![]() |
|
கனடாவில் அவப்பெயரை உண்டு பண்ணும் தமிழ் இளைஞர் குழுக்கள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: கனடாவில் அவப்பெயரை உண்டு பண்ணும் தமிழ் இளைஞர் குழுக்கள் (/showthread.php?tid=6438) |
- Sabesh - 11-23-2004 MEERA Wrote:அப்படி என்றால் புலம் பெய÷ தமிழ÷களை பற்றி கருத்து வைப்பதற்கு அருகதை அற்றனீ÷. குருவிகள் தாங்கள் இப்போது தாயகத்தில் இருப்பதாக ஒரு போதும் கூறவில்லை. நீங்கள் சிறிய வட்டத்தினுள் இருந்து கொண்டு அந்த வட்டம் தான் எல்லாம் என்று நினைத்துக்கொண்டிருப்பதால், தன் வட்டத்திற்கு வெளியால் உள்ள யதார்த்ததைப் பற்றிச் சிந்திக்கும் குருவிகள் பம்மாத்து விடுவது போல் தோன்றுகிறது. இந்தப்பகுதியில் மட்டுமல்லாது களத்தில் உள்ள எல்லாப் பகுதிகளிலும் குருவிகள் கருத்தடுகின்றன. எல்லாப் பகுதிகளிலுமுள்ள குருவிகளின் கருத்தை வாசித்து, முக்கியமாக பல கோணங்களிலும் சிந்தித்து, பார்த்தீர்களேயானால், குருவிகளின் பரந்த யதார்த்தமான சிந்தனை புரியும். இது வக்காளத்து இல்லை. சில நாட்களாக களத்திற்கு வராததால், இந்த தலைப்பின் கீழ் உள்ள 15 பக்கங்களையும் இன்றுதான் வாசித்தேன். அதில் இருந்து தான் எனது கருத்தை வைக்கிறேன். -சபேஷ்- - vallai - 11-23-2004 உன்னானைத் தம்பி உதைச் சொல்லு முதலிலை குருவி சும்மா பம்பலுக்கு இவையளை ஆழம் பாக்கிறதுக்கு கதை விடுகுதெண்டு தெரிஞ்சுதானே நானே வாயை வைச்சுக் கொண்டு இருந்தனான் இவங்கள் அது விலங்காமல் வாயைக் குடுத்து எதையோ புண்ணாக்கிக் கொண்டு குத்தி முறியிறாங்கள் தம்பியவை வல்லை உங்களுக்கு புத்திமதி சொல்லவரேலை தமிழீழம் தமிழ்த்தேசியமெண்டு நீட்டி முழக்காமல் யதார்த்தத்துக்கு என்ன தேவையோ அதைச் செய்யுங்கோ.மைதானம் கட்டினாலும் கட்டுங்கோ நாலைஞ்சு அனாதைப் பிள்ளையளை வாழ வைக்கிறதெண்டாலும் வையுங்கோ அதுகளைச் சொல்லிக் காட்டியே நாறடிக்காதைங்கோ என்னப்பு நான் சொல்லுறது விளங்குதே - aswini2005 - 11-23-2004 vallai Wrote:உன்னானைத் தம்பி உதைச் சொல்லு முதலிலை வல்லையண்ணைக் மப்புத்தெளிஞ்சாத்தான் நல்ல கருத்துச் சொல்லுவரெண்டில்லை. மப்பிலை மனிசன் நிதானமெண்டதை சொல்லி வைச்சிருக்கு தாய்மண். குருவிகளின்ரை யதார்த்தமான சிந்தனை பலருக்கு ரத்தக்கொதிப்பை இந்தக்களத்திலை உருவாக்கினது ஏதோ உண்மைதான். ஆனால் குருவியின்ரை யதார்த்தப்போக்கை இந்தக்கருத்தாளர்கள் விளங்காமல்தான் குய்யோ முறையோ எண்டு குமுறுறதுதான் உண்மை.
- sinnappu - 11-23-2004 <img src='http://kuruvikal.yarl.net/archives/rooster3.gif' border='0' alt='user posted image'> þó¾¡Ç¡ ³§Â¡ ¬¨Ç Å¢Îí¸¼¡ôÀ¡ «Êîº ÁôÒ þÈí¸¢Îõ ±¼ Åø¨Ä ±ýɼ¡ôÀ¡ þí¸ ¿¢ì¸¢Ã¡ö ¯ó¸¾û ¦Ä¡ûÙ À¢Êîº ÁÛºý ±¼ ¸Õò¾¡¼ø þÄ ÌÕÅ¢ìÌ ºÁý ÌÕÅ¢ ¾¡ý¼¡ ±ý¨É ŢΠ¿£ ¿¢ñÎ ÒÎíÌ ÀÎ þÅý ¦ºøÄý Åà ¦º¡ýÉÅý ¿¡ý §À¡Èý <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- kavithan - 11-23-2004 எனியாவது புரிந்து கொள்ளட்டும் குருவியின் கருதுக்கள் பற்றி.. அனைத்து பகுதிகளிலும் அனைத்து தலைப்புக்களுக்கும் விளக்கமாக குருவிகள் கருத்து எழுதுகின்றன. குருவிகள் எல்லோருக்கும் பரீட்சை வைப்பது இல்லை ஆனால் சிலர் அவையின் பரீட்சையில் மாட்டி இருகிறீர்கள். இங்கு தற்போது சிறந்த கருத்தாடல்களை குருவி, சிறீரமணன், யூடி, தமிழினி , நிதர்சன் போன்றோர் வழங்கி வருகிறார்கள். அவர்கள் தொடர்ச்சியாக அவர்கள் பாணியில் நல்ல கருதுக்களை வழங்க வாழ்த்துகிறேன். - MEERA - 11-23-2004 Quote:எனியாவது புரிந்து கொள்ளட்டும் குருவியின் கருதுக்கள் பற்றி.. அனைத்து பகுதிகளிலும் அனைத்து தலைப்புக்களுக்கும் விளக்கமாக குருவிகள் கருத்து எழுதுகின்றன. குருவிகள் எல்லோருக்கும் பரீட்சை வைப்பது இல்லை ஆனால் சிலர் அவையின் பரீட்சையில் மாட்டி இருகிறீர்கள் Quote:குருவிகளின்ரை யதார்த்தமான சிந்தனை பலருக்கு ரத்தக்கொதிப்பை இந்தக்களத்திலை உருவாக்கினது ஏதோ உண்மைதான். ஆனால் குருவியின்ரை யதார்த்தப்போக்கை இந்தக்கருத்தாளர்கள் விளங்காமல்தான் குய்யோ முறையோ எண்டு குமுறுறதுதான் உண்மை.தம்பியவை வல்லை உங்களுக்கு புத்திமதி சொல்லவரேலை தமிழீழம் தமிழ்த்தேசியமெண்டு நீட்டி முழக்காமல் யதார்த்தத்துக்கு என்ன தேவையோ அதைச் செய்யுங்கோ.மைதானம் கட்டினாலும் கட்டுங்கோ நாலைஞ்சு அனாதைப் பிள்ளையளை வாழ வைக்கிறதெண்டாலும் வையுங்கோ அதுகளைச் சொல்லிக் காட்டியே நாறடிக்காதைங்கோ உங்கள் எல்லோருக்கும் முதலில ஒரு அறிவுறுத்தல். மற்றவைகளை பற்றி கதைக்காமல் நீங்கள் என்ன செய்கிறீ÷கள் என்ன கருத்தை யாருக்கு வைக்கிறீ÷கள் என்பதை யோசித்து விட்டு வையுங்கள். ஒட்டு மொத்த புலம் வாழ் தமிழ÷களையும் கொச்சைப்படுத்தாதீ÷. - MEERA - 11-23-2004 Quote:இணைந்தது: 15 சித்திரை 2003 - MEERA - 11-23-2004 Quote:மேற்கோள்: சபேஸ் இதன் அ÷த்தம் என்ன? - kuruvikal - 11-23-2004 புலம் வாழ் தமிழர்கள் என்பதிலும் பார்க்க புலம் வாழ் தமிழீழத்தமிழர்கள் என்பது கனதி கூடியதாக இருக்கும்...! புலத்தமிழீழத் தமிழர்கள்... இதைக் கொஞ்சம் கருத்தில் கொள்வது தமிழர்கள் நாடுநாடாக பிரிந்து நிற்க முயல்வதைத் தடுக்கும்....அது தாயக உறவுகளின் தாகத்தை தீர்க்க அதிக பலம் கொடுக்கும்....! புலத்தமிழர்கள் தாயகத்தமிழர்களில் இருந்து பிரிந்து நிற்கவோ பிரித்துக்காட்டப்படவோ அனுமதித்தல்... அவர்கள் தங்களைத்தாங்களேயும் தங்கள் உறவுகளையும் பலவீனப்படுத்துவதாயே அமையும்....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Sabesh - 11-24-2004 MEERA Wrote:Quote:மேற்கோள்: குருவிகளின் இக்கருத்துக்கு முன்னர், தாய்மண் எழுதிய கருத்துக்களை பார்த்தீர்களேயானால் அவர் (தாய்மண்), குருவிகள் தாயகத்தில் இருப்பதாக எண்ணித்தான் கருத்துக்களை வைத்திருக்கிறார். ஆதலால் குருவிகள் அதே வளியிற்ச் சென்று "காலை விட்டு ஆழம் பார்த்திருக்கிறார்". குருவிகள் சொல்ல வாறதிற்கு தகுந்த உதாரணம் (எங்கள் வீட்டில் நடந்ததை) சொல்கிறேன்: இது சில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது: அப்பா: எங்களுக்கெண்டு ஒரு நாடு வேண்டும். அப்படியொரு நாடு இருந்திருந்தால், ஏன் இந்தக்குளிர் நாட்டில இருக்க வேணும்? அங்கை பச்சைத்தண்ணிய குடிச்சிட்டு கிடந்தாலும் நிம்மதி. நான்: இப்ப இருக்கிற நிலமையில (இது சமாதான ஒப்பந்தத்திற்கு முன்) அடிபட்டு தான் நாடு எடுக்க வேணும். அப்பா: அதுக்கு தானே பெடியள் அடி படுறாங்கள். நான்: எந்த பெடியள்? ஏன் உங்கட பெடியளால அடிபடேலாதோ? 1 க்கு 3 பேர் இருக்கிறோம்... சரி 1 வேண்டாம் 2 பெடியளை வைச்சுக்கொண்டு ஒரு பெடியனை போராட அனுப்புங்கோவேன். சரி எந்த பெடியனை அனுப்பிறது எண்டு சங்கடமாய் இருந்தால் சொல்லுங்கோ நான் போறேன். அப்பா: உந்த வியாக்கியானத்தை விட்டுட்டு போய் படி. நான்: அப்படி எண்டால் ஊராவீட்டு பெடியள் சாகவேணும். உங்கடை பிள்ளையள் பாதுகாப்பான இடத்தில இருந்து படிச்சிட்டு ஆரேன் போராடிச் செத்து, ஊனமாகி நாடுபிடிக்க, உங்கட பிள்ளையள் அங்க விசிற் பண்ணி நாடு பாத்து நாலு கதை சொல்ல வேணும். அப்பா: கதைக்கு கதை சொல்லாமல், கதையை நிப்பாட்டிப் போட்டு போய் படி. அப்பாவும் நானும் அந்த விடயத்தில் மௌனம். கிட்டடியில் நடந்த விஷயம்: (அப்பா பொங்கு தமிழுக்கு போனவர், எனக்கு போகக் கிடைக்கவில்லை<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->அப்பா: நல்ல சனம்... ஒரு ஒண்டு ஒண்டகால் இலச்சம் சனம். நான்: அதாலை இப்ப என்னத்தைச் சாதிச்சோம்? அப்பா: கனேடிய அரசாங்கத்திற்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் இப்ப விளங்கும் தானே. நான்: என்ன விளங்கும்? தமிழாக்கள் மற்றாக்களின்ரை கோடிக்கை நிண்டு கொண்டு வீர வசணம் பேசுவினம் எண்டோ? அவ்வளவு அக்கறை இருக்கிறநிங்கள் எண்டால்... வந்த 1 இலட்சத்து 20 ஆயிரம் சனத்தை 12 ஆல பிரிக்க 10 ஆயிரம் சனம் வரும். ஒவ்வொரு 10 ஆயிரம் சனமும் ஒவ்வொரு மாத வக்கேஷன் (விடுமுறை) எடுத்துக்கொண்டு போய், இளம் ஆக்கள் போராட, உங்கள மாதிரி முதியோர்கள் போராட்டத்திற்கு உதவி செய்ய 1 வருடத்தில நாடு கிடைச்சிடும். 1 மாத விடுமுறையில எங்கேயோ எங்கேயோ எல்லாம் போறிங்கள் அங்கை போய் போராடினா நாடு கிடைச்சிடும். 1 மாத விடுமுறை எடுத்தால் இஞ்சை ஒணுடும் குடி முழுகிப் போகாதே. என்ன மாதிரி உங்களுக்கு ரிக்கற் ஏற்பாடு செய்யட்டோ? அப்பா: உனக்கு ஒரு கதைக்கு ஒரு கதையச் சொன்னா, உடனை வியாக்கியானம் சொல்ல தொடங்கு. நான்: இது வியாக்கியானம் இல்லை அப்பா. 10 ஆயிரம் பேர் ஒவ்வொரு மாதமம் அங்கை போய் போராடினா வெற்றி வரும். அதை விட்டுட்டு ஆற்றையேன் கோடிக்கை நிண்டு கொக்கரிக்கிறதிலை அர்த்தம் இல்லை. ஒவ்வொருவரும் 1 மாத விடுமுறையில (எல்லா வேலைத் தளத்திலும் 1 மாத விடுமுறை தருவார்கள் தானே) அங்கை போய்ப் போராடுவோம். மிகுதி உள்ள 11 மாதமும் உழைத்து எங்களால் முடிந்த பண உதவியையும் செய்வொம். நாடும் கிடைக்கும், தாய்மண் சொன்ன மாதிரி கட்டுமான பணிகளும் நடக்கும். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> என்ன சொல்லுறியள் :?: நான் ரெடி... நீங்கள் ரெடியோ :?: :?: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> இதையே தான் குருவிகளும் சொல்கின்றன. -சபேஷ்- - MEERA - 11-24-2004 முதலில் நீங்கள் செய்து காட்டுங்கள்... - Sabesh - 11-24-2004 MEERA Wrote:முதலில் நீங்கள் செய்து காட்டுங்கள்... ஒராள் போய் ஒண்டும் பண்ண முடியாதுங்கோ... ஒட்டு மொத்தமாய் எல்லாரும் பேக வேணும். -சபேஷ்- - MEERA - 11-24-2004 Quote:ஒராள் போய் ஒண்டும் பண்ண முடியாதுங்கோ பண்ணலாம் போங்கள் - kuruvikal - 11-24-2004 சபேஸ் அழகாக நிகழ்காலத்தை பிரதிபலிக்கும் வகையில் உதாரணத்துடன் உங்கள் கருத்தை வைத்தீர்கள்... யதார்த்தம் என்பது பலருக்கும் கசக்கும் விடயமானதால்தான் பின்னைடைவுகள் சகஜமாகின்றன...! அந்தப் பின்னடைவுகளுக்குள் குளிர்காய விரும்புவர்களையும் போராட்ட நெருப்பில் குளிர்காய்வோரையும் அனைத்துப் போராட்ட வரலாறுகளும் கண்டுதான் உள்ளன...அதற்கு தமிழீழ விடுதலைப் போராட்டமும் விதிவிலக்கல்ல..! யதார்த்தத்தை தரிசிக்க விரும்பாதவர்கள் அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும் அல்லது அவர்களா உணரும் போது தரிசிக்கட்டும் ஆனால் யாதார்த்தத்தை தரிசிக்க விரும்புபவர்களுக்காக அதை சொல்ல எல்லோருக்கும் சுதந்திரம் உண்டு....அதையே நீங்கள் உங்கள் கருத்தின் மூலம் வலியுறுத்தி உள்ளீர்கள்....அதுவே இன்று அவசியமும் கூட.....! போராட்டச் சூழலில் உள்ளவர்கள் போல போராட்டச் சூழலில் இருந்து விலகி உள்ள மக்களையும் விழிப்புணர்வு படுத்துவதற்கு....! இது கூட போராட்டத்தைப் பலப்படுத்த தாங்கள் செய்யும் ஒரு சிறு உதவி தான்....!
- MEERA - 11-24-2004 இங்கயிருந்து கொண்டு காசு அனுப்பியோ அல்லது மற்றவ÷களுக்கு அறிவுரை கூறுவதை நிறுத்தி ...? ஆயுதம் துாக்கி போராடுங்கள். இங்கயிருந்து கொண்டு வாய் வீச்சு காட்ட வேண்டாம். - Nanthaa - 11-25-2004 <!--QuoteBegin-MEERA+-->QUOTE(MEERA)<!--QuoteEBegin-->இங்கயிருந்து கொண்டு காசு அனுப்பியோ அல்லது மற்றவ÷களுக்கு அறிவுரை கூறுவதை நிறுத்தி ...? ஆயுதம் துாக்கி போராடுங்கள். இங்கயிருந்து கொண்டு <!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->வாய் வீச்சு காட்ட வேண்டாம்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->.<!--QuoteEnd--></div><!--QuoteEEnd--> நீங்கள் பண்ணாத வாய்வீச்சா இங்கு நடக்குது. குருவி குருவிதான். அப்படிப்போடு.....போடு.......அப்படிப்போடு.....குருவி....சபேஷ்.... |