![]() |
|
Breaking News - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: Breaking News (/showthread.php?tid=7412) Pages:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
|
- sivajini - 03-07-2004 மனைவியார் மலேசியாவில் பிள்ளைகளும் - shanthy - 03-07-2004 Karavai Paranee Wrote:எல்லாம் நன்மைக்கே Quote:கருணாவின் துரோகத்தனத்தை உலகத்தமிழருக்கு அறிவிப்போம். - Mathivathanan - 03-07-2004 shanthy Wrote:[quote=Karavai Paranee]எல்லாம் நன்மைக்கேமக்களுக்காக தான் உழைக்கப்போவதாகவும் தமது பிரதேசத்தவர்கள் சண்டைக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதேசவாதப்பிரிவினையைக் காரணம் காட்டித் தற்போது பிரச்சனையை உருவாக்கியிருக்கும் கருணா பாங்கொக் பேச்சுவார்த்தை முடிந்த கையோடே தனது மனைவி பிள்ளைகளை மலேசியாவுக்கு அனுப்பியதன் மர்மம் என்ன ? ஆக இவரால் நன்கு திட்டமிட்டு நீண்டகாலமாக மேற்கொள்ளப்பட்டிருக்கும் விடயமே தற்போது நடக்கின்ற சதியென்பது தெளிவாகிறது. அந்தப்பிள்ளை மலேசியாவிலை இருக்குதோ இல்லையோ எனக்கு சரியாத் தெரியேல்லை.. சரி இருக்குதெண்டே ஒரு கதைக்கு வச்சுக்கொண்டு கேக்கிறன்.. நீங்கள் ஜேர்மனிக்கு ஏன் வந்தனியள்..? இல்லை ஒரு கதைக்குத்தான் கேக்கிறன்.. அந்தப்பிள்ளை மலேசியாவுக்குப் பிள்ளைகளோடை போயிருந்தால் என்ன..? உங்களுக்கு மட்டும்தான் உயிரோடை இருக்கிறதுக்கு உருத்து.. அந்தப் பிள்ளைக்கு அப்பிடி ஒண்டும் இருக்கக்கூடாது எண்டு சொல்லுறமாதிரியல்லவோ இருக்கு.. :oops: :oops: :oops: - TMR - 03-07-2004 மன்னிக்கவும் தாத்தா நாங்கள் யாரையும் காட்டிக்குடுத்திட்டோ இல்லை தமிழ்மண்ணுக்கு துரோகம் செய்திட்டோ இங்க வரவில்லை இல்லை மனைவியை அனுப்பவில்லை!!! உயிரோடு வாழும் உரிமை எல்லாருக்கும் உண்டு ஆணால் துரோகிக்கு இல்லை அது நான் என்டாலும் சரி நீங்கள் எண்டாலும் சரி கருணா அம்மான் என்டாலும் சரி!!!!!!!! தாத்தா உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாமல் இருக்கனும்!! எவ்வளவோ உயிர்தியாகங்களால் நாம் இவ்வளவோ வளர்ந்து உள்ளோம் !!!! அது சரி இத போய் உங்களுக்கு ம் தேவையா???? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- TMR - 03-07-2004 Quote:அந்தப்பிள்ளை மலேசியாவிலை இருக்குதோ இல்லையோ எனக்கு சரியாத் தெரியேல்லை.. சரி இருக்குதெண்டே ஒரு கதைக்கு வச்சுக்கொண்டு கேக்கிறன்..என்ன என்ன கொஞ்ச நாளுக்கு முன்னம் எதிரி இப்ப உங்கள் பட்டியலில வந்ததும் அந்தபிள்ளை உலகில எந்தமுலையில ஓளிந்தாலும் துரோகி துரோகி தான்!!!!!!!!!!!!!!! - sivajini - 03-07-2004 தலைவர் தனது காட்சட்டை பொக்கட்டுக்குள் இருந்த ஓட்டையை கன்டறிய மறந்திட்டாரோ? - Mathan - 03-07-2004 கருணா பிரிந்து போகும் முடிவு தன்னிச்சையாக அவரால் மாத்திரமே எடுக்கப்பட்டதாகும் நேற்று வன்னி திரும்பிய புலிகளின் சிரேஷ்ட தலைவர் கரிகாலன் கூறுகிறார் தமிழ் மக்களையும், ஆயிரக்கணக்கான போராளிகளையும் பலிக்கடாவாக்க முயலும் வகையில் கருணா நடந்து கொள்வாரேயானால் அவரை மற்றுமொரு ""பொல்பொட்'' ஆகவே தமிழ் மக்கள் பார்ப்பார்கள் என விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரான கரிகாலன் தெரிவித்தார். மட்டக்களப்பிலிருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை வன்னி விரைந்த கரிகாலன், கிளிநொச்சியில் வைத்து ஊடகவியலாளர் மத்தியில் பேசுகையிலேயே இவ்வாறு கூறினார். மட்டக்களப்புஅம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த புலிகளின் பல்வேறு பிரிவுகளின் தலைவர்கள், தளபதிகள் ஆகியோர் நேற்று கிளிநொச்சி வந்திருந்தனர். அங்கு நேற்று நண்பகல் ஊடகவியலாளர்களைச் சந்தித்து உரையாடிய கரிகாலன் மேலும் தெரிவித்ததாவது: கருணாவினுடைய பிரிந்து போகும் முடிவானது தன்னிச்சையாக அவரால் மட்டும் எடுக்கப்பட்ட முடிவாகும். எந்தவொரு பொறுப்பாளர்களையோ தளபதிகளையோ கலந்தாலோசிக்காமல் தானாக எடுத்த முடிவிற்கு போராளிகளையும் பிரதேச பொறுப்பாளர்களையும் செயற்பட வைக்க முனைகின்றார். இது நிச்சயமாக வெற்றியடையப் போவதில்லை. அதேவேளை, அவர் தன்னிச்சையாக முடிவெடுப்பதற்கு பின்புலம் உள்ளதாக நாங்கள் ஊகிக்கின்றோம். அது பற்றி நீங்கள் காலப் போக்கில் புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். இன்று தமிழ்த் தேசிய தலைமையை வெறுத்து மட்டக்களப்பு, அம்பாறை மக்கள் செயற்படத் தயாராக இல்லை என்பதை உறுதியாக கூறி வைக்க விரும்புகிறோம். ஏனெனில் கடந்த 25 வருடகால போராட்டத்தில் தேசியத்தலைமையையும் அரசியல் தலைமையையும் வலியுறுத்தியே போராடி வந்திருக்கின்றோம். அண்மையில் நடைபெற்ற பொங்குதமிழில் கூட புலிகளே தமிழர், தமிழரே புலிகள் என்று தேசியத் தலைவரின் உருவப்படத்தையும் தாங்கிச் சென்ற ஆயிரக்கணக்கான மக்களின் மனதிலே இருக்கின்ற நினைவையும் தலைவரின் மீதான பற்றையும் எவராலும் நீக்கவோ, அழிக்கவோ முடியாது. ஆகவே கருணா தனி மனித பிரச்சினைகளுக்காக மக்களை பலிக்கடாவாக்கி ஆயிரக்கணக்கான போராளிகளையும் பலிக்கடாக்களாக ஆக்குவாராக இருந்தால் அவர் மக்கள் மனதில் ஒரு பொல்பொட்டாகவே பார்க்கப்படுவார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இந்த பிரச்சினைக்கு விரைவிலே தீர்வு கொண்டுவரப்பட்டு தமிழ்த் தேசியத்தை ஏற்றுக் கொண்டு எல்லா மக்களும் செயற்படுகின்ற ஒரு சூழ்நிலையை நாங்கள் உருவாக்குவோம் என்பதை நம்பிக்கையோடு தெளிவாக தெரிவித்துக் கொள்கிறோம். கி.கரிகாலன், புலிகளின் அமைப்பில் இருந்து நீக்கப்பட்ட கருணாவினால் மட்டுஅம்பாறை அரசியல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதாக கொக்கட்டிச்சோலையிலிருந்து வெளிவரும் நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. Thanx: வீரகேசரி - TMR - 03-07-2004 என்ன செய்றது நம்பிகை அளவுக்கு மீறி வைச்சது அவர் தப்பு தான் !!!! ஆணால் இந்த தப்பு இது தான் கடைசியாக இருக்கும் என்று நினை க்கிறேன் (என் அறிவுக்கு எட்டியவரை!!) <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Mathan - 03-07-2004 புலிகளின் தலைமையில் ஏற்பட்டுள்ள அபிப்பிராய பேதம் மன உளைச்சலைத் தருகிறதுஆனந்தசங்கரி கூறுகிறார் விடுதலைப் புலிகளின் தலைமையில் ஏற்பட்டுள்ள அபிப்பிராயபேதம் தமிழ் மக்களுக்கு, பெருமளவில் மன உளைச்சலைத் தருகின்றது என தமிழர் விடுதலைக்கூட்டணித் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, விடுத்துள்ள அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது: விடுதலைப்புலிகளின் உள்விவகாரங்களில் தலையிடுவது என்னைப் பொறுத்தளவில் தப்பாகத் தோன்றினாலும் பாதிப்பு தமிழ் மக்கள் அனைவருக்கும் என்பதால் தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் என்ற வகையில் என் கருத்தை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். விடுதலைப் புலிகளின் தலைமையில் ஏற்பட்ட அபிப்பிராயபேதம் தமிழ் மக்களுக்கு பெருமளவில் மன உளைச்சலைத் தருகின்றது. இருபது ஆண்டுகளுக்குமேல் பல்வேறு போராட்டங்கள் மூலமும் பெரும் பங்களிப்போடும் பேச்சுவார்த்தைகள் மூலம் இறுதித்தீர்வு ஏற்படக்கூடிய நிலைமைக்கு கொண்டு வந்து சாதனை படைத்தவர்களும் விடுதலைப் புலிகள் தான் என்பதில் எதுவித சந்தேகமுமில்லை. பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் தியாகத்தோடு கூடிய தமிழ் மக்களின் பல்வேறு பேரிழப்புக்களை ஏற்படுத்திய இப்போராட்டம் எம் தமிழ் மக்களின் விடிவுகாலம் வரக்கூடிய அறிகுறிகள் தென்படும் இவ்வேளையில் அபிப்பிராய பேதங்களை களைந்து விட்டுக்கொடுப்புடன் செயற்பட்டால் இனப்பிரச்சினைக்கு ஓர் முடிவு கட்டலாம் என்பதே பலரின் அபிப்பிராயமாகும். இவ் அபிப்பிராய பேதம் தமிழ்மக்களுக்கு மிகவும் முக்கியமாகக் கருதப்படும் வடக்குகிழக்கு இணைப்பின் அடித்தளத்தையே ஆட்டங்காணவைத்து எதிரிகளை பெரும் மகிழ்ச்சிக்குள்ளாக்கும் என்பதை உணர்ந்து உடனடியாக நடந்தவற்றை மறந்து மீண்டும் ஒன்றிணைந்து நாமெல்லோரும் தமிழர் என்ற அடிப்படையில் செயற்படுமாறு தமிழீழ விடுதலைப் புலிகள் அனைவரையும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன். Thanx: வீரகேசரி - shanthy - 03-07-2004 ragi swiss Wrote:மன்னிக்கவும் தாத்தா நாங்கள் யாரையும் காட்டிக்குடுத்திட்டோ இல்லை தமிழ்மண்ணுக்கு துரோகம் செய்திட்டோ இங்க வரவில்லை இல்லை மனைவியை அனுப்பவில்லை!!! தாத்தா :!:
- Mathan - 03-07-2004 கருணா பிரதேச உணர்வுகளை கிளப்பி தனக்குப் பாதுகாப்புத் தேட முயல்கின்றார்ஈ.பி.டி.பி. அறிக்கை புலிகள் தலைமையின் ஜனநாயக விரோத போக்குகளோடு கடந்த பல ஆண்டுகளாக ஒத்துழைத்து வந்த கருணா இப்போக்குக்கு தானும் இலக்காகியுள்ள இத்தருணத்தில் பிரதேச உணர்வுகளைக் கிளப்பி தனக்குப் பாதுகாப்புத் தேட முயல்கின்றார். புலிகளுக்குள் கருத்து முரண்பாடு இன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. புலிகளின் தலைமைக்கும் கருணாவுக்குமிடையிலான முரண்பாட்டை வடக்கில் வாழும் தமிழ் மக்களுக்கும் கிழக்கு தமிழ் மக்களுக்குமிடையிலான மோதலாக மாற எவரும் இடமளிக்கக்கூடாது என ஈ.பி.டி.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது: கருத்து வேறுபாடுகள் புலிகள் இயக்கத்துக்குள் தற்போது தீவிரமடைந்துள்ளன. ஜனநாயக அரசியல் கோட்பாடுகளுக்கு மதிப்பளிக்காமல் தன்னிச்சையாக முடிவுகளை மேற்கொள்ளும் சர்வாதிகாரப் போக்குகள் ஒரு போதும் நல்ல விளைவுகளைப் பெற்றுத் தராது. புலிகளுக்கு இடையிலான தற்போதைய கருத்து முரண்பாடுகளும் இதற்கு ஒரு சான்று ஆகும். புலிகள் இயக்கத்தில் உட்பூசல் ஏற்பட்டது. இதுதான் முதல் தடவையல்ல. இதனை உணர்ந்து கொண்டு ஜனநாயக விரோத சர்வாதிகாரப் போக்குகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கத் தமிழ் பேசும் மக்கள் துணிவுடன் முன்வர வேண்டுமென்பது இன்றைய காலத்தின் தேவையாகும். ஏற்கனவே தமிழ் மக்களுக்கும் இந்தியாவுக்குமிடையிலான உறவுகளை பகைமையுடனான சந்தேகப்பார்வைக்கு தள்ளியும் முஸ்லிம் மக்களை தமிழ் தேசிய இனத்திற்குள் தனிமைப்படுத்தியும் வந்துள்ள புலிகளின் போக்கு இப்போது பிரதேச ரீதியான பிரிவினைக்கும் இட்டுச் செல்லும் ஆபத்துக்கு வந்துள்ளது. இதனை முளையிலேயே இனங்கண்டு நிராகரிக்க தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும். Thanx: வீரகேசரி - shanthy - 03-07-2004 தாத்தா Quote:கருணாவின் புதிய திட்டங்கள். - Mathan - 03-07-2004 வீட்டுச் சின்னத்திற்கு வாக்கு சேர்ப்பதை விடுத்துவேட்பாளர்கள் தமக்குள் மோதிக்கொள்வது கவலைக்குரியது - தமிழ் கூட்டமைப்பு அம்பாறை வேட்பாளர் ""தமிழர்களின் ஒற்றுமையை சர்வதேசத்திற்கு எடுத்தியம்ப வேண்டும் என்று கூறிப் புறப்பட்ட தமிழர் கூட்டமைப்பு வேட்பாளர்கள் வீட்டுச் சின்னத்திற்கு வாக்குச் சேர்ப்பதை விடுத்து தமக்குள் முட்டி மோதிக் கொள்வது வேதனைக்குரியது'' இவ்வாறு ஆலையடிவேம்பு தர்மசங்கரி மைதானத்தில் இடம்பெற்ற தேர்தல் கருத்தரங்கில் உரையாற்றிய தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட வேட்பாளர் விவேகானந்தன் கவலையுடன் கூறினார். விளையாட்டுக் கழக உறுப்பினர் சகிதம் இடம்பெற்ற தேர்தல் கருத்தரங்கில் வேட்பாளர் வேலூரான் விவேகானந்தன் மேலும் உரையாற்றுகையில்: ""விடுதலைப் புலிகளின் வழிகாட்டலுடன் இலட்சியம், கொள்கைக்காக புறப்பட்ட நாம் முதலில் 65 ஆயிரம் வாக்குகளையாவது பெறுவதில் கவனம் செலுத்த வேண்டும். ஒரு பிரதிநிதித்துவம் நிச்சயம் கிடைக்கும் அதேவேளை ஒற்றுமை கூடினால் இரண்டாவது பிரதிநிதித்துவமும் கிடைப்பது உறுதி. ஆனால் இதனை விடுத்து வேட்பாளர்கள் சிலர் மட்டும் ஒன்று கூடி கூட்டம் வைப்பதும் சிலர் கூட்டுச் சேராமல் தனியாக ஆதரவு திரட்டுவதும் மக்கள் மத்தியில் சஞ்சலத்தை ஏற்படுத்தியுள்ளது. என்னை யாரும் விலை கொடுத்து வாங்கமுடியாது. நான் விலைபோகவும்மாட்டேன். நான் சாகும்வரை தமிழ் மக்களுக்கு சேவை செய்வதையே இலட்சியமாகக் கொண்டுள்ளேன். பட்டம், பதவி, பஜிரோ, பாராளுமன்ற ஆசனம் என்பவற்றை எண்ணி போட்டியிடவில்லை. தமிழினத்தின் ஒற்றுமை, இறைமை, சுயநிர்ணய உரிமை, தேசியம் என்பவற்றை சர்வதேசத்திற்கு வலியுறுத்தவே தேர்தலில் இறங்கியுள்ளேன். எனவே, தமிழர்களே, ஒன்றுபட்டு வீட்டிற்கு வாக்களியுங்கள். ஈழம் தானாக மலரும்'' என்றார். கூட்டத்தில் ஜொலிவோய்ஸ், விறேய்ன் வோய்ஸ், உதயசூரியன்கழகம், பவர்கழகம், பிளே வோய்ஸ் போன்ற பல கழகங்களின் பிரதிநிதிகளும் பொது மக்களும் கலந்து கொண்டனர். Thanx: வீரகேசரி - Mathan - 03-07-2004 கருணாவை மீண்டும் அமைப்பில் சேர்க்கக் கோரி பேரணி விடுதலைப் புலிகளின் உள்வீட்டு முரண்பாடு தொடர்பாக அம்பாறை மாவட்டத்தில் ஒரு பேரணியும் கருத்தரங்கும் நேற்று இடம்பெற்றது. நேற்றுக்காலை திருக்கோவில் பிரதேசத்தில் பாரிய ஊர்வலமும், பொதுக்கூட்டமும் நடைபெற்றது. காலை 10.00 மணியளவில் திருக்கோவில் மணிக்கூட்டுக் கோபுரச் சந்தியில் ஆரம்பித்தபேரணி 11.30 மணியளவில் தம்பிலுவில் ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தைச் சென்றடைந்தது. தமிழரசுக்கட்சி வேட்பாளர்களான அரியநாயகம் சந்திரநேரு, க.பத்மநாதன், சா.விவேகானந்தன் ஆகியோரும் கலந்து கொண்டனர். மகளிரணித்தலைவி மார்க்கிரட் தலைமையில் இடம்பெற்ற பேரணியில் கலந்து கொண்டோர் பலசுலோகங்களடங்கியபதாதைகளைத் தாங்கிச் சென்றனர். பொது மக்கள் 500 பேரளவில் கலந்து கொண்டனர். தலைவர் பிரபாவும், தளபதி கருணாவும் மீண்டும் ஒன்று சேர வேண்டும் என்று கூறும் பதாதையை வேட்பாளர் அ.சந்திரநேரு தாங்கிவந்தார். ""தளபதி கருணா செய்த தவறு என்ன? என்று கூறும் சுலோக அட்டைகளும் பரவலாக காணப்பட்டது. கருணா அம்மானுக்கு மீண்டும் தளபதி பதவியை வழங்கு என்று கோரும் கோஷம் வானளாவ எழுப்பப்பட்டது. கருணா சார்பான பதாதைகளும் இருந்தன. அம்பாறை மாவட்ட மகளிரணி ஏற்பாடு செய்த இப்பேரணியின் முடிவில் தம்பிலுவில் கண்ணகை அம்மன் ஆலய முன்றலில் தலைவி மார்கிரட் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பலர் உரையாற்றினர். கருணா அம்மானின் செயற்பாட்டை நியாயப்படுத்திப் பேசியதைக் காண முடிந்தது. இறுதியில் வேட்பாளர் சா.விவேகானந்தனும் உரையாற்றினார். பேரணியிலோ, கூட்டத்திலோ விடுதலைப் புலிகள் சார்பில் யாரும் கலந்து கொள்ளவில்லை. பாண்டிருப்பில்: இது இவ்விதமிருக்க, நேற்று காலையில் கல்முனை நகரில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஒலிபெருக்கி மூலம் இன்றைய அரசியல் நிலைப்பாடு பற்றிப் பேசியதுடன் விடுதலைப் போராட்டத்திற்கு கிழக்கு வாழ் போராளிகள் வழங்கிய தியாகத்தையும் எடுத்துக்கூறினர். Thanx: வீரகேசரி - Mathan - 03-07-2004 Effigies of Prabhakaran & Ramesh burnt About 3000 people marched from Valachchena along the Batticaloa road to Chenkaladi burning effigies and photographs of Prabhakaran, the tiger supremo and Ramesh, the leader appointed to Eastern Province by the tiger organization after removing Karuna from that post and later held a massive agitation. According to our sources the agitators declared Karuna as their leader and stated they were not prepared to carry out orders given by Prabahakaran. Those who participated in the agitation, which lasted for more than three hours, carried large photographs of Karuna. At a rally held in the town of Chenkalady thereafter the speakers criticized the policies of Prabhakaran and Ramesh. http://www.lankatruth.com/full_story_page/..._07032004_2.htm - Mathan - 03-07-2004 <img src='http://www.dailymirror.lk/2004/03/08/imgs/cartoonl.gif' border='0' alt='user posted image'> நன்றி - டெய்லி மிரர் - vasisutha - 03-07-2004 ..... மட்டுமே ...... முடியும். - vasisutha - 03-07-2004 கருணாவின் துரோகத்தனத்தால் மட்டு-அம்பாறைக்கு ஏற்பட்ட களங்கத்தை துடைத்து தமிழ்த் தேசிய விசுவாத்தை சொற்ப காலத்திலேயே அம்மக்கள் நிரூபிப்பார்கள் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கிழக்குப் பிராந்திய மூத்த உறுப்பினரும், முன்னாள் மட்டு-அம்பாறை அரசியல்த்துறைப் பொறுப்பாளருமான கரிகாலன் அவர்கள் இலண்டன் ஐபிசி வானொலிக்கு இன்று அளித்த நேர்காணலில் உறுதியளித்துள்ளார். நேர்காணலின் முழுமையான விபரம் பின்வருமாறு: கேள்வி: கருணா எடுத்த முடிவு தன்னிச்;சையான முடிவு என்று சொன்னீர்கள். அது குறித்து..? பதில்: ஆம். கருணா இந்த முடிவை எடுப்பதற்கு முன்னர் எமது மாவட்டத்தில் இருக்கின்ற தளபதிகளையோ பொறுப்பாளர்களையோ கலந்து ஆலோசிக்கவில்லை. தலைவர் இட்ட கட்டளையை தானாகவே ஏற்றுக்கொள்ளாது அந்தக் கட்டளையை மீறுவதாக எங்களிடம் தெரிவித்திருந்தார். எனது போரட்ட வாழ்க்கையில் இன்றைக்குத்தான் தலைவரது கட்டளையை மீறிப் போகிறேன் என்று கூறிக்கொண்டு தலைவரது கட்டளைக்கு எதிரான ஒரு முடிவை அவர் அறிவித்திருந்தார். இதனையடுத்து நாங்கள் பலதடவைகள் பல தளபதிகளும் பல பொறுப்பாளர்களும் அவருக்கு எடுத்து விளக்கினோம். ஆனால் அவர் எந்த ஒரு ஆலோசனைக்கும் செவி சாய்க்கவில்லை. அப்போது, நாங்கள் கூறிய ஆலோசனைகள் எல்லாம் ஒரு போலித்தனமான ஆலோசனையாகவோ ஒரு கையாலாகத்தனமான ஒரு முடிவுகளாகவும்தான் அவர் பார்த்துக்கொண்டாரே தவிர யதார்த்த புூர்வமாக ஒரு பிரச்;சினைக்குத் தீர்வு காண்கிற அணுகுமுறைகள் அவரிடம் இருக்கவில்லை. தலைவருடையை கட்டடளையை ஏற்று அதற்கேற்றவாறு பிரச்;சினைகளுக்குத் தீர்வு காணுகிற மனோநிலையிலும் அவர் இருக்கவில்லை. ஆகவே எங்களுடைய தளபதிகளுடையைதும், பொறுப்பாளர்களுடையதும் கருத்துகளைக் கேட்காமல் தானே ஒரு முடிவை எடுத்துக் கொண்டு அதை எமது போராளிகள், தளபதிகள், எமது மாவட்ட மக்கள் மீதும் திணித்து இருக்கின்றார். இதன்மூலம் அவர் ஒரு தன்னிச்;சையான முடிவை எடுத்து அதை இன்று நடைமுறைப்படுத்த விழைகிறார் என்று நாங்கள் கருதுகிறோம். கேள்வி: கருணா தன்னிசையாக முடிவு எடுக்க என்ன காரணம்? பதில்: அவர் எங்களுடைய ஆலோசனைகளை எல்லாம் கேட்காது தலைவரது கட்டளைகளை நிறைவேற்ற விரும்பாது தானே ஒரு குழப்பமான முடிவை எடுப்பதற்கு பின்னணியில் நின்று ஏதோ ஒரு சக்தி செயல்படுவதாக அனுமானிக்கிறோம். அது எத்தகைய சக்தி என்பதை விரைவிலே காலம் உணர்த்தும் என்று நம்புகிறோம். கேள்வி: கருணா பிரச்;சினையை சுமூகமாகத் தீர்த்து கொள்ள முடியாது என்று கருதுகிறீர்களா? பதில்: இந்தப் பிரச்;சினையை சுமூகமாகத் தீர்த்து கொள்ள வேண்டும் என்பதற்காக அவருடன் பேசிப் போராடிப் பார்த்தேன். என்னையும் இந்தப் பிரச்;சினை ஆரம்பமானவுடனேயே தலைவர் இங்கு வருமாறு அறிவித்தல் விடுத்தார். ஆனாலும் நான் இங்கு வருவதன் மூலம் பிரச்;சினையைத் தீர்க்க முடியாது இறுதி வரைக்கும் இப்பிரச்;சினைக்கு சுமூகத் தீர்வு கண்டு தேசியத் தலைமையின் கீழ் செயற்படுவதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக கருணாவுடன் அடிக்கடி கதைத்தேன். இறுதியாகக் கூட தமிழீழ நிர்வாகத்தை கைவிட்டாலும் கூட தேசியத் தலைமையின் கீழ் செயல்பட வேண்டும் என்று வற்புறுத்தி இருக்கிறேன். அதற்கும் கருணா செவிசாய்க்காது தானே தன்னிச்;சையாக நின்று சர்வதேச ஊடகம் ஒன்றிற்கு நாங்கள் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து செல்கிறோம் என்று ஒரு அறிவிப்பைக் கொடுத்திருந்தார். இதன் பின்னர் அவரோடு சமரசம் பேசுவதிலோ அல்லது அவருக்கு மன்னிப்பு கொடுத்து ஒரு சுமூகத் தீர்வை காண்பதிலோ தலைமைப்பீடம் நம்பிக்கை வைத்திருக்கவில்லை. அதனால்தான் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு அவரை விடுதலைப் புலிகள் அமைப்ப்பிலிருந்து நீக்கியுள்ளது. எமது கட்டமைப்பின் படி ஒரு தளபதி நீக்கப்பட்டால் அடுத்த தளபதி பொறுப்பேற்று மாவட்டத்தின் போராளிகளையும் மக்களையும் வழிநடத்துகிற செயல்பாடுதான் இருந்து வருகிறது. அதன்படி துணைத் தளபதியாக செயல்பட்ட ரமேஷ் இப்போது தளபதியாக பொறுப்பேற்று மீதமுள்ள போராளிகளையும் பொறுப்பாளர்களையும் வழி நடத்துவதற்கான ஒரு செயற்திட்டம் நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. அதன் மூலம் ஒரு சுமூகத் தீர்வை காண முடியுமே தவிர கருணாவின் நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதன் மூலமோ கருணாவிற்கு மன்னிப்பு அளிப்பதன் மூலமோ சுமூகமான சூழ்நிலையை ஏற்படுத்த முடியாத ஒரு துர்ப்பாக்கிய நிலை உருவாக்கப்பட்டுவிட்டது. கேள்வி: கருணாவின் தரப்பில் பலதரப்பட்ட கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றனவே..இது குறித்து நீங்கள் என்ன கூறுகிறீர்கள்? பதில்: கருணா தெரிவித்துள்ள கருத்துகள் எல்லாம் ஒரு வறட்டுத்தனமான ஏற்றுக்கொள்ள முடியாத கருத்துகளாக இருக்கின்றன. நான் இறுதியாகக் கூட சந்தித்த போது இந்த தமிழீழப் பொறுப்பாளர்கள் மட்டு-அம்பாறை மாவட்டத்தைச்; சேர்ந்தவர்கள் எவருமே இல்லை என்ற கட்டமைப்பை வெளிப்படுத்தி அதனை மக்களுக்கும் விநியோகித்து எல்லா செய்தி ஊடகங்களுக்கும் வெளிப்படுத்தி ஒரு பிரதேசவாதத்தை கிளப்பி தன்னை நியாயப்படுத்த துணிந்திருக்கிறார் என்றுதான் நான் கருதுகிறேன். இந்த விடுதலைப் போராட்ட காலத்திலே நாங்களும் பல இடங்களில் கடுமையாக சண்டையிட்டுள்ளோம். தகுத்திக்கேற்ப தலைமைப்பீடம் பல பொறுப்புகளைக் கொடுத்து வைத்து இருக்கிறது. போராளிகளும் பல யுத்த களங்களிலே நின்று போரிட்டு எல்லா மக்களது நட்பையும் ஆதரவையும் பெற்றிருக்கிறார்கள். இது இன்று நேற்று ஏற்பட்ட சூழல் அல்ல. நீண்ட காலமாகவே அவர் மனதில் குடிகொண்டிருந்த குரோத மனப்பான்மையை வெளிப்படுத்தி இருக்கிறார். இந்த வெளிப்பாடு தான் செய்த குற்றச்;செயலை மறைப்பதற்காக தன்னை நியாயப்படுத்துவதற்காக இவ்வாறான குற்றச்;சாட்டை சுமத்துவதன் மூலம் தான் ஒரு சிறந்த தளபதி - தன் மீது ஒரு அபாண்டமான குற்றச்;சாட்டை எமது மாவட்டத்தை, மாவட்ட மக்களை புறக்கணிப்பதாக ஒரு தோற்றப்பாட்டை சர்வதேச சமூகத்திற்கு வெளிப்படுத்தி தான் ஒரு நிரபராதி; ஆனால் தலைமைப்பீடம்தான் எதிராக இருக்கிறது என்ற கருத்தை மக்கள் மீது திணிக்க முற்பட்டு இருக்கிறார். இதன் மூலம் தான் ஒரு பிரதேச விசுவாசி என்பதை காட்ட முனைகிறார். இதில் பலதரப்பட்ட கருத்துகள் தெரிவிக்கப்பட்டாலும் உண்மை இதுதான். கேள்வி: இந்த முரண்பாட்டை தீய சக்திகள் பயன்படுத்த முயற்சிப்பது வரலாற்று உண்மை. உலகம் முழுவதும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கு என்ன கூற விரும்புகிறீர்கள்?. பதில்: எமது விடுதலைப் போராட்டத்திலே உலகம் முழுவதும் பரந்து வாழ்கிற தமிழர்கள் மிகுந்த பற்றுறுதியோடும் விசுவாசத்தோடும் நன்றியுணர்வோடும் விடுதலைப் போராட்டத்தை வெற்றி பெறச்; செய்வதற்கு அரும்பாடுபட்டு வருகிறார்கள். அவர்கள் கட்டி வளர்த்த இந்த விடுதலைப் போராட்டத்தை சிதைத்து விடுவதற்காக அந்த தீய சக்திகள் முனைவதாக இருந்தால் அதற்கு பலியாவதாக இருந்தால் அது ஒரு மாபெரும் தேசத் துரோகமாகவே கருதப்படும். அந்தத் தேசத் துரோக நடவடிக்கையாகத்தான் இன்று அவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்களிடமிருந்தும் போராளிகளிடமிருந்தும் அப்புறப்படுத்தப்பட்டு அடுத்த தளபதி பொறுப்பேற்று அந்த தீயசக்திகளின் முயற்சியை முறியடித்து நிச்;சயமாக மட்டக்களப்பு அம்பாறைக்கு ஏற்பட்ட களங்கத்தை துடைத்து மீண்டும் தேசியத் தலைமையின் கீழ் ஒன்றுபட்ட அமைப்பாக இயங்குவதற்கு எமது தளபதிகளும் பொறுப்பாளர்களும் உறுதியோடு செயல்பட உறுதி புூண்டிருக்கிறார்கள். நிச்;சயமாக இன்னும் சொற்பகாலத்தில் அதை தலைமைப்பீடத்திற்கு காட்டுவோம் என்பதை சர்வதேச உலக மக்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகிறோம். கேள்வி: கருணா நீக்கம் தொடர்பாக சமாதான முன்னெடுப்புகளில் பாதிப்பு ஏற்படுமா? பதில்: எமது தேசிய விடுதலைப் போராட்டம் எமது தேசியத் தலைவரின் கீழ் அணிதிரண்டு அனைத்து போராளிகளும் பொறுப்பாளர்களும் செயற்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். தனியொரு மனிதனுக்கு தவறிழைத்தமைக்காக ஒரு ஒழுக்காற்று நடவடிக்கை மூலம் அவரது பதவி நிலை பறிக்கப்பட்டால் அது ஒட்டுமொத்தமாக எமது விடுதலைப் போராட்ட அமைப்பின் செயற்பாடுகளுக்கு எந்தவிதமான குந்தகத்தையும் ஏற்படுத்த முடியாது. சர்வதேச நாடுகளுக்கு எல்லாம் இந்த பேச்;சுவார்த்தைக்காக சென்று வந்த கருணா அவர்கள் பல உறுதி மொழிகளையும் எமது தேசியத் தலைமையை-தேசிய விடுதலைப் போராட்டத்தை சர்வதேச மக்களுக்குத் தெளிவுபடுத்தியவர். தெளிவுபடுத்திய சொற்ப காலத்திற்குள்ளேயே எமது விடுதலைப் போராட்டத்தை சிதைப்பதற்கு அவர் உறுதிபுூண்டிருக்கிறார் என்றால் அவரது கொள்கைப் பற்றும் அவருடைய உறுதிமொழிகளும் நிச்;சயமாக ஒரு உள்நோக்கத்தை வைத்து அவர் போலியாக நடித்திருக்கின்றார் என்ற உண்மையைத்தான் புலப்படுத்தி இருக்கிறது. ஆகவே அவருடைய செயற்பாடு நிச்;சயமாக வெற்றியளிக்கமாட்டாது. எமது விடுதலைப் போராட்டத்திலே ஒரு மாபெரும் சக்தியாக எமது மக்களும் போராளிகளும் இருக்கிறார்கள். ஒரு பொறுப்பாளரையோ ஒரு தளபதியையோ நம்பி இந்த விடுதலைப் போராட்டம் இல்லை. ஆதலால் ஒட்டுமொத்தமான-பேச்;சுவார்த்தை மூலம் நிரந்தரமான தீர்வை எமது மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க நடத்தப்படுகிற இந்த பேச்;சுவார்த்தைகள் தனிமனிதன் ஒருவருடைய செயற்பாடும் அவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையும் எந்த விதத்திலுமே பாதிக்காது. கேள்வி: கிழக்கில் இருந்து பொறுப்பாளர்கள் வன்னிக்கு வந்து கொண்டிருக்கிறார்கள் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. மட்டக்களப்பு நிலைமை இப்போது எப்படி இருக்கிறது? பதில்: மட்டக்களப்பு-அம்பாறையில் செயற்பட்டு வந்த முக்கியமான தளபதிகள், துணைத் தளபதி, அரசியல் பொறுப்பாளர், இராணுவப் புலனாய்வுத் துறைப் பொறுப்பாளார், நிர்வாகப் பொறுப்பாளர் இங்கே வருகை தந்திருக்கிறார்கள். அவர்கள் மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களுக்கான பொறுப்புகளை ஏற்று தொடர்ந்தும் செயற்பட ஒரு நிர்வாகக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அந்த கட்டமைப்பின் கீழ் அவர்கள் செயற்பட தயாராகிக் கொண்டு இருக்கிறார்கள். மட்டக்களப்பு அம்பாறை மக்களும் அதை ஏற்று செயல்பட தயாராக இருக்கின்றார்கள். இன்று மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டம் ஒரு மிகுந்த சோக நிலையில் இருந்துகொண்டு இருக்கிறது. தனது விசுவமான ஆட்களை வைத்து கருணா பலவிதமான பிரதேச உணர்வுகளை கிளறிவிடக் கூடிய நடவடிக்கையில் இறங்கிக் கொண்டு இருக்கிறார். குறிப்பாக வடக்கு கிழக்கு என்ற பேதத்தை மக்கள் மனதிலே ஏற்படுத்தி மாபெரும் பிரிவினை தோற்றத்தை உருவாக்கும் செயலிலே இறங்கியிருக்கிறார். அதற்கு மக்கள் எவருமே சுயமாக ஆதரவு அளிக்கத் தயாராக இல்லை. கடந்த 30 ஆண்டு காலமாக இரத்தம் சிந்தி கண்ணீர் சிந்தி வளர்த்தெடுத்த இந்த விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட்டு தனது சுயலாபத்தை அடைய முற்படுகிற இந்த நடவடிக்கைக்கு எமது மக்கள் ஒருபோதும் அனுமதி அளிக்கமாட்டார்கள். அதற்கு விலைபோகவும் மாட்டார்கள். அந்த மக்கள் விரும்புவதெல்லாம் இந்த பிரச்;சினைகளுக்கு நிரந்தத் தீர்வு காணப்பட்டு மீண்டும் எமது தேசியத் தலைமையின் கீழ் ஒன்றுபட்ட அமைப்பாக செயல்பட வேண்டும் என்பதே. என்னிடம் பலர் கண்ணீர்விட்டு அழுதனர். இந்த நிலைமை எமது மாவட்டத்திற்கு ஏன் ஏற்பட்டது?. இந்த நிலைமையை ஒரு முடிவுக்கு கொண்டுவாருங்கள் என்று கெஞ்சிக் கேட்டார்கள். இன்று மக்கள் எப்போதும்போல் எம்முடன் இணைந்து செயற்படத் தயாராக இருக்கிறார்கள். ஆகவே நாங்கள் இங்கு வந்து எடுத்திருக்கும் இந்த முயற்சிக்கு எமது போராளிகளும் பக்கபலமாக நிச்;சயமாக இருப்பார்கள். கருணாவின் தவறான செயல்களுக்கு ஒத்துழைக்காது அவரை ஓரங்கட்டி எம்மோடு இணைந்து கலந்துவிட்ட விடுதலைப் போராட்டத்தை வழிநடாத்துவதற்கு எமது மக்கள் நிச்;சயமாக உழைப்பார்கள். பெரும் நம்பிக்கை இருக்கிறது. அண்மையிலே நடைபெற்ற பொங்கு தமிழ் நிகழ்விலே ஆயிரக்கணக்கான மக்கள் எமது தேசியத் தலைவர் உருவப்படத்தை தாங்கிக் கொண்டு புலிகளே தமிழர்! தமிழரே புலிகள்!! என்ற கோஷத்தை எழுப்பி வந்தமை அவர்களது உணர்ச்;சியையும் உத்வேகத்தையும் வெளிக்காட்டக் கூடியதாக இருந்தது. இந்த உணர்ச்;சியையும், உத்வேகத்தையும் ஒரு சிலநாட்களில் ஒரு கருணாவின் சுயநலத்துக்காக பயன்படுத்துவதை எந்தவொரு மக்களும் அனுமதிக்கப் போவதில்லை. அதற்கு அவர்கள் உடன்படவும் மாட்டார்கள். இந்த 30 ஆண்டுகாலம் தேசிய உணர்வையும் தேசியத் தலைமை விசுவாசத்தையும் காட்டிவிட்டு ஓரிரு நாட்களிலே அதனை து}க்கி எறிந்துவிட்டு அதற்கு எதிராக செயற்படுங்கள் என்று கோசமிடுவது நகைப்பிற்கிடமானது. கேலிக்கூத்தானது. போலித்தனமானது. இதற்கு மட்டக்களப்பு அம்பாறை மக்கள் செவிசாய்க்கமாட்டார்கள். இதற்கு நிச்;சயமாக ஒரு பதிலடி கொடுத்து தொடர்ந்து விடுதலைப் புலிகள் அமைப்பு உறுப்பினர்களோடு செயற்படுவதற்கு உறுதிபுூணுவார்கள் என்பதை நிச்;சயமாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். கேள்வி: தேர்தல் தொடர்பாக..? பதில்: தமிழ்த் தேசியத்தையும் விடுதலைப் புலிகள் எடுத்துள்ள நிலைப்பாட்டையும் நியாயப்படுத்துவதற்காக விடுதலைப் புலிகளை முழு தமிழ் உலகமே ஏற்றுக்கொள்வதற்கான மீண்டும் ஒரு தீர்வை உறுதிப்படுத்துக்கிற தேர்தல் இது. புலிகள் தான் மக்கள்- மக்கள்தான் புலிகள் என்று மட்டக்களப்பிலே போட்டியிடுகிற ஒவ்வொரு வேட்பாளர்களும் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். இதில் எந்த மாற்றமும் இல்லை. அந்த கொள்கைக்கே வாக்களிக்க எம்மக்களும் தயாராகிக் கொண்டு இருக்கிறார்கள். விடுதலைப் புலிகளையே ஏகப்பிரதிநிதிகளாக ஏற்க வேண்டும்; தமிழ்த் தேசியத்தை நாங்கள் மீண்டும் ஒருமுறை உணர்த்திக் காட்ட வேண்டும் என்ற உறுதியோடு மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டத்தில் மக்கள் வாக்களிக்கத் தயாராகி வருகின்றனர். இன்று இடம்பெற்றுள்ள சலசலப்புச்; சூழல் எமது மக்களின் உணர்வலைகளை எந்த விதத்திலும் பாதிக்காது. தேர்தலிலும் எந்தவிதத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது. நிச்;சயமாக தேர்தலில் மக்கள் எமது தமிழ்த் தேசியத்தையும் விடுதலைப் புலிகளே ஏகப்பிரதிநிதிகள் என்பதையும் வெளிப்படுத்துகிற முடிவை அவர்கள் அறிவித்து மிகப்பெரிய வெற்றியை அளிக்க உறுதிபுூணுவார்கள். இக்கட்டான சூழலில் விடுதலைப் புலிகளின் பலத்தை நிரூபிக்க ஒவ்வொரு தமிழ் வாக்காளரும் உறுதியோடு செயல்படுவார்கள் என்று நாம் நம்புகிறோம். தேர்தல் முடிவு மூலம் அவர்கள் நிரூபிப்பார்கள். கேள்வி: தேசியத் தலைவர் அவர்கள் தன்னை கொல்லத் திட்டமிட்டுள்ளார் என்று மேற்கத்திய ஊடகங்களிடம் கருணா கூறியுள்ளாரே? பதில்: இது தன்னுடைய பலவீனத்தை நியாயப்படுத்துவதற்கான குற்றச்;சாட்டு. தான் செய்த தவறு அம்பலப்படுத்தப்பட்டு உலக மக்களால் அவரது கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு அவர் ஒரு குற்றவாளியாக்கப்படுவிடுவாரோ.. தமிழ் மக்களின் துரோகியாக பார்க்கப்பட்டுவிடுமோ என்ற அச்;சம் அவருக்குக் குடிகொண்டுள்ளது. இதனால் பொய்யான தகவல்கள் மூலம் தன்னை நியாயப்படுத்திக்கொள்ள முனைகிறார். இன்றும், எமது தேசியத் தலைவர் அவர்கள் கருணாவை மன்னித்து அவர் வாழ்நாள் முழுவதும் உயிரோடு வாழ்வதற்கான முடிவுகளை எடுத்துள்ளார். கருணா விரும்பினால் அதை நிறைவேற்றி எந்தவித துன்பங்களுமின்றி அவரது உயிருக்கு எவ்வித ஆபத்துமின்றி அவரை சுதந்திரமாக செயற்படுவதற்கான உறுதிமொழிகளையும் ஏற்பாடுகளையும் செய்ய அவர் தயாராக இருக்கிறார் என்பதை உலகத் தமிழர்களுக்கு அனைத்து ஊடகங்கள் ஊடாகத் தெரிவிக்கிறோம். இதனை அவர் நம்பலாம். இதற்கான உறுதியை தேசியத் தலைவர் அவர்கள் வழங்கியிருக்கிறார் என்பதையும் தெரியப்படுத்துகிறோம். எழுத்து வடிவம்: சேரமான் நன்றி: ஐ.பி.சி. தமிழ் - vasisutha - 03-07-2004 சிறீலங்காவின் வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளிடையே மீண்டும் வெடித்துள்ள மோதல்கள் காரணமாக, நேற்று சுமார் 20 கைதிகளும், நான்கு சிறைச்சாலை அதிகாரிகளும் காயங்களுக்குள்ளாகியதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலைக்குள் நேற்று நீர் வழங்குவதில் ஏற்பட்ட ஒரு முரண்பாடு காரணமாக சிறைச்சாலைக் கைதிகளின் இரு குழுவினருக்கும் இடையே மோதலொன்று வெடித்தது. இந்த மோதலில் 30 க்கும் மேற்பட்ட கைதிகள் காயங்களுக்கு உள்ளாகியிருந்தனர். இதன்பின், சிறீலங்காவின் கலகம் அடக்கும் காவல்த்துறைப் பிரிவினர் சிறைச்சாலைக்கு அழைக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருந்தது. கலகம் அடக்கும் காவல்த்துறைப் பிரிவினர் நேற்று சிறைச்சாலையிருந்து சென்ற பின்னர் மீண்டும் அங்கு மோதல்கள் வெடித்ததாகவும், தற்போது வெலிக்கடைச் சிறைச்சாலைக்குள் கலகம் அடக்கும் காவல்த்துறைப் பிரிவினர் நிரந்தரமாகத் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் உள்துறை அமைச்சின் செயலாளர் யுனைட் தெரிவித்துள்ளார். நன்றி : புதினம் - vasisutha - 03-07-2004 "Karuna will be seen as a Pol Pot if he continues to act irresponsibly towards our people", said Mr. Sivagnanam Karikalan, one of the senior leaders in the East to arrive in Kilinochchi Sunday morning for discussions with his leadership about the situation in Batticaloa. Mr. Karikalan is a close confidante of Mr. Karuna, the eastern LTTE leader who was sacked from the Liberation Tigers Saturday on charges of treason. Several heads of divisions and commanders of the LTTE troops in the Batticaloa-Ampara district also arrived in Kilinochchi Sunday for consultations with the leader of the Liberation Tigers. Mr. Karikalan met the press briefly at the LTTE media coordinating office sunday noon. He charged that there were outside elements behind Mr. Karuna's decision to act traitorously. "Karuna's decision to betray us was a decision that he took on his own without consulting any of his colleagues and senior staff. He is trying to compell commanders and heads of divisions in the Batticaloa-Ampara district to accept his decision. He won't succeed. "Today none of the people in the Batticaloa-Amapara district are prepared to reject our national leader. I want to reiterate this point. Even at the recent Pongu Thamil festival in Batticaloa, thousands of our people carried photos of our national leader with the slogan 'Tamils are tigers. Tigers are Tamils', expressing their commitment to the Tamil national cause and to our national leadership" said Mr. Karikalan. |