![]() |
|
சுட்ட கவிதை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: சுட்ட கவிதை (/showthread.php?tid=7322) |
- Thala - 06-13-2005 Mathan Wrote:மதன் உருவம் இல்லாததில் உணர்வுகள் வருமா என்ன?Thala Wrote:காதலுக்கு எனக்கு வருவதில்லை அதுதான் உண்மை - Mathan - 06-13-2005 வரலாம். மனதில் உணர்வுகள் வருவதற்கு உருவம் அவசியம் இல்லை. - வெண்ணிலா - 06-13-2005 Mathan Wrote:வரலாம். மனதில் உணர்வுகள் வருவதற்கு உருவம் அவசியம் இல்லை. உண்மை. உருவத்திற்கும் உணர்வுக்கும் தொடர்பில்லை <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Malalai - 06-13-2005 Mathan Wrote:Malalai Wrote:Mathan Wrote:[quote=kavithan]ஆமா நீங்கள் எங்கை வீடு கட்டினியல்.. கேப்பதை பார்த்தால் சிவந்த உதடுகளில் போல் தான் இருக்கே... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> கற்பனைக் காதல் நல்லாத் தான் இருக்கும்...தொடருங்க உங்க காதலை.... :wink: :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 06-26-2005 <b>அந்த நிலாக்காலத்தின் குறிப்பு</b> நீ வந்து போன கனவு கலைந்த ஒரு விடியற் காலையில் இரு சொட்டு கண்ணீரில் தலையணை நனைந்திருந்தது இன்று போல் இருக்கிறது உன்னுடனான உத்தியோக பூர்வ கடைசிச் சந்திப்பு நிகழ்ந்தது; அல்லது நமது உறவு முறிந்தது சில ஒப்பாரிக் கவிதைகள் எழுதியதும் பின்னிரவுகளில் நண்பர்களிடம் கூறி பெருமூச்செறிந்ததும்தான் நம்மிடையேயான உறவில் மிச்சமெனக்கு! ஏதோவொரு கார்காலத்தில் நீ தோழியாய் இருந்தாய் நமது உலகில் நாம் மட்டுமே என ஆகினோம் என்று சொல்வதற்கு கூட கூச்சமாயிருந்தது! பின் வந்த காலங்களில் சிலர் உன்னை பற்றி சொன்னதைக் கேட்ட பிறகு அந்தக் காலங்கள் நட்பின் நிலாக்காலங்கள் நமக்காக மீண்டும் வருமா தோழி? நண்பர்கள் உற்றார் உறவினர் ஊராரைச் எல்லாம் வந்து வாழ்த்தச் சொல்லி திருமண அழைப்பிதழ் அனுப்பியிருந்தாயாம்! இதில் எந்த உறவு முறைகளுக்குள்ளும் என்னை அங்கீகரிக்கவில்லை நீ என்னைக் கெட்டவனாகவும் உனது தரப்பை நியாயப்படுத்தவும் இந் நேரம் ஆயிரமாயிரம் கதைகளை சோடித்திருப்பாய்! உன் திருமண மண்டபம் மாதிரி உனக்கு எப்படியோ ஆனால் எனக்கு எல்லாம் இன்று நடந்தவை போலதான் இருக்கின்றது கொஞ்சம் ஈரலிப்பாகவும் சற்றே பிசுபிசுப்பாகவும் உனக்காக கண் விழித்த இரவுகள் போயின! எனது தோழி நீயென்று நீயே தந்த உரிமையும் சுவடின்றி அழிந்தே போனது இனி நமது நட்பு பற்றி அதன் முறிவு பற்றி உனது காதல் பற்றி இன்னும் அது பற்றி.... இது பற்றி... எது பற்றியும் உனது பிள்ளைகளிடம் எதுவும் சொல்லிவிடாதே அவர்கள் அழுதுவிடுவார்கள்! - narathar - 06-26-2005 எங்கேயோ பார்த்த கவிதை,எங்கிருந்து சுட்டீர்கள் வெண்ணிலா? - வெண்ணிலா - 06-27-2005 <!--QuoteBegin-narathar+-->QUOTE(narathar)<!--QuoteEBegin-->எங்கேயோ பார்த்த கவிதை,எங்கிருந்து சுட்டீர்கள் வெண்ணிலா?<!--QuoteEnd--><!--QuoteEEnd--> நீங்கள் பார்த்த இடத்தில்தான் நான் சுட்டேனாக்கும். அல்லது நான் சுட்ட இடத்தில்தான் நீங்கள் பார்த்தீர்களாக்கும். எனக்கே நினைவில்லை எங்கே சுட்டேன் என்று. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kavithan - 06-27-2005 நல்ல கவிதை மருமகளே,.. நன்றி - Nitharsan - 06-27-2005 நன்றி வெண்ணிலா! - Malalai - 06-27-2005 நிலாக்காலத்திற்குள் இத்தனை சோகமோ? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- அனிதா - 07-03-2005 <span style='font-size:25pt;line-height:100%'><b>ஓ..என் நண்பனே..! மாவீரனே..!</b> </span> <b>மாற்றான் குண்டுகள் - உன் மர்பைத் துளைத்தனவோ! மாமனிதன் உன்னை மண்ணில் சாய்த்தனவோ! சிதறிய தேங்காய் போல் சில்லாகிப் போனாயோ! - அன்றி நரிகள் கையில் சிக்காது நஞ்சை நீ மென்றாயோ! சூரியக் கதிர் சமர்தனிலே சூரியன் நீ அணைந்தாயே! ஈன்றெடுத்த மண்தனிலே இரத்த விதை விதைத்தாயே! மாவீரர் சமாதியிலே மறவனாய் மலர்ந்தாயே வெளிநாட்டுத் தமிழருக்கும் வெகுட்சி வரச் செய்தாயே! வெங்கதிர்ச் செல்வன் படைதனிலே வேங்கையாய் பாய்ந்தவனே வேட்டை ஆட வந்தவரை வெட்டிப் புதைத்தவனே ஊர் உறவு வாழ்வதற்காய் உறங்காமல் உழைத்தவனே! உறங்காமல் உழைத்ததினால் - இன்று உறக்கத்தில் போனாயோ! தானைத் தலைவன் ஆணைப்படி அணி வகுத்த புலிகளைப் பார் படையெடுத்த பகைவர் கொடி பாதியிலே எரிந்ததைப் பார் முப்படை மூடரெல்லாம் முல்லையிலே முறிந்ததைப் பார் கூவி வந்த கூட்ட மின்று குரலிழந்து போனதைப் பார் மண்ணோடு நீ கலந்து மலராகிச் சிரிக்கின்றாய் விண்ணோக்கி நான் பார்த்தால் விண் மீனாய் ஒளிர்கின்றாய் வாள் ஏந்தும் வீரருக்கு வேராக நிற்கின்றாய் விடிவு தேடும் மக்களுக்கு விடிவெள்ளி நீ தானே.</b> - Mathan - 07-03-2005 நன்றி. யாருடைய கவிதை இது? - அனிதா - 07-03-2005 திலீபன் செல்வகுமாரன் இவருடைய கவிதையாத்தான் இருக்கனும்.. http://thileepan.blogspot.com/2004/07/blog-post.html இதில் இருக்கு பாருங்கள் - Mathan - 07-03-2005 தகவலுக்கு நன்றி. இவர் கள உறுப்பினர் சந்திரவதனா அக்காவின் மகன் என்று நினைக்கின்றேன். - kavithan - 07-03-2005 நன்றி அனித்தா..கவிதை நன்றாக இருக்கின்றது. - அனிதா - 07-12-2005 <b>வேதனைகள் வாழ்க்கைக்கு வைரமூட்டும்</b> வாழ்ந்து பார் வாலிபனே வானம் உனக்காய் விரிந்து கிடக்கிறது வளர்ந்துவா தேய்பிறையே வெளிச்சங்காட்ட இருள் இருக்கிறது வாணவில்லின் விம்பங்கூட உண்மையில்லை பின்னால் வரும் நிழல் கூடச் சொந்தமில்லை சோர்ந்து போகாதே சொற்கம் உந்தன் கையில் அலைகள் அடித்து கரைகள் இன்னும் அழியவில்லை புூகம்பத்தால் புூமி இன்னும் ஒழிந்து விடவில்லை மரணத்துடன் போட்டியிட்டு மண்ணுயிர் பிறந்து கொண்டே இருக்கிறது மாலையை வென்ற காலையை மறுதரம் அது மண்டியிட வைக்கிறதே! கண்ணீருக்கு உன் காலத்தைக் காணிக்கையாக்காதே அதைத்துடைக்க இருகையில் உனக்கு ஒருகை போதாதோ? எனக்குத் தெரியும்! உன் உடலில் தைக்கப்பட்ட முட்களின் வலி உன்னைச் சிதைக்கிறது என்று வலிகள் இல்லாத வாழ்க்கையில் ருசிகள் தெரிவதில்லை தொலைவில் இருந்த இன்பத்தை துன்பம் துலக்கிக்காட்டுகிறது தோளில் உள்ள வடுக்களே உனக்கு படிக்கல் ஆகட்டும் அதைப்பார்த்து உந்தன் பாதங்கள் பலம் பெறட்டும் தங்க நகை அங்கத்தில் மின்ன தணலில் வேகவில்லையா தாங்கிச்செல்லும் ஆயுதங்கள் அடிவாங்குமுன்பு வெறும் இரும்புதானே ஆயிரம் தோல்விகள் தோமஸ்அல்வாஎடிசனை தேறவைக்கவில்லையா தேம்பித்தேம்பி அழுத உன் தேகத்திற்கு தேனுற்றுகிறேன் திடமாய்ப்பார் தடங்கள் தாழ்திறந்து உன்னை வரவேற்கிறது தீதாய் நினைத்தோர் தோழ்போட இடம்பார்ப்பது உனக்குப் புரியும் கண்மூடித்திறந்துபார் காலங்கள் எவ்வளவு விரைவாய் கரைந்தோடி விடும் பிறப்பின் படிகளில் பாதம்வைக்கும் முன்னே இறப்பின் கதவுகள்திறக்கிறது நாளையைச் சிந்திக்கும் போதே அது நேற்றாகி ஏளனஞ்செய்கிறது மாடியில் இருந்து விழுந்தவன் மஞ்சத்தில் படுத்துத் து}ங்குகிறான் கால்தடக்கி விழுந்தவன் கல்லறையில் காணாமல் போகிறான் கையில் சிக்காத காலத்துக்குள் ஏன்கவலையைச்சிக்கவைக்கிறாய் கால்கள் வலிக்கும் வரை கற்களையும் முட்களையும் தாண்டு கைகள் கடுக்கும் வரை காரியங்களைச் செய்யத்து}ண்டு வாய்கள் வலிக்கும் வரை வார்த்தைகளைப் பேசு கண்கள் கூசும் வரை காட்சிகளைப்பார் இதயம் வலிக்கும்வரை வேதனைகளை அனுபவி சிந்தை கலங்கும் வரை சிந்தைக்குத் தடைபோடாதே செவிகள் மந்தமாகும் வரை அதற்கு தாழ்போடதே இதயத்துடிப்பு ஓயம்வரை இளமைத்துடிப்பு நினைவில் வேண்டும் தழும்புகளைப் பார்த்துப் பார்த்தே இதயம் இரும்பாகவேண்டும் தேவைக்கேற்ப அவ்வப்போது தடங்களைத் தட்டிப்பார்க்க வேண்டும் துணைக்த் தோதாய் தோழனைக்கூடத் தேடாதே தொலைந்து போன வாழ்க்கைக்குத் து}தனுப்பாதே கலைந்து போன விம்பத்தைக் கணக்கெடுக்காதே அது போதும் காலத்திற்குள் நீவாழ. . . . !! இன்னும் திடம் உன் உடலில் தெரியவில்லை யென்றால் அது சடலமாகி வெகுநேரமாகிவிட்டது விரைவில் அடக்கம் செய்துவிடு. ¿ýÈ¢ À¦Ä÷§Á¡.. - வெண்ணிலா - 07-12-2005 நன்றி அனிதா சுட்ட கவிதை நன்று. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- அனிதா - 07-12-2005 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathan - 08-03-2005 பணம் பணமறிய அவா அன்னை தேசத்து அகதிகள் நாம் எண்ணெய் தேசங்களில் எரிந்து கொண்டிருக்கிறோம்! அடிவயிற்றில் பதிந்த வறுமைக் கோடுகளின் மர்மக் கரங்கள் அறுத்தெரிந்து வீசிய ஜீவனுள்ள மாமிசத் துண்டுகள் நாம்! கண் தெரியா தேசத்தில் விழுந்து காயங்கள் தலை சாய்த்துக் கண்ணீர் வடிக்கிறோம்! மொத்தக் குடும்பத்தையும் முதுகில் சுமந்து இன்னும் தீர்மானிக்கப்படாத் திசைகளில் தொடர்கிறது நம் பயணம்! ஒவ்வொரு முறையும் நலம் நலமறிய அவா என்றுதான் கடிதம் எழுதுகிறோம்! பணம் பணமறிய அவா என்றல்லவா பதில் வருகிறது! நமக்கு மட்டும் ஏன் பணம் பந்த பாசங்களின் சமாதியாகிவிட்டது? ஒரு டெலிபோன் கார்டிலும் ஒரு பொட்டலம் பிரியாணியிலும் முற்றுப்பெற்றுவிடுகிறது நம் பெருநாட்கள் ஒவ்வொண்றும்..... உயிரை பிழிந்து பிழிந்து பாசத்தால் ஒத்தடம் தந்த உறவுகளைப் பிரிந்து இன்னும் எத்தனை நாட்கள் இந்த ஏகாந்த வாழ்கை? கலவரத்தில் கைக் குழந்தையைத் தொலைத்த தாயின் பதற்றத்தைப்போல்தான் ஒவ்வொரு முறையும் போன் பேசிய பின்னால் அடையும் அவஸ்தைகள்...... நம்மில் பலருக்கு தாம்பத்திய வாழ்க்கைகூட தவணை முறையில்தான் தட்டுப்படுகிறது..... தொலைபேசியிலும் தபாலிலும் கொஞ்சலும், சிணுங்கலுமாய்... இன்ஸ்டால்மெண்டில் இல்லறம் நடக்கிறது... மனைவியின் மூச்சுக் காற்று தந்த சுகம்கூட இந்த ஏசி காற்று தருவதில்லை! குடும்ப விளக்குகளை கும்மிருட்டில் தவிக்கவிட்டு விட்டு தீக்குச்சிகள் நாம் தன்னந்தனியாய் இந்தத் தீவுகளில்... வீடுகூடும் நிஜம் தொலைத்து ஒரு வீடு கட்டும் கனாவில் இன்னும் எத்தனை ஆண்டுகள் இந்த பாலைப் பிரதேசங்களில்?... உயிரோடு இருக்கும் பெற்ற குழந்தைக்கு புகைப் படத்தில்தான் கொடுக்க முடிகிறது செல்ல முத்தங்கள்! என்ன இருந்தாலும் காகிதங்கள் உணருமா பாசத்தின் ருசி ஒவ்வொரு முறையும் ஊர் சென்று திரும்பும்போது மறக்காமல் எல்லாவற்றையும் எடுத்து வர முடிகிறது மனசைத் தவிர...! காலத்தின் இந்த பசை தடவல்கள் நம்மை கட்டிப்போடாமல் வெறும் கடிதம் போடத்தானா? பாலைவன ஜீவன்கள் நாம் தாகத்தோடு காத்திருக்கின்றோம்! தண்ணீருக்காக அல்ல தபால்களுக்காக.... வாழ்க்கையின் பாதி விரக்தியிலும், விரகத் தீயிலும் எரிந்துபோகும் நம் வாலிப வாழ்க்கை கடைசியில் நரம்புகள் அறுந்துபோய் முகாரி பாடும் வீணைகளாய்... என்ன சொல்லி என்ன பயன் தண்ணீரில் மீன் அழுதால் கண்ணீரைத்தான் யார் அறிவார்? <b><i>ஜாஃபர் என்பவர் எழுதிய இந்த கவிதையை இணையத்தில் படித்தேன். மத்திய கிழக்கில் பிழைப்புக்காக சென்று தனித்து வாழ்பவர்களின் சோகத்தை சொல்கின்றது இந்த கவிதை.</i></b> - kavithan - 08-03-2005 நன்றி மதன் .. மிக மிக யதார்த்தமாக எழுதி இருக்கிறார் |