களவன் கண்காணித்தானோ.....????! ஏதோ நடக்கட்டும்....எமக்கும் வாக்குச் சீட்டுக்கும் தொடர்பே வேண்டாம் என்றுதானே அறுத்துவிட்டோமே....???!</b></span> நன்றி புதினம்...! - Mathan - 04-01-2004 <img src='http://www.virakesari.lk/20040401/PICS/vd1pg2.jpg' border='0' alt='user posted image'> நன்றி - வீரகேசரி இதுதான் நாம் சொல்வது ... வன்முறை வேண்டாம் - Kanani - 04-01-2004 அரசியல்துறை தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழீழம் 31-03-04 [align=center:15c95b284a] அன்பார்ந்த மட்டு-அம்பாறை மாவட்ட மக்களே![/align:15c95b284a] தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகத்தால் ஒழுக்காற்று நடவடிக்கையின் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேற்றப்ட்ட கருணா என்ற தனிநபர் தனது இருப்பினை தொடர்ந்து தக்க வைப்பதற்காக தொடர்ச்சியாக மட்டு-அம்பாறை விடுதலைப் புலிகள் என்ற பெயரில் பலவிதமான அறிக்கைகளை வெளியிடுவதோடு தனது தவறான நடத்தைக்கு ஆதரவளிக்க மறுக்கும் மக்களது சொத்துக்களை சூறையாடுதல், அச்சுறுத்தல், வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றுதல் போன்ற அராஐக நடவடிக்கைகளைத் தனது அடியாட்கள், மாற்றுக்குழுக்கள், தமிழ்த் தேசியத்திற்கு எதிரானவர்கள் ஆகியோரின் துணையுடன் மேற்கொண்டு வருகின்றார். எனவே, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து உத்தியோகபூர்வமாக வெளியேற்றப்பட்ட கருணாவினால் வெளியிடப்படும். அறிக்கைகள், துண்டுப்பிரசுரங்கள,; அறிவித்தல்கள், ஆகியவற்றை தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளியீடாக ஏற்றுக்கொள்ள வேண்டாம். இக்குழுவினால் மேற்கொள்ளப்படுகின்ற நிதிப்பறிப்பு, பொருட்கள் சூறையாடல், வீடுகள் சொத்துக்கள,; அபகரிப்பு என்பன தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்கத்தால் தேசவிரோத செயல்களாகப் பிரகடனப்படுத்தப்படுகிறது. எனவே மட்டு-அம்பாறை மாவட்ட தமிழ்மக்களே! இக்குழுவினால் விடுவிக்கப்படும் எவ்வித அறிவுறுத்தல்களையும் பின்பற்ற வேண்டாம். இக்குழுவினால் நேரடியாகவும், வேறு பொது நிறுவனங்கள் என்ற பெயரிலும் வெளியிடப்படும் அச்சுறுத்தல்கள், அறிவுறுத்;தல்களுக்கு நிர்ப்பந்தப்பட்டுக் காலம் காலமாக வாழ்ந்து வருகின்ற வாழ்விடங்களிலிருந்து வெளியேற வேண்டாம். இக்குழுவினரின் அடாவடித்தனத்திற்கு அஞ்சி மட்டு-அம்பாறையை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள உங்கள் அயலவர்கள் எவ்வித அச்சுறுத்தலுமின்றி பாதுகாப்பாக வாழ உற்சாகமளியுங்கள். [align=center:15c95b284a]-புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்-[/align:15c95b284a] - Shan - 04-02-2004 முதலைகள் கண்ணீர் வடிப்பு! யாழ் தேர்தல்களத்தில் கள்ள வோட்டுகள் அது இது என்று சங்கரியுமு; ஈக்கும்பலும் கண்ணீர் வடிக்கினம். கடந்த தேர்தலிலை தாங்கள் செய்தததை இப்ப மற்றவை செய்யிறதா சொல்லுகினம். அங்கை ஆமியும் பொலிசும் சந்திக்கு சந்தி நிக்கினை, கொழும்பிலையிருந்து சிங்கள கண்காணிப்பளர்கள், ஆனால் இவை மட்டும் முதலைக்கண்ணீர்;. காரணம் படுதோல்வி என்பதை பெரும்பான்மையான மக்கள் திரண்டு வந்ததிலேயே விழங்கிகொண்டினம், அது தான் இப்பவே அழ ஆரம்பிச்சு விட்டினம். - Shan - 04-02-2004 யாழ். பகுதியில் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்ட கண்காணிப்பாளர்கள் திருப்தி தெரிவித்துள்ளார்கள் ஜ காவலு}ர் கவிதன் ஸ ஜ வெள்ளிக்கிழமை, 02 ஏப்பிரல் 2004, 18:41 ஈழம் ஸ யாழ். தேர்தல் தொகுதியில் தொடர்ச்சியான கடும் கண்காணிப்பில் ஈடுபட்ட சர்வதேச கண்காணிப்பாளர்களும், ஏனைய அனைத்து சிங்கள கண்காணிப்பாளர்களும், யாழ். வாக்களிப்பு நிலையங்களில் எதுவித வன்முறைகளோ ஒழுங்கீனங்களோ முறைகேடுகளோ நிகழவில்லை என்று கருத்துக் கூறியுள்ளார்கள். ஆனந்தசங்கரி, ஈ.பி.டி.பி.உறுப்பினர்கள், ஈ.பி.ஆர்.எல்.எஃப்.உறுப்பினர்கள், யாழ். தேர்தல் தொகுதியில் கடும் ஒழுங்கீனங்கள் காணப்பட்டதாக கடுமையான குற்றச்சாட்டுக்களை தேர்தல் ஆணையாளரிடம் முன்வைத்திருந்தனர். அதைவிட, தேர்தலை ரத்து செய்து மீண்டும் தேர்தலொன்றை அறிவிக்கும் படியும் கோரியிருந்தனர். இந்நிலையில், அங்கு கடமையிலிருந்த கண்காணிப்பாளர்கள் தெரிவித்த கருத்தில், யாழ். தேர்தல் தொகுதியில் மக்கள் சுதந்திரமாக வாக்களித்ததாகவும், அங்கு அனைத்துக் கட்சியின் அங்கத்தவர்களும் தங்களது துண்டுப்பிரசுரங்களை மக்களுக்கு வழங்கியதைத் தாம் அவதானிக்க முடிந்ததாகவும் கருத்துக் கூறியுள்ளனர். நன்றி புதினம்! - Eelavan - 04-02-2004 இதன் மூலம் தெரியவருவது என்னவென்றால் அவர்களுக்கு தேர்தல் முடிவு இப்போதே தெரிந்துவிட்டது இல்லையில்லை அது வேட்புமனு தாக்கல் செய்த அன்றே அவர்களுக்குத் தெரியும் தோல்வி நிச்சயமானவுடன் இதுவல்ல இன்னும் சொல்வார்கள் சொந்த மக்கள் மீதே நம்பிக்கையின்றி சிங்களவர் முஸ்லிம்கள் தான் தேர்தலைக் கண்காணிக்க வரவேண்டும் என்று மூக்கால் அழுதார்கள் இதுவே சிங்களப்பகுதியாக இருந்தால் ஒரு சிங்களவனைக் கண்காணிப்பது தமிழனா என்று இன்னேரம் கலவரமே ஆரம்பித்திருக்கும் அப்படியிருக்க இவர்கள் வருந்தி அழைத்த அதே கண்காணிப்பாளர்களே அசம்பாவிதம் எதுவுமில்லை என்று கருத்துக் கூறியபின்னும் தேர்தல் ஒழுங்காக நடைபெறவில்லை என்று கூப்பாடு போடுகிறார்கள் அப்பிடியென்றால் என்ன சொல்கிறார்கள் தமது கட்சியில் 9 பேரும் பாராளுமன்றம் போனால்தான் அது சட்டப்படியான தேர்தல் என்றா? அப்பிடியானால் 95 ம் ஆண்டில் நடந்த வெட்கக்கேடு தான் உண்மையான தேர்தலா? - Mathan - 04-02-2004 Eelavan Wrote:இதன் மூலம் தெரியவருவது என்னவென்றால் அவர்களுக்கு தேர்தல் முடிவு இப்போதே தெரிந்துவிட்டது இல்லையில்லை அது வேட்புமனு தாக்கல் செய்த அன்றே அவர்களுக்குத் தெரியும் 95ம் ஆண்டு தேர்தலை நாம் ஒப்பிடவேண்டியதில்லை. அது ஒரு நாலுபேர் வாக்களித்து நாற்பதுபேர் பாராளுமன்றம் போன கதை. - Eelavan - 04-02-2004 அந்த ஜனநாயக முறைதானே மீண்டும் வரவேண்டும் என்று தானே கூப்பாடு போடுகிறார்கள் தேர்தல் முடிவுகள் மற்றும் கருத்துக்களுக்காக தேர்தல் என்று புதிய களம் ஆரம்பிப்போமா ஏனெனில் ஒரு இடத்திலேயே தேர்தல் பற்றிய முழுச் செய்திகளையும் அறிய முடியும் - Mathan - 04-02-2004 Eelavan Wrote:அந்த ஜனநாயக முறைதானே மீண்டும் வரவேண்டும் என்று தானே கூப்பாடு போடுகிறார்கள் 4 பேர் வாக்களித்தை ஜனநாயகம் என்று சொல்லாதீர்கள். ஆரம்பியுங்கள். தேர்தல் செய்திகளை நாம் அதில் போடலாம். - Mathan - 04-02-2004 எத்தனை சீட்டுக்கள் மொத்தமாக தமிழர் தரப்புக்கு கிடைக்கும் என்றூ நினைக்கின்றீர்கள்? அது எந்த தமிழர் கட்சியாய் இருந்தாலும் சரி. |