![]() |
|
Breaking News - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: Breaking News (/showthread.php?tid=7412) Pages:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
|
- kavithan - 06-04-2005 ரெலோ இயக்கத்தினரால் வவுனியா பகுதிக்கு மீள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வ்ருகின்றது. அவ் நிலயத்தின் மீது தான் தாக்குதல் நடாத்தப்பட்டு இருக்காலாம். அங்கே பலகாலமாக தானே நடக்கு இப்படியான தாக்குதல்.. அந்த நிலையத்துக்கு முன்னர் பலத்த பாதுகாப்பு இருந்தது ரெலோ இயக்கதினரால் .தற்போது எப்படியோ தெரியவில்லை. - Taraki - 06-05-2005 புகழேந்தி: இந்தியாவிலிருந்து ஒரு கலைத்தூதர். Sunday, 05 June 2005 -------------------------------------------------------------------------------- எஸ்.வி.ஆர் என்று தமிழ் நாட்டிலும் இலங்கைத்தீவிலும் இந்தியாவிலும் பரவலாக அறியப்பட்ட எஸ்.வி.ராஜதுரை தமிழ் நாட்டிலுள்ள புத்திஜீவிகளில் வித்தியாசமாகத் துலங்கும் ஒருவர். முன்பு தமிழ் நாட்டில் ஈழப்போராட்டத்தை மிகத் தீவிரமாகத் ஆதரித்தவர்களில் ஒருவர். தொடர்ச்சியாக உயிர்த்துடிப்போடு செயற்பட்டும் எழுதியும் வருகின்ற ஒரு தீவிர இடதுசாரி; தலித்தியவாதி. தமிழ் நாட்டிலுள்ள நிறுவனம் சார் பாரம்பரிய புத்திஜீவிகள் சாதித்த வற்றை விடவும் அதிகம் சாதித்தவர். கடந்த மாவீரர் நாள் அன்று ராஜதுரை யாழ்ப்பாணத்திலிருந்து வன்னிக்கு வந்திருந்தார். “இந்நாளில் இங்கே நான் எதை கட்டாயம் பார்க்கவேண்டும்” என்று கேட்டார். “துயிலும் இல்லத்திற்கு போவோம்” என்றேன். எமது வாகனம் துயிலும் இல்லத்தை நோக்கி புறுப்பட்ட போது மாவீரர் நாள் உரையும் ஆரம்பமாகிவிட்டது. ஆளரவமற்ற தெருக்களின் வழியே மழைக்காக காத்திருந்த அந்த பின்மாலைப் பொழுதில் படுவேகமாக ஓடிய வாகனத்தில் இருந்த படி மாவீரார் நாள் உரையை அவர் கேட்டார். மாவீரர் நாள் உரை முடிய முன்பே நாம் துயிலுமில்லத்தை அடைந்து விட்டோம். அங்கு திரண்டிந்த சனத்திரளுள் நுழைந்த நாங்கள் நடுகற்களை நெருங்கிச் செல்லவும் மணியோசை எழவும் சரியாக இருந்தது. குளிர்ந்த காற்றில் தேங்கி நின்ற மணியோசையும் சோகப்பாடலும் தீச்சுடர் கருகும் வாசமும் நடுகற்களின் முன்னே தமது விழிகளிலே தீச்சுடர் மினுங்க அழுதபடியிருந்த உறவினர்களுமாக அந்தச் சூழல் எஸ்.வி.ஆர் இற்கு முற்றிலும் புதியதாக இருந்தது. எல்லாவற்றையும் அவர் பிரமிப்போடு பார்த்தார். மாவீரர் நாள் உரை மிகவும் சமநிலையாக இருக்கிறது. ஒரு வெளிநாட்டுப் பார்வையாளருக்கு அது விசயங்களை தொகுத்தும் சுருங்கியும் தருகிறது என்று அதை அவர் மிகவும் புகழ்ந்தார். அவருக்குள் இருந்த எளிதில் விட்டுக்கொடுக்காத எதற்கும் சரணடையாத இறுக்கமான ஒரு புத்திஜீவி மெல்லக்கரைந்து மிகவும் உணர்ச்சிவசப்பட்ட தமிழன் அவரிடத்தில் தோன்றினான். அந்த இடத்தில் அந்த நேரத்தில் அவர் ஒரு புத்திஜீவியாய் அல்ல மிகவும் உணர்ச்சி வசப்பட்ட ஒரு தமிழனாகவே தோன்றினார். ஆனால் எஸ்.வி.ஆர் முதலாவதாக ஒரு புத்திஜீவியும் செயற்பாட்டுக்காரரும் இரண்டாவதாக அவர் ஒரு கலைஞர் விமர்சகர். ஆனால் அண்மை நாட்களில் வன்னியில் வந்துநிற்கும் ஓவியர் புகழேந்தி ஒரு புத்திஜீவியல்ல. அவர் ஒரு முதலாவதாக ஒரு படைப்பாளி மிகவும் உணர்ச்சிவசப்படுகின்ற ஒரு ஓவியர். ஒரு உள்@ர் பத்திரிகைக்கு அவர் பேட்டி வழங்கிக்கொண்டிருந்த போது, தொடர்ச்சியாக இவ்வளவு காலமும் எப்படி ஈழப்போரோடு நிற்கமுடிகிறது என்று கேட்கப்பட்டபோது@ அவர் அழுதே விட்டார் என்று சொல்லப்படுகிறது. அவரும் அவரையொத்த தமிழகத்து ஈழத்துப் படைப்பாளிகள் பலரும் கலையை ஒரு கருவியாகவே பார்க்கிறார்கள். அதாவது தமது அரசியல் கருத்துக்களை, இலட்சியங்களைய சனங்களிடம் எடுத்துச் செல்லும் ஒரு வாகனமாகவே அவர்கள் கலையை பயன்படுத்துகிறார்கள். இன்று இப்பந்தி புகழேந்தியின் ஓவியங்களின் கலைத்தரத்தை மதிப்பீடு செய்யப்போவதில்லை. பதிலாக அவருடைய ஓவியங்களின் பின்னால் இருக்கும் அரசியலைப்பற்றிக் கதைப்பதே இன்று இப்பந்தியின் நோக்கம். புகழேந்தியின் ஓவியங்கள் பெற்ற முக்கியத்துவத்துக்கும், கவனிப்புக்கும் அவற்றின் அரசியல் உள்ளடக்கம் ஒரு முக்கிய காரணம் என்பதனாலும் அவருடைய ஓவியங்களின் அரசியலை கதைப்பது அதிகம் பொருத்தமானதாய் இருக்கும். கடந்த ஒரு தசாபடதற்கு மேலாக படிப்படியாக சிதைந்து வரும் தமிழக – தமிழீழ உறவின் பின்னணியில் அவருடைய இந்த ஓவிய அரசியலை பற்றிக் கதைப்பது மேலும் முக்கியத்துவமுடையதாகிறது. 1987இல் இலங்கை - இந்திய ஒப்பந்தம் உருவாகிய காலத்திலிருந்து சிதையத் தொடங்கிய தமிழக – தமிழீழ உறவு கடந்த சுமார் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நிலவிவரும் யுத்தநிறுத்தச் சூழலிலும் பெருமளவுக்கு சீர்செய்யப்படவில்லை. கடந்த சுமார் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக மேற்கு நாடுகளை நோக்கி குறிப்பாக ஐரோப்பாவை நோக்கி ஈழத்தமிழர்கள் சாய்ந்து வரும் வேகத்துடன் ஒப்பிடுகையில் தமிழக – தமிழீழ உறவில் ஏற்பட்டிருக்கக் கூடிய புதிய மாற்றங்கள் எதுவும் ஓப்பீட்டளவில் மிகக்குறைவே. தமிழ் நாட்டில் உள்ள பெரும் கட்சிகளும் பழமைபேண் இடதுசாரிக் கட்சிகளும் ஈழத்தமிழர்களை எப்பொழுதோ கைவிட்டு விட்டன. அல்லது சிலசமயம் காட்டிக் கொடுத்துமிருக்கின்றன. தற்சமயம் ஈழத்தமிழர்களிடத்தில் அக்கறையேர்டும் ஆர்வத்தோடும் காணப்படுவது அரசியல் அதிகாரம் குறைந்த சிறிய கட்சிகளும், சிற்றியக்கங்களும், தலித்திய இயக்கங்களும் தான். இத்தகையதொரு பின்னணியில் தமிழ்நாடு இனியும் ஈழப்போரின் பின்தளமாக இல்லை. என்று டில்லியிலுள்ள கொள்கை வகுப்பாளர்கள். திருப்திப்படக்கூடும். சந்தேகப்படக்கூடும். ஆனால் கடந்த இரு தசாப்தகாலமாக ஈழத்தமிழர்கள் இந்தப்பிராந்தியத்தைக் கடந்து ஒரு அந்நியப்பிராந்தியத்தில் பதிவைக் கப்பட்டு வருவதும். அங்கெல்லாம் அவர்கள் ஏற்கனவே ஒரு நிதிப்பின்தளமாக உருவாகி விட்டிருப்பதும், இனிவரும் காலங்களில் அவர்கள் அரசியல் பின்தளமாக உருவாகப் போவதையும் மேற்படி டில்லியிருக்கும் கொள்கை வகுப்பாளர்கள் ஏனோ கண்டுகொள்ளவேயில்லை. இதுவொரு அசாதாரண மாற்றம், நிச்சயமாக டில்லிருப்பவர்கள் இப்படியொரு மாற்றத்தை நினைத்துப்பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் அது நடந்து விட்டது. ஈழத்தமிழர்கள் அந்நியப்பிராந்தியத்தில் பதிவைக்கப்பட்டுவிட்டார்கள். ஐரோப்பா அவர்களை தத்தெடுக்கத் துடிக்கிறது. உழைப்பார்வமும் படிப்பில் வெறியும் சேமிப்பில் வெறியுமுடைய விவேகமும் வீச்சுழியும் மிக்க ஒரு தனித்தினுசான புலம்பெயர் சனத்திரளை தன்வயப் படுத்துவதன் மூலம் இந்தப் பிராந்தியத்தில் எதிர்காலத்தில் தமக்குப் பிரகாசமான வாய்புக்கள் உருவாகிவருவதாக அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகள் நம்புகின்றன. அந்த இலக்கைநோக்கி அடிகளை எடுத்து வைக்கத் தொடங்கியும் விட்டன. அமெரிக்காவிலுள்ள செல்வாக்குமிக்க ஐரிஸ் சமூகத்தைப்போலவே ஈழத்தமிழர்களும் ஒரு நாள் ஐரோப்பாவில் அரசியல் அபிப்பிராயங்களை உருவாக்கவல்ல அல்லது அரசியல் அழுத்தங்களைப் பிரயோகிக்கவல்ல ஒரு சனத்திரளாக உருவாகக்கூடிய வாய்புக்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் மேலும் அதிகரித்து வருகின்றன. இத்தகைய ஒரு பின்புலத்தில் தன்னிடமிருந்து தூரமாகிச் செல்லும், தனது பிராந்தியத்தைச் சேர்ந்த, தனது உபகண்டப் பெருங்கலாச்சாரத்தின் “ஒரு கூறாகக்” காணப்படுகின்ற, சிறிய ஆனால் புரிந்துக்கொள்ளக் கடினமான, வீரம்மிக்க ஒரு சனத்திரளை தொடர்ந்தும் வன்மத்தோடும் “பெரிய இந்தியா” என்ற ஆணவத்தோடும் டில்லியிலுள்ள கொள்கை வகுப்பாளர்கள் அணுக முயலும் அரசியல் சூழலில் புகழேந்தி தனது ஓவியங்களையும் காவிக்கொண்டு ஒரு கலைப்பயணத்தை மேற்கொண்டு வன்னிக்கு வந்திருக்கிறார்கள். அவர் இதற்கு முன்பும் பலகலைப் பயணங்களச் செய்திருக்கிறார். ஆனால் இது மிகவும் வித்தியாசமானதும் உணர்ச்சியானதும் அவரை சிலசமயங்களில் அழவைப்பதாகவும் இருக்கிறது. நல்லூரில் திலீபன் உண்ணா நோன்பிருந்த இடத்திலும் ஏனைய சில பெருமெடுப்பிலான படுகொலைகள் நிகழ்ந்த இடங்களிலும் பெரிய அளவிலான ஓவியங்களை வரைய விரும்புவதாகவும் அவர் கூறுகிறார். இந்நியாவிலிருந்து இராஜதந்திரிகளும், ஏனைய பிரதானிகளும் வன்னிக்கு வருதல் என்பதை ஒரு துடக்காகக்கருதும் ஒரு அரசியல் சூழலில் இந்தியாவிலிருந்து முதன் முதலாக பிகிரங்கமாகவும் துணிச்சலாகவும் வந்திருக்கும் ஒரு கலைத்தூதுவர் அவர். ஏற்கனவே இலங்கதை;தீவிலிருந்து சுவாமி விபுலானந்தர், கலாயோகி ஆனந்தகுமாரசுவாமி, தனிநாயகம் அடிகள், நாவலர், சி.வை.தாமோதரம்பிள்ளை போன்ற சில கலைத்தூதுவர்கள் காலத்துக்குக் காலம் இந்தியாவுக்கு போகிறார்கள். இம்முறை புகழேந்தி இந்தியாவிலிருந்து வந்திருக்கிறார். பொடாச் சட்டத்துக்கு எதிராக திரு.வை.கோபாலசாமி முன்னெடுத்த வீரம் மிகுந்த ஒரு சாத்வீகப் போராட்டத்தின் வெற்றிகளில் ஒன்றாகவும் இதை வியாக்கியானம் செய்யமுடியும். ஒரு ஆயுதமேந்திய இயக்கத்தை ஆதரித்ததாகக் கூறப்பட்டு பொடாவின் கீழ் வை.கோ சிறைவைக்கப்பட்டார். ஆனால் அந்தச் சிறைவாழ்வை அதன் வலிகளோடு அமைதியாக ஏற்றுக்கொண்டு அதில் தன்னை வருத்தி அதையே ஒரு சாத்வீகப்போராட்டமாக முன்னெடுத்த வை.கோ முடிவில் அதில் வெற்றியும் பெற்றார். அந்த வெற்றிகளின் விளைவாக தமிழ் நாட்டில் துளிர்ந்துவரும் புதிய நம்பிக்கைகளின் தூதுவராக முதலில் அடியெடுத்து வைத்திருப்பவர் புகழேந்தி எனலாம். அவர் இதற்கு முன்பும் (சில மாதங்களுக்கு முன்பு) இலங்கைக்கு வந்துபோனவர்தான். கவிஞர் அறிவுமதி, தங்கபச்சான், பேராசிரியர் அரசு, எஸ்.வி.ராஜதுரை, பாலுமகேந்திரா சக்சபோன் கலைஞர் சியாம் சரண் போன்றோர் அதிகம் பரபரப்பின்றி வந்துபோன ஒரு பின்னணியில் பகிரங்கமாக ஒரு கலைத்தூதுவராக முதலில் வரத்துணிந்தவர் புகழேந்தி எனலாம். தமிழக – தமிழீழ உறவில் இன்னமும் அறுந்துவிடாதிருக்கும் நுண்ணிய மெல்லிழைகளில் அவரும் ஒருவர். அவர் கொண்டு வந்திருக்கும் கலைத்தூதைப் பின்பற்றி மேலும் மேலும் இந்தியர்கள் இங்கே வரவேண்டும். புதுடில்லியிலுள்ள கொள்கைவகுப்பாளர்கள் புலிகளை மட்டும் ஒரு தடைசெய்யப்பட்ட இயக்கமாக கருதவில்லை. மாறாக, புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வசிக்கும் தமிழர்களையும் கூட தடைசெய்யப்பட்ட மக்களாகவே பார்ப்பது தெரிகிறது. ஆனால் இது விசயத்தில் ஈழத்தமிழர்கள் வித்தியாசமாகவும், நிதானமாகவும், நடந்துகொள்ளவேண்டியிருக்கிறது. அதாவது புதுடில்லியிலுள்ள கொள்கைவகுப்பாளர்களையும், இந்தியப் பெருமக்களையும் ஒரே தராசில் போட்டு நிறுத்தக்கூடாது. ஈழப்போரின் நிர்ணயகரமான தருணங்களில், ஐரோப்பாவில் இருக்கும் தமிழர்களைப்போலவே தமிழ் நாட்டுத் தமிழர்களும் ஒரு தீர்மானிக்கும் பெரும் சக்தியாக அமைய முடியும் என்பதை மறந்துவிடாதிருக்க வேண்டும். http://sooriyan.com/index.php?option=conte...id=1786&Itemid= - Taraki - 06-05-2005 [b]We would like to say just one thing. We are today strong enough to face the enemy and defeat it. We have weapons to attack the enemy that is not visible to the eyes and 15 Kilometers away. But we are not ready for war. We want to live together. The feelings of the students must be clearly understood When we lost ten cadres we took on a superpower, today after loosing 100 cadres we are still patient Commander Suresh from Batticaloa-Amparai http://www.ltteps.org/ - anpagam - 06-05-2005 வேறு ஒருதலைப்பில் துவங்கி இருக்கலாம் தராகி அருமையான ஆளமான கட்டுரை 8) நன்றி: சூரியன் & தராகி - Mathan - 06-07-2005 ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர இராஜினாமா! சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர இன்று தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ளாதாகவும் அவரது இராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார் என்றும் ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆயினும் துறைமுகம் மற்றும் கப்பல்துறை அமைச்சராக தொடரந்தும் பதவி வகிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜே.வி.பியை சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைத்து கடந்த தேர்தலில் போட்டியிட வைப்பதற்கும் இருகட்சிகளும் இணைந்து செயற்படவும் முன்னின்று செயற்பட்டவர் அமைச்சர் மங்கள சமரவீர என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் கடந்த சில மாதங்களாக ஜனாதிபதிக்கும் ஜே.வி.பியினருக்கும் இடையில் ஏற்பட்ட உச்சக்கட்ட அரசியல் முறுகலில் ஜே.வி.பியின் பக்கம் நின்று ஜனாதிபதியிடம் பரிந்து பேசி வந்ததால் இவருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டன. ஊடக அமைச்சர் என்ற வகையில் மங்கள சமரவீரவுக்கே தெரியப்படுத்தாமல் ஜனாதிபதி அண்மையில் ரூபவாகினியில் ஜே.வி.பியினரை தாக்கி வழங்கிய பேட்டிஇ ஜனாதிபதியின் கடந்த இந்திய விஜயத்தின் போது மங்களவை அழைத்துச் செல்லாதமை போன்றவை மங்களவுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான முறுகலை எடுத்துக்காட்டியிருந்தன. பொதுக்கட்டமைப்பு விடயத்திலும் மங்கள ஜனாதிபதிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதுடன் ஜனாதிபதிக்கு எதிராக அமைச்சர்கள் அணியொன்று மங்கள தலைமையில் திரள்கிறது என்றும் கடந்த வாரம் தென்னிலங்கையில் செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. மாத்தறை தொகுதி எம்.பியாக அரசியலில் புகுந்த அமைச்சர் மங்கள - ஒரு காலத்தில் எஸ்.பி.திஸநாயக்க இருந்தது போல் - ஜனாதிபதியின் மிகுந்த நம்பிக்கைக்கு உரியவராகவும் விசுவாசியாகவும் இருந்து வந்தவர் ஆவார் puthinam - Mathan - 08-18-2005 புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் ஐ.நா கொடி பலவந்தமாக இறக்கப்பட்டது <img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/08/20050804133809un203.jpg' border='0' alt='user posted image'> இலங்கையில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கிளிநொச்சியில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலக வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்த சுமார் 60 பேர் கொண்ட குழுவொன்று அங்கிருந்த ஐக்கிய நாடுகள் சபையின் கொடியை பலவந்தமாக இறக்கியதாக ஐக்கிய நாடுகள் சபை குற்றஞ்சாட்டியுள்ளது. இது தொடர்பான கண்டனத்தினை ஐக்கிய நாடுகள் சபை விடுதலைப்புலிகளுக்கு அனுப்பி வைத்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதியும் மற்றும் மனித நேய நடவடிக்கைகளுக்கான இணைப்பாளருமான மிக்கேல் பேர்மியோவ் சார்பில் பேசவல்ல அதிகாரியான பெரெனன் ஜோண்ஸ் தமிழோசைக்குத் தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் சபையின் சிறார்களுக்கான நிதியம், ஐக்கியநாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி நிதியம் ஆகியவற்றின் அலுவலகங்கள் இந்த வளாகத்தினுள் செயற்பட்டு வருகின்றன என்றும் அவர் கூறினார். விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மக்களின் நலனுக்காக இவை அங்கு செயற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இலங்கையின் வெளியுறவு அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் அவர்கள் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தேசிய துக்கதினம் அனுட்டிக்கப்பட்டதை முன்னிட்டு, ஐக்கிய நாடுகள் சபை தனது கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விட்டிருந்த போதே இந்த கும்பல் அங்கு சென்று அதனை பலவந்தமாக இறக்கியதாக ஜோண்ஸ் குறிப்பிட்டார். இதனை ஐக்கிய நாடுகள் சபை வன்மையாகக் கண்டிப்பதாகவும், ஐக்கிய நாடுகள் சபையின் பணியாளர்களும், உடமைகளும் கௌரவத்துடன் நடத்தப்பட வேண்டும் என்றும் ஐ.நா வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார். இந்தச் சம்பவம் புலிகளின் கட்டுப்பாட்டில் நடந்துள்ளது என்பதால் அது குறித்து புலிகளுக்கு முறையான கண்டனக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும், ஆனால் அங்கிருந்து பதில் எதுவும் வரவில்லை என்றும் ஜோண்ஸ் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பான ஐ.நாவின் கடிதம் தமக்கு கிடைத்துள்ளதை விடுதலைப்புலிகளின் சார்பில் பேசவல்ல தயா மாஸ்டர் உறுதி செய்துள்ளார். BBC Tamil - kuruvikal - 08-18-2005 முன்னாள் ஐநா செயலர் பூட்டோஸ் பூட்டோஸ் காலி 95 இடம்பெயர்வு தொடர்பில் தமிழ் மக்களுக்கு சர்வதேச உதவி கோரி விடுத்த கருத்துக்கு அவரை அவமதிக்கும் விதமாக பதில் அளித்த போது கதிர்காமர் பற்றி அலட்டிக் கொள்ளாத ஐநா இப்போ.. கொடிக்கு கொடி பிடிக்கிறது ஏனாம்...??! hock: :roll:
- AJeevan - 08-18-2005 ஒரு மனிதரின் கருத்தை அவமதிப்பதென்பது வேறு, ஒரு தேசத்தின் கொடியை அவமதிப்பதென்பது வேறு ஒருவரின் கருத்துகள் பிடிக்காத போது அதை எதிர்த்து எதையாவது சொல்வது அல்லது தர்க்கம் செய்வதென்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு நடை முறை. ஆனால் ஒரு தேசியக் கொடியையோ அல்லது பல தேசங்களின் கூட்டுச் சின்னத்தையோ அவமதிப்பது என்பது முழு சமூகத்தையே அவமதிப்பதாக கருதுகிறார்கள். இங்கே ஒரு சிலர் உணர்ச்சி வசப்பட்டு செய்த காரியம், ஐ.நா கொடியை அகற்றியது என்றே எண்ணத் தோன்றுகிறது. அதற்கு அனைத்து தமிழர்களும் பொறுப்பேற்க முடியாது. - narathar - 08-18-2005 இப்படியான சட்டம் ஒழுங்கு சம்பத்தமான பிரச்சனைகளை விசாரிக்கத்தான் தமிழீழ போலிசும், நீதிமன்றமும் இருக்கு.ஐ நா அதிகாரிகள் எங்கு சென்று தமது முறைப் பாட்டை தெருவித்தனரா?அதற்கான விசாரணைகள் நடை பெற்றதா? நடை பெற்ற சம்பவங்களுக்கும் ,விடுதலைப் புலிகளுக்கும் என்ன சம்பத்தம்? - Danklas - 08-18-2005 ஜ.நா சொல்லுற கதையை கேக்கிற நேரம் நி***ம்.நெட் சொல்லுற மெகா காமெடிகளை கேட்டால் சிரிச்சுக்கொண்டு தன்னும் இருக்கலாம்..(என்ன நெடுகலும் கேட்டால் கோமா ஆக்கிடும்) :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- MUGATHTHAR - 08-18-2005 உங்களின் ஆயுளைக் கூட்ட வேண்டுமா இன்றே வாசியுங்கள் நி***ம்.நெட் எப்பிடி டண் விளம்பரம் சரியா.................. - ragavaa - 08-18-2005 MUGATHTHAR Wrote:உங்களின் ஆயுளைக் கூட்ட வேண்டுமா இன்றே வாசியுங்கள் நி***ம்.நெட்<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - vasisutha - 08-18-2005 விளம்பர யுக்தி அருமை. - Danklas - 08-18-2005 MUGATHTHAR Wrote:உங்களின் ஆயுளைக் கூட்ட வேண்டுமா இன்றே வாசியுங்கள் நி***ம்.நெட் முகத்தாரா கொக்கா... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: (இப்படி செய்யலாம் விளம்பரத்தை)வாய்விட்டுச்சிரித்தால் நோய் விட்டுப்போகும் ஆகவே, நாடுங்கள் உங்களின் அபிமானம் பெற்ற 7 அறிவு காமெடி டாக்டர்களை.. மேலதிக விபரங்களுக்கு எமது www.N****M.Net/elumputhundu/comedyvithagarkal. (நி***ம்.நெட்/எலும்புத்துண்டு/காமெடிவித்தகர்கள்.) ![]() 24மணி நேர காமெடிச்சேவைகள்...
- sinnakuddy - 08-18-2005 http://news.bbc.co.uk/1/hi/world/south_asi...sia/4164150.stm - Danklas - 08-19-2005 மீண்டும் பேச்சுக்களில் ஈடுபட புலிகள்-இலங்கை அரசாங்கம் இணக்கம்.. சில வாரங்களில் நோர்வேயில் பேச்சுக்கள் ஆரம்பம்....
- kurukaalapoovan - 08-19-2005 <b>கள உறவுகளே!</b> நடக்கும் சம்பவங்கள் ஒன்றுதான். ஆனால் அது எவ்வாறு ஒவ்வொரு பத்திரிகை, வானொலி தொலைக்காட்சி இணயத்தள செய்தி நிறுவனங்களால் செய்திகளாக வருணிக்கப்படுகிறது என்றதை கவனியுங்கள். -1- அந்த விடயத்தை என்ன தலையங்கத்தோடு வெளியிடுகிறார்கள். -2- சம்பவம்-விடயத்தின் ஆரம்ப விவரணம் என்னவாக எப்படி இருக்கிறது. -3- சம்பந்தப்பட்டவர்களின் கூற்றுக்களில் அல்லது வெளியிடப்படும் அறிக்கைகளின் எப்பகுதிகளை தமது செய்திகளில் மேற்கோள் காட்டுகிறார்கள். -4- பழய விடயங்களை அல்லது சம்பவங்களை சுட்டிக்காட்டி ஏதாவது தொடர்புகளை மறைமுகமாக சொல்ல முனைகிறார்களா? -5- செய்தியின் இறுதிப்பகுதி எவ்வாறு முடிக்கப்பட்டுள்ளது. -6- இந்த விவகாரங்களில் (உதாரணத்துக்கு ஈழப்போராட்டம்) எந்தவெரு முன் அனுபவம்-அறிவு இல்லாத ஒரு சாதாரணமானவர் இச்செய்தியை வாசித்து முடிக்கும் போது எந்த மாதிரியான எண்ணங்கள் அவருள் வரும் என்ன மனோநிலையை அடைவார். -7- சம்பவத்தில் நடந்தவற்றை பக்கச்சார்பின்றி நடு நிலையாக அறிவிக்கிறார்களா இல்லை விவரணங்களின் நடுவே சில "கருத்துக்களும்" உள்நோக்கங்களோடு விதைக்கப்பட்டிருக்கின்றனவா? - kurukaalapoovan - 08-22-2005 யாரும் இந்த விசயத்தில ஆர்வம் காட்டிறதா தொரிய வில்லை? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :? அரசியல் நாட்டு நடப்புக்களில் ஆர்வமாக கருத்தாடும் கள உறுப்பினர்களே உங்கள் கருத்துக்களை முன்வையுங்கள். -1- BBC தமிழ் இன் செய்தியின் தலையங்கத்தை மாத்திரம் வாசிக்கும் போது எப்படியான ஒரு விவகாரம் என எண்ண வைக்கிறது? -2- செய்தி 7 பந்திகளாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. 5 தாவது பந்தியில் தான் சம்பவம் பற்றிய முக்கிய மான பின்னணித் தகவல் சொல்லப்படுகிறது. -3- 4வது பந்தி ஒரு பின்னணி மேலதிக தகவலாக செய்தி நிறுவனத்தால் புகுத்தப்படுகிறது. அதுவரை (பந்தி 1 முதல் 3 வரை) சம்பவம் பற்றி கூறியதோடு இந்த "குறிப்பிடத்தக்கது" என கூறப்படும் மேலதிக தகவல் ஒரு சாதாரண மனிதருக்கு எப்படியான உணர்வலைகளை எழுப்பும்? -4- செய்தியை முழுமையாக வாசித்தபின்பும் தலையங்கம் உணர்த்த முற்பட்ட செய்தியாகத்தான் இருக்கிறதா இல்லை மாற்றம் அடைந்தீர்களா? - Mathan - 08-27-2005 ஜனாதிபதி தேர்தல் திகதி தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு குறித்த கட்சிகளின் கருத்துகள் இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலை இந்த வருட இறுதிக்குள் நடத்தியாக வேண்டும் என்று இலங்கை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தாம் மதிப்பதாக ஜனாதிபதி சந்திரிகாவின் பொதுஜன ஐக்கிய முன்னணி அரசு கூறியிருக்கும் அதே வேளையில் ஏனைய எதிர்க்கட்சிகளும் அந்தத் தீர்ப்பினை வரவேற்றுள்ளன. இலங்கை ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அவர்களின் பதவிக் காலம் இந்த ஆண்டு டிசம்பருடன் முடிவடையும் என்றும், இதனால் ஜனாதிபதித் தேர்தல் இந்த ஆண்டிலேயே நடத்தப்பட வேண்டும் என இலங்கை உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. இலங்கை அரசியலமைப்புச் சட்டப்படி, 22 டிசம்பர் 1999ம் ஆண்டு பதவியேற்ற இலங்கை ஜனாதிபதியின் பதவிக் காலம் குறிப்பிட்ட தேதியில் இருந்து ஆறு ஆண்டு காலத்தில் முடிவடையும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இன்றைய தீர்ப்பில் கூறினார். இந்த வழக்கை பிரதம நீதியரசர் சரத் என். சில்வா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட குழு விசாரித்தது. <b><img src='http://newsimg.bbc.co.uk/media/images/40013000/jpg/_40013883_swearafp.jpg' border='0' alt='user posted image'></b> <b>ஜனாதிபதியும் பிரதமர் மஹிந்த ராஜபட்சவும் </b> சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியாக முதன்முறை டிசம்பர் 1994 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், தன் பதவிக் காலம் முடிவடைவதற்கு ஓராண்டிற்கு முன்னதாகவே அவர் அடுத்த ஜனாதிபதித் தேர்தலை அறிவித்து வெற்றி பெற்றார். எனவே, அவருடைய இரண்டாவது ஜனாதிபதி பதவிக் காலம் டிசம்பர் 2007ல்தான் முடிவடையும் என அவர் தரப்பில் வாதாடப்பட்டது. ஆனால், இலங்கை எதிர்க்கட்சிகளோ அவர் 1999ம் ஆண்டு பதவியேற்றதால் இந்த ஆண்டு இறுதியிலேயே தேர்தல் நடத்தப்பட வேண்டும் என வாதிட்டன, போராட்டங்களும் நடத்தின. இன்றைய தீர்ப்பு எதிர்க்கட்சிகளுக்கு வெற்றியாகவும், சந்திரிகா குமாரதுங்கவிற்கு பின்னடைவாகவும் கருதப்படுகிறது. இன்றைய தீர்ப்பின் மூலம் இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை தாம் ஏற்று நடப்பதுடன், அதற்கேற்ப குறிப்பிட்ட காலத்தில் நீதியானதும், நியாயமானதுமான தேர்தலை நடத்துவோம் என்று இலங்கை அரசின் சார்பில் பேசவல்ல அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தை நீதிமன்றத்துக்குக் கொண்டு சென்ற ஜாதிக ஹெல உறுமய கட்சியின் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான சட்டத்தரணியும் அதனை வரவேற்றுள்ளார். இது மக்களுக்குக் கிடைத்த வெற்றி என்று கூறுகிறார் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயோன் முஸ்தபா. <img src='http://newsimg.bbc.co.uk/media/images/40004000/jpg/_40004417_ranil_ap203ix.jpg' border='0' alt='user posted image'> <b>ரனில் விக்ரமசிங்க</b> தேர்தல் இந்த வருடத்துக்குள் நடக்கும் என்ற ஒரு முடிவு வந்துள்ளது என்பதைத் தவிர இந்தத் தீர்ப்பில் தமக்கு பெரிய விசேசம் எதுவும் தெரியவில்லை என்று கூறுகிறார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தர். தீர்ப்பை வரவேற்ற சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள், யாருக்கு ஆதரவு என்பது பற்றி பின்னர் முடிவு செய்யப்படும் என்று கூறுகிறார். இலங்கையின் அரசியல் சாசனத்தின்படி சந்திரிகா குமாரதுங்க மூன்றாவது முறையாக ஜனாதிபதி தேர்தலுக்கு நிற்க முடியாது. இலங்கையின் ஆளும் கட்சியின் சார்பில் பிரதமர் மஹிந்த ராஜபட்ச அவர்கள் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இருக்கிறார். BBC தமிழ் - Mathan - 08-27-2005 ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட அவருக்கு ஆதவான பிரதம நீதியரசர் அடுத்த வருடம் தான் பதவி காலம் முடிவடைகிறது என்று சொல்வார் என்று நினைத்தேன். பரவாயில்லை இதிலாவது நியாயமாக தீர்ப்பு வழங்கியிருக்கிறார்கள். <img src='http://newsimg.bbc.co.uk/media/images/40004000/jpg/_40004417_ranil_ap203ix.jpg' border='0' alt='user posted image'> ஆளும் கட்சியில் பலத்திற்கு முன்னால் ரணிணுக்கு வெற்றி வாய்பு இருக்குமோ தெரியலை. ஏறத்தாள இது தான் ரணிலின் தேர்தலுக்கு பின்பான நிலையாய் இருக்கலாம். |