![]() |
|
Breaking News - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: Breaking News (/showthread.php?tid=7412) Pages:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
|
- Mathan - 03-06-2004 வருகின்ற செய்திகளை வைத்து பாக்க புலிகள் தலைமைக்கும் கருணாவிற்கும் இடையில் பிளவு போலதான் தெரிகின்றது. கருணா நிரந்தரமாக பிரிந்து போனா அது நிச்சயமாக புலிகள் இயக்கத்துக்கு பின்னடைவுதான். கருணாக்கு எவ்வளவு செல்வாக்கு? எவ்வளவு பேர் அவரின் தலைமையில் கீழ் பிரிந்து போக போறார்கள்? அம்பாறை-மட்டக்கிளப்பு யார் கட்டுப்பாட்டுக்கு கீழ் இருக்கின்றது? இதுக்கு விடை தெரிஞ்சால் தான் இந்த பிரைச்சனையின் தாக்கம் முழுக்க தெரியும் - anpagam - 03-06-2004 நம்ம சனம் ஒருவளியிலயும் திருந்தாது..... இறந்தகாலத்தை பார்காதீர்கள்....எதிர்காலத்தை யதார்தத்தோடு சுயனலம் இல்லாமல் முன்னேறும் வழிகளைபாருங்கள்..... :roll: :x
- Mathan - 03-06-2004 BBC Wrote:<b>Main political parties refuse to comment on LTTE rift BBC Wrote:It is Not In Our Character to Comment LTTE's Internal Problems- Hakeem ஒரு ஆச்சரியமான விசயம் இதுவரை இதை பற்றி அரசாங்கமோ எதிர்கட்சியோ கருத்து தெரிவிக்கலை. எல்லா கேள்விக்கும் இது அவ்ங்களோட உள்விவகாரம் என்று சொல்லி இருக்காங்க ஏன்? இதை பத்தி முஸ்லீம் காங்கிரஸ் ஹக்கீம் சொன்னதை பாருங்க நம்மை நேரடியா குத்தினமாதிரி இருக்கு. தமிழ்ல சுருக்கமா மொழிபெயர்த்து போடுறேன். புலிகளின் உள்வீட்டு பிரைச்சனைகளை விமர்சிப்பது(கருத்து சொல்வது) எமது குணம் அல்ல. முஸ்லீம் காங்கிரசின் உள்வீட்டு பிரைச்சனைகளை பற்றி தேவையற்ற விதத்தில் புலிகள் விமர்சித்திருந்தபோதிலும் பிரபாகரனுக்கும் கருணாவுக்கும் இடையிலான பிரிவு பற்றி தாமோ தமது கட்சியோ கருத்து எதையும் தெரிவிக்கபோவதில்லை என்று முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கூறினார். - Mathan - 03-06-2004 Karuna asks Norway for protection LTTE's rebel eastern leader Karuna has asked Norway for protection according to the Norwegian newspaper VG (Vaygay) The newspaper reports that the request came after Karuna came in to conflict with LTTE leader Vellupillai Prabhakaran and after defence authorities in Colombo rejected the proposal of having a new and separate ceasefire with Karuna's administration of Batticaloa and the East. However , the Norwegian Foreign Ministry press spokesman Karsten Klepsvik has refused to comment on Karuna's request for protection from Norway. The Norwegian newspaper also says that Karuna's request confirms the division among the Tamil Tigers, which otherwise boasts it constitutes an effective, disciplined organization. Thanx: The Academic - vasisutha - 03-06-2004 யாழ்/yarl Wrote:நாளை மகாநாடு கூட்டங்கள் என்ன சொன்னாலும் அம்மானிடமிருந்து இதை புலம்பெயர் தமிழர்கள் நாங்கள் எதிர்பார்க்கவில்லை. உண்மைதான் யாழ். - Mathan - 03-06-2004 BBC Wrote:Karuna asks Norway for protection சுருக்கமா தமிழ்ல கருணா நோர்வேயிடம் பாதுகாப்பு கேட்டார். கிழக்கில் தனி நிர்வாகத்துடன் கூடிய போர் நிறுத்த உடன்படிக்கையை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள மறுத்ததை தொடர்ந்து கருணா நோர்வேயிடம் பாதுகாப்பு கேட்டுள்ளார் என்று நோர்வே பத்திரிகை தெரிவித்துள்ளது. இதை பற்றி கருத்து சொல்ல நோர்வே வெளியுறவு அமைச்சு பேச்சாளர் மறுத்துவிட்டார். - sivajini - 03-06-2004 எல்லாம் இறாய தந்திரம் ஒருதரும் ஊரைக்குளப்பாதையுங்கோ யசீர் அரபாத் நெல்சன் மன்டேலா போன்றவர்களின் போராட்ட வரலாற்றை புரட்டி பாருங்கோ விடை கிடக்கு. - vasisutha - 03-06-2004 நீங்கள் சொன்னால் சரியே. - Mathan - 03-06-2004 நெருக்கடிக்குச் சுமுகமான தீர்வு, தலைமையை தலைவர் விளக்குவார் மட்டு - அம்பாறை சிறப்புத்தளபதி ரமேஷ் திட்டவட்டமாகத் தெரிவிப்பு மட்டக்களப்பில் தோன்றியுள்ள இயக்க நெருக்கடி குறித்து தலைவர் பிரபாவுடன் விவரமாகக் கலந்தாலோசனை நடத்தியிருக்கின்றோம். நிச்சயமாகச் சொல்கிறேன் நெருக்கடிக்குச் சுமுகமான தீர்வு காணப்படும். தலைவர் மிக விரைவில் உண்மை நிலையைத் தமிழ் மக்களுக்கும், உலகிற்கும் அறிவிப்பார். இப்படி உறுதிபடக் கூறினார் மட்டக்களப்பு - அம்பாறை விசேட தளபதி ரி.ரமேஷ். கேணல் கருணாவின் பிரதித் தளபதியாக இருந்து மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் போராளிகளை வழி நடத்துபவர் தளபதி ரமேஷ் என்பது குறிப்பிடத்தக்கது. தாமும், பிரதேசத் தளபதிகளும் பல்வேறு பிரிவுகளின் தலைவர்களும் வன்னியில் தலைவர் பிரபாகரனை நேரில் சந்தித்து அவருடன் விரிவான பேச்சுக்கள் நடத்தி நிலைமைகளை அவருக்குத் தெளிவுபடுத்தினோம். என்று தளபதி ரமேஷ் சொன்னார். பிரச்சினையை நிதானமாகவும் ஆக்க பூர்வமாகவும் அணுக முடிவு செய்யப் பட்டிருப்பதாகவும், சுமுகமான தீர்வு பற்றிய அறிவிப்பு எந்த நேரத்திலும் வரலாம் என்றும் அவர் மேலும் கூறி னார். இதற்கிடையில், கிளிநொச்சியில் புலிகளின் அரசியல்துறை நடுவப் பணியகத்தில் இன்று காலை 10 மணிக்குச் செய்தியாளர் மாநாடு ஒன்று நடைபெறவிருக்கின்றது. அதில சில முக்கியமான முடிவுகளை புலிகளின் தலைமை அறிவிக்கும் என எதிர் பார்க்கப்படுகின்றது. கிழக்கில் கேணல் கருணாவுக்கு அடுத்த மட்டத்தில் உள்ள அனைத் துப் பொறுப்பாளர்களும் தளபதிகளும் உடனடியாக வன்னிக்குத் திரும்பி தலைவர் வே.பிரபாகரனைச் சந்தித்து, அவருக்குத் தமது விசுவாசத்தையும் அர்ப்பணிப்பையும் உறுதிப்படுத்தியி ருக்கின்றார்கள் என புலிகளின் வன்னி வட்டாரங்கள் தகவல் வெளியிட்டன. கிழக்கில் புலிகளின் பிரதேசத்தில் ஒழுங்கு நிலைமையை விரைவில் தலைவர் பிரபாகரன் தமது முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து விடுவார் என்றும் - குழப்ப நிலைமை நின்று நீடித் துத் தாக்குப்பிடிக்காது என்றும் - கிழக்கு நிலைமை குறித்துத் தெளி வாகவும், உறுதியாகவும் தலைவர் திடமான முடிவுகளை எடுத்துச் செயற் படுவார் என்றும் - அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. நன்றி - உதயன் - vasisutha - 03-06-2004 செய்திகளுக்கு நன்றி பிபிஸி. - Mathan - 03-06-2004 A Former Army Commander Says People Will Pressure the LTTE to Settle Problems A former Sri Lankan Army Commander said that the people living in north east would pressure the LTTE to settle their differences and work for peace in Sri Lanka. He said that people in the north/east are now used to living in a peaceful environment and it was a good thing. He said the government would use this opportunity to help the people who have suffered most. Speaking on the rift between Prabhakaran and Karuna, the General said We saw it coming for a long time. In fact it was there already. Eastern LTTE cadres always questioned as to how could the Northern LTTE cadres order them all the time. Earlier Karikalan was removed by Prabhakaran since the MOU was not well implemented in the East. It was the Eastern cadres who provided the pipeline for the LTTE. They took the brunt of all the fighting. How can Prabhakaran control north east when he cannot control his own members from the east. the former Army commander questioned. He pointed out that Karuna was a definite threat to Prabhakaran Thanx: The Academic உள்வீட்டு பிரைச்சனைகளை தீர்க்குமாறு புலிகளை வடக்கு-கிழக்கு மக்கள் வலியுறுத்தவேண்டும். இப்படி சொன்னது யார் தெரியுமா? முன்னாள் இராணுவ தளபதி ஒருவர். காலம் செய்த கோலம் - Eelavan - 03-06-2004 Karuna removed from the LTTE [TamilNet, March 06, 2004 05:45 GMT] Liberation Tigers announced today that their Batticaloa-Amparai district commander Karuna has been discharged from the LTTE and has been relieved of official responsibilities. "The Tamil Eelam National leadership has appointed Mr. T. Ramesh as special commander, Mr. Ram as Commander, Mr. Praba as the deputy commander and Mr. Kousalyan as political head of the Batticaloa-Ampara district," said the LTTE statement issued today. "Mr. Karuna who was commander of Batticaloa-Amparai, instigated by some malicious elements opposed to the Tamil Eelam liberation struggle, acting traitorously to the Tamil people and the Tamil Eelam national leadership, has planned to secede himself from the Liberation organisation. "The commanders, divisional heads and cadres under him unable to acquiesce with this traitorous act have refused to comply with his orders and met with the national leadership, explained the ground reality prevailing there. "In accordance with this, Karuna has been discharged from the Liberation Tigers organisation and relieved from official responsibilities," said the statement. A Press Conference was held at the LTTE Peace Secretariat in Kilinochchi at 10.20am Saturday. Mr. S. P. Thamilchelvan, Head of the Political Wing of the LTTE, Mr. Ramesh, Special Commander Batticaloa-Amparai District, Mr. Ram, Commander, Batticaloa-Amparai District, Mr. Praba, Deputy Commander Batticaloa-Amparai District, Mr. Gihaththan, Commander, Batticaloa-Amparai District, Mr. Ramanan, Head of the Military Intelligence Wing and Mr. Kausalyan, Political Head of the Batticaloa-Amparai District were present எது எப்படி இருப்பினும் ஒரு வேதனை தரும் நிகழ்வு மீண்டும் வராமல் தடுப்பது எங்கள் கைகளில்???/ - yarl - 03-06-2004 நன்றி புதினம் இன்று காலை 10 மணி 20 நிமிடமளவில் கிளிநொச்சியிலுள்ள விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் இது தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இச் செய்தியாளர் மாநாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்த்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன், மட்டு-அம்பாறை மாவட்ட விசேட தளபதி ரமேஸ், மட்டு-அம்பாறை துணைத் தளபதி ராம், மட்டு-அம்பாறை துணைத் தளபதி பிரபா, தளபதி ஐpகத்தான், மட்டு-அம்பாறை புலனாய்வுப் பிரிவுத் தளபதி ரமணன், மட்டு-அம்பாறை அரசியல் பொறுப்பாளர் கௌசல்யன் ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்கள் தேசியத் தலைவர் அவர்களின் மேற்படி முடிவைப் பத்திரிகைiயாளர்களிற்கு அறிவித்ததோடு, பத்திரிகையாளர்களின் கேள்விகளிற்கும் பதிலளித்தனர். இதன் போது கையளிக்கப்பட்ட செய்தியறிக்கையினை வாசகர்களிற்கு இங்கு தருகின்றோம். தலைமைச் செயலகம் தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம் 06-03-2004 அம்பாறை-மட்டக்களப்பு மாவட்டத் தளபதியாக இருந்த திரு.கருணா தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதோடு, தமிழ் மக்களிற்கும் தமிழீழத்தின் தேசிய தலைமைக்குமான துரோகமிழைக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு, விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து செல்லும் நடவடிக்கையைத் திட்டமிட்டுள்ளார். தளபதிகள், பிராந்தியப் பொறுப்பாளர்கள் மற்றும் போராளிகள் கருணாவின் இந்நடவடிக்கையோடு ஒத்துப் போக மறுத்ததோடு, தேசியத் தலைவரைச் சந்தித்து களநிலைமை குறித்து அவருடன் ஆலோசித்துள்ளனர். இதன்படி, திரு. கருணா தனது பொறுப்புக்களிலிருந்து நீக்கப்படுவதோடு, விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்தும் நீக்கப்படுகிறார். இதனையடுத்து மட்டு-அம்பாறைக்கான விசேட தளபதியாக திரு.ரமேசும், தளபதியாக திரு. ராமும், துணைத் தளபதியாக திரு. பிரபாவும், அரசியல்த்துறைப் பொறுப்பாளராக திரு. கௌசல்யனும் நியமிக்கப்பட்டுள்ளனர். இது பற்றிய மேலதிக விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும் என மேற்படி செய்தியறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. - shanmuhi - 03-06-2004 நன்றி தகவல்களுக்கு..... - sivajini - 03-06-2004 எல்லாம் தந்திரோபாயம் - Mathan - 03-06-2004 புலிகள் மத்தியில் நெருக்கடிý பற்றிய செய்திகள் இதயங்களை சம்மட்டிýயால் அடிýப்பது போல் இருக்கிறது - மனோ கணேசன் பேரினவாத அடக்குமுறைக்கு எதிராக ஆயுதப் போராட்டம் செய்து இன்று அதையே சமாதானப் போராட்டமாக உருமாற்றி உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கும் விடுதலைப்புலிகளுக்கிடையே நெருக்கடிý ஏற்பட்டுள்ளதாக வெளிவரும் செய்திகள் எமது இதயங்களை சம்மட்டிýயால் அடிýப்பது போல் இருக்கின்றது. இவ்வாறு மேல் மாகாண மக்கள் முன்னணித் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: புலிகள் இயக்கமே தமிழ் மக்களின் கவசமாகும். இந்தக் கவசத்தில் துளை ஏற்படுத்துவதற்கு உள்நாட்டு துரோகிகளும், வெளிநாட்டு எதிரிகளும் இடைவிடாமல் முயற்சித்துக் கொண்டிýருக்கின்றார்கள். கடந்த காலங்களில் இவர்களது முயற்சிகள் தோற்றுப் போனதைப் போல் இனிமேலும் தோல்வியடைய வேண்டும் என்பதே மேல் மாகாண மக்கள் முன்னணியின் ஒரே எதிர்பார்ப்பாகும். உலகில் நூற்றுக்கணக்கான விடுதலை இயக்கங்கள் இருக்கின்றன. இவற்றில் மிகவும் கட்டுக்கோப்பான இயக்கமாகக் கருதப்படுவது விடுதலைப்புலிகள் இயக்கம் ஆகும். பல்வேறு புதிய போராட்டக் குழுக்கள் புலிகளின் வரலாற்றை தங்களது பயிற்சி வகுப்புகளில் கற்று தெளிவடையும் நிலைமை இன்று உலகில் காணப்படுகின்றது. இந்நிலையில் கிழக்கிலங்கை நிலைமைகள் சம்பந்தமாக வெளியாகியுள்ள செய்திகள் நாடு முழுக்க வாழும் தமிழர்களையும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களையும் சஞ்சலப்படுத்தியுள்ளன. தமிழர்கள் இந்நாட்டிýல் எங்கு வாழ்ந்தாலும் புலிகளை தமது தன்மானச் சின்னமாக நம்புகின்றார்கள். இந்த நம்பிக்கை தான் தமிழர்களை எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கை கொள்ளச் செய்கின்றது. இதற்கு மேல் மாகாணத்தில் வாழும் தமிழர்களும் விதிவிலக்கல்ல. நிலைமை சீராகி அதுவே புதிய உத்வேகத்தை விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கும், புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் தந்திட வேண்டும் என நாம் எதிர்பார்க்கின்றோம். நன்றி - தினக்குரல் - kuruvikal - 03-06-2004 இது மனோ கணேசனது மட்டுமல்லாது...அனைத்துத் தமிழ் மக்களினதும் குரலாகி நிற்கட்டும்...! மக்களே பேசுங்கள்...அப்போதுதான் எதிரி இப்படியும் எமது சக்தியுடன் மோதத்தயங்குவான்....!
- Mathan - 03-06-2004 'தமிழ் தலைமைகளும்" பிளவுபட்டுப் போகக்கூýடாது ஜனநாயகமோ, பன்முகத் தன்மையோ இல்லாது தேசிய அரசியல் சிதறிப் போயுள்ள சூýழ்நிலையிலே ஒரு பொதுத்தேர்தல் நடைபெறப்போகின்றது. சமாதானத்தையும், அமைதியையும் தேடிýய நிலைமையிலே வெளிப்பட்ட திடPர் பொதுத்தேர்தலின் காரணமாக சகல சமாதான முயற்சிகளும் ஓரங்கட்டப்படும் நிலைமை, மௌ;ள மௌ;ள வெளிப்படுகின்றது. தேர்தலின் பின்னணியிலே, சகல கட்சிகளும், மனம்போன போக்கிலே பிரசாரங்களை வெளிப்படுத்தி வருவது மக்களைக் குழப்பத்திலாழ்த்தும் விடயமாகிக் கொண்டிýருக்கின்றது. சமாதானத்தை மீண்டும் புதிய அடிýத்தளங்களோடு நிலைபெறச் செய்ய வேண்டுமானால், தேர்தல் களத்திலே இறங்கியுள்ள சகல அரசியல் சக்திகளும், வேட்பாளர்களாகத் தேர்தலிலே நிற்பவர்களும் தெளிந்த மனத்தோடும் விட்டுக்கொடுப்புகளுடனும் செயற்பட வேண்டும்! இந்தப் பொதுத்தேர்தல், சகல அரசியல் சக்திகளும் முறைகேடாக நடக்க எத்தனிக்கும் சூýழ்நிலையிலே நடைபெறுகின்றது. ஜனநாயக அரசியலையே சிதைக்கும் வேகங்களுடன் வெளிப்பட்ட இந்தத் தேர்தலிலே இறங்கியுள்ள இரு பிரதான கட்சிகளும், சகவாழ்வு அரசியலிலே இறங்குவதற்கான வாய்ப்பு இனிமேல் ஏற்படப்போவதில்லை என்று சிந்திக்க வைக்கும் வகையிலே, 'அரசியல் தெளிவில்லாத கருத்து மோதல்கள் (?)" தோற்றுவிக்கப்படுகின்றன. இப்பொழுது முரண்பாடுகளின் மத்தியிலே, துருவப்பட்டிýருந்த }லங்கா சுதந்திரக் கட்சியும், மக்கள் விடுதலை முன்னணியும், புரிந்துணர்வு என்ற பெயரோடு ஒப்பந்தம் ஒன்றைச் செய்த பின்னர் கூýட இருவேறுபட்ட அடிýத்தளத்திலே தான் நிற்க முற்படுகின்றமை, இலங்கையின் தேசிய அரசியலையே குழப்பகரமான பாதையிலே தள்ளியுள்ளது. இந்த நாட்டிýன் அரசியலிலே சமாதானக் காற்றை வீச வைத்த ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் செய்த புரிந்துணர்வு உடன்படிýக்கை, யுத்தநிறுத்தம், அமைதிக்கான பேச்சுவார்த்தைகளைத் தொடர்வது என்றின்னோரன்ன விடயங்கள் எல்லாம் தூக்கி எறியப்பட்டால், நாட்டிýன் எதிர்காலத்திற்கு என்ன ஆகும்? நாட்டிýலே சமாதானம், அமைதி என்று பேசுவதற்கும், உறுதியான அரசியலை உருவாக்க முடிýயும் என்ற நம்பிக்கை வெளிப்படைந்தமைக்கும் புரிந்துணர்வு உடன்படிýக்கையும், யுத்த நிறுத்தமும் தான் மூýல காரணம். கடந்த அரை நூற்றாண்டு கால அரசியலிலே, முரண்பாடுகளையே மூýலதனமாகக் கொண்டு செயற்பட்டு வந்த இரு பிரதான அரசியல் கட்சிகளும், அரசியல் அதிகாரத்திற்காக ஒன்றையொன்று வீழ்த்துவதற்கான கங்கணங்களுடன் துருவப்பட்டுப்போயுள்ளன. சகவாழ்வு அரசியல், இணக்கங்களைக் காணமுடிýயும், பேசித் தீர்க்க முடிýயும் என்ற கருத்துக்களை வெளிப்படுத்தியபடிý, ஒற்றுமை அல்லது தேசிய ஒற்றுமை எனப் பேச முற்படுவது போலித்தனமான அரசியலாகி விட்டது. பதவி மோகங்களும், அதிகார வேட்டைக்கான ஆரவாரங்களும், தேர்தல் களத்திலே எதையும் பேசித்தள்ளலாம் என்ற அவலத்தை உருவாக்கிவிட்டன! வட, கிழக்கிலே நடைபெறும் அரசியல் ஒருமைப்பாடு, கட்சிகள் ஒன்று கூýடுதல், கூýட்டு ஒப்பந்தம், ஒற்றுமை என்ற விடயங்களைப் பொறுத்து தென்னிலங்கை அரசியல் சக்திகளும், ஊடகங்களும் உன்னிப்பாகக் கவனித்தபடிý இருக்கின்றன. தமிழ்த்தேசியக் கூýட்டமைப்பை நிமிர விடக்கூýடாது என்பது ஒருவகையிலே, தென்னிலங்கை அரசியலிலே ஒரு ஆதங்கமாகி விட்டது! பொதுத்தேர்தலுக்கான பிரசாரங்கள் சூýடுபிடிýத்திருக்கின்ற நிலைமையிலே, தமிழ்க்கட்சிகளும், விடுதலைப்புலிகளும் இணைந்து செயற்படும் பக்குவம் உருவாகிவருவதை தென்னிலங்கைத் தலைமைகள் அருவருப்புடன் பார்க்க முற்படுகின்றன. தமிழ்த்தேசியக் கூýட்டமைப்புக்கு கூýடிýய ஆசனங்கள் கிடைத்து விடக்கூýடாது என்ற விடயத்தைப் பொறுத்து பல்வேறு விதமான, 'அக்கறைகள்" வெளிப்பட்டபடிý உள்ளன. வட, கிழக்கு மக்களின் வாக்குகளைச் சிதறவைப்பதற்கான சில்லறை முயற்சிகளைத் தட்டிýவிடும் கூýத்துக்களின் மத்தியில் சிறிய விடயங்களை, அல்லது வட பகுதியில் நடைபெறும் சம்பவங்களை எல்லாம் தென்னிலங்கை ஊடகங்கள் பெரிதுபடுத்தி விமர்சிக்க முற்படுவதும் நடைபெறுகின்றது. ஆரோக்கியமான அரசியல் எதிர்காலத்தை நோக்கிய பயணங்களைச் சிதைக்கும் வகையிலே, தமிழ்த் தலைமைகளும், பிளவுபட்டுப் போகமுற்பட்டால், இந்நாட்டிýலே, சகல கோணங்களிலும் அரசியல் அநாகரிகங்கள் தான் மிச்சசொச்சமாக வெளிப்படும். ஆனபடிýயினால் தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம் அல்லது கதி என்பதைப் பற்றி உரத்துச் சிந்திக்க வேண்டிýய தருணமே இப்பொழுது எழுகின்றது. நன்றி - தினக்குரல் - kuruvikal - 03-06-2004 ஆங்கிலத்தில் புலிகளின் சமாதானத் தலைமைச் செயலகம் விடுத்த செய்தி....! (களவிதியின் பிரகாரம் தனி ஆங்கிலச் செய்திகள் இங்குபிரசுரிக்கப்படக் கூடாது என்பதற்காக இணைப்பு அளிக்கப்படுகிறது....!) எந்த நெருக்கடி நிலையிலும் விதிகளையும் ஒழுங்குகளையும் கட்டுப்பாடுகளையும் அனைவரும் கட்டிக்காத்து அவற்றின் கீழ் செயற்படுவதே சிறந்தது....! [url=http://www.lttepeacesecretariat.com/][b]புலிகளின் சமாதானத் தலைமைச் செயலகம் விடுத்த செய்தி....! :twisted: :!:
- nalayiny - 03-06-2004 ஊடகவியலாளர் மகாநாட்டின் தொகுப்பு. நன்றி ஐபிசி. http://www.ibctamilradio.com/ நாங்கள் தேசியத் தலைவரின் தலைமையின் கீழேயே தொடர்ந்து இயங்குவோம்: மட்டு-அம்பாறை அனைத்து தளபதிகளும் ஊடகவியலாளர் முன்னிலையில் அறிவிப்பு!! - எழுத்து வடிவம் http://www.tamilnaatham.com/question20040307.htm |