![]() |
|
சாத்திரியின் ஐரோப்பிய (அ)வலம். - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: சாத்திரியின் ஐரோப்பிய (அ)வலம். (/showthread.php?tid=4271) |
- Sukumaran - 03-02-2006 லிங் கொடுத்த குருவியண்ணனுக்கு நன்றி.. மேடையேறி பட்டம் வாங்குபவர்கள் நடுவில் அடியேனுக்கு இக்களத்தில் கிடைத்த சிறப்புப்பட்டங்களால் இக்களத்துக்கே பெருமையுண்டாகியது.. அதற்காக வினீத்..நர்மதா..ஜெயதேவன்..கறுணா..ஆன்தசங்கரி..தல..நாரதர்..சிறீ..சாணக்கியண்ணனுக்கும்.. ரகுவரன்..ஈழவன்..ஆருரண்ணனக்கும் நன்றிசொல்லக்கடமைப்பட்டிருக்கிறேன். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin--> எதக்கா அப்ப வந்த கட்டுரை லிங் குடுங்கோ.. <!--QuoteEnd--><!--QuoteEEnd-->http://www.yarl.com/forum/viewtopic.php?t=8056<!--QuoteEnd--></div><!--QuoteEEnd--> - கந்தப்பு - 03-02-2006 சொந்த தாய் ,சகோதரிகளினைக் காட்டிக்கொடுத்து பெற்ற எட்டப்பன் பட்டம் - Sukumaran - 03-02-2006 அப்பு ஒங்கள சேர்க்கலைண்ணு கோபப்டுறமாதிரிக்கு.. மன்னிச்சுடுங்க ஒங்களயும் பட்டியல்ல சேத்துக்கறேன்.. நன்றியப்பு.. 8) - RaMa - 03-04-2006 சாத்திரி உங்களின் ஆக்கத்தை இன்று தான் படித்தேன். குற்றம் உள்ள நெஞ்சு தானே குறுகுறுக்கும். ஆகவே இவர்களை நாம் இனம்கண்டு அவர்களை பற்றி புகழ்வதை குறைக்க வேண்டும். - sathiri - 03-17-2006 <span style='font-size:25pt;line-height:100%'>அவலம் அவலம் அவலம்</span> http://www.orupaper.com/issue43/pages_K__34.pdf உலக மகளிர் தினத்தில் எமது நாட்டிலும் மற்றும் உலகமெங்கும் பெண்களின் பிரச்சனைகளிற்காய் போராடுகின்ற பெண்களை நினைவு கூர்ந்து அவர்களை பாராட்டி அவர்களின் ஆக்கமான பணிகளிற்கு ஊக்கம் கொடுக்கவேண்டியது எமது அனைவரது கடைமையுமாகும். அதேவேளை தாங்களும் பெண்கள் என்ற கூறிக்கொண்டு ஒரு அமைப்பையும் வைத்து கொண்டு பெண்களிற்கே இழிவை ஏற்படுத்தும் செயல்களையும் பரப்புரைகளையும் செய்து கொண்டு சில பெண்கள் புலத்தில் புதுமை பெண்கள் என்கிற பெயரில் நடமாடி இல்லை நாடகமாடி கொண்டிருக்கிறார்கள் அவர்களையும் இந்த நேரத்தில் அடையாளம் காணவேண்டியது காலத்தின் கடைமையாகின்றது காரணம் இவர்களது அண்மைய அணுகு முறைகளும் செயற் பாடுகளும் பெண்ணினத்திற்கு மட்டுமல்ல ஈழத்தமிழ் இனத்தின் போராட்டத்தையும் ஈழதமிழ் பெண்களையும் கேவலப்படுத்துகின்ற செயல்களை மெதுவாக ஆனால் ஆழமாக செய்து வருகின்றனர்.அதற்கு எலும்பிற்கு விலை போன சில எச்சிலிலை இணையதளங்களும் சில பத்திரிகைகளும் தாராளமாகவே இவர்களிற்கு உதவி வருகின்றன. கடந்த வருடம் இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கி நடத்திய பெண்மணி ஈழத்தில் நடந்த ஒரு துரோகியின் மரணத்திற்கு ஒரு அறிக்கை விட்டார் அதாவது ஈழத்தில்சிறீலங்கா இராணுவம் சும்மா ஒரு பெண்ணின் கையை பிடித்துவிட்டாலே உடனே எல்லா தமிழ்ஊடகங்களும் பாலியல் வன்முறை அய்யோ என்று கத்துகிறார்கள் ஆனால் மற்றவைகளை ஏன் கண்டும் காணாத மாதிரி இருக்கிறார்கள் என்று அந்த அம்மணியின் அறிக்கை வெளிவந்தத மரணங்கள் கண்டிக்கபட வேண்டியவைதான் ஆனால் அவரின் பார்வையில் ஒரு அப்பாவி தமிழ்பெண் இராணுவத்தால் பலாத்காரமாக பாலியல் வன்முறைக்கள்ளாக்கபட்டு படுகொலையும் செய்யபடுவதென்பது சாதாரணமாய் ஒரு கையில் பட்டதுபோன்றது. ஆனால் ஒரு துரோகியின் மரணம் கண்டிக்கபட வேண்டிய படுகொலை இப்போது புரிகிறதா இவரின் நோக்கம் என்ன யார் இவர் என்று.பலரின் கைகளிலே தவழ்ந்து புரழ்வது புதுமை பெண்களாகிய அவர்களிற்கு சாதாரணமாய் கை பட்டசெயலாய் இருக்கலாம் ஆனால் ஒரு தன்மானமுள்ள தமிழீழ பெண்ணிற்கு அவளின் அனுமதியின்று அடுத்தவனின் கையென்ன கை நகம் பட்டாலேஅவள் அதை எதிர்த்து உயிருள்ளவரை போராடுவாள். அது அவளது தன்மான பிரச்சனை. அது இல்லாதவர்களிற்கு அது எல்லாம் விழங்குமாவென்று எனக்கு விழங்கவில்லை.அடுத்ததாய் இவர்களுள் முக்கியமான ஒருவர் கொழும்பிலேயே பிறந்து கொழும்பிலேயே வளர்ந்த இவர் போலிய கொட பாலம் கடந்ததே கட்டு நாயக்காவிற்கு விமானமேறி வெளிநாடு வரத்தான். வெளிநாடு வந்து வெள்ளையனை திருமணம் செய்து வெள்ளைக்கு பிறந்த பிள்ளையளிற்கோ தமிழ் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கிற நிலைமை. இப்படி தமிழீழத்திண் தண்ணீர் என்ன சுவை என்றே அறியாத அம்மணி தமிழீழ தங்கைகள் தற்காப்பு பயிற்சி எடுப்பது தவறாம்.என்று பக்கம் பக்கமாக எழுதியும் பத்தாதற்கு ஒண்டாய் கூடி எதிர்ப்பு தீர்மானம் வேறை நிறைவேற்றினமாம்.இவர்களை விட்டு விட்டாலும் இவர்களுள் சிலபெரிய கில்லாடிகளும் உள்ளனர் இவர்கள் புலித்தோல் போர்த்த நரிகள் இவர்கள் தாங்கள் தமிழீழ ஆதரவாளர்களாகவும் தமிழ் போராட்டத்திற்கு துணை போகின்னறவர்களாகவும் போக்கு காட்டிகொள்வதோடு மட்டுமல்லாமல் சமாதானகாலத்தில் தாயகம் போய் அங்கு போராளிகளுடன் சில புகைப்படங்களையும் எடுத்து கொண்டு வந் தங்கள் இணையதளங்களில் அப்படங்களை இட்டு சுய விளம்பரம் தேடிக்கொண்டு அதே நேரம் இந்த கூட்டத்திற்கும் பின்கதாவால் அழைத்து அரவணைத்தகொண்டும் நன்றாகவே இரு வேடங்களில் கலக்குகிறார்கள். இவர்களே மிகவும் ஆபத்தானவர்கள்.இவர்கள் ஆணடிமை தனத்தை எதிர்ப்பதாக கூறிகொண்டு அறியாமல் எழுத்திலும் பேச்சிலும் ஆண்களையே எதிர்த்து கொண்டிருக்கிறார்கள் அதற்கு அவர்கள் எழுதிகின்ற கதைகள் கவிதைகளை என்னவென்று சொல்வது ஒரு குடும்பத்தின் மென்மையான பாசஉறவுகளான அப்பா அண்ணா தம்பி சித்தப்பா மாமன் என்கிற உறவுகளையே கொச்சை படுத்தும் விதமான ஆபாசமான எழுத்துகள் இதை எழுத பெண்கள் விடுதலை அமைப்பு என்று ஒரு அமைப்பு போர்வை தேவையில்லை பேசாமல் ஒரு மஞ்சள் பத்திரிகையை நடத்தி தங்கள் விருப்பங்களை தாராளமாக நிறைவேற்றி கொள்ளலாம் இவர்கள். இவர்களது எழுத்துக்கள் பெண்களாலேயே படிக்கமுடியாமல் போய் இவர்களது உண்மை சாயம்மெல்ல வெளுக்க தொடங்க இப்போ புலியெதிர்ப்பு சனநாயகம் என்கிற போர்வையை போர்த்த தொடங்கியிருக்கின்றார்கள். அதவும் கனநாள் நிலைக்காது. காரணம் அண்மையில் அய்ரரோப்பாவின் அதியயர் சனநாயக வாதியும் ஜக்கிய ராச்சியத்தின் அதியயர் பாதுகாப்புடன் இருந்து இவர்களை போலவே மனிதவுரிமை பற்றி பேசி கொண்டிருந்த ஒருவரின் முகமூடி கழன்று சுவிஸ் காற்றில் பறந்தது அனைவரும் அறிந்ததே. இந்த மகளிர் அமைப்பினருள் ஆரம்பகால உறுப்பினர் ஒருவரை நான் பாரீசில் பல வருடங்களிற்கு மன்னர் சந்தித்த போது அவர் என்னிடம் கூறினார் தாங்கள் புரட்சி பெண்கள் நாங்கள் நகைகள் அணிவதில்லை வண்ணங்கள் பூசி அழகு படுத்துவதில்லை அவையெல்லாம் பெண்ணடிமை சின்னங்கள் என்றார்.நானும் அவர் உண்மையா புரட்சி பெண்தான் எண்ற நம்பி எல்லா பெண்களும் உங்களை போல மாறிவிட்டால் எங்கள் சமூகத்தில் தாலி என்கிற ஒருஅடிமை சின்னத்தையே இல்லாமல் பண்ணிவிடலாம் என்று பாராட்டி விட்டு வந்தேன். பிறகு காலங்கள் செல்லதான் அவர் கூறியதற்கான உண்மையான அர்த்தம் எனக்க விழங்கியது. என்னவென்றால் பச்சோந்திகளிற்கு வண்ணம் பூச வேண்டும் என்கிற அவசியம் இல்லையே அவை தேவைக்கேற்ப நிறம்மாறி கொள்ளுமே அதனால் தான் அவர் தாங்கள் வண்ணங்கள் பூசுவதில்லை யென்றிருக்கிறார். இப்படி நிறம் மாறி கொண்டிருக்கும் புரட்சி பெண்கள் எப்போது தங்களை ஆட்டிவைத்து கொண்டிருக்கும் அன்னியசக்திகளிற்கு விலை போன ஆண்களிடம் இருந்து விடுபடுகிறார்களோ அப்போதான் இவர்கள் உண்மையான புரடசி பெண்கள் . விடுபடுவார்களா??????? - sathiri - 04-08-2006 இன்று புலம் பெயர் நாடுகளில் பல ஊடகங்கள் மற்றும் பத்திரிகை வார மாத இதழ்கள் என்று பலவும் புலம்பெயர் தமிழர்களால் நடாத்தபடுகின்றது அதே போல இன்றைய தொழில் நு.ட்ப புரட்சியின் ஒரு உன்னத கண்டுபிடிப்பால் இன்று இணைய பத்திரிகைகளும் நாளுக்கு நாள் ஒவ்வொன்றாக அறிமுகமாகி கொண்டிருக்கின்றன ஒரு சில வேண்டாத சம்பவங்களை தவிர்த்து பார்த்தால் புலத்து தமிழரின் இந்த முயற்சிகள் பாராட்டபட வேண்டியவை. பாராட்டுவோம். இவை இப்படியிருக்க இங்கு இந்த தமிழ் ஊடக மற்றும் எழுத்தளர்கள் ஒன்றியம் என்று ஒண்டு உண்டு அதற்கு தலைவர்என்றும் ஒருவர் உள்ளார். இது எத்தனை பேருக்கு தெரியும்? இப்படி ஒரு அமைப்பு இருப்பதாக ஒரு ஆறு மாதங்களிற்கு முன்னர் நான் கேள்விப்பட்டபோது உங்களை மாதிரித்தான் நானும் முழித்தேன். காரணம் இப்படியொரு அமைப்பு இயங்குவதாக வாசகர்களிற்கு தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லாவிட்டாலும் புலம் பெயர் எழுத்தாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் எத்தனை பேருக்கு இந்த அமைப்பை பற்றி தெரியும்? எத்தனை பேர் இதனுடன் இணைந்து செயல்படுபவர்களாகவோ அல்லது அங்கத்தவராகவோ இருக்கிறார் என்று முயன்றவரை முயற்சி பண்ணி விசாரித்ததில் பெரிய ஊடககங்களிற்கோ ஏன் புலத்தில் பெயர் சொன்னால் தெரிய கூடிய எழுத்தாளர்களிற்கோ இப்படி ஒரு ஒன்றியம் ஒன்று இருப்பது தெரியாது. காரணம் அந்த ஒன்றியத்தின் செயல் வேகமாகவோ விவேகமாகவோ செயற்பட்டு தமிழ் ஊடகவியலாளர்களையோ அல்லது எழுத்தாளர்களையோ உள்வாங்கவில்லையென்பதே. இன்று புலத்தில் தமிழ் எழுத்தாளர்களை எடுத்துக் கொண்டால் அவர்கள் அடித்த தேங்காய் போல் சிதறி ஆளுக்கு ஒரு இலக்கிய வட்டம்இ இலக்கண வட்டம் என்று வட்டங்கள் அமைத்து அந்த வட்டத்திற்குள்ளேயே கட்டம் கட்டமாக பிரிந்து போய் வருடத்தில் ஒருமுறை எங்காவது ஒரு மண்டபத்திலோ அல்லது ஒரு வீட்டிலோ கூடி சில தீர்மானங்கள் அல்லது கண்டனங்களை ஞஉறைவேற்றி விட்டு கலைந்துஇ கரைந்து காலப்போக்கில் காணாமல் போய் விடுகிறார்கள். இப்படி இவர்களது அறிவு ஆற்றல் எல்லாம் வீணே விழலுக்கிறைத்த நீராய் வீணாகாமல் அதை அணைகட்டி ஒருங்கிணைத்து ஒரே பாதையில் எமது தமிழ் தேசியத்தின் பலத்திற்காகவும் இவர்களை கொண்டே புலத்தின் எமது இளம் சந்ததியின் சக்திகளையும் அறிவாற்றலையும் எமது தாயகம் நோக்கியதாய் திருப்ப வேண்டியது இந்த புலம்பெயர் ஊடக மற்றும் எழுத்தாளர் ஒன்றியத்திற்கு முன் உள்ள பாரிய கடமையாகும். ஆனால் அந்த ஒன்றியம் என்ன செய்து கொண்டிருக்கிறதென்றால் தனது இருப்பை காட்டி கொள்ள அவ்வப்போது ஒரு அறிக்கை. அதாவது பலரையும் போய் சென்றடைய கூடிய பத்திரிகைகளில் கூட இல்லை தங்களிற்கு தெரிந்த ஒருசில இணைய தளங்களிற்கு எழுதி அனுப்பி விட்டு மறக்காமல் தலைமை தன்னுடையை பெயரை மட்டும் போட்டு விடுவார். அப்படித்தான் அண்மையில் மறைந்த மாமனிதர் யோசப் பரராயசிங்கத்தின் படுகொலைக்கும் அந்த ஒன்றியத்தின் தலைவர் ஏதோ தான் வள்ளுவரின் வம்சாவழி வந்தவர் போல இரண்டே இரண்டு வரியில் இரண்டு கண்டன அறிக்கைகளை விட்டார் அதுவும் ஒரேயொரு இணையதளத்தில் பார்க்க முடிந்தது. கீழே மறக்காமல் வழமை போல தனது பெயர் இட்டுருந்தார். காரணம் அதை போடாவிட்டால்இவரையாரென்று எவருக்கும் தெரியாது. (போட்டாலும் தெரியாது) ஏன் மற்றைய ஊடகங்களிற்கு இவர் அனுப்பவில்லையா? அல்லது அனுப்பியும் அந்த ஊடகங்கள் இவரது இரண்டு வரி கண்டனத்தை பார்த்து இதெல்லாம் ஒரு கண்டனமா? என்று பிரசுரிக்கவில்லையா தெரியவில்லை. இதற்கு முதலும் பெல்ஜியத்தில் அய்ரொப்பிய ஒன்றியத்தின் புலிகள் மீதான சில கட்டுப்பாடுகளிற்கு எதிர்ப்பு தெரிவித்து புலம் பெயர் அய்ரோப்பிய தமிழர்களால் நடாத்த பட்ட மாபெரும் கண்டன பேரணி பற்றிய விபரங்களை மற்றைய அய்ரோப்பிய ஊடகங்கள் மூலம் அய்ரோப்பிர்களிற்கும் எடுத்து சென்று அந்த ஊர்வலத்தின் சரியான பலாபலனை அறுவடை செய்ய தவறியதற்காகவும் இந்த ஒன்றியத்தின் மீதும் அதன் தலைமை மீதும் பலரின் கண்டனங்கள் எழுந்ததும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். இன்று சாதாரணமாக பொழுது போக்குவதற்காகவே பலர்தங்களிற்கு என்று இணையத் தளங்களை உருவாக்குகின்ற காலமிது இந்த காலத்தில் இப்படியான ஒரு பொறுப்புவாய்ந் ஒரு அமைப்புதனக்கென்று ஒரு இணைய தகவல் தளம்ஒன்றை கூட இதுரை அமைக்கவில்லை. நமதுஇலக்கு என்று ஒரு பத்திகை மட்டும்மாதாந்ம்வெளிவருகிறது அமரத்துடைந்வருக்கு அடிக்கிற அஞ்சலி பத்திகை மாதி ஒரு பக்க பத்திகை அதன் விலை ஒரு யுரோ. பலபக்கங்களில் பல்சுவை நிகழ்ச்சிகளையும்தாங்கி பல ஆயிம்பிரதிள் விற்ற பத்திகைகளே இன்று இணைய பத்திகைகளின் இலவச வரவால் பணம்பார்கா விட்டாலும்பரவாயிலை பத்திரிகை படுத்துவிட கூடாதுஎன்பதற்காக அனுசரனையாளர்ளின் விளம்பர ஆதரவுடன் இன்று இலவச பத்திகைகளாய்மாறிவிட்ட காலத்தி. இவர்கள் பத்திகைக்கு ஒரு யுரோ என்றால் எவன் ஏறெடுத்துபார்பான். எனவே இந் ஒன்றியத்தி பெறுப்பாளர்தான் தாங்கி நிற்கும்பாரிய கடமையை கருத்தில் கொண்டு இனிமேலும்கதை எழுதுவதும் கவிதை வெளியிவதோடும்மட்டும் தனதுப ணி முந்துவிட்டதுஎன்று எண்ணிவாழாவிருந்துவிடாமல் உலகத்திள்ள பும்nபயர்தமி எழத்தாளர்கள் மற்றும்ஊடகவியலாளர்ளை ஒன்றிணைத்துஅரவணைத்துஅவர்ளதுஅத்தனை அறிவாற்றலையும் எமதுதாயகம்நோக்கியதாய் இழுத்து செல்ல வேண்டியது இவரதுபணியாகும் தற்சமயம்எமதுதாயகத்திகான போராட்டம்வெறும்ஆயுத போராட்டமாக மட்டுமிறி தகவல் தொழில்நு.ட்ப போராட்டமாக மாறிவிட்ட கால கட்டம் இந் சந்ர்ப்பத்தை சரியாக நாம்பயன் படுத்திகொள்ள வேண்டும் இதனை இந்த ஒன்றியம்தக்கரீதியில் பயன்படுத்துமா?? தவற விடுமா?? என்பதுபொறுத்திந்துபார்போம் நன்றிகள்: ஒருபேப்பர் http://www.orupaper.com/issue44/pages_K__34.pdf - கறுப்பி - 04-09-2006 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->பாராட்டுவோம். இவை இப்படியிருக்க இங்கு இந்த தமிழ் ஊடக மற்றும் எழுத்தளர்கள் ஒன்றியம் என்று ஒண்டு உண்டு அதற்கு தலைவர்என்றும் ஒருவர் உள்ளார். இது எத்தனை பேருக்கு தெரியும்? இப்படி ஒரு அமைப்பு இருப்பதாக ஒரு ஆறு மாதங்களிற்கு முன்னர் நான் கேள்விப்பட்டபோது உங்களை மாதிரித்தான் நானும் முழித்தேன்.<!--QuoteEnd--><!--QuoteEEnd--> புலம் பெயர் பல நாடுகளில் தமிழ் எழுத்தாளர் ஒன்றியங்கள் பல பெயர்களில் பல வருடங்களாக இயங்கிக்கொண்டுதானே இருக்கின்றது. தலைவர், காரியதரிசி, செயலாளர் என்ற பதவியெல்லாம் இருக்கின்றது. - sOliyAn - 04-09-2006 இந்த கட்டுரையில் தமிழமுதத்தைப் பற்றியும் 'கிசுகிசு' வந்ததால் சிறு விளக்கமளிப்பது எனது கடமை. சர்வதேச புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் அதனுடைய பெயர். அதாவது தமிழ் எழுத்தாளர்களது ஒன்றியம். ஊடகவியலாளர்களது அல்ல. எழுத்தாளர்கள் ஊடகவியலாளர்களாக இருக்கலாம். ஆனால் ஊடகவியலாளர்கள் எல்லாரும் எழுத்தாளராக இருக்கவேண்டியது அவசியமில்லை. இன்னொன்று.. தமிழமுதத்துக்கு மேற்குறிப்பிட்ட ஒன்றியத்தின் செயற்பாடுகளை அறியத்தருபவர் அந்த ஒன்றியத்துக்கான ஊடகவியலாளர். அதாவது அந்த ஒன்றியத்தின் ஊடகத் தொடர்பாளர். ஒன்றியத்தின் தலைமையோ அல்லது தலைவரோ அல்ல. ஆக, இதையே புரிந்துகொள்ள முடியாத அல்லது தெரிந்திராத ஒரு வசை... அதுக்கு தோதாக ஒரு பேப்பர். இப்படி எத்தனை தவறுகளோ.. சம்பந்தப்பட்டவர்களுக்குத்தான் தெரியும். விமர்சனமோ அல்லது வசையோ.. அதையாவது உண்மையாக முன்வைத்தால் எதிர் கருத்துகளுக்கு இடமில்லை அல்லவா?! இன்னுமொன்று.. மேற்படி ஒன்றியமானது ஆரம்பிக்கப்பட்டு ஓரு வருட காலமாகத்தான் இருக்கும்.. அதிலே 80களிலிருந்து ஜேர்மனியில் எழுதிய பல எழுத்தாளர்கள் உள்ளார்கள்.. ஆக, ஒன்றியம் பலரை உள்வாங்க வேண்டிய நிலையில் உள்ளது என நினைக்கிறேன்.. காலப்போக்கில் புகலிட நாட்டு மொழித் தேர்ச்சியுள்ளவர்களும் இணையும்பட்சத்தில் அதன் செயற்பாடுகளும் விரிவடையலாம்.
- manju - 04-09-2006 இன்றைக்கு லண்டனில் இன்னொரு சர்வதேச தமிழ் ஊடகவியலாளர் சங்கம் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. இடம்: சிவயோகம் மண்டபம். ரூட்டிங் மாலை 5மணி - manju - 04-09-2006 இன்றைக்கு லண்டனில் இன்னொரு சர்வதேச தமிழ் ஊடகவியலாளர் சங்கம் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. இடம்: சிவயோகம் மண்டபம். ரூட்டிங் மாலை 5மணி - sathiri - 04-09-2006 சோழியனிற்கு வணக்கம் உங்கள் விளக்கத்திற்கு நன்றி சினிமா செய்திகளை போல எழுதிய கிசு கிசு அல்ல அதே நேரம் வசையும் அல்ல ஒரு ஒன்றியத்தின் செயற்பாடுகள் சரியான வேகத்தில் இல்லையே என்கிற ஒரு ஆதங்கம் தான் நான்கூட பல முறை இந்த ஒன்றியத்தை பற்றி உங்கள் தளத்தில் செய்தி தரும் உதன் பேச்சாளர் பற்றியும் பல முறை விவாதித்து இருக்கிறேன். இது நீங்கள் கூறியதை போல வசை என்று எடுத்து கொண்டால் என்னால் எதுவும் செய்ய முடியாது இந்த கட்டுரை அவர்களது அடுத்த கட்ட நடவடிக்கைகளை தீவிரமாக முடுக்கிவிட அவர்கள் சிந்தனையில் ஒட்டபட்ட பசை என்று நினைத்தால் சந்தோசம். அதைவிட அந்த அமைப்பின் கட்டுரைகளோ கண்டனங்களோ மற்றறை வேறு அறிவித்தல்களோ உங்கள் தளத்தில் மட்டும் தான் வந்திருக்கின்றது என்பதை நீங்களே ஒத்து கொள்கிறீர்கள் அது தான் எனது கேள்வியும் என் அதனை பரந்த அளவில் அனைவரையும் போய் சேர கூடிய விதத்தில் எல்லா உடகங்கள் மற்றும் பத்திரிகைகளில் செய்யவில்லை அந்த அமைப்பின்பெயரை சர்வதேச என்கிற பதத்தை நீக்கிவிட்டு தனியாக யெர்மன் பிறீமன் நகர எழுத்தாளர் மற்றும் ஊடகவியலாளர் என்று மாற்றிவிடலாமே.மற்றபடி ஒருபேப்பரையோ என்னையொவிமர்சிக்காமல் விமர்சனத்தை விமர்சியுங்கள் நன்றி - sOliyAn - 04-09-2006 ஒரு பேப்பரை விமர்சித்த காரணம் அதிலுள்ள தவறுகளை அவ்வாறே பிரசுரித்தமை. 'கீழே மறக்காமல் வழமை போல தனது பெயர் இட்டுருந்தார். காரணம் அதை போடாவிட்டால்இவரையாரென்று எவருக்கும் தெரியாது. (போட்டாலும் தெரியாது) ' அதேபோல இப்படியான வசனங்களை தாங்கள் பாவிப்பது ஆரோக்கியமானதல்ல.. ஏனெனில் அவரை ஏற்கெனவே பலரும் அறிவார்கள் என்பது எனது கருத்து. அதேபோல பிறேமன்ல நானிருப்பதால் அந்த ஒன்றியத்தின் பெயரையே பிறேமனுடன் தொடர்பு படுத்துமாறு கூறும் தங்கள் எழுத்துக்கு ஒரு நளினம் இருக்குமாயின்.. அவற்றை சுட்டிக்காட்டி விமர்சிக்கும் உரிமை எனக்கும் இருக்கும்தானே.. விமர்சனம் என்பது ஆரோக்கியமாக இருக்கவேண்டுமே தவிர.. ஒன்றை அழிப்பதாகவோ ஒருவரை களங்கப்படுத்துவதாகவோ இருக்கக்கூடாது.. அந்த ஒன்றிய அறிக்கைகளோ அறிவித்தல்களோ வேறு ஊடகங்களில் வரவில்லை எனில்.. முதலில் அவர்களை தொடர்பு கொண்டு விசாரித்துவிட்டு எழுதியிருக்கவேண்டும்.. இது தங்களுக்கு மட்டுமல்ல.. இதை பிரசுரித்த ஒரு பேப்பர்காரர்களுக்கும் பொருந்தும். - sathiri - 04-09-2006 சோழியன் பிறீமனில ;நீpங்களிருப்பதால் அந்த ஒன்றியத்தை நான் உங்களுடன் தொடர்பு படுத்தி நளின படுத்தவில்லை அப்படி போட்டுவிட்டால் உலகெஞ்கிலுமிருந்து தங்கள் தளத்தை படிக்கும் தமிழர்கள் இந்த அமைப்பு தனியாக ஒரு மானிலத்திற்குள்ளேயெ தனது செயற்பாடுகளை வைத்துகொண்டுள்ளது பிறகு நாம் அதை பற்றி மேலதிகமாக எதற்கு அதை பற்றி அலட்டி கொள்ள வேண்டுமென்று பெசாமல் இருந்து விடுவார்கள் ஆனால் அது சர்வதேச என்கிற சொற்பதம் வருகிறபோது அதன் செயற்பாடுகள் மற்றும் அறிக்கைகள் மற்றைய பத்திரிகைகளில் வருவதில்லையே ஏன் என்றுதான் நான் கேட்டேன் மற்றபடி அதன் தலைவர் யார் எங்கிருக்கிறார் அதன் பேச்சாளர் யார் எங்கிருக்கிறார் என்கிற விபரங்கள் எனக்கு தெரியும் அவர்கள் பிறீமன் நகரில் இருக்கிறார்கள் என்று நான் சொல்லவில்லை. அதை விட இங்கு அந்த அமைப்பை அழிக்கிற அளவிற்கோ களங்கம் வருகிற அளவிற்கோ கீழ்த்தரமாக என்ன எழுதிவிட்டேன் ??? இதில் உங்கள் தளத்தை பற்றியதோ அல்லது உங்களை பற்றியோ ஒரு வரிகூட ஏதும் நான் விமர்சிக்ககூட இல்லையே ??ஆனால் நீஙகள் தான் முதலில் உணர்ச்சிவசப்பட்டு வசை பாடிவிட்டதாக எழுதி விட்டீர்கள் வசை என்கித பதத்தை விட்டு அந்த சொல்லிற்கு பொருத்தமான பல தமிழ் சொற்கள் உள்ளது ஒரு தமிழ் எழுத்தாளராகிய உங்களிற்கு நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை ; அடுத்து இங்கு நீங்கள் உங்கள் தளம்பற்றி செய்திவந்ததால் இங்கு உங்கள் கருத்தை முன்வைக்கின்றீர்களா? அப்படியானால் நான் இதற்கு மேல் விவாதிக்கவில்லை காரணம் நான் முதலே கூறி விட்டேன் உங்கள் தளத்தை நான் விமர்சனம் செய்யவில்லையென்று அது உங்களிற்கும் புரியும்;. நீங்கள் அந்த ஒன்றியம் சார்பாக உங்கள் கருத்தை முன்வைப்பதாக இருந்தால் (காரணம் நீங்கள் அதன் உறுப்பினராக இருக்கலாம் டப்படி இருந்தால்)அந்த ஒன்றியம் பற்றியும் அதன் செயற்பாடுகள் இதுவரை அலர்கள் செய்தவை பற்றி தாராளமாக நான் உங்களுடன் கருத்தாட தயார். இங்கேயும் பாருங்கள் அந்த ஒன்றியத்திற்காக நீங்கள் தான் இங்கு சில விளக்கங்களை கொடுக்க வேண்டியுள்ளது - sOliyAn - 04-09-2006 மன்னிக்கவும்... ஜேர்மன் எழுத்தாளர் சங்கம், சர்வதேசபுலம்பெயர் எழுத்தாளர் ஒன்றியம்ஆகிய இரண்டு அமைப்புகள் ஆகக் கூடியது 2 வருடங்களுக்குள்ளாக (மன்னிக்கவும்.. ஆரம்பகாலத்தை சரியாக குறிப்பிட முடியவில்லை.) இயங்குகின்றன. நான் இரண்டிலும் இதுவரை அங்கத்துவனாக இணையவில்லை.. காரணம், அவற்றின் செயற்பாடுகளை இன்னும் அறியவேண்டும் என்ற எண்ணத்தினால்தான். ஆனால் ஜேர்மன் எழுத்தாளர் சங்கத்தின் ஆரம்ப கூட்டத்தில்மட்டும் பங்குகொண்டேன். விக்னா பாக்கியநாதன் , பாக்கியநாதன் ஆகியோர் 'கலைவிளக்கு' எனும் சஞ்சிகையை நடாத்தியபோது.. எனது ஆக்கங்களை பிரசுரித்தவகையில் ஓரளவு அறிமுகம் உண்டு. கோசல்யா சொர்ணலிங்கத்துடனும் சில விழாக்களில் கதைத்ததைத் தவிர வேறு அறிமுகங்கள் கிடையாது. அத்துடன் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக அவர்களது நகரங்களிலிருந்து 250 கிமீற். தொலைவில் இருப்பதால் அவர்களைப்பற்றிய மேலதிக விபரங்களும் தெரியாது. எனக்குத் தெரிந்தது அவர்கள் எழுத்தாளர்கள். அவ்வளவுதான். சாத்திரி அவர்களுடைய ஆக்கத்திலே.. அவர் ஒன்றியத்தை விமர்சிப்பதற்கு பதிலாக.. ஊடகத் தொடர்பாளரை தாக்குவதாக எனக்குத் தோன்றிய உணர்வை இங்கே வெளிப்படுத்தினேன். அவ்வளவுதான். அதேவேளை.. தமிழமுதமானது ஈழவிடுதலை என்ற சார்பில் இருந்து, நடுநிலையான ஆக்கங்களை சகல எழுத்தாளர்களிடமிருந்து பெற்று வெளியிடவே விரும்புகிறது. அதே நேரத்தில் வெளியிடும் ஆக்கங்கள் சம்பந்தப்பட்ட விமர்சனங்களை எவ்வித தடையும் இன்றி பிரசுரிக்கும். ஆனால் ஆக்கத்தை விட்டு, எழுத்தாளரை விமர்சிக்கும் அல்லது எழுத்தாளரை களங்கப்படுத்தும் கருத்துகளை வெளியிடாது. ஆனாலும், சில அனுபவமின்மையால் அப்படியான சில கருததுகள் வெளிவந்துதானுள்ளன. இனிமேலாவது அப்படி வரும் கருத்துகளை தவிர்க்கவே 'தமிழமுதம்' முயற்சிக்கும். மற்றும்படி, சாத்திரி மேலோ அல்லது வேறு எவர் மீதோ எனக்கு எந்தவிதமாக தனிப்பட்ட பிரச்சினையோ பகையோ கிடையாது. அந்த ஆக்கம் என்னில் ஏற்படுத்திய உணர்வையும், நான் அறிந்த சில தகவல்களையும் வெளியிட்டேன். அவ்வளவுதான். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Ilayathambi - 04-19-2006 எனவே இந் ஒன்றியத்தி பெறுப்பாளர்தான் தாங்கி நிற்கும்பாரிய கடமையை கருத்தில் கொண்டு இனிமேலும்கதை எழுதுவதும் கவிதை வெளியிவதோடும்மட்டும் தனதுப ணி முந்துவிட்டதுஎன்று எண்ணிவாழாவிருந்துவிடாமல் இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். அந்த ஒன்றியப் பொறுப்பாளருக்கு கதையோ, கவிதையோ எதுவுமே எழுதத் தெரியது என்பதே உண்மை. ஒரு சிலரைத் தவிர அந்த ஒன்றியத்தில் இருக்கின்ற பெரும்பாலானவர்கள் எழுத்தாளர்கள் இல்லை. அந்த ஒன்றியம் உண்மையான எழுத்தாளர்களுக்கு ஒரு அவமானச் சின்னம். - sathiri - 04-24-2006 <span style='font-size:25pt;line-height:100%'>இனியொரு விதி செய்ய புறப்பட்டிருக்கும் இளையொர் அமைப்பு</span> உலக நாடுகளெங்கும் புலம் பெயர்ந்த தமிழர்களால் பல்வேறு நோக்கங்களிற்காய் பல்வேறு பெயர்களில் பல அமைப்புக்கள்தொடங்கபட்டு அவை ஒன்றுக்கொன்றுதொடர்பில்லாமலும் அவர்களிற்குள் ஆயிரம் குழப்பங்கள் குத்துபாடுகள் என்று தொடர்ந்தாலும் அவர்களின் ஆர்வத்தின் அடிப்படையில்முடிந்தவரை தமிழிற்கும் தாய் நிலத்திற்கும் சில சேவைகளையும் சிறு பத்திரிகைகள் மற்றும் சில சஞ்சிகைகள் என்று வெளியிட்டு கொண்டிருந்தபோதும் அவற்றில் பல அமைப்புகள் கால வெள்ளத்தில் கரைந்து காணாமல்போய் விட்ட நிலையில், இன்னும் சில கரைந்து பொய்கொண்டிருக்கும் நேரத்தில் தான் புலம்பெயர் சூழலியே பிறந்து வளர்ந்த மற்றும் சிறு வயதிலெயெ புலம் பெயர்ந்து வந்த இளையோரால் தமிழ் இளையோர் அமைப்பு என்னும் அமைப்பு பல நாடுகளிலும் ஒரேநோக்கத்திற்காய் ஒரே பெயரில் ஒன்றுக்கொன்று தொடர்புகளை பேணியபடி ஒரே அமைப்பாய் செயற்பட தொடங்கி அதன் செயற்பாடுகளும் பாராட்டதக்கதாய் பலரும் போற்ற தக்க விதத்தில் அவர்களது திறைமை உழைப்பு எல்லாமே எம் இனத்திற்கும் எம் நாட்டிற்கும் நன்மை தரும் விதத்தில் நகர்த்தபடுவது நல்லதொரு மாற்றமே. அவர்களது தாயக பயணமும் அங்கு அவர்கள் ஆற்றிய பணிகளும் அதற்கு சான்றாகும். புலத்து இளையவர் என்றாலே காதில் கடுக்கனும் கலர் அடித்த தலையும் கதா நாயக நாயகி கனவும் காதல் செட்டைகளும் மட்டுமே அவர்களிற்கு தெரியும் என்று இருந்த கதைகளையெல்லாம் காலால் உதைத்து, காலத்தின் உதாரணமாய் நாமிருப்பொம் என்ற காட்ட புறப்பட்டிருக்கும் அவர்களிற்கு கை கொடுத்து மேலும் மேலும் அவர்களது பணிகளிற்கு ஆக்கமும் ஊக்கம் கொடுத்து பராட்டவேண்டியது எமதும் மற்றும் எமது மற்றைய அமைப்பகளின் கடைமையாகும். ஆனால் ஒரு வேதனையான விடயம் என்னவென்றால் இங்குள்ள பல பழைய எம்மவர் அமைப்புக்களிற்கொ அதில் பதவிகளை அலங்கரித்திருக்கும் பழசுகளிற்கொ இந்த இளையவரை பாராட்ட மனது வரவில்லை. சரி பாராட்டத்தான் வேண்டாம் சும்மாயிருக்கிறார்களா என்றால் இல்லை . அவர்களின் புறு புறுப்பு என்னவென்றால் அவர்களது நடையையும் உடையையும் பார் நாட்டிற்கு உதுகளாலை என்ன நன்மை தமிழ் உச்சரிப்பே வருதில்லை உருப்பட்டமாதிரிதான் என்று இவர்களின் உளறல்கள். உடையாலும் உச்சரிப்பாலும் தான் ஒருவரிற்கு தன் இனத்தின் மொழியின் மீதான பற்று வரவேண்டுமென்றில்லை உடை நாகரிகம் என்பது என்ன? மனிதன் தான் வாழ்ந்த சூழலுக்கு அதன் தட்ப வெட்ப நிலைகளிற்கேற்ப தன்னைபாதுகாக்கவும் தனது மானத்தைமறைக்கவும் ஆடைகளை அணிய தொடங்கினான் காலப்போக்கில் அதில் மற்றங்களும் செய்து கொண்டனர். இவர்கள் இங்கு கூறுவது போல பார்த்தால் எமது பாட்டன் முப்பாட்டன் அணிந்தத போல நாம் இன்றும் கோவணமா அணியவேண்டும். இல்லை சொல்பவர்கள் தான் அதை அணிந்து திரிகிறார்களா??அடுத்ததாக தமிழ் உச்சரிப்பு என்று பார்த்தால் அவர்களது உச்சரிப்பை அழகிய தமிழ் உச்சரிக்க செய்வது ஒன்றும் கடினமான விடயம் அல்ல ஊருக்கு நாலு கதை பேசுகின்ற நேரத்தில் அதை நீங்களும் நாங்களும் செய்யலாம் இளையோர் அமைப்பினர் தாயக பயணம் மேற்கொண்டிருந்த போது அங்கு அவர்களிற்கான தமிழ் வகுப்புகளும் நடாத்தபட்டன என்பது இங்கு குறிப்பிட தக்கது. அதற்கும் மேலாக இளையோர் அமைப்பினர் எதிர்நோக்கும் இன்னொரு பிரச்சனை அவர்கள் பெற்றொரிடம் இருந்தே அதாவது பிள்ளை இளையோர் அமைப்பில் இணைகிறது என்றால் எங்கே அந்த பிள்ளை தங்களை விட்டு தாயகத்திற்கு போய்விடுமோ என்று தவறான நினைப்பினால் பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை இந்த அமைப்பில் இணைய அனுமதிப்பதில்லை அதனால் பலர் பெற்றோருக்கு தெரியாமலேயே இந்த அமைப்பில் பணியாற்ற வேண்டிய நிலை. பல பெற்றொர் தங்கள் பெண்பிள்ளைகளை இந்த அமைப்பில் இணைய விடுவதில்லை இதையெல்லாம் பார்க்கும் போது எழுபது எண்பதுகளில் தாயகத்தில் ஆயுதப் போராட்டம் தொடங்கிய கால கட்டத்தில் பல பெற்றோர்கள் இப்படித்தான் எங்கே தங்கள் பிள்ளை தங்களை விட்டு போராட போய்விடமோ என்கிற பயத்தில் அவர்களை கெஞ்சியும் மிரட்டியும் அவர்களை வெளி நாடுகளிற்கு அனுப்பி வைத்தனர். அங்கே அவர்கள் ஒரு தமிழராக நடந்து கொள்ளாமல் ஒரு சராசரி தாய் தந்தையாகவே நடந்து கொண்டனர். அதற்காக எமது போராட்டம் அப்படியெ நின்று போகவில்லை வெளிநாடு வந்த பலநூறு இளையவர்கள் திரும்பவும் தாயகம் வந்த போராடினர். அன்று தங்கள் பிள்ளைகளை அனுப்ப அவர்களிற்கு வெளிநாடு என்று ஒன்று இருந்தது ஆனால் இன்று வெளிநாட்டு பெற்றொருக்கு பிள்ளைகளை அனுப்ப எந்த இடம் உள்ளது ?? அடுத்த கிரகத்திற்கா?? தாயகம் மட்டுமே உள்ளது. எனவே இங்கு பெற்றோரும் வீணான பயங்களை விட்டெறிந்து தன்னினத்திற்கும் தன்மொழிக்கும் தாய் நாட்டிற்கும் சேவை செய்ய புறப்பட்டிருக்கும் தனது பிள்ளைகளை பார்த்து பெருமைபடவேண்டுமே தவிர பயப்பட தேவையில்லை. அடுத்ததாக எமது மக்களை சுனாமி தாக்கிய நேரத்தில் இவ் இளையொர் அமைப்பின் பணி மகத்தானது அந்த தை மாத குளிரிலும் தங்கள் பாடசாலை வகுப்புகளையும் நிறுத்தி விட்டு வீதி வீதியாக வீடு வீடாக ஒவ்வொரு நாட்டிலும் வெள்ளையினத்தவருக்கு அவரவர் மொழிகளில் எமது மக்களின் அவலத்தை எடுத்து சொன்ன அதே நேரம் சிறீ லங்கா என்கிற தேசம் வேறு எங்கள் தமிழர் தேசம் வேறு என்று அவர்களிற்கு புரிய வைத்து பாரிய அளவில் பண மற்றும் பொருளுதவிகளை பெற்று தாயகம் நோக்கி அனுப்பியிருந்தனர் அவர்களது அந்த பணியினை எந்தவொரு அமைப்பும் ஒரு பொது மேடையிலும் இவர்களை மனம் திறந்து பாராட்டவில்லையென்பது மட்டுமல்ல பலஊடகங்கள்கூட இவர்களது பணியினை பற்றி கண்டு கொள்ளவில்லையென்பதும் கவலையான விடயமே. இதுவரை நடந்தது நடந்தவையாக இருக்கட்டும் இனிமேலாவது மற்றைய அமைப்புகளின் பொறுப்புக்கள் மற்றும் பதவிகளில் இருக்கின்ற எம்மவர்கள் எதிர்கால எமது தேசத்தை கட்டி எழுப்ப போகின்ற எமது இளைய சமூதாயத்திற்கு வழி விட்டு அவர்களிற்கு வழிகாட்டியாக இருந்தலே போதும். இல்லை வழிவிட்டு ஒதுங்கியிருங்கள் அதுவே போதும். இறுதியாக இளையோருக்கும் ஒரு வேண்டுகோள். உங்கள் செயற்பாடுகளால் உங்கள் பெற்றோருக்கும் மற்றொருக்கும் உங்கள் மீதான நம்பிக்கையை கட்டியெழுப்பி இன்று எமது போராட்டத்தாலும் போராடியும் களைத்து போனதோர் சந்ததி அவர்களது சுமையின் மீதியை இன்று உங்கள் தோள்களில் சுமத்தியுள்ளது அதை சோகமான சுமையாக நினைக்காமல் சுகமான சுமையாக்கி எத்தனை தடைகற்கள் வந்தாலும் அதனை படிக்கற்களாக மாற்றி அதன்மீது நடந்து இனியொரு விதி செய்வீர். http://www.orupaper.com/issue45/pages_K__Sec3_28.pdf சாத்திரி ஒரு பேப்பருக்காய் நன்றி - kurukaalapoovan - 04-24-2006 நல்ல விடையத்தைப் பற்றி எழுதியிருக்குறியள். நன்றி சாத்திரி. தமிழ் ஒளி அவர்களின் நிகழ்ச்சிகளிற்கு முன்னுரிமை கொடுத்து விளம்பரப்படுத்த வேணும். நடைபெறும் நிகழ்ச்சிகளை ஆவணப்படுத்தி ஒளிபரப்ப வேண்டும். நல வாழ்வு என்று வாரம் தோறும் நடப்பது போல் இளையோர் அமைப்பினர் பங்கு கொள்ளும் கலந்துரையாடலை மாதம் ஒரு முறையாவது நடத்தலாம். ஜரோப்பாவில் வாழும் இளையவருக்கு கல்வி தொழில்த்துறை சார்ந்த அறிவுரைகள், தமது நடவடிக்கைகள், தாயகத் தேவைகள் என்ற விடையங்களை மைய்யப்படுத்தி இந்தக் கலந்துரையாடல்களை நடத்தலாம். - Ilayathambi - 04-24-2006 இளையோர் அமைப்பினர் வெறும் எடுபிடிகளாகத்தான் இருக்கின்றனர். முன்பும் புலம்பெயர் நாடுகளில் மாணவர் அமைப்பு என்னும் பெயரில் பல இளைஞர்கள் இயங்கினார்கள். அவர்களில் பெரும்பான்மையானவர்களை தற்பொழுது காண முடிவதில்லை. கலியாணம் கட்டி செற்றிலாகி விட்டார்கள். இது எல்லாம் அவர்களுக்கு ஒரு ஜாலியான ரைம் பாஸ். இங்கு கல்வி கற்று, மொழி அறிவு பெற்று ஐரோப்பிய மக்களோடு பழகி, அவர்களின் மனநிலையை அறிந்த இவர்கள், ஓரளவு சுதந்திரமாகவும் உண்மையான உணர்வோடும் இயங்கினால் நிறைய சாதிக்கலாம். ஆனால் தற்போது உள்ள நிலைமையில் இவர்களால் எந்த ஒரு "விதியும்" செய்ய முடியாது - kurukaalapoovan - 04-24-2006 இளையதம்பி முதல் நீர் யாருடைய எடுபிடியா இஞ்ச வந்து நஞ்சு விதைக்கிறீர் எண்டு எழுதும். நீர் ஒருவருடைய எடுபிடியும் இல்லாட்டி எமது சமூகத்திற்கும் போராட்டத்திற்கும் விரோதமான பிற்போக்குவாதியாகத்தான் கருத்து எழுதுறீர். முன்பு மாணவர்களாக இருந்தவர்கள் 30 வயது வந்தபின்னரும் மாணவர் அமைப்பு இளையோர் அமைப்பு என்று இருக்க முடியாது. அவர்களுடைய தனிப்பட்ட குடும்ப பொறுப்புக்களுக்கு அப்பால் தேசியத்திற்கு உழைக்க விரும்பும் பொழுது அவர்களுடை பங்களிப்பு வேறுநிலையில் இருக்குமே அன்றி இன்னமும் மாணவர் அமைப்பு இளையோர் அமைப்பு என்ற நிலையில் அல்ல. புதியசந்ததி தேசிய ஆதரவாளர்களை வழர்த்தெடுக்க இளையோர் அமைப்பு போன்றவை அவசியம். அங்கு தான் ஆரம்ப நிலை இளைய தலமுறை ஆதரவாளர்கள் தமது கடமைகளை உணரவும் தமது காலத்திற்கு ஏற்ப அவற்றை முன்னெடுக்கவும் தயார்பண்ணிக் கொள்ளவும் உதவுகிறது. இளையவர்கள் முன்னைய சந்ததியை விட ஜாலியாக இருப்பதில் எந்த தவறும் இல்லை. தமது கடமைகளை உணர்ந்து பங்களிப்பு செய்கிறார்களா என்பது தான் முக்கியம். அவர்களிடம் உள்ள திறமைகள் புதிய சிந்தனைகள், காலத்தோடும், புலம்பெயர்ந்து வாழும் சமூகத்தோடும் ஒத்த கலாச்சாரங்கள் எமது போராட்டத்தை வெற்றியோடு முடித்து வைக்க அத்தியாவசியமானது. சர்வதேச நிலையில் கொள்கை பரப்பு ஆதரவு திரட்டல், தொழில்நுட்ப பங்களிப்பு என்பவற்றை பொறுத்தவரையில் இளையவர்களின் கையில் தான் பெரும் பங்கு உண்டு. - Ilayathambi - 04-24-2006 முன்பு மாணவர் அமைப்பில் இருந்த பலர் தற்பொழுது எவ்விதமான செயற்பாடுகளிலும் இல்லை என்பதைத்தான் நான் சுட்டிக்காட்டுகிறேன். விடுதலைப் போராட்டத்திற்கான நிதி சேகரிப்பு, பரப்புரை, உடல் உழைப்பு என்று எதிலுமே தற்பொழுது அவர்கள் இல்லை. இத்தனைக்கும் அப்பொழுது இருந்த பலர் தாயகத்தோடு நேரடியாக சம்பந்தப்பட்டவர்கள். அங்கு பிறந்து, அங்குள்ள நிலையை ஓரளவு நேரடியாக அறிந்தவர்கள். அவர்களையே காணவில்லை. அவர்கள் காணமற் போனதற்கான காரணிகள் தற்பொழுதும் உண்டு. ஆகவே இளையோர் அமைப்பில் மிதமிஞ்சிய நம்பிக்கை வைத்து பின்பு ஏமாந்து போய்விடாதீர்கள் என்றுதான் சொல்கிறேன். |