Yarl Forum
முகத்தார் வீடு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: நகைச்சுவை (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=38)
+--- Thread: முகத்தார் வீடு (/showthread.php?tid=2981)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21


- ragavaa - 11-10-2005

sinnappu Wrote:காய் ராகவா கவ் ஆர் யு யங்போய்
:wink: :wink: :wink: :wink: :wink: :wink:
ம்ம்.. நான் நலமாய் இருக்கிறன். நீங்கள் நலமா?


- Birundan - 11-10-2005

இருவருடை நகைச்சுவையும் அருமையாக இருக்கிறது தொடர வாழ்த்துக்கள்.


- அருவி - 11-10-2005

சாத்திரி நீங்க கலியாணங் கட்டி மகிழ்வா வாழ்ந்தா காணுமா, எங்களையும் கொஞ்சம் வாழவிடுங்களன். :wink:
மதமா மனமா முக்கியம். மதம் என்பது ஒவ்வொருவரின் வாழ்வையும் நல்வழிப்படுத்தத்தானே தவிர வேறொன்றுமில்லை. இதில் அவர்கள் எந்த மதத்தைச் சார்ந்தால் என்ன? மதமா திருமணம் செய்யப்போகிது....
இந்த மதத்தால் தம் வாழ்வினை இழந்த காதலர்கள் மகிழ்வோடா வாழ்கிறாார்கள். சமூகத்திற்காய், தாய் தந்தைக்காய் தம் கவலை மறைத்து வாழ்கிறார்கள். Idea

சாத்திரி நீங்களும் முகத்தார் தாத்தா போல மிக நேர்த்தியாக நகர்த்தியுள்ளீர்கள். நீங்கள் எடுத்த கருப்பொருள் மிக நன்று. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

நகைச்சுவையும் இரசிக்கக் கூடிவாறு மிக நன்றாாக இருக்கிறது.
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- sathiri - 11-10-2005

பாராட்டிய அனைவருக்கும் நன்றிகள் அருவி இப்பதான் தவழுறுறீர் அதுக்கை கலியாண அவசரமா நேரம் வரேக்கை முக்தானிட்டை குறிப்பை குடும் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- அருவி - 11-10-2005

sathiri Wrote:பாராட்டிய அனைவருக்கும் நன்றிகள் அருவி இப்பதான் தவழுறுறீர் அதுக்கை கலியாண அவசரமா நேரம் வரேக்கை முக்தானிட்டை குறிப்பை குடும் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

இப்பயே உங்களப்போல ஆக்கள மாத்தினாத்தானே நாம வளந்து கலியாணம் கட்டும் போது குறுக்க வராம நிப்பினம். வளந்தாப்பிறகு பாப்பம் என்று விட்டா கட்டையிலதான் நமக்குக் கலியாணம் நடக்கும். :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- tamilini - 11-10-2005

அருவி நல்லாச்சொன்னியள் போங்க. இப்படி பபாக்கள் தான் மதசாதி மரங்களில ஏறி நிக்கிற தாத்தாக்களை இறக்கவேணும். சாத்திரியார் இப்படி நல்ல கதைகள் எழுதுங்கள் இங்கும் பலர் சிந்திக்கணும். :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- அனிதா - 11-11-2005

ஆகா சாத்திரி அண்ணா..எழுதியிருக்கார்... நல்ல கருத்தோடு , நகைச்சுவையா எழுதியிருக்குறீங்கள் நல்லாயிருக்கு.... தொடர்ந்து எழுதுங்க... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- தூயவன் - 11-11-2005

sathiri Wrote:பாராட்டிய அனைவருக்கும் நன்றிகள் அருவி இப்பதான் தவழுறுறீர் அதுக்கை கலியாண அவசரமா நேரம் <b>வரேக்கை முக்தானிட்டை குறிப்பை குடும்</b>

ஆரியக் கூத்தாடினாலும் சாத்திரியார் தொழிலை மறக்கமாட்டார் போல :wink:


- MUGATHTHAR - 11-14-2005

<b><span style='font-size:25pt;line-height:100%'>முகத்தார் வீடு அங்கம் 9</b></span>
(ஊரில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தின் கரு..)

(பொண்ணம்மா புதுச் சீலை உடுத்துக் கொண்டு வெளிக்கிட்டு வாற)

பொண்ணம்மா : என்ன நீங்கள் இன்னும் வெளிக்கிடேலையே?

முகத்தார் : எங்கை போறதுக்கு?

பொண்ணம்மா : முந்த நாள் எங்கடை சித்தப்பு வந்து பணச்சடங்குக்கு சொல்லிப் போட்டு போனவரெல்லோ. . . .

முகத்தார் : என்ன திடீரெண்டு பணச்சடங்கு வைக்கிறார் என்ன விசயம்

பொண்ணம்மா : அவற்ரை 2 பிள்ளைகளும் வெளியிலைதானே இனி வீட்டிலையும் ஒரு விசயமும் வராது ஊருக்கை குடுத்த காசுகளை எப்படி எடுக்கிறது அதுதான்

முகத்தார் : உன்ரை சித்தப்புன்ரை நிலையும் பிச்சை எடுக்கிற நிலையாப் போச்சு என்ன

பொண்ணம்மா : சும்மா விசர்கதையை விட்டுட்டு வாறீயளோ இல்லையோ?

முகத்தார் : இஞ்சை சும்மா யோசிச்சுப்பார் எங்கடை கடைசிப்பெடியன்ரை கலியாணத்துக்கு நாங்கள் 2பேரும் போய் சொல்லியும் உன்ரை சித்தப்பு வரேலை என்னை மதிக்காத நாய்களின்ரை வீட்டுக்கு நான் வர மாட்டன்

பொண்ணம்மா : என்ன எங்கடை சொந்தங்களை நாய் எண்டு சொல்லுறீயள்

முகத்தார் : அதுக்கேனப்பா நீர் கோவப்படுகிறீர்; நாய் எல்லோ கோவப்பட வேணும்

பொண்ணம்மா : வராட்டி நில்லுங்கோ நான் போட்டு வாறன்

(பொண்ணம்மா போய் கொஞ்ச நேரத்திலை சாத்திரியும் சின்னப்புவும் வருகினம்)
சின்னப்பு : என்ன முகத்தான் வீட்டிலை மனுசி இல்லைப் போல றேடியோ பிலத்துப் பாடுது

முகத்தார் : சொந்தத்துக்கை ஏதோ பணச்சடங்கு எண்டு போட்டாள் பின்னேரம் தான் ஆள் வரும்

சாத்திரி : உங்களுக்கொரு விசயம் தெரியுமே இவர் கந்தப்புன்ரை பெடி மருந்து குடிச்சிட்டுதாம்

முகத்தார் : இது எப்ப நடந்தது?

சாத்திரி : நேற்று ராத்திரி ஆஸ்பத்திரிக்கு உடனை கொண்டு போணதாலை ஆள் தப்பியிட்டுது இப்பதான் வீட்டை கொண்டு வந்திருக்கினம்

சின்னப்பு : அட. . . நல்ல மனுசனப்பா கந்தப்பு ஒருக்கா போய் பாத்திட்டு வருவமே

(3வருமாக கந்தப்பு வீட்டுக்கு வருகிறார்கள்)
சின்னப்பு : கந்தப்பு என்ன நடந்தது விசயம் கேள்விப்பட்டவுடனை திக் எண்டு இருந்திச்சு

கந்தப்பு : அதை ஏன் கேக்கிறீங்கள் ஒரு பெடியன்தானே எங்களோடையே இருக்கட்டுமெண்டு வெளிநாட்டுக்கும் அனுப்பாமல் வைச்சிருந்தம் கடைசிலை இப்பிடியாப் போச்சு

முகத்தார் : என்ன சோதனை ஏதாவது பெயிலோ. . ?

கந்தப்பு : அப்பிடியெண்டா இவன் எத்தினை தரம் மருந்து குடிச்சிருக்க வேணும் இது இந்த இழவு விழுந்த லவ் வாம்

சாத்திரி : பிள்ளையள் வளந்திட்டா நீங்க கொஞ்சம் கண்காணிக்க வேண்டாமோ எங்கை போறார் எங்கை வாறர் எண்டு

கந்தப்பு : காலேலை எழும்பினவுடனை அம்மன் கோயிலுக்குப் போறான் வீட்டுக்கு வந்தா கதவைச் சாத்திப் போட்டு அறைக்கிலை இருக்கிறான் நாங்களும் ஏதோ படிக்கிறான் எண்டு நினைச்சம்

சின்னப்பு : இப்ப கோயிலுக்கு போற ஆட்களைத்தான் வடிவா கண்காணிக்கனும் கண்டியளோ உந்த மருதனாமடத்திலை இருக்கிற ஆஞ்சநேய கோயிலை பாத்தியளே முழுக்க பெடி பெட்டைதான் நிக்குது

முகத்தார் : யாரோ அள்ளிவிட்டிருப்பான் ராமன் சீதையைப் போல உங்கடை காதலையும் அஞ்சிநேயர் சேர்த்து வைப்பார் எண்டு ஆனா அந்த மனுசன் தனிய இருக்கிறன் எண்டு சூடாகி பிரிச்சு வைச்சிட்டால்.. . .

சாத்திரி : இது கோயில் பேர் அடிபடுகிறதுக்கு ஜயர்மாரும் கோயில்காரரும் ஒரு கதையைக் கட்டி விட்டிருப்பினம்

முகத்தார் : முந்தி தெல்லிப்பளையிலை துர்க்கையம்மன் கோயிலுக்கு தொடர்ந்து 7 செவ்வாய் போனா கலியாணம் நடக்காத ஆட்களுக்கு நடக்கும் எண்டு சனமும் விழுந்தடிச்சுப் போகேலையோ. .

சாத்திரி : செவ்வாய் கிழமேலை கோயிலுக்கெண்டு தனி மினிபஸ்சுகளும் வானுகளும் ஓடினதுதானே

சின்னப்பு : 7கிழமை தொடந்து கோயிலுக்குப் போண எப்பிடியும் ஒண்டு மாட்டுப்படும்தானே இதென்ன புதினம்

கந்தப்பு : இது வந்த அப்பிடியில்லை படிக்கிற இடத்திலையே சினேகிதமாம் ஏதோ 1 வருஷமா இந்த கூத்து நடந்திருக்கு எங்களுக்கு தெரியேலை

முகத்தார் : இப்ப மருந்து குடிக்கிற அளவிலை என்ன நடந்தது?

கந்தப்பு : நான் அறிஞ்ச அளவிலை பெடிச்சிக்கு கலியாணம் பேசி வீட்டாலை வெளிநாட்டு மாப்பிளை ஒண்டைப் பாத்திருக்கிறாங்கள்

சாத்திரி : அதுக்கென்ன பெட்டை விசயத்தை வீட்டிலை சொல்லியிருக்கலாம் தானே

கந்தப்பு : அப்பிடியெண்டாத்தான் பிரச்சனையில்லையே இது பெடிச்சியும் வெளிநாட்டு மாப்பிளை எண்டவுடனை இவரை வெட்டி விட்டுட்டுது

முகத்தார் : பாத்தியளே வெளிநாட்டு மோகம் எந்த அளவிலை எங்கடை ஆட்களைப் பிடிச்சிருக்கெண்டு

சின்னப்பு : இதெப்பிடி மகனுக்கு தெரியவந்திச்சு?

கந்தப்பு : பெடிச்சித்தான் இவரை நேரை கண்டு சொல்லியிருக்கு தனக்கு வெளிநாட்டு மாப்பிளையை பேசியிருக்கு பழசையெல்லாம் கெட்டகனவா நினைச்சு மறந்துவிடச் சொல்லி.

சாத்திரி : சா. . .இவ்வளவு துணிச்சலா பெட்டையள் இருப்பளவை எண்டு நான் நினைச்சுக்கூடப் பாக்கேலை

முகத்தார் : அப்ப இதைக் கேட்டுப் போட்டுத்தான் பெடிப்பிள்ளையர் மருந்தைக் குடிச்சிருக்கிறார் போல கிடக்கு

சின்னப்பு : சரியான லூசுப் பெடியனாக்கிடக்கு இதில்லாட்டிக்கு இன்னோண்டு

சாத்திரி : சின்னப்பு என்ன எல்லாரும் உன்னை மாதிரி எண்டு நினைச்சியே பெடியன் மனசாலை காதலிச்சபடியாத்தான் தாங்கிக் கொள்ளமுடியேலை

சின்னப்பு : ஆ. . .உவர் மாத்திரம்தான் மனசாலை காதலிக்கிறாராம் மற்றஆட்கள் எல்லாம் . . .

முகத்தார் : சின்னப்பு பெம்பிளையள்தான் இளகிய மனம் கொண்டஆட்கள் ஆண்களால் ஏமாத்தப்படுபவர்கள் எண்டுதான் கதையள் படங்களிலை காட்டுறாங்கள் ஆனா இந்த கலிகாலத்திலை எல்லாம் தலைகீழா நடக்குது

சின்னப்பு : பெம்பிளைகளே காதலை தூக்கியெறிஞ்சுட்டுப் போகேக்கை பெடியள் என்னத்துக்கு கோழையள் மாதிரி தற்கொலை செய்யவேணும் எண்டு கேக்கிறன் இதைவிட நல்ல வாழ்க்கையை அமைச்சுக் கொள்ளுறதுதானே

சாத்திரி : இது கதைக்கிறதுக்கு நல்லா இருக்கு அந்த வலிகளை அனுபவிச்சுப் பாத்தாத்தான் விளங்கும்

சின்னப்பு : என்ன சாத்திரி வலிகள் எண்டு சொல்லுறாய் அப்ப 1க்கு மேலை இருந்திருக்குப் போல

முகத்தார் : கந்தப்பு நீங்க இப்ப சொல்லுங்கோ பெடியனுக்கு கலியாணத்துக்கு லைனிலை கொண்டு வந்து நிப்பாட்டுறன்

சாத்திரி (ரகசியமாக) டேய் முகத்தான் வந்த இடத்திலையும் உன்ரை வாசியைத் தான் பாப்பாய் போல கிடக்கு.

கந்தப்பு : அதைப்பிறகு பாப்பம் இப்ப நீங்க ஒருக்கா பெடியனுக்கும் கொஞ்ச புத்திமதி சொல்லிட்டு போனீங்கள் எண்டா நல்லம்

(அறைக்குள் மகன் ரூபனைச் சந்திக்க வருகிறார்கள்)
சாத்திரி : என்ன தம்பி மடைத்தனமான வேலை செய்திருக்கிறீர் வீட்டிலை அம்மா அப்பாவை ஒருக்கா யோசிச்சு பாத்திரோ. . . ?

ரூபன் : இல்லை ஜயா என்னை முழுசா நம்ப வைச்சு ஏமாத்தியிட்டாள் தாங்கமுடியலை

முகத்தார் : எல்லாம் நல்லதுக்கு எண்டு எடும் தம்பி நல்லாப்படிச்சு ஒரு உத்தியோகத்திலை சேரும் உம்மட்டை இப்ப ஒண்டுமில்லை எண்டபடியாத்தானே இதெல்லாம்

சின்னப்பு : இப்பத்தைய காதலுக்குத் தம்பி பொக்கெட் கனமா இருந்தாத்தான் எடுபடுகுது

ரூபன் : அப்பான்ரை பொக்கெட்டுக்கை களவெடுத்து நானும் எத்தினை சாமான்கள் வாங்கிக் குடுத்திருப்பன்

சாத்திரி : என்ன மிஞ்சிப் போல கோயிலை தலைக்கு குத்ததிற கிளிப்பும் ரப்பர் காப்பும் வாங்கிக் குடுத்திருப்பீர்

சின்னப்பு : வெளிநாட்டு மாப்பிளையள் டெலிபோனிலை கதைக்கேக்கையே 20 பவுண் அட்டியலை தூக்கிக் காட்டுறாங்கள் பிறகெங்கை. .

முகத்தார் : காதல்வந்து தம்பி மனசைப் பாத்து வாறது உப்பிடி காசுக்காவும் பகட்டு வாழ்க்கைக்காகவும் வாறது காதலில்லை அந்தவகையிலை உம்மை காதலிக்கிறன் எண்டு சொன்னவவும் உம்மடை மனசைப் பாக்கேலை இப்பிடியான ஆளை கலியாணம் கட்டினால் கொஞ்ச நாளிலிலே உம்மடை சந்தோஷம் பறந்திடும் எல்லாம் நல்லதுக்கு எண்டு எடுத்துக் கொண்டு ஒரு நிலைக்கு வரப்பாரும்

சாத்திரி : (ரகசியமாக) முகத்தான் நேரமாச்சு அங்கை பார் சின்னப்புக்கு கை கால் நடுங்க வெளிக்கிடுது ஆளை கூட்டிக் கொண்டு டக் கெண்டு மாறுவம்

முகத்தார் : அப்ப தம்பி நாங்கள் வரப் போறம்.. சொன்னதுகள் ஞாபகத்திலை இருக்குதுதானே. .


- RaMa - 11-14-2005

அங்கிள்.. பாகம் 9 ம் சூப்பர்... இதில் நகைச்சுவையை விட மனதுக்கு கொஞ்சம் கஸ்டமாயிருக்கு... ஏன் தான் தாயகத்தில் இருப்பவர்கள் வெளிநாட்டுக்கு வருவதற்கு உண்மை காதல் பாசங்கள் எல்லாவற்றையும் அடகு வைக்கிறார்களோ தெரியாது.?


- SUNDHAL - 11-14-2005

நல்லா இருக்கு முகத்தார் அங்கிள்...இந்த பொண்ணுங்களே இப்பிடி தான்...சா..................... :evil: :evil: :evil: :evil:


- RaMa - 11-14-2005

SUNDHAL Wrote:நல்லா இருக்கு முகத்தார் அங்கிள்...இந்த பொண்ணுங்களே இப்பிடி தான்...சா..................... :evil: :evil: :evil: :evil:


:twisted: ஏன் காதலன் ஏமாற்றியதால் காதலி தற்கொலை என்று தினமனியில் ஒரு செய்தியும் பார்க்கலையா சுண்டல்?


- tamilini - 11-14-2005

முகம்ஸ் கதையை மாத்திச்சொல்லுங்கள் சொல்லுங்கள் சொல்லுங்கள் சொல்லுங்கள் சொல்லுங்கள் சொல்லுங்கள் சொல்லுங்கள் சொல்லுங்கள் சொல்லுங்கள்......!

பொண்ணு ஏமாத்தினதா ஏன் வந்திச்சு. உண்மையில ஆணுதான் ஏமாத்தினது அப்படித்தான் பொன்ஸ் சொன்னவா இனி இப்படி வந்திச்சுக்கதை பொன்ஸ் ரசிகர் மன்றத்தில இருந்து படையே வரும்.

அது சரி இது யாற்ற அனுபவம்..?? நல்லாய் சிரிச்சம் வாசிச்சு.. :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- tamilini - 11-14-2005

SUNDHAL Wrote:நல்லா இருக்கு முகத்தார் அங்கிள்...இந்த பொண்ணுங்களே இப்பிடி தான்...சா..................... :evil: :evil: :evil: :evil:

ஆகா கிளம்பீடுவாங்களே எங்க சந்தர்ப்பம் கிடைக்கும்எ ன்று.. :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- SUNDHAL - 11-14-2005

RaMa Wrote:
SUNDHAL Wrote:நல்லா இருக்கு முகத்தார் அங்கிள்...இந்த பொண்ணுங்களே இப்பிடி தான்...சா..................... :evil: :evil: :evil: :evil:


:twisted: ஏன் காதலன் ஏமாற்றியதால் காதலி தற்கொலை என்று தினமனியில் ஒரு செய்தியும் பார்க்கலையா சுண்டல்?



பாக்கல எல்லாம் பொண்ணுங்க அல்வா கொடுத்த செய்தி தான் பத்திரிகையிலயும் வருது எனக்கு தெரிந்தவாகளுக்கும் நடத்து இருக்கு...இப்படியான பொண்ணுங்கள பத்தி போட்ட முகத்தார் அங்கிளுக்கு ஒரு ஒஒஒஒஒ போடலாம்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- MUGATHTHAR - 11-14-2005

தம்பி ராசா ஏற்கனவே படையோடை வாற தெண்டு சனம் பயப்பிடுத்தினம் இதுக்கை நீர் வேறை உசுப்பேத்திக்கொண்டு நிக்கிறீர் என்ரை பலனை ஒருக்கா பாக்கவேணும் பெம்பிளை ராசி ஒத்துவருகுதில்லை ஏன் எண்டு .....(வீட்டிலைதான் அப்பிடியெண்டா இஞ்சையுமா......


- vasanthan - 11-14-2005

SUNDHAL Wrote:
RaMa Wrote:
SUNDHAL Wrote:நல்லா இருக்கு முகத்தார் அங்கிள்...இந்த பொண்ணுங்களே இப்பிடி தான்...சா..................... :evil: :evil: :evil: :evil:


:twisted: ஏன் காதலன் ஏமாற்றியதால் காதலி தற்கொலை என்று தினமனியில் ஒரு செய்தியும் பார்க்கலையா சுண்டல்?



பாக்கல எல்லாம் பொண்ணுங்க அல்வா கொடுத்த செய்தி தான் பத்திரிகையிலயும் வருது எனக்கு தெரிந்தவாகளுக்கும் நடத்து இருக்கு...இப்படியான பொண்ணுங்கள பத்தி போட்ட முகத்தார் அங்கிளுக்கு ஒரு ஒஒஒஒஒ போடலாம்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

முகத் தாருக்கு ஜேஜே :wink: <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- Niththila - 11-14-2005

முகத்தார் அங்கிள் என்ன தைரியமா இப்படி எழுதினனீங்க மறுப்பறிக்கை விடேல்லை எண்டா பொன்னம்மா அன்ரிக்கு சொல்லிப்போடுவன்


- Mathan - 11-14-2005

சாத்திரி மற்றும் முகத்தார் எழுதியவை நல்லாயிருக்கு.
இந்திரஜித்தின் கதையிலும் ஒரு காதல் தோல்வி, முகத்தாரின் தொடரிலும் ஒரு காதல் தோல்வி. இந்த வாரம் காதல் தோல்வி வாரம் போலிருக்கு.


- KULAKADDAN - 11-14-2005

முகத்தார் வீட்டை தொடர்ந்து வாசித்துவருகிறேன். முகத்தாரும் சாத்திரியாரும் நல்லா எழுதுகிறீர்கள். சிரிப்போடு சிந்திக்கவும் வைக்கும் தொடர்கள்.

நீங்கள் அங்கம் 9 இல சொன்ன நிகழ்வு சாதாரணமானது, இதுக்கு போய் மருந்துகுடிச்சா என்ன சொல்லிறது.

முதலில் காதலில் தோல்வி என்றால் சாதல் என்பதை எங்கடை ஆக்கள் மறக்க வேணும்.