![]() |
|
அம்பாறை மாவட்ட தமிழ் முஸ்லிம் உறவில் குறுக்கிடும் அரசியல் இட - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: அம்பாறை மாவட்ட தமிழ் முஸ்லிம் உறவில் குறுக்கிடும் அரசியல் இட (/showthread.php?tid=7566) |
- pepsi - 02-18-2004 ஆகா என்ன அருமயா தமிழ் பேசுறீங்க. பின்னே ஏன் ஆரம்பத்தில கொழும்புத்தமிழு மாதிரி பேசினீங்க பிபிசி? அப்போ நீங்க இப்போ கொழும்புவில இல்லயா? பிரிட்டனிலயா இருக்கீங்க? - Mathan - 02-18-2004 யாழ்/yarl Wrote:யுூதர்கள் சிறுபான்மையாகவிருந்து பட்ட துன்பங்கள் இன்னும் ஒருவரும் பட்டிருக்கமாட்டார்கள்.எனினும் இன்று அவர்கள் பாலஸ்தீனியர்களுக்கு யாழ் நல்ல கருத்துகள் எழுதுறீங்க. உங்களுக்கு எனது பாராட்டுக்கள். எந்த பிரைச்சனைக்கும் உணர்வுபூர்வமா பதில் எழுதுவதோ முடிவெடுப்பது கூடாது. உண்மை உண்மை உண்மை. - pepsi - 02-18-2004 BBC Wrote:தாங்ஸ். நம்ம கொழும்பு டமில் பத்தி டொப்பிக் தொட்ங்கலா தான். அனா யார் பொஸ் பதில் குடுக்கிறது? பாருங்க நம்ம கருத்து ஒண்ணுக்கும் பதில் இல்ல. நம்ம பசங்க எல்லாரும் சரி பிசி. நீங்க் சரி எழுதுங்க பொஸ் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathan - 02-18-2004 pepsi Wrote:ஆகா என்ன அருமயா தமிழ் பேசுறீங்க. பின்னே ஏன் ஆரம்பத்தில கொழும்புத்தமிழு மாதிரி பேசினீங்க பிபிசி? எனக்கு அனைத்து தமிழும் பேச முடியும் என்று நம்புகின்றேன் பெப்சி. இந்த கருத்த நா கொழும்புத்தமிழ சொன்னா மத்தவங்க சரியா எடுத்துப்பாகங்களோ அப்பிடீங்கிறதால மத்த தமிழ்ல எழுதினன் பொஸ். இனிமே கொழும்புத்தமிழ்லயே பேசுறன் பொஸ். ஓகேவா? இது பத்தி பேசனும் அப்பிடின்னா தனி டொப்பிக் ஆரம்பியுங்க. பேசலாம் சரியா? ஏன் பிரிட்டன் தமிழங்களுக்கு மட்டும்தான் நல்ல தமிழ் பேச முடியுமா? என்ன பொஸ்? - kuruvikal - 02-18-2004 BBC உங்கட தென்கிழக்கு அலகுக்க எனென்ன பகுதி வருகுது எண்டு சொல்லுங்க முதலில....ஐயா தென்கிழக்கை விட முஸ்லீம்கள் செறிந்து வாழும் பிற பகுதிகள் தங்களுக்குத் தெரியாதோ.....???! வேதனை அது தெரியாமலா இவ்வளவும் கதைக்கிறீர்கள்...! முஸ்லீம்களுக்கு எதிரான கலவரம் 1918 இலேயே சிங்களவரால் புத்தளத்தில் ஆரம்பிச்சாச்சு.....அதுக்குப் பிறகும் ஆங்காங்கே அடிதடி நடந்தது...ஏன் அது கசப்புணர்வை ஏற்படுத்தப் போதாததாக இருந்ததோ.....?! தென்கிழக்கு அலகில் முஸ்லீம்கள் தனி அலகு கேட்க முடியும் என்றால் கொழும்பிலும் தமிழர்கள் தனி அலகு கேட்கலாம்.....! சும்மா எழுத வேண்டும் என்பதற்காக தவறான கருத்துக்களை எழுத வேண்டாம்.....! எமக்கு தாயக முஸ்லீம்கள் தொடர்பான அறிவு சிறிதளவேணும் இருப்பதால் உங்கள் தவறுகளை இனங்கான முடிகிறது...இல்லாதவர்கள்...BBC என்னவோ எழுதுது சரியாக இருக்குமோ என்றுதான் சிந்திப்பர்.... உங்கள் எழுந்தமானமான கருத்துகளால் அவர்கள் தவறான முடிவுகளையே பெறக் கூடியதாக இருக்கும்....! :twisted: :roll: :twisted:
- kuruvikal - 02-18-2004 யாழ் அண்ணா எத்தனை தீர்க்க தரிச்சனுத்துடனும் அரசியல் முடிவுகள் எடுக்கப்பட்டாலும் புதுப் புதுப்பிரச்சனைகள் வேறுவேறு கோணத்தில் வருவது தவிர்க்க முடியாதது...மகாத்மா காந்தி பாகிஸ்தானை உருவாகிய போது ஒன்று சொன்னார் இந்திய முஸ்லீம்கள் அவர்களின் விருப்பத்திற்கு நடக்கலாம்...எங்கே என்றாலும் போய் இருக்கலாம்...விரும்பினால் இந்தியாவிலும் தொடர்ந்து இருக்கலாம் என்று....அப்போ எதற்காக பாகிஸ்தானை உருவாக்கினார்....???! பிறகு வங்காளதேசத்தை உருவாக்கி தாங்கள் உருவாக்கிய பாகிஸ்தானையே பிரித்தனர்....??! பிறகு இப்ப பாகிஸ்தான் வங்காளதேசம் போய் காஷ்மீர்...நாளை குஜராத்....இப்படிப் பிரிக்க வேண்டியதுதான்....????! இந்த நிலை தமிழரின் பாரம்பரிய நிலத்தை பங்கு போடப்போய் நமக்கும் தேவையா....முதலில் தென்கிழக்கு அலகு...பின் கிண்ணியா மூதூரில் தனி அலகு....பிறகு மன்னார் வவுனியா கிளிநொச்சி யாழ்ப்பாணம் என்று இணைத்து ஒரு அலகு....இப்படியே பிரிக்கிறதப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்க வேண்டியதுதான்....?! இறுதியில் தமிழரின் பாரம்பரிய நிலம் என்று ஒன்று இருக்காது...பிறகேன் உங்களுக்குப் போராட்டம்...அழிவுகள்.....?????! இவ்வளவு அழிவுகளும் போராட்டமும் முஸ்லீம்களின் மத அரசியல் வெறியர்களுக்கு தனி அலகு கோரிக்கை எழுப்பவும் கொடுக்கவுமா தமிழர்களால் நடத்தப்பட்டது....????! :?: :?: :?: - yarl - 02-18-2004 நான் இங்கே பிரிவதற்கு ஆதரவாகவோ இல்லை சேர்வதற்கு ஆதரவாகவோ பேசவில்லை. இந்தப்பிரச்சனை ஒரு றப்பர் போன்ற பிரச்சனை.எழுந்தமானமாக இப்படித்தான் என சொல்லமுடியாது. இந்த இழுபாடுகள் சிங்களவர்களைத்தான் இறுதியில் திருப்திப்படுத்தப்போகிறது. எனது கருத்து திரு கக்கீம் அவசரப்படுகிறார். - thampu - 02-18-2004 Eelavan Wrote:வரலாற்றையும் வரலாற்றில் எங்கள் மூதாதையர் விட்ட தவறையும் சுட்டிக்காட்டியதற்கு நன்றி தம்பு Kumari Jayawardene in her book on Ethnic and class clashes in Sri lanka wrote:............... While plantation labour went from India in search of jobs, Anagarika Dharmapala was furious over British for importing untouchables to Sri Lanka. This stands testimony to the anti-dalit mentality of the Sinhalese chauvinists. The next to be targeted were small traders from Bombay and South India. Buddhist religious leader Anagarika Dharmapala spitted venom in his speeches against North and South Indian traders. The culmination of this hate campaign resulted in wherein numerous lost their lives in 1915.In 1930 Sinhalese chauvinists next ignited their campaign of hate against the 30000 settlers from Kerala. A.E.Gunesingha, a trade unionist groomed by none other than Communist leader A.K.Gopalan launched vituperative attacks through his mouthpiece ”Veeraiyya” நண்பர் ஈழவன் நான் குறிப்பிட்ட குமாரி ஜெயவர்தனாவின் இலங்கை வரலாறு மிகவும் பயனுள்ளது...... நீங்கள் குறிப்பிட்டது போல் அநகாரிக தர்மபாலா ஒன்றும் பிரித்தானிய எதிர்ப்புவாதி அல்லர்..... பொன் ராமநாதன் ஒற்றும் தமிழர் நலன் விரும்பியும் அல்லர்............ - Mathivathanan - 02-18-2004 கொள்கை கொட்யூனிசமாயிருக்கு.. இருக்கிற நாடு பிரித்தானியாவாயிருக்கு.. போட் வேஷம் இரண்டு கலைச்சிருக்கு.. இப்ப பார்த்தால் றெக்கமெண்டேஷன் LSSP யிக்கு பலமாயிருக்கு.. எனக்கு குழப்பமாயிருக்கு <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- sOliyAn - 02-18-2004 ராமநாதன் சிங்கள தலைமைகளுடன் சேர்ந்து தமிழர் உரிமைகளைத் தக்க வைக்கலாமென கனவுகண்டு ஏமாந்தவர்.. இறுதிக்காலத்தில்தான் அவருக்கு யழ்ப்பாணத்திற்கு ஏதாவது செய்ய வேண்டுமென்ற ஞானம் ஏற்பட்டது. - thampu - 02-18-2004 நண்பர் மதி நீங்கள் குழம்பியதில் எனக்கு ஒன்றும் ஆச்சரியம் இல்லை............ நீங்கள் குறிப்பிட்டது போல் நான் ஒன்றும் கம்யூனிட் அல்ல...........................ஆனால் பிரித்தானியாவில் வாழ்பவந்தான்................. - Mathivathanan - 02-19-2004 thampu Wrote:நண்பர் மதிஅன்பராம் தம்பர்.. குழப்பவென்றே எடுத்த அவதாரமென்று சொல்லாமல் சொல்லுகிறீர்கள்.. பொறுத்திருந்து பார்ப்போம்.. எந்த இசம் என.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Eelavan - 02-19-2004 அது எனக்கும் தெரியும் தம்பர் அதனை தான் ஆரம்பத்திலேயே வரலாற்றுத்தவறு என்று சொன்னேன் அவர்கள் அன்று தூரநோக்கில்லாமல் சிங்கள தலைமகளுக்கு குடை பிடித்ததன் விளைவைத் தான் நாம் இன்று அனுபவிக்கின்றோம் நான் சுட்டிக்காட்ட விரும்பியது அந்த நிகழ்வு ஒன்றை வைத்து முஸ்லிம்கள் தமிழர் மீது அதிருப்தி கொள்ள முடியாது - Eelavan - 02-19-2004 நண்பர் B.B.C நீங்கள் ஒரு கருத்தை சொல்வதற்கு முன்னர் அந்தக்கருத்தின் உண்மைத்தன்மை அல்லது நம்பகத்தன்மையை ஒருதரம் சரி பார்த்துக்கொள்ளுங்கள் எடு கோள்களின் அடிப்படையில் கருத்துக்களை முன்வைக்க வேண்டாம் ஒரு தடவை இலங்கையின் குடிசனப் பரம்பல் பற்றிய வரைபடத்தினை எடுத்துப்பாருங்கள் தென் கிழக்கு அலகினை விட பெரும்பான்மையான முஸ்லிம்கள் வசிக்கும் இடங்கள் தெரியவரும் இப்போது தனித்தமிழீழம் என்பது கேள்விக்குறியாகி அதிகாரப்பகிர்வு என்றொரு பேச்சு வந்தததின் பின்னர் தான் முஸ்லிம் அரசியல்வாதிகள் தென் கிழக்கு அலகு என்ற கோரிக்கையை முன்வைக்கிறார்கள் இது முஸ்லிம் காங்கிரஸினால் முன் வைக்கப்பட்ட கோரிக்கையே அன்றி ஒட்டு மொத்த முஸ்லிம்களின் குரல் அல்ல ஏனெனில் முஸ்லிம் காங்கிரஸ் தென் கிழக்கு இலங்கையை தளமாக கொண்டு வளர்ந்தது அதாவது முஸ்லிம்களிலும் ஒரு பிரதேசவாதிகளினது ஆதரவுடன் மட்டும் வளர்ந்த கட்சி எனவே மு.கா. சொல்வதை ஒட்டுமொத்த முஸ்லிம்களினதும் குரல் என்று சொல்லமுடியாது இப்போது முஸ்லிம்களினது குரல் பல்வேறு பட்டு இருப்பதை பாருங்கள் காலத்துக்கு காலம் அரசை அமைக்கும் இரு கட்சிகளிலும் அங்கத்துவர்களாக முஸ்லிம்கள் இருந்துள்ளனர் இன்றும் இருக்கின்றனர் அவர்களுக்கு தென்பகுதி முஸ்லிம்களிடம் நிறைந்த செல்வாக்கும் இருக்கிறது அவர்கள் வேண்டுவது நாடு பிரியக்கூடாது இயன்றவரை முஸ்லிம் மக்களுக்கு கிடைக்கவேண்டிய உரிமைகளை பெற்றுக்கொடுப்போம் இன்னொரு பகுதி புத்தளம் மற்றும் நாட்டின் மேற்கு கரையோரங்களில் வசிக்கும் யாழில் இருந்தும் வன்னியின் பிற பகுதிகளில் இருந்தும் இடம் பெயர்ந்த முஸ்லிம்கள் இலங்கை முஸ்லிம்களின் பரம்பலில் கணிசமான எண்ணிக்கையானோர் இவர்கள் விரும்புவது யாழ்ப்பாணம் திரும்பி சென்று தங்கள் பழைய வாழிடங்களில் வாழ்வது.இவர்களது தலமை புலிகளுடன் பேசி புலிகளினது சம்மதத்துடன் இன்று பலர் மீளக்குடியேறியும் வருகின்றனர் இதில் முக்கியமாக குறிப்பிட வேண்டியது அவர்களில் ஒருவருக்கு தமிழ்க்கூட்டமைப்பு சார்பில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பும் கொடுக்கப்பட்டுள்ளது அதனை விட புத்தளம் மாவட்டத்தில் சுயேட்சையாக போட்டியிடும் சிலரும் பாராளுமன்றம் சென்றால் முஸ்லிம்கள் தமிழருடன் சேர்ந்திருப்பதையே வலியுறுத்துவர் மற்றது பிரதேச வாரியாக முஸ்லிம்களின் ஆதரவை வைத்துக்கொண்டு தாம் தான் முஸ்லிம்களின் பிரதிநிதிகள் என்று கூறிக்கொள்ளும் மு.கா இவர்கள் தாம் வலியுறுத்தும் தனி அலகு என்பதையே வலியுறுத்துவர் பாராளுமன்றத்தில் கிடைக்கும் ஆசனங்களை வைத்துக்கொண்டு முஸ்லிம்களின் ஏக பிரதிநிதிகள் தாம் என்று இதுவரை காலமும் சொல்லி வந்தது மு.கா இன்று உடைந்துபோய் மூன்றாக ஆகிவிட்டது ஒரு பிரிவு தான் கக்கீம் அவர் தனி அலகில் உறுதியாக இருப்பார் மற்றைய பிரிவுகள் ரணிலுக்கோ சந்திரிக்கவுக்கோ முட்டு கொடுக்கும் அவர்கள் சொல்வதற்கு தலையாட்டும் இவ்வாறு முஸ்லிம்களினதும் பல்வேறு பிரதேச வாரியான பிரதிநிதிகள் பலவற்றை கேட்பார்கள் இதில் நாம் எதை செவி மடுப்பது? - adipadda_tamilan - 02-19-2004 kuruvikal Wrote:BBC உங்கட தென்கிழக்கு அலகுக்க எனென்ன பகுதி வருகுது எண்டு சொல்லுங்க முதலில....ஐயா தென்கிழக்கை விட முஸ்லீம்கள் செறிந்து வாழும் பிற பகுதிகள் தங்களுக்குத் தெரியாதோ.....???! வேதனை அது தெரியாமலா இவ்வளவும் கதைக்கிறீர்கள்...! குருவிகள் எழுதியதை நானும் ஏற்றுக்கொள்கிறேன். நான் முதலும் எழுதினேன் பிபிசிக்கு வடக்கு கிழக்கைப் பற்றிய பிரச்சினை - அதாவது வடகிழக்கு முஷ்லிம்களின் பிரச்சினை பற்றி பெரிதாக தெரியவில்லை என. அதையெ திரும்பத் திரும்ப நிரூபித்துக்கொண்டு வருகிறார். தயவு செய்து வடகிழக்கில் என்ன நடக்குதென்டாவது அறிந்துவிட்டு எழுதவும். சும்மா எழுதி மற்றவர்களை குளப்பத்திலாழ்த்த வேண்டாம். :evil: :twisted: :twisted: :evil: - adipadda_tamilan - 02-19-2004 kuruvikal Wrote:யாழ் அண்ணா எத்தனை தீர்க்க தரிச்சனுத்துடனும் அரசியல் முடிவுகள் எடுக்கப்பட்டாலும் புதுப் புதுப்பிரச்சனைகள் வேறுவேறு கோணத்தில் வருவது தவிர்க்க முடியாதது...மகாத்மா காந்தி பாகிஸ்தானை உருவாகிய போது ஒன்று சொன்னார் இந்திய முஸ்லீம்கள் அவர்களின் விருப்பத்திற்கு நடக்கலாம்...எங்கே என்றாலும் போய் இருக்கலாம்...விரும்பினால் இந்தியாவிலும் தொடர்ந்து இருக்கலாம் என்று....அப்போ எதற்காக பாகிஸ்தானை உருவாக்கினார்....???! பிறகு வங்காளதேசத்தை உருவாக்கி தாங்கள் உருவாக்கிய பாகிஸ்தானையே பிரித்தனர்....??! பிறகு இப்ப பாகிஸ்தான் வங்காளதேசம் போய் காஷ்மீர்...நாளை குஜராத்....இப்படிப் பிரிக்க வேண்டியதுதான்....????! :roll: அப்பிடி போடு நய்னா... - Mathivathanan - 02-19-2004 எல்லாரும் சண்டை பிடிச்சு முடிஞ்சுதெண்டு நினைக்கிறன்.. அதாலை எனது கருத்துக்கு வாறன்.. ஹக்கீம் அறுத்துறுத்து நல்ல தமிழ் பேசுறார்.. சேதுவைவிட 100 மடங்கு நல்ல தமிழ் பேசுறார்.. நம்ம அரசியல்வாதிகள் எல்லாரையும்விட நல்ல தமிழ் பேசுறார் எண்டுதான் சொன்னன்.. அதிலையிருந்து தொடங்கி.. இப்பவரைக்கும் நாலைஞ்சு இனக் கலவரமே உண்டாக்கிப்போட்டியள்.. பிரதேசவாதம் நல்லா கதைக்கிறியள்.. இந்த பிபிஸி தம்பி முதலிலை எழுதினதுகூட தப்பில்லை.. நடந்ததை ஒரு வரியிலை சொல்லிச்சுது.. அதையும் தேவையில்லாமல் தணிக்கை செய்து இல்லாத பொல்லாத பொய்யள் குறளிவித்தையளும் காட்டி அதை மூடி மறைக்க எத்தனிச்சியள்.. அவன் இவன் வந்தவன் போனவன் எல்லாரும் கூடாதவன்.. இனவாதி.. துரோகிப் பட்டங்கள்கூட சூட்டினியள்.. இப்ப என்னத்தை கண்டியள்..? நீங்கள் எவ்வளவு இனவாதிகள்.. என்ன செய்யக்கூடியவர்கள் எண்டதை நடைமுறையிலை காட்டியிருக்கிறியயள்.. தாங்களும் தங்கடைபாடும் எண்டு சந்தோஷமாயிருந்த சனம்.. நாடுநாடாத் திரியிறதுக்கு யார் காரணமெண்டதை இந்த ஒரு கருத்தே விலாவாரியா எடுத்துச் சொல்லியிருக்கு.. இந்தக்கருத்தையே தணிக்கை செய்தாலும் ஆச்சரியப்படுறதுக்கில்லை.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Mathan - 02-19-2004 Eelavan Wrote:பாராட்டுக்கள் B.B.C குட்டிக்கதைக்கு ரொம்ப லேட்டா பதில் சொல்லுறேன் மன்னிக்கணும் பொஸ். கடைக்குட்டி பால்குடின்னு நீங்க சொன்னா சின்ன அண்ணனுக்கு கடைகுட்டிய விட ரொம்ப வயசு கிடையாது. பெரியண்ணன் ஒருத்தர் தான் பெரியவர். அப்பா சொத்தை பெரியவன் கிட்ட தான் குடுத்துட்டு போனார். Eelavan Wrote:சின்னவருக்கு ஒரே தலையிடி கடைக்குட்டிதனே அடிக்கவும் முடியவில்லை வைத்திருக்கவும் முடியவில்லை கடசியில் பொறுக்கமுடியாமல் வீட்டை விட்டுப் போகும் படி கடைக்குட்டிக்கு சொன்னார் அத்துடன் இந்த வீட்டில் இருப்பதெல்லம் எனது சொத்து எதையும் நீ எடுக்க கூடாது எல்லாம் நான் கஸ்டப்பட்டு சம்பாதித்தவை பெரியவர் வைச்சிருக்குறதிலயும் கடைக்குட்டியோட காணி இருக்கு, சின்னவர் வைச்சிருக்கிறதிலையும் கடைக்குட்டியோட காணி இருக்கு. இப்போ சின்னவருக்கு காணி பிரிக்கிறதால அதுல இருக்கிற பங்கை கேக்கிறார். - vasisutha - 02-19-2004 அரோகரா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->அய்யோ வேற இடத்த போட வேண்டியது இங்க வந்துட்டுது. sorry
- Mathan - 02-19-2004 யாழ்/yarl Wrote:http://www.yarl.net/?q=node/view/50 <b>பேசாப் பொருளை பேச துணிதல்</b> தமிழர், முஸ்லிம்கள் உறவுகள், ஊடாட்டங்கள் பற்றிய ஒரு சிந்திப்பு ஆழமான பன்முகப்பட்ட சில பிரச்சினைகள் பற்றி எல்லா வேளைகளிலும் எல்லா இடங்களிலும் பேசுதல் முறையல்ல என்பது ஒரு அனுபவ உண்மை. எனினும், அவற்றைப் பற்றிப் பேச வேண்டிýய வேளையில் பேசாமல் விடுவதும் மிகப் பெரிய தவறாகும். அந்த ஒரு நிலைப்பாட்டிýல் இருந்தே; கடந்த இரண்டு வருடங்களாக படிýப்படிýயாக கீழேயே நோக்கிச் செல்லும் தமிழ்- முஸ்லிம் உறவுகள் பற்றி பேசாமல் இருக்க முடிýயாத ஒரு காலகட்டமாக தற்போதுள்ள தேர்தல் சூýழல் அமைந்துள்ளது. தமிழர், முஸ்லிம்கள் உறவு ஊடாட்ட நிலையில் இன்றுள்ள நிலைமையை காய்தல், உவத்தல் அற்ற முறையில்; அதாவது, 'பிணியறி" கண்ணோட்டத்தில் வெளிப்படையாக எடுத்துக் கூýறுவது முதலாவதும், முக்கியமானதுமான கடமையாகும். இந்தக் கடமையில் இறங்கும்போது தமிழர், முஸ்லிம்கள் உறவு ஊடாட்டத்தை எந்த அடிýப்படையில் பார்ப்பது என்பது அச்சாணியான ஒரு விடயமாகும். <b>முதலாவது, இரு பகுதியினரையும், தனித்தனி இனக் குழுமங்களாகக் கொள்வதாகும்.அதில் எவ்வித சந்தேகமும் இருத்தல் கூýடாது. இரண்டாவது, இவர்கள் ஒரே தாய்மொழியைக் கொண்டவர்கள் என்பதாகும். மொழி அடிýப்படையில் மக்களை இனங்கானும் சூýழல்களில் இது ஒரு மிகவும் சிக்கலான விடயமாகும். மூýன்றாவது, இந்த மொழி நிலையும், வாழ் பிரதேச நிலையும் ஒரு முக்கிய பிரதேசத்தில் (வட, கிழக்கில்) ஒன்றாகவே உள்ளது. உண்மையில் இந்த அம்சமே பிரச்சினையின் உக்கிரப்பாட்டிýற்கான காரணமாகும். நான்காவது, மொழி ஒருமை வழியாக வரும் பண்பாட்டுரிமையைப் பேனுதல் அவசியமாகும். ஐந்தாவது, இலங்கையின் இனக்குழும வரலாற்று நிலை நின்று நோக்கும்போது, இந்த இரு பகுதியுமே இன்னொரு பகுதியினரால் பாதிக்கப்பட்டவர்களேயாவர். இந்த இனக்குழுமங்களினை நோக்கும்போது இதுவரை பார்த்தவற்றிலிருந்து இரு விடயங்கள் முக்கியமானதாகும். ஒன்று, இவர்களின் தனித்துவம், அடுத்தது, இவர்களின் வாழ்புல ஒருமை. இந்த வாழ்புல ஒருமை பற்றி ஒரு மிகச் சிறிய குறிப்பினைக் கூýறுதல் அத்தியாவசியமாகிறது. [b]வாழ்நிலை ஒருமை காணப்படும் இடமாக வட, கிழக்கு மாநிலத்தைக் கொள்வதற்கான காரணம், மற்றைய மாநிலங்களில் இவர்களுக்கு சமத்துவமான பராமரிப்பு இல்லாது இருந்தமையும், அது தொடர்ந்தும் உள்ளமையும் ஆகும்.பின், அது மாத்திரமல்லாமல் வட, கிழக்கிற் கூýட சில எல்லைப் புறங்களில் இருப்பு பலத்தை இழந்துள்ளமை ஆகும். கிழக்கெல்லை உட்பட. எனவே, இப் பிரச்சினையை நாம் அனுகுவது, அனுக வேண்டுவது வட, கிழக்கில் இவர்களுக்குள்ள வாழ்புல ஒருமையைப் பேனுவதும், அதற்கு மேல் மற்றைய எல்லா இடங்களிலும் மொழி ஒருமையைப் பேனுவதற்குமாகும். இந்த அடிýப்படையில் நின்று, கொண்டே நாம் இன்றுள்ள பிணியறி நிலைக்கு வர வேண்டும். [b]முதலாவது யதார்த்தம் வடபுல முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமையாகும். இரண்டாவது, கிழக்குப் பகுதி முஸ்லிம்கள் தங்களின் தனித்துவத்தைப் பேணக்கூýடிýய ஒரு அரசியல் ஒழுங்கமைப்பினை வேண்டிý நிற்பதாகும். இதற்கான காரணம் அவர்களுக்கு ஏற்பட்ட பிரதானமான வருமான நர்;டங்களாகும்.</b> இக்கட்டத்திலே ஒரு ஜீவாதாரமான உண்மையைக் குறிப்பிடல் வேண்டும். இந்தக் கருத்தாடலுக்கே அத்திவாரம் அதுதான். அதாவது, இந்தப் பிரச்சினைகளை நாங்கள் இப்போது ஆராய்வதற்கான காரணம், இருக்கின்ற இந்தப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதும், இனிமேல் அத்தகையன தோன்றாது தடுப்பதுமாகும். இவற்றைத் திரும்பத் திரும்ப பேசுவது ஏற்கனவே புண்ணாக உள்ள இடத்தை மேலும் வெட்டுக் காயத்திற்கு உள்ளாக்குவதற்காகவல்ல. <b>இன்றுள்ள இன்னொரு மிகச் சிக்கலான அரசியல் நிலையையும் நாம் மனதிற் கொள்ள வேண்டும். தமிழர்களிடையே நிலவும் பயம் என்னவென்றால், முஸ்லிம்களின் நிலைப்பாடுகள் சில காரணமாக அரசியல் போராட்டம் பற்றிய தமது இலக்கு நோக்கே ஆபத்திற்கு உள்ளாகி இருக்கின்றது என்பதுதான்.</b> [b]முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் தங்கள் எதிர்கால அரசியல், வாழ்வியல் ஸ்திரப்பாட்டிýற்கான தடயம் எதையும் தமிழர்களின் நடவடிýக்கையில் காணவில்லை என்பதாகும். இவ்விடத்திலேயே அர்;ரப் மறைவின் பின்னர் ஏற்பட்டுள்ள முஸ்லிம் அரசியல் பிளவுகளின் முக்கியத்துவத்தை நோக்க வேண்டிýயுள்ளது. விரும்பினால் என்ன, விரும்பாவிட்டால் என்ன, குறிப்பாக, இன்று, கிழக்கிலங்கை முஸ்லிம்களின் நிலையில் 3 அரசியல் நிலைப்பாடுகள் தோன்றியுள்ளன. இவற்றினூடே காணப்படும் போட்டிýகள், முஸ்லிம்கள் பாராளுமன்ற அரசியலை மேலும் சிக்கலுக்குள்ளாக்கியுள்ளது. இவற்றைவிட, உண்மையில் இவற்றிலும் பார்க்க முக்கியமானதாகவுள்ள, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தை மையமாகக் கொண்டு மேல் கிழம்பிவரும் முஸ்லிம் தேசிய நிலைப்பாடாகும். தமிழர்கள் தமது ஏறத்தாழ 50 ஆண்டுகால போராட்ட வரலாற்றில் நேர்ன் (யேவழைn) எனும் சொல்லிற்கு பயன்படுத்தாத ஒரு சொல்லை 'தேசம்" என்ற சொல்லை அவர்கள் பயன்படுத்துகின்றனர். இது ஒரு முக்கியமான குரல். வட, கிழக்கு முஸ்லிம் நிலைப்பாட்டை சற்று உன்னிப்பாக நோக்கும்போது இன்னுமொரு அம்சமும் புலனாகிறது. அது வடபுல முஸ்லிம்கள் பற்றியதாகும். அவர்களுக்கான தலைமைத்துவக் கோரிக்கைகள் அடிýக்கடிý செய்யப்படுவதுண்டெனினும், உண்மையில் அவர்களுக்கு அசைவியக்க பலமுள்ள ஒரு அரசியல் தலைமை இன்னுமில்லை என்பதேயாகும். தமிழ்த் தரப்பு நிலைப்பாடுகளைப் பற்றிய சிந்திப்பில் இறங்கும் போது இந்த விடயத்தை மிகுந்த நிதானத்துடனும், நல்லெண்ண உணர்வுடனும் நோக்குதல் அவசியமாகும். வடபுல முஸ்லிம்கள் இன்று அகதிகளாக வாழ்ந்தாலும், அவர்கள் மற்றைய பகுதி முஸ்லிம்களின் பிரச்சினைகளோடு தமது பிரச்சினைகளை இணைத்துக் கொள்ளவில்லை என்பது ஒரு முக்கிய உண்மையாகவே சொல்லப்பட வேண்டும். வட, கிழக்கு தமிழ், முஸ்லிம் உறவு ஊடாட்ட விடயத்தில் தமிழ்த் தரப்பு தமது நல்லெண்ணத்தை நன்கு புலப்படுத்துவதற்கான, அந்த நல்லெண்ணத்தின் செயல் விளக்கமாக அமையக் கூýடிýய பணிகளில் ஈடுபட வேண்டும். இதற்காக ஏற்கனவே, ஒத்துக்கொள்ளப்பட்ட வடபுல முஸ்லிம்களின் மீள்குடிýயிருத்துகைகளை திட்டமிட்ட முறையில் முஸ்லிம்களின் பங்கேற்புடன் நிறைவுறச் செய்ய வேண்டிýயதற்கான கருமங்களில் முன்னிற்பதும், முனைந்து செய்வதும் அவசியமாகும். இவ்வாறு செய்வதன் மூýலம் கடந்த கால கசப்பான அனுபவங்களை மறப்பதற்கான ஒரு நல்ல சூýழல் உருவாகும். கிழக்கிற்கு வரும்பொழுது நிலைமை சற்று வித்தியாசப்பட்டிýருப்பதை அவதானிக்கலாம். அங்கு ஏற்பட்டுள்ள நிலைமையில் மிக முக்கியமான அதேவேளையில், ஒளிவு மறைவற்று ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிýயதுமான உண்மை என்னவெனில், அங்கு தமிழர்கள் சம்பந்தமான ஒரு அரசியல் குரோத உணர்வு முஸ்லிம்களிடையே வளர்க்கப்பட்டிýருப்பதாகும். அங்குள்ள அரசியற் பன்முகப்பாடும், அதன் காரணமாகத் தோன்றிய தெளிவற்ற நிலைமைகளும், இதனைச் சுலபமாக்கிவிட்டன. தென்னிலங்கை சிங்கள நிலைப்பாட்டு அரசியல், இதனை தனக்குச் சாதகமாக பயன்படுத்தியுள்ளது. இதனால், நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. தேச மட்டத்திலுள்ள ஆங்கில, சிங்கள பிரதான ஊடகங்கள் இச்சூýழ்நிலையை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வருகின்றன. இத்தகையதொரு சிக்கலனா நிலைக்கு முகம் கொடுப்பதற்கு தமிழ்தரப்பு உள்@ýர் மட்டங்களிலுள்ள சமய, சமூýக தலைவர்களுடன் ஒன்றிணைந்து சில அன்றாட பிரச்சினைகளைத் தீர்க்க உதவியுள்ளன. இது ஒரு நல்ல முறையே என்றாலும், மேலாண்மையுடன் கட்டிýயெழுப்பப்பட்டுள்ள ஊடக மனப்பதிவுகளுக்கு எதிராக, இந்த நடவடிýக்கைகள் முக்கியத்துவம் பெற முடிýயாமலே போகும். எனவே, உள்@ýர் மட்டங்களில் தொழிற்படும் போதும், பிரதேச முக்கியத்துவம் உள்ள சமூýக சக்திகளையும் இணைத்துக் கொள்ள வேண்டும். இவை யாவற்றிற்கும் மேலாக, இந்த துரதிர்;டவச உறவு சீர்கேடு காரணமாக, இப்பொழுது ஏறத்தாழ மறக்கப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள (அ)வடக்கு, கிழக்கு பிரதேச அரசினதும் (ஆ) கிழக்கு மாநிலத்தை அந்த அரசிலிருந்து பிரிக்கக் கூýடாததற்குமான இலங்கை அரசியல் யதார்த்தத்தை மறக்காமல் இருப்பதாகும். அதாவது, கல்லோயா, அம்பாறை உருவாக்க காலத்து அரசியலை மீள நினைவுறுத்தல் வேண்டும். இந்த உண்மை உணரப்படுமேயானால், வடக்கு, கிழக்கு அலகிற்குள்ளேயே கிழக்கின் உடைவும், பிரிபாடும் தவிர்க்கப்படும். சுருக்கமாகச் சொன்னால், வடக்கு, கிழக்கில் தமிழர்களும், முஸ்லிம்களும் ஒன்றாக வாழ வேண்டும் என்பது ஒரு அத்தியாவசிய அரசியல் நிலைப்பாடாகும். அதிர்ர்;டவசமாக அந்த அரசியல் இலக்கு நோக்கைச் சுலபப்படுத்துவதற்கான பண்பாட்டு ஒருமைப்பாடு கிழக்கிலேயே அதிகம் உள்ளது. கிழக்கிலுள்ள முஸ்லிம்கள் தமிழர்களிடையே உள்ள வேறுபாடுகளை பெரிதுபடுத்தும் சக்திகள், இவர்களை ஒன்றாக இணைத்துள்ள பந்தங்களை மறந்தே தொழிற்படுகின்றன. அந்த இணைப்புகளை வலியுறுத்துவது நம் எல்லோரினதும் கடமையாகும். இந்தப் பிரச்சினையைக் கையாளும்போது நாம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டிýய முக்கியமான விடயம், இன்று அந்த உறவுகள் பலவீனப்படுத்தப்பட்டுள்ளன என்ற உண்மையாகும். பலவீனமான நிலையில் சிகிச்சை தேவை, மருந்துகள் தேவை. வடக்கு, கிழக்கு முஸ்லிம்- தமிழ் உறவுகளை ஆராயும் இந்நிலையில் இலங்கை முஸ்லிம் அரசியலின் இன்னொரு முக்கிய யதார்த்தையும் உணர்ந்து கொள்ள வேண்டும். [b]அதாவது, இலங்கை முஸ்லிம் சனப்பரவலில் நிலம் சார்ந்த உழைப்பினையுடைய முஸ்லிம்கள் பிரதானமாக வட, கிழக்கிலேயே உள்ளனர். மற்றைய இடங்களில் அவர்களது பிரதான தொழில் வணிகமாகும். அதன் காரணமாக, அப்பிரதேசங்களில் (புத்தளம் நீங்கலாக) தமது தனித்துவத்தைப் பேனுவது சிரமம். இதனால், வடக்கிற்கு வெளியேயுள்ள முஸ்லிம்கள் கூýட குறிப்பாக, கிழக்கு முஸ்லிம்களின் நிலைமை பற்றி அதிக சிரத்தை செலுத்துவர். கிழக்கைத் தளமாகக் கொண்ட ஒரு முஸ்லிம் அரசியல் சக்தியே இலங்கை முஸ்லிம்கள் எல்லோருக்குமான பயமற்ற குரலாக ஒலிக்க முடிýயுமென்ற உண்மையை காலஞ்சென்ற அர்;ரப் எடுத்து நிறுவினார். கிழக்கு மாகாணத்தில் பலமாக இருக்கும் முஸ்லிம் கட்சியால் மாத்திரமே இலங்கை முஸ்லிம் சகலருக்குமாக பயமற்றுப் பேச முடிýயுமென நிலைநாட்டிýயவர் அவர். இந்த அரசியல் உண்மை மிக முக்கியமானதொன்றாகும். தமிழர் வடக்கு, கிழக்கிற்கு வெளியே மலையகம் தவிர, அரசியல் பலமற்றவர்களே. இந்த உண்மை காரணமாகவே தமிழர் அரசியலில் வடக்கு, கிழக்கு பெறுகின்ற அழுத்தம் போன்ற ஒரு அழுத்தத்தை முஸ்லிம்களும் கோருவது, வடக்கு, கிழக்கு வெளியேயுள்ள முஸ்லிம்களின் தனித்துவத்தைப் பாதிக்கும் நிலைமைகளை ஏற்படுத்தலாம். இதனால்தான் வட, கிழக்கிற்குள் மாத்திரம் நின்று, அதற்குள் முஸ்லிம்கள் பெறும் இடத்தை நிர்ணயிப்பது இலங்கை முஸ்லிம்களின் தலைமைக்குச் சிரமமாகவுள்ளது. இந்த வெளிப்பாடுகளையும் நாம் காணக்கூýடிýயதாகவேயுள்ளது.இந்தக்கட்டத்தில் தான், தமிழர்கள் முஸ்லிம்களிடமிருந்து மொழிநிலை ஒருமைப்பாட்டை எதிர்பார்க்கின்றனர் எனலாம். இலங்கை தமிழர், முஸ்லிம்களின் உறவில் ஒரு பரஸ்பர நல்லுறவு அவசியம். அது இல்லாவிடிýல், இந்த இரண்டு இனக் குழுமங்களுக்குமே அரசியல் சிரமப்பாடுகள் தவிர்க்கப்பட முடிýயாதவை ஆகிவிடும். தினக்குரல் 15.02.04 |