![]() |
|
சங்கரியார் விலக்கல்...! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: சங்கரியார் விலக்கல்...! (/showthread.php?tid=8357) |
- kuruvikal - 02-22-2004 சங்கரியார் வரவிருக்கும் சிறிலங்காவின் பாராளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணத்தில் சுயேட்சையாக போட்டி இட இருப்பதாக செய்திகள் கூறுகின்றன...அவருக்கும் அவரது கட்சியின் (மிதவாதக் கட்சி என்று சொல்லப்படும் தமிழர் விடுதலைக் கூட்டணி) ஏனைய உறுப்பினர்களும் இடையே நிலவும் பலத்த கருத்து வேறுபாடுகள் காரணமாக அவரால் அவரது கட்சியிலேயே நின்று தேர்தலில் போட்டி இடமுடியாத பரிதாப நிலை நிலவுகிறது....! சங்கரியார் சுயேட்சையாக போட்டி இடுவது எதற்கு....அது தேவையா....இதனால் அவர் தன் இனத்திற்கு சாதிக்கப் போவது என்ன...அல்லது இன்னும் தமிழர்கள் மீது சவாரிவிட்டு பிழைப்பு நடத்தலாம் என்று நினைக்கின்றாரா....?! தமிழ்மக்கள் தமது அரசியல் கோரிக்கைகளின் மீது தாம் கொண்டுள்ள திடத்தை உறுதியை பலத்தை சர்வதேசத்திற்கு காட்டி நிற்க வேண்டிய இந்தத் தருணத்தில் இப்படியான கீழ் நிலை அரசியல் சித்து விளயாட்டுக்கள் தேவையா....?! இன்று தமிழ்மக்களுக்கு மாறுக்கருத்து அரசியல் என்று ஒன்று தேவையா...அப்படியாயின் அவர்களின் மக்கள் தொடர்பான அரசியல் நிலைப்பாடு என்ன...?! அதனால் மக்கள் பெறப்போகும் நன்மைகள் என்ன....???! இதற்கிடையில் தான் வரவிருக்கும் சிறிலங்காப் பாராளுமன்றத் தேர்தலில் போட்டி இடமாட்டேன் என்றும்...தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்றம் அனுப்ப ரணில் உறுதி செய்துள்ளதாகவும் செய்திகள் சொல்லப்பட்ட நிலையில் தான் கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் தேர்தலில் குதிக்கப் போவதாக முன்னாள் இந்துக்கலாச்சார அமைச்சர் மகேஸ்வரன் தற்போது கூறியுள்ளதாகச் செய்திகள் வருகின்றன....! கொழும்பு வாழ் தமிழ்மக்களின் நலனை முன்னிட்டு அவர் இத்தேர்தலில் குதிக்கிறாரா...அல்லது ஐக்கிய தேசியக் கட்சிக்கு கொழும்பு வாழ் தமிழர்களிடத்தில் ஆதரவு தேடுவதற்கான முயற்சியா...அல்லது வடக்கென்ன மேற்கிலும் மகேஸ்வரன் நின்றால் வெற்றிதான் என்று இறுமாப்புக்காட்ட போட்டி இடுகிறாரா....கொழும்பில் இவர் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டி இடுவதற்கான அரசியல் நோக்கம் என்ன விளக்குவாரா.....?! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: :roll:
- PAAMARAN - 02-22-2004 குருவிங்க நீங்க உங்க வசதிக்காக ஒன்றை மறந்துபுட்டீங்களோ இல்லை மறைச்சுபுட்டீங்களோ தெரியல்ல... கடந்த தேர்தலில் மண்ணெண்னை தமிழர் தேசியத்துக்காக யாழ்பாணத்தில நிக்கேல்லங்க ''போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம்'' என்டு ஒரு காலத்தில முழக்கம் போட்ட யுஎன்பி கட்சியில தானுங்க நின்டவருங்க... அப்போ ஏனுங்க சொல்லலை மண்ணெண்ணை இங்கை உந்த கட்சியில நிக்கவேண்டாம். இல்லை அப்ப கேட்டிருக்கலாம் உங்க நியாயத்தை..............''கொழும்பு வாழ் தமிழ்மக்களின் நலனை முன்னிட்டு அவர் இத்தேர்தலில் குதிக்கிறாரா...அல்லது ஐக்கிய தேசியக் கட்சிக்கு கொழும்பு வாழ் தமிழர்களிடத்தில் ஆதரவு தேடுவதற்கான முயற்சியா...அல்லது வடக்கென்ன மேற்கிலும் மகேஸ்வரன் நின்றால் வெற்றிதான் என்று இறுமாப்புக்காட்ட போட்டி இடுகிறாரா....கொழும்பில் இவர் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டி இடுவதற்கான அரசியல் நோக்கம் என்ன விளக்குவாரா.....?! '' - Eelavan - 02-23-2004 பார்ப்போம் இந்தத் தேர்தலில் |