Yarl Forum
தத்துவங்களை இங்கே உதிருங்க - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37)
+--- Thread: தத்துவங்களை இங்கே உதிருங்க (/showthread.php?tid=3695)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28


- RaMa - 09-17-2005

இரும்புச் சங்கிலி அறுந்தாலும்
நாம் அன்புச் சங்கிலி அறாது


- malaravan - 09-18-2005

1. நித்தம் போனால் முற்றம் செழிக்கும்

2. சாதிக்க வேண்டுமென்றால் கோபிக்க கூடாது

3. தினை விதைத்தவன் தினை அறுப்பான்
வினை விதைத்தவன் வினை அறுப்பான்

4. பழகப்பழக காலும் புளிக்கும் அட சீ பழகப்பழக பாலும் புளிக்கும்

5. கண்ணால் கண்டதும் பொய் காதால் கேட்டதும் பொய் தீர விசாரிப்பதே மெய்

6. பொறுத்தார் புூமி ஆள்வார் பொங்கினார் காடாளாவார்

மலரவன்
www.tamilkural.com


- malaravan - 09-18-2005

பகலில் பக்கம் பார்த்து பேசு
இரவில் அதுதானும் பேசாதே

இலவு காத்த கிளி போல

இன்றிருப்பது நாளையில்லை

பனையின் கீழிருந்து பால் குடித்தலும் பார்ப்பவர் கண்ணுக்கு அது கள்ளாகும்


- ANUMANTHAN - 09-18-2005

அடம்பன்கொடியும் திரண்டால் மிடுக்கு!

ஆனையும் அறுகம்புல்லு தடக்கி வீழ்ந்ததாம்

இல்லானை இல்லாளும் வேண்டாள்
ஈன்றெடுத்த தாயும் வேண்டாள்.

உன்போல் பிறரை எண்ணு.

ஊரார் போற்ற உத்தமனாய் வாழ்!

எடுப்பார் கைப்பிள்ளை போல!

ஏற்றத்திற்கேற்ப இறக்கம், (மேட்டுக்கேற்றப பள்ளம் )

ஐயம் திரிபறக் கற்றல்வேண்டும்.

ஒற்றுமைஇல்லையெனில் ஊரேசிதறுண்டுபோகுமாம்.

ஓடி ஓடி உழைத்தாலும், ஊர்போற்றும் வாழ்வே சிறப்பு!

ஒளவைக்கு ஆத்திசூடி, அற்பனுக்கு நெருப்புச்சூடு


- sankeeth - 09-18-2005

அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்.


- Birundan - 09-18-2005

குடி மேல் குடிகுடித்தால் வாழ்வும் அழியும்.


- RaMa - 09-18-2005

ஊருடன் பகைத்தின் வேருடன் கெடும்


- Birundan - 09-18-2005

கோவணம் கட்டாத ஊரில், கட்டியவன் கோமாளி


- RaMa - 09-18-2005

கச்சையானலும் கசக்கி கட்டவேண்டும்


- Birundan - 09-18-2005

கச்சை கிழிந்தாலும் தைத்துக்கட்டு
"குசேலர்"


- ANUMANTHAN - 09-19-2005

கண்டதும் கற்க பண்டிதனாகலாம்!
கண்டதும் தின்ன வண்டியனாகலாம்.


- RaMa - 09-19-2005

கற்க கசறட கற்றவை கற்ற பின் நிற்க அதற்கு தக


- ANUMANTHAN - 09-20-2005

கறக்கின்றபாலை சுரக்கின்ற மடிக்குள் அனுப்புதல்முடியாது!


- RaMa - 09-20-2005

ஆடுகின்ற மாட்டை ஆடித்தான் கறக்க வேண்டும்
பாடுகின்ற மாட்டை பாடித்தான் கறக்க வேண்டும்


- ANUMANTHAN - 09-20-2005

குற்றம் பார்த்தால் சுற்றம் இல்லை!


- RaMa - 09-20-2005

நெற்றிக் கண்ணை திறந்தாலும்
குற்றமே குற்றம்


- Birundan - 09-20-2005

குற்றம் பார்கில் சுற்றம் இல்லை


- கீதா - 09-20-2005

உடைந்த முட்டையை திரும்ப முழுசாக எடுக்க முடியுமா


- Birundan - 09-20-2005

முட்டை முதலில் வந்ததா கோழி முதலில் வந்ததா?


- RaMa - 09-20-2005

கோழி முதலில் வந்ததா முட்டை முதலில் வந்ததா