Yarl Forum
பிரித்தானிய தகவல்கள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21)
+--- Thread: பிரித்தானிய தகவல்கள் (/showthread.php?tid=5711)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11


- ukraj - 01-27-2006

அது அவரின் தனிப்பட்ட விடயம்.
ஏன் காரைக்கால் அம்மையார், கல்லடிப்புலவர், புதுவைஇரத்தினதுரை(கனக்க இருக்குது ஆனால் ஞாபகம் வரேல்ல) எண்டு அழைக்கும் போது இப்படி அழைக்கக்கூடாதோ...?


- Mathuran - 01-27-2006

ராஜ் தவறாக எடுக்காதீர்கள். எங்கள் தாய் தந்தயர் அறியாமையின் காரணத்தினால் நமது பெயர்களின் விளக்கங்களை நாமே விளங்கிக் கொள்ளமுடியாதவண்ணம் வைத்துவிட்டார்கள். சரி அவர்கள் தான அறியாமையின் காரணத்தால் நமது பெயர்களை அழகுதமிழில் வைக்கத்தவறிவிட்டார்கள். சரி முடிந்தால் நமது பெயர்களை தூயதமிழில் விளக்ககூடிய நாமே சூட்டிகொள்ளவேண்டும். புதுவை இரத்தினதுரை என்பது அவரின் பூர்வீக பெயராகக் கூட இருக்கலாமல்லவா? காரைக்கால் அம்மையாரின் பூர்வீகம் காரைக்காலாக இருக்கலாம். அதற்காக.......நீங்களும்..........



சரியா தவறா என எனக்கும் சற்று குழப்பமாகத்தான் இருக்கின்றது. முடிந்தவரை பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு தமிழில் பெயர் வைத்தால் இந்த சிக்கல்கள் வராது என நினைக்கின்றேன்.


- ukraj - 01-28-2006

என்ர பெயரை கொண்டு நான் பட்ட வேதனைகள் கொஞ்சநஞ்சமல்ல. வேலை செய்யிற இடத்தில வெள்ளைகாரர்களேடு பட்டபாடு பெரும்பாடு. அதனால் தான் இப்படி சுருக்கிக் கொண்டேன்.

ஆனால் எனக்கு ஒண்டுமட்டும் விளங்கேல்ல ஏன் என்ர பெயரை எல்லோரும் இழுத்துக் கொண்டு திரியினம்.


- Thala - 01-28-2006

ukraj Wrote:என்ர பெயரை கொண்டு நான் பட்ட வேதனைகள் கொஞ்சநஞ்சமல்ல. வேலை செய்யிற இடத்தில வெள்ளைகாரர்களேடு பட்டபாடு பெரும்பாடு. அதனால் தான் இப்படி சுருக்கிக் கொண்டேன்.

ஆனால் எனக்கு ஒண்டுமட்டும் விளங்கேல்ல ஏன் என்ர பெயரை எல்லோரும் இழுத்துக் கொண்டு திரியினம்.

போறாமை, வயித்தெரிச்சல், இப்பிடி அழகான பேரை வைத்திருகும் போது எல்லாம் வருவதும் இயற்கை...!


- ukraj - 01-28-2006

இதுகள் இப்பவும் இருக்குதா ?


- தூயவன் - 01-28-2006

Thala Wrote:
ukraj Wrote:ஆனால் எனக்கு ஒண்டுமட்டும் விளங்கேல்ல ஏன் என்ர பெயரை எல்லோரும் இழுத்துக் கொண்டு திரியினம்.

போறாமை, வயித்தெரிச்சல், இப்பிடி அழகான பேரை வைத்திருகும் போது எல்லாம் வருவதும் இயற்கை...!

ஆமாம். உடனே போய் பெயருக்கு காப்புறுதி செய்து கொள்ளுங்கோ. பிறகு யாரும் இந்த அழகான பெயருக்கு உரிமம் எடுத்து விடுவார்கள். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- SUNDHAL - 01-30-2006

பிரிட்டன் கருக்கலைப்பு சட்டம்கடுமையாக்க மக்கள் வலியுறுத்தல்
பிரிட்டன் மக்களில் பெரும்பாலானவர்கள் "கருக்கலைப்பு சட்டம்' கடுமையாக்கப்பட வேண்டும் என்று கருத்து தெரிவித்து உள்ளனர்.

பிரிட்டனில் கருக்கலைப்பு செய்வதற்கு சட்டப்பூர்வ அனுமதி உண்டு. கடந்த 1967ம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட இந்த சட்டம் 22 வாரங்கள் வரை கருவை கலைக்க அனுமதி அளித்தது. பின்னர்இ கடந்த 1990ம் ஆண்டு இந்த சட்டம் திருத்தப்பட்டு 24 வாரங்கள் வரையிலான கருவை கலைத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில் "அப்சர்வர்' என்ற ஆங்கில நாளிதழ் இது குறித்த கருத்துக் கணிப்பை நடத்தியது. பிரிட்டன் மக்களில் 47 சதவீத பெண்கள் சட்டத்தை கடுமையாக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். அதாவதுஇ தற்போதைய 24 வாரங்கள் என்ற நிலையை குறைத்து சட்ட திருத்தம் செய்ய வேண்டும் என்று கூறி உள்ளனர். அவர்களில் 10 சதவீதம் பேர் "கருக்கலைப்பு செய்வதை' சட்ட விரோதமாக அறிவிக்க வேண்டும் என்று கடுமையான கருத்தை தெரிவித்துள்ளனர்.

31 சதவீத பெண்கள் மற்றும் 35 சதவீத ஆண்கள் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று கூறி உள்ளனர். இரண்டு சதவீத பெண்கள் மற்றும் 5 சதவீத ஆண்கள் மட்டுமே கருக்கலைப்பு செய்யும் கால வரம்பை மேலும் அதிக காலத்திற்கு நீட்டிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். பிரிட்டனில் "கருக்கலைப்பு சட்ட' விவகாரம் கடந்த பார்லிமென்ட் தேர்தலிலும் எதிரொலித்தது குறிப்பிடத்தக்கது.


- MUGATHTHAR - 01-30-2006

அவனவன் பிள்ளையில்லை எண்டு கோயில் கோயிலா சுத்தி திரியிறான் லண்டனிலை என்னடா எண்டா கொழுப்பு கூடி கரு கலைக்க வெளிக்கிட்டுத்துகள் ஏனப்பா சும்மா இருந்திட்டுப் போண இந்த வேலையெல்லாம் தேவையில்லைத்தானே தமிழ் கலாச்சாரத்திலை தன்னும் இதுகளை பின்பற்றாமல் வெள்ளம் வரமுன்னம் அணைகட்டுறத்துக்கு எத்தனையோ வழியிருக்கு அதுகளை பொலோ பண்ணுங்கோ........பாவங்களாவது குறையும்


- kuruvikal - 01-30-2006

MUGATHTHAR Wrote:அவனவன் பிள்ளையில்லை எண்டு கோயில் கோயிலா சுத்தி திரியிறான் லண்டனிலை என்னடா எண்டா கொழுப்பு கூடி கரு கலைக்க வெளிக்கிட்டுத்துகள் ஏனப்பா சும்மா இருந்திட்டுப் போண இந்த வேலையெல்லாம் தேவையில்லைத்தானே தமிழ் கலாச்சாரத்திலை தன்னும் இதுகளை பின்பற்றாமல் வெள்ளம் வரமுன்னம் அணைகட்டுறத்துக்கு எத்தனையோ வழியிருக்கு அதுகளை பொலோ பண்ணுங்கோ........பாவங்களாவது குறையும்

வெள்ளம் எல்லாப் பக்கத்தாலும் நுளைஞ்சிட்டு முகத்தார்.. எனித் தடுக்கிறது அவ்வளவு சுலபமில்ல..! கலாசாரம் என்றால் என்ன என்று கேட்கும் நிலையும் அதுவே புதுமை என்று சொல்லும் கோமாளித்தனமும் வளர்ந்திட்டே இருக்கு...! எனவே எனி அணை போடுறது அவ்வளவு லேசான காரியமாப்படல்ல.. என்றாலும் முயற்சிக்கலாம்..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea


- ஈழமகன் - 02-04-2006

பிரித்தானியாவில் தமிழ் தேசியத்திற்கு பலம் சேர்க்கும் முகமாக பல வேலைத்திட்டங்களை மேற்கொள்வதற்கு பிரித்தானியா வாழ் யாழ் கள உறவுகள் அனைவரும் முன்வருமாறு எதிர்பார்க்கபபடுகிறீர்கள்......

இதில் 10 பேரை உள்ளடக்கியதாகவும் அவர்கள் வசிக்கும் பிரதேசத்தை அடிப்படையாக கொண்டும் ஒரு குழு அமைக்கப்பட்டு செயற்படும். இந்த குழுவில் இருக்கும் முதன்மையானவருக்கு மட்டுமே மற்றவர்களை தெரியும். எனவே கள உறவுகள் முன்வருவார்கள் என்று நினைக்கின்றேன்.


- Double - 02-21-2006

Waterloo Bridge is closed by police now. They searching for something....
<img src='http://homepage.ntlworld.com/garryknight/Photos/Misc/Thumbs/Waterloo_Bridge.jpg' border='0' alt='user posted image'>


- Double - 02-21-2006

þô§À¡Ð Á£ñÎõ ¾¢ÈóРŢ¼ôÀðÎûÇÐ. §¾Î¾Öì¸¡É ¸¡Ã½õ ¦¾Ã¢ÂÅ¢ø¨Ä. ÌñÎôÒÃǢ¡¸ þÕì¸Ä¡õ...