Yarl Forum
Breaking News - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: Breaking News (/showthread.php?tid=7412)



- Mathan - 02-07-2005

இலங்கை இராணுவத்துக்கு அமெரிக்கா பயிற்சி வழங்குவது குறித்து இந்தியா கடும் கவலை

இலங்கை இராணுவத்தின் உயர் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பதில் அமெரிக்கா அதீத அக்கறை காட்டி வருவது குறித்து இந்தியா கடும் கவலை வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் வேண்டுகோளை தொடர்ந்து இலங்கை இராணுவம் தனது உயர் அதிகாரிகளை ஹவாய்க்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்காவின் பசுபிக்குக்கான கட்டளைப் பீடம் ஹவாயிலேயே அமைந்துள்ளது. இலங்கையின் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் செயலாளர் நாயகமாக பதவி வகிக்கும் பிரிகேடியர் ஹேந்திர வித்தாரனவை ஹவாய்க்கு பயிற்சிக்கு அனுப்புமாறு அமெரிக்கா தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றமையை இந்தியா கவனத்தில் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையின் வழமை நடைமுறைகளின்படி ஒரு அதிகாரிக்கு, இவ்வாறு விசேட பயிற்சிக்கான சந்தர்ப்பம் கிடைத்தால் இது தொடர்பான இறுதி முடிவினை விசேட குழுவொன்றே எடுக்க வேண்டியிருக்கும். இதனால் பிரிகேடியர் வித்தாரனவை ஹவாய்க்கு அனுப்புவதா என்பது குறித்து விசேட குழுவொன்று கூடி ஆராய்ந்துள்ளது. இந்தக் குழு பிரிகேடியர் குலதுங்கவே இவ்வாறான பயிற்சிக்கு அனுப்புவதற்குப் பொருத்தமானவர் என தீர்மானித்துள்ளது.

இது தொடர்பாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தில் பாதுகாப்பு பிரிவில் பணிபுரியும் ரிச்சட் கிர்வினிக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. அவர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருடன் பேச்சுவார்த்தைகள் மேற்கொண்டுள்ளார். அமெரிக்க தூதரகம் பிரிகேடியர் வித்தாரனவை பயிற்சிக்கு அனுப்புமாறு வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் உத்தரவின் பேரில் வித்தாரன ஹவாய் செல்லவுள்ளார். இதேவேளை, புலனாய்வுப் பிரிவிவைச் சேர்ந்த இன்னொரு அதிகாரியும் ஹவாய்க்கு பயிற்சிக்கு சென்றுள்ளார். இராணுவ பாரம்பரியத்தின் படி தேசிய புலனாய்வு பணியக தலைவர் வெளிநாடுகளுக்குப் பயிற்சிக்கு அனுப்பப்படுவதில்லை என சுட்டிக் காட்டப்படுகின்றது.

Thinakkural


- Mathan - 02-07-2005

<span style='font-size:25pt;line-height:100%'>சிங்கள நாளேடுகளில் வெளிவந்த செய்தி .........</span>

ஹெலிகொப்டரைப் பாரமெடுக்க இருந்தவர் பூசகர்

கடல்கோள் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படுவதற்கென வெளிநாடுகளிலிருந்து அனுப்பப்பட்ட நிவாரண உதவிப் பொருட்களுடன் சட்டவிரோதமாக இந்த நாட்டுக்கு அனுப்பப்பட்டிருந்த இரண்டு ஹெலிகொப்டர்களில் ஒன்றைப் பாரமெடுக்கவிருந்த அரசு சார்பற்ற நிறுவனமொன்றின் பணிப்பாளர், யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த ஒரு தமிழ்ப் பூசகர் என்பது மேற்படி ஹெலிகொப்டரைப் பொறுப்பெடுக்கக் கொடுக்கப்பட்ட விபரங்களிலிருந்தும், விசாரணைகளிலிருந்தும் தெரியவந்திருப்பதாக இரகசிய பொலிஸ் தரப்பினர் கூறியுள்ளனர்.

இதற்கேற்ப, மேற்படி ஹெலிகொப்டர் பற்றிய விடயத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் ஏதேனும், தொடர்புள்ளதா என்ற விபரங்களை அறிந்துக் கொள்வதற்காக விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக சிரேஷ்ட இரகசியப் பொலிஸ் பிரிவு உத்தியோகத்தர் ஒருவர் "லங்காதீப"வுக்கு கூறினார்.

மேற்படி சர்ச்சைக்குரிய அரசு சார்பற்ற நிறுவனத்தின் தலைமை அலுவலகம் தெஹிவளை பிரதேசத்தில் அமைந்துள்ளது. கடல்கோள் நிவாரணப் பொருட்களுடன் கொண்டுவரப்பட்ட "பெல்" ரக ஹெலிகொப்டரைப் பொறுப்பெடுக்க குறித்த நிறுவனமே நியமிக்கப்பட்டிருந்தது.

அந்த அரசு சார்பற்ற நிறுவனத்தின் பணிப்பாளராகிய பூசகர் தற்போது யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியிலேயே வசித்து வருவதாகவும், இரகசிய பொலிஸ் அதிகாரிகளால் முன் அறிவிப்புக் கொடுக்கப்பட்டு கடந்த 2 ஆம் திகதி பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று அங்கு சென்று குறித்த அப்பூசகரிடம் விசாரணைகளை மேற்கொண்டு அவருடைய வாக்குமூலங்களைப் பதிவுசெய்து கொண்டதாகவும் தெரியவருகிறது. அத்துடன், மேலதிக விசாரணைகளுக்காக அவரைக் கொழும்புக்கு கூட்டிவந்துள்ளதாகவும் இரகசிய பொலிஸ் தரப்பு செய்திகள் கூறுகின்றன.

குறித்த ஹெலிகொப்டரை இந்நாட்டுக்கு கொண்டுவந்தவர்கள் அது சட்டவிரோதமானது என்று அறியாமலிருக்க இடமில்லையென்றும், குறித்த அரசு சார்பற்ற நிறுவனத்தின் அங்கத்தவர்கள் இந்நாட்டவர்களே என்பதால் ஹெலிகொப்டர்களை இறக்குமதி செய்வதற்குக் கடைப்பிடிக்கவேண்டிய சட்டபூர்வ முறைகளை அறிந்துகொள்ளாமலிருக்க நியாயமில்லையென்றும், அதனால், இது சந்தேகத்துக்குரிய செயற்பாடே என்றும் இரகசிய பொலிஸ் தரப்பு சுட்டிக் காட்டியுள்ளது.

இதுபற்றி வேறும் சில அரசு சார்பற்ற நிறுவனங்களைச் சேர்ந்த நபர்களிடமும் இரகசிய பொலிஸ் தரப்பு விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், கடல்கோள் நிவாரணப் பொருட்களுடன் ஐக்கிய அமெரிக்காவிலிருந்து இந்த நாட்டுக்குச் சட்டவிரோதமாகக் கொண்டு வரப்பட்ட இரண்டாவது ஹெலிகொப்டர் பற்றியும் விசாரணைகளை இரகசிய பொலிஸ் தரப்பு ஆரம்பித்துள்ளது. இந்த ஹெலிகொப்டரைப் பாரமெடுக்க நியமிக்கப்பட்டிருந்தவர் அமெரிக்க விமானப் படையைச் சேர்ந்த பொறியியலாளர் ஒருவரென்றும், இது பற்றியும் வாக்குமூலங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ்தரப்பு கூறியுள்ளது.

மேற்படி இரண்டு ஹெலிகொப்டர்களும் தற்போது பாதுகாப்பு அமைச்சுப் பிரிவின் பொறுப்பிலுள்ளன. இதுபற்றி இரகசிய பொலிஸ் தரப்பினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

-லங்காதீப 4/2/2005-


- Mathan - 02-08-2005

குழந்தையின் மரபணு சோதனை அறிக்கை இரு வாரங்களில்

சுனாமி பேரலை தாக்கத்தால் தனது பெற்றோரை இழந்திருக்கும் "குழந்தை' மரபணு சோதனைக்காக ( டி. என். ஏ) இன்று கொழும்புக்கு கொண்டு வரப்படுகிறது.

இதே வேளை குழந்தைக்கு உரிமை கோரிய பெற்றோர்களை யுனிசெப் கொழும்புக்கு அழைத்து வரவுள்ளது.

டாக்டர் மாயா டி குணசேகர மரபணு சோதனையை நடத்துவார். டாக்டரின் அறிக்கை இரண்டு வார காலத்திற்குள் கல்முனை நீதி மன்றத்துக்கு அனுப்பி வைக்கப்படும

Virakasari


- Mathan - 02-08-2005

லெப். கேணல் கௌசல்யன் உட்பட்ட போராளிகளின் வித்துடல்கள்
கொக்கட்டிச்சோலையில் மக்கள் வணக்கத்துக்காக வைக்கப்படும்

பொலன்னறுவை மாவட்டம் வெலிக்கந்தை நாமல்கம பிள்ளையாரடியில் நேற்றிரவு சுட்டுக்கொல்லப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் துறைப் போராளிகள் நால்வர் உட்பட ஜவரின் மரண விசாரணைகள் இன்று நண்பகல் நடைபெறவிருக்கின்றது.

தற்போது பொலன்னறுவை வைத்தியசாலையில் இவர்களின் உடலங்கள் வைக்கப்பட்டுள்ளன.

விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் லெப். கேணல் இ.கௌசல்யன் எனப்படும் இளையதம்பி லிங்கராஜாää மேஜர் புகழன்ää மேஜர் செந்தமிழ்ää 2ம் லெப். விதிமாறன் ஆகியோருடன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பனர் சந்திரநேரு அரியநாயகத்தின் சாரதி கே.விநாயகமூர்த்தி ஆகியோரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு அரியநாயகம் மற்றும் அவரது மெய்காப்பாளர்களான 2 பொலிஸ் கான்ஸ்டபிளும்ää போராளியான வினோதனும் இச்சம்பவத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடும் காயங்களுக்குள்ளாகி பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவசர சத்திர சிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்ட சந்திரநேரு அரியநாயகம் தற்போது உடல் நிலை தேறி வருகின்றார்.

ஹெலிகொப்டர் மூலம் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு தற்போது அங்கு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இராணுவ கட்டுப்பாட்டிற்குட்பட்ட பிரதேசத்தில் அதுவும் பிரதான நெடுஞ்சாலையொன்றில் இடம்பெற்ற இந்த சம்பவத்திற்கு கருணா குழுவினரே பொறுப்பு என படைத்தரப்பு சந்தேகம் தெரிவிக்கின்றது.

இருப்பினும் இச்சம்பவமானது இராணுவத்தினரின் ஒத்துழைப்பின்றி நடைபெறுவதற்கு வாய்ப்பு இல்லை என குற்றம் சுமத்தும் தமிழ்க் கட்சிகள் இதற்கான முழுப்பொறுப்பையும் சிறீலங்கா அரசாங்கம் தான் எற்க வேண்டும்.

இவர்களின் இந்த பயணம் பற்றி இராணுவ புலனாய்வு அறிந்து தகவல் வழங்கியிருக்கின்றது என்றும் தமிழ்க் கட்சிகள் மத்தியில் சந்தேகங்களும் நிலவுகின்றன.

உயிரிழந்தவர்களின் உடலங்கள் இன்று பிற்பகல் மட்டக்களப்பிற்கு எடுத்து வரப்படவுள்ளது.

விடுதலைப் புலிப் போராளிகளின் வித்துடல்கள் நேரடியாக கொக்கட்டிச்சோலையிலுள்ள மாவட்ட செயலகத்திற்கு கொண்டு செல்லப்படும்.

போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினரின் பாதுகாப்புடன் வித்துடல்களை எடுத்து வருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொன்டுள்ளனர்.

லெப். கேணல் கௌசல்யன் விடுதலைப்புலிகளின் நீண்டகால உறுப்பினர்களில் ஒருவர்.

கடந்த ஒரு வார காலமாக வன்னியில் தங்கியிருந்து ஆழிப்பேரலையினால் பாதிக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களில் மீள்கட்டுமாணப் பணிகளை மேற்கொள்வது தொடர்பான கலந்துரையாடல்களில் கலந்து கொண்டார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Puthinam


- Mathan - 02-08-2005

தாக்குதல் சம்பவத்துக்கு அரச புலனாய்வைப்பிரிவு மீது விடுதலைப்புலிகள் குற்றச்சாட்டு

தமிழீழ விடுதலைப்புலிகளின் சிரேஷ்ட உறுப்பினரும் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளருமான கௌசல்யன் உட்பட நால்வர் படுகொலைச் சம்பவம் தொடர்பாக விடுதலைப்புலிகள் சிறீலங்கா இராணுவப் புலனாய்வுப்பிரிவை குற்றம் சாட்டியுள்ளனர்.

இப்படுகொலைச் சம்பவம் சமாதான முயற்சிகளை பாரதூரமாகப் பாதித்துள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கௌசல்யன் உட்பட புலிகளின் ஐந்து போராளிகள் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பாகக புலிகளின் சமாதானச் செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

ஆயுதக்குழுக்களும் சிறீலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவும் இணைந்து விடுதலைப்புலிகளை இலக்குவைத்து செயற்பட்டுக் கொண்டுதானிருக்கிறார்கள்.

தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள தாக்குதல் சம்பவம் சமாதான முயற்சிகளை பாரதூரமாகப் பாதிக்கவுள்ளதுடன் இதுவரை காலமும் கட்டியெழுப்பப்பட்டு வந்த சமாதான முயற்சிகளுக்கும் பரஸ்பர நம்பிக்கைக்கும் பாரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக கண்காணிப்புக்குழுப் பிரதிநிதி ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்ää யுத்த நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்தான பின்னர் இடம்பெற்ற பாரிய தாக்குதல் சம்பவம் இது என்றும்;ää இப்படியான சம்பவங்கள் மேலும் பரவலடையாமல் தடுப்பதற்கு சிறீலங்கா அரசும் புலிகளும் உறுதிபூண வேண்டும் என்றும் கூறினார்.

தாக்குதல் சம்பவம் பற்றி பொலிஸ் அதிகாரி ஒருவர் கருத்து கூறுகையில்ää இந்தத் தாக்குதல் முன்னரே செம்மையாகத் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

இதேவேளை இந்தத் தாக்குதல் சம்பவத்தை அடுத்து புலிகள் யுத்தத்தை ஆரம்பிக்கக்கூடும் அல்லது பாரிய பதில்த் தாக்குதல் ஏதேனும் மேற்கொள்ளக்கூடும் என்ற அச்சத்தில் சிறீலங்கா அரசுää தலைநகர் உட்பட முக்கிய இடங்களில் பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளது. அதற்குரிய சகல நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

Puthinam


- Mathan - 02-08-2005

வெலிக்கந்தை சம்பவத்திற்கு சிறீலங்கா அரசு கண்டனம்

மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் இ.கௌசல்யன் உட்பட 6 பேர் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநாயகம் சந்திரநேரு ஆகியோர் கொல்லப்பட்டதை சிறீலங்கா அரசாங்கம் கண்டிப்பதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இத்தாக்குதலில் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்று இரவு வெலிக்கந்தைக்கு அருகில் ஏ-11 வீதியில் இடம்பெற்றுள்ளது.

இக்கொலைகள் யுத்த நிறுத்த உடன்படிக்கையை மீறும் செயலாகும் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனிதாபிமான விவகாரங்களில் சிறீலங்கா அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே ஒத்துழைப்பு அதிகரித்து வரும் வேளையில் அதனைச் சீர்குலைப்பதற்கு இச்செயல் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெளிவாக புலனாகிறது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் யுத்த நிறுத்த உடன்படிக்கை மீறல் சம்பவங்கள் இடம்பெறுமானால் யுத்தம் மீண்டும் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும்ää சமாதான வழிமுறைக்கு சகலரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் சிறீலங்கா அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

Puthinam


- Mathan - 02-08-2005

போராளிகளின் உடலங்களை ஒப்படைப்பதில்
சீறிலங்காப் படையினர் திட்டமிட்டு இழுத்தடிப்பு

பொலன்னறுவை மாவட்டம் வெலிக்கந்தை பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் கொல்லப்பட்டு பொலன்னறுவை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு -அம்பாறை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் லெப்டினட் கேணல் இ.கௌசல்யன் மற்றும் 4 போராளிகள் உட்பட்ட ஐவரின் பிரேத பரிசோதனைகளை மட்டக்களப்பு வைத்தியசாலையில் நடத்துமாறு பொலன்னறுவை மாவட்ட நீதிபதி திருமதி சிவபாதசுந்தரம் இன்று மாலை உத்தரவிட்டுள்ளார்.

இதனையடுத்து இந்த உடலங்கள் தற்போது பொலன்னறுவை வைத்தியசாலையிலிருந்து மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் வழித்துணையுடன் இராணுவ பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

இந்த உடலங்கள் மீதான பிரேத பரிசோதனை பொலன்னறுவை வைத்தியசாலையில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் பதில் சட்ட வைத்திய அதிகாரியினால் பிரேத பரிசோதனை நடத்த முடியாது என இறுதி நேரத்தில் அறிவிக்கப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையானது சிறீலங்கா பொலிசாரின் திட்டமிட்டு இழுத்தடிக்கும் செயல் என பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே இந்த முடிவு அறிவிக்கப்பட்டிருந்தால் பிரேத பரிசோதனை மற்றும் மரண விசாரனைகளில் இத்தகைய தாமதங்கள் ஏற்பட்டிருக்க மாட்டாது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு நகர அரசியல் துறைப் பொறுப்பாளர் விதிமாறன் மற்றும் உயிரிழந்த போராளிகளின் உறவினர்கள் ஆகியோர் கண்காணிப்புக் குழுவினரின் உதவியுடன் வைத்தியசாலைக்குச் சென்று உடலங்களை அடையாளம் காட்டினார்கள்.

இலங்கை நேரப்படி மாலை 5.30ற்கு இந்த உடலங்கள் அங்கிருந்து மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

எமது செய்தியாளரின் தகவலின் படி இரவு 7.00 மணிக்கும் 7.30ற்குமிடையில் இவை வந்து சேரும் என்றும்ää அதன்பின்பு மரண விசாரனைகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இன்று காலை மரணமான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு அரியநாயகத்தின் உடலம் தொடர்ந்தும் கொழும்பு தேசிய வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இன்றிரவு மரண விசாரணையின் பின்பு அவரது சொந்த இடமான திருக்கோவிலுக்கு எடுத்துச் செல்லப்படவிருக்கின்றது.

இந்த சம்பவத்தின்போது காயமடைந்த விடுதலைப் புலிப் போராளி வினோதன்ää முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் மெய்க் காப்பாளர்களான 2 பொலிஸ் கான்ஸ்டபிள்களும் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில் குறிப்பிட்ட பொலிஸ் கான்ஸ்டபிள்களில் ஒருவர் இந்த சம்பவம் தொடர்பாக ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள தகவலின் படிää நான்கு முதல் ஐந்து பேர் வரை தமது வாகனத்தை வழிமறித்து துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாக தெரிவித்தார்.

இருப்பினும் இது தொடர்பாக வெளியாகியுள்ள மற்றொரு தகவலொன்றின் படி இவர்களது வாகனத்தை மற்றுமொரு வாகனத்தில் பின்தொடர்ந்த கொலையாளிகள் முன்னால் சென்று வழிமறித்து துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாகவும்ää

இந்த நபர்கள் இராணுவச் சீருடை போன்று உடையணிந்திருந்ததாகவும் தெரிய வந்துள்ளது.

Puthinam


- Mathan - 02-15-2005

பாவம் இலங்கை இரண்டு பக்க இடி -செங்குட்டுவன்

இலங்கையின் இனப்பிரச்சினையை மட்டுமல்ல ஏனைய எல்லாப்பிரச்சனைகளையும் பயன்படுத்தி இந்த நாட்டிற்குனுள் தத்தமது இராணுவ அரசியல் இலக்குகளை எட்டவும், பிராந்தியத்தில் தமது மேலாதிக்க சக்தியை வலுப்படுத்தவும் பல்வேறு வகையில் ஊடுருவல்களை, சிலவேளைகளில் வெளிப்படையாகவும் பலசமயங்களில் மறைமுகமாகவும் மூலோபாயங்களை வகுத்து மேற்கொண்டுவருகின்றன.

இதனை அடுத்த நாடுகள் மறுத்தாலும், உண்மைகளை மறக்கமுடியாதுதானே?!

இந்த ஊடுருவல்களுள் சர்வதேச வல்லரசும், பிராந்திய வல்லரசும் ஒருவரையொருவர் பார்த்து புன்முறுவல் பூத்து கைகுலுக்கிய படியே சவால்விட்டுப் போட்டிபோடுவதுதான் முக்கியமான விடயம்

மிக அன்மைக்காலத்தில் இந்த ஆதிக்க சக்திகளின் மேலாதிக்கப்போட்டி பல்வேறு சம்பவங்களில் மிக உத்வேகத்துடன் அதே சமயம் மௌன உறுதியுடன் நிகழ்ந்தே வருவதைக் காணக்கூடியதாக உள்ளது.

சுனாமி நிவாரணப் பணிகளுக்கு உதவிகளை வழங்க முன்வந்த வேகத்திலிருந்து படைகளை அனுப்பியதுவரை அந்தப் போட்டி ஆரோக்கியமானதாகதட தெரியவில்லை

நாம் சொல்லுவது இலங்கைமீதான இந்தியாவினதும், அமெரிக்காவினதும் அக்கறையினை பற்றித்தான்.

சோழியன் குடுமி சும்மா ஆடுமா? எல்லாம் காரணத்துடனான அக்கறை, காரணத்துடனான உதவி, காரணத்துடனான கருணை, காரணத்துடனான செயற்பாடுகள்? மாதிரிக்கு ஒன்று?

இலங்கையின் அதியுயர் மலைச் சிகரமான ?பேதுறுதாலகால? மலையுச்சியில் கண்காணிப்பு நிலையம் ஒன்றை அமைப்பதற்கு அமொரிக்க அனுமதி கேட்டதாம்.


- Mathan - 02-15-2005

லப்டொப் கணினி திருடிய ரூபவாஹினி ஊழியர் கைது

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான லப்டொப் கணினி இயந்திரமொன்றை திருடி விற்பனை செய்ய முயன்ற அங்கு பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவரை கறுவாக்காட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

1-1/2 இலட்சம் ரூபா பெறுமதியான இந்த லப்டொப் இயந்திரம் கூட்டுத்தாபனத்தினால் தென் பகுதியில் நடத்தப்பட்ட கருத்தரங்கொன்றின் பாவனைக்கு எடுத்துச் செல்லப்பட்டிருந்த போது கடந்த மாதம் காணாமல் போயிருந்தது.

இதேவேளை, காணாமல் போன லப்டொப் வைக்கப்பட்டிருந்த பெட்டியிலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட வெள்ளை நிறத் துணிடொன்று கண்டுபிடிக்கப்பட்டு கூட்டுத்தாபன அதிகாரிகளினால் கறுவாக்காடு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதனையடுத்து, புலன் விசாரனைகளில் ஈடுபட்டிருந்த பொலிஸார் வியாழக்கிழமை மாலை காணாமல் போன லப்டொப்பை விற்பனை செய்யவிருந்த கூட்டுத்தாபன உத்தியோகத்தர் ஒருவரை கொள்ளுப்பிட்டி பகுதியிலுள்ள கடையொன்றில் வைத்து கைது செய்து லப்டொப்பையும் மீட்டுள்ளனர்.

தினக்குரல்


- Mathan - 02-15-2005

உதவி புரிவதாக உறுதியளித்தவர்கள் கைகழுவி விட்ட அவலமான நிலை!

ஈராக் தீவிரவாதிகளினால் பயண கைதியாக சிறைப்பிடிக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்ட நிலையில் இலங்கையை வந்தடைந்த தனக்கு நட்டஈடு, நிவாரண உதவிகளை வழங்குவதாக உறுதியளித்த இலங்கை வெளிநாட்டமைச்சு இன்றுவரை எந்தவிதமான உதவிகளையும் வழங்கவில்லையென தெரிவிக்கும் வத்தளையைச் சேர்ந்த தர்மேந்திரா ராஜரட்ணம் தனது குடும்பத்தின் வறுமை நிலையை வெளிநாட்டமைச்சருக்கு எடுத்துக்கூற பலமுறை முயன்றபோதும் அம்முயற்சியை வெளிநாட்டமைச்சின் அதிகாரிகள் உதாசீனம் செய்வதாக கவலையுடன் தெரிவிக்கிறார்.

குவைத் நாட்டிற்கு தனது குடும்பத்தின் வறிய நிலை காரணமாகவே வருமானத்தைப் பெறுவதற்காக தொழில் செய்ய சென்றதாகவும், குவை நாட்டில் சிலகாலம் தொழில் புரிந்ததாகவும் பின்னர் தான் தொழில் புரியும் கம்பனியின் கட்டாய பணிப்பின் பெயரில் ஈராக் நாட்டிற்கு அமெரிக்க இராணுவத்திற்கான பொருட்களைக் கொண்டு சென்றபோதே ஈராக் தீவிரவாதிகளால் தான் கடத்தப்பட்டு 44 நாட்கள் சிறைவாசத்தை அனுபவித்ததுடன் மிகுந்த மன விரக்தியையும் அடைந்துள்ளதாகத் தெரிவித்தார்.

தான் வீட்டு வறுமையைப் போக்குவதற்காகவே வெளிநாடு சென்றதாகவும் தனக்கு ஏற்பட்ட இந்த அவலநிலையால் தனது குடும்பம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர் தனது பிள்ளைகள் 5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த நிலையில் உள்ளபோதும் அவர்களை ஒரு உயர்தர பாடசாலையில் சேர்ப்பதற்கு அனுமதி கிடைத்தும், அங்கு அவர்கள் செல்வதற்கு வசதிகள் இல்லாத நிலையில் தாம் இருப்பதாகவும், மிகவும் கண்கலங்கிய நிலையில் தெரிவித்தார்.

சொந்தக் குடியிருப்புகள் மற்றும் ஜீவனோபாயம் எதுவும் இல்லாத நிலையில் அவர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

கடந்த டிசம்பர் மாதம் 12ஆம் திகதி இலங்கை வந்தபோது தனக்கும் பலர் அறுதல் வார்த்தைகள் கூறியதாகவும், வெளிநாட்ட அமைச்சைச் சேர்ந்த அதிகாரிகள் தனக்கு நஷ்ட ஈடும் நிவாரணமும் பெற்றுத் தருவதாக உறுதிமொழிகள் அளித்ததாகவும் ஆனால், தான் நாடு திரும்பி இருமாதங்கள் சென்ற நிலையிலும் எதுவித தொடர்புகளும் தம்முடன் வைக்கவில்லையென்றும் தான் இதுபற்றி வெளிநாட்டுப் பிரதி அமைச்சர் விஸ்வ வர்ணபாலாவுக்கும் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமருக்கும் கடிதம் அனுப்பியும் எந்தப் பதிலும் கிடைக்கவில்லையென்றும் பின்னர் தான் பலமுறை வெளிநாட்டு அமைச்சுக்குச் சென்று அமைச்சர்களைச் சந்தித்து தனது நிலையைமை எடுத்துக்கூற அனுமதி கேட்டும் அது பலனளிக்கவில்லையென்று மிகவும் மனவேதனையுடன் தெரிவித்தார்.

வெளிநாட்டில் பணிபுரிந்த காலத்தில் தனக்குக் கிடைக்க வேண்டிய வேதனத்தைக்கூட பெற்றுக்கொள்ள முடியாதநிலை இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இவரது குடும்பத்திற்கு உதவ விரும்புவோர் தேசிய சேமிப்பு வங்கியின் வத்தளைக் கிளை 100850265403 என்ற டி.டி.இராஜரட்ணத்தின் கணக்கிலக்கத்தில் வைப்புச் செய்யலாம்.

தினக்குரல்


- Mathan - 02-15-2005

யதார்த்தத்தை நோக்கி பயணிக்க வேண்டிய இந்தியா. - சிறி.இந்திரகுமார்.

ஆழ் தியானத்திலிருந்த ஒரு முனிவரின் தவம் திடிரென கலைந்து போனது போன்ற ஒரு நிலைமையைத்தான் இந்தியா இப்போது அனுபவிக்கிறது.

ஏன் இந்த தவம்கலைந்த நிலை இந்தியாவுக்கு ஏற்பட்டது. உண்மையில் சொல்லப் போனால இப்போதுள்ள நிலைமைகளின் பிரகாரம் இந்தியா ஆழ்த்தியானத்திலிருந்ததும் தவறு. தியானம் கலைந்து அந்தரிக்கும் இந்த நிலையும் தவறு.

அதாவது இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் சுனாமி சுழற்றிய சுழற்றல் இந்தோனிசியா, தாய்லாந்து, இலங்கை, பங்களாதேஷ், இந்தியா என எல்லா இடங்களிலும் பெருமளவு சேதத்தை ஏற்படுத்தினாலும் இந்த தேசங்களை எல்லாம் இந்த நாடுகளின் பொருளாதாரரீதியிலான இழப்புக்களுக்கூடாக பார்க்கின்ற ஒரு போக்கே இப்போது காணப்படுகிறது.

ஆனால் இந்த சுனாமிப் பேரனர்த்தமானது இந்தியாவைப் பொறுத்தமட்டில் பொருளாதார ரீதியிலான அழிவுகளுக்கு அப்பால் இந்தியா இந்துசமுத்திரப் பிரந்தியத்தின் பிராந்திய வல்லரசு என்ற ரீதியில் இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பை வெறும் பொருளாதார ரீதியிலான இழப்புக்களோடு மட்டும் மட்டுப்படுத்தி விடமுடியாது.

இந்த இந்தியாவுக்கான இழப்பை அல்லது தாகத்தை இந்த பிராந்திய வல்லரசின் அரசியல் ஸ்தானத்தில் ஏற்ப்படுத்தியுள்ள பெரியதொரு தாக்கத்திற் கூடாகவே பார்கவேண்டும்.

இப்பொழுது பெருமளவு இராஜதந்திரிகளும், அரசியல் நோக்கர்களும் இந்தியாவுக்கான இழப்பை இப்படித்தான் பார்கிறார்கள்.

இதற்குக் காரணம் இந்த விடயத்தில் இந்தியா சந்தித்துள்ள நவீன தோல்வி ஒன்றாகவே இதனைக் கருதுகிறார்கள்.

இந்தியா எவ்வளவுதான் அமைதியா தன்னைக்காட்டிக் கொண்டாலும் அது உள்ளுர குமறிக்கொண்டிருக்கிறது.

பிரந்திய வல்லரசு என்ற வகையில் அதன் கௌரவத்தில் கீறல் விழுந்து விட்டதாகவே அது கருதுகிறது.

இந்த சுனாமி விவகாரத்தை இந்தியா ஒரு சின்ன நடவடிக்கைமூலம் கையாண்டு விடும் நோக்கில் தனது நடவடிக்கைகளை முடக்கிவிட்டபோது. அமெரிக்காவோ, தான் எப்படி ஒரு பேரண்ட பேரரசாக தன்னைக்காட்டடிக் கொள்கிறதோ அதே போன்று இந்தப் பிராந்தியத்தில் இந்த விவகாரத்தை கையாள முனைந்தபோதே இதனை ஒரு பிரமாண்டமான விவகாரமாகக் கையாண்டது.

அமெரிக்காவின் இந்த பிரமாண்டமான நடவடிக்கையின் முன் இந்தியா எதுவும் செய்யமுடியாத ஒரு நிலைமையிலேயே இருந்தது.

இந்தியாவால் இந்தியாவுக்குள் மட்டும் தனித்துவத்தைப் பேணிக்கொண்டதே தவிர இந்தப் பிராந்தியத்தின் வல்லரசு என்ற வகையில் தனது தனித்துவத்தை இழந்துதான் போனது.

இந்தியாவுக்கு ஏற்ப்பட்ட இழப்புக்களுக்கு சர்வதேச உதவிகள் எவையும் தேவையில்லை எனக்கூறி தனது இழப்பை தானே நிவர்திசெய்து கொள்வதும் சுனாமி எச்சரிக்கை மையம் தொடர்பாக அதனை தானே நிறுவிக்கொள்ளும் எனக் கூறிக்கொண்டதும் இந்தியாவுக்குள் இந்தியாவின் தனித்துவத்தை பேணமட்டுமே இந்த அணுகுமுறை போதுமானதாவுள்ளது.

இந்தியா இப்பொழுது சந்தித்துள்ள இந்த நவீன இராஜதந்திரத்தோல்வியை எனி எவ்வாறு நிவர்த்திசெய்து கொள்ளப்போகிறது என்பது இந்தியாவுக்கு ஒரு பெரும்பிரச்சனையாக இருக்கும்.

இந்தியா இப்பொழுது சந்தித்துள்ள இந்த இராஜதந்திர நெருக்கடியானது இந்தியாவின் காலம் கடந்த வெளியுறவுக் கொள்கையின் இளமையின் வெளிப்பாடு என்பதே மெய்.

இதிலும் இந்தியாவின் இராஜதந்திர நெருக்கடியை இலங்கைக்கூடாக பார்ப்பதே பொருத்தமானதாக இருக்கும்.

இலங்கை விவகாரத்தில் ஸ்ரீலங்கா அரசும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமும் சம அந்தஸ்துக் கொண்டவர்கள் என்பது தான் இப்போதுள்ள கள நிலவரம்.

ஆனால் இந்தவிடயத்தில் இந்தியா இலங்கை அரசை நம்பிச் செயற்பட்டதே தவிர புலிகள் இயக்கத்தை கவனத்தில் எடுக்கவில்லை. இன்னமும் எடுக்கவில்லை.

எண்பத்து ஏழுகளின் பின்னர் இந்தியா இலங்கை விவகாரத்தில் சந்தித்த சில கசப்பான அணுபவங்களின் அடிப்படையில் ஒரு பழிவாங்கும மனோபவத்துடனேயேதான் தனது அணுகுமுறையை மேற்கொள்கிறதே தவிர காலத்துக்கு பொருந்திய புதிய மாற்றத்துக்கம் அணுகுமுறைக்கும் தன்னை தயார் படுத்திக் கொள்ளவில்லை.

இதன் விளைவுகளின் ஒரு படியை இந்தியா இப்டீபாது அனுபவிதிதாகிவிட்டது. இந்தியா அனுபவிக்கும் இந்த நிலைமை இந்தியாவின் கொள்கையின் போக்கில் நீண்டகாலத்துக்கு ஒரு தாக்கத்தை செலுத்தவல்லதாகவே நிச்சயம் இருக்கப்போகிறது.

இந்தியா ஸ்ரீலங்கா அரசை தனது நண்பனாகவே கருதிச்செயற்பட்டது. ஆனால் ஸ்ரீலங்கா அரசோ இந்திய நண்பனல்ல என்பதை தெளிவாகவே உணர்திவிட்டது.

இதனை இந்தியாவுடன் ஆலோசிக்காமல் அமெரிக்கப்படைகள் இலங்கைக்கு வருகைதர அழைத்தமையைப் பார்க்கலாம்.

அமெரிக்கபடைகள் இலங்கையில் நிலைகொண்டிருக்கும் வரை இந்தியாவுக்கு அடிவயிற்றில் நெருப்பைக்கட்டிக்கொண்ருடிப்பது போன்றதொரு நிலைமைதான்.

இதனால் இலங்கைக்கு முதலில் தனது படைகளை அனுப்பியதுபோன்று அதிலொரு தொகையை விரைவாக வெளியேற்றவும் செய்தது.

இதனூடாக இந்தியா ஒரு செய்தியை சொல்லியது. அதாவது இனி படைவிலகலை மேற்கொள்ளலாம் என்பதே அமெரிக்காவுக்கான அந்தச் செய்தி. ஆனால் அமெரிக்காவும் பதிலளிப்பதுபோன்றே தனது படைகளில் ஒரு தொகுதியை விலக்கிக்கொண்டது.

இப்பொழுது இரு நாடுகளினதும் எஞ்சிய தொகை படையினர் இலங்கையில் நிலை கொண்டுள்ளனர். இதில் முதலில் யார் படைவிலகலை மேற்கொள்ளப்போகிறார்கள் என்பதிலும் இந்த புதிய ஆட்டத்தின் போக்கின் ஒரு நிலைமையிருக்கிறது.

இதுவொரு பூனைக்கு யார் மணி கட்டுவது என்கிற ஒரு நிலையாகவே இருக்கும்.

இந்த நிலையில் இனியாவது இந்தியாவின் போக்கில் இலங்கை விவகாரத்தில் புதியதொரு போக்கு தோன்றுமா என்பது முக்கியமானதாக இருக்கிறது.

இத்தகையதொரு போக்கு இந்தியாவின் கொள்கையில் ஏற்ப்படவேண்டும் என்ற கருத்துக்கள் இநதியாவிலுள்ள சில புத்திஜூவிகள் மட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் நேரு பல்கலைக்கழக பேராசிரியரும் அரசியல் ஆய்வாளருமான சகாதேவன் அண்மையில் இதனைசுட்டிக்காட்டியிருந்தார் என்பது கவனிக்கதக்கது.

ஆனால் இத்தகையதொரு மாற்றம் நிகழுமா என்பது இன்னும் ஒரு தெளிவில்லாத நிலைமையிலே தான் இருக்கிறது.

இலங்கை விவகாரத்தில் ஒரு தவறான போக்கை காட்டிய முக்கியமானவர்களில் ஒருவரான இந்தியாவின் பாதுகாப்புத்துறை ஆலோசகராக இருந்து சுனாமியின் பின் மாரடைப்பால் மரணமான ஜே.என்.டிக்ஷிற்றின் வெற்றிடத்தை ஏற்ப்படுத்தியுள்ள அதேவேளை ஒரு மாற்றத்திற்கான வாய்ப்புக்களையும் வழங்கியுள்ளது.

ஜே.என்.டிக்ஷிற் இலங்கை விவகாரத்தில் கையாண்ட அணுகுமுறையாகவும் தோல்வியினை சந்தித்ததை தன் கண்களாலேயே பார்த்துவிட்டுச் சென்றுவிட்டார்.

இந்த நிலையில் தமிழ் மக்களையும் புலிகளையும் நண்பர்களாக கருதலாம்.

இந்தியாவுக்கு என்றும் எதிரானவர்களாக தமிழ் மக்களோ, புலிகளோ அல்லர் என்பதை பலமுறை தெளிவுபடுத்தியாகியம் விட்டாயிற்று.

ஆனால் இந்தியா தனது பழைய கசப்பான அனுபவத்தினூடாக தமிழர் விவகாரத்தை இப்போதும் பார்க்கிறது.

இந்த பழைய கசப்பான அனுபவம் என்பது ஈழத்தமிழர் விவகாரத்தை முற்றுமுழுதாக தனது நலனுக்கூடாக அணுகியதோடு மட்டுமல்லாது தனது நலனுக்காகப் பலியிடவும் துணிந்தபோது தான் அந்த அனுபவம் ஏற்ப்பட்டது.

எந்தவொரு நாடும் ஒரு விவகாரத்தை தனது நலனுக்கூடாகக் கையாள்வது வழமைதான் ஆனால் அதற்கும் ஒரு வரைமுறையும் அளவுகோலும் உண்டு. இந்தியா இந்தவரைமுறைகளை தாண்டியபோதுதான் அந்த கசப்பான அனுபவத்தை அது சந்தித்தது. இதனை இந்தியா புரிந்து கொள்ளவேண்டும்.

இந்த நலையில் இந்தியாவின் பாதுகாப்புத்துறை ஆலோசகராக இருந்து மறைந்து போன டிக்~pற்றின் இடத்துக்கு எம்.கே.நாராயணன் பாதுகாப்புத்துறை ஆலோசகராக கதவியேற்ற பின்னர் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்புத்துறை சார் நடவடிக்கையாக இந்திய இலங்கை கரையோரப்பாதுகாப்பைப் பலப்படுத்த எழுநூற்று நாற்பத்து இரண்டு கோடி ரூபா செலவில் முதிய திட்டம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளதை பார்க்கும் போது இந்தியாவின் கூடுதல் கவனம் இங்கு திசைமுகப்படுத்தப்பட்டுள்ளதை காட்டுகிறது.

டிக்~pற்றின் இடத்துக்கு நியமிக்கப்பட்டுள்ள இந்த எழுபது வயதுக்காரரான எம்.கே. நாரயணன் இந்தியாவின் மத்திய புலனாய்வு அமைப்பின் முதல்வராக இருந்ததுடன் மன்மோகன்சிங் அரசின் காலத்தில் பிரதமர் அலுவலகத்தில் சிறப்புச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டவர். இவர் இந்தியாவின் உள்ளகப் பாதுகாப்பு விவகாரத்தில் மிகவும் தேர்ச்சி பெற்றவர் என்றும பாதுகாப்புச் சமூகத்தின் அதி புத்திசாலி உறுப்பினாகளில் ஒருவர் என்ற புகழைக் கொண்டவர் என்றும் தமிழின விரோதப்பாக்கை கக்கிவரும் ?இந்து? பந்திரிக்கை புகழ்கிறது.

அத்தோடு பிரதமர் அலுவலகத்தின் விசேட செயலாளராக நியமிக்கப்பட்ட போதே அவர் ஜம்முகாஷ்மீர், வடகிழக்கு கிளர்ச்சி நாகா அமைதிப்பேச்சுக்கள், விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்பான விடயங்கள் என்பவை தொடர்பாகக் கையாண்டு வந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்தியா புதிய மாற்றத்துக்கு தமிழ் மக்களுடனான நியாய பூர்வமான நடபுக்கும் உறவுக்கம் தன்னை தயார்படுத்துமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்


- Mathan - 02-20-2005

எமது இலட்சியப் போராட்டம் மீண்டும் வெடிக்கும்: சு.ப.தமிழ்ச்செல்வன் எச்சரிக்கை

இன்று காலை திருகோணமலை மூதூர் பகுதியில் பொது அமைப்பின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதே கருத்துக்கூறிய விடுதலைப் புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் சிறீலங்கா அரசிற்குக் கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

மூதூர் கிழக்கில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் திருகோணமலை மாவட்ட பொது அமைப்பின் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.

சிறீலங்கா அரசின் ஏமாற்று நடவடிக்கைகளை தொடர்ந்தும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அரசின் ஏமாற்று நடவடிக்கைகள் இனிமேலும் தொடரும் பட்சத்தில் நாம் எமது இலட்சியத்தை நோக்கிய பாதையை முன்னெடுப்பது குறித்து சிந்திக்க வேண்டியுள்ளது என்று தமிழீழ அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

இன்று முற்பகல் திருகோணமலை மாவட்ட முஸ்லிம் பிரதிநிதிகளுக்கான கலந்துரையாடல் ஒன்றும் நடைபெற்றது.

முஸ்லிம் பிரதிநிதிகள் மத்தியில் கருத்து தெரிவித்த சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் உறவு ரீதியாக இணைந்து செயற்படுவதன் மூலமே ஒட்டுமொத்தத் தமிழினத்தின் இலக்கை அடைய முடியும் என்றும் தெரிவித்தார்.

புதினம்


- Mathan - 02-22-2005

சிறிலங்காவில் அரசியல் வியாபாரமாகும் கரையோர அமைவிடம் - ஞாபகன்

சிறிலங்காவிலும் தமிழர் தாயகத்திலும் சுனாமி பேரலைகளினால் ஏற்பட்ட அழிவுகளில் இருந்து மீள்வதற்கான வேலைத்திட்டங்கள் வகுக்கப்படுவதும் நடைமுறைப்படுத்தப்படுவதுமாக ஏற்பாடுகள் தீவிரமடையத் தொடங்கியுள்ளன.

முதற்கட்ட மீட்புப்பணிகள் ஏறக்குறைய முடிந்துவிட்ட சூழலில் அடுத்த கட்டமான இந்நடவடிக்கைகள் சூடுபிடிக்கத் தொடங்கும் தருணத்தில் பல்வேறு வாதப்பிரதி வாதங்கள் எழத் தொடங்கியுள்ளன. சிறிலங்காவில் கரையோர இட அமைவு பற்றி பெரும் போரே நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

கடற்கரையோரத்தில் இருந்து எவ்வளவு தூரத்துக்கு அப்பால் கட்டடங்களுக்கு அனுமதி வழங்குவது என்ற அதிகார மட்டத்திலான மோதல்கள் ஆளும் கட்சிக்குள்ளே இடம்பெறுகின்றன.

பிரதமர் மற்றும் தீர்மானம் எடுக்கவல்ல தரப்பினர் நூறு மீற்றர் தூரத்துக்குள் எந்தக் கட்டங்களும் அமைக்கப்படக்கூடாது என்பதை தீர்க்கமாக அறிவித்துள்ளனர்.

இதனை சுற்றுலாத்துறை அமைச்சர் அனுரா பண்டாரநாயக்கவும் வேறுசில அரசியல்வாதிகளும் தீவிரமாக எதிர்த்துவருகின்றனர். மக்களின் உயிர், உடமை பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டபோதிலும், அவர்கள் தத்தமது அரசியல் நலன்களுக்காகவே இதனை எதிர்த்து வருகின்றார்கள்.

இந்த ஆண்டில் கூடுதலான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என்று கூறும் அனுரா பண்டாரநாயக்க அதை இந்த விதிமுறை நாசமாக்கிவிடும் என்றும் அதனால் இலங்கைக்கு கிடைக்கக்கூடிய வருமானமும் இழக்கப்படும் என்றும் சொல்கிறனர். அதேவேளை அகதிகளுக்கான ஜ.நா உயர் ஸ்தானிகராலயமும் இதனை மறுபரிசீலனை செய்யுமாறு அரசைக் கேட்டிருக்கின்றது.

பாதுகாப்பு என்ற பெயரால் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை இன்னும் பலரை ஏதிலிகளாக்கி நிர்க்கதி நிலைக்குள் தள்ளும் என்று அது தெரிவித்திருக்கின்றது. இப்போதைக்கு ஒரு சுனாமி அலை இலங்கைத்தீவைத் தாக்கும் என்பதற்கான திடமான கணிப்புக்களோ தாக்காது என்பதற்கான நம்பிக்கையோ இல்லாத நிலையில் மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அவரவர் தத்தமது நோக்கில் விமர்சித்து வருகின்றனர். அதற்கு மனிதாபிமான மற்றும் பொருளாதார காரணங்களும் காட்டப்படுகின்றன. ஆனால், மிகப்பெரும் உயிரழிவைச் சந்தித்தபகுதி மக்களிடம் இருந்துதான் இந்த எதிர்ப்புக்கள் வருகின்றனவா என்பது தெளிவாக இல்லை. உண்மையில் அத்தகைய தரப்பை பிரதிநிதித்துவம் செய்யும் தரப்பிடம் இருந்து எதிர்ப்புக்கள் வரவில்லை. ஆயினும், சாத்தியமான வழிமுறைகளில் கூடியளவுக்கு அவரவரின் பழைய இடங்களுக்கே திரும்பிச் செல்லக்கூடியதான முறையையே கையாளவேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றார்கள்.

இயற்கைச் சூழலுக்கு ஏற்படுத்தப்பட்ட பாதிப்பு, அழிவை மிகப் பெரிதாக்கி இருக்கின்றது. அதனை ஈடுசெய்யும் வழிவகைகளைக் கையாண்டு கூடுதல் நிலப்பரப்பை இழக்காது பாதுகாக்கும் செயற்திட்டங்களை வகுக்கவேண்டும் என்று பேசப்படுகின்றது.

ஆனால், அது தொடர்பாக முன் வைக்கப்பட்டிருக்கும் சிறிலங்கா அரசின் கரையோரப் பாதுகாப்புக் கருதிய கரையோர நிலங்களை வெறுமையாகவிடும் திட்டம்கூட பாரபட்சமானதாகவே உள்ளது. கிழக்கு மற்றும் வடக்கின் பெரும்பாலான கரையோரப் பகுதிகளில் இருநூறு மீற்றர் தூரம் வரை குடியிருக்கவோ கட்டடங்கள் அமைக்கவோ அனுமதிப்பதில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

தென்னிலங்கைப் பகுதியில் அதிகம் நிலத்தை கைவிட விரும்பாத அரசு அதனை நவீன உத்திகளைப் பயன்படுத்தி பாதுகாப்பு முறைகளை கையாளவுள்ளது என்றும் தமிழர் தாயகப் பகுதிகளை அது விடயத்தில் மாற்றாந்தாய் முறையில் அணுகும் நோக்கோடு கூடுதல் நிலப்பகுதியை கைவிடச்செய்கின்றது என்றும் விமர்சனங்கள் உண்டு.

அதைவிடவும் நல அபகரிப்பிற்கான உள்நோக்கமும் அதற்குள் உண்டு. ஏற்கனவே பேரலைகள் தாக்கி இடம்பெயர்ந்த பகுதிகளில் சிறிலங்கா படையினர் புதிதாக படைநிலைகளை அமைப்பதும் மக்களின் எஞ்சிய உடமைகளை அதற்கு பயன்படுத்துவதும் செய்திகளாக வெளிவந்துள்ளன.

ஏற்கனவே தமிழர் தாயகத்தில் ஆக்கிரமிப்புப் படைகளாக நிலை கொண்டுள்ள சிறிலங்கா படையினர் யாழ்ப்பாணத்தில் மட்டும் முப்பது வீதத்துக்கும் அதிகமான நிலப்பரப்பை உயர்பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தி கையகப்படுத்தி வைத்துள்ளனர். அதுபோன்று வவுனியா, மன்னார், திருகோணமலை மாவட்டங்களிலும் அதிகளவான மக்கள் குடியிருப்புக்களை கையகப்படுத்தப்பட்டுள்ளன.

அதனால் பல இலட்சம் மக்கள் ஏதிலிகளாக தமது பொருளாதார அடிப்படைகளையே இழந்துள்ளனர். ஏறத்தாழ இரண்டு தசாப்தங்களாகத் தொடரும் இந்த துன்பியல் வாழ்வும் அதற்கு எதிரான குரல்களும் சிறிலங்காவினாலும் உலகத்தினாலமு; கண்டுகொள்ளப்படாது உள்ளன.

சமாதானத்துக்கான இக்காலத்திலும் அதில் எந்த விட்டுக் கொடுப்புகளுக்கும் இடமின்றி அழுங்குப் பிடியாக சிறிலங்காப் படைகள் இருக்கின்றன. அதற்கு எதிராக எந்தக் குரலும் எழும்பத்தெரியாத, கண்டுகொள்ளாத சக்திகள் பெரும்பான்மையினரின் பொருளாதார நலன்களை வாழ்வுரிமையை மையப்படுத்தி இப்போது குரல் எழுப்புவது அப்பட்டமான அரசியல் ஆதாயம் தேடும் நடவடிக்கையே ஆகும்.

இந்த இடத்தில் விடுதலைப் புலிகளின் மீள்குடியேற்றத் திட்டம் யதார்த்த நிலைமைகளைப் புரிந்து கொண்ட தமிழர் தாயகத்தின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டதாக இருப்பதை வேறு கோணத்தில் புரிந்து கொள்ளவேண்டும். சிறிலங்கா அரசிடம் இருந்து போதிய உதவிகள் மறுவாழ்வுத் திட்டங்கள் எதனையும் எதிர்பார்ப்பது இத்தனை காலப் பட்டறிவுக்கும் முரணானது. அதனால் நடைமுறைச் சாத்தியமான வேலைத்திட்டங்களை வகுக்கக்வேண்டியவர்களாக தமிழர்கள் இருக்கின்றனர்.

அதன் முன்னோடித் திட்டத்தை இப்போது விடுதலைப்புலிகள் முன்னெடுக்கின்றனர். அவர்கள் கரையோரத்தில் இருந்து சுமார் 400 மீற்றருக்கு அப்பால் மீள்குடியேற்றத்தை நிறுவுவதற்கு தீர்மானித்து, அதனை நடைமுறைப்படுத்தியும் வருகின்றனர். கரையோரத்தில் இருந்து 300 மீற்றருக்கு அப்பாலேயே இப்பகுதிகளில் மீள்குடியேற்றத்தை மேற்கொள்வதென முதலில் தீர்மானித்திருந்தபோதிலும் பாதுகாப்புக் கருதி தூரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இப்பகுதி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசம் என்பதனால் சிறிலங்காப் படையினர் ஆக்கிரமித்து தமது நிரந்தர பாதுகாப்பு வலயங்களாக கையகப்படுத்தும் அச்சுறுத்தல் இல்லை. மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மட்டுமே எடுக்கப்படுகின்றது. எதிர்காலத்தில் தாயகத்துக்குக் கிடைக்கக்கூடிய இயற்கையிடம் இருந்து தற்காத்துக்கொள்ளும் தொழில்நுட்பங்களுடன் அமைந்த வாய்ப்புக்கள் கிடைக்கும்போது கரையோரம் முழுவதையும் பயன்பாட்டுக்கு உட்படுத்த இயலும்.

இது தொடர்பாக எந்த எதிர்வினைகளும் கண்டனங்களும் இல்லாதபோது தென்னிலங்கையில் ஏன் இந்தக் கூக்குரல்கள்? ஆளும் தரப்புக்குள்ளேயே முரண்பாடுகள்? அதுவும் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள்ளேயே அதுவிடயத்தில் வேறுபாடான கருத்துக்களும் பகிரங்கமாக ஒருவரை ஒருவர் தூக்கி எறிந்து பேசும் வார்த்தையாடல்கள்?

இது ஒரு விடயத்தை தெளிவாகக் காட்டுகின்றது. தென்னிலங்கையின் ஆளும் தரப்பையோ எதிர்த் தரப்பையோ சேர்ந்த முக்கிஸ்தர்கள் எவருமே மக்கள் நலனை மட்டும் கருத்தில் கொண்டவர்களாக இருக்கவில்லை. வெறுமனே தனது அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்வதற்கான முதலாளிய சமூகத்தின் நலன்களை பிதிபலிப்பவர்களாகவே உள்ளனர்.

அல்லது அதன் மறுபக்கமாக நோக்கின் உண்மையில் மக்களின் நலன்கள் பாதிக்கப்படும் என்று கருதுகின்றார்களேயானால் எந்த மக்களின் நலனை அவர்கள் கருதுகின்றார்கள். தமது நீண்ட கால வாழ்வமைந்த இடங்களை விட்டு இடம்பெயர்வதனால் அவர்களது பல்வேறு நலன்களும் சேதமடையும் என்று எண்ணுகின்றார்களா?

யாரும் கட்டுப்படுத்தவியலாதது என்று இப்போது கருதப்படும் இயற்கை அனர்த்தத்தில் இருந்து தற்காத்துக் கொள்ளும் முகமாக மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளுக்காகக் கவலைப்படுபவர்கள் தமிழ் மக்கள் பற்றி இந்த இருபது ஆண்டுகாலமாக கவலைப்படாமல் இருப்பது ஏன்?

வலிந்த இராணுவ நடவடிக்கைகள் மூலம் தமிழின அழிப்பையும் தமிழர்களின் பொருளாதார, கலாசார கூறுகளையும் இல்லாதொழிப்பதையே பிரதான நோக்கமாகக் கொண்ட செயற்பாடுகள் பற்றி ஏன் கவலைப்படவில்லை? இது பற்றிய கவலையற்ற மகிழ்ச்சிகரமான அவர்களது வெளிப்பாடே உயர்பாதுகாப்பு வலயங்களாக தமிழர்களது தாயகப் பகுதிகளை கையகப்படுத்தி வைத்திருப்பதாகும்.

இது தொடர்பாக எத்தனை இலட்சம் மக்கள் தமது அதிருப்திகளையும் வேதனைகளையும் சொல்லிவிட்டார்கள். இவை யாவும் செவிசாய்க்கப்பட்டனவா? மனிதாபிமான ரீதியிலோ அல்லது குறைந்த பட்சம் அவர்களது சட்டத்தின் படியோதானும் தீர்க்கப்பட்டதா?

இப்போது வலிகாமம் வடக்குப் பகுதியில் தமிழ் மக்கள் தம்மை மீளக்குடியே அனுமதிக்கக்கோரி தொடுத்த வழக்கிற்கு கூட வலிந்து திணிக்கப்பட்ட பாதுகாப்பை காரணம் காட்டி சிறிலங்கா அரச தரப்பு மறுப்புத் தெரிவித்துள்ளது.

மனங்கள் திறந்தால் திறக்கக்கூடிய வழிகளையே திறக்க மறுக்கும் இந்த ஆட்சியாளர்கள், இயற்கையை வெல்லமுடியாது மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கையை கேள்விக்குள்ளாக்கத் தொடங்கியிருக்கின்றார்கள்.

அது அப்பட்டமான இனவாத அரசியல் வியாபாரமாக இல்லாமல் வேறெதுவாக இருக்க முடியும்?


- Mathan - 02-23-2005

தமிழ்ச்செல்வனின் மலையக பயணத்துக்கு அரசாங்கம் பாதுகாப்பு வழங்குமா? பிக்கு எம்.பி.பாராளுமன்றத்தில் கேள்வி

விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் மலையகத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பயங்கரவாத இயக்க தலைவரொவர் இவ்வாறு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளமை உண்மைதானா? என்பது குறித்தும் இவரது பயணத்திற்கு அரசாங்கம் பாதுகாப்பு வழங்குமா? என்பது குறித்தும் பாதுகாப்பு அமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும் என ஹெல உறுமய பாராளுமன்ற உறுப்பினர். அத்துருலிய ரத்ன தேரர் பாராளுமன்றில் வேண்டுகோள் விடுத்தார்.

நேற்று செவ்வாக்கிழமை பாராளுமன்றம் சபாநாயகர் லொக்குபண்டார தலைமையில் கூடி கேள்வி நேரம் முடிந்த பின்னர் அத்துருலிய ரத்ன தேரர் விசேட கூற்றொன்றை வெளியிட்டார். அக்கூற்றில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

விடுதலைப் புலிகள் இயக்க அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் கிழக்கு மாகாணத்தில் ஆயுதங்களுடன் நடமாடுகிறார். இது யுத்த நிறுத்தத்தை மீறும் ஒரு செயலாகும். இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் சந்திரசேகரனின் அழைப்பையேற்று மலையகத்தின் பல பகுதிகளுக்கும் தமிழ்ச்செல்வன் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அறிகிறோம். வடபகுதியில் ஆயுதங்களுடன் திரியும் ஒரு அமைப்பு தென்பகுதியிலும் சுதந்திரமான நடமாட அனுமதியளிப்பது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.

தமிழச்செல்வனின் இந்த விஜயத்திற்கு அனுமதி வழங்கியது யார்? இது தொடர்பாக பாதுகாப்பமைச்சர் விளக்கமளிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். இதேவேளை, அச்சமயம் பாதுகாப்பமைச்சரோ, பிரதிப் பாதுகாப்பமைச்சரோ சபையிலில்லாத காரணத்தினால் இது குறித்து சம்பந்தப்பட்டவருக்கு அறிவிப்பதாக சபாநாயகர் தெரிவித்தார்.

தினக்குரல்


- Mathan - 02-23-2005

பிணம் தின்னும் கழுகுகள் வழங்கும் மூன்றாவது சுனாமி

தமிழும், தமிழினமும், தமிழரின் தேசங்களும் முன்னரும் பலதடவைகள் கடற்கோள் தந்த அவலங்களுக்கு முகம் கொடுத்ததாக கருத்துக்கள் பல உண்டு. பண்டைய காலத்தில் 'சம்புத்தீவு" என்கின்ற நாவலந்தீவின் தெற்குப்பகுதியே தமிழகம் ஆகும். வடக்கே விந்தியமலை, தெற்கே அவுஸ்திரேலியா, மேற்கே ஆபிக்கா, கிழக்கே சீனம்- என்கின்ற இலெமூரியாக் கண்டம், முதலில் ஏற்பட்ட கடற்கோளினால் துண்டாடப்பட்டது. இதனால் விந்தியத்திற்கு வடக்கே இருந்த கடல் வற்றியது. இமயமலை தோன்றியது. பின்னர் ஏற்பட்ட இரண்டாவது கடற்கோளில், மூதூருடன் கூடிய தமிழகத்தின் பெரும்பகுதியைக் கடல் கொண்டது. இம்மூதூரே பின்னாட்களில் பாண்டிய அரசனால் ஆளப்பட்ட மதுரையாகும். இப்பெரு ஆழிப்பேரலையின் போதே இலங்கை தமிழகத்தினின்று பிரிந்தது.
பஃறுளி, குமரி ஆறுகளும் குமரிக்குன்றமும் அழிந்து போயின. முத்துக்குப் புகழ் பெற்ற பாண்டியனின் தலைநகரான கபாடபுரம் மூன்றாவது கடற்கோளின் போது அழிவைச் சந்தித்தது.

இவ்வாறு தொல்காப்பியப் பாயிரச் செய்யுளையும் சிலப்பதிகாரத்தையும், புறநானூறையும் மேற்கோள் காட்டி பேராசிரியர் பெ. ராசாராமன் போன்றோர் குறிப்பிடுவதுண்டு. ஆனால் கிறிஸ்துவுக்கு பின் மூன்றாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட தமிழ் இலக்கியங்களில் கடற்கோள் பற்றிய குறிப்புக்கள் கிடையாது. என்றும் சிலப்பதிகாரம், கலித்தொகை போன்ற இலக்கியங்களில் உள்ள குறிப்புக்களை பல நூற்றாண்டுகளுக்குப் பின் வந்த உரைகாரர்கள் மிகைப்படுத்தினார்கள் என்றும் வரலாற்று ஆசிரியர் சுப்பிரமணியம் போன்றோர் கூறுவதுண்டு. பழந்தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஏழ்தெங்கம், ஏழ்மதுரை, ஏழ்முன்பாலை, ஏழ்குறும்பனை... என்ற பட்டியலில் உள்ள ஏழ்தெங்க நாட்டை, ஈழவர் வாழ்ந்த தெங்க நாடு என்றே பொருள் கொள்ள வேண்டும் - என்ற ஆய்வுக் கருத்தையும் நாம் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

எவ்வாறு பாண்டியர் வாழ்ந்த நாடு பாண்டியநாடு என்ற பெயர் பெற்றதோ அதேபோல் ஈழவர் வாழ்ந்த நாடு, ஈழநாடு என வழங்கப்பட்டது. எழு அல்லது இழு என்ற வினையடியே திரிந்து ஏழ் என்ற ஆனது என்பதே பொருத்தமானதாகும். ஈழர் அல்லது ஈழவரே, ஈழத்தின் ஆதிக்குடியினர் ஆவர்கள். ஈழர் என்பவரையே ஆரியர், இயக்கர் என்று அழைத்தார்கள். மகாவம்சமும் சிங்களவர் குடியேறுவதற்கு முன்னரேயே அங்கு இருந்த இயக்கர் குறித்துக் கூறுகின்றது.

ஆழிப்பேரலை தந்த அழிவினால் தமிழீழமும் தமிழீழத்தவரும் பாதிக்கப்பட்டிருக்கும் இவ்வேளையில் கடற்கோள் குறித்த விரிவான வரலாற்று ஆய்வைச் செய்வது அல்ல எமது நோக்கம். அதற்கு வேறு சந்தர்ப்பம் உண்டு. ஆனால் சமீபகால வரலாற்றில் இப்படிப்பட்ட இயற்கை அனர்த்தம் எதுவும் தமிழீழ மண்ணில் நிகழ்ந்ததில்லை. தவிரவும் இக்கட்டுரையின் ஆரம்பத்தில் நாம் குறிப்பிட்ட அனர்த்தங்கள் யாவும் இயற்கையோடு மட்டுமே சம்பந்தப்பட்டவையாக இருந்ததைச் சுட்டிக் காட்டுவதுதான் எமது நோக்கமாக இருந்தது. முன்னைய கடற்கோள் அழிவுகளின் போது இயற்கை தந்த அவலங்களை மட்டுமே பண்டைத் தமிழகம் எதிர் கொண்டது. ஆனால் இன்று தமிழீழமும் தமிழினமும் எதிர்கொள்வது ஆழிப்பேரலை அனர்த்தங்கள் மட்டும்தானா? என்ற கேள்விக்குரிய விடையைத் தர்க்கி;ப்பதே எமது நோக்கமாகும்.

ஆழிப்பேரலை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டிருக்கின்ற தமிழர் தாயகத்தை கட்டி எழுப்புவதற்காக சகல வளங்களையும் ஒன்று திரட்டித் தீவிரமாக உழைக்குமாறு தமிழீழத் தேசியத் தலைவர் அழைப்பு விடுத்திருக்கின்றார். அந்த அழைப்பின் போது தேசியத்தலைவர் ஒரு முக்கிய விடயத்தை மிகத்தெளிவாகக் கூறியிருந்தார். எமது மக்களின் துயர் குறித்தும், பாதிப்புக் குறித்தும் தலைவர் கீழ்வருமாறு கூறியிருந்தார்:-

'அழிவுகளும் இழப்புகளும் எமது மக்களுக்குப் பரீட்சயப்பட்டுப்போனவை. எனினும் சுனாமியால் ஏற்பட்ட அதிகமான உயிரிழப்பும் இடப்பெயர்வும் இயற்கையின் சீற்றத்தால் மிகவும் குறுகிய நேரத்தில் நிகழ்ந்ததென்ற வகையில் அதிர்ச்சியான ஒன்றாக உள்ளது. கடந்தகாலத்தில் சிறிலங்கா இராணுவத்தினரின் நடவடிக்கைகளாலும் இராணுவ தந்திரோபாயங்களாலும் எமது மக்கள் தமது வாழ்விடங்களை விட்டு இடம் பெயரவும் சொத்துக்களை இழக்கவும் நேரிட்டது. இது சர்வதேசமும் அறியப்படாமல் மௌனமாக எமது மக்களையும் தேசத்தையும் சிதைத்த முதலாவது சுனாமியாகும்! இந்நிலையில் டிசம்பர் 26ம் திகதி இடம்பெற்ற அனர்த்தம், எமது மக்களைப் பொறுத்தவரையில் இரண்டாவது சுனாமியே!"

சகல வளங்களையும் திரட்டி தமிழர் தாயகத்தைக் கட்டி எழுப்பி, எமது மக்களின் துயர் துடைத்து அவர்களைத் துரிதகதியில் இயல்பு வாழ்க்கைக்கு இட்டுச்செல்வதற்கான முயற்சிகளில் தமிழீழத் தேசியத்தலைவரும், அவருடைய வழிநடத்தலில் விடுதலைப்புலிகளின் அனைத்துப் படையணிகளும் மற்றும் தொண்டர் நிறுவனங்களும் பணி புரிந்து கொண்டிருக்கின்ற இந்த வேளையில் மூன்றாவது சுனாமி ஒன்றை உருவாக்குகின்ற செயல்பாட்டில் சிலர் இறங்கியுள்ளதை இப்போது நாம் காணக்கூடியதாக உள்ளது.

சிங்கள பௌத்தப் பேரினவாத அரசும், அதன் தமிழ்விரோத அரசியல் கூட்டணியும், இவர்களுக்கு துணைபோகின்ற புலம் பெயர்ந்த பிணம் தின்னிக்கழுகுகளும் தமிழ் மக்களுக்கு எதிரான மூன்றாவது சுனாமியொன்றை உருவாக்கும் செயல்பாட்டில் சிலர் இறங்கியுள்ளதை இப்போது நாம் பார்க்கக்கூடியதாக உள்ளது.

தமிழீழ மக்களுக்குச் செல்லக்கூடிய நிவாரணப்பணிகளையும் நிவாரண நிதிகளையும் தடுத்து நிறுத்துவதே இந்தப் பிணம் தின்னும் கழுகுகளின் முக்கியமான பணியாக இருக்கின்றது. இந்த கேவலமான செயல்பாட்டிற்கு உறுதுணையாகப் புலம் பெயர்ந்த சில கதிர்காமக் கனவான்கள் திகழ்வது இன்னும் வேதனையாகத்தான் உள்ளது. ஆனால் இது இனியும் வியப்பூட்டுவதாக இல்லை. ஏனென்றால் தமிழீழ விடுதலைப்புலிகள் மீதும் நாட்டுப்பற்றாளர்கள் மீதும் இக்கனவான்கள் கொண்டுள்ள தனிப்பட்ட சுயநலக் காழ்ப்புணர்ச்சி காரணமாக இவர்கள் தமிழ்த் தேசிய நலனுக்கு எதிராகச் செயல்பட்டதும் செயல்பட்டு வருவதும் தெரிந்த விடயங்களே!. ஆனால் இம்முறையோ, இக்கனவான்கள் ஆழிப்பேரலை தந்த அனர்த்தங்களுக்கும் மேலான அனர்த்தங்களைத் தமிழ் மக்களுக்குத் தருவதாக முடிவு செய்து விட்டார்கள் போலும்.

ஆமாம், தமிழீழ மக்களின் துயர் துடைப்பதற்காகத் திரட்டப்படும் நிதியை எவ்விதமாகவாவது தடுப்பதன்மூலம் தமிழர் தாயகத்திற்கு மேலும் அழிவைக் கொண்டுவருவதே இவர்களின் மேலான நோக்கமாகும். அதற்காக இவர்கள் மேற்கொண்டுள்ள திட்டங்களில் ஒன்று தமிழர் புனர்வாழ்வுக்கழகம் போன்ற உத்தமமான நிறுவனங்களுக்கு எதிராகப் பொய் பிரசாரம் செய்வதாகும்.

பிணம் தின்னும் கழுகுகள் வழங்குகின்ற-வழங்க முயற்சிக்கின்ற-மூன்றாவது சுனாமி இது.

சுனாமி என்ற ஆழிப்பேரலை, டிசம்பர் மாதம் 26ம் திகதி தமிழர் தாயகத்திற்கும் தாயகத்து உறவுகளுக்கும் பாரிய அழிவுகளை ஏற்படுத்தியபோது துடித்து எழுந்தது உலகத்தமிழ் இனம்.

அவுஸ்திரேலியா உட்பட புலம் பெயர்ந்த நாடுகளில் வாழுகின்ற தமிழினம் உடல் சிலிர்த்து உள்ளம் குமுறி தம் உடன்பிறப்புக்களுக்கு உதவமுன் வந்தது. ஆண்டாண்டு காலமாக தன்னலமற்ற உயரிய பணிகளைச் செவ்வனே செய்து வருகின்ற தமிழர் புனர்வாழ்வுக் கழகம் ஊடாக உலகளாவிய ரீதியில் உலகத்தமிழர்கள் தமது தார்மீக பங்கினை வழங்கினார்கள். தொடர்ந்தும் வழங்கி வருகின்றார்கள்.

இது பொறுக்கவில்லை, இந்த கதிர்காமக் கனவான்களுக்கு. ஏற்கனவே பொருமிக் கொண்டிருந்த ஜே.வி.பியினருக்கும் மேலாக இந்தக் கதிர்காமக் கனவான்கள் பொங்கி எழுந்தார்கள்! சிறிலங்கா அரசும் அதன் இராணுவமும் தமிழீழப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய நிவாரணப் பொருட்களைத் தடுத்து நிறுத்திக் கொண்டிருந்ததை உலகச் செய்தியாளர்களே வெளிக்கொண்டு வந்திருந்தபோதும் இந்தக் கதிர்காமக் கனவான்கள் கிஞ்சித்தும் கவலைப்படவில்லை! மாறாக தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் உயரிய மனிதாபிமானப் பணிகளை இயலுமான வரையில் தடை செய்வதே இவர்களது முழுநேரப் பணியாக இருந்தது. அங்கே தமிழர் தாயகத்தில் எமது உடன்பிறப்புக்கள் சொந்தம் இழந்து சொத்து இழந்து உடுக்க உடையின்றி உறைவிடம் எதுவும் இல்லாமல் பரிதவித்துக்கொண்டிருக்கையில் இந்தக் கதிர்காமக் கனவான்கள் எமது மக்களின் கதறல்கள் கூட வெளிவரக்கூடாது என்று அவர்களின் குரல் வளைகளை நெரிக்கின்ற பணியில் ஈடுபட்டார்கள். இவர்களுடைய இந்தப்பணியில் அவுஸ்திரேலிய நாட்டுக் கதிர்காமக் கனவான்களே உலகில் முதலிடம் பெற்றார்கள். சிறிலங்கா அரசின் பரிசில்கள் மேலும் மேலும் அவர்களுக்கு கிட்டுமோ யார் அறிவார்?

சிங்கள பௌத்த பேரினவாதச் சக்திகள் உலகலாவிய வகையில் ஒரு விடயத்தில் அதிக கவனம் எடுத்துக் கொண்டன. தமிழர் புனர் வாழ்வுக் கழகத்திற்கு நிதி எதுவும் போய்ச் சேர்ந்து விடக் கூடாது என்பதற்காக பல விஷமத்தனமான கீழ்தரமான பிரச்சாரங்களை இச்சிங்கள அமைப்புக்கள் செய்தன. சுனாமி போன்ற இயற்கை அனர்த்தங்கள், தமிழ் மக்களுக்குத் தந்த அவலங்கள் கூட இக் கல்நெஞ்சக்காரர்களுக்கு போதவில்லை போலும். இருபது ஆண்டு அரச பயங்கரவாதப் போர்களினால் தமிழ் மக்கள் அடைந்திட்ட அவலநிலை சுனாமி நிவாரணநிதியால் மாறிவிடுமோ என்று கூட அஞ்சினார்கள் போலும் இந்த உத்தமர்கள்!

ஒருபுறம் சிறிலங்கா அரசானது போதிய நிவாரணத்தை தமிழ்ப் பிரதேசங்களுக்கு அனுப்பாமலும், பலவற்றைப் பாதிக்கப்படாத சிங்கள பிரதேசங்களுக்கு அனுப்பியும் தனது அராஜகத்தை நடாத்தியதை உலக ஊடகவியலாளர்கள் உலகிற்கு வெளிக்கொண்டு வந்தார்கள். அதன் இன்னொரு பக்க விளைவாக ஐக்கியநாடுகள் சபையின் செயலாளர் நாயகமான திரு கோபி அனன் அவர்கள் தமிழரின் தாயகப்பகுதிகளுக்குச் செல்வதற்கு சந்திரிக்கா அரசானது இராஜதந்திர ரீதியில் தடையை விதித்து தமிழ் மக்களை ஏமாற்றக் கடலில் மீண்டும் தள்ளியது.

மறுபுறமோ புலம் பெயர்ந்த நாடுகளில் சிங்கள-பௌத்த பேரினவாத சக்திகளும் கதிர்காமக் கனவான்களும் கைகோர்த்துக் கொண்டு தமிழினத்திற்கான நிவாரணநிதிகளுக்கு ஆப்பு வைக்கும் வேலைகளில் இறங்கினார்கள்.

இவையெல்லாம் போதாதென்று தமிழ் மக்கள் மீது யுத்தம் ஒன்றை வலிந்து திணிக்கின்ற முயற்சியிலும் சிறிலங்கா அரசு இறங்கியது. சமாதானத்திற்கான காலத்தில் அரசியல் பணிகளில் ஈடுபட்டு, சுனாமியின் கோரதாண்டவத்தில் சிக்குண்டு அல்லல்படுகின்ற எமது மக்களுக்கான நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வந்தவருமான மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களின் அரசியல்துறைப் பொறுப்பாளருமான லெப்டினட் கேணல் கௌசல்யனைக் குறிவைத்து கொலை செய்தது. சிறிலங்கா இராணுவம். இந்தப் படுகொலைச் சம்பவத்தில் லெப்டினட் கேணல் கௌசல்யனுடன் மேஜர் புகழன், மேஜர் செந்தமிழ், இரண்டாம் லெப்டினட் விதிமாறன் ஆகியோரும் வீரச்சாவை தழுவிக்கொண்டனர். இச்சம்பவத்தில் காயமுற்றுப்பின் உயிரிழந்த முன்னாள் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மனித உரிமை ஆய்வாளருமான திரு சந்திரநேரு அரியநாயகம் அவர்களின் மகத்தான பணிகளைப் பாராட்டி போற்றி அவரை தமிழீழத்தின் மாமனிதராக தேசியத் தலைவர் அவர்கள் கௌரவித்தார். சமாதானத்திற்கான அதி உயர் விலையை அதிஉயர் தியாகங்களை, விடுதலைப்புலிகள் இயக்கம் இந்தச் சமாதானத்திற்கான காலத்திலும் கொடுத்து வருகின்றது என்ற கூற்றுமிகச் சரியானதாகும்.

அன்புக்குரிய நேயர்களே! கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலான காலத்தில் தமிழ்த் தேசிய இனம் பட்ட இன்னல்களுக்கும், கண்ட ஏமாற்றங்களுக்கும் அளவு கணக்கில்லை. குறிப்பாக இரண்டு தசாப்த காலத்திற்கும் மேலாக தமிழினத்தின் மீது சிங்களஅரசுகள் மேற்கொண்ட அரச பயங்கரவாதப் போர்கள் காரணமாக தமிழர் தாயகம் எதிர்கொண்ட இழப்புகளுக்கும், அவலங்களுக்கும் அளவுகணக்கில்ல. அதுமட்டுமல்ல சமாதானக்காலம் என்று சொல்லி கடந்த மூன்றாண்டுகளில் ஏற்பட்டுள்ள போர் ஓய்வுக் காலத்திற்கான புரிந்துணர்வுக்கான சமாதானத்திற்கான அறுவடையை தமிழர் தாயகம் மட்டும் பெற்றுக் கொள்ளவில்லை. இந்த வேளையில் சுனாமி ஆழிப்பேரலை காரணமாக தமிழர் தேசம் கண்ட அழிவுகளில் இருந்தும் அனர்த்தங்களில் இருந்தும் மீள்பட்டு எழுந்து வருவதற்கும் சிங்கள பேரினவாதம் விடுவதாக இல்லை.

தமிழீழத் தேசியத்தலைவர் இந்த இயற்கை அனர்த்தத்தை இரண்டாவது சுனாமி என்று மிகத் தெளிவாக அன்று கூறியிருந்தார். இப்போது இந்தப்பிணம் தின்னிக்கழுகுகள் வழங்குகின்ற மூன்றாவது சுனாமியையும் நாங்கள் காண்கின்றோம்.

அன்புக்குரிய நேயர்களே! யதார்த்த நிலையைப் புலம் பெயர்ந்த தமிழர்களாகிய நாம் புரிந்து கொள்ள வேண்டிய நிலை வந்தாகி விட்டது என்றே நாம் கருதுகின்றோம். தமிழீழ விடுதலைப்புலிகள் இன்று இராணுவ ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பலம்பெற்ற ஒரு சக்தியாக மட்டுமல்லாது தமிழீழ மக்களின் ஏகப்பிரதிநிதிகளாக ஜனநாயக ரீதியிலும் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளவர்களாகவும் திகழ்கிறார்கள். தமிழர் தாயகத்தையும், தமிழினத்தையும் காப்பார் வேண்டிய தார்மீகக் கடமை அவர்களுக்கு உண்டு. எனவே இந்த நெருக்கடியான அரசியல் - இராணுவ காலகட்டத்தில் தீர்க்கமான இறுக்கமான முடிவுகள் தமிழின நலன் கருதி எடுக்க வேண்டிய கடமையும், கடப்பாடும் அவர்களுக்கு உண்டு. இப்படிப்பட்ட நிலையில் முன் எப்போதையும் விட இப்போது தலைமையின் கரத்தை பலப்படுத்த வேண்டிய கடமையும் -உரிமையும் எமக்குண்டு. அதனைச் செவ்வனே செய்வோம். அதனைச் செய்வதன் மூலம் இந்தப் பிணம் தின்னிக் கழுகுகளை அவர்களது மூன்றாவது சுனாமியே அடித்துச் செல்லட்டும்!

பாதகஞ் செய்வாரைக் கண்டால்-நாம்
பயங்கொள்ளல் ஆகாது பாப்பா
மோதி மிதித்து விடு பாப்பா-அவர்
முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா.

என்ற பாரதியாரின் பாடல் கூட நம்மை வழிகாட்டக் காத்திருக்கின்றது.

தமிழ்நாதம்


- Mathan - 02-23-2005

அழுத்தம் பிரயோகிக்கப்படுமா?


சுனாமி பேரனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விடயத்தில் சிறிலங்காவுக்கு உலக நாடுகள் மூன்று விடயங்களை முக்கியமாகத் தெரிவித்து வருகின்றன. ஒன்று வடக்கு-கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களிற்கு உதவுவதில் புலிகளுடன் இணைந்து செயற்படுவதற்கான ஒரு பொறிமுறையை உருவாக்குதல் வேண்டுமென்பது. இரண்டாவது இந்த அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அளவு உதவியை வழங்க அவை தயாராக இருக்கின்றன என்பது. மூன்றாவது. வழங்கப்படும் நிதி உரியவர்களுக்குச் சென்றடைய வேண்டும். அல்லாவிடின் இந்த நிதியுதவி நிறுத்தப்படுமென்பது. இந்த விடயங்களை சிறிலங்காவுக்கு உதவி வழங்கும் நாடுகளும்ää சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ விரும்பும் மனிதநேய அமைப்புக்களும் வலியுறுத்தத் தவறவில்லை.

இவற்றையே கொழும்பிற்கு விஜயம் செய்த முன்னாள் அமெரிக்க சனாதிபதிகளான பில்கிளின்டன்ää ஜோர்ஜ் புஷ் ஆகியோரும் வலியுறுத்தியிருக்கின்றனர்.

ஆனால் இவ்விடயங்களில் கவனம் செலுத்துவதற்கு சிறிலங்கா சனாதிபதி சந்திரிகா இதுவரை காலமும் எந்த முயற்சிகளையும் எடுக்கவில்லை என்றே கூறலாம். வடக்கு-கிழக்கு மாகாணங்களில் சுனாமியால் பாதிப்புற்ற மக்களிற்குதவ புலிகளுடன் இணைந்து செயற்படுவதற்கான பொறிமுறையை உருவாக்குவதில் சிறிலங்கா அரசாங்கம் பெரிய உற்சாகம் காட்டுவதாக இல்லை. தனது அரசியல் இலாபம் கருதி தம்முடன் இணைந்து செயற்பட புலிகள் முன்வந்திருக்கிறார்கள் என்று சனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அடிக்கடி கூறி வருகின்றாரே தவிர புலிகளை இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை அவர் மேற்கொள்வதாகத் தெரியவில்லை. ஆரம்பத்தில் அரசாங்கத்தினதும் விடுதலைப்புலிகளினதும் சமாதானச் செயலகங்கள் இம்முயற்சியில் ஈடுபட்டு வந்தபோதும் அது வெற்றியைத் தரவில்லை.

சுனாமிப் பேரனர்த்தம் ஏற்பட்டு இரண்டு மாதங்களை நெருங்கிக் கொண்டிருக்கின்றது. இதில் பாதிக்கப்பட்ட மக்களில் பெரும்பாலானோர் குடியிருப்புகள்ää உடமைகள் தொழில் உபகரணங்கள் அனைத்தையுமே பறிகொடுத்து நிற்கின்றனர். இவர்களுக்கான நிவாரண நடவடிக்கைகளில் ஏற்படும் தாமதம் அம்மக்களை விரக்தி நிலைக்குத் தள்ளத்தக்கதாகும். மேலும் புனர்நிர்மாணப் பணிகளை ஆரம்பித்தால்கூட அப்பணிகள் முடிவடைய நீண்ட காலம் எடுக்கக்கூடுமெனவும்ää இதற்கு ஆளணி வளப்பற்றாக்குறை முக்கிய தடையாக இருக்குமென்றும் கூறப்படுகிறது. இந்நிலையில்ää பணிகளை ஆரம்பிப்பதிலேயே தாமதம் ஏற்படுவது மேலும் மோசமான பாதிப்புக்களை விளைவிக்கும்.

இரண்டாவதாகää சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் தமது வாழ் நிலைக்குத் திரும்ப உதவி புரிய உலக நாடுகளும் பல்வேறு அமைப்புக்களும் தயாராக உள்ள நிலையில் அரச இயந்திரத்தின் நடவடிக்கைகள் இதற்கு முட்டுக்கட்டையாக உள்ளன.

சிறிலங்கா அரச இயந்திரத்தின் செயற்திறன் மிகக் குறைந்ததாகும். அத்துடன் ஊழலும்ää மோசடிகளும் நிறைந்தது என்ற குற்றச்சாட்டு பல தரப்பாலும் முன்வைக்கப்பட்டிருக்கிறது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்பிலேயே சிறிலங்காவின் அரச இயந்திரம் முரண்பாடான புள்ளி விபரங்களை வழங்கியது.

சிறிலங்கா அரசாங்கம் செயற்திறன் குறைந்ததெனவும் அதனுடன் பணியாற்றுவது மிகவும் கடினமானதெனவும் சுனாமி அனர்த்தத்தின் முன்பதாகவே பல வெளிநாட்டு அரசசார்பற்ற நிறுவனங்களும் சர்வதேச நிதி நிறுவனங்களும் கூடச் சுட்டிக்காட்டியதுண்டு.

இதேவேளை சிறிலங்கா அரசில் அரசியல்வாதிகளில் இருந்து அதிகாரிகள் வரையில் ஊழல் மோசடியில் திளைத்தவர்கள் என்பதும் உலகறிந்ததொன்று. எடுத்துக்காட்டாக அண்மையில் தென்மாகாணத்தில் மாகாணசபை அமைச்சர் ஒருவரின் உத்தியோகபூர்வ வாகனத்தில் சுனாமி நிவாரணப் பொருட்கள் கடத்தப்பட்டதை படங்களுடன் ஒரு பத்திரிகை வெளியிட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. அடுத்ததாக தமிழர் தாயகப் பகுதியில் சுனாமியினால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணப் பொருட்களை உரிய முறையில் சம அளவில் பங்கிட்டு அளிக்க அரசாங்கம் இன்னமும் தயாராக இல்லை. அரசாங்கத்தின் கையில் பெரும் தொகை நிவாரண நிதி இருக்கின்றபோதும் அவற்றைப் பகிர்ந்தளிக்கவோ அன்றித் தமிழர் பகுதி புனர்நிர்மாணத்திற்குப் பயன்படுத்தவோ அரசாங்கம் தயாராக இல்லை. மறுவளமாக அரசு தமிழர் தாயகத்தின் அழிவுகளை உலகின் கண்களிலிருந்து மறைத்து விடவே அக்கறை காட்டுகிறது.

இந்த வகையில் சிறிலங்காவிற்கு உதவும் சர்வதேச நாடுகளின் எதிர்பார்க்கைகள் எதனையும் அரசாங்கம் கவனத்திற்குட்படுத்தியதாக இல்லை. ஏதோ ஒரு விதத்தில் தட்டிக்கழித்து விடவே அது விரும்புகின்றது. இந்நிலையில் உதவி வழங்கும் சர்வதேச நாடுகள் சிறிலங்கா அரசின் நடவடிக்கையில் திருப்தி கொள்ள வாய்ப்புக்கள் இல்லை. ஆனால் இதனை அடிப்படையாகக் கொண்டு இவ்உதவி வழங்கும் நாடுகள் எந்தளவிற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகின்றன என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்க்கையாகும். அதாவது உதவி வழங்கும் நாடுகளும் தமது அபிலாசைகளைத்துறந்து சிறிலங்கா அரசின் மீது அழுத்தத்தைப் பிரயோகிக்க முற்படுமா? என்பதே தமிழ் மக்களின் முன்னுள்ள கேள்வியாகவுள்ளது.


நன்றி: ஈழநாதம்


- vasisutha - 02-24-2005

கட்டுரைக்கு நன்றி மதன்..


- Mathan - 02-24-2005

புரிந்துணர்வு ஒப்பந்தம் தந்த 'புரிந்துணர்வு" என்ன?

இந்த பெப்ரவரி 22ம் திகதியுடன் சிறிலங்கா அரசிற்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான, யுத்த நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு மூன்று ஆண்டுகள் முழுமையடைகின்றன. புரிந்துணர்வு ஒப்பந்தம் என்று அழைக்கப்படுகின்ற இந்த யுத்தநிறுத்த ஒப்பந்தம் இந்த மூன்றாண்டு காலத்தில் தமிழீழ மக்களுக்கு தந்தது என்ன? அல்லது வெளிப்படுத்தியதுதான் என்ன? என்பது குறித்துத் தர்க்கிப்பது இவ்வேளையில் பொருத்தமானதாக இருக்கும் என்று நம்புகின்றோம்.

நீண்ட ஆலோசனைகளுக்கும் கருத்துப் பரிமாற்றங்களுக்குப் பின்னர் மிகக் கவனமாகத் தயாரிக்கப்பட்ட இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒப்புக்கொண்ட வெளிப்படுத்திய கருத்துக்கள் குறித்து நாம் முதலில் கவனம் செலுத்த விரும்புகின்றோம்.

அதனூடே எழுத்து வடிவத்திற்கும் யதார்த்த நிலைக்கும் உள்ள ஒற்றுமையையும,; முரண்பாட்டையும் நோக்குவது தெளிவினைத் தரக்கூடும்.

இந்த யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் முன்னுரையில் உள்ள முதல் பந்தி கீழ்வருமாறு கூறுகின்றது:-

'இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இனத்துவ முரண்பாட்டிற்கு பேச்சுவார்த்தை மூலமான தீர்வு ஒன்றைக் காண்பதே சிறிலங்கா ஜனநாயக சோசலிசக் குடியரசினதும் (புழுளுடு) தமிழீழ விடுதலைப் புலிகளினதும் (டுவுவுநு) ஒட்டு மொத்தமான நோக்கமாகும்."

இந்தப்பந்தியில் எடுத்தாளப்பட்டிருக்கும் சொல்லாக்கமான:- நடைபெற்றுக்கொண்டிருக்கும், இனத்துவ முரண்பாடு|, பேச்சுவார்த்தை|, தீர்வு|, ஒட்டுமொத்தமான நோக்கு| - என்பனவற்றின் கருத்துக்களை முதலில் கவனிப்போம்.

இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இனத்துவ முரண்பாட்டிற்கு- என்ற சொல்லாக்கம் இரண்டு விடயங்களை ஏற்றுக்கொண்டு அவற்றைச் சுட்டிக் காட்டுகின்றது. இலங்கைத்தீவிலே இனத்துவ முரண்பாடு என்று ஒரு பிரச்சனை இருக்கின்றது என்பதையும் அது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என்பதையும் மூன்றாண்டுகளுக்கு முன்னர் கைச்சாத்திடப்பட்ட இவ் ஒப்பந்தம் ஏற்றுக் கொண்டுள்ளது. ஆகவே சில தரப்பின் கூறுகின்ற கூறி வருகின்ற பிரச்சனை எதுவும் இல்லை| என்ற கூற்றானது இந்த ஒப்பந்த முன்னுரையின் முதல் பந்தியின் முதல் வரியிலேயே அடிபட்டுப் போகின்றது.

அடுத்த சொல்லாக்கமான ~பேச்சுவார்த்தை மூலமான தீர்வு| என்பதைக் கவனிப்போம். இவை இரண்டு முக்கிய விடயங்களை வலியறுத்துகின்றன. அதாவது இந்த ~இனத்துவ முரண்பாட்டிற்கு| ஒரு தீர்வு காணப்பட வேண்டும் என்பதையும் அது பேச்சுவார்த்தை மூலமாகக் காணப்பட வேண்டும் என்பதையும் இச்சொல்லாக்கங்கள் முக்கியத்துவம் கொடுத்திருப்பதை இங்கு நாம் காண்கின்றோம். இதற்கு வலுச்சேர்க்கும் வகையில் இப்பந்தியின் கடைசிச் சொற்களான-| (இதுவே) ஒட்டு மொத்தமான நோக்கமாகும்| என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. அந்த முதல் பந்தியினை இப்பொழுது மீண்டும் வாசித்தால் ஒரு தெளிவான பார்வை தென்படலாம்.

'இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இனத்துவ முரண்பாட்டிற்கு, பேச்சுவார்த்தை மூலமான தீர்வு ஒன்றைக் காண்பதே சிறிலங்கா ஜனநாயக சோசலிசக் குடியரசினதும் (GOSL), தமிழீழ விடுதலைப்புலிகளினதும் (LTTE) ஒட்டுமொத்தமான நோக்கமாகும்.

இதனை அடுத்து அடுத்த பந்தியில் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேலுமொரு முக்கிய விடயத்தைச் சுட்டிக்காட்டுகின்றது. அதனை இப்போது பார்ப்போம்.

'சிறிலங்கா அரசும் விடுதலைப்புலிகளும் பகைமைக்கு முடிவைக்கொண்டு வந்து மோதலினால் பாதிக்கப்பட்ட அனைத்து குடிமக்களினதும் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை இனங்கண்டுள்ளனர்.|

இந்தச்சொல்லாக்கங்கள் மேலும் சில விடயங்களை ஏற்றுக்கொண்டுள்ளன. அவை வருமாறு:-

1. 'மோதலினால் குடிமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.|

2. 'அவர்களுடைய வாழ்க்கை நிலையை மேம்படுத்த வேண்டும்.|

3. மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்த வேண்டியது ஒரு முக்கியமான விடயமாகும்.
4. இந்த முக்கியத்துவத்தை இருதரப்பினரும் (அதாவது சிறிலங்கா அரசும், தமிழீழ விடுதலைப்புலிகளும்) இனங் கண்டுள்ளார்கள்.

5. மோதலினால் பாதிக்கப்பட்ட குடிமக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதற்கு முதலில் பகைமைக்கு முடிவைக் கொண்டு வரவேண்டும்.

ஆனால் இந்த மூன்று ஆண்டுகளில் பகைமைக்கு முடிவு கொண்டு வரும் முயற்சிகளை சிறிலங்கா அரசு எவ்வாறு மேற்கொண்டது என்பது குறித்து இரண்டு கருத்துக்களுக்கு இடமிருக்க முடியாது. கடந்த மூன்று ஆண்டுகளில் சமாதானத்திற்காக, விடுதலைப்புலிகள் கொடுத்த கொடுத்து வருகின்ற விலை அளப்பரியது, என்பதைக் கடந்த காலச் சம்பவங்களே எடுத்துக் கூறும்.!

சர்வதேசக் கடற்பரப்பில் வைத்து, விடுதலைப் புலிகளின் வணிகக் கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டதோடு அதில் பணியாற்றிய விடுதலைப்புலிகள் கொல்லப்பட்ட சம்பவத்தையும், அண்மையில் படுகொலை செய்யப்பட்ட மட்டு-அம்பாறை அரசியல் துறைப்பொறுப்பாளருமான லெப்டினட். கேர்ணல் கௌசல்யன் மற்றும் சகபோராளிகளினதும் மாமனிதர் சந்திரநேருவினதும் ஈடுசெய்ய முடியாத இழப்புக்களையும் உதாரணத்திற்காக நாம் இங்கே சுட்டிக்காட்ட முடியும்! அது மட்டுமல்ல, கருணா போன்ற துரோகச் சக்திகளை இன்றும் ஒரு முகமூடியாக உபயோகித்து அதன்மூலம் இந்த யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை உடைத்தெறியும் செயல்களில் சிறிலங்கா அரசு ஈடுபட்டு வருவதை நாம் அனைவரும் அறிவோம்! இங்கே நாம் சுட்டிக்காட்டியவை உதாரணத்திற்காகத்தான்! பட்டியல் இட்டால் அது பல பக்கங்களுக்கு வரும்.!

இச்சம்பவங்கள் இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் பல தடவைகள் மீறியுள்ளதைக் காட்டுகின்றன. எடுத்துக் காட்டாகச் சில விடயங்களை நாம் இங்கே தர்க்கிக்க விரும்புகின்றோம். சர்வதேச கடற்பரப்பில் விடுதலைப்புலிகளின் வணிகக் கப்பல்கள் மீது சிறிலங்காக் கடற்படையினர் மேற்கொண்ட தாக்குதல், புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் சரத்துக்கள் 1.2 மற்றும் 1.2 ஊ ஆகியவற்றிற்கு முரண்பட்டவையாகும். கௌசல்யன் மற்றும் சக போராளிகளின் படுகொலைகள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் 1.2 மற்றும் 1.13 ஆகிய சரத்துக்களை மீறிய செயல்களாகும்.

அது மட்டுமல்ல இயல்பு நிலையை மீளக்கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை விபரிக்கின்ற சரத்து இரண்டின் பல பிரிவுகளை சிறிலங்கா அரசு மீறியே வந்துள்ளது. ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பாடசாலைக் கட்டிடங்கள் வணக்கத்துக்குரிய தலங்கள், பொதுச்சேவைக்கான கட்டிடங்களை விட்டு சிறிலங்கா ராணுவம் இன்னும் விலகாமல் இருப்பது புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் சரத்துக்கள் 2.2, 2.3, 2.4 ஆகியவையை மீறிய விடயங்களாகும்.

இந்த விடயங்களை எமது கருத்தில் வைத்துக் கொண்டு தற்போதைய அரசியல் நிலவரங்களைத் தர்க்கிப்பது பொருத்தமாக இருக்கும் என்று எண்ணுகின்றோம்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய போராளிகள் பிரமுகர்களைப் படுகொலை செய்வதிலும், கருணா போன்றவர்களை முன்னிறுத்திப் பிரதேசவாதத்தைத் தூண்டி விடுவதிலும், விடுதலைப்புலிகளின் வணிகக் கப்பல்களை அழிப்பதிலும் சிறிலங்கா அரசும் அதன் பாதுகாப்பு படையினரும் ஈடுபட்டு வருவதானது புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் எதிர்பார்ப்பான பகைமைக்கு முடிவைக் கொண்டு வருவதற்கு எதிரான செயற்பாட்டாகும்.

இதில் ஒரு கருத்தை வித்தியாசமான கோணத்தில் தர்க்கிக்க விழைகின்றோம்.

புரிந்துணர்வு ஒப்பந்தம் பகைமைக்கு முடிவைக் கொண்டு வரவேண்டும் என்று கூறுகின்றது. அதற்கான அடிப்படைக் காரணம் என்ன? அந்தக்காரணத்தை புரிந்துணர்வு ஒப்பந்தம் கீழ்வருமாறு கூறுகின்றது.

'மோதலினால் பாதிக்கப்பட்ட அனைத்துக் குடிமக்களினதும் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதற்காக பகைமைக்கு முடிவைக் கொண்டு வரவேண்டும்."

ஆகவே சிறிலங்கா அரசும் அதன் படைகளும் பகைமைக்கு முடிவைக் கொண்டுவர விரும்பாததன் காரணம்-அடிப்படைக்காரணம்-மோதலினால் பாதிக்கப்பட்ட மக்களது வாழ்க்கை நிலை மேம்படுத்தப்படக் கூடாது என்ற எண்ணம் தான் என்பது இங்கே நிரூபிக்கப்படுகின்றது.

இந்தத் தர்க்கங்களைப் பின்புலமாக வைத்துக் கொண்டு மற்றைய அரசியல் நிகழ்வுகள் குறித்துச் சிந்திப்போம். சிறிலங்கா அரசும் அதன் படைகளும் பகைமைக்கு முடிவைக் கொண்டு வர விரும்பாது -இத்தனை யுத்த நிறுத்த மீறல்களையும் நடாத்திய போதும் கூட விடுதலைப்புலிகள் சமாதானப் பேச்சுக்களையோ அல்லது புரிந்துணர்வு ஒப்பந்தத்தையோ முறித்துக் கொள்ளவில்லை. காரணம் நாம் முன்னர் சுட்டிக் காட்டிய சொல்லாக்கமான-மோதலினால் பாதிக்கப்பட்ட அனைத்துக் குடிமக்களினதும் வாழ்க்கை நிலையை மேம்படுத்த வேண்டும் என்பதனை நிறைவேற்றுவதற்காகத்தான்.

அதற்காகத்தான் தமிழீழ விடுதலைப்புலிகள் ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தைகளிலும் பல ஆலோசனைக் கூட்டங்களிலும் கலந்து கொண்டார்கள். நாம் மேற்கூறிய பல யுத்த நிறுத்த மீறல்களை சிறிலங்காவின் அரச படைகள்-புரிந்து வந்தபோதும் பொறுமை காத்து வந்தார்கள் விடுதலைப்புலிகள். ஆனால் யப்பான் நாட்டில் நடைபெறவிருந்த பிரதான உதவி வழங்குவோர் மாநாட்டிற்குரிய ஆயத்தம் செய்வதற்கான-முன்னோடியான கூட்டம் அமெரிக்காவின் வொஷிங்டன் நகரில் இடம்பெற்ற போது அக்கூட்டத்திற்குத் தமிழீழ மக்களின் பிரதிநிதிகளான விடுதலைப்புலிகள் தவிர்க்கப்பட்ட போதுதான் இறுக்கமான முடிவொன்றை விடுதலைப்புலிகள் மேற்கொண்டார்கள். சமாதானப் பேச்சுவார்த்தைகளிலிருந்து தற்காலிகமாக விலகிக் கொண்டார்கள். எத்தனையோ இழப்புக்களையும் யுத்த நிறுத்த மீறல்களையும் சந்தித்த விடுதலைப்புலிகள் இந்த விடயத்தில் மட்டும் இறுக்கமான முடிவை எடுத்ததன் காரணம் என்ன?

ஏனென்றால் மோதலினால் பாதிக்கப்பட்ட எமது மக்களிது வழ்க்கை நிலையை மேம்படுத்துவதற்கான அக்கறை எதுவும் சிறிலங்கா அரசிற்கும் சம்பந்தப்பட்ட சில நாடுகளுக்கும் இல்லை - என்பது வெளிப்படையாகவே நிரூபணம் ஆகியதுதான் காரணம். அதற்கு எதிரான அரசியல் அழுத்தத்தை சம்பந்தப்பட்டவர்களுக்கு விடுதலைப்புலிகள் கொடுக்கத் தயங்கவில்லை.

இதற்குப் பின்னர் தமிழீழ விடுதலைப்புலிகள் வழங்கிய இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைக்குரிய திட்ட வரைவும் பலத்த எதிர்ப்புக்களைக் கண்டது. இன்றைய தினத்தில் இந்த இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபையானது நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் சுனாமி அனர்த்தங்களுக்கான நிவாரணப்பணிகள் எவ்வளவு எளிதாகவும் விரைவாகவும் சிறப்பாகவும் செயல்படுத்தபட்டிருக்கும் என்பதனை எண்ணிப்பார்க்காமல் இருக்க முடியவில்லை.

இரண்டு தசாப்த காலத்திற்கும் மேலாக, அரச பயங்கரவாதப்போருக்கு முகம் கொடுத்து, அல்லல்பட்ட எமது மக்களின் நாளாந்த வாழ்வியல் பிரச்சனைக்கும் தேசியப்பிரச்சனைக்கும் ஒரு நியாயமான தீ;ர்வு பேச்சு வார்த்தைகளின் ஊடே கிட்டவேண்டும் என்பதற்காக இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கப்பட்டது. ஆனல் போரினால் விளைந்த அழிவுகள் குறித்து எவ்வளவு அலட்சியத்தை சிறிலங்கா அரசு தமிழ் மக்களுக்கு காட்டியதோ அதே அளவு அலட்சியத்தை சுனாமி ஆழிப்பேரலை இயற்கை அழிவின் போதும் காட்டுவதை நாம் கண்கூடாக பார்க்கின்றோம்.

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் திரு கோபி அன்னன் அவர்கள் சுனாமி அனத்தங்களைப் பார்வையிடும் போது அவரைத் தமிழிர் தாயகப் பகுதிகளுக்குச் செல்லவிடாமல் இருப்பதற்காக இராஜதந்திர அழுத்தங்களை சிறிலங்கா அரசு பிரயோகித்ததை நாம் அறிவோம். இவ்வேளையில் ஒரு விடயத்தை நேயர்களின் ஞாபகத்திற்குக் கொண்டுவர விரும்புகின்றோம்.

1995ம் ஆண்டு ஐந்து இலட்சம் தமிழ் மக்கள் ஓர் இரவிலேயே அகதிகளாகி குடாநாட்டை விட்டு வெளியேறியபோது உலக நாடுகள் சார்பாக எமது மக்களுக்காக ஒரு குரல் உரக்க ஒலித்தது. தமிழ் மக்களுக்கு மனிதாபிமான முறையில்- உதவிகளைச் செய்ய வேண்டும-என்று எழுந்த குரலுக்குச் சொந்தக்காரன் ஐக்கியநாடுகள் சபையின் அன்றைய பொதுச்செயலாளரான திரு பூட்டஸ்-பூட்டஸ் காலி அவர்கள். அந்தச்சமயம் திரு பூட்டஸ் காலி அவர்களை மிக வன்மையாகக் கண்டித்தவர் சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சரான திரு லக்ஷ்மண் கதிர்காமர் ஆவர். அதேபோன்று இன்று கௌசல்யன் முதலானோரின் படுகொலைகளைக் கண்டித்து ஐக்கிய நாடுகள் சபையின் இன்றைய செயலாளரான திரு கோபி அன்னன் கண்டனம் தெரிவித்தபோது திரு லக்ஷ்மண் கதிர்காமர் அவர்கள் மீண்டும் தனது ஆட்சேபத்தை தெரிவிக்க மறக்கவில்லை. கதிர்காமர் அவர்களின் புரிந்துணர்வு, சந்திரிக்கா அம்மையாரின் புரிந்துணர்வு, சிறிலங்கா பாதுகாப்புப்படையினரின் புரிந்துணர்வு, சிங்கள பௌத்த பேரினவாதிகளின் புரிந்துணர்வு -இவையெல்லாம் எப்படியானவை என்பதையாவது இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் வெளிக்கொண்டு வந்திருப்பதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

அரச பயங்கரவாத அனர்த்தங்களையும் இயற்கை தந்த அனர்த்தங்களையும் எமது மக்கள் எதிர் கொண்டுள்ள வேளையில் எமது மக்களுக்கு இயல்பான வாழ்க்கை நிலை திரும்பி அவர்களுடைய வாழ்க்கை நிலை மேம்படவேண்டும் என்பதற்காகவும் எமது மக்களுடைய தேசியப்பிரச்சனைக்கு நியாயமான நிரந்தரமான தீர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் தமிழீழத் தேசியத் தலைவர் அரசியல் ரீதியாகக் காய்களை நகர்த்திக் கொண்டிருக்கும் வேளை இது. புரிந்துணர்வு ஒப்பந்தம் மூன்றாண்டுகளை நிறைவு செய்கின்ற இவ்வேளையில் இவையாவற்றையும் நெஞ்சில் நிறுத்தித் தலைமையின் கரங்களை பலப்டுத்துவோமாக.

தமிழ்நாதம்


- Mathan - 02-27-2005

இடையூறு விளைவிக்கும் படையினர்!

போர்நடவடிக்கைகள் மூலமோ அல்லது அண்மையில் ஏற்ப்பட்ட ஆழிவுப்பேரலை அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் என்றாலும், மீள்கட்டுமானம் என்றாலும் அவற்றைத் துரிதகதியில் முன்னெடுத்துவருகின்ற பெருமை தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தையே சாரும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் செயற்ப்பாடுகளை தமிழ்மக்களும், சகோதர இன மக்களும், பொது அமைப்புக்களும் பாரட்டி வருகின்றமை யாவரும் அறிந்த விடயம். இவ் அமைப்பின் மீது ஸ்ரீவங்கா படையினரும், அவர்கள் சார்ந்த அடிவருடிகளும் திட்டமிட்டு பல்வேறு அத்து மீறல்களையும், நெருக்கடிகளையும் கொடுத்து வருகின்றனர்.

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் துரிதகதியில் மீட்புர் பணிகளும், நிவராண நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன அல்லது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்றால் அது ஒரு ஒழுங்கான திட்டமிடலில் தமிழர் புனர்வாழ்வு கழகம் மேற்கொண்டு வருகின்ற அளப்பரிய பணியாகவே காணப்படுகின்றது.

யாழ்குடநாட்டிலும், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலும் இவ்வாறான புனர்வாழ்வுப் பணிகளை தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினர் மேற்கொண்டு வருகின்ற போது அவற்றை உரிய முறையில் முன்னெடுப்பதற்கு பெரும் முட்டுக்கட்டையாக ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ள ஸ்ரீலங்கா படையினர் இவற்றைத் தடுத்து நிறுத்துவதும், தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினரின் செயற்ப்பாடுகளை முறியடித்துவரும் செயற்ப்பாடுகளில் தொடர்ந்தும் ஈடுபட்டுவருகின்நறனர். இவற்றுக்கு மத்தியில் தமிழர் புனர்வாழ்வுக் கழகமானது பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதுவும் இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தற்காலிக குடியிருப்பு நிலங்களை தெரிவு செய்வதில் இருந்து மக்களை தற்காலிமாக குடியமர்த்துவதிலும், அவர்களுக்கான மருத்துவ வசதி, கல்வி வசதி அனைத்தையும் நன்கு திட்டமிட்டு உரியமுறையில் நடைமுறைப்படுத்தி வருகின்றது. இராணுவ ஆக்கிரப்புப் பகுதிகளில் மனிதாபிமானப் பணிகளை மேற்கொண்டுவருகின்ற தமிழர் புனர்வாழ்வுக் கழகப்பணியாளர்களை தடுத்து நிறுத்துதல், அவர்கள் மீது அடாவடித்தனங்களை மேற்கொள்ளுதல், அவர்கள் மூலமாக எடுத்துச் செல்கின்ற நிவாரணப்பொருட்களை பறிமுதல் செய்து படையினர் தாம் மக்களுக்கு விநியோகித்து மக்கள் மனங்களை வெல்ல முனைதல், மீட்புப் பணியாயர்களையும் தாக்குகின்ற செயற்பாடுகளில் ஈடுபட்டும் வருகின்றனர்.

குறிப்பாக அம்பாறையில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் செல்வாக்கு அதிகரித்ததுடன் மக்கள் மனங்களையும் வென்ற நிலையில் ஸ்ரீலங்கா படையின் சிறப்பு அதிரடிப் படையினரின் கெடுபிடிகள் அதிகரித்துள்ளது. அதாவது திருக்கோயில் பகுதியில் செயலணிச் செயலகம் திறக்கப்பட்டு நிவாரணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது சகலவற்றையும் படையினர் மறித்து கூட்டு விசேட அதிரடிப்படையினர் உதவிகளை மேற்கொண்டு கிராம அலுவலர்களையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அவர்கள் மூலம் மக்கள் மனங்களை வெல்லுவதற்கு முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதைவிட தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் கீழ் உள்ள ஒரு கட்டமைப்பு மனித நேய கண்ணிவெடியகற்றும் பிரிவு இக்கட்டமைப்பு விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியில் இவ்வமைப்பு துரித கதியில் தமது பணிகளை முன்னெடுத்துச் செல்லுவதுடன் மீள் குடியமர்வுக்கான வெடிபொருள் அகற்றப்பட்ட பிரதேசங்களை உறுதி செய்து மக்களிடம் கையளிக்கின்றது.

ஆனால் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உயர்பாதுகாப்பு வலயங்களாக இருந்து விடுபட்ட பகுதயில், அவற்றுக்கான வரைபடங்கள் (வெடிபொருடகள்) படையினர் கையில் இருந்தும் அந்தப்பகுதியில் எந்தப்பணியும் விரைவாக முன்னெடுக்கப்படவில்லை. அப்பகுதியில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் மனித நேய கண்ணிவெடி அகற்றும் பிரிவினர் சென்று பணிகளை மேற்கொள்ள அனுமதியினை வழங்க படையினர் மறுக்கின்றனர்.

நேரடியாகவே ஸ்ரீலங்கா இராணுவக்கட்டுப்பட்டுக்குள் உள்ள மக்கள் மனங்களை வெல்லும் ஒரு முனைப்பான செயற்பாடுகளில் ஸ்ரீலங்காப் படையினர் தொடர்ந்தும் ஈடுபட்டு வந்தாலும் தமிழ் மக்கள் மத்தியில் எதிர்ப்பையே சந்தித்து வருகின்றனர். அதாவது யாழ்ப்பாணத்தில் மனிதாபிமானப் பணிகளை மேற்கொள்வதாகக் கூறிக்கொண்டு மக்கள் மீது கெடுபிடிகளை மேற்கொண்டமை, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய பகுதிகளில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத் தொண்டர்கள் மீது படையினர் அடிக்கடி கெடுபிடிகளை மேற்கொள்ளுதல் போன்ற செயற்பாடுகள் மூலம் மக்களிடம் பெரும் எதிர்ப்புக்களை படையினர் சந்தித்து வருகின்றனர். இதை விட பாதிக்கப்பட்ட பகுதிகளை சென்று பார்வையிடுகின்ற பொது அமைப்புக்கள் மற்றும் சர்வதேச அமைப்புக்கள் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் செயற்பாடுகளை பாரட்டியுள்ளன இதனைப்பொறுக்கமுடியாத இனவாத சக்திகள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மனிதாபிமானப் பணிகளையும் உதவிநடவடிக்கைகளையும் மேற்கொள்ளாது அவர்களுக்கு கிடைக்கப் பெறுகின்ற உதவிகளை தடுத்து நிறுத்தியும் மனிதாபிமானமற்ற செயற்பாடுகளில் ஈடுபட்டும் வருகின்றனர்.

சு.பாஸ்கரன்/Eelanaatham


- Mathan - 02-28-2005

புலிகள் விமான படையால் இந்தியாவிற்கு ஆபத்தாம் - சிங்களவெறி கட்சி ஜே.வி.பி. சொல்கிறது

கொழும்பு, பிப். 28- புலிகள் விமானப்படையினால் இந்தியாவுக்கு ஆபத்து வரும் என்று சிங்கள கட்சியான ஜே.வி.பி. செய்தி தொடர்பாளர் கூறினார்.

விடுதலை புலிகள் அமைப்பில் ஏற்கனவே தரைப்படை, கடற்படை ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் விமான படையையும் விடுதலை புலிகள் உருவாக்கி இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இது குறித்து சிங்கள வெறி ஜே.வி.பி. கட்சி செய்தி தொடர்பாளர் விமல் வீரவன்சா சன்டே டைம்ஸ் என்ற பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது„-

விடுதலை புலிகள் விமான படையை அமைத்து உள்ளனர். இதனால் இந்தியாவிற்கு பேராபத்து ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது. இதை இந்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழர் பகுதியில் இடைக்கால நிர்வாகத்தை அமைத்து புலிகளுடன் அமைதி பேச்சு வார்த்தை நடத்துவதை நாங்கள் விரும்பவில்லை. அந்த தவறை இலங்கை அரசு செய்தால், அதை நாங்கள் வேடிக்கை பார்த்து கொண்டிருக்க மாட்டோம். இவ்வாறு கூறியுள்ளார்.

ஜே.வி.பி. கட்சி ஆதரவில்தான் அதிபர் சந்திரிகாவின் கட்சி இலங்கையில் ஆட்சி நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

தினகரன்