Yarl Forum
புலம் பெயர் தமிழ் மக்களால் தமிழ் சமூகம் முன்னேற்றம்????? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34)
+--- Thread: புலம் பெயர் தமிழ் மக்களால் தமிழ் சமூகம் முன்னேற்றம்????? (/showthread.php?tid=4285)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13


- aswini2005 - 06-07-2005

shiyam Wrote:இடையிலை புகுந்ததற்கு மன்னிக்கவும் மாதவியொன்றும் விபச்சாரியல்ல தேவதாசி குடும்பத்தில் பிறந்தவள் வெறும் நாட்டிய காரியே கண்ணகியை விட கோவலனில் அதிக அன்பு செலுத்தியது மாதவியே என்று நான் சொல்லவில்லை சிலப்பதிகாரம் சொல்லுது அஸ்வினி குருவி தொடருங்கள் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
மாதவியென்ற பெயரே இந்த மனிதரின் கண்ணில் விபச்சாரிதான். அன்புசெலுத்தியவளை அடிமையாக்கித் தனதாக்கிய கோவலனெல்லாம் இந்தக் குருவியின் வீரசாதனையாளர்கள்.

விபச்சாரி என்றால் இவர்களின் அகராதிப்படி ஆண் பெண் நட்புக்கூட அப்படித்தான் ஆகிறது.

நாட்டியம் என்பதே விபச்சாரிகளின் தொழிலென்ற விளக்கத்தில் இருக்கும் குருவிகளுக்கு ஏற்றபடி பதில் சொல்ல வேண்டியிருந்ததால் மாதவி பற்றியும் தவறாக எழுதப்பட்டுவிட்டது. சுட்டிக்காட்:டியமைக்கு நன்றிகள் சியாமண்ணா.


- இளைஞன் - 06-07-2005

அஸ்வினி...
இங்கே இன்னொரு விடயத்தையும் நாம் கவனத்தில் எடுக்கவேண்டும். அதாவது மாதவியை விபச்சாரம் செய்தவள் என்பவர்கள் கோவலன் செய்ததை விபச்சாரம் என்பதில்லை. தமிழீழமாக இருந்தாலென்ன வேறு சமூகமாக இருந்தாலென்ன பாலியல் தொழில் புரியும் பெண்களிடம் செல்லும் ஆண்கள் கூட விபச்சாரன்களே.

பெண்ணோடு சகஜமாகப் பழகத் தெரியாதவர்கள், நட்போடு பழகத் தெரியாதவர்கள் நட்பைக்கூட கீழ்த்தரமாகவே விமர்சிப்பார்கள். அப்படியான சமூகத்தில் தாம் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். எது எப்படியாக இருப்பினும் புலம்பெயர் சமூக முன்னேற்றம் என்பது தனியே பாலியலோடு சம்பந்தப்பட்டதில்லை, எனவே வேறு விடயங்கள் பற்றியும் பேசுவோம்.

குழந்தைகள் பெற்றோர் உறவுநிலையில் உண்டான மாற்றங்கள் பற்றி நீங்கள் அறிந்திருந்தால் எழுதுங்களேன் அஸ்வினி. ஏனென்றால் அதுவும் புலம் பெயர் தமிழ் சமூக முன்னேற்றத்தோடு சம்பந்தப்பட்டதுதானே, அதான்.


- Mathan - 06-07-2005

இளைஞன் குறிப்பிட்டது போல் நாம் பாலியல் தொடர்பான விடயங்களில் இருந்து வெளியேறி இனி மற்றய சமுக முன்னேற்ற விடயங்கள் குறித்து பேசலாமே,


- aswini2005 - 06-07-2005

இளைஞன் மதன் இருவருக்கும் நன்றிகள். இங்கு பாலியல் என்ற ஒரு சொல்லுக்குள் மட்டுமே நின்று கருத்தாடும் சிலரது தவறான சமூகம் மீதான கணிப்பீடுகளும் தீர்வுகளும் திணிப்பாகக்கூடாது என்ற நோக்கிலேயே சில இடங்களில் காரசாரமாக கருத்து மோதல் நடந்துள்ளது.

இத்தனைக்குப் பிற்பாடும் தங்களது கருத்துக்களை மட்டுமே ஏற்க வேண்டும் அதுவே நமக்கெல்லாமான தீர்வு என வாதிடுவோருக்கான புரிதலையும் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கிலேயே கருத்தாடுகிறோம்.

குழந்தைகள் பெற்றோர் உறவுநிலை தொடர்பான கருத்துக்களுடன் விரைவில் சந்திக்கலாம்.

நன்றி.
அஸ்வினி சாத்வீகன்


- kuruvikal - 06-08-2005

மாதவி கோவலன் கண்ணகி... இராமன் சீதை இராவணன் இதைத்தவிர சிவபெருமான் உமாதேவி கிருஷ்ணன்... வள்ளி முருகன் தெய்வயானை... இவைதான் இப்போ பேச்சுப் பொருட்கள்...!

மாதவியார் யார்..அவள் தேவதாசி.. தாசித் தொழில் செய்தாளா இல்லையா... சிவபெருமான் யார் உமாதேவி யார்...ஆணும் பெண்ணும்...அவர்கள் என்ன செய்தனர்..எப்படி பிள்ளை குட்டி உருவாக்கினர்.......இதுதான் இங்கு இப்ப நடக்கும் ஆய்வுகள்...இதன்பால் தகர்க்கப்பட இருப்பது பெண்ணடிமைத்தனமும் ஆணாதிக்கமும்...நிச்சயம் உங்கள் முயற்சி வெற்றியடையும் தொடருங்கள்...!

பெண்ணிய மாயைகளும் அதன் வக்களாத்து பொழுதுபோக்கிகளும் அதன் வக்கிர சிந்தனை வால் பிடிகளும்... நிச்சயம் உலகில் அவர்களின் கருத்துக்களால் எதையும் சாதிக்கப் போவதில்லை எந்த மனித குல உய்வையும் அளிக்கப் போவதில்லை...உலகின் யதார்த்த நிலையைச் தரிசிக்க மறுத்தால்....! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Idea


- Niththila - 06-08-2005

அண்ணா வரலாறுகளில் இருந்துதான் தற்காலத்திற்கான படிப்பினையை எடுத்துக் கொள்ளலாம் :wink: Idea Arrow


- இளைஞன் - 06-08-2005

நன்றி அஸ்வினி. உங்கள் கருத்துக்களை எதிர்பார்த்திருக்கிறோம். பொருளாதார ரீதியாக புலம்பெயர்ந்த தமிழ்சமூகத்தின் முன்னேற்றம் எந்தளவில்உள்ளதாக நினைக்கிறீர்கள் மதன்?


- kurukaalapoovan - 06-08-2005

வருசம் குறைஞ்சது ஒரு கையடக்க தொலைபேசி எண்டு மாத்துமளவிற்கு முன்னேறியிருக்கு. ஆன ஊரில முல்லத்தீவில இருந்து பகலோ இரவோ கோடையோ மாரியோ ஒரு அடிப்படை தொலைபேசிக்கு எத்தினை கிலேமீற்றர் போகவேணும்?

அதுவும் ஒழுங்கான டோட்டுகளாவது இருக்கா?

இங்க வேண்டினா பிம் மேற்க் ஸ்போட்ஸ் வேற்ஸன் ஓவ்றோட் என்டு... அஙகை கீறோ கொண்டா லுமாலா சைக்கில்...

இங்கை பீயுட்டிபாலர் கேர்பல் தெரப்பி ஸ்கின் திறீர்மன்h.; மசாச்... தண்ணி அடிச்சுவாற தலையிடிக்கு குழுசை... தம்பி சோர்ந்துபோன குழுசை...

அங்கை சேலைன் பாம்புப் கடி மருந்து சிறிஞ்சு. என்டு அடிப்படைக்கே.....

இங்கை பிற்சா பிறைர் றைஸ்... அங்கை?


- poonai_kuddy - 06-09-2005

ஆனாண்ணா இங்க இருக்கிற ஆக்களால மொத்த எங்கட தமிழ் சனமும் முன்னேறியிருக்கா? எனக்கெண்டா முன்னெறின மாதிரித் தெரியேல. ஒண்ட சொல்லோணுமண்ணா வெளிநாட்டுக்கு வந்து நாங்கள் பெரிய பெரிய கோவிலெல்லாம் கட்டியிருக்கிறம் அதுக்குள்ள அர்ச்சன காசு வாங்குறதுக்கு மெசினெல்லாம் பூட்டியிருக்கிறம் உது முன்னேற்றந்தானண்ணா. எண்டாலும் எங்கட சனம் இவங்கட நாட்டில எங்கட கோயில கட்டிக் காட்டிட்டுது பாருங்கோவன். ஐயர்மார் பூசை செய்யிறதுக்கு பதில ஒரு ரொபோட்டீடாவையும் செய்து அத பூச செய்ய வச்சா இன்னும் முன்னேறிடலாம். மற்றது வீட்டில இருந்து லண்டன் கோயிலில அர்ச்சனை செய்யிற மாதிரி இன்ரர்நெற் கணக்சன் குடுத்து அங்க வெப்காம பூட்டி வச்சால் அம்மா கற்பனை செய்யவே பெருமையா இருக்கு.


- MUGATHTHAR - 06-09-2005

Quote:ஐயர்மார் பூசை செய்யிறதுக்கு பதில ஒரு ரொபோட்டீடாவையும் செய்து அத பூச செய்ய வச்சா இன்னும் முன்னேறிடலாம். மற்றது வீட்டில இருந்து லண்டன் கோயிலில அர்ச்சனை செய்யிற மாதிரி இன்ரர்நெற் கணக்சன் குடுத்து அங்க வெப்காம பூட்டி வச்சால் அம்மா கற்பனை செய்யவே பெருமையா இருக்கு.

பூனைக்குட்டிக்கு நாட்டு நடப்பு விளங்கேலை போல கிடக்கு இப்ப எங்கடை சமூகத்திலை பணக்கார வரிசையில் முன்னுக்கு போய் கொண்டு இருக்கிற ஆட்கள் இந்த ஜயர்மார் தான் அவையின்ரை முன்னேற்றத்தை தடுத்தீர் எண்டால் பிறகு தெரியும்தானே நாட்டிலை உண்ணாவிரதப் போராட்டங்கள்தான் வெடிக்கும் (இப்ப மொட்டையள் செய்யிற மாதிரி) இது தேவையா.............


- poonai_kuddy - 06-09-2005

மன்னிச்சுகொள்ளுங்கோ மாமா. நான் அவன்ர முன்னேற்றத்த தடுக்கல அவையின்ர கையில ஒரு ரிமோட் கொன்ரோல் குடுத்த அவை இன்னும் முன்னேறுவினந்தானே அதான் சொன்னன். <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- MUGATHTHAR - 06-09-2005

poonai_kuddy Wrote:மன்னிச்சுகொள்ளுங்கோ மாமா. நான் அவன்ர முன்னேற்றத்த தடுக்கல அவையின்ர கையில ஒரு ரிமோட் கொன்ரோல் குடுத்த அவை இன்னும் முன்னேறுவினந்தானே அதான் சொன்னன். <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

யாரு நம்மடை ஜயர்மாரை? அவை கோயிலிலை போய் விபூதி கொடுக்கேக்கை பெம்பிளை பிள்ளைகளின்ரை கையை கிள்ளிக் குடுக்காட்டி அவைக்கு தூக்கமே வராது இந்த லட்சணத்திலை வீட்டிலை இருந்து நல்லாத்தான் ரிமோட்டை அமத்துவினம்


- poonai_kuddy - 06-09-2005

அப்ப முன்னேறுறது கஸ்ரம்போலதான் கிடக்கு. ஏன் நாங்கள் கோயில புது ரெக்னிக்கில கட்டினா எப்பிடி இருக்கும்? சூரிய ஒளில லைட்டுகள் பத்துறது உண்டியலில காச போடாமல் கிரடிட் காட்டில காசு குடுக்கிறது திரைச் சீலை தானாத் திறந்து மூடுறது தேருக்கு மோட்டர் பூட்டுறது எண்டு இப்பிடி செய்யலாந்தானே? கோயில கண்ணாடிகளாலயே கட்டினா இன்னும் நல்லா இருக்குமெல்லோ


- MUGATHTHAR - 06-09-2005

Quote:கோயில கண்ணாடிகளாலயே கட்டினா இன்னும் நல்லா இருக்குமெல்லோ
சரியாப் போச்சு கோயிலுக்கு போற பெடிசுக்கு வசதிதான் செய்து குடுக்கப் பாக்கிறியள் நிறைய வசந்த மாளிகை (மயக்கமென்ன....) கள் உருவாகிறத்துக்கு சூப்பர் ஜடியாவாக் கிடக்கு...........


- kurukaalapoovan - 06-09-2005

கோயில் அங்கு நடக்கிற சம்பிரதாம் சடங்குகளை எல்லாவற்றையும் உங்களின் மத நம்பிக்கை அது சாரவரும் பக்தி மரியாதையோடு பாக்கிறீங்களா இல்லை எமது சமூகத்தின் ஒரு பொழுது போக்கு மற்றும் பொது ஒன்று கூடல் (ஆங்கிலத்தில் ரைம் பாசிங் சோசலைசிங்) இடமாக பாக்கிறீங்களா பூனைக்குட்டி?


- இளைஞன் - 06-11-2005

Mathan Wrote:கனடா-வெளிவிவகார கொள்கைகள்-வந்தேறுகுடிகள்

இந்த பெரும் கனடா தேசத்தில் சுமார் இரண்டரை இலட்சம் ஈழத்தமிழர்கள் வாழ்கின்றனர். 15 ,20 வருடங்களுக்கு முன்பு பெரும்பாலும் அகதிகளாக வந்த ஈழத்தவர்கள் தம்மோடு கொண்டு வந்தது பணமோ பொருளோ அல்ல. தமது கல்வி, விடாமுயற்சி,கடும் உழைப்பு போன்றனவற்றையே. இன்று இந்த கனேடிய மண்ணில் சீனர்களுக்கு அடுத்த படியாக எல்லா விதத்திலும் குறிப்பிடும் விதமாக வளர்ந்திருக்கின்றனர் தமிழர்கள்.

கிட்டத்தட்ட 20 பத்திரிகைகள்(இந்த தமிழ் பத்திரிகைகள் பற்றி பின்னர் எழுதுகிறேன்.), 6 தமிழ் வானொலிகள், 4 தமிழ்தொலைக்காட்சிகள்.,,கிட்டத்தட்ட15 தமிழ் கோவில்கள்,2000 வணிக நிறுவனங்கள் மற்றும் சுமார் 5000 பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள்,அரச அதிகாரிகள்,வைத்தியர்கள்,உள்நாட்டு அரசியலில் செல்வாக்கு செலுத்தும் வலிமை, இப்படி தமிழர்கள் தமது இருப்பை இந்த புலம்பெயர்ந்த மண்ணில் நிரூபித்து இருக்கின்றனர்.

சில தினங்களுக்கு முன்னர் ரொரன்ரோஸ்ரார் பத்திரிகையில் ஒரு பத்தி எழுத்தாளர் புதிய குடிவரவாளர்களால் கனடாவுக்கு ஏற்படும் நன்மை தீமை பற்றி எழுதிய கட்டுரையின் இறுதியில் குறிப்பிட்டுள்ளார்.சீனர்களும் இந்த சிறீலங்கன் தமிழர்களும் கனடாவின் வெளிவிவகார கொள்கைகளில் (சீனா,இலங்கை விடையங்களில்) செல்வாக்கு செலுத்தும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று.

அப்போது தான் எனக்கு ஒன்று ஞாபகத்தில் வந்தது. இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளில் ஒருவரான ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஒரு முறை சொல்லியிருந்தார்.\"தமிழர்கள் சிறுபான்மையினர்தான்.ஆனால் உலகிலேயே சக்தி வாய்ந்த சிறுபான்மையினர் இந்த தமிழர்கள் தான்\" என்று. அப்போது எனக்கு புரியவில்லை ஜெயவர்தனா ஏன் இப்படி சொல்லியிருந்தார் என்று. ஆனால் இப்போதைய உலக நடப்புக்களைக் கொண்டு என்னால் புரிந்து கொள்ளமுடிகிறது, சிறுபான்மை தமிழர்களைக் கண்டு ஏன் ஜெயவர்தனா அப்படி பயந்தார் என்று.

எது நடக்கவேண்டுமோ அது நன்றாகவே நடக்கிறது.

நன்றி - கரிகாலன்



- Mathan - 06-11-2005

இது போல பிரித்தானிய அரசியலிலும் ஈழதமிழர்களின் பங்களிப்பு ஓரளவு உள்ளது. புலத்தில் இருப்பவர்கள் தாம் இருக்கும் நாட்டின் சமுக அரசியல் கட்டமைப்புகளுடன் இணைந்து வேலை செய்து தமிழ் சமூக வளர்சிக்கும் உதவலாம்.