![]() |
|
Breaking News - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: Breaking News (/showthread.php?tid=7412) Pages:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
|
- Mathan - 02-28-2005 <img src='http://www.thinakkural.com/New%20web%20site/web/2005/February/27/cat.gif' border='0' alt='user posted image'> Thinakkural - Mathan - 03-03-2005 <b>சிங்கள பத்திரிகையான லங்காதீபவில் இருந்து ,,,,,</b> தீவிர புலனாய்வு நடவடிக்கைகளை செய்ய புலிகளின் புதிய ஆயுத படையணி அண்மையில் மட்டக்களப்பு, அம்பாறை அரசியல் பிரிவுத் தலைவர் கௌசல்யன் கொல்லப்பட்ட தாக்குதல் சம்பவத்தையடுத்து விடுதலைப் புலிகள் அமைப்பு தீவிர புலனாய்வு நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதற்காக சிறிய படையணி ஒன்றை தயார்படுத்தியிருப்பதாக இராணுவத் தரப்பு புலனாய்வுப் பிரிவினருக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன. விடுதலைப்புலிகள் அமைப்பின் கட்டுப்பாட்டிலுள்ள ஒரு ஆயுதப் பிரிவாகத் தம்மைக் காட்டிக் கொள்ளாத முறையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த ஆயுதப் படையணி மூலம் எதிர்காலத்தில் தமக்குத் தேவையான அதிரடி நடவடிக்கைகளை நடத்துவதே விடுதலைப் புலிகளின் நோக்கமென்று மேற்படி அரச பாதுகாப்பு செய்தி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. விடுதலைப் புலிகள் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் ஆயுத நடவடிக்கைகளிலிருந்து கட்டுப்படுத்தப்பட்டிருப்பதால் சர்வதேசப் பாதிப்புகள் இல்லாத முறையில் தமக்குத் தேவையான நடவடிக்கைகளை செய்து கொள்வதற்கு இத்தகையதொரு விசேட படையணி அவசியமென புலிகளின் யுத்த ஆலோசகர்களால் பிரபாகரனுக்கு எடுத்துக்காட்டி அறிவுறுத்தப்பட்ட பின்னரே அத்தகைய படையணியை உருவாக்கும்படி புலிகளின் தலைவர் உத்தரவிட்டிருக்கிறார். விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து உடைந்து சென்ற கருணா குழுவினரால் புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் பயங்கரத் தாக்குதல் நடவடிக்கைகளுக்கு பதிலடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதே மேற்படி புலிகளின் புதிய ஆயுதப் படையணியின் பொறுப்பாக இருக்குமென பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. அரச பாதுகாப்புத் துறையினருக்கு இந்தத் தகவல்கள் கிடைத்த பின்னர் இராணுவப் புனனாய்வுப் பிரிவினர் இது பற்றி பரந்த முறையில் விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாகத் தெரியவருகிறது. லங்காதீப- 20.02.2005 தமிழாக்கம் தினக்குரல் - Mathan - 03-04-2005 ராஜிவ் கொலை: நளினி உள்ளிட்ட 4 பேர் மே மாதம் விடுதலை? ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளான நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய நான்கு பேரின் சிறைக் காவலும் வரும் மே மாதத்துடன் முடிவடைகிறது. இதனால் அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். கடந்த 1991ம் ஆண்டு மே 21ம் தேதி திருவள்ளூர் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டால் கொல்லப்பட்டார். இதையடுத்து சிவராசன், தனு, விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன், உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மன் மற்றும் அகிலா உள்ளிட்ட 41 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதில் 38 பேர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக இருந்த தனு, சிவராசன் ஆகிய இருவரும் பெங்களூரில் கமாண்டோ படை சுற்றி வளைத்தபோது சயனைட் அருந்தி தற்கொலை செய்து கொண்டனர். மேலும் 12 பேர் வழக்கு விசாரணையின்போது இறந்து விட்டனர். மிகவும் பரபரப்பான இந்த வழக்கில் கடந்த 1998ம் ஆண்டு ஜனவரி மாதம் 28ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. நளினி, அவரது கணவர் முருகன் உள்ளிட்ட 26 பேருக்கும் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது. நாட்டையே பெரும் பரபரப்பில் ஆழ்த்திய இந்த தண்டனையை எதிர்த்து 26 பேரும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இதில் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டது. ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. மற்றவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். தூக்கு மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 7 பேரும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் நளினி தனது தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக் கோரி குடியரசுத் தலைவர், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோருக்கு கோரிக்கை விடுத்தார். அவரது வேண்டுகோள் ஏற்கப்பட்டு தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது நளினி, பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரது 14 ஆண்டு ஆயுள் தண்டனை சிறைக் காவல் வரும் மே மாதத்துடன் முடிவடைகிறது. இதையடுத்து இவர்கள் விடுவிக்கப்பட வேண்டும். இவர்களை எப்போது விடுதலை செய்வது குறித்து தமிழக உள்துறை செயலாளருக்கு சிறை நிர்வாகம் ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளது. ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட அதே மே மாதத்தில் 4 பேரும் விடுதலை ஆகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. Thats Tamil - Mathan - 03-04-2005 `தம்பி நான் உயிருடன் இருக்கிறேன்....' நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ.ஆனந்தசங்கரிக்கு தொடர்ச்சியாக 15க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள். அனைத்துமே ஊடகங்களிலிருந்தே வந்து கொண்டிருந்தன. 13 ஆவது தொடர்பு `தினக்குரல்' இலிருந்து சென்றது. ஆனந்தசங்கரி தொலைபேசியில் தொடர்பு கொண்டதும் "ஐயா, `தினக்குரல்' இலிருந்து பேசுகிறேன் என்று சொன்னவுடனேயே அவரது பதில் தம்பி நான் உயிருடன் இருக்கின்றேன்" என்பதுதான். மாலை 7 மணிக்கும் 8 மணிக்குமிடையில் தொடர்ச்சியாக தமக்கு தொலைபேசி அழைப்புகள் வந்ததாகவும் அனைவரும் ஒரே விடயம் தொடர்பாகவே கதைத்ததாகவும் அவர் தெரிவித்தார். புதன்கிழமை மாலையில் ஊடகங்கள் மத்தியில் மாறிமாறி கேட்கப்பட்ட கேள்வி சங்கரிக்கு என்ன நடந்தது? யார் செய்தார்கள்? எத்தனை மணிக்கு நடந்தது? என்பது போன்ற கேள்விகள் பறந்த வண்ணமிருந்தன. தினக்குரல் - tamilini - 03-04-2005 என்ன நடந்தது புரியல.. hock: hock:
- vasisutha - 03-04-2005 வதந்தீ பரப்புவர்கள் வேலைதான் வேறு என்ன.. :| Re: Breaking News - Ba.Vanniyan - 03-05-2005 Mathan Wrote:<span style='color:#ff0000'>புதிய சர்ச்சை உருவாகிறது \"வீடு' சின்னத்தை பயன்படுத்தக் கூடாது என தேர்தல் ஆணையாளருக்கு கடிதம் மதன் அது நீங்கள் BBC என்ற பெயரில் இருக்கும் பொது தொடங்கிய Breaking News தொடக்க செய்தி. ஆனால் இப்போது சும்மா கட்டுரைகளைக் கூட அதில் போட்டு பக்கங்கள் வளர்கின்றன போல் தெரிகிறது - KULAKADDAN - 03-05-2005 ஆகா வந்திட்டாங்கையா.....வந்திட்டங்க......... :evil: :evil: - KULAKADDAN - 03-05-2005 அவர் தான் இணைக்கும் செய்திகளை இணைக்க உருவாக்கிய தலைப்பில் தொடர்ந்து செய்திகளை இணைத்து வருகிறார். - Mathan - 03-09-2005 பாலா - சொல்ஹெய்ம் நாளை லண்டனில் சந்திப்பு நோர்வேயின் விசேட சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கத்தை நாளை லண்டனில் சந்தித்து பேசுகிறார் என்று கொழும்பில் இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. விடுதலைப்புலிகளின் வான்படை விவகாரம் குறித்து அண்மையில் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க நோர்வே பிரதமர் பொன்டேவிக்கிற்கு கடிதம் எழுதியிருந்தார். புலிகளின் இந்த விசேட படையணி குறித்த தமது உத்தியோகபூர்வ அதிருப்தியையும் ஜனாதிபிதி தெரிவித்திருந்தார். ஜனாதிபதியின் அறிவிப்பின் பிரகாரம் அவர் குறிப்பிட்ட விடயம் சம்பந்தமாக ஆராயும் பொருட்டே நோர்வே அரசு தனது விசேட தூதுவரை புலிகளின் ஆலோசகரை சந்திக்க அனுப்பியுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது. ஆனால் இச்சந்திப்பின் நோக்கம் குறித்த உண்மையான தகவல்கள் தெரியவரவில்லை. இதேவேளைää விடுதலைப்புலிகளின் வான்படை விவகாரம் குறித்து அமெரிக்காவின் இராஜாங்கச் செயலர் கொண்டலிஸா றைஸிடம் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் எடுத்துக்கூறியிருப்பதாகவும் கொழும்புச்செய்திகள் தெரிவிக்கின்றன. புலிகள் வான்படை அமைத்திருப்பதுää வான் கலங்களை கொள்முதல் செய்திருப்பதுää வன்னியி;ல் விமான ஓடுபாதை அமைத்திருப்பது ஆகிய விடயங்கள் சிறீலங்காவின் பாதுகாப்புக்கு மட்டுமன்றி சர்வதேச பாதுகாப்புக்கும் பேரச்சுறுத்தலாகும் என்று அமைச்சர் கதிர்காமர் அமெரிக்காவிடம் முறையிட்டிருக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது. புதினம் - Mathan - 03-14-2005 நிவாரணப் பொருட்களுடன் எடுத்துவரப்பட்ட ஹெலிகொப்டர்கள் திருப்பி அனுப்பி வைப்பு ஸ்ரீலங்காவில் இயங்கிவரும் இரண்டு அரசு சார்பற்ற நிறுவனங்களால் கடல்கோள் நிவாரணப் பொருட்களுடன் மறைத்து இந்த நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, பின் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்கு எடுத்துச் செல்ல முயற்சித்த பொழுது விமானப்படையினரால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இரண்டு ஹெலிகொப்டர்களும் திரும்பவும் நாட்டை விட்டு எடுத்துச்செல்லப்பட்டன. மேற்படி இரண்டு ஹெலிக்கொப்டர்களில் "எவர்கிறீன்" எனப்படும் அரசு சார்பற்ற நிறுவனத்தால் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்த ஹெலிக்கொப்டரை மேற்படி நிறுவனம் கடந்த 8 ஆம் திகதி பிற்பகல் சிங்கப்பூர் விமான சேவைகளுக்குச் சொந்தமான விமானம் ஒன்றின் மூலம் ஐக்கிய அமெரிக்காவின் டெக்சாஸ் பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. மற்றைய ஹெலிகொப்டரை இங்கு கொண்டு வந்திருந்த `ஹியூமெடிக்கா' எனப்படும் அரச சார்பற்ற அமைப்பு கடந்த 6 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை குறித்த ஹெலிகொப்டரை தென்னாபிரிக்காவுக்கு எடுத்துச் சென்றதாகச் சிரேஷ்ட விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் செயற்பாட்டாளரான கிறிஸ்வீன் (பிரித்தானியர் ஒருவர்) கட்டுநாயக்காவுக்கு கொண்டுவரப்படும் கடல்கோள் நிவாரணப் பொருட்களைச் சேகரித்து வைக்கும் களஞ்சியசாலைக்குப் பொறுப்பாகச் செயல்பட்ட பொழுதே மேற்படி ஹெலிகொப்டர்கள் ஸ்ரீலங்காவுக்கு எடுத்து வரப்பட்டதென்றும் பின்னர் அவற்றை புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆயினும், அக்களஞ்சியசாலையில் செயல்பட்ட விமானப்படையினரால் மேற்படி ஹெலிகொப்டர்கள் பாதுகாப்புத்துறையினரின் பொறுப்பில் எடுக்கப்பட்டு கடந்த இரண்டு மாத காலமாக விமான நிலையத்திலுள்ள நிவாரணப் பொருட்கள் வைக்கும் களஞ்சியசாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தன. <b>சிங்கள பத்திரிக்கை திவயின 10.03.2005</b> - Mathan - 04-05-2005 சிறீலங்கா கடற்படை ரோந்துப் படகு மீது துப்பாக்கிச்; சூடு! சிறீலங்கா கடற்படையின் ரோந்துப் படகு மீது துப்பாக்கிச்; சூடு நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படகில் பயணம் செய்த போர் நிறுத்த கண்காணிப்புக் குழு உறுப்பினருக்கு சிறுகாயம் ஏற்பட்டுள்ளது. திருகோணமலை அருகே உப்பாறு பகுதியில் இன்று காலை 10.30க்கு இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த துப்பாக்கிச்; சூட்டுச்; சம்பவம் கருத்து தெரிவித்த போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு பேச்;சாளர் ஹெலன்ää இந்தத் தாக்குதலில் யார் ஈடுபட்டது என்பது மேலதிக விசாரணைகளின் போது தெரியவரும் என்றும் இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் கூறினார். இந்த துப்பாக்கிச்; சூட்டுச்; சம்பவம் தொடர்பாக விடுதலைப்புலிகள் மீது குற்றம் சாட்டுவதை திருகோணமலை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் சி.எழிலன் மறுத்துள்ளார் என்று தமிழ்நெட் இணையத்தளம் தெரிவித்துள்ளது. புதினம் - Mathan - 04-06-2005 கனேடிய தொலைக்காட்சிக்கு இலங்கை அரசின் கட்டுப்பாடு கனடாவில் சனல் 3 இல் இயங்கி வரும் குளோபல் தொலைக்காட்சியின் செய்தியாளர் ஒருவர் இலங்கையில் சுனாமியின் பின்னரான மீளமைப்பு முயற்சிகள் குறித்து விவரணம் ஒன்றினைத்தயாரிப்பதற்காக இலங்கை விஜயம் செய்ய வீசாவுக்கு விண்ணப்பித்தபோது கனடாவில் உள்ள இலங்கைத் தூதரகம் அவருக்கு வீசா வழங்க கடுமையான விதிமுறைகளை விதித்துள்ளது. அவர் தயாரிக்கும் விவரணத்தினை அவர் இலங்கையினை விட்டு வெளியேறும் முன்னர் இலங்கைரூபவாகினி கூட்டுத்தாபனத்திலும் ,இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்திலும் கொடுத்து அனுமதிபெற வேண்டும் என்பதுடன் விவரணத்தின் இறுதிப் பிரதியினை கனடாவிலுள்ள இலங்கை தூதரகத்தில் சமர்பித்து அவர்களின் அனுமதியினை பெறவேண்டும் என்பதே அந்த நிபந்தனையாகும். சுனாமி தாக்கத்தின் பின்பு கனேடிய ஊடகங்களில் இலங்கை செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க தொடங்கியுள்ளதுடன் அதைவிட பாதிக்கப் பட்ட தமிழ் பகுதிகளுக்கு அரசு ஒன்றுமே செய்யவில்லை என்பதும் வெளிவந்து விடலாம் என்பதுமே காரணமாக இருக்கலாம். குளோபல் தொலைகாட்சியின் இச் செய்தியாளர்ஒரு நடுநிலையான பக்கச்சார்பற்ற செய்தியாளர் என்பதினை இதைக் கொண்டே ஊகிக்கலாம்.இலங்கை அரசுக்கு சார்பான செய்திகளை கொடுப்பவராக இருந்தால் இப்படி நிபந்தனைகளுக்கு இடமே இருந்திருக்காது. இலங்கை அரசினை பொறுத்தவரை வெளிநாட்டு பணம் வேணும் ஆனால் வெளிநாட்டு ஊடகங்கள் தேவையில்லை அவை நடுநிலையாக இருக்கும் பட்சத்தில். by கரிகாலன் - Mathan - 04-06-2005 புலிகளை ஏற்றுக்கொள்ள முடியாதென நோர்வேக்கு இந்தியா அறிவிப்பு விடுதலைப் புலிகள் அமைப்பை அல்லது அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை ஏற்றுக்கொள்வதற்கோ அல்லது எந்தவிதமான உத்தியோகபூர்வ அந்தஸ்தையேனும் கொடுத்து ஆதரிப்பதற்கோ இந்திய அரசு எவ்வகையிலேனும் செயற்படாதென இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவின் இந்த நிலைப்பாட்டை இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் நோர்வே நாட்டின் உயர்மட்ட உத்தியோகத்தர்களுக்கு தற்போதுள்ள காங்கிரஸ் ஆட்சியை அமைக்குமுன்னரே தெளிவுபடுத்தி விட்டதாக "ஏஸியன் ட்ரிபியூன்" செய்திப் பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. முன்னாள் காங்கிரஸ் கட்சித் தலைவரும், பிரதமருமான ராஜீவ் காந்தியைப் படுகொலை செய்த விடுதலைப் புலிகள் அமைப்பினருக்கு இந்திய அரசு எந்த வகையிலும் மன்னிப்பு அளிக்கப் போவதில்லையென்றும், அந்தப் படுகொலையை இந்திய ஜனநாயகத்துக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட தாக்குதலாகவே இந்திய அரசு கருதுவதாகவும் இந்திய காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. நோர்வே அரசின் விஷேட தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் மேற்படி "ஏஸியன் ட்ரிபியூன்" பத்திரிகையுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போதே இந்த விடயங்கள் பத்திரிகை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன. ஷ்ரீலங்காவின் இனப்பிரச்சினைத் தீர்விற்கான சகல சமாதான நடவடிக்கைகள் பற்றியும் இந்திய அரசுக்கும், ஐக்கிய அமெரிக்க அரசுக்கும் தொடர்ச்சியாகத் தெரிவித்து வருவதாக சொல்ஹெய்ம் மேற்படி பேச்சுவார்த்தையின் போது கூறினார். திவயின 4.4.2005 - Mathan - 04-06-2005 புலிகளின் பயத்தால் நாட்டை விட்டோடிய புலனாய்வுப் பிரிவு தலைவர் நிலாம் முன்னர் நிகழ்ந்த மிலேனியம் சிற்றி பொலிஸ் புலனாய்வு நடவடிக்கைகளைத் தொடர்ந்து விடுதலைப்புலிகள் அமைப்பினரின் கொலைப் பயமுறுத்தலுக்குள்ளாகியிருக்கும் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தலைவர் கப்டன் நிலாம் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார். அவருடைய புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த உறுப்பினர்களும், மற்றும் உளவாளிகளும் தொடர்ச்சியாகப் புலி உறுப்பினர்களால் கொலை செய்யப்பட்ட பின்னர் தற்போது மேற்படி கப்டன் நிலாம் மீதும் புலிகள் தாக்குதலைத் தொடுக்கக்கூடும் என்ற பயத்திலேயே தம் பாதுகாப்புக்காக அவர் வெளிநாடு சென்றிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இராணுவப் புலனாய்வுப் பிரிவுத் தலைவராக இருந்த காலகட்டத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பின் பல தலைவர்களைக் கொலை செய்தவர் என்று கருதப்படும் கப்டன் நிலாம் பல்வேறு கட்டங்களிலும் புலிகளின் கொலை எச்சரிக்கைகளுக்கு இலக்காகி இருந்தார். ஐக்கிய தேசியக்கட்சியின் ஆட்சிக்காலத்தில் உதவிப் பொலிஸ் அதிபர் குலசிறி உடுகம்பொலவால் எடுக்கப்பட்ட "மிலேனியம் சிற்றி" நடவடிக்கையைத் தொடர்ந்து பொலிஸ் பாதுகாப்பில் இருந்த கப்டன் நிலாம் இவ்வாறு நாட்டைவிட்டுச் சென்றிருப்பது பாதுகாப்புத் துறையினருக்கும் புலனாய்வுப் பிரிவினருக்கும் மட்டுமல்ல, முழுநாட்டுக்குமே ஈடுசெய்ய முடியாத இழப்பாகும் எனப் பாதுகாப்பு துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திவயின 4/4/2005 - Mathan - 04-07-2005 மயூரணி கொலை: மாணவருக்கு ஆயுள் சிறை <img src='http://thatstamil.indiainfo.com/images27/optimized/mayurani1.jpg' border='0' alt='user posted image'> இலங்கை மாணவி மயூரணி கொலை செய்யப்பட்ட வழக்கில் மாணவர் பாலபிரசன்னாவுக்கு மதுரை நீதிமன்றத்தில் 24 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இலங்கை திரிகோணமலை பகுதியை சேர்ந்த தியாகராஜன் என்பவரின் மகள் மயூரணி. இவர் மதுரையிலுள்ள அம்பிகா கலைக் கல்லூரியில் படித்து வந்தார். அண்ணாநகரிலுள்ள இந்தக் கல்லூரியின் உரிமையாளரும், பிரபல தொழிலதிபருமான சோலைமலைத் தேவரின் வீட்டில் தங்கி இவர் படித்து வந்தார். அந்த வீட்டின் இன்னொரு அறையில் இலங்கையை சேர்ந்த பாலபிரசன்னா என்ற மற்றொரு மாணவரும் தங்கி கல்லூரியில் படித்து வந்தார். இந் நிலையில் மயூரணி, கடந்த 2003ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதியன்று சோலைமலைத் தேவரின் வீட்டில் வைத்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சேலைமலைத் தேவர், அவரது மனைவி ராக்கம்மா, மாணவர் பால பிரசன்னா, இவரது நண்பர் ஹாஜி அலி, வேலைக்காரன் வீரண்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை மதுரை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. முதலில் இந்த வழக்கு சோலைமலைத் தேவருக்கு எதிராக திரும்பியது. மயூரணி உடை மாற்றுவதை சோலைமலைத் தேவர் ஒளிந்திருந்து ரசித்ததாகவும், இதைப் பார்த்து விட்ட மயூரணி பிரச்சினை செய்ததால் பாலபிரசன்னாவை வைத்து மயூரணியை அவர் கொலை செய்ய வைத்ததாகவும் புகார் கூறப்பட்டது. ஆனால் பிறகு வழக்கு மெதுவாக தேவருக்கு ஆதரவாக திரும்பியது. வழக்கிலிருந்து சோலைமலை தேவரை விடுவிக்க முயற்சி நடப்பதாக மயூரணியின் தந்தை புகார் கூறினார். அவர் கூறியதைப் போலவே கொலை வழக்கிலிருந்து தேவர் விடுவிக்கப்பட்டார். போலீஸார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் மாணவர் பாலபிரசன்னா தான் பணத்திற்காக மயூரணியை கொலை செய்தார் என்று கூறப்பட்டிருந்தது. இந் நிலையில் இன்று இந்த வழக்கில் நீதிபதி ஆறுமுகப் பெருமாள் ஆதித்தன் தீர்ப்பு வழங்கினார். மயூரணியை கொலை செய்ததற்கு மாணவர் பாலபிரசன்னாவுக்கு ஆயுள் தண்டனையும்,. அவரது பொருட்களை கொள்ளையடித்ததற்கு 10 ஆண்டு சிறைத்தண்டனையும் மொத்தம் 24 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி ஆறுமுகப் பெருமாள் ஆதித்தன் தீர்ப்பு வழங்கினார். தட்ஸ் தமிழ் - tamilini - 04-07-2005 :evil: :evil: :evil: :evil: - kuruvikal - 04-07-2005 இவங்கட நீதிமன்றத்தை நம்பவே ஏலாது...காசுக்கு ஆள் மாற்றியே தீர்ப்பும் சொல்லுவாங்க... பாரத தேசயத்தில் சுதந்திரத்துக்குப் பின் நீதியெங்கே....தர்மம் எங்கே....!
- Mathan - 04-07-2005 இது முதல் தீர்ப்பு தானே. தண்டனை வழங்கப்பட்டவர் இனி மேல் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என்று தொடர்ந்து மேன்முறையீடு செய்து கடைசியில் சிறையில் இருந்த காலம் வரை போதும் என்று விடுதலையாகி விடுவார் :evil: - Mathan - 04-09-2005 திருகோணமலை மாவட்டத்திலும் புலிகளின் காவலரண் மீது தாக்குதல் திருகோணமலை நகரிலிருந்து எண்பது கிலோ மீற்றர் தூரத்திற்கு அப்பால் மூதூர் மட்டக்களப்பு பிரதான பாதையில் மூதூரின் தெற்குப் பிரதேசத்தில் அமைந்துள்ள விடுதலைப் புலிகளின் காவலரண் மீது இன்று அதிகாலை நான்கு மணியளவில் ஒன்பது பேர் கொண்ட குழுவினர் மேற்கொண்ட தாக்குதலின் விளைவாக ஒருவர் பலியாகி உள்ளார். மற்றும் ஒருவர் பலத்த காயங்களுக்கு இலக்காகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயம் அடைந்த மற்றும் இறந்தவரின் பெயர் விபரங்கள் இது வரை தெரிவிக்கப்படவில்லை. திருகோணமலை மாவட்டத்தில் அடையாளம் தெரியாதோரால் விடுதலைப் புலிகளின் காவலரண்மீது மேற்கொள்ளப்பட்ட முதலாவது தாக்குதல் சம்பவம் இதுவாகும். இதேவேளை மூதூர் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள விடுதலைப் புலிகளின் காவலரணுக்கு 500 மீற்றர் தொலைவிலேயே மஹிந்தபுரம் இராணுவ முகாம் அமைந்துள்ளது. இந்த இராணுவ முகாமுக்கும் விடுதலைப் புலிகளின் காவலரணுக்கும் இடைப்பட்ட தூரம் சூனியப் பிரதேசமாகும். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக விடுதலைப் புலிகள் திருகோணமலை மாவட்ட போர்நிறுத்த கண்காணிப்பு குழுவினரிடம் முறைப்பாடு செய்துள்ளனர். போர் நிறுதத கண்காணிப்பு குழு உறுப்பினரான அல்ப் அவர்கள் மூதூர் தெற்குப் பிரதேசத்திற்குச் சென்று இந்தத் தாக்குதல் நடைபெற்ற இடத்தைப் பார்வையிட்டுத் திரும்பிய போதிலும்கூட இது தொடர்பான தகவல் எதுவும் இதுவரை தெரிவிக்கபடவில்லை. இதே வேளை விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளர் எழிலன், இராணுவ முகாம்களில் தங்கியிருந்த கருணா குழுவினரே அவர்களின் உதவியுடன் இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக போர்நிறத்த கண்காணிப்பு குழுவினரிடம் தெரிவித்திருக்கின்றார். இத்தகைய தாக்குதல் ஒன்று இடம்பெறலாம் என ஏற்கெனவே கடந்த புதனன்று மாவட்ட போர்நிறுத்த கண்காணிப்பு குழுவினரிடம் முறைப்பாடு செய்ததாகவும் அவர் கூறினார். இது தொடர்பாக இராணுவ கட்டளைத் தளபதிக்கு போர்நிறுத்த கண்காணிப்பு குழுவினர் அறிவித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய தாக்குதல் சம்பவமானது ஒரு போர்நிறுத்த மீறுலாகும் என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் எழிலன் தெரிவித்திருக்கின்றார். இதற்கிடையே கந்தளாய்க்கும் மூதூருக்கும் இடைப்பட்டதான சேருநுவர சிறீ மங்களபுர பகதியில் உள்ள இராணுவ கட்டுப்பாட்டு பகுதியில் இன்று பிற்பகல் இராணுவ சிப்பாய் ஒருவர் இனம் தெரியாதோரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான நிலையில் கந்தளாய் அரசினர் வைத்திய சாலையில் சிகிச்சைக்கென அனுமதிக்கப்பட்டுள்ளார். இராணுவ கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள சிறீமங்கலபுர பகுதியில் பனை ஓலை வெட்டச் சென்ற வேளையிலேயே இவர் முன்னே எதிர்ப்பட்ட நான்கு பேர், இவர் மீது துப்பாக்கப் பிரயோகம் மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயங்களுக்கு இலக்கான இந்த சிப்பாயின் பெயர் விபரம் தெரிவிக்கப்படவில்லை. இது தொடர்பாக இராணுவத்தினரால் மாவட்ட போர்நிறுத்த கண்காணிப்பு குழுவினரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக கண்காணிப்பு குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. BBC Tamil News |