![]() |
|
சேதுவின் உளவு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: சேதுவின் உளவு (/showthread.php?tid=8237) |
- sethu - 12-08-2003 இது எப்படி இருக்கு வன்னிமாவட்ட றானுவதளபதி சுசில் சந்திரபால புலிகளின் வவுனியாகாரியலயத்திலைபோய் நகைச்சுவையாக கதைத்து றோல்சும் சாப்புட்டு ரீ யும் குடித்தாராம். அதுமட்டுமோ புலிகளின் அன்பான கௌரவிப்பை ஒருகாலமும் மறக்கமாட்டன் என்டும் சொன்னதுடன் ஒரு ஆசையை வெளியிலை விட்டாராம். ஏ 9 பாதையால தனது புதிய பதவியை ஏற்க யாழ்பாணம்போகப்போறன் என்டும் கேட்டாராம் அப்பாடா பாத்தியளோ எங்கையோ உதைக்குது. இன்னும் கனக்க நகைச்சுவை கதைத்தவை ஆனால் வெளியாவை சொல்லமுடியாதவை எல்லோ. அதுபோக தனது பிரியாவிடையை புலிகளிடம் பெற்ற முதலாவது இலங்கை இறானுவத்தளபதி இவராகிவிட்டார். எல்லாம் அந்த அம்மாவின் ஆலோசனைதானாம். எங்கை போகுது இலங்கை நிலவரம். - sethu - 12-09-2003 மிகவிரைவில் சந்திரிக்கா அம்மையார் கதிர்காமரை வெளியேற்ற உள்ளதாக நம்பகரமாக தெரியவருகிறது. கதிர்காமர் மிகவிரைவில் இலங்கை அரசியலில் இருந்து ஓய்வுபெற்று இலங்கைக்கு வெளியே தொழில்பட இருப்பதாக நம்பகரமாக தெரியவருகிறது. கதிர்காமரின் இடத்திற்கு சந்திரிக்கா மைத்திரிபாலவை நியமிக்க இருப்பதாக நம்பகரமாக தெரியவருகிறது. அம்மாவின் இந்த முடிவு இன்று மனதில் ஏற்பட்டதாக நம்பகரமாக தெரியவருகிறது. கதிர்காமருக்கும் சில சிங்களவர்களுக்கும் சில கருத்து முரன்பாடு ஏற்பட்டு தீர்த்துவைக்க அம்மா நடுவில் புகுந்ததாக நம்பகரமாக தெரியவருகிறது. இவர் தொடர்ந்து அரசின் காலை களுவ நினைப்பதாகவும் ஆனால் அம்மையார் தான் அரசியலில் இருந்து ஒதுங்கமுதல் அதாவது எதிர்வரும் 16 மாதத்திற்குள் கதிர்காமரை நிதந்தரமாக ஒதுக்குவதற்கு உறுதியை இன்று ஒருவருக்கு தெரிவித்துள்ளார். - yarl - 12-09-2003 கதிர்காமர் போனாலென்ன..அந்த இடத்திற்கு இன்னுமொரு விசுவாசி வரமாட்டாரா என்ன? - sethu - 12-09-2003 விடுதலைப்புலிகளை கைது செய்ய புதிய உளவுப்படை ஒண்று உருவாக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றது அதற்கு எனவும்Tiger prowl பெரிடப்பட்டுள்ளதாகவும் இந்திய உளவுத்துறையுடன் தொடர்புடைய இனையத்தளம் ஒன்று சொல்லுகின்றது. - sethu - 12-09-2003 இலங்கைப்பத்திரிகையாளர்களின் முறைப்பாட்டுக்கடிதம் ஒன்றை நோர்வே பிரதமர் ஊடகத்துறை சார்ந்த ஒருவரிடம் நேரில் சந்தித்துப்பெற்றுக்கொன்டார். இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் இந்த முறைப்பாட்டுக்கடிதத்தை நோர்வே பிரதமரின் கையில் ஒப்படைத்தது. சந்திப்பில் நோர்வே நாட்டு செயலாளரும் கலந்துகொன்டார். <img src='http://www.oslovoice.com/press.1.jpg' border='0' alt='user posted image'>Sri lanka Tamil Media Alliance Today (08-12-03) submitted the Letter about Promoting Tamil Journalism in Sri lanka, to the Norwegian Prime Minister in Norway. Hon.Kagll Mangne Bondevik, (PRIME MINISTER OF NORWAY) Received the Srilanka Tamil Media Alliance's Letter from SLTMA Representative . - vasisutha - 12-10-2003 முதலில் வீரப்பனை பிடியுங்கோ இந்திய உளவுத்துறையினரே :mrgreen: - kuruvikal - 12-10-2003 sethu Wrote:இது எப்படி இருக்கு வன்னிமாவட்ட றானுவதளபதி சுசில் சந்திரபால புலிகளின் வவுனியாகாரியலயத்திலைபோய் நகைச்சுவையாக கதைத்து றோல்சும் சாப்புட்டு ரீ யும் குடித்தாராம். அதுமட்டுமோ புலிகளின் அன்பான கௌரவிப்பை ஒருகாலமும் மறக்கமாட்டன் என்டும் சொன்னதுடன் ஒரு ஆசையை வெளியிலை விட்டாராம். ஏ 9 பாதையால தனது புதிய பதவியை ஏற்க யாழ்பாணம்போகப்போறன் என்டும் கேட்டாராம் அப்பாடா பாத்தியளோ எங்கையோ உதைக்குது. இன்னும் கனக்க நகைச்சுவை கதைத்தவை ஆனால் வெளியாவை சொல்லமுடியாதவை எல்லோ. அதுபோக தனது பிரியாவிடையை புலிகளிடம் பெற்ற முதலாவது இலங்கை இறானுவத்தளபதி இவராகிவிட்டார். எல்லாம் அந்த அம்மாவின் ஆலோசனைதானாம். எங்கை போகுது இலங்கை நிலவரம். <b>08-12-2003</b> <img src='http://www.tamilnet.com/img/publish/2003/12/Farewell_to_Chandrapala_1.jpg' border='0' alt='user posted image'> Major General Susil Chandrapala says goodbye to Mr. Ezhilan, the district political leader of the LTTE in Vavuniya, on Monday at the LTTE's political office in Vavuniya. ([TamilNet, <b>December 10, 2003 </b>06:01 GMT]) சேதுவின் உளவை அப்படியே நிரூபிக்கும் படம்....நன்றி சேது...உண்மைக்குள் பொய்யளையும் கலக்க மாட்டியள் தானே...?! நம்புறம்....முழுசா இல்லாட்டிலும்...நம்புறம்....! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->படம் சற்றுப் பெரிதாகவும் களப்பக்கத்தை சீரழிப்பதையும் இட்டு வருந்துகிறோம்..செய்தியின் முக்கியம் கருதி படம் இடப்படுகிறது...! - mohamed - 12-10-2003 களத்திலை நல்லாதான் சுடு குறைஞ்சு போச்சு! நான் யாழ் களத்தை சொல்லுறன்! யாராவது ஏதாவது எக்குத் தப்பா எழுதுங்கோவன்!!! உந்த பணிப்பாளர்களும் அவையின்றை பட்டாளங்களும் ஒதிங்கின பிறகு இங்கையும் நல்லா ஓய்ஞ்சு போச்சு! சேது அண்ணைதான் ஏதாவது கிளப்ப வேணும்!!!! - sethu - 12-10-2003 இந்தாபிடி வருகுது. ஈ ரீ பீ சீ வானொலியில் சோனர்கள் இலங்கையில் ஏற்படுத்தும் சமாதானத்தடைக்கற்கள் தொடர்பாக ஒரு சுhடான கருத்துப்பரிமாற்றம் இடம் பெற்றதெல்லோ பனிப்பாளர் அதைகேட்டுக்கொன்டு இருந்திருக்கிறார் எந்த பனிப்பாளர் அந்த தேசத்துரோகப்பனிப்பாளன்தான். அவர் உடனை அந்த கலந்துரையாடலில் பங்குபற்றிய ஒரு இலன்டனுக்குப்புதிய அறிவிப்பாளன் முன்பு வீரகேசரியில் கடமையாற்றியவர் அவருக்குத்தொலைபேசி எடுத்து மிரட்டினாராம் அதுமட்டுமோ ஏன்தம்பி அவன் இவனுடன்சேர்ந்து முஸ்லீம்களை மட்டம் தட்டுறியள் என்டாராம். அப்பாடா ஆடு நனையுது என்டு ஓனாய் அளுகுதாம். தம்பி அந்த வானொலியிலை சேராதை என்டமாதிரித்தானாம் ஆலோசனை கொடுத்தார். அதுமட்டுமோ புதுக்க சனத்தைபேக்காட்ட தொடங்கிறவானொலியிலை அந்த பத்திரிகையாளனை மாட்டுறதுக்கு இந்த தேசத்துரோகப்பனிப்பாளன் பிளன்போடுறாராம் ஆனால் அது சரிவாரது என ஒருவர் சொன்னார். அதுமட்டுமோ என்ன உதவி என்டாலும் சொல்லுங்கோ தான் செய்யுறன் என்டாராம் பாத்தியளே பனிப்பாளர் செய்யுறவேலையை. தன்னுடைய வானொலியை அளிச்சு சனத்தையும்பேக்காட்டிப்போட்டு இப்ப உருப்படியா இருக்கிறவானொலியிலை வேலைசெய்யுறவர்களையும் மிரட்டவெளிக்குட்டுட்டார். அந்த துரோகி. - sethu - 12-11-2003 ஜெனரல் பொன்சேகாவுக்கு யாழ்ப்பானத்திலை பிரியாவிடை நடந்தது எல்லோ அதையேன் பேசுவான் அந்தமாதிரி எல்லோ ஆமிகாறர் தரையாலைவந்து சலு}ட் அடிக்க தவன்டுவந்து சலு}ட அடிக்க சிலபேர் பொன்சேகாவுக்குத்தெரியாமல் தலைக்கு மேலாலைவந்து சலு}ட் அடிச்சவையாம் எப்படி தெரியுமோ கெலியிலைவந்து நீள கதைத்தை போட்டுட்டு 6 பேர் குதிச்சவையாம். குதிச்சுவந்து சலு}ட் அடிச்சதாம் அதைவிடவிசேடம் ஒன்டு தெரியுமோ எங்களின் தமிழ் தேசத்துரோக கட்சிகளும் தொலைNபுசியாலை மரியாதை செலுத்தினதாம் அதுமட்டுமோ யாழ் மாவட்ட ஈ பி தலைவரும் நின்டதாகவும் மரியாதை செலுத்தினதாயும் காதிலை கேட்டுது. என்னவோ நடக்குது நாட்டிலை ஒன்டுமா புரியேல்லை அமரிக்க பச்சைசட்டை காறரின் பயிற்சிகள் அனைத்தும் அந்த அனிவகுப்பு மரியாதையிலை றயல் பாக்கப்பட்டதாம். - sethu - 12-11-2003 றஸ்சியா நாட்டு பாதுகாப்புப்பிரிவனர் 1 கிழமை இரகசிய பயனம் ஒன்றை யாழ்பாணாத்திற்கு மேற்கொண்டவையாம் பொன்சேகா என்னைவைச்சு புலியை ஒப்பிட்டாராம் தெரியுமோ சைனெற்றைவைத்துத்தானம் புலியை ஒப்பிட்டது. றஸ்சியாவின் றஸ்தோம் மானிலத்தில் உள்ள சிற்றி சென்றருக்கு அருகாமையில் றஸ்றோவ் ஒன் டொன் என்ற பகுதியில் உள்ள இறானுவப்பயற்சி கல்லு}ரியிலை கடந்த 15 வருடமா இலங்கை இறானுவம் படிக்குது அவையளின் படிப்புத்திறமையை பாக்க வந்திருக்கினமாக்கும் அதுபோக அந்த றஸ்தோவ் எங்கை இருக்குதெரியுமோ உக்கிறேனுக்கு கீழ் பக்கமாக உள்ள றஸ்சிய பிராந்தியமுங்கோ அதுக்கு ஒரு விமான நிலையம் இருக்கு பல தமிழ் இழைஞர்கள் இந்த பிரந்தியத்திலை படிக்கினம் அதிகம் மருத்துவம் விமானம் ஓட்டும் விதம் கணனி போன்றவை படிக்கினம் அதுமட்டுமோ ஒரு பழைய படித்த யாழ்பான தமிழ் மகன் அந்த பிரதேசத்திலை வாளுறார் அவர் படிச்சதும் யாழ் இந்துக்கல்லு}ரியிலை 2 பிள்ளைகள் இருக்கினம் மனைவி ஒரு றஸ்சியன். இவ்வளவும் என்னன்டு சொல்லுறன் தெரியுமோ சும்மா அப்புடி இப்புடி அங்காலையும் போய் பாத்தனான் இங்கோ. என்டாலும் நம்மடை ஆக்களும் அங்கினை நிக்கினம் படிக்கினம் அதேபோல சிங்களவனம் நிக்கிறான் படிக்கிறான். - oslo - 12-11-2003 Hello sethu are you their tooooooooooo - kuruvikal - 12-11-2003 ஒரு பக்கம் அமெரிக்கா மறுபக்கம் ரஸ்சியா எண்டு சிங்களவன் பலப்படுத்துறான் எண்டு சொல்லுங்கோ...அதுதான் உந்தத் துள்ளுத்துள்ளுரா அம்மா...அணிலாரும் ரகசியமா 'கேம்' விளையாடுறார்.....அங்கால இந்தியாக் காரனும் அப்படி இப்படி சிக்கல் விடுறான்...யாழ்ப்பாணத்தை விட்டு போனவையும் இப்ப திரும்பி வந்திட்டினம் போல...சூட்டிங்... அடிதடி நடக்குது....எங்கட பெடியள் என்ன செய்யப் போறாங்களோ.....???!பாப்பம்......! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll: :!:
- sethu - 12-11-2003 இலங்கை இறானுவத்தினரின் இனையத்தளம் அதாவது எஸ்எல்ஆமி டொட் கொம் ஒருசிலரால் களவாடப்பட்டுள்ளதாக நம்பகரமாக தெரியவருகிறது. இந்த இனையத்தின்முhலம் பல இலங்கை இறானுவத்திற்கு எதிரான கருத்துக்கள் பகிரப்பட உள்ளதாக தெரியவருகிறது. இலங்கை இறானுவத்தின் தற்போதய இனையம் களவாடப்பட்டுள்ளமை பாரிய திகைப்பை இலங்கை இறானுவ உயர்மட்டத்திற்கு ஏற்படுத்தியுள்ளது. இலங்கை இறானுவம் இந்த இனையத்தை தேடிவருவதாக தெரியவருகிறது ஆனால் இதனை ஒரு மானம் உள்ள தமிழன் கழவாடியுள்ளதாகவும் இதுவரை இலங்கை அரசால் கொலைசெய்ய 85 ஆயிரம் தமிழர்களின் பட்டியல்களையும் இந்த இனையத்தினு}டாக உலகிற்கு தமிழ் மகன் பரப்ப உள்ளதாக தெரியவருகிறது. இந்த இனையத்திற்கு ஒரு பத்திரிகையாளன் உறுதுனையாக செயற்பட்டுவருகிறார் மிகவிரைவில் இலங்கை இறானுவத்தின் இனையத்தளத்தில் இலங்கை இறானுவத்திற்கு எதிராக பல புதினம் அம்பலமாக உள்ளது. - Mathivathanan - 12-11-2003 sethu Wrote:இலங்கை இறானுவத்தினரின் இனையத்தளம் அதாவது எஸ்எல்ஆமி டொட் கொம் ஒருசிலரால் களவாடப்பட்டுள்ளதாக நம்பகரமாக தெரியவருகிறது. இந்த இனையத்தின்முhலம் பல இலங்கை இறானுவத்திற்கு எதிரான கருத்துக்கள் பகிரப்பட உள்ளதாக தெரியவருகிறது. இலங்கை இறானுவத்தின் தற்போதய இனையம் களவாடப்பட்டுள்ளமை பாரிய திகைப்பை இலங்கை இறானுவ உயர்மட்டத்திற்கு ஏற்படுத்தியுள்ளது. இலங்கை இறானுவம் இந்த இனையத்தை தேடிவருவதாக தெரியவருகிறது ஆனால் இதனை ஒரு மானம் உள்ள தமிழன் கழவாடியுள்ளதாகவும் இதுவரை இலங்கை அரசால் கொலைசெய்ய 85 ஆயிரம் தமிழர்களின் பட்டியல்களையும் இந்த இனையத்தினு}டாக உலகிற்கு தமிழ் மகன் பரப்ப உள்ளதாக தெரியவருகிறது. இந்த இனையத்திற்கு ஒரு பத்திரிகையாளன் உறுதுனையாக செயற்பட்டுவருகிறார் மிகவிரைவில் இலங்கை இறானுவத்தின் இனையத்தளத்தில் இலங்கை இறானுவத்திற்கு எதிராக பல புதினம் அம்பலமாக உள்ளது.ஐயா சேது உங்கள் பரப்புரை குப்பைக்கூடைக்குத்தான் சரி.. நீங்கள் முன்பு தந்த http://www.army.lk என்ற இணையத்தளம்தான் இலங்கை இராணுவத்துடையது.. http://www.army.lk அது இராணுவத்துடையதானால்..? எஸ்எல்ஆமி டொட் கொம் இது யாருடையது..??? :!: :?:
- Paranee - 12-12-2003 அதுவும் அவர்களுடையதுதான் ஆஹா தாத்தா வனவாசம் முடிந்துவிட்டதா ? வாருங்கள். - sethu - 12-12-2003 இல்லை இலங்கை இறானுவம் எல் கேயிலும் கொம்மிலும் ஓ ஆர்யிலும் வைத்திருந்தார்கள் தற்போது கொம் பறிக்கப்பட்டுவிட்டது அதைத்தான் நான் தகவலாக தந்துள்ளேன் எல்கேயை வைச்சு இவ்வளவுகாலமும் இறானுவம் பப்பிளிசிற்றி பெற இல்லை கொம்தான் அவர்களுடைய பேமஸ்ஆன தளம் அது பறிக்கப்பட்டுவிட்டது எல்லாம் ஒரு லிங்கில்தான் இருந்தது இனி கொம் தனிய வரப்போதாம் பொறுத்திருந்து பாருங்கோவன். - sethu - 12-12-2003 www.slarmy.com - sethu - 12-12-2003 இது இந்த தலைப்புடன் தொடர்புபட்ட விடயம் இல்லை ஆனால் மிகமுக்கியம் கருதி இதை இங்கே போட கழ நிர்வாகத்திடம் அனுமதி கேட்கிறேன். <span style='font-size:25pt;line-height:100%'>ரஜீவகாந்தி ;- பிரபாகரன் சந்திப்பு எழுதப்படாத ஒரு ஒப்பந்தம்.</span> 1987ம் ஆண்டு ஜீலை மாதம் 29ம் திகதி இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. பாரதப் பிரதமர் ரஜீவ்காந்தியும் இலங்கை அரச அதிபர் ஜே.ஆர் ஜெயவர்த்தனாவும் கொழும்பில் நிகழ்ந்த விசேட வைபவ மொன்றின்போது இவ்வுடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர். இந்த ஒப்பந்தம் கைச்சாத்திட்ட தினத்திற்கு முதல்நாள். அதாவது 1987ம் ஆண்டு ஜீலை மாதம் 28ம் திகதி புதுடில்லியில் இந்தியப் பிரதமர் ரஜீவ்காந்திக்கும், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் மத்தியில் ஒரு இரகசிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. கைச்சாத்து இடப்படாத அந்த இரகசிய உடன்பாடு பற்றி அனேகருக்குத் தெரியாது. அக் காலகட்டங்களில் ரஜீவின் நிர்வாக ஆட்சிபீடம் மூடி மறைந்த உண்கைகளில் இதுவும் ஒன்று ரஜீவ்-பிரபா உடன்பாட்டில் சம்பந்தப்பட்டவர்களில் நானும் ஒருவன் என்பதால் அந்த வரலாற்று நிகழ்வை இங்கு பதிவு செய்வது முக்கியமெனக்கருதுகிறேன். தலைவர் பிரபாகரனும், நானும் யோகியும், திலீபனும் புதுடில்லிக்கு அழைத்து வரப்பட்டு அசோக்கா விடுதியில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டது பற்றியும், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை எம் மீது திணித்து விட எடுக்கப்பட்ட முயற்சிகள் பற்றியும் முந்திய கட்டுரையில் விபரித்தேன். தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்கள் விடுதலைப்புலிகளுக்கு சார்பான நிலை எடுத்துக்கொண்டதால் இந்திய அரசுக்கு சங்கடமான நிலை எழுந்தது. கொழும்பு சென்று ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு முன்பாக எப்படியாவது விடுதலைப் புலிகளை வழிக்கு கொண்டுவர வேண்டும் என ரஜீவ்காந்தி விரும்பினார். அவருக்கு ஒரேயொரு மார்க்கம்தான் தென்பட்டது. புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை நேரடியாகச் சந்தித்து, ஒப்பந்தம் பற்றி அவரது கருத்துக்களை கேட்டறிந்து, அவருடன் ஒரு இணக்கப்பாட்டிற்கு வருவதுதான் சாலச்சிறந்த வழி என ரஜீவ்காந்தி முடிவு எடுத்தார். 1987ம் ஆண்டு ஜீலை மாதம் 28ம் திகதி நள்ளிரவு. அசோக்கா விடுதியில் ஆழ்ந்த தூக்கத்திலிருந்த என்னையும் பிரபாகரனையும் அவசர அவசரமாக எழுப்பினார்கள் இந்தியப்புலனாய்வு அதிகாரிகள். பிரதமர் ரஜீவ்காந்தி மிகவும் அவசரமாக எம்மைச்சந்திக்க விரும்புவதாகவும் உடனே புறப்படுமாறும் பணித்தார்கள். ஆயுதம் தரித்த கரும் பூனைகளின் வாகன அணி பின் தொடர பிரதமமந்தியிரியின் இருப்பிடத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டோம். வீட்டு வாசலில் எமக்காக காத்து நின்றார் பிரதமர். ரஜீவ் காந்தியுடன் உள்ளக புலனாய்வுத் துறையின் அதிபர் திரு.எம்.கே.நாராயணனும் நின்று கொண்டிருந்தார். புன்முறுவல் பூத்தபடி மனமுவந்து எம்மை வரவேற்ற பிரதமர், பிரபாகரனைப்பார்த்து 'உங்களைப் பற்றி நிறையக்கேள்ளிப்பட்டிருக்கிறேன். உங்களை நேரில் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்றார். அங்கு தமிழக அமைச்சர் பண்டுருட்டி இராமச்சந்திரனும் எமக்காக காத்து நிற்றார். கலந்துரையாடல் உடனேயே ஆரம்பித்தது. 'இந்த ஒப்பந்தம் குறித்து நீங்கள் அதிருப்தி அடைந்திருப்பதாக அறிந்தேன். ஒப்பந்தத்தில் உள்ள குறைபாடுகள் பற்றி விபரமாக கூறுவீர்களா? என்று கேட்டார் ரஜீவ்காந்தி. எமது கருத்துக்களை விபரமாக விளக்கும்படி பிரபாகரன் என்னைப் பணித்தார். ஒப்பந்தத்திலுள்ள குறைபாடுகளை ஒவ்வொன்றாக விளக்கினேன். இனப்பிரச்சினையைப் பொறுத்த வரை தமிழரின் உரிமை மிக முக்கியமானது. இலங்கையில் வட,கிழக்கு மாகாணங்களைக் கொண்ட நிலப்பரப்பில் தமிழர்களும், தமிழ் பேசும் முஸ்லிம் மக்களும் வரலாற்று hPதியாக வாழ்ந்து வருகின்றார்கள். இந்த நிலம் அவர்களது சொந்த நிலம். அவர்களது தாய்நிலம். இந்த தாயக நிலத்தைப் பிரிக்கும் எந்தத் திட்டத்தையும் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. வட-கிழக்கு மாகாணங்களைக் கொண்ட நிலப்பரப்பு தமிழ் பேசும் மக்களின் தாயகமாக இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டபோதும், இந்த தாயக நிலத்தின் பிரதேச ஒருமைப்பாட்டை கருத்து வாக்கெடுப்பிற்கு விடுவது என்ற தீர்மானத்தை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. இது தமிழர் தாயகத்தை கூறுபோட வழிவகுக்கும் என்று விளக்கினேன். அடுத்ததாக, மாகாண சபைக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரபரவலாக்கம் வரையறுக்கப்பட்டது என்றும் அது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்யவில்லை என்பதையும் விளக்கினேன். எல்லாவற்றிற்கும் மேலாக, வட-கிழக்கு மாகாண சபை கலைத்துவிடும் அதிகாரம் இலங்கையின் அரச அதிபர் ஜெயவர்த்தனாவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இவர் ஒரு சிங்கள இனவெறியர். தமிழ் மக்களுக்கு விரோதமானவர். இவர் தமிழ் மக்களுக்கு நீதி வழங்குவாரென நாம் நம்பவில்லை என்று கூறினார் பிரபாகரன். அடுத்ததாக ஆயுதக் கையளிப்பு பற்றிய விடயத்தை எடுத்துக் கொண்டோம். ஒப்பந்தம் கைச்சாத்தாகிய 72 மணிநேரத்திற்குள் ஆயுதங்களை ஒப்படைக்குமாறு கூறுவது அநீதியானது. எத்தனையோ ஆண்டுகளாக இரத்தம் சிந்திப் போராடிப் பெற்ற ஆயுதங்களை நான்கு நாட்களுக்குள், அதுவும் தமிழரின் தேசியப்பிரச்சினைக்கு இறுதித்தீர்வு கிட்டுவதற்கு முன்பாக கையளிக்கும் படி வற்புறுத்துவது எவ்வகையிலும் நியாயமாகாது என்றார் பிரபாகரன். நாம் சொல்வதையெல்லாம் ஆர்வமாகவும், பொறுமையாகவும் கேட்டபடி குறிப்பு எடுத்துக்கொண்டிருந்தார் ரஜீவ்காந்தி. நாம் எமது நிலைப்பாட்டைக் கூறி முடித்ததும் ரஜீவ்காந்தி சொன்னார். 'உங்களின் மக்களின் பிரச்சினைக்கு ஒரு நீதியான தீர்;வு காண வேண்டும் என்பதில் எனது அரசாங்கம் கடும் முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்த விடயத்தில் உங்களது ஒத்துழைப்பு எமக்கு அவசியம். நீங்கள் சொல்வது போல இந்த ஒப்பந்தத்தில் குறைபாடுகள் இருக்கத்தான் செய்கிறது. இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட மாகாணசபைத் திட்டம் ஒரு தற்காலிக ஒழுங்கு தான். அதிலுள்ள குறைபாடுகளை பின்பு நான் ஜெயவர்த்தனவுடன் பேசி நிவர்த்தி செய்ய முயற்சிப்பேன். தமிழர் தாயகம் பற்றி நீங்கள் எழுப்பிய ஆட்சேபனையை நான் கவனத்தில் எடுத்துள்ளேன். இது பற்றி நான் ஜெயவர்தனவுடன் பேசுவேன். கருத்து வாக்கெடுப்பு நடத்தாமல் அதனை ஒத்திவைக்குமாறு சொல்லுவேன். எதற்கும் நீங்கள் இந்திய அரசை நம்பவேண்டும். தழிழரின் நலன் மீது தான் நாம் அக்கறை கொண்டு செயல்படுகின்றோம். எனவே உங்களது ஆதரவு எமக்குத்தேவை. தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுத்து, அவர்களது பாதுகாப்பை இந்த ஒப்பந்தம் உறுதிப்படுத்தும். ஒப்பந்தத்தை நீங்கள் ஆதரித்தால் எமது கையைப்பலப்படுத்துவதாக அமையும்" என்றார். இந்தியப் பிரதமர் கூறியவற்றை தமிழில் மொழிபெயர்த்து பிரபாகரனுக்கு விளக்கமளித்தார் அமைச்சர் பண்டுருட்டி. 'இந்த ஒப்பந்தம் தமிழ் மக்களின் நலனைப் பேணவில்லை. மாறாக, தழிழ் மக்களின் நலனைப் பாதிக்கிறது. ஆகவே, இந்த உடன்படிக்கையை நாம் ஏற்றுக் கொள்ளமுடியாது." என்றும் அழுத்தம் திருத்தமாகச் சொன்னர் பிரபாகரன். ரஜீவ்காந்திக்கு நிலமை புரிந்தது. பிரபாகரன் தனது நிலைப்பாட்டில் உறுதியாக நிற்கிறார் என்பதையும் அவர் உணர்ந்து கொண்டார். விடுதலைப் புலிகளுடன் முரண்பட்டு காரியத்தைக் கெடுக்க அவர் விரும்பவில்லை. ஆகவே, தனது அணுகுமுறையைத் திடீரென மாற்றிக் கொண்டார் ;;;'உங்கள் நிலைப்பாடு எனக்குப்புரிகிறது நீங்கள் எடுத்த முடிவையோ, கொள்கையையோ மாற்றச்சொல்லி நான் கேட்கவில்லை. நீங்கள் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளத் தேவையில்லை. ஆனால் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் இருத்தால் போதும்." என்றார் ரஜீவ்காந்தி. பார்த்திர்களா?: பிரதமமந்திரியே உங்களது வழிக்கு வந்து விட்டார். ஒப்பந்தத்தை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டாம். அது உங்கள் நிலைப்பாடு அதை நீங்கள் ஏற்கத் தேவையில்லை ஆனால் அதற்குத் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டாம் என்று மட்டும் பிரதமர் கேட்கிறார். இந்தச்சிறிய ஒத்துழைப்பையாவது நீங்கள் இந்தி அரசுக்காக செய்யலாம் அல்லவா?" என்று ரஜீவிற்காக வக்காலத்து வாங்கினார் பண்டுருட்டியார். இந்தச் சந்திப்பில் அவர் எதற்காக அழைக்கப்பட்டார் என்பது இப்பொழுது புலனாகியது. ரஜீவ் கொடுத்த விளக்கமும் அதற்குப் பண்டுருட்டியார் அளித்த வியாக்கியானமும் பிரபாகரனுக்கும் எனக்கும் திருப்தியை அளிக்கவில்லை. 'ஒரு விடயத்தை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் அதனை நாம் எதிர்க்கின்றோம் என்றுதானே அர்த்தம்" என்று எனது காதோடு குசுகுசுத்தார் பிரபாகரன். ஏற்றுக்கொள்ளாததற்கும் எதிர்ப்புத் தெரிவிப்பதற்கும் இடையில் வேறுபாடு காட்டி எம்மைத் திருப்திபடுத்த முடியாது என்பதை ரஜீவ் உணர்ந்து கொண்டார் அதனால் பிரச்சினையை வேறு திசைக்கு எடுத்துச் சென்றார். தொடரும்....... நன்றி ஈழநாதம் - Mathivathanan - 12-12-2003 கொஞ்சக்காலம்போக ரஜீவ்காந்தி அசோகா விடுதிக்குவந்து காலிலை விழுந்து கெஞ்சினார் எண்டும் வரும் பாருங்கோவன்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
|