![]() |
|
நடப்பு அரசியல் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: நடப்பு அரசியல் (/showthread.php?tid=7366) |
- Mathan - 03-25-2004 Mathivathanan Wrote:BBC Wrote:தந்திரோபாயம்தான் அடிக்கடி மாறுதே.. நரம்பில்லா நாக்கிலை சுழலுதே..BBC Wrote:Mathivathanan Wrote:Eelavan Wrote:கடந்த தேர்தலுக்கு முந்திய தேர்தல் 95 இலா வந்தது அடிக்கடி தேர்தல் வருவதால் மறந்துவிட்டதுஅதுதான் குடுத்திட்டு ஓடினவங்களைக் கேளுங்கோவன். ஊடகங்கள் பிரைச்சனைதான் இப்போது பெரும் பிரைச்சன்னையாகிவிட்டது. எனக்கு யாராவது ஒருத்தர் எது நல்ல ஊடகம் என்று சொல்லுங்கள் - Eelavan - 03-25-2004 நிலம் நீர் என்று ஒரு ஊடக வாழியாக இருந்தால் கஷ்டம்தான் தவளை மாதிரி ஈரூடக வாழியாக இருந்தால் பிரச்சனை இல்லை - Mathan - 03-25-2004 Eelavan Wrote:நிலம் நீர் என்று ஒரு ஊடக வாழியாக இருந்தால் கஷ்டம்தான் தவளை மாதிரி ஈரூடக வாழியாக இருந்தால் பிரச்சனை இல்லை என்ன சொல்கின்றீர்கள் புரியவில்லை. உங்கள் பார்வையில் எது நல்ல ஊடகம்? - Eelavan - 03-25-2004 லங்காபுவத் அவர்கள் மட்டும் தான் அடிக்கடி மாறாமல் ஒன்றையே சொல்பவர்கள் - Mathan - 03-26-2004 Eelavan Wrote:லங்காபுவத் அவர்கள் மட்டும் தான் அடிக்கடி மாறாமல் ஒன்றையே சொல்பவர்கள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - adipadda_tamilan - 03-26-2004 Eelavan Wrote:லங்காபுவத் அவர்கள் மட்டும் தான் அடிக்கடி மாறாமல் ஒன்றையே சொல்பவர்கள் -------------------------- சரியாச் சொன்னியள் ஈழவன். இந்த தலைப்பு வரும்போது நானும் அதைத்தான் நினைத்தேன்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll: - Mathan - 03-26-2004 பொதுவாக அனைத்து ஊடகங்களுக்குமே அவற்றின் எஜமானர்களின் விருப்பு வெறுப்பு ஏற்படத்தான் இயங்குகின்றன. ஊடகங்கள் பற்றி பேசும்போது இதோ கருணாவுக்கு ஆதரவாக இயங்கிய தமிழ் அலை பத்திரிகை பற்றி ஒரு செய்தி ... தமிழ் அலை பத்திரிகையில் பிளவு? வெள்ளிக்கிழமை, 26 மார்ச் 2004, 18:45 தமிழ் அலை எழுத்தாளர்கள் சிலரும் விடுதலைப் புலிகள் போராளிகள் சிலரும் அப்பத்திரிகையில் தமது கருத்தை வெளிக்கொணர முயன்றதாகவும் அம்முயற்சி அச்சகத்திற்குப் போவதற்கு முன்னதாக கருணா குழுவினரால் தடுக்கப்பட்டதாகவும் அறியப்படுகிறது. தமிழ் அலை நிழற்பதிப்பு என்ற பெயரில் ஒட்டப்பட்டிருந்த கவிதைச் சுவரொட்டிகளும் இன்று அதிகாலை கிழித்தெறியப்பட்டதாக மட்டக்களப்பிலிருந்து இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. நன்றி - புதினம் - Mathan - 03-27-2004 ஜோசப் பரராஜசிங்கத்தை தேர்தலில் இருந்து விலகுமாறும் கருணா ஏச்சரித்துள்ளதாக ஆங்கில செய்தி ஒன்று கூறுகின்றது. தேர்தலில் போட்டியிடும் ஒருவரை துப்பாக்கி முனையில் தேர்தலில் இருந்து விலக சொல்வது நியாயமா? கருணாவின் இந்த நடவடிக்கை பற்றி உங்கள் கருத்து என்ன? - Mathan - 03-27-2004 BBC Wrote:ஜோசப் பரராஜசிங்கத்தை தேர்தலில் இருந்து விலகுமாறும் கருணா ஏச்சரித்துள்ளதாக ஆங்கில செய்தி ஒன்று கூறுகின்றது. தேர்தலில் போட்டியிடும் ஒருவரை துப்பாக்கி முனையில் தேர்தலில் இருந்து விலக சொல்வது நியாயமா? கருணாவின் இந்த நடவடிக்கை பற்றி உங்கள் கருத்து என்ன? இந்த செய்தி தமிழ் நெட்டிலும் வந்துள்ளது. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=11567 - Mathivathanan - 03-27-2004 BBC Wrote:இதுதான் முதலாவது கேஸ் மாதிரி அபிப்பிராயம் கேட்கிறியள்..BBC Wrote:ஜோசப் பரராஜசிங்கத்தை தேர்தலில் இருந்து விலகுமாறும் கருணா ஏச்சரித்துள்ளதாக ஆங்கில செய்தி ஒன்று கூறுகின்றது. தேர்தலில் போட்டியிடும் ஒருவரை துப்பாக்கி முனையில் தேர்தலில் இருந்து விலக சொல்வது நியாயமா? கருணாவின் இந்த நடவடிக்கை பற்றி உங்கள் கருத்து என்ன? நம்ம தமிழாக்கள் பலரும் போட்டியிலிருந்து தாங்கள் வாபஸ் வாங்குவதாக அறிவித்தார்களே.. அதெல்லாம் என்னவெண்று நினைக்கிறீர்கள்.. ஏன் மட்டக்களப்பில் வேட்பாளர் ஒருவர் சுடப்பட்ட செய்தி வெளிவந்ததே.. அது என்னவென்று நினைக்கிறீர்கள்.. எல்லாமே அதுதான்.. அதாவது இக்களத்தில் கருத்தாடும் சிலரின் கூற்றுப்படி சன நாய் அகம்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Mathan - 03-27-2004 Mathivathanan Wrote:BBC Wrote:இதுதான் முதலாவது கேஸ் மாதிரி அபிப்பிராயம் கேட்கிறியள்..BBC Wrote:ஜோசப் பரராஜசிங்கத்தை தேர்தலில் இருந்து விலகுமாறும் கருணா ஏச்சரித்துள்ளதாக ஆங்கில செய்தி ஒன்று கூறுகின்றது. தேர்தலில் போட்டியிடும் ஒருவரை துப்பாக்கி முனையில் தேர்தலில் இருந்து விலக சொல்வது நியாயமா? கருணாவின் இந்த நடவடிக்கை பற்றி உங்கள் கருத்து என்ன? இது முதல் சம்பவம் இல்லை என்பதும் வடக்கு கிழக்கு வேட்பாளர்களுக்கு பொதுவாக அச்சுறுத்தல் உள்ளது என்பது உண்மைதான். - Mathan - 03-27-2004 ஐக்கிய தேசிய கட்சி கூட்டணியால் மட்டுமே புலிகளுடன் பேசமுடியும் என்று ரணில் சொன்னதை வத்து கொழும்பு பத்திரிகை ஒன்று வெளியிட்ட கேலிச் சித்திரம். <img src='http://www.dailymirror.lk/2004/03/27/imgs/cartoonl.jpg' border='0' alt='user posted image'> நன்றி - டெய்லி மிரர் - Mathan - 03-27-2004 BBC Wrote:Mathivathanan Wrote:BBC Wrote:இதுதான் முதலாவது கேஸ் மாதிரி அபிப்பிராயம் கேட்கிறியள்..BBC Wrote:ஜோசப் பரராஜசிங்கத்தை தேர்தலில் இருந்து விலகுமாறும் கருணா ஏச்சரித்துள்ளதாக ஆங்கில செய்தி ஒன்று கூறுகின்றது. தேர்தலில் போட்டியிடும் ஒருவரை துப்பாக்கி முனையில் தேர்தலில் இருந்து விலக சொல்வது நியாயமா? கருணாவின் இந்த நடவடிக்கை பற்றி உங்கள் கருத்து என்ன? இப்போது கிழக்கில் வேட்பாளர் ராஜன் சத்தியமூர்த்தியை முன்னிலைப்படுத்துமாறு கருணா தரப்பு கேட்டுள்ளதாக செய்திகளை பார்த்தேன். இதே ராஜன் சத்தியமூர்த்தியை மக்கள் நிராகரிப்பார்கள் என்று தமிழ்செல்வன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இது பற்றி உங்கள் கருத்து? - Mathivathanan - 03-27-2004 BBC Wrote:தேர்தலிலை நிக்க வைக்கிறதும் அவைதான்.. பிறகு அவருக்குப் போடமாட்டார்கள் எண்டு சொல்லுறதும் அவைதான்.. யார் வெண்டாலென்ன.. தோற்றாலென்ன.. எல்லாம் அவை பட்டபாடு.. பொதுமக்கள் உதுக்குள்ளை மாட்டுப்படாமல் தப்பினால் அது போதும் எனக்கு..BBC Wrote:இப்போது கிழக்கில் வேட்பாளர் ராஜன் சத்தியமூர்த்தியை முன்னிலைப்படுத்துமாறு கருணா தரப்பு கேட்டுள்ளதாக செய்திகளை பார்த்தேன். இதே ராஜன் சத்தியமூர்த்தியை மக்கள் நிராகரிப்பார்கள் என்று தமிழ்செல்வன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இது பற்றி உங்கள் கருத்து?Mathivathanan Wrote:இது முதல் சம்பவம் இல்லை என்பதும் வடக்கு கிழக்கு வேட்பாளர்களுக்கு பொதுவாக அச்சுறுத்தல் உள்ளது என்பது உண்மைதான்.BBC Wrote:இதுதான் முதலாவது கேஸ் மாதிரி அபிப்பிராயம் கேட்கிறியள்..BBC Wrote:ஜோசப் பரராஜசிங்கத்தை தேர்தலில் இருந்து விலகுமாறும் கருணா ஏச்சரித்துள்ளதாக ஆங்கில செய்தி ஒன்று கூறுகின்றது. தேர்தலில் போட்டியிடும் ஒருவரை துப்பாக்கி முனையில் தேர்தலில் இருந்து விலக சொல்வது நியாயமா? கருணாவின் இந்த நடவடிக்கை பற்றி உங்கள் கருத்து என்ன?இந்த செய்தி தமிழ் நெட்டிலும் வந்துள்ளது.http://www.tamilnet.com/art.html?catid=13&artid=11567 :!:
- Mathan - 03-27-2004 <img src='http://www.thinakural.com/2004/March/27/moorthy.gif' border='0' alt='user posted image'> இனவாதத்தை வெளிப்படுத்துவதில் என்ன ஒரு போட்டி? நன்றி - தினக்குரல் - Mathan - 03-27-2004 <b>துரோகி கருணாவே! உன் பழி தீர்க்க இதுவா தருணம்</b> விடுதலை விரோத சக்திகளுக்கு விலைபோன கருணாவே! விடுதலைப்போராளிகளின் விலைமதிக்க முடியாத உயிர்த்தியாகங்களால் விடுவிக்கப்பட்ட தமிழர் தாயகப்பிரதேசத்தை விலைகூறி விற்கத்துணிந்த நோக்கமென்ன? மட்டு-அம்பாறை மக்கள் போராளிகள் செய்த மகத்தான தியாகங்கள் அர்ப்பணிப்புக்களால் கேணல் பதவி உயர்வுபெற்ற கருணாவே! உன் கோணல் புத்தியினால் மாவீரர் கனவை மறந்த காரணமென்ன? விடுதலைப்போராட்டம் நீதியானது என்றுதானே நீயும் எம்முடன் நின்றாய் தேசியத் தலைவன் நியாயத்துக்காகப் போராடுகின்றான் என்றுதானே நீயும் எங்களுக்குச் சொன்னாய். தமிழ்த்தேசியத்தை அழிக்க முனையும் தேசவிரோத சக்திகளின் அநியாயத்தை அழிப்போம் என்றுதானே நீயும் எம்மை அணிதிரட்டினாய் அநீதிகளை நாம் அழிப்போம் என்றுதானே எம் அணியிலும் நீர் சேர்ந்துக்கொண்டாய். அவநம்பிக்கையை, சந்தேகத்தை உன்னில் எப்போது விதைத்துக்கொண்டாய். இல்லை, இல்லை சந்தேகம் இல்லை, அவநம்பிக்கை இல்லை உனக்குப்பின்னால் ஒரு சக்தி இருக்கிறது அது உன்னை இயக்குகிறது அந்த அந்நிய சக்தி உன்னை ஆக்கிரமித்து விட்டது அது சொல்லுகிறபடியெல்லாம் நீ செய்கிறாய் அதன் தாளத்துக்கெல்லாம் நீ ஆட்டம் போடுகின்றாய். உன் சுயநலனுக்காய் நீ இப்படிச் செய்வது உனக்குச் சொகுசாக இருக்கிறதா? உன் சொந்த குடும்ப நலனுக்காய் ஆயிரக்கணக்கான அப்பாவிப்போராளிகளை அநியாயமாக அடையாளம் தெரியாமலே அழித்துவிடத் துணிந்துவிட்டாயே! இதுவும் உனக்கு அகமகிழ்வாய் இருக்கிறதா? உன்சுய கௌரவத்தைப் பாதுகாக்க உனது ஊழல்களை மூடி மறைத்து உன்னை நிரபராதியாக உலகுக்குக்காட்ட உன்னை அறியாமலே நீ கொடுத்த அறிவிப்பினால் உலகமே ஒரு கணம் அதிர்ந்தது உலகத்தமிழர்களெல்லாம் கண்ணீர் வடித்தார்கள் ஒவ்வொரு வீடும் இழவு வீடானது சோகத்தில் கண்ணீர் குருதியாய் கசிந்தது சோற்றுக்கவளம் தொண்டைக்குழியால் செல்ல மறுத்தது. நீ அடித்த அடி உலகத்தமிழன் எல்லோர் முதுகிலும் வலித்தது என்பதை நீ அறிவாயா? துரோகி கருணாவே! உன் பழி தீர்த்துக்கொள்ள இதுவா தருணம்? கேட்டவர்கள் எல்லோரும் காறி உமிழ்கின்றனரே! எதிரிகள் எல்லோரும் எக்காளமிட்டுச் சிரிக்கின்றனரே! சமாதானம் கைகூடும் வேளையில் சதிவேலை செய்து விட்டாயே! சண்டாளக் கருணாவே! என்று சபித்து நிற்கிறதே! உலகம் என்பதும் உனக்குத் தெரிறதா? தேசியத் தலைவன் ஆயிரம் பேரை அனுப்புமாறு ஆணையிட்டதாக அப்பட்டமான பொய்யை நாகூசாமல் ஏன் சொன்னாய்? உன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை மூடி மறைத்துக்கொள்ளச் சிறந்த ஆயுதம் பிரதேசவாதம் என்றா நினைத்தாய்? பிரதேசவாதத்தை து}க்கிப்பிடித்து உன் பதவி நிலையைத் திரும்பவும் பெற்றுத்தர வேண்டும் என்று பகல் கனவு காண்கின்றாயா? ஓவ்வொரு போராளிக்கும் பயிற்சி முடித்து உறுதியுரை வாசித்துக் கையொப்பம் வாங்கினாயே! நினைவிருக்கிறதா? அந்த உறுதியுரையில் என்ன எழுதியிருந்தது என்று படித்துப்பார்த்தாயா? அல்லது வாசிக்கும்போது செவிமடுத்துக் கேட்டிருக்கின்றாயா? புனிதமான எமது இயக்கத்துக்கு மாசுகற்பிக்க முனைந்தால், அல்லது இயக்கத்தில் இருந்து பிரிந்து சென்று புது இயக்கம் காணப்புகுந்தால் இயக்கத்தின் அதிஉயர் ஒறுப்பான சாவொறுப்பு வழங்கப்படும். என்றுதானே! நீயும் உன்னோடு நிற்கும் போராளிகளும் கையொப்பமிட்டார்கள். தேசியத்தலைவன் ஆயுதப்போரை ஆரம்பித்து வைத்ததே! தேசத்துரோகி துரையப்பாவைச் சுட்டுக் கொன்றுதான் என்றுதானே! போராளிகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தாய். நீயும் துரோகியாக மாறிவிட்டால் தண்டனை நிட்சயம் என்று உனக்கும் தெரியும் தானே! பலாத்காரமாய் மக்களைப்பிடித்து ஊர்வலம் நடாத்தி, உண்ணாவிரதம் இருத்தி உன்னை மீண்டும் பதவியில் அமர்த்துமாறு கூப்பாடு போடுகின்றாயே! நீயாகவே விலகுவதாக அறிவித்துவிட்டு இயக்கம் உன்னை விலக்கிய பின்பும் மக்களை ஏன் குழப்புகின்றாய்? தேசியத்தலைவனை கடவுளாக மதிக்கின்றேன் என்று கடிதம் எழுதிவிட்டு ஆயுத முனையில் ஆட்களைத் திரட்டி நீ கடவுள் எனக் குறித்த தலைவனின் படத்தை வெட்டிக் கிழித்துக் கேவலப்படுத்தினாயே! மக்கள் மத்தியில் வேசம் போடுகின்றாயா? துரோகத்தனத்தைப் புலிகள் அமைப்பில் அனுமதிக்க முடியாது என்றுதானே நீயும் துரோகிகளை அழிப்பதில் முன்னணித் தளபதியாக முன்நின்று செயல்பட்டாய். தலைவனின் ஆணையில்லாமலே தன்னிச்சையாகவே முடிவெடுத்து நீ செய்த படுகொலைகள் எத்தனை? துரோக இயக்கமென்று நீ துரத்தித் துரத்திச் சுட்ட துரோகிகள் எத்தனை பேர்? துரோக இயக்கத்தில் இருந்து உன்னைக் கொன்றொழிக்க அத்துருகிரிய இராணுவத்தளத்தில் ஆழ ஊடுருவித்தாக்கும் அணியில் செயல்பட்ட புளொட் மோகன் உனக்கு எப்போது மைத்துனன் ஆனான். புளொட் மோகனால் கொல்லப்பட்ட நீ நேசித்த நிசாமும், மனோவும் உனக்கு உதவி செய்த மக்களும் உன் கட்டளையின் பேரில்தான் கொல்லப்பட்டார்களா? எப்போது இந்தப் புளொட் மோகன் உனக்குத் துணைவன் ஆனான் என்று எமது மக்களுக்குச் சொல்லுவாயா? மட்டக்களப்பிலே மாற்று இயக்கத் துரோகிகள் மக்களைத் துன்புறுத்துகின்றார்கள் என்றுதானே! மகத்தான தியாகமாய்க் கரும்புலிகளை அனுப்பித் தாக்குதல் நடாத்தி மக்களின் பாராட்டையும் பெற்றாய். அந்தக் கரும்புலிப் போராளியின் மகத்தான தியாகத்தை உன் துரோகத்தனத்தோடு ஒருகணம் ஒப்பிட்டுப் பார்த்தாயா? மட்டக்களப்பு-அம்பாரை மாவட்டத்தி;ல் திட்டமிட்ட குடியேற்றத்தைத் தவிர வேறு எந்தப் பிரச்சனையும் இருக்கவில்லையா? உனக்கு. பதினேழு ஆண்டுகளாய் மட்டு-அம்பாரையில் நீ புரிந்த போர் யாருக்கு எதிராக என்று நீ எமது மக்களுக்குச் சொல்லுவாயா? தமிழர் தாயகம் என்பதே தலைவனின் மூச்சு வடக்கு-கிழக்கு எனப் பிரிப்பது அர்த்தமற்ற பேச்சு புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் என்றுதானே நீ விலகும்வரை உன்னுடைய மூச்சாக இருந்தது. மட்டு-அம்பாறையை நீ பொறுப்பொடுத்து இப்போ ஆண்டுகள் பதினேழு இந்தப் பதினேழு ஆண்டுகளாய் நீ போராளிகளுக்குச் சொல்லிக் கொடுத்தது 'புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்" களமுனைப் போராளிகளுக்கு நீ செல்லிக்கொடுத்த வாசகம் 'எங்கும் செல்வோம் எதிலும் வெல்வோம்" பொதுமக்களுக்கு நீ பொங்கு தமிழில் சொல்லிக் கொடுத்தது புலிகளே! தமிழர் தமிழரே! புலிகள். அவர்கள் கையில் ஏந்த வைத்தது உலகம் வியக்கும் தேசியத் தலைவனின் உருவப்படம். தமிழ் மக்கள் தங்களுக்குள் சொல்லிக் கொண்டது 'தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்" உனக்குப் பிரச்சனைகள் இருக்கவில்லையென்றால் ஏன் இவ்வாறு மக்களையும் போராளிகளையும் தயார்படுத்தினாய்? பதினேழு ஆண்டுகளாய் மட்டு-அம்பாறையில் நீ தானே கோலோச்சினாய் சிற்றரசனாகப் படை நகர்த்தினாய் சிங்களப்படைக்குச் சிம்ம சொற்பனமானாய் nஐயசிக்குறுவை nஐயித்தாய் தலைவனுக்கு அடுத்த தளபதியாய் தரம் உயர்ந்தாய் இத்தனையும் இருந்தபோது நீ இப்போது கேட்பவற்றை ஏன் அப்போது கேட்க மறந்தாய்? சண்டையில்லாமல் சமாதானம் வந்போது உன் மனைவி பிள்ளைகளுக்கென்ன உயிர்ப்பயம் மலேசியாவில் குடியமர என்ன தேவை? உன் மன்மதலீலைகளுக்கு மறுப்புத் தெரிவிக்கக்கூடாது என்றா மலேசியாவுக்கு அனுப்பிவைத்தாய். நீ குறிப்பிட்ட அத்தனை மாவீரர்களும் தமிழ்த் தேசியத்துக்காய் தமிழீழத் தமிழ் பேசும் மக்களுக்காய், தமிழீழ மண்ணுக்காய், தமிழ் தேசியத்தலைவனை நெஞ்சினில் சுமந்து புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் எனும் உணர்வினை ஊட்டித்தானே படைநகர்த்தி அத்தனை போராளிகளையும் தங்கள் இன்னுயிரை ஈகம் செய்ய வைத்தாய். மட்டு-அம்பாறையில் நீ உடைத்த தொழிற்சாலைகள் எத்தனை? அபிவிருத்தியில் அக்கறை கொள்ளும் நீ இப்போது சிந்திப்பதை அப்போதே சிந்தித்திருக்கலாமே! அபிவிருத்தி செய்யவென அரசாங்கத்தோடு சேர்ந்த அறிவாளிகள் எத்தனைபேரை நீயே அழித்தொழித்தாய் இப்போது உனக்குத் தமிழீழம் கனவாகத் தெரிகிறதா? வீட்டுக்கொரு வீரனை விரைவாக எடுத்துத்தா என்று வேகமாய் செயல்பட்டாயே இப்போ அந்த வீரர்களெல்லாம், உன் சுயநலனுக்காய், உன் சுய பலவீனத்தை மூடிமறைப்பதற்காய், உன் ஊழல் மோசடிகளைத் திசை திருப்புவதற்காய், ஒரு சகோதர யுத்தத்திற்குத் தயாராக காவலரண்களில் காத்து நிற்கின்றார்களே! அத்தனை அப்பாவிப் போராளிகளையும் ஒரு சகோதர யுத்தத்தில் பலியாக்கி விடுவதுதான் உன் அடுத்தகட்ட மாவட்டத்தின் மாபெரும் அபிவிருத்தியின் அங்கமாக இருக்கப்போகின்றதா? பேச்சுவார்த்தைக்குச் சென்று உன் புகழை உலகமெல்லாம் பரவச் செய்த அந்த உலகத்தமிழர்களின் உள்ளத்தில் பலமான உதை கொடுத்துவி;ட்டாயே! உன்னோடு நின்று புகைப்படமெடுத்த பன்னாட்டுத் தமிழர்களெல்லாம் காறி உமிழ்ந்து உன்படத்தை வெட்டிக்கிழித்து சுக்குநு}றாக்கித் தங்களின் ஆத்திரத்தை தீர்த்துக்கொள்வது உனக்குத் தெரிகின்றதா? உன்னை வரவேற்று உபசரித்து உணவு தந்த தமிழரெல்லாம் இப்படிப்பட்ட ஒரு நச்சுப்பாம்பான துரோகி கருணாவுக்கா இத்தனை வரவேற்புச் செய்தோம் என்று வாய்புலம்புவது உனக்குக் கேட்கிறதா? இத்தனை வஞ்சகத்தையும் நெஞ்சினில் புதைத்து வைத்துக் கொண்டுதான் தேசியத் தலைவனின் புகழ்பாடிக் களமுனைகளின் கதைகள் சொல்லி மக்களின் பாராட்டைப்பெற்று தமிழன் வரலாற்றிலேயே மாபெரும் துரோகியாகினாயா? உன் மாபெரும் துரோகத்தனத்தைப் பார்த்தும் மனம் கலங்காது இன்னும் சிரித்துக்கொண்டே நிமிர்ந்து நின்று உனக்கு மன்னிப்பு வழங்குவதாக உலகுக்கு அறிவித்திருக்கும் உன் கடவுள் என்று நீ உதட்டால் கூறிய தேசியத் தலைவனின் கம்பீரமான தோற்றத்தைப் பார்த்தாயா? போதிமரத்தின் கீழ் ஞானம் பெற்ற புத்தனைப்போல் உனக்கும் சிங்கள ஆமியுடன் சேர்ந்து புதிய ஞானம் பிறந்திருக்கின்றதா? இந்த ஞானம் உன் பயத்தினால் பிறந்த ஞானம், உன் சிற்றின்ப பாலியல் பயத்தினால் பிறந்த ஞானம், உன் சுயநலத்தினால் நீ செய்த மோசடியில் பிறந்த ஞானம், உன்மீது உலகம் வைத்திருந்த அதீத நம்பிக்கையும்,மதிப்பும் சரிந்துவிடப்போகின்றதே என்ற பயத்தினால் பிறந்த ஞானம் என்பதை உலக மக்கள் தெட்டத் தெளிவாக புரிந்துவிட்டனர் என்பதை நீ அறிவாயா? ஈழத்தமிழினம் ஏகோபித்த தேசியத் தலைவனின் கீழ் எழுச்சிகொண்டு தங்கள் உரிமையைக் கோருகின்றது என்பதை நீ ஏற்றுக் கொள்ளவில்லையா? அப்படியென்றால் nஐயசிக்குறு படையை நீ ஏன் எதிர் கொண்டு போராடினாய்? தலைவனுக்கு ஆபத்து வந்தால் நெஞ்சைக் கொடுத்துப் போராடுவோம் என்று ஏன் போராளிகளுக்கு உணர்வூட்டினாய்? நீ குறிப்பிட்ட அந்த ஆயிரக்கணக்கான மாவீரர்;களையும் ஏன் ஆகுதியாக்கினாய்? nஐயசிக்குறு படையை நீ எதிர்க்காமல் அனுமதித்திருந்தால் உன் எண்ணத்தில் பாதி நிறைவேறியிருக்குமே! எப்போது இந்தப் புதிய ஞானம் உனக்குள் புகுந்தது? உன் சுயநலம் மேலோங்கியபோதா? நீ குற்றவாளியென்று ஒரு சாதாரணபோராளியும் உன்னைச் சந்தேகித்தபோதா? அல்லது நீ இல்லையென்றால் தமிழீழப் போரை நடத்த முடியாது என்னும் மமதையை, இறுமாப்பை உன்னுள் நீயே உருவாக்கிக் கொண்டபோதா? எப்போது என்று எமது மக்களுக்கும் போராளிகளுக்கும் செல்லுவாயா? இதனால்தான் நாங்கள் உனக்குக்கூறிய ஆலோசனைகள் அறிவுரைகள் எல்லாமே உன் செவிகளில் பழுக்கக் காய்ச்சிய நாரசம்போல் இருந்ததா? நீ எடுத்த முடிவை இறுதிவரைக்கும் நிறைவேற்றிவிடத் துடியாய்த்துடித்த அவசரம் இப்பொழுதுதான் எமக்கும் புரிகின்றது. எமது போராட்ட வடிவம் புதிய பரிமாணத்தில் அடியெடுத்து வைத்துள்ளபோது அதனை உதைத்துத்தள்ளிச் சிதைத்துவிட்டால் போராட்டத்தைத் திசை திருப்பி ஆரம்ப நிலைக்குக் கொண்டுபோய் அழித்துவிடலாம் என்றா ஆலோசனை கூறியிருக்கின்றாய். இந்த ஆலோசனைக்கு நீ பெற்றுக்கொண்ட வெகுமதித் தொகை எவ்வளவு? என்பதை எமது மக்களுக்கும் போராளிகளுக்கும் சொல்லுவாயா? இல்லையென்றால் நீ தாயகக் கோட்பாடு பற்றிக் கவலைப்படாமல் இருக்கக் காரணம் இல்லையே? இருபத்திநான்கு வருடங்களாய் புலிகள் இயக்கத்தில் இயங்கிவந்த கருணா இன்று தனிமனிதனாக்கப்பட்டு இவர் இப்போது விநாயகமூர்தி முரளிதரன் ஆக்கப்பட்டுள்ளார். இவரது தனிப்பட்ட பலவீனம் இந்த நிலையை ஏற்படுத்திவிட்டது. மாவீரர்களின் அளவிடமுடியாத அர்ப்பணிப்பும் தியாகமும் இவருக்கும் நிட்சயம் தண்டனை வழங்கியே தீரும். தாயகத்திலிருந்து - சீனா கானா நன்றி - தமிழ் நாதம் இந்த கவிதை பற்றிய உங்கள் கருத்துக்கள் ஏதும் இருந்தால் எழுதுங்கள் - Mathan - 03-27-2004 ஐக்கிய தேசிய கட்சி எம்பி மகேஸ்வரன் சுடப்பட்டதாக அறிந்தேன். ஆனால் செய்தியை உறுதிப்படுத்த முடியவில்லை. தெரிந்தவர்கள் தகவல் தாருங்கள் - AJeevan - 03-27-2004 <span style='font-size:25pt;line-height:100%'>மட்டககளப்பு அரச அதிபர் ஆர்.மௌனகுரு இனந் தெரியாதவர்களால் பிள்ளாயாரடி பகுதியில் வைத்து துப்பாக்கியால் சுடப்பட்டு கொழும்புக்கு, ஹெலிகொப்படர் மூலம் கொண்டு செல்லப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் சத்திர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு தழும்பல் நிலையில் இருப்பதாக BBC News கூறுகிறது.</span> - AJeevan - 03-27-2004 BBC Wrote:ஐக்கிய தேசிய கட்சி எம்பி மகேஸ்வரன் சுடப்பட்டதாக அறிந்தேன். ஆனால் செய்தியை உறுதிப்படுத்த முடியவில்லை. தெரிந்தவர்கள் தகவல் தாருங்கள் [size=15]ஐக்கிய தேசிய கட்சி எம்பி மகேஸ்வரன் கொட்டாஞ்சேனையின் ஜிந்துபிட்டியில் வைத்து சுடப்பட்டுள்ளதுடன், அவரை துப்பாக்கியால் சுட்டவர், மகேஸ்வரனது பாதுகாப்பு அதிகாரிகளால் சுடப்பட்டு கொல்லப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. தற்போது மகேஸ்வரன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அத்துடன் (JVP) சோமவன்ச தமது கூட்டணி பதவிக்கு வந்தால் சுயாட்சியை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை எனவும் , தாம் புதிதாக மீண்டும் விடுதலைப் புலிகளின் இரு பகுதிகளுடன் பேச்சு வார்த்தைகளை தொடரப் போவதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். - Mathan - 03-27-2004 மகேஸ்வரன் மீதான தாக்குதல் பற்றி உங்கள் கருத்து என்ன? தமிழ் மக்களை பொறுத்தவரை மகேஸ்வரன் எப்படியான அரசியல்வாதி? |