![]() |
|
விண்ணியல் விநோதங்கள்... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=25) +--- Thread: விண்ணியல் விநோதங்கள்... (/showthread.php?tid=7732) |
- AJeevan - 08-20-2005 <img src='http://www.virakesari.lk/VIRA/20050821/images/1708vdp1.jpg' border='0' alt='user posted image'> விண்வெளிக்குச் சென்று திரும்பிய நாசாவின் டிஸ்கவரி விண்கலம் திட்டமிட்டபடி புளோரிடா மாநிலத்தில் தரையிறங்க முடியாததால் கலிபோர்னியாவில் இறக்கப்பட்டது. அவ்விண்கலம் நேற்று முன்தினம் போயிங்747ரக விமானமொன்றின் மூலம் புளோரிடாவிற்கு கொண்டுசெல்லப்படுவதைக் காணலாம். -Veerakesari - Rasikai - 08-21-2005 தகவலுக்கு நன்றிகள் - அனிதா - 08-21-2005 தகவலுக்கு நன்றி அஜீவன் அண்ணா.. - Rasikai - 08-31-2005 <img src='http://img101.imageshack.us/img101/5498/pia06254s7et.jpg' border='0' alt='user posted image'> சனிக்கிரகத்தையும் அதன் துணைக்கோள்களையும் ஆய்வு செய்து வரும் Cassini விண்வெளி ஓடம், சனியின் துணைக்கோள்களில் ஒன்றான Enceladus தொடர்பான மேலதிக தகவல்களைத் திரட்டியுள்ளது. Enceladus ல் காணப்படும் "tiger stripes" என்று அழைக்கப்படும், புலித் தோலில் காணப்படும் வரிகள் போன்ற பகுதி, சுமார் 10 முதல் 1000 வருடங்களுக்குள் உருவாகிய பிளவுகள் என்று ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். இப்படியான புவியியல் நிலை மாற்றங்கள், 10 வருடங்களுக்குள் ஏற்பட்டதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி நம்பிக்கை தெரிவிக்கும் நாசா, Enceladus ன் தென் பகுதிகளில் தொடர்ந்தும் இவ்வாறான புவியியல் இயல்புகள் நடைமுறையில் இருந்துவருவதாகவும் தெரிவிக்கிறது. இப்பிளவுகளிலிருந்து, குளிர் நீர் போன்ற திரவம் வெளியேறி, அவை பனிக்கட்டிகளாக உருவெடுக்கின்றன. இவ்வாறான செயற்பாடு, Enceladus ன் தென்பகுதியில் அமைந்திருக்கும் "tiger stripes" பகுதியில் காணப்படுவதாக அண்மைய அறிக்கை தெரிவிக்கிறது. <img src='http://img101.imageshack.us/img101/8082/pia03551th2004ic.jpg' border='0' alt='user posted image'> கீழ் காணும் இணைப்பில் Flash Animation காணப்படுகிறது. http://www.esa.int/SPECIALS/Cassini-Huygen...VTX808BE_1.html - Mathan - 08-31-2005 தகவலுக்கு நன்றி ரசிகை - Rasikai - 08-31-2005 பூமியிலிருந்து 100 மில்லியன் ஒளியாண்டுகள் தூரத்தில், இரு நட்சத்திரக்கூட்டங்கள் மோதுண்ட காட்டியொன்றை கடந்த மாதம், ஹவாயிலிருந்து இயங்கும் Gemini North தொலைகாட்டி படம் பிடித்துள்ளது. <img src='http://img268.imageshack.us/img268/5083/fig12kb.jpg' border='0' alt='user posted image'> நட்சத்திரங்களின் வாழ்நாட்கள் முடிவுறும் போது, இவ்வகையான மோதல்கள் ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் ஐந்து பி்ல்லியன் ஆண்டுகளின் பின், பூமியும் இவ்வாறான நிலையை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. - ப்ரியசகி - 09-01-2005 ஆளை ஆள் அடிச்சுக்குதுகளா...ஏன்பா.. இந்த ஒரு விசயத்தில தான் நட்சத்திரங்களுக்கும் மனிசருக்கும் ஒற்றுமை இருக்கு... அக்கா ஒரு கேள்வி..ஒளியாண்டுகள் எண்டா என்ன? - Rasikai - 09-01-2005 அதாவது ஒரு ஆண்டில் ஒளி செல்லும் தூரம் 1 ஓளியாண்டு = 9.4605284 * 10^15 மீற்றர் :roll: - Eelathirumagan - 09-01-2005 ரசிகை தற்போது சயன்ஸில் உள்ள மிகக்கடினமான பகுதிகளில் ஒன்று தான் கொஸ்மோலொஜி. கணிதவியலின் பிரயோகங்கள் தடுமாறுவதும் அங்கேதான். இதனை சுவைபட வாசிக்க : Parker, Barry. Albert Einstein's vision : remarkable discoveries that shaped modern science, 2004 - Rasikai - 09-01-2005 Eelathirumagan Wrote:ரசிகை ஓ தகவலுக்கு நன்றிகள் ஈழத்திருமகன் - Rasikai - 09-05-2005 <img src='http://img323.imageshack.us/img323/2751/mgsmons4ms.jpg' border='0' alt='user posted image'> செவ்வாய் சுற்றுவட்டப்பாதையில் இயங்கும் Mars Global Surveyor தற்காலிகமாக விஞ்ஞான உபகரணங்களின் செயற்பாடுகளை நிறுத்திக்கொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதால பிபிசி இணையச் செய்திக்குறிப்பொன்றைக் காணக்கிடைத்தது. எனினும், இது தொடர்பான முழுமையான விபரங்களை நாசா நான் இதை எழுதும் வரை வெளியிட்டிருக்கவில்லை. 767 கிலோ கிராம் எடையுடைய Mars Global Surveyor ல் High-resolution camera, thermal emission spectrometer, laser altimeter, magnetometer/electron reflectometer, ultra-stable oscillator, radio relay system போன்ற விஞ்ஞான உபகரணங்கள் இணைக்கப்பட்டுள்ளன. தானியங்கி இயந்திரத்தில் ஏற்பட்ட சிறு பழுது இதற்கான காரணமாக அமையலாம் என்று அறியமுடிகிறது. இந்நிலையில் விஞ்ஞான உபகரணங்கள் யாவும் Safe Mode என்று குறிப்பிடப்படும் இயக்கமற்ற நிலையில் காணப்படும். எனினும், பெரும்பாலான பகுதிகள் தொடர்ந்தும் இயங்கும். இந்த வாரத்திற்குள் Mars Global Surveyor வழமைக்குத் திரும்புவது நாசாவின் செயற்பாடுகளில் முக்கியத்துவம் பெறுகிறது. 1999ம் அளவில் தோல்வியில் முடிந்த நாசாவின் செவ்வாய்க்கான ஆய்வு முயற்சியில், காணாமல் போன உபகரணஙகள் அல்லது அவற்றின் பாகங்கள் சிதறிக் காணப்படலாம் என்று நம்பப்படும் ஒரு பிரதேசத்திற்கு மேலாக Mars Global Surveyor பறக்கவிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்தவேளையில் பெறப்படும் படங்கள்,தகவல்கள் 2007ம் ஆண்டு அனுப்பப்படவிருக்கும் ஆய்வு இயந்திரங்களை வடிவமைப்பதிலும் பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது. எனினும், இந்த வாரத்திற்குள் Mars Global Surveyor வழமையான நிலைக்கு திரும்பும் என்று அதன் கட்டுப்பாட்டாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். BBC - Mathan - 09-05-2005 தகவலுக்கு நன்றிகள் - அனிதா - 09-06-2005 தகவலுக்கு நன்றி ரசிகை அக்கா.. - kuruvikal - 09-06-2005 <img src='http://newsimg.bbc.co.uk/media/images/40770000/jpg/_40770132_mars_nasa203x203.jpg' border='0' alt='user posted image'> செவ்வாயின் வடமுனைவுப் பகுதியில் தற்போதும் உயிர்ப்பான தொழிற்பாட்டைக் காண்பிக்கத்தக்கது என்று கருதத்தக்க எரிமலையின் கூம்பு வடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக.. Europe's Mars Express probe அனுப்பிய தரவுகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் தெருவிக்கின்றன...! அதுமட்டுமன்றி செய்வாய்க் கிரகமானது ஒன்று அல்லது இரண்டு அல்லது மூன்று மில்லியன் ஆண்டுகள் முன் வரை...தொழிற்படு கிரகமாகவே இருந்துள்ளது என்றும் அதன் தொழிற்பாடுகள் தற்போதும் சில பகுதிகளில் அவதானிக்கப்படக் கூடியதாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது..! தகவல் ஆதாரத்துக்கு - http://news.bbc.co.uk/1/hi/sci/tech/4219858.stm - Mathan - 09-07-2005 சனிக்கிரகத்தின் ரகசியம் <img src='http://www.bbc.co.uk/worldservice/images/2004/12/20041223030058saturn203.jpg' border='0' alt='user posted image'> <b>சனிக்கிரக வளையங்கள்</b> கிரகங்களிலேயே சனிக்கிரகத்தில் தான், மேலதிக பருவநிலை மாற்றங்கள் நடக்கின்றன என்கிறார்கள் விஞ்ஞானிகள். சனிக்கிரகம் நோக்கிச் சென்றிருக்கும் அமெரிக்காவின் கஸ்ஸினி விண்கலம், அங்கிருந்து எடுத்து அனுப்பிய புகைப்படங்களை வைத்தே இந்த முடிவுக்கு விஞ்ஞானிகள் வந்திருக்கிறார்கள். சனிக்கிரகத்தின் வளையங்கள் பிரமாதமானவை. ஆனால், அவற்றைத் தாண்டி சனிக்கிரகத்தில் என்ன நடக்கிறது என்று ஊடுருவிப் பார்க்க முடியாதவாறு ஒரு புகைமண்டலம் கவிந்திருக்கிறது. இப்போது அந்தப் புகைப்படங்களில் இருந்து என்ன தெரிகிறது? சனிக்கிரகத்தில் பெரும் மேகக்கூட்டங்கள் இடம்பெயர்ந்து செல்கின்றன, அவற்றில் தண்ணீரும் இருக்கலாம், மழையும் பொழியலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். இன்னும் சில மாதங்களில், கஸ்ஸினி விண்கலம், சனிக்கிரகத்தைக் கண்காணித்து மேலும் சில புகைப்படங்களை எடுத்து அனுப்ப இருக்கிறது. அவற்றை வைத்து சனிக்கிரகத்தின் பருவநிலை மாற்றங்கள் பற்றி ஓரளவு புரிந்துகொள்ள முடியும் என்று நம்புகிறார்கள் அமெரிக்க விஞ்ஞானிகள். BBC - ப்ரியசகி - 09-07-2005 தகவலுக்கு நன்றிகள் - RaMa - 09-07-2005 நன்றி - Rasikai - 09-07-2005 நன்றிக:ள் தகவலுக்கு - Rasikai - 09-13-2005 <img src='http://img125.imageshack.us/img125/1518/133279maingammabursttrentstill.jpg' border='0' alt='user posted image'> பிரபஞ்சத்தில்,அறியப்படாத தொலை தூரம் ஒன்றில் ஏற்பட்ட விண்வெளி வெடிப்பொன்று பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. தொலைக்காட்டிகள், உபகரணஙகளைக்கொண்டு மனிதர்களால் பார்வையிடக்கூடிய, பிரபஞ்ச எல்லையைத் தாண்டிய பிரதேசம் ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பொன்றினை Swift தொலை காட்டி, செப்டம்பர் 4ம் திகதி பதிவு செய்துள்ளது. இதன் அடிப்படையில், விண்வெளியில் மிகத் தொலைவில் இடம் பெற்ற சம்பவம் என்ற வரலாற்று முக்கியத்துவத்தினை இச் சம்பவம் பெற்றுக்கொள்கிறது. <img src='http://img125.imageshack.us/img125/6397/swift1mx.jpg' border='0' alt='user posted image'> சர்வதேச நாடுகள் பலவற்றின் ஒத்துழைப்புடன், இவ்வாறான விண்வெளி நிகழ்வுகளைப் பதிவு செய்தவதற்காகவே இயங்கும் Swift, இதையும் விட தூரத்தில் நிகழும் சம்பவங்களையும் அவதானிக்கக்கூடியது என்று அறிய முடிகிறது. தொலை தூரத்தில் ஏற்படும் இவ்வாறான வெடிப்புகளை gamma-ray வெடிப்புகள் என்று விஞ்ஞானம் பெயரிடுகிறது. இவ்வாறான வெடிப்புகள் ஏற்படுவதற்கான, சரியான காரணங்கள் இதுவரை அறியப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. எனினும், இவ்வாறான வெடிப்புகள் இரண்டு பாரிய நட்சத்திரங்களின் மோதல்களா ? அல்லது black hole என்று அறியப்படும் சூனியப்பிரதேசங்களின் தோற்றமா ? அல்லது விண்ணில் ஏதோ சில காரணங்களினால் ஏற்படும் வெடிப்புகளா என்பது பற்றியான தெளிவான விளக்கங்கள் இல்லை. எனினும், இவை கோள்களின் தோற்றங்களுக்கு முன்னதாக ஏற்பட்டதாகக் கருதப்படும் Big Bang போன்ற பாரிய வெடிப்புகளாகவே இருக்கலாம் என்ற சந்தேகமும் நிலவுகிறது. பிரபஞ்சத்தில் இவ்வாறான நிகழ்வுகள் ஒரு நாளைக்கு ஒரு தடவை நிகழ்வதாகவும், இவை மில்லி செக்கன்களுக்குள் அல்லது சில நூறு செக்கன்களுக்குள் மறைந்துவிடக்கூடியவை என்றும் இது பற்றி மேலும் ஆராய்ந்த போது, தகவல்கள் தெரிவிக்கின்றன, இவை தொடர்பான சில தகவல்கள் ஏற்கனவே நிலா முற்றத்தில் பதியப்பட்டிருக்கின்றன. இவ்வாறான சம்பவங்களை அவதானித்ததும், பூமியிலிருந்தும், விண்வெளியிலிருந்தும் செயற்படக்கூடிய அனைத்து தொலைக்காட்டிகள்,கட்டுப்பாட்டு மையங்களுக்கும் தகவல்களை வழங்குவதோடு அவை தொடர்பான படங்களையும் பெற்று அனுப்பும் திறன் கொண்டதாக, Swift காணப்படுகிறது. 2004ம் ஆண்டு நவம்பர் 24ம் திகதியளவில் Swift விண்ணுக்கு ஏவப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. இது குறித்த நாசாவின் செய்திக்குறிப்பு Quote:Dolores Beasley இவ்வாறான வெடிப்புகளை விளக்கும் அனிமேசன் http://www.nasa.gov/mov/133256main_gammabu...trent_small.mov - kuruvikal - 09-22-2005 <img src='http://newsimg.bbc.co.uk/media/images/40818000/jpg/_40818838_moon2_nasa_203.jpg' border='0' alt='user posted image'> சந்திரனில் தரை இறங்கவுள்ள இறங்குகலம் - லாண்டிங் கிராவ் - lander craft மீண்டும் 2020 வாக்கில் நாசா நான்கு விண்வெளி வீரர்களை சந்திரனுக்கு அனுப்ப உள்ளதாக அறிவித்துக்கள்ளது..! அப்பலோ (Apollo) வழியில் புதிய தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டு இது செயற்படுத்தப்படவுள்ளதாம்..! <img src='http://newsimg.bbc.co.uk/media/images/40819000/gif/_40819248_new_spaceship2_416.gif' border='0' alt='user posted image'> (1) A heavy-lift rocket blasts off from Earth carrying a lunar lander and a "departure stage" (2) Several days later, astronauts launch on a separate rocket system with their Crew Exploration Vehicle (CEV) (3) The CEV docks with the lander and departure stage in Earth orbit and then heads to the Moon (4) Having done its job of boosting the CEV and lunar lander on their way, the departure stage is jettisoned (5) At the Moon, the astronauts leave their CEV and enter the lander for the trip to the lunar surface (6) After exploring the lunar landscape for seven days, the crew blasts off in a portion of the lander (7) In Moon orbit, they re-join the waiting robot-minded CEV and begin the journey back to Earth (8) On the way, the service component of the CEV is jettisoned. This leaves just the crew capsule to enter the atmosphere (9) A heatshield protects the capsule; parachutes bring it down on dry land, probably in California சந்திரனுக்கு செல்வதற்கென தீர்மானிக்கப்பட்டுள்ள பயணப்பாதையும்..பயன்படுத்தப்படவுள்ள உந்துவாகனங்களும்..! bbc.com மற்றும் http://kuruvikal.blogspot.com/ |