Yarl Forum
நடப்பு அரசியல் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: நடப்பு அரசியல் (/showthread.php?tid=7366)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41


- Mathan - 03-27-2004

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் பற்றி பேராசிரியர் பாலசுந்தரம் பிள்ளையின் விளக்கத்தை இந்த முகவரியில் அறியலாம்.

http://www.webtamilan.com/election2004/pal...unrampillai.htm

நன்றி - வெப் தமிழன்


- vallai - 03-28-2004

அப்பு உவர் தான் நான் சொன்ன சூப்பி மண்ணெண்ணையெண்டும் சொல்லுறவை தான் யாழ்ப்பாணத்திலை நிண்டா தமிழ்க் கூட்டமைப்புக்கு ஒரு சீட்டு குறைஞ்சிடும் எண்டு கொழும்பிலை போய் நிண்டான் சீமான் சுட்டுப் போட்டார்

உந்த மாத்துக் கருத்துக் காரர் உதுக்கெல்லாம் குரல் கொடுக்க மாட்டினம் யதார்த்தவாதியளெண்டால் அற்லீஸ்ற் ஒரு வருத்தம் தன்னும் தெரிவிப்பினமெண்டால்
புலி எப்ப சுடும் எப்ப வாயைத் திறக்கலாம் எண்டு காத்திருக்கிறமலை விழுங்கி மகாதேவனோவை

இப்ப ரண்டு நாளைக்குள்ளை எவ்வளவு பிரச்சனை மட்டக்களப்பு G.A ஐச் சுட்டாங்கள் ஊர்காவல்துறையிலை பிஞ்சைக் கொண்டுபோய் கெடுக்க முயற்சி,மகேஸ்வரன் மேலை சூடு,ஈ.பி டீ பிக்காரன் மேலை சூடு நாடு எங்கை போகுது

இதிலை ஒண்டாவது புலி செய்ததெண்டு தெரிஞ்சா மாத்துக் கருத்துகளும்,யதார்த்தங்களும்,சோக்கிறட்டீசுகளும்,மார்க்ஸியங்களும் கொடுக்குக் கட்டிக் கொண்டு வெளிக்கிட்டிடுவினம் அர்ச்சனை வைக்கிரதுக்கு

உவன் எவன்ரையாவது வெப்சைட்டைப் போய்ப் பாருங்கோ உது எதையாவது கண்டிச்சிருக்காங்களோ எண்டு மாட்டாங்களே மாட்டாங்களே

வாய்ப் பேச்சில் வீரரடி கிளியே வாய்ப் பேச்சில் வீரரடி............


- Kanthar - 03-28-2004

சுடுறதாலை எந்த பிரச்சனையையும் தீர்க்கேலாது எண்டதைதான் அப்பவும் சொன்னான்: இப்பவும் சொல்லுறன்.
புலி சுட்டாதான் பிழை எண்டு இல்லை
வல்லை சுட்டாலும் பிழைதான்
வல்லேலை சுட்டாலும் பிழைதான்


- kuruvikal - 03-28-2004

அதென்ன புலி சுடுறதெண்டத தெளிவாச் சொல்லி மற்றதுகளை மறைத்துச் சொல்லுறியள்...1990 இல இருந்து தாடிக்காரக் கும்பல் கொழும்பில போடுற அட்டகாசம்...பொறுங்கோ எனி கொழும்பு அண்ட கிரவுண்ட் கங்கோடதான் இறங்க வேணும் போல....எல்லாம் ரணில் பாத்துப்பார்....!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- vallai - 03-28-2004

Kanthar Wrote:சுடுறதாலை எந்த பிரச்சனையையும் தீர்க்கேலாது எண்டதைதான் அப்பவும் சொன்னான்: இப்பவும் சொல்லுறன்.
புலி சுட்டாதான் பிழை எண்டு இல்லை
வல்லை சுட்டாலும் பிழைதான்
வல்லேலை சுட்டாலும் பிழைதான்

அண்ணையானை நீ சொன்னதுதான் சரி

புலி சுட்டால் என்ன தோசை சுட்டால் என்ன சுட்டது சுட்டதுதான் யதார்த்தம் யதார்த்தம் தான்

இப்ப சொல்லுவியள் எங்கப்பன் குதிருக்குள்ளை இல்லையெண்ட மாதிரி ஏனெண்டால் நான் சொன்னது சுட்டுப்போச்செல்லோ இனியென்ன எங்காத்துக்காரரும் கச்சேரிக்குப் போனார் எண்ட மாதிரி அறிக்கயளை அள்ளிவிடுங்கோ


- Mathivathanan - 03-28-2004

தேர்தல் காலத்திலை பசிக்கிறது கூடப்போலை.. கனக்கச் சுடுறாங்கள்.. சிஙகளவன் சுடுறதாக் கானேல்லை.. அப்பமோ.. தோசையோ.. தமிழன்தானே சுடுறான்.. சிங்கள்வங்கள் அவிச்சுத்தான் சாப்பிறாங்கள்...

சுட்டது யாரெண்டு கேட்டால் வடக்குத் திசையைக் காட்டுறான்.. அப்ப கேக்காமல் விட்டிட்டன்.. சுட்டது அப்பமா.. இல்லை தோசையா எண்டு..
என்னவோ..சாப்பாடு இருக்கு.. இருங்கோ.. கொஞ்சம் சாப்பிட்டிட்டுப்போகலாம்.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- vallai - 03-28-2004

இஞ்சாற்றா முதல் அறிக்கை
சிங்களவன் றொட்டி அவைச்சுத் தானே சாப்பிடுறவன்
கேட்டா வடக்கை காட்டுவான் வடக்கன் மாடு வாலைக்கிளப்பிக் கொண்டோடிச்சுதெண்டு


- Mathan - 03-28-2004

இந்தவாரம் சுடுபடும் வாரம் போல இருக்கு, ஒரே சுடுபாடா இருக்குது

1) கருணா மேல சூடு
2) கிழக்கு கம்பஸ் திருச்செல்வம் சூடு
3) மட்டக்கிளப்பு GA சூடு
4) மகேஸ்வரன் சூடு
5) ஈபிடிபி சங்கரன் சூடு


- Mathan - 03-28-2004

BBC Wrote:தமிழ் மக்களை பொறுத்தவரை மகேஸ்வரன் எப்படியான அரசியல்வாதி?

இதை பத்தி உங்க கருத்த சொல்லுங்க


- Eelavan - 03-28-2004

ம்ம் இப்பொழுதுதான் தேர்தல் "சூடு"பிடிக்க ஆரம்பித்திருக்கிறது


- Mathan - 03-28-2004

Eelavan Wrote:ம்ம் இப்பொழுதுதான் தேர்தல் "சூடு"பிடிக்க ஆரம்பித்திருக்கிறது

இன்னும் எத்தனை பேரை சூடு பிடிக்குதோ தெரியவில்லை. அது இருக்கட்டும் நீங்க மகேஸ்வரன் பத்தி கருத்தை சொல்லுங்க


- Eelavan - 03-28-2004

மகேஸ்வரன் பற்றி தெரியாது என்று சொல்ல விரும்பவில்லை
அவரை தமிழ் மக்களுக்கு ஒன்றுமே செய்யாதவர் என்று ஒதுக்கிவிடவும் முடியவில்லை அதே நேரம் அவரது அரசியல் வாழ்வு பற்றி பெருமைப்பட்டுக் கொள்ளவும் முடியவில்லை

ஈ.பி.டி.பியினரிடமிருந்து தனக்கு பாதுகாப்பு வேண்டும் என்று பவள் கவசவாகனமொன்றையே தன் வீட்டுக்கு காவலாக நிற்கச்செய்யுமளவுக்கு செல்வாக்கு உள்ளவர்

அரசியல்வாதிகளுக்குரிய எமது விளக்கத்தை வைத்துப் பார்த்தால் மகேஸ்வரன் சிறந்த "அரசியல்"வாதி


- Mathan - 03-28-2004

Eelavan Wrote:மகேஸ்வரன் பற்றி தெரியாது என்று சொல்ல விரும்பவில்லை
அவரை தமிழ் மக்களுக்கு ஒன்றுமே செய்யாதவர் என்று ஒதுக்கிவிடவும் முடியவில்லை அதே நேரம் அவரது அரசியல் வாழ்வு பற்றி பெருமைப்பட்டுக் கொள்ளவும் முடியவில்லை

ஈ.பி.டி.பியினரிடமிருந்து தனக்கு பாதுகாப்பு வேண்டும் என்று பவள் கவசவாகனமொன்றையே தன் வீட்டுக்கு காவலாக நிற்கச்செய்யுமளவுக்கு செல்வாக்கு உள்ளவர்

அரசியல்வாதிகளுக்குரிய எமது விளக்கத்தை வைத்துப் பார்த்தால் மகேஸ்வரன் சிறந்த "அரசியல்"வாதி

எனக்கு உண்மையிலேயே மகேஸ்வரன் பற்றி நிறைய தெரியாது. சிலர் அவர் வர்த்தகர்தான் என்றும் வடக்கில் ஏற்பட்ட அரசியல் வெற்றிடத்தை பயன்படுத்தி அரசியலில் புகுந்தவர் என்றும் அவருக்கு அரசியல் பாரம்பரியம் கிடையாது என்றும் குற்றம் சாட்டுகின்றார்கள். வேறு சிலர் அவர் திடீர் என்று அரசியலுக்கு வந்தாலும் மற்றய தமிழ் அரசியல் கட்சிகளை விட நன்றாக செயற்பட்டவர் என்றும் அவருடைய தந்தையும் ஒரு அரசியல்வாதி என்று சொல்கின்றார்கள்,

நீங்கள் சொல்லியது போல அவருக்கு நிறைய செல்வாக்கு உண்டு என்றுதான் நானும் அறிந்தேன். ஆனால் அவருடைய செல்வாக்கு மக்கள் பிரைச்சனையை தீர்ப்பதில் இராணுவத்தின் மேல் செல்லுபடியாகவில்லையே. ஏதோ சாலை மறியல் எல்லாம் செய்தார். அது அரசியல் ஸ்டண்டா அல்லது உண்மையா?

எது எப்படியோ பாதுகாப்பற்ற ஒரு சூழ்நிலையில் யாழ்ப்பாணத்தில் நின்று வென்றார். அந்த தேர்தல் தீவுப்பகுதி தேர்தல் போல் அல்ல என்று நான் நினைக்கின்றேன். யாராக இருந்தாலும் சங்கரியாக இருந்தாலும் கூட நியாயமான தேர்தலில் வென்றால் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.


- Mathan - 03-28-2004

[size=18]இந்தமுறை தேர்தலில் தமிழ் மக்களின் (மலையகம் நீங்கலாக) வோட்டு யாருக்கு? உங்கள் கருத்தை தெரியப்படுத்துங்கள். மேலே உங்கள் ஓட்டை போடுங்கள்


- Mathan - 03-28-2004

புலிகளின் தற்போதைய நிலைமை பற்றி டெய்லி மிரர் வெளியிட்ட கார்ட்டூன்

<img src='http://www.dailymirror.lk/2004/03/29/imgs/cartoonl.gif' border='0' alt='user posted image'>

நன்றி - டெய்லி மிரர்


- yarl - 03-28-2004

கொழும்பு கார்ட்டுhனிஸ்டுகளுக்கு கொண்டாட்டம்.வேறென்னத்தை சொல்லமுடியம்?
பி.கு நன்றாகவே வரைகிறார்கள்


- Mathan - 03-28-2004

யாழ்/yarl Wrote:கொழும்பு கார்ட்டுhனிஸ்டுகளுக்கு கொண்டாட்டம்.வேறென்னத்தை சொல்லமுடியம்?

உண்மைதான். அவர்களுக்கு இதில் ஒரு சந்தோசம். வெறும் வாயை மென்றவர்களுக்கு அவல் கிடைத்த மாதிரி.


- Eelavan - 03-29-2004

இப்போதுதான் சிரித்திரன் சுந்தரின் வெற்றிடம் புரிகிறது


- Mathan - 03-29-2004

வேறு யாராவது நம்மிடையே கார்டூனிஸ்ட் இருக்கின்றார்களா?


- Mathan - 03-29-2004

மேலே தற்சமயம் சங்கரிக்கும் ஒரு ஓட்டு விழுந்துள்ளது.