Yarl Forum
அம்பாறை மாவட்ட தமிழ் முஸ்லிம் உறவில் குறுக்கிடும் அரசியல் இட - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: அம்பாறை மாவட்ட தமிழ் முஸ்லிம் உறவில் குறுக்கிடும் அரசியல் இட (/showthread.php?tid=7566)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15


- vasisutha - 02-27-2004

உங்கள் கருத்துக்கள் எழுதும் விதத்தால் என்னைக் கவர்ந்து விட்டீர்கள். எனவே இனி சமாதானம் உங்களுடன். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- thampu - 02-27-2004

நாம் என்ன பகைவர்களா சமாதானம் செய்ய....வசி
முஹமது நபி சொன்னது போல நட்பு என்பது ஒரு கையில் உள்ள அழுக்கை உரசிக் கழுவும் மறு கைபோல..


- Kanakkayanaar - 02-27-2004

தம்பு செப்பியது:
Quote:யாழ். முஸ்லிம் சமாதானப் பேரவைத் தலைவர் அல் அலீம் மர்லீனின் அரசியல் கருத்துக்கும் பேச்சுச் சுதந்திரத்திற்கும் உத்தரவாதம் வேண்டி உயர்ந்த உங்கள் குரலில் நாகரீகம் உள்ளது என்பேன்.
இதை நீங்கள் ரவூக் ஹக்கீமுக்கும் அளிப்பீர்களானால் உங்கள் குரலில் உள்ள நாகரீகம் உண்மையானது என்பேன்.
ஐயா தம்பு,
ஏன் அல் அலீம் மருலீன், அக்கீமின் அரசியற் கருத்துக்கும் பேசுச் சுதந்திரத்துக்கும் இடையூறு செய்கிறார் எனக் கருதுகிறீர்கள், (அப்படி கருதுவதாற்தான் நீங்கள் அவர்க்கு இங்ஙனம் வேண்டுகோள் விடுக்கிறீர்கள்)? அக்கீமின் கருத்தை மறுப்பதோ (பொய்யென), அவர் தம் தலைமையை ஏற்காததோ, கருத்துச் சுதந்திரத்திற்கும் பேச்சுச் சுதந்திரத்திற்கும் பங்கம் விளைவிக்கிறதா? :roll:


- adipadda_tamilan - 02-27-2004

thampu Wrote:
vasisutha Wrote:தமிழீழத் தேசியத் தலைவர் தான் எமது தலைவர்: யாழ். முஸ்லிம் சமாதானப் பேரவைத் தலைவர் அல் அலீம் மர்லீன்!

தமிழீழத் தேசியத் தலைவரைத்தான் நாம் எமது தலைவராக ஏற்றுக் கொள்கிறோம்; ஆனால் முஸ்லீம் காங்கிரஸ் ரவூப் ஹக்கீமை முஸ்லீம் சமூகத்தின் தலைமையாக ஏற்கும் தன்மையில் நாம் இல்லையென யாழ்ப்பாண முஸ்லிம் சமாதானப் பேரவைத் தலைவர் அல் அலீம் மர்லீன் தெரிவித்துள்ளார்................
http://www.eelampage.com/

யாழ். முஸ்லிம் சமாதானப் பேரவைத் தலைவர் அல் அலீம் மர்லீனின் அரசியல் கருத்துக்கும் பேச்சுச் சுதந்திரத்திற்கும் உத்தரவாதம் வேண்டி உயர்ந்த உங்கள் குரலில் நாகரீகம் உள்ளது என்பேன்.
இதை நீங்கள் ரவூக் ஹக்கீமுக்கும் அளிப்பீர்களானால் உங்கள் குரலில் உள்ள நாகரீகம் உண்மையானது என்பேன்.

தன்பையா,

அல் அமீம் மர்லினின் பேச்சையும் கக்கீமின் பேச்சையும் நீங்கள் ஒன்றாக்க முனைகின்றீர்கள். ஒன்று மட்டும் உங்களுக்கு விளங்க வேண்டும், கக்கீமின் பேச்சு மரியாதைப் படுத்தக்கூடிய பேச்சல்ல. கக்கீம் பேசுவதெல்லாம் இனத்துவேசமும் (மதத்தை வைத்து) பிரித்தாளும் தன்மையும். அப்படி அவர் பேசுவது நாகரீகமென்றால் இங்கு பதில் தொடுத்த அனைவருடைய பேச்சும் நாகரீகமானதே.

கக்கீமின் ஒவ்வொரு பேச்சையும் ஆழ்ந்து கவனித்தீர்களானால் அவரின் தமிழருக்கெதிரான அனாகரிகமான பேச்சை நீங்கள் விளங்கிக்கொள்ளலாம் (உங்களுக்கு விளங்குதோ தெரியாது). இப்படியானவர்களால்தான் இன முரன்பாடே உன்டாகின்றது.. இதை அவர் தவிர்ப்பது நல்லது. Confusedhock:


- Kanakkayanaar - 02-27-2004

தம்பு வம்புக்கெழுதியது:
Quote: உங்களுக்கு மட்டுமல்ல இராசேந்திரசோழனுக்கும் தமிழ் மொழி பற்றி கற்பனாவாத பெருமிதத்தின
தயவுகூர்ந்து அவற்றைச் சுட்டிக்காட்டுங்களேன்! <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
்[quote] 'பாரத தேசம்' என்னும் கவிதையில் ''சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்து.............'' என்பதுடன் விட்டுவிடாது '' சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு.......'' என்று உரக்க பாடியது ஏன்?????????????
நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்களென நானறியேன். ஆனால் பாரதி, பாரத தேயத்தில்(அவரது பாரததில் சிங்களத்தீவும் அடக்கமாக்கும்?!) இருக்கும் அனைத்து இனங்களையும் பாடியுள்ளார். இதில் குறிபிடத்தக்கது யாதெனில், பாரதி பலரையும் மொழியினத்தால் அடையாளப் படுத்தியிருப்பது. ஏன் அவர் பாரத தேயத்திலுள்ள மாந்தருடன் என்று ஒரு வரியில் முடித்திருக்கலாம் தானே. அத்துடன் அவர் பாரத தேயம் என்ற ஒரு நாட்டு அடையாளதில் பாடினார், பாண்டிச் சேரியில் இருந்த பிரஞ்சு மக்களையோ, அயல் நாட்டுச் சீனரையோ இணத்துப் பாடவில்லை. ஆக என்ன சொல்ல வருகிறீர்கள், மொழியினத்தால் அடையாளப் படுத்துவதை விட, நாட்டால் அடையாளப் படுத்துவது மேல் என்கிறீர்கள? அப்ப நாம் தமிழர் என்பதை விட நாம் சிறீலங்கர் என்பது மேலா?
Quote:மொழி என்பது எடுத்தும் கொடுத்தும் வளர்ந்ததே ஒழிய 'மூவாயிரம் ஆண்டு காலத் தொன்மைமிக்க வரலாற்றைக் கொண்ட ...........' என்பதெல்லாம் சுத்த அபத்தம்.
நாம் இன்று எழுதும் தமிழில் முற்றுப்புள்ளிக்கு வரலாறு முன்னூறு வருடத்திற்கு குறைவானதே.
முதலாவது தமிழின் தொன்மையைச் சுட்டினேனே ஒழிய, தொன்மையானதற்காவே அதற்கு முதன்மை கொடுக்க வேண்டும் எனச் சொல்லவில்லை. இரண்டாவதாக இராசேத்திரசோழன் தமிழரின் வரலாற்றை மூவாயிரம் எனச் சொன்னாரே தவிர தமிழ்மொழியின் வரலாற்றை இரண்டாயிரம் எனத்தான் சொன்னார்.
தொல்காப்பியம் எனும் தமிழ் இலக்கண நூல், அறிஞர்களால் கி.மு 500 இல் இருந்து கி.மு 200 க்குள் உள்ளதென அறுதியிட்டுக் கூறப்படுகிறது. அதோடு தொல்காப்பியத்தில் கூறப்படும் (பெரும்பாலான) இலக்கணமும், அதில் வரும் பல சொற்களூம் இன்றும் பயன் பாட்டிலுள்ளது. ஆதலால் அதை நவீன தமிழின் தொடக்கம் என்பதில் பிழையில்லை.
ஆங்கில வரலாற்றோடு ஒப்பிட்டால், ஆங்கில மொழியை பழய ஆங்கிலம், இடைக்கால ஆங்கிலம், நவீன ஆங்கிலம் எனப் பிரிப்பர். நவீன ஆங்கிலம் 16ஆம் நூற்றாண்டில் தொடங்குகிறது. இதில் சேக்சுபியரின் படைப்புகளூம் அடங்கும் என்பது குறிப்பிடத் தக்கது. இன்றைய ஆங்கிலத்துக்கும் சேக்சுபியர் ஆங்கிலத்துக்கும் உள்ள வேறுபாடு, இன்றைய தமிழுக்கும் தொல்காப்பியத் தமிழுக்கும் உள்ள வேறுபாட்டுக்கு ஒப்பது. அதற்கு முதல் இருந்த தமிழை வேண்டுமானால் பழந் தமிழ் எனலாம்! ஒரு மொழியின் வரலாறு முற்றுப் புள்ளி போன்ற சிற்சில மாற்றங்களை கணக்கில் எடுக்கிறது. மொழியின் மாற்றாங்கள் கூடி வேறு மொழி பிறந்தால் (தமிழில் இருந்து மலையாலாம் பிறப்பிக்கப் பட்டது போல்), புது மொழியின் வரலாறு தொடங்கும்.
Quote:தமிழனாக வாழவேண்டும் என்ற செருக்கை விட நாம்
மனிதனாக வாழவேண்டும் என்ற மிடுக்கே முதன்மையானது.....!!!
கேட்பதற்கு நன்றாகத்தானிருக்கும் ஆனால் நடமுறைக்கு ஒத்து வரவேண்டுமே! உலகில் உள்ள பெரும்பாலான மாந்தன், மொழியின அடையாளத்தாலையோ, நாட்டடையாளத்தாலையோ தான் வாழ்கின்றனர். அதுமட்டுமில்லாமல் இங்ஙனம் அடையளப் படுத்துதல் மாந்தர் தம் இயல்பு.
நாம் மாந்தர் என்று மிடுக்குடன் தமிழ் மொழியைத் துறந்து, இன்னொரு மாந்தர் மொழியான சிங்களத்தை ஏற்றிருந்தால் இந்த இனச்சிக்கல் இந்துணை காலமாகத் தொடர்ந்திருக்குமா? ஏன் நீங்கள் அங்ஙனம் செய்யவில்லை???

Quote:மதம் ஒரு அபின் என்றார் மாபெரும் ஒரு சமூகவியலாளன்...........
நான் நினைக்கின்றேன் அவர் தமிழர்களின் மொழி பக்தியை உய்த்தறிந்து கொள்ள முடிந்திருந்தால்......
மதம் மட்டுமல்ல மொழியும் அபின் என்றிருப்பார்....
இதில் இருக்கும் வழுவை உற்று நோக்குக:

மாந்தர் இயல்பாக வாழ மொழி இன்றியமையாததொன்று. உங்கள் கருத்துப்படி மொழி அபின் போன்றது. ஆகவே, (நீங்கள் மறைமுகமாகக் கருதுகிறீர்கள்) மாந்தர் இயல்பாக வாழ "அபின்" இன்றியமையாததொன்று. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- Kanakkayanaar - 02-27-2004

பிபிசி சொல்லியது:
Quote:
Quote:Kanakkayanaar wrote:
பிபிசி:
Quote:
Quote:ஒரு மொழியை சேக்காம விட்டுட்டீங்க

என்ன, சிங்களந்தானே!

உங்களுக்கு எது எது வசதியோ அத சேருங்க.

சிங்களமாயிருந்தா நிச்சயம் மொழியை சேக்கலாம். தமிழா இருந்தாதான் முடியாது.

ஓமோம், உங்களுக்கு மட்டும் வசதியா <span style='font-size:25pt;line-height:100%'>\"ஒரு\"</span> மொழியைச் சேர்க்காம்ல் விட்டுட்டீர்கள் எனலாம் போல... நீங்கள் ஒரு மொழி என்றதனால் முதலில் தொடங்கின சிங்களவரின் சிங்களம் எனப் பாணித்தேன்!


- Mathan - 02-27-2004

vasisutha Wrote:தமிழீழத் தேசியத் தலைவர் தான் எமது தலைவர்: யாழ். முஸ்லிம் சமாதானப் பேரவைத் தலைவர் அல் அலீம் மர்லீன்!

யாழிலிருந்து எழின்மதி வியாழக்கிழமை 26 பெப்ரவரி 2004இ 21:47 ஈழம்

தமிழீழத் தேசியத் தலைவரைத்தான் நாம் எமது தலைவராக ஏற்றுக் கொள்கிறோம்; ஆனால் முஸ்லீம் காங்கிரஸ் ரவ10ப் ஹக்கீமை முஸ்லீம் சமூகத்தின் தலைமையாக ஏற்கும் தன்மையில் நாம் இல்லையென யாழ்ப்பாண முஸ்லிம் சமாதானப் பேரவைத் தலைவர் அல் அலீம் மர்லீன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் வாழும் முஸ்லீம் மக்களால் நாளை சமாதானத்தை வலியுறுத்தி பேரணி ஒன்று நடத்தப்படவுள்ளது.

இப்பேரணி தொடர்பாக ஊடகவியலாளர்களிடம் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார்.

எங்கள் அபிலாசைகளைப் பிரதிபலிக்கும் வகையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தற்போதைய செயற்பாடுகள் அமைந்துள்ளன.

கடந்த காலத்தில் முஸ்லிம்கள் நலனில் மாவீரர் கேணல் கிட்டு லெப்ரினன்ட் கேணல் திலீபன் போன்ற பல மாவீரர்கள் பல அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளார்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து இடம் பெயர்ந்திருந்தாலும் இப்போது நாம் தெளிவான மனநிலையுடனும் போதிய புரிந்துணர்வுடனும் மீளக் குடியமர்ந்துள்ளோம் எம்மைப் போன்று வன்னியிலும் முஸ்லீம்கள் கடந்த கால சம்பவங்களைப் புரிந்துகொண்டு தெளிவான மனநிலையுடன் உள்ளனர்.

இந்நிலையில் தமிழீழ விடுதலைப்புலிகள் தொடர்பாக முஸ்லிம் காங்கிரஸ் கூறும் தவறான கருத்துக்களை எம்மால் ஏற்றுக் கொள்ளமுடியாது. உண்மையில் முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களுக்கு எதையுமே செய்யவில்லை என்பது தான் உண்மை என்று மேலும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
http://www.eelampage.com/

இது உண்மையாவும் பெரும்பான்மையான முஸ்லீம்களின் குரலாவும் இருந்தா நல்லதுதான்.

இல்லை எதிரிக்கு எதிரி நண்பன் அப்பிடிங்கிற அரசியல் விளையாட்டுல வந்தபேச்சா இருந்தா ஒரு பலனும் இல்ல.


- Mathan - 02-27-2004

Kanakkayanaar Wrote:பிபிசி சொல்லியது:
Quote:
Quote:Kanakkayanaar wrote:
பிபிசி:
Quote:
[quote]ஒரு மொழியை சேக்காம விட்டுட்டீங்க

என்ன, சிங்களந்தானே!

உங்களுக்கு எது எது வசதியோ அத சேருங்க.

சிங்களமாயிருந்தா நிச்சயம் மொழியை சேக்கலாம். தமிழா இருந்தாதான் முடியாது.

ஓமோம், உங்களுக்கு மட்டும் வசதியா <span style='font-size:25pt;line-height:100%'>\"ஒரு\"</span>

அப்ப இரண்டு/மூணு மொழியா இருந்தா?


- Eelavan - 02-28-2004

சரி பிரச்சனைக்குரியது எந்த மொழியாகவும் இருக்கட்டும் அதற்கு உமது தீர்வு என்ன?