![]() |
|
Breaking News - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: Breaking News (/showthread.php?tid=7412) Pages:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
|
- KULAKADDAN - 02-02-2005 நன்றி மதன் ஈழநாதம் இணையத்திலுண்டா..... - Mathan - 02-02-2005 இல்லை என்றே நினைக்கிறன். இது சூரியனில் இருந்து - Mathan - 02-02-2005 நறுக்கென? ஆட்சியைக் குழப்பும் சுனாமி. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எந்தத் தேர்தலும் நடைபெறப்போவதில்லை என்ற சிறிலங்கா சனாதிபதியின் அதிரடி அறிவிப்பால் அதிகபட்சம் அதிர்ச்;சியடைந்து போயுள்ளார்கள். அவரது சகோதரரும், பிரதான பங்காளிகளும்தானாம்! ஏப்படியாவது சனாதிபதிக் கதிரையில் ஒரு தடைவ குந்திவிட்டாவது எழும்பும் நாற்காலிக் கனவில் ?சதாபோதையுடன்? மிதக்கும் அனுரா பண்டாரநாயக்க தனது சகோதரியின் இந்த அறிவிப்பால் சோர்ந்து துவண்டு தொளதொளத்துப் போயுள்ளாராம். ஏற்கனவே ஜே.வி.பியினருக்கும், சிறிலங்கா சுதந்திரக்கட்சியினருக்குமிடையே தேர்தல் கால கூட்டணி அமைக்க உடல் குலுங்க அனரா ஓடியோடி புரோக்கர் பணியாற்றிய போது அடுத்த சனாதிபதித் தேர்தலில் அவருக்கு முழு ஆதரவளிப்பதாக வாக்குறுதி அளித்திருந்து ஜே.வி.பியினர் கடந்தவாரம் அடுத்த சனாதிபதித் தேர்தலில் ஜே.வி.பி தனித்துப் போட்டியிடும் என்று அறிவித்ததால் அலமலந்துபோன அநுரா இப்போது சகோதரியின் அறிவிப்பால் மனம் உடைந்தே போயுள்ளாராம். ஏல்லோருமே தன்னை ஒரு அரசியல் கோமாளியாகவே பார்க்கிறார்கள் என்ற எண்ணமும் அவருக்கு உருவாகியுள்ளதாம். ஆதனை விடவும் இப்போது ஜே.வி.பியினரின் அதிகார ? ஆதிக்க வெறியுடன் கூடிய செயற்பாடுகள் மற்றும் அறிக்கைகளால் ஆத்திரமும் ஆவசேமும் அடைந்த நிலையில் குமுறும் சந்திரிகா அவ்வப்போது அநுராவையும், அவரது சகபாடி புரோக்கரான மங்களசமரவீரவையும் அழைத்து ?உங்கள் தோழர்களை அளவுக்குமீறி அலட்ட வேண்டாம் என்று சொல்லுங்கள் என்று கண்டித்ததால் ஒருவர் அசட்டு முழியும் மற்றவர் திருட்டு முழியும் முழிக்கத் தொடங்கியுள்ளனராம். இப்போதெல்லாம் ?உலகே மாயம்அவனியில்வாழ்வே மாயம்?; என்று குடிகார தேவதாஸ் பாணியில் உளறத் தொடங்கியுள்ள அனுராவை கட்சியின் சிரேஷ்ட தலைவர்களம் மதிப்பதில்லை. இவரால்தான் ஜே.வி.பியுடன் கூட்டணி அமைத்து கூத்தாட வேண்டி ஏற்பட்டது என்று எல்லோரும் குற்றம் சாட்டுவதும் உண்மையே. ஜே.வி.பியும் அவரை ?ஆற்றைக் கடக்குமுன் அண்ணன் தம்பி, அதன் பிறகு நீ யாரோ, நான்யாரோ என்ற பாணியில் கையாள்வதாக உள்ளது. சரி, ஐச்தாண்டுத் தேர்தல் இல்லை என்ற சனாதிபதி அறிவிப்பால் அநுராவுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியை விடவும் ஜே.வி.பியினருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி அதிகமாக இருப்பதற்கு காரணம் சந்திரிகாவும் ஐ.தே.கட்சியும் ஏதோ நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் பணியில் ஒன்றாக இணைந்து செயற்பட நேர்ந்ததால் தங்களது பதவிகளுக்கு மட்டுமல்ல அரசியல் எதிhகாலத்திற்கும் அச்சுறுத்தலாகிவிடும் என்றே ஜே.வி.பி அஞ்சுகிறது. ஜே.வி.பியனரின் அதிகார மேலாதிக்க போக்கிற்கு சந்திகா கொடுத்துள்ள அதிர்ச்சி வைத்தியம் இந்;த அறிக்கை என்றும் சிலர் கூறுகிறார்கள். சுனாமி அலை அரசியல் அலையாகி நாட்டை குழப்பத் தொடங்கிவிட்டது போலும். Eelanaatham - Mathan - 02-02-2005 சிங்கள இனவாதிகளின் சுயநலம். சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஜே.வி.பிக்கும் இடையில் ?சந்தர்ப்பவாத? கூட்டணிக்கான உடன்படிக்கை தொடர்பான விடயங்களில், சனாதிபதி தரப்பினர் பாதிப்பு ஏற்படும் வகையில் நடப்பார்களேயானால் அதன்விளைவுகள் பாரதூரமானதாக இருக்கும் எனவும். இது தொடர்பாக தாம் தனித்து தீர்மானங்களை எடுக்க வேண்டிh நேரிடுமென்றும் ஜே.வி.பியனரின் தலைவர் சோமவன்ச அமரசிங்க அரசுக்கு கடும் எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளார். இது அவரின் உண்iiயான எச்சரிக்கையா, அல்லது வெறும் மிரட்டல்தானா என ஆராய்வது ஒரு புறமிருக்க இப்படி ஒரு அச்சுறுத்தலை வெளிப்படையாக சனாதிபதிளை நோக்கி விடுமளவுக்கு ஜே.வி.பி அட்சிக்குள் அதிகார பலம் கொண்ட ஆதிக்க சக்தியாக வளர்ந்துள்ளது என்பது வெளிப்படையாகியுள்ளதுடன், ஜே.வி.பியினரின் அதிகார தோரணை கொண்ட செயற்பாடுகளால் அரசுக்குள் சி.ல.சு கட்சிக்கு சவாலான பங்காளியாக ஜே.வி.பி வளர்ந்து விட்டுள்ளதையும் உணரக்கூடியதாக உள்ளது. சாத்தானோடு கூட்டுச்சேர்ந்துள்ள சனாதிபதி அதன் மிரட்டல்களுக்கெல்லாம் இது நாள்வரை பணிந்து வந்துள்ள நிலையில் இப்போது அவருக்கும், அவரது ;பண்டா? பாரம்பரிய அரசியலுக்கும் அவரது பிரதான தோழமைப்பங்காளிகளே மோசமான எதிரிகளாக உருவாகி வருகின்ற சு10ழலில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேறுஎதாவது புதிய பேயுடன் கூட்டுச்சேரவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகியுள்ளார் என்று கூறப்படுகின்றத. இந்த நிர்ப்பந்தத்திற்கு ?சுனாமியால்? ஏற்பட்டுள்ள புதிய நெருக்கடிகளும், சர்வNதுச அழுத்தங்களுமே காரணம். ?இரவல் புடவையில் இது நல்லகொய்யகம்? என்பதுnபுர்ல் ?சுனாமி?யால் கிடைத்துவரும் உதவிகளை தமது சுயு அரசியல் இலாபங்கi நோக்கிய பிராசாரத்திற்கு ஜே.வி.பியும், தனது ஆட்சியை தக்கவைக்கும் முயற்சிகளும் சனாதிபதி பயன்படுத்த நினைப்பதும் முயற்சிப்பதும் சர்வதேச சமூகத்திற்கு எரிச்சலூட்டும் விடயங்களாவிட்டுள்ள நிலையில் ஜே.வி.பியை அடக்கி வாசிக்குமாறும், மனிதநேயப்பணிகளில் குறுக்கிடாது இருக்குமாறும், சனாதிபதி கூட்டணிப் புரோக்கர்களான மங்கள சமரவீர மற்றம் அனுரா பண்டார நாயக்க மூலம் ஜே.வி.பி தலைமைக்கு விடுத்துள்ள மறைமுக எச்சரிக்கையே அவர்களை சீற்றம் கொள்ளச்செய்துள்ளதாம். இந்த நிலையில் கடந்த ஒன்பது மாத காலத்துள் ஆட்சியின் சகல கட்டமைப்புகளுள்ளும், நன்கு வேரூன்றி விட்ட ஜே.வி.பியினர் மீண்டும் ஒரு கிளர்ச்சி நடவடிக்கையில் ஈடுபடும் நோக்குடனேயே தமது சகல நடவடிக்கைகளையும் திட்டமிடுவதாகவும் இதற்கு பிராந்திய வல்லாதிக்க சக்தியொன்று பின்னணியில் இயங்குவதாகவும் தென்னிலங்கை அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கிறார்கள். எதுவானலும் சந்தர்ப்பவாத ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கூட்டணிக்குள் சுயநலவாதம் ஆட்சியை சிதைக்குமளவுக்கு விரிசலை ஏற்படுத்தி வருகிறது. Eelanaatham - Mathan - 02-03-2005 நெதர்லாந்தின் வெளிவிவகார அமைச்சர் திரு. பெர்னாட் பொத் வடக்கு-கிழக்கு பிரதேசங்களுக்கு செல்வாரா ? நாளை 03-02-2005 வியாழக்கிழமை நெதர்லாந்தின் வெளிவிவகார அமைச்சர் திரு. பெர்னாட் பொத் அவர்கள் (Minister of foreign affairs - Mr. B.R. Bot ) நெதர்லாந்தின் தெற்காசியப்பகுதிகளிற்கான வெளிவிவகார அமைச்சர். சுனாமியால் பாதிக்கப்பட்ட இலங்கை இந்தோனேசியா ஆகிய நாடுகளின நிலைமையை பார்தையிடுவதற்காக செல்ல இருக்கிறார். குறிப்பாக பாதிக்கப்பட்ட இந்தோனேசியாவின் அட்சே மாநிலத்திற்கு விஜயம் செல்லும் இதேவேளை இலங்கையில் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ள வடக்கு-கிழக்கு பிரதேசங்களுக்கு செல்வாரா என்று அவரது பயண அட்டவணையில் குறிப்பிடப்படவில்லை. இதன் காரணமாக நெதர்லாந்து வாழ் தமிழ் மக்களும் மற்றும் தமிழ் அமைப்புக்களும் நெதர்லாந்து வெளிவிவகார அமைச்சின் தொலைநகல் ஊடாகவும் மின்னஞ்ஞல் ஊடாகவும் நெதர்லாந்தின் வெளிவிவகார அமைச்சர் வடக்கு-கிழக்கிற்கு பிரதேசங்களுக்கு செல்லவேண்டுமென்பதை வலியுறுத்தி கேட்டுக்கொண்ட வண்ணம் உள்ளார்கள். ஐரோப்பா வாழ் தமிழ்மக்களும் தமிழ் அமைப்புக்களும் பாதிக்கப்பட்ட தமிழ்ப்பகுதிகளிற்கு சென்று பார்வையிடுமாறு நெதர்லாந்தின் வெளிவிவகார அமைச்சரிற்கு உங்கள் வேண்டுகோளை தெரிவிக்கலாம். கீழ்காணும் தொலைநகல் அல்லது மின்னஞ்ஞல் முகவரிகளை உபயோகிக்கவும். வெளிவிவகார அமைச்சு - நெதர்லாந்து தொலைநகல் : 0031 (0)70 3484848> 0031 (0)70 3486675 நெதர்லாந்தின் தெற்காசியப்பகுதிகளிற்கான வெளிவிவகாரப்பிரிவு. தொலைநகல் : 0031 (0)70 3485323 மின்னஞ்ஞல் : wt.mohr@minbuza.nl இலங்கைக்கான நெதர்லாந்து தூதரகம் - இலங்கை தொலைநகல் : 0031 (0)70 3485323 மின்னஞ்ஞல் : nethemb@sri.lanka.net மது - Mathan - 02-03-2005 ஆழிப்பேரலையில் கண்டெடுக்கப்பட்ட குழந்தையை அடையாளம் காண மரபணு பரிசோதனைக்கு உத்தரவு <img src='http://www.tamilnet.com/img/publish/2005/02/baby_81_06_36601_200.jpg' border='0' alt='user posted image'> ஆழிப்பேரலையில் அநாதரவான நிலையில் கண்டெடுக்கப்பட்டு தற்போது கல்முனை ஆதார வைத்தியசாலையின் பராமரிப்பிலுள்ள 4 மாத ஆண் குழந்தைக்கு உரிமை கோரும் பெற்றோரை அடையாளம் காண்பதற்கு மரபணு பரிசோதனையை மேற்கொள்ளுமாறு கல்முனை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 26ம் திகதி மாலை கல்முனை பகுதியில் அநாதரவான நிலையில் எஸ்.சிறீஸ்கந்தராஜா என்பவரால் கண்டெடுக்கப்பட்டு எஸ்.அழகையா என்பவர் ஊடாக இந்த குழந்தை கல்முனை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது. வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட இந்த குழந்தைக்கு பல பெற்றோர்கள் தமது குழந்தை என வைத்தியசாலை நிர்வாகத்திடம் உரிமை கோரியிருந்தனர். இருப்பினும் கல்முனையைச் சேர்ந்த ஜெயராஜா - ஜூனித்தா தம்பதிகள் இந்த குழந்தை தங்களுடைய குழந்தை அபிலாஸ் எனக் கூறி கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிசார் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்தனர். கடந்த 12ம் இந்த மனு மீதான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்ற போது குறிப்பிட்ட தம்பதிகளிடம் பராமரிப்பிற்காக குழந்தையை ஒப்படைக்குமாறு நீதிமன்றம் வைத்தியசாலை நிர்வாகத்திற்கு இடைக்கால உத்தரவொன்றை பிறப்பித்தது. வைத்தியசாலை அத்தியட்சகர் வைத்தியர் கே.முருகானந்தம் மகப்பேற்று வைத்திய நிபுணர் எம்.முகுந்தன் ஆகியோர் நீதிபதியைச் சந்தித்து குழந்தையின் உடல் ஆரோக்கியம் கருதி தொடர்ந்து வைத்தியசாலைப் பராமரிப்பில் வைப்பதற்கு அனுமதி கேட்டது. இதனையடுத்து குழந்தை தொடர்ந்தும் வைத்தியசாலை பராமரிப்பில் இருந்து வருகிறது. இன்று கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி எம்.பி.முகைதீன் முன்னிலையில் மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. பெற்றோர் எனக் கூறும் மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் குழந்தைக்கு பல பெற்றோர் உரிமை கோரியிருந்தாலும் சட்ட ரீதியாக குறிப்பிட்ட தம்பதிகளே உரிமை கோரியிருப்பதால் குழந்தையை அவர்களிடம் ஒப்படைக்குமாறு வாதிட்டனர். மகப் பேற்று வைத்திய நிபுணர் எம்.முகுந்தன் தமது சட்டத்தரணி ஊடாக சமர்ப்பித்த வாதத்தில் தற்போது ஆழிப்பேரலையினால் பல பெற்றோர்கள் தமது குழந்தைகளை இழந்துள்ளனர். எதிர்காலத்தில் மேலும் சிலர் இக் குழந்தைக்கு சட்ட ரீதியாக உரிமை கோர இடமுன்டு. இந்நிலையில் உரிமை கோருபவர்களையும் குழந்தையையும் மரபணு பரிசோதனைக்கு உட்படுத்துவதன் மூலமே பெற்றோரை அடையாளம் காண முடியும் என்றார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி குழந்தையையும் அதற்கு உரிமை கோரும் பெற்றோரையும் மரபணு பரிசோதனைக்கு உத்தரவிட்டார். எதிர்காலத்தில் யாராவது உரிமை கோரினால் அவர்களையும் மரபணு பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். அதுவரை குழந்தை வைத்தியசாலை பராமரிப்பில் இருக்க வேண்டும். உரிமை கோரும் பெற்றோர் வைத்தியசாலை சட்ட திட்டத்திற்கு அமைய பார்வையிட முடியும் என்றும்䤠தனது உத்தரவில் குறிப்பிட்டு விசாரனையை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 28ம் திகதிக்கு ஒத்திவைத்தார். இதற்கிடையில் குழந்தை தொடர்ந்தும் வைத்தியசாலை பராமரிப்பில் இருக்க வேண்டும் என நீதிமன்றத்தினால் விடுக்ப்பட்ட உத்தரவையடுத்து ஆத்திரமடைந்த உரிமை கோரும் தம்பதிகளும் அவர்களது உறவினர்களும் நீதிமன்றத்திற்கு வெளியே வந்து வைத்தியசாலை நிர்வாகத்திற்கு எதிரான கோசங்களை எழுப்பினார்கள். அங்கிருந்து நேரடியாக வைத்திசாலைக்குள் அத்துமீறி நுழைந்து குழந்தையை எடுத்துச் செல்ல முற்பட்டார்கள். இதனால் வைத்தியசாலை ஊழியர்களுக்கும் அவர்களுக்குமிடையில் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக வைத்தியசாலை அலுவல்கள் ஓரிரு மனித்தியாலங்கள் பாதிக்கப்பட்டன. இதனையடுத்து பொலிசார் அங்கு வரவழைக்கப்பட்டு அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இவர்கள் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்கும்䤠வைத்திசாலை ஊழியர்கள் மீது தகாத வார்த்தைப் பிரயோகம் செய்தமைக்கும் எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்ட போதிலும் பின்பு நிலமை சுமூக நிலைக்கு திரும்பியுள்ளது. குழந்தைக்கு உரிமை கோரும் விவகாரத்தில் கைது செய்யப்பட்டோர் விளக்கமறியலில் கல்முனை ஆதரார வைத்தியசாலையில் இன்று நண்பகல் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் பொலிசாரால் கைது செய்யப்பட்ட 4 பேரில் இருவர் நிபந்தனையின் பேரில் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனைய இருவரும் எதிர்வரும் 9ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்ப்பட்டுள்ளனர். ஆழிப்பேரலையின் பின் மீட்கப்பட்ட குழந்தைக்கு உரிமை கோரும் தம்பதிகளான முருகுப்பிள்ளை ஜெயராஜா அவரது மனைவி ஜூனித்தா ஜெயராஜா ஆகியோரே நாளை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் இன்றிரவு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட இருவரும் நீதிமன்ற உத்தரவின் பேரில் மரபண பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டியவர்கள் என பொலிசார் நீதிபதி கே.தட்சனாமூர்த்தி முன்னிலையில் சமர்ப்பித்த அறிக்கையையடுத்தே இவர்களுக்கு பினை வழங்கப்பட்டது. குழந்தையை வைத்தியசாலைக்கு சென்று பார்ப்பது என்றால் இருவர் மட்டும் தான் செல்ல வேண்டும் என்றும் நீதிபதி இவர்களுக்கு எச்சரிக்கையுடன் உத்தரவிட்டார். வைத்திசாலையில் சட்ட விரோதமாகக் கூடியது. அத்துமீறி பிரவேசித்தது䤠தாதியர்களை தாக்கியது䤠போன்ற குற்றச்சாட்டுக்கள் இந்த நால்வர் மீதும் பொலிசாரால் சுமத்தப்பட்டுள்ளது. ஏனைய சந்தேக நபர்களான சாமித்தம்பி சிறீஸ்கந்தராஜா தாமோதரம் பிரதீபன் ஆகியோரே எதிர்வரும் புதன்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். News: Puthinam Photo: TamilNet - vasisutha - 02-03-2005 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- Mathan - 02-03-2005 ஜே.வி.பி. விலகினால் அரசுக்கு தாம் ஆதரவளிக்கத் தயார் என்கிறது ஐ.தே.க. அரசாங்கத்திலிருந்து ஜே.வி.பி. வெளியேறினால் அரசாங்கத்திற்கு ஐக்கிய தேசிய கட்சி ஆதரவளிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் 15 அம்ச திட்டங்களை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க தயாரகவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி நேற்று அறிவித்துள்ளது. எதிர்க்;கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் பேசுகையில் ஐக்கிய தேசிய கட்சி முக்கியஸ்தர் ராஜித சேனாரட்ன இதனைத் வெளியிட்டுள்ளார். அரசாங்கத்திற்கான ஐக்கிய தேசிய கட்சி; இந்த ஆதரவானது வெறுமனே அமைச்சு பதவிகளை நோக்கமாக கொண்டதல்ல என்றும் இது நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்கு தமது கட்சி வழங்கும் பங்களிப்பாகும்; என்றும் அவர் அங்கு குறிப்பிட்டார். அங்கு மேலும் தெரிவிக்கையில்ää அரசாங்கத்திலிருந்து ஜே.வி.பி. ஒருபோதும் விலகப்போவதில்லை. ஜே.வி.பியினருக்கு தற்போது அதிகாரம் தேவை என்றும் எனவே அரசிலிருந்தும் அதிகாரத்திலிருந்தும் ஜே.வி.பி ஒருபோதும் விலகாது. அரசாங்கத்தை மிரட்டி பணியவைக்கும் நடவடிக்கைகளிலேயே அவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள் என்று ராஜித சுட்டிக்காட்டினார். புதினம் - Mathan - 02-03-2005 அனர்த்த நிவாரணம் அமைதி முயற்சி ஆகியவற்றை உறுதி செய்ய கிளிண்டன் நியமனம் ஆழிப்பேரலை அனர்த்த நிவாரணப்பணி தொடர்பில் சிறீலங்கா அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் தொடரும் இழுபறித்தீர்வு காண உதவிபுரியவும் அனர்த்த நிவாரணப்பணிகள் சீராக நடைபெறுவதை உறுதிசெய்யவும் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் கொபி அனான் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டனை ஐ.நா.வின் சிறப்புத்தூதராக நியமிக்கவுள்ளார். இந்தத் தகவலை ஜ.நா. இராஜதந்திரி ஒருவர் தெரிவித்துள்ளார். கிளிண்டனின் நியமனம் குறித்த ஐ.நாவின் அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆழிப்பேரலையால் பயங்கரமாகப் பாதிக்கப்பட்ட இந்தோனேசியாää சிறீலங்கா ஆகிய நாடுகளில் மீள்கட்டுமானப்பணிகள் சீராக நடைபெறுவதை உறுதி செய்வதற்கு ஐ.நாவின் விசேட தூதுவராக கிளிண்டனை நியமிக்க எண்ணியுள்ள அனான்ää இந்த இரு நாடுகளிலும் அரசுக்கும் விடுதலை அமைப்புக்களுக்கும் இடையில் பல ஆண்டுகளாக நடைபெற்றுவரும் சச்சரவுகளுக்கான தீர்வுக்கும் கிளிண்டன் உதவவேண்டும் எனக்கருதுகிறார் என்று ஐ.நா. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தோனேசியாவிலும் சிறீலங்காவிலும் சுதந்திரத்துக்காக இருதசாப்த காலத்துக்கு மேலாகப் போராடிவரும் இயக்கங்களுக்கும் அந்நாடுகளின் அரசாங்கங்களுக்கும் இடையில் பணியாற்றி தனது அரசியல் முதிர்ச்சி மூலம் நல்ல பங்களிப்பை நல்கி தீர்வுக்காக உழைக்க கிளிண்டனுக்கு நல்ல சந்தரர்ப்பம் கிடைத்துள்ளது என்று ஐ.நா. வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன. ஆழிப்பேரலையால் அழிந்துபோன இடங்களைப் பார்வையிட சிறீலங்காவுக்கு அண்மையில் வந்திருந்த கோபி அனானை புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் செல்லவிடாமல் சிறீலங்கா ஜனாதிபதி சந்திரிகா தடுத்தமை குறிப்பிடத்தக்கது. புதினம் - Mathan - 02-04-2005 இந்திய இராஜதந்திரத்தை அடித்துச் சென்ற சுனாமி -ஜெயராஜ்- தெற்காசியப் பிராந்தியத்தில் அனர்த்தத்தை விளைவித்த சுனாமியினால் ஏற்பட்ட அரசியல் தாக்கம் புவிசார் அரசியலில் ஏற்படுத்திய விளைவுகள் தொடர்பான உணர்வுகள் படிப்படியாக வெளிவரத் தொடங்கி விட்டன. இவ் உணர்வுகள் வெளிப்படுவது தவிர்க்கமுடியாதவையே ஆகும். ஏனெனில் புவிசார் அரசியலில் சுனாமி அரசியல் ஏற்படுத்திய தாக்கம் பெரியதாகும். சுருக்கமாகக் கூறுவதானால்ää தெற்காசியப் பிராந்தியத்தின் இராணுவ சமநிலையை மாற்றிவிடக் கூடிய அளவிற்கு அதன் தாக்கம் உள்ளது. சுனாமியினால் தென்கிழக்காசிய நாடுகள் பாதிப்புற்ற போது இந்தியாதான் இப்பிராந்தியத்தின் (இந்து சமுத்திர பிராந்தியத்தின்) வல்லரசு என்ற எண்ணப்பாட்டுடனேயே செயற்பட்டது. இதன் வெளிப்பாடே பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு நிவாரணம் மட்டுமல்லää மீட்புப்பணிக்கென தனது கடற்படைக் கப்பல்களையும்ää உலங்குவானூர்திகளையும்ää இராணுவத்தினரையும் அனுப்பி வைத்தது. அத்தோடு இந்தியாவில் ஏற்பட்ட பாதிப்புக்களுக்கு உலக நாடுகள் நிவாரண உதவிகளை வழங்க முன்வந்தபோதும் தம்மாலேயே தமது இழப்பை ஈடுசெய்ய முடியும் என்ற ரீதியில் நிவாரண உதவிகளையும் இந்தியா ஏற்க மறுத்து விட்டது. ஒரு வகையில் பார்த்தால் இந்திய அரசு தனது நாட்டில் மேற்கொள்ள வேண்டியதான நிவாரணப் பணிகளையும் ஓரம் தள்ளிவிட்டுää அண்டைய நாடுகளுக்கு நிவாரண உதவிகளை உணவுப் பண்டங்கள்ää நிதிää ஆளணி என்ற ரீதியில் உதவ முன்வந்தமைக்கு காரணம் சுனாமியினால் ஏற்பட்ட அனர்த்தத்தை ஏனைய நாடுகள் -குறிப்பாக மேற்குலக வல்லரசுகள் தமக்கு சாதகமாகப் பயன்படுத்தி இப் பிராந்திய அரசியலில் தலையீடு செய்வதை நிறுத்துவது அல்லது மட்டுப்படுத்துவது என்ற நோக்கத்தின் அடிப்படையிலேயே ஆகும். ஆனால் இந்தியாவின் இத்தகைய எதிர்பார்ப்பு தோல்வியில் முடிவுற்றது என்பதே உண்மையாகும். அத்தோடு இச்சுனாமி அரசியல் தொடர்பான இராஜதந்திர செயற்பாட்டை இந்தியா திறம்பட்ட முறையில் கையாளவும் இல்லை. இவ்வாறான நிலைமை தோன்றியமைக்கு இத்தகையதொரு சந்தர்ப்பத்தை எவ்வாறு தமது நலனுக்குப் பயன்படுத்த முடியும் என மேற்குலக வல்லரசுகள் ஏற்கனவே அனுபவரீதியில் புரிந்து கொண்டு இருந்தமையும்ää சுனாமி அனர்த்தத்தினால் ஏற்பட்ட சேதம் மிக உயர்வாக இருந்தமையுமே காரணமாகும். சுனாமி தாக்கியதும் இலங்கைக்கெனப் பெரும் நிவாரண உதவிகளை இந்திய அரசு அறிவித்ததோடு விரைந்தும் செயற்பட்டது. இந்தியாவின் சரக்குக் கப்பல்களும்ää கடற்படை கப்பல்களுமே சுனாமிக்குப் பின்னர் இலங்கை வந்தடைந்த முதலாவது நிவாரணக் கப்பல்களாக இருந்தன. இவ் விரைந்த செயற்பாட்டின் மூலம் சிறிலங்கா அரசை தனது பிடிக்குள்ஃ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விடலாம் என்றே இந்தியா கருதியது. ஆனால்ää வழமைபோலவே இந்தியாவுடன் கலந்து போசாமலே- ஏன் இந்தியாவிற்கு அறிவிப்புச் செய்யாமலே அமெரிக்க போர்க்கப்பல் இலங்கைத் துறைமுகங்களுக்குள் பிரவேசிக்கவும்ää அமெரிக்க இராணுவ விமானங்கள் விமானத் தளங்களில் தரையிறங்கவும் சிறிலங்கா அரசால் அனுமதிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் உட்பட பல நாட்டுப் போர்க்கப்பல்கள்ää விமானங்கள் இராணுவää கடற்படை சிப்பாய்கள்ää சிறிலங்காவிற்குள் பிரவேசித்தன. இது ஒரு வகையில் இப்பிராந்தியத்தின் இராணுவச் சமநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தி தம்மிடம் உள்ளதென இந்தியாவிற்கு மேற்கு நாடுகள் உணர்த்தியஃ வெளிப்படுத்திய சம்பவம் எனக் கொண்டாலும் தவறாக மாட்டாது. அமெரிக்கத் துருப்புக்கள் இலங்கையில் தரையிறங்கியதும்ää இது குறித்து இந்திய அரசு விசனம் அடைந்திருப்பதாகவும்ää சிறிலங்கா அரசிற்கு சில அறிவித்தல்களைச் செய்ததாகவும் தகவல்கள் வெளிவந்தபோது சிறிலங்கா அதனை மறுத்தது. அமெரிக்க வருகை இந்தியாவுடனான இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட்டதானதொரு தோற்றப்பாடு உருவாக்கப்பட்டது. ஆனால் தற்பொழுது வரும் தகவல்களின் படியும்ää இந்தியத்தரப்பில் இருந்து வெளிப்படுத்தும் கருத்தின் அடிப்படையிலும்ää அமெரிக்க இராணுவத்தினரின் வருகை குறித்து சிறிலங்கா அரசு இந்தியாவிற்கு தெரியப்படுத்தவில்லை என்பது ஊர்ஜிதமாகியுள்ளது. அதாவது இந்தியாவுடன் ஆலோசனையோ அன்றிப் கருத்துப்பரிமாற்றமோ இன்றி அமெரிக்கத் துருப்புக்கள் வருகைக்கு சிறிலங்கா அரசு அனுமதி வழங்கியிருந்தது. இதனை வெளிப்படுத்துவது போன்றே இந்திய வெளிவிவகார அமைச்சர் நட்வர்சிங்கின் பேட்டியும் அமைந்திருந்தது. 'இரண்டு நாடுகளும் கலந்தாலோசித்த பின்னர் யார் வேண்டுமானாலும் இலங்கைக்கு உதவி செய்திருக்கலாம்." என்ற நட்வர்சிங்கின் கூற்றுக்கள் இந்தியா இதில் ஓரம் கட்டப்பட்டு இருந்தது என்பதையே வெளிக்காட்டுவதாக இருந்தது. இந்த வகையில் சர்வதேச நாடுகளுடனான இராஜதந்திர போட்டியில் இந்தியா பின்னடைவைச் சந்தித்த அதேவேளைää இலங்கையின் உள்நாட்டு அரசியலிலும் இந்தியாவின் அணுகுமுறை தோல்வி கண்டுள்ளது. ஏனெனில்ää சுனாமி அரசியலின் பின்னணியில் ஏற்படக்கூடிய அன்றி பயன்படுத்திக்கொள்ளக் கூடியதான மிகப் பெரிய அரசியல் வாய்ப்பினை இந்திய இராஜதந்திரிகள் வெற்றிகரமாக கையாளவில்லையென்றே கூறலாம். கடந்த நூற்றாண்டின் 90 களின் ஆரம்பத்திலிருந்து இலங்கை தொடர்பான இராஜதந்திர செயற்பாட்டில் இந்தியா பெரிதாக எதனையும் சாதித்துக் கொண்டதாக இல்லை. ஒரு மந்த நிலையிலேயே அது இருந்தது. மாறாகத் தவறானதொரு வழிமுறையைக் கைக்கொண்டது என்றே கூறலாம். அதிலும்ää இனப்பிரச்சினை தொடர்பான அதன் இராஜதந்திரமானது உணர்ச்சிகளின் அடிப்படையிலானதாக இருந்ததே ஒழிய -மதிப்பிடத்தக்க மதிநுட்பத்துடனும்ää தேச நலனுடனும் கூடியதாகவும் இருக்கவில்லை. விடுதலைப்புலிகள் இயக்கத்தைத் தடை செய்திருந்த இந்திய அரசு இலங்கையின் தமிழ் மக்கள் தொடர்பான அணுகுமுறையில் பெரும் தவறிழைத்திருந்ததென்பது வெளிப்படையானது. இனப்பிரச்சினைக்கு சமாதானப் பேச்சு வார்த்தைகள் மூலம் தீர்வு காணப்படுதல் வேண்டும் எனக் கூறிய இந்திய அரசின் நடவடிக்கைகள் சம நிலையானதாக இருக்கவில்லை. சிறிலங்கா அரசுக்கு சார்பாகவே இருந்தது. மறுபுறத்தில் தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மாறாகச் செயற்படுபவர்களையும்ää சிறிலங்கா அரசின் கைக்கூலிகளாகச் செயற்படுபவர்களையும் கொண்டே தமிழ் மக்களை அணுகவும் இந்தியா முனைந்துள்ளது. அதாவது தமிழ்மக்களிடமிருந்து அந்நியப்பட்டுப் போயுள்ள சக்திகளை தமிழ்மக்களின் பிரதிநிதிகளாக இந்தியா முயன்று கொண்டிருந்தது. அதுமட்டுமன்றி இலங்கையில் சமாதானப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாவதற்கு முன்பாக இந்தியாவிற்கு இதில் உரிய பங்கை வழங்குவதற்கு விடுதலைப் புலிகள் இயக்கம் தயாராகவே இருந்தது. இதன் காரணமாகவே விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் இந்தியா ஊடாகப் பயணம் செய்வதற்கு அனுமதிக்;குமாறு கோரிக்கைகளும் விடுக்கப்பட்டது. ஆனால் இந்திய மத்திய அரசும் சரிää தமிழக அரசும் சரி இலங்கையின் கள நிலவரம்ää இலங்கை தொடர்பாகச் சர்வதேச நாடுகளின் பார்வையில் ஏற்பட்டு வரும் மாற்றம் விடுதலைப்புலிகள் விடயத்தில் அவர்களின் அண்மைக்காலப் போக்கு என்பன போன்ற எதிலுமே கவனம் செலுத்தவில்லை. இராஜதந்திர நகர்வுகளை ஏதோவொரு வரையறைக்குள் உட்பட்டது போன்றதாகவே இலங்கை விவகாரத்தை இந்தியா கையாண்டது. இவ்வாறு இந்தியா கையாண்டமைக்கு வறட்டுத்தனம் பொருந்திய சில இராஜதந்திரிகள் காரணமாக இருந்திருக்கலாம். குறிப்பாக அண்மையில் காலமான முன்னாள் இந்திய வெளியுறவுச் செயலர் டிக்சிற் போன்ற இராஜதந்திரிகளின் தீர்க்கதரிசனமற்ற செயற்பாடுகளும் இந்துப் பத்திரிகையின் ஆசிரியர் ராம் போன்றவர்களின் வறட்டுத்தனமான வழி காட்டுதலும் காரணமாக இருந்திருக்கலாம். மேலும்ää சுனாமி அனர்த்தத்தின்போது மேற்கு நாடுகளின் இராஜதந்திரத்தைப் புரிந்து கொண்டாவது இந்திய இராஜதந்திரிகள் நடந்து கொண்டிருக்கலாம். இந்தியா மட்டும்தான் விடுதலைப்புலிகள் இயக்கத்தைத் தடைசெய்துள்ள நாடு அல்ல சிறிலங்காவிற்கு நிதியுதவி செய்யும் பிரதான 12 நாடுகளில்; அமெரிக்கா உள்ளிட்ட ஐந்து முக்கிய நாடுகள் விடுதலைப்புலிகள் இயக்கத்தைத் தடைசெய்தே உள்ளன. இருப்பினும்ää சுனாமி அனர்த்தத்தின் பின்னர் இலங்கை அரசியலில் தீவிர கவனம் செலுத்திய மேற்கு நாடுகள் நிவாரணம் என்ற நிலையில் தமிழர் தாயகப் பகுதிக்கும் நிவாரணப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டுமெனக் கோரிக்கைகளை வெளியிட்டன. அது மட்டுமல்ல ஒப்பிற்குச் சிறிய அளவிலாயினும் வடக்கு- கிழக்கில் நிவாரணப்பணிகளில் ஈடுபட்டன. ஆனால் இந்தியா ஆட்சியாளர்களோ கொழும்பிலுள்ள சிறிலங்காவிற்கான இந்தியத் தூதுவரோ இவ் விடயத்தை எள்ளளவிலும் சிந்திக்கவில்லை. சிறிலங்கா அரசாங்கத்துடனேயே தமது உறவுகளைப் பலப்படுத்திக் கொண்டன. இந்தியா கடைப்பிடித்த இவ் இராஜதந்திரமே இன்று இப்பிராந்தியத்தில் இந்தியாவின் செல்வாக்கிற்கு எல்லையிடுபவையாகியுள்ளன. ஆனால் இந்தியாவில் இருந்து காலம் தாழ்த்திய நிலையிலாயினும் இலங்கை தொடர்பான சிறிலங்காவின் கொள்கை குறிப்பாக இலங்கையின் தமிழர் தொடர்பான நிலைப்பாடு மாற்றம் செய்யப்படுதல் வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன. இந்த வகையில் ஜவகர்லால் நேரு பல் கலைக்கழகப் பேராசிரியர் சகாதேவன் அண்மையில் பி.பி.சிக்கு வழங்கிய பேட்டியில் இக் கருத்தினைச் சுட்டிக்காட்டியிருந்தார். இதேவேளை பேராசிரியர் சகாதேவன் போன்றவர்கள் தமது கருத்துக்களை ஏன் முன்னர் வலுவாக வெளிப்படுத்தவில்லை. தற்பொழுது வெளிப்படுத்தவேண்டிய தேவை ஏன் வந்தது? என்ற கேள்விக்கும் இடமுண்டு. ஆனால் இதற்குச் சில வேளை இந்தியாவின் இராஜதந்திர செயற்பாடுகளைத் தீர்மானிக்கும் சக்தி பொருந்தியவர்களாக இருந்த டிக்சிற் போன்றவர்களின் வறட்டுத்தனமான பிடிவாதங்கள் இவர்களின் கருத்துக்களை புறம்தள்ளியிருக்கலாம். அல்லதுää சுனாமி இப் பிராந்தியத்தில் உருவாக்கிய இராணுவச் சமநிலை மாற்றம் பேராசிரியர் சகாதேவன் போன்றவர்களுக்கு இலங்கை தொடர்பான- குறிப்பாக இலங்கைத் தமிழர் தொடர்பான இந்தியாவின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதாக இருந்திருக்கலாம். காரணம் எதுவாயினும் இந்தியாவின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்படவேண்டிய அவசியம் தவிர்க்கமுடியாது ஏற்பட்டுள்ளது என்பது வெளிப்படையானதொன்று. இப்பிராந்தியத்தில் அமெரிக்காவோ அன்றி அதன் நேசநாடுகளோ தமது ஆயுதப் படைகளை நிரந்தரமாக வைத்திருக்காது போனாலும்ää இப்பிராந்தியத்தில் எவ்வேளைகளிலும் தமது ஆயுதப்படைகளை இந்தியாவின் அனுசரணையின்றி அதாவது இந்தியாவின் கருத்தறியாது தரையிறக்க முடியும் என்பதை அவை செயல் மூலம் வெளிப்படுத்தியுள்ளன. அத்தோடு சிறிலங்கா இந்தியாவின் விசுவாசம் மிக்க உற்ற நண்பனாக எப்பொழுதுமே இருக்க மாட்டாது என்பதையும் இந் நிகழ்வுகள் வெளிப்படுத்தியிருக்கும். இதேவேளை வரலாற்று ரீதியாகவும் சரிää இன்றும் சரி இந்தியா மீது சிறிலங்கா தனது விசுவாசத்தை வெளிப்படுத்தியது கிடையாது. Eelanatham - Mathan - 02-04-2005 சர்வதேசம் தமிழருக்கு உதவுவதைத் தடுக்க... 'சுனாமி அனர்த்த நிவாரணப் பணி என்ற பெயரில் சில வெளிநாடுகளும்ää அரச சார்பற்ற நிறுவனங்களும் சிறிலங்காவிற்குள் ஊடுருவி விடுதலைப்புலிகளுக்கு இராணுவ உதவிகளைப் புரிந்து வருவதால் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுவரும் வெளிநாடுகள் மற்றும் அவர்களது பணி குறித்து உடன் விசாரணை செய்யப் படவேண்டும்" எனச் சனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவிடம் ஜே.வி.பி. விடுத்துள்ள கோரிக்கையானது ஆச்சரியத்திற்குரியதொன்றல்ல. ஆயினும்ää எதிர்கால அரசியலை இலக்காகக் கொண்டதாகும். இலங்கைத் தமிழ் மக்கள் தொடர்பில் ஜே.வி.பியின் இந்நிலைப்பாடு வழமையானதுபோல் ஆகிவிட்டது. அதாவதுää சுனாமியினால் ஏற்பட்ட அழிவிற்கான நிவாரணமாகட்டும்ää யுத்தத்தினால் ஏற்பட்ட இழப்பிற்கான நிவாரணம் ஆகட்டும் தமிழ் மக்கள் கைகளில் அவை சென்று சேருவதை அனுமதிக்கும் நிலையில் ஜே.வி.பியினர் இல்லை. இத்தகைய நிலையில்ää தற்பொழுது கிட்டும் மிகச் சிறிய அளவிலான உதவிகள்கூட தமிழ் மக்களைச் சென்றடைவதைத் தடை செய்வதன் மூலம் எதிர்காலத்தில் புனர்நிர்மாணப் பணிகளுக்காகப் பெரியளவிலான நிதிகள் சென்று சேருவதைத் தடை செய்வதே ஜே.வி.பியின் நோக்கமாகும். சுனாமியினால் பாதிக்கப்பட்ட தமிழர் தாயகப் பகுதிகளுக்கும் பாதிப்புக்களுக்கு ஏற்ற வகையில் தமது நிவாரண உதவிகள் பகிர்ந்தளிக்கப்படவேண்டும் என்பதே இலங்கைக்கு உதவி வழங்கிய அநேக நாடுகளின் எதிர்பார்க்கை ஆகும். இது குறித்து சனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவிடம் அவை வலியுறுத்திக் கூறவும் தவற வில்லை. இதேசமயம்ää சில மேற்கு நாடுகள் தம்மால் வழங்கப்படும் நிதி உதவிகள் வடக்கு-கிழக்கிற்குப் பகிர்ந்தளிக்கப்படுகின்றனவா என்பது குறித்து தமது அவதானிப்புக்கள் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளன. இதேவேளைää ஐ.நா. சபைää உலக வங்கி போன்ற அமைப்புக்கள் வழங்கப்படும் நிதி உரிய முறைகளில் பயன்படுத்தப்படுகின்றனவா என்பது குறித்து கண்காணிக்கவும்ää கணக்கறிக்கைகளைப் பரிசீலிக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டும் உள்ளன. இன்னொரு புறத்தில்ää சில அரசாங்கங்கள் சுனாமி அனர்த்தத்திற்கென அறிவிக்கப்பட்ட நிதி உதவியின் ஒரு பகுதியை அரச சார்பற்ற நிறுவனங்கள் ஊடாக வழங்கவே முன்வந்துள்ளன. உதவி வழங்கும் நாடுகளின் இத்தகைய நிலைப்பாடுகள் தமிழ் மக்களுக்கும் சிறிதளவேனும் சர்வதேச நிதியுதவிகள் சென்றடைந்துவிடுமோ என்ற சந்தேகத்தை ஜே.வி.பி.க்குத் தோற்றிவித்துள்ளது. இவை யாவற்றிற்கும் மேலாக தற்பொழுது அரசாங்கம் சர்வதேச நாடுகளின் நிதியுதவிகளைப் பயன்படுத்துவது குறித்து ஒரு பொதுக் கட்டமைப்பு ஒன்றை உருவாக்குவது குறித்து அரசää புலிகள் சமாதானச் செயலகங்கள் ஊடாக விடுதலைப்புலிகளுடன் நடத்திவரும் பேச்சுவார்த்தைகள் ஜே.வி.பி.க்கு மேலும் சினத்தைத் தோற்றுவிப்பதாகியுள்ளது. ஏனெனில்ää இதன் மூலம் அரசாங்கத்திற்குக் கிடைக்கும் நிதி விடுதலைப்புலிகளுக்கும் பங்கிடப்பட வேண்டிய தேவைää காட்டாயம் உருவாகிவிடும் என்ற அச்சத்தை ஜே.வி.பிக்கு ஏற்படுத்தியுள்ளது. அத்தோடுää இவ்விடயத்தில் சந்திரிகா அரசிற்கும்ää விடுதலைப் புலிகளுக்கும் இடையில் ஓர் புரிந்துணர்வு ஏற்படுமானால்ää இனப்பிரச்சினை தொடர்பான சமாதான முயற்சிகளிலும் முன்னேற்றம் காணக்கூடியதொரு சூழ்நிலையும் உருவாகலாம் எனவும் ஜே.வி.பி. அச்சமடைந்துள்ளது. அத்தகையதொரு சூழ்நிலை உருவாகும் பட்சத்தில் தமது இனவாத அரசியல் பாதிப்பிற்குள்ளாகவும் அது தமது எதிர்கால அரசியலைப் பாதிக்கவும் கூடும் என அது அச்சம் கொண்டுள்ளது. இத்தகையதொரு நிலையில்தான் தமிழ் மக்களுக்குச் சர்வதேச நிதியுதவிகள் எவையும் கிட்டிவிடாது தடுக்கும் வகையிலும் அரசாங்கத்திற்கும் - விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான நிதியுதவிகள் பயன்பாடு குறித்த பேச்சுக்களில் முன்னேற்றம் காண முடியாத வகையிலும் தடைகளை உருவாகும் வகையில் ஜே.வி.பி. சர்வதேச நாடுகளினதும்ää அரச சார்பற்ற நிறு வனங்களினதும் செயற்பாடு குறித்து விசாரணைக்குக் கோரிக்கை விடுத்துள்ளது. இக்கோரிக்கை மூலம்ää அரச சார்பற்ற நிறுவனங்கள் வடக்கு-கிழக்கில் மேற்கொள்ளும் நிவாரணப் பணிகளில் முட்டுக் கட்டைகளைத் தோற்றுவிக்க முடியும். ஏற்கனவே அரசாங்கத்தின் சில நடவடிக்கைகள் - குறிப்பாகää கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக வந்திறங்கும் நிவாரணப் பொருட்கள் மீதான சுங்கப் பரிசோதனை உட்பட்ட கெடுபிடிகள் அரச சார்பற்ற நிறுவனங்களின் நிவாரணப் பணிகளைப் பாதிப்பிற்குள்ளாக்கியுள்ளது. இதனை மேலும் தீவிரமாக்கச் செய்வதன் மூலம் அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாட்டை பெருமளவில் முடக்கிவிட ஜே.வி.பி. முற்பட்டு நிற்கின்றது. இதேபோன்று அரசு சிறிதளவேனும் தமிழருக்கு நேரடியாக வழங்கிய உதவிகள் தொடர்ந்தும் இடம்பெறாது தடுத்துவிடும் நோக்;கிலேயே தற்பொழுது ஜே.வி.பி. குரல் எழுப்பத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாகவே மனிதாபிமான உதவிகள் கூட இராணுவ உதவிகளாக மாற்றம் கண்டுள்ளது. ஆனால்ää ஜே.வி.பி யினரின் இந்நிலைப்பாடு புதிதானதும் அல்லää எதிர்பார்க்க முடியாததுமல்ல. ஏற்கனவேää டோக்கியோ மாநாட்டில் பெருந்தொகை நிதி உதவிகளை வழங்க உதவி வழங்குவோர் தயாரானபோதும் அதில் ஒரு பகுதி தமிழர் தாயகப்பகுதிக்குச் சென்றடைந்துவிடும் என்ற காரணத்தினாலேயே ஜே.வி.பி. அதற்கு எதிராகப் போர்க் கொடிதூ}க்கியது. தற்பொழுதும் அவசர நிவாரண உதவிகள் யாவும் கிடைக்கப்பெற்றுää உடனடி நிவாரணப்பணிகள் யாவும் தெற்கில் பூர்த்தியானதும் உதவிகள் வடக்கு-கிழக்கிற்கும் பகிர்ந்தளிக்கப்படவேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ள நிலையில்ää சர்வதேச உதவி தொடர்பான சர்ச்சையை அது தோற்றுவித்து வருகின்றது. ஜே.வி.பியின் இன்றைய நிலைப்பாட்டின்படிää ஏகாதிபத்தியமோää வெள்ளைத்தோலோ என்ற பேச்சுக்கள் எல்லாம் இல்லை. சர்வதேச உதவிகள் வேண்டாம்ää எங்கள் கால்களில் நாங்கள் நிற்போம் என்ற குரலும் இல்லை. தற்பொழுது அவர்களின் குரல் தமிழரின் கைகளில் சர்வதேச நிதியுதவிகள் சென்றடையக்கூடாது என்பதும்ää சமாதானப் பேச்சுக்கள் ஆரம்பிக்கும் சூழ்நிலையை சுனாமி அனர்த்தம் உருவாக்;கிவிடக்கூடாது என்பதுமே. நன்றி: ஈழநாதம் - Mathan - 02-04-2005 பொதுக் கட்டமைப்பும் ஜே.வி.பியின் எதிர்ப்பும் அனர்த்த நிவாரணப் பணிகளை விடுதலைப்புலிகளுடன் இணைந்து அரசு மேற்கொள்வதற்கு ஜே.வி.பி.யினர் தொடர்ந்து அனுமதி மறுத்து வருகின்றனர். அனர்த்த நிவாரணமாக வழங்கப்படும் சர்வதேச உதவிகள் பாதிப்புற்ற சகல பிரதேசங்களுக்கும் சமமாக பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். இதே கருத்தையே விடுதலைப்புலிகளும்ää தமிழ் மக்களும்ää தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிவாரணப் பகிர்வு முறையாக மேற்கொள்ளப்படுவதனால் விடுதலைப்புலிகள் சிறிலங்கா அரசு இணைந்து ஒரு நிர்வாகக் கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும். அதன் மூலம் புனர்வாழ்வு புனரமைப்புப் பணிகளை மேற்கொ ள்ளவேண்டும். அண்மையில் இலங்கைக்கு வருகை தந்திருந்த நோர்வேயின் வெளிவிவகார அமைச்சர் தலைமையிலான குழுவினர் தேசியத் தலைவரைச் சந்தித்து கலந்துரையாடிய போது இந்த விபரம் ஆராயப்பட்டது. தமிழர் தாயகத்தில் நடந்த ஆழிப்பேரலை அனர்த்தமே அதிக பாதிப்பை ஏற்படுத்தியது. அதிகளவிலான மக்கள் உயிரிழந்துள்ளனர். அதிக சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளன. பல தமிழ் பேசும் கிராமங்களை கடல் காவு கொண்டு விட்டது. அதேவேளை முல்லைத்தீவு மாவட்டம் விடுதலைப்புலிகளின் நிர்வாகப் பகுதியாகும். தமிழர் தாயகத்தில் நடந்த அனர்த்தம் மக்கள் அவல நிலைää மீள்குடியேற்றம்ää தொழில்வாய்ப்பு போன்ற பணிகளை முன்னெடுத்துச் செல்வதனால் விடுதலைப்புலிகளின் ஒத்துழைப்பு கண்டிப்பாகத் தேவை. விடுதலைப்புலிகளை ஓரங்கட்டிவிட்டு அரசாலோ அல்லது வேறு சக்திகளாலோ மேற்கொள்ள முடியாது. அதன் மூலம் முறையான உதவிகள் தமிழ் பேசும் சமூகத்துக்கு கிடைக்கமாட்டாது. ஆழிப்பேரலை அனர்த்தம் நிகழ்ந்த நாளிலிருந்து இற்றைவரைக்கும் இரவு பகல் பாராது விடுதலைப்புலிகள் முழு அர்ப்பணிப்புடன் துயர் துடைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் அனர்த்த நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அனர்த்தம் நிகழ்ந்த பிற்பாடு அதிகம் பாதிப்புற்ற அம்பாறை மாவட்டத்திற்கு துயர் துடைப்பு மனிதாபிமானப் பணிகளை மேற்கொள்வதற்காக விடுதலைப்புலிகளின் தேசியத் தலைவர் அவர்கள் பெரும் தொகை நிதி வழங்கியிருந்தார் என்பது சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயம். ஆனால் பேரினவாதக் கட்சியான ஜே.வி.பி. இனவாதத்தை விதைத்து வருகிறது. தமிழர் தாயக மக்களுக்கு எதிர்காலத்தில் சர்வதேச உதவிகள் கிடைப்பதற்கு இவை தடையாக இருக்கின்றன. விடுதலைப்புலிகளுக்கும் சிறிலங்கா அரசுக்குமிடையிலான சமாதான பேச்சுக்கள் மீண்டும் ஆரம்பிப்பதற்கு ஜே.வி.பி. தடைக்கல்லாகச் செயற்பட்டது. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் ஜே.வி.பி. பிரதான பாத்திரத்தை வகித்து வருவதால் ஜனாதிபதியின் தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு இவை பெரும் அச்சுறுத்தலாக இருந்து வந்தமையும் குறிப்பிடத்தக்கது. தற்போது சர்வதேச ரீதியாக சிறிலங்கா அரசுக்கு கிடைக்கும் உதவிகள் தமிழர் தாயகத்துக்கு கிடைத்து விடக்கூடாது என்பதிலும்ää விடுதலைப்புலிகளுடன் எந்தவிதமான கூட்டுறவையும் வைத்து பொதுக் கட்டமைப்பை உருவாக்கக் கூடாது எனவும் ஜே.வி.பி.யினர் அரசுக்கு இறுக்கமாகத் தெரிவித்துள்ளது. அதனை மீறினால் அரசுடனான கூட்டு முகாமிலிருந்து வெளியே றிவிடும் சூழல் உருவாகலாம் எனவும் மறைமுகமாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. சமாதானப் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்படாமல் இருக்கும் இன்றைய நிலையில் அனர்த்த நிவாரணப் பணிகளை முன்னெடுப்பதற்கு அரசு விடுதலைப்புலிகள் இணைந்த ஒரு பொதுக் கட்டமைப்பு உருவாகுமானால் எதிர்காலத்தில் சமாதானத்துக்கான அடித்தளமாக அது அமைவதுடன் புரிந்துணர்வையும் ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் ஜே.வி.பி.யின் இன்றைய போக்கு இந்த கட்டமைப்பை செம்மையோடு உருவாக்க உதவுமா என்பது கேள்விக்குறி. நன்றி: மட்டக்களப்பு ஈழநாதம் - Mathan - 02-04-2005 சிறீலங்காவின் தேசியக்கொடிக்கு தீ வைப்பு சிறீலங்கா சுந்திர தினத்தை தமிழர் தாயகப் பகுதி எங்கும் புறக்கணித்து வரும் வேளையில் இன்று யாழ்ப்பாணம் பரமேஸ்வராச் சந்திப்பகுதியில் ஏற்றப்பட்டிருந்த சிறீலங்காவின் தேசியக் கொடியை யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் இணைந்து தீயிட்டுள்ளனர். தமிழர் தாயகப் பகுதிகள் எங்கும் சிறீலங்காவின் சுதந்திர தினத்தை துக்க தினமாக கடைப்பிடிக்குமாறு யாழ் மாவட்ட பொது அமைப்புக்கள் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. Puthinam - Mathan - 02-04-2005 பெற்றோரை கண்டறியும் மரபணு பரிசோதனை புதனன்று நடைபெறும் ஆழிப்பேரலையினால் அநாதரவான நிலையில் கல்முனை ஆதார வைத்தியசாலையின் பராமரிப்பிலுள்ள நான்கு மாத குழந்தையின் பெற்றோரை கண்டறிவதற்கான மரபணு பரிசோதனை எதிர்வரும் புதன்கிழமை கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையின் வைத்திய ஆய்வுகூடமொன்றில் நடைபெறவுள்ளது. பேராசிரியை டாக்டர் மாலா குணரட்ன இந்த மரபணு பரிசோதனையை நடத்துவார் என நீதிமன்றம் நேற்று சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவித்துள்ளது. அன்றைய தினம் முற்பகல் 10 மணிக்கு குழந்தையின் மாதிரி இரத்தம் பெறுவதற்கு அங்கு ஆஜர்படுத்த வேண்டும் என்று வைத்தியசாலை நிர்வாகத்திற்கும் மாதிரி இரத்தத்தை பெறுவதற்காக உரிமை கோரும் பெற்றோரும் அங்கு ஆஜராக வேண்டும் என்று சம்பந்தப்பட்ட பெற்றோருக்கும் கல்முனை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக கல்முனை வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில் அம்புலன்ஸ் வண்டியில் பராமரிப்பாளர் மற்றும் தாதியொருவரின் உதவியுடன் குழந்தை கொண்டு செல்லப்பட்ட வேண்டும். இவர்களுடன் நீதிமன்றப் பதிவாளர்ää சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்ää ஆகியோரும் செல்ல வேண்டும். கல்முனை பொலிசாருக்கு பிறப்பித்த உத்தரவில் குழந்தையை கொண்டு செல்வதற்கான பாதுகாப்பு ஒழுங்குகளை ஏற்பாடு செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. இந்த மரபணு பரிசோதனைக்கான செலவுகளையும் பெற்றோர் என உரிமை கோருபவர்களுக்கான போக்குவரத்து செலவுகளையும் யுனிசெப் பெர்றுப்பேற்க முன்வந்துள்ளது. வைத்திய ஆய்வு கூடத்தில் குழந்தையினதும்ää அதற்கு உரிமை கோரும் பெற்றோரினதும் மாதிரி இரத்தம் பெறப்படும் போது யுனிசெப் பிரதிநிதியொருவர் பிரசன்னமாகியிருப்பதற்கும் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. இதேவேளை நேற்று முன்தினம் கல்முனை வைத்தியசாலையில் இடம்பெற்ற அத்துமீறல் சம்பவங்கள் தொடர்பாக கைதாகி நேற்றிரவு பினையில் விடுதலை செய்யப்பட்ட குழந்தைக்கு உரிமை கோரும் பெற்றோர்களான ஜெயராஜா ஜூனித்தா தம்பதிகள் நேற்று கல்முனை நீதிமன்றத்தில் மீன்டும் ஆஜரானார்கள். இவர்களை எச்சரித்த நீதவான் எம்.பி.மொகைதீன் வாரத்தில் 3 தடவைகள் மட்டுமே குழந்தையை பார்வையிட முடியும் என்றும் இன்று உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையில் தற்போது வைத்தியசாலையில் உள்ள இந்த குழந்தைக்கு தற்போது விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. புதினம் - Mathan - 02-04-2005 பிரிட்டிஷ் அகதிகள் பணியக அதிகாரி தமிழ்ச்செல்வனுடன் சந்திப்பு பிரித்தானியாவின் அகதிகள் பணியக, அகதிகள் விவகார ஆலோசகர் கே.எஸ்.நாதன் கிளிநொச்சி சென்று விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வனை சந்தித்து இயற்கை அனர்த்தம் தொடர்பான புள்ளிவிபரங்களை கேட்டறிந்துள்ளார். இதனையடுத்து வவுனியா வந்த அவர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கல நாதனையும் சந்தித்து இயற்கைஅனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் விபரங்களையும் கேட்டறிந்துள்ளார். அதேநேரம் பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்களின் கோரிக்கையை மனிதாபிமான ரீதியில் ஏற்றுக் கொள்வதற்கு தம்மாலான முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார் Thinakkural - Mathan - 02-05-2005 பாதிக்கப்பட்ட இடங்களை முன்னாள் அமெரிக்க ஜனாதிபதிகள் இருவர் பார்வையிடுவர் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதிகளான பில் கிளின்ரன் மற்றும் ஜோர்ஜ் புஷ் அடங்கிய ஒரு குழுவினர் ஆழிப்பேரலையினால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிடுவார்கள் என அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் நேற்று அறிவித்துள்ளார். இம் மாதம் 19ம் திகதியிலிருந்து 21ம் திகதி வரை மேற்கொள்ளப்பட இருக்கும் இவ் விஜயம்ää இலங்கை இந்தோனேசியா தாய்லாந்து மற்றும் மாலைதீவு நாடுகளை உள்ளடக்கியதாக இருக்கும் எனவும் வெள்ளை மாளிகை மேலும் தெரிவித்துள்ளது. ஆழிப்பேரலை நடந்த ஒரு சில நாட்களிலேயே பில் கிளின்ரனையும் தனது தந்தை ஜோர்ஜ் புஷ்சையும் அமெரிக்காவில் நிவாரண நிதி சேகரிப்பு பணிகளுக்கு பொறுப்பானவர்களாக தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி புஷ் நியமித்து இருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது. இது போன்றேää ஜக்கிய நாடுகள் சபையும்ää ஆழிப்பேரலையினால் பாதிக்கப்பட்ட இடங்களின் புனர் நிர்மாண மற்றும் நிவாரண வேலைகளை மேற்பார்வையிடும் தனது விசேட பிரதிநிதியாக பில் கிளின்ரனை நியமித்திருப்பதும் தெரிந்ததே. Puthinam - Mathan - 02-06-2005 எதிர்மறையான முடிவுகளைத்தான் சிறீலங்கா அரசு நோர்வே அனுசரணையாளரிடம் தெரிவித்திருக்கிறது -சு.ப.தமிழ்ச்செல்வன் எங்கள் ஆலோசனைக்கு எதிர்மறையான முடிவுகளைத்தான் தங்கள் கருத்துக்களாக நோர்வே அனுசரணையாளர்களூடாக எமக்குத் தெரியப்படுத்தியுள்ளார்கள் என்று தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். இன்று சிறீலங்காவிற்கான நோர்வேத் தூதுவரை சந்தித்த பின்னர் ஊடகவியாலளர்களுக்கு வழங்கிய பேட்டியின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்த பேட்டியின்போது சு.ப.தமிழ்ச்செல்வன் வழங்கிய பதில்கள் வருமாறு: கேள்வி:- இன்றைய சந்திப்புத் தொடர்பாக? பதில்;:- இன்று நோர்வே சிறிலங்காத் தூதுவருடனான சந்திப்பு ஆழிப்பேரலை இயற்கை அனர்த்தத்தால் ஏற்பட்;ட பேரழிவினால் பாதிக்கப்பட்;ட எமது மக்களின் உடனடி மனிதாபிமான உதவிகள் நிவாரணப்பணிகள் மீள்கட்டுமாணப் பணிகளை முன்னெடுப்பது புலிகளும் சிறீலங்கா அரசம் இணைந்து ஒரு பொதுக்கட்டமைப்பினை நிறுவுவது தொடர்பாக கடந்த காலங்களில் உரையாடப்பட்டு வந்தது. நோர்வே அனுசரணையாளர்கள் என்ற வகையிலும்䤠அதில் நோர்வேத் தூதுவர்; ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்; என்ற வகையிலும் தீர்மானங்களை எடுப்பதற்கும் நடைமுறைச் சிக்கல் தொடர்பாக இன்று கலந்துரையாடியுள்ளார். குறிப்பாக இன்றைய சந்திப்பில் எம்மால் தெளிவுபடுத்தப்பட்ட விடயம் ஆழிப்பேரலை அனர்த்தம் நடந்து ஒரு மாதம் கடந்து விட்டது. எம்மக்களுக்;கான நிவாரண மீள் கட்டுமாணப்பணிகளை முன்னெடுப்பதற்கு சர்வதேச உதவிகளைப் பகிர்ந்து கொள்வதற்கு எவ்வித கட்டமைப்புக்களையும் நிறுவுவதற்கான எவ்விதமான ஆக்கப10ர்வமான நடைமுறைகள் எதுவும் எட்டப்படாது䤠எமது மக்கள் மத்தியில் விரக்தி நிலையையும் ஏமாற்றத்தையும் அளித்துள்ளது என்பதை நோர்வேத் தூதுவருக்கு எடுத்துக்கூறியுள்ளோம். விரைவாக சர்வதேச உதவிகள் எமது பகுதிகளுக்கு திருப்ப வேண்டும் என்பதனையும் இதில் வலியுறுத்தியுள்ளோம். எங்களால் கொடுக்கப்பட்ட ஆலோசனைகளை அரசாங்கம் ஏற்றுக்கொள்வதாகத் தெரியவில்லை. இந்த வகையில் பொதுக்கட்டமைப்பினை நிறுவுவது எந்தளவு சாத்தியம் என்பது பற்றிக் கூற முடியாதுள்ளது. ஏனெனில் அரசாங்கம் புதிய நிபந்தனைகளை விதித்துக் கொண்டிருப்பதாக தெரிகிறதே தவிர பொதுக்கட்டமைப்பினை நிறுவுவதற்கு மனப்ப10ர்வமாக செயற்படுவதாக தெரியவில்லை. சர்வதேச உதவிகளை விரைந்து நடைமுறை ஒழுங்குகளுக்கு ஏற்ப எமது மக்களுக்கு பகிர்ந்தளிக்க நேரடியாகக் கிடைக்கக்கூடிய வகைகளை சர்வதேச சமூகம் பரீசிலிக்க வேண்டும் என்பதனையும் இன்றைய சந்திப்பில் வலியுறுத்தியுள்ளோம். கேள்வி:- அரசு ஏதாவது புதிய செய்திகள் அனுப்பி வைத்துள்ளதா? பதில்:- ஏற்கனவே எமது வடக்கு கிழக்கு தாயகப் பிரதேசத்தினுடைய நிவாரணப்பணிகள் மீள்கட்டுமாணப் பணிகள் அபிவிருத்தி நடவடிக்கைகளை குறிப்பாக ஆழிப்பேரலையினால் பாதிக்கப்பட்ட கரையோரப் பகுதிகளையும் அங்கு வசிக்கும் மக்களுக்கு உதவுவதற்கான ஆலோசனைகளை நோர்வே அனுசரணையாளர்கள் மூலமாக அரசுக்கு அனுப்பியிருந்தோம். எங்கள் ஆலோசனைக்கு எதிர்மறையான முடிவுகளைத்தான் தங்கள் கருத்துக்களாக அனுசரணையாளர்களூடாக எமக்குத் தெரியப்படுத்தியுள்ளார்கள். அரசின் முடிவுகள் எமக்கு அதிர்ச்சி தருபவையாக உள்ளது. நடைமுறைச் சாத்தியமற்ற முடிவுகளை அரசு தெரியப்படுத்திக் கொண்டிருப்பது இணக்கப்பாட்டிற்கு வந்து செயற்பாடுகளை மந்தப்படுத்தும் நோக்கோடுதான் அரசு செயற்படுவதாக எம்மால் உணர முடிகின்றது என்பதை இன்றைய சந்திப்பில் சுட்டிக்காட்டியுள்ளோம். அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சர்வதேச உதவிகள் ஏனைய வழிமுறைகள் ஊடாகவே வந்து சேரவேண்டும். அதற்கு உரிய வாய்ப்பினை எற்படுத்த வேண்டும் என்பது தான் எமது நிலைப்பாடாக உள்ளது. கேள்வி:- எந்த வகையில் புலிகளுக்கும் அரசுக்கும் தற்போது முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன? பதில்:- பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படையில் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும். சர்வதேச உதவிகளை தமிழர் தாயகத்திற்கு கொண்டு வருவதற்கு ஒரு நடுநிலையான சர்வதேச நிறுவனமே உதவிப்பொருட்களை பகிர்ந்தளிக்க பொறுப்பாக இருக்க வேண்டும். வட கிழக்கிற்கான பாதுகாவலனாக நிவாரண மீள்கட்டுமான அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு ஒரு சர்வதேச நிறுவனம் இருக்க வேண்டும் என்பதனை நாம் ஏற்கனவே வலியுறுத்தியுள்ளோம். அவ்வாறான ஒரு அமைப்பினூடாகத்தான் சர்வதேச உதவிகள் எமது பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதனை கடந்த கால அனுபவங்களின் அடிப்படையிலும் எம்மால் வலியுறுத்தப்பட்ட விடயம் ஆகும். அரசு எமது முடிவுகளை கவனத்தில் எடுத்ததாகத் தெரியவில்லை. மேலும் வட கிழக்கிலே முஸ்லிம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆகவே முஸ்லிம்களின் பிரதிநிதித்துவமும் சில மாவட்டங்களில் பேணப்பட வேண்டும் என்பதனையும் நாம் வலியுறுத்தியுள்ளோம். இவ்வாறு பல்வேறுபட்ட விடயங்கள் கட்டமைப்பிலே உள்வாங்கப்பட வேண்டிய பிரதிநிதித்துவம் சம்பந்தமாக தமிழர் தாயகத்திற்கான மீள்கட்டுமாண நிவாரணப்பணிகளை மேற்கொள்வதற்கான நிதியத்தின் பாதுகாவலனாக நியமிக்கப்படும் விடயங்களிலும் பல சிக்கல்கள் இருப்பதாகவே எமக்கு தெரிகின்றது. கேள்வி:- சிரான் அமைப்பு போன்று தான் இவ்வமைப்பிற்கு ஏற்படும் என்று நீங்கள் நம்புகின்றீர்களா? பதில்:- எங்களைப் பொறுத்த வரையில் இதுவொரு உண்மையிலே இயற்கைப் பேரனர்த்தத்தால் பாரியளவு மனிதாபிமான நெருக்கடியைச் சந்திக்கும். மக்களுக்கு உடனடி மனிதாபிமான புனர்வாழ்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது அவசியமானது. சிறீலங்காவில் மட்டுமல்ல. தென்னாசியா முழுவதுமே பேரிழப்பினைச் சந்தித்துள்ளது. மனிதாபிமான உதவியை சந்தித்து நிற்கும் சூழலில் இலங்கைத் தீவிலேயும் தமிழர் தாயகம் தான் கூடுதல் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளது. சர்வதேச உதவிகள் எமது பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பது ஒரு மனிதாபிமான தேவையாக உள்ளது. மனிதாபிமானத் தேவைகள் எழுந்து நிற்கும் சூழலில் கடந்த காலத்தில் ஏற்பட்ட முரண்பாடுகள் போல் தீர்வு காணப்படாமல் போன விடயங்கள்; போல் இந்த மனிதாபிமான உதவிகளையும் இழுத்தடிக்க முடியாது. உடனடியாகத் தீர்வு காணப்பட வேண்டும் என்பதை நாம் வலியுறுத்தியுள்ளோம் முடிவுகள் எப்படி போகும் என்பதை எம்மால் கூறமுடியாது. நடமுறையில் அரசாங்கம் ஒத்துழைப்பு தராத நிலைதான் இன்று வரையுள்ளது. கேள்வி:- அரசு எடுத்திருக்கும் முடிவுகள் தங்களுக்கு நம்பிக்கை இழக்கச் செய்துள்ளதா? பதில்:- நிச்சயமாக அரசாங்கம் விடுதலைப்புலிகளுடன் ஒரு இணக்கப்பாட்டிற்கு வருவதாகவும் தாம் பேசிக்கொண்டிருப்பதாகவும் ஒருதோற்றப்பாட்டை காட்டி வருகிறதே தவிர ஒரு கட்டமைப்பினை நிறுவி விரைந்து மக்களுடைய மனிதாபிமான நெருக்கடிக்கு தீர்வுகாண அரசு முயற்சி எடுப்பதாகத் தெரியவில்லை. பொய்யான தோற்றப்பாட்டை உருவாக்கி சர்வதேச உதவிகளை கவர்ந்திழுக்கும் ஒரு முயற்சியில் தான் அரசு இறங்கியுள்ளதே தவிர பாதிக்கப்பட்ட மக்கள் உதவிகள் புரிய வேண்டும் என்பதில் அரசு அக்கறை செலுத்தவில்லை. அரசின் போக்கு எமக்கு நம்பிக்கை தருவதாகத் தெரியவில்லை. கேள்வி:- உதவி வழங்கும் நாடுகளின் நிலைப்பாடு எப்படி உள்ளது.? பதில்:- சர்வதேச நிறுவனங்கள் முழு அளவிலான அழுத்தத்தைப் பிரயோகித்துக் கொள்கின்றார்கள். இரண்டு தரப்பும் இணைந்து ஒரு பொதுக் கட்டமைப்பினை உருவாக்குவதன் ஊடாகவே சரியான வகையில் சர்வதேச உதவிகள் சரியான முறையில் சேர்க்கப்படும் என்பது ஒரு எண்ணப்பாடாகவும் விருப்பமாகவும் உள்ளது. ஆனால் பொதுக்கட்டமைப்புக்களுக்கான உருவாக்கத்திற்கான சூழல் உருவாக்கப்படவில்லை. இனி சிறீலங்கா அரசினை நம்பிக் கொண்டிருக்க முடியாது என்பதனையும் சர்வதேச சமூகத்திடம் கூறி வருகின்றோம். சர்வதேச உதவிகள் நேரடியாக இங்கு கொண்டு வரக்கூடிய வழிமுறைகளை சர்வதேச சமூகம் கண்டறிய வேண்டும் என்பதனை யதார்த்தத்தின் அடிப்படையில் எம்மால் வலியுறுத்தப்பட்டது. கேள்வி:- சர்வதேச உதவிகள் நேரடியாக வரக்கூடிய சூழல் உள்ளதா? பதில்:- சர்வதேச சமூகத்திடம் ஒரு பாரிய பொறுப்பு உள்ளது. ஒரு மனித இனம் பேரிழிவினைச் சந்திக்கும் நிலையில் உதவிகள் செய்ய வேண்டும் என்பது சர்வதேச சமூகத்தின் கடமையும் பொறுப்புமாகும். அந்த வகையில் பேரழிவைச் சந்தித்து நிற்கும் எமது மக்களுக்கு சர்வதேச சமூகம் நேரடியாக உதவிபுரியும் என நம்புகிறோம். அதற்கான முயற்சிகளையும் எடுத்து வருகின்றோம். கேள்வி:- ஆழிப்பேரலையின் பின்பு சிறுவர்களை புலிகள் இணைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதே? பதில்:- சிறுவர்களை இணைக்கிறோம் என குற்றம் சாட்டுகிறார்களே தவிர இந்தப் பேரனர்த்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான சிறுவர்களை தமிழீழ விடுதலைப்புலிகள் புனர்வாழ்வுப் பணிகளிளும் மறுவாழ்வுப் பணிகளிளும் ஈடுபடுத்தியுள்ளதை குற்றம் சாட்டுபவர்கள் திரும்பிக்கூடப் பார்க்காதவர்களாக உள்ளனர். தற்போது கூட ஆழிப்பேரலையினால் ஆயிரக்கணக்கான சிறார்கள் பெற்றோர்களை இழந்து எந்தவித உதவிகளும் கிடைக்காத நிலையில் பரிதவித்த நிலையி;ல் உள்ளனர். அச்சிறார்களுக்கு ஆக்கப10ர்வ உதவிகள் புரியாமல் விடுதலைப்புலிகள் மீது குற்றம் சாட்டுவதிலும் சேறு பூசுவதிலும் பொய்ப்பரப்புரை செய்வதிலும் சில அமைப்புக்கள் ஈடுபட்டுள்ளனர் இது எமக்கு மிகுந்த கவலையைத் தருகிறது என்றார். Puthinam - Mathan - 02-06-2005 <img src='http://www.thinakkural.com/New%20web%20site/web/2005/February/06/cat.gif' border='0' alt='user posted image'> தினக்குரல் - Mathan - 02-06-2005 மற்றொரு போருக்கான ஆயத்தம்!? <b>பாகிஸ்தானுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்வதற்காக இஸ்லாமாபாத் புறப்படும் ஜனாதிபதி சந்திரிகா...</b> மற்றொரு போருக்கான ஆயத்தங்களை இலங்கை அரசு மேற்கொண்டு வருகின்றதா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. பல நாடுகளுடனும் பாதுகாப்பு ஒப்பந்தங்களைக் கைச்சாத்திட்டு வரும் அரசு முப்படையினருக்குமான ஆயுதத் கொள்வனவிலும் தீவிர அக்கறை காட்டி வருகின்றது. அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த நடவடிக்கைகள், அரசு போருக்கான தயாரிப்பில் இறங்கிவிட்டதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. ஈரானிடமிருந்து எண்ணெய்க்காக ஆயுதங்களைக் கொள்வனவு செய்வது தொடர்பாகப் பேச்சுக்களை நடத்திய ஜனாதிபதி சந்திரிகா, தற்போது பாகிஸ்தானுடன் பாதுகாப்பு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதற்காக அவர் நாளை 7 ஆம் திகதி 3 நாள் பயணமாக இஸ்லாமாபாத் செல்லவுள்ளார். இந்தியாவுடன் பாதுகாப்பு உடன்பாடொன்றில் கைச்சாத்திடுவதில் இலங்கை அரசு, கடந்த வருடம் முழுவதும் தீவிர அக்கறை காட்டி வந்தது. எவ்வேளையிலும் அந்த ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கைச்சாத்திடலாமென்ற நிலையில், அந்த ஒப்பந்தத்திற்கெதிராக தமிழகத்தில் எழுந்த கடும் எதிர்ப்பால் அதிலிருந்து இந்தியா பின்வாங்கியது. இது இலங்கைத் தரப்பிற்கு கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. கடல்கோள் அனர்த்தத்தால் இலங்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டபோது இலங்கையில் உதவிப் பணிகளுக்காக விரைந்து வந்த இந்தியா, அமெரிக்கப் படைகள் இங்கு வருவதைத் தடுக்க தன்னாலான முயற்சிகளை மேற்கொண்டும் அதனையும் மீறி அமெரிக்கப் படைகளை அழைத்ததன் மூலம் இலங்கை அரசு இந்தியா மீதான தனது அதிருப்தியை வெளிப்படையாகவே காண்பித்தது. இது இந்தியாவைக் கடுமையாகச் சீண்டி, இலங்கை தொடர்பாகவும் விடுதலைப் புலிகள் மற்றும் ஈழ விடுதலைப் போராட்டம் தொடர்பாகவும் தங்கள் கொள்கையில் மாற்றங்களைச் செய்யும் நிலைக்கு இந்தியாவை தள்ளியுள்ள போதிலும், தங்களுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட இந்தியா தயங்கியதற்கான தண்டனையை அமெரிக்கப் படையை இங்கு அழைத்து இந்தியாவையும் மீறி தங்களால் எதுவும் செய்ய முடியுமென்பதை இலங்கை அரசு மிடுக்குடன் காட்டிவிட்டது. இலங்கை வந்துள்ள அமெரிக்கப் படைகள் இங்கிருந்து செல்லுமா என்ற கேள்வி எல்லாத் தரப்பினரிடமும் எழுந்துள்ள நிலையில் இந்தப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் நெருங்கிய தோழனும் இந்தியாவின் பரம விரோதியுமான பாகிஸ்தானுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் உட்பட பல்வேறு ஒப்பந்தங்கள் குறித்தும் ஆராய்வதற்காக ஜனாதிபதி சந்திரிகா நாளை திங்கட்கிழமை இஸ்லாமாபாத் செல்கிறார். கடல்கோள் அனர்த்த நிவாரணப் பணிகள் மற்றும் புனர்வாழ்வு, புனர் நிர்மாணப் பணிகள் குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையிலும், ஜனாதிபதி சந்திரிகா தனது பாகிஸ்தான் பயணத்தைத் தொடர்வதன் மூலம், பாதுகாப்பு விடயத்தில் ஜனாதிபதி எவ்வளவு தூரம் அக்கறை காட்டுகின்றார் என்பது தெளிவாகியுள்ளது. ஏற்கனவே, சீனாவுடன் பாதுகாப்பு உடன்பாட்டில் கைச்சாத்திட்ட இலங்கை அரசு, ஈரானிடமிருந்தும் பல நூறு கோடி ரூபா பெறுமதியான போர்த் தளபாடங்களைக் கொள்வனவு செய்யவுள்ளது. இலங்கையில் அண்மைக் காலங்களில் எரிபொருளின் விலை பெருமளவில் அதிகரித்த நிலையில், ஈரானிடமிருந்து எண்ணெய்க்காக ஆயுதங்களைக் கொள்வனவு செய்யும் உடன்பாடொன்றை இலங்கை அரசு மேற்கொண்டது. இதன்படி, ஈரானிடமிருந்து குறைந்த விலையில் எரிபொருளை கொள்வனவு செய்யும் அநேநேரம், அதற்கு ஈடாக ஆயுதங்களைக் கொள்வனவு செய்ய இணக்கம் தெரிவித்தது. இதற்காக முப்படைகளினதும் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவொன்று ஈரான் சென்று, கொள்வனவு செய்யும் ஆயுதங்களைப் பரிசோதித்த பின்னர் அண்மையில் நாடு திரும்பியது. விரைவில் இந்த ஆயுதக் கொள்வனவு நடைபெறவுள்ளது. இந்தச் சூழ்நிலையில்தான் இலங்கைக்கு இராணுவ உதவிகளை அள்ளி வழங்கும் நாடுகளில் மிக முக்கிய நாடான பாகிஸ்தானுக்கு ஜனாதிபதி செல்கிறார். சுமார் 200 கோடி ரூபா பெறுமதியான ஆயுதங்களை, நீண்ட காலக் கடனுக்கு வழங்கும் சலுகையை அண்மையில் பாகிஸ்தான் வழங்கியதை அடுத்தே ஆயுதக் கொள்வனவு குறித்தும் பாதுகாப்பு உடன்பாடு குறித்தும் இலங்கை அரசு பாகிஸ்தானுடன் ஆராயவுள்ளது. கடல்கோள் அனர்த்தத்தால் இலங்கை படையினர் பாரிய இழப்புகளைச் சந்தித்தனர். ஆட்லறிகள், பீரங்கி மோட்டார்கள் உட்பட பல கோடி ரூபா பெறுமதியான போர்த் தளபாடங்களைக் கடல் காவு கொண்டது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட படையினரும் காணாமல் போய்விட்டனர். பல படை முகாம்கள் இருந்த இடமே தெரியாமல் அடித்துச் செல்லப்பட்டன. கடற்படையினரே இதில் பாரிய இழப்புகளை சந்தித்திருந்தனர். போர்க் கப்பல், பீரங்கிப் படகுகள் உட்பட பல கடற்படை கலங்கள் உடைந்து நொருங்கின. காலி கடற்படைத் தளமும் திருகோணமலை மற்றும் காங்கேசன்துறை கடற்படைத் தளமும், பெரும் இழப்புகளைச் சந்தித்தன. இந்த நிலையிலேயே கடல்கோள் அனர்த்தத்திற்காகச் சர்வதேச சமூகம் அள்ளிக் கொடுத்த பெரும் நிதியிலிருந்து சுமார் 400 கோடி ரூபாவுக்கு போர்க் கப்பல்களைக் கொள்வனவு செய்ய கடற்படையினர் தீவிர அக்கறை காட்டுகின்றனர். வெளிநாடுகளிலிருந்து வந்து குவியும் நிதியில் ஒரு பகுதியை கடற்படையினரின் பலத்தை கட்டியெழுப்ப ஒதுக்க வேண்டுமெனவும் பல பீரங்கிப் படகுகளை கொள்வனவு செய்ய ஒதுக்குமாறும் கூட்டுப் படைகளின் தளபதியும் கடற்படைத் தளபதியுமான வைஸ் அட்மிரல் தயாசந்தகிரி கோரியுள்ளார். சுமார் 400 கோடி ரூபா செலவில் கடற்படைக்கான கப்பல்களை கொள்வனவு செய்யும் ஒப்பந்தமொன்றில் கடந்த டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி அட்மிரல் தயாசந்தகிரி தனியார் நிறுவனமொன்றுடன் ஒப்பந்தமும் செய்துள்ளார். சுமார் 300 கோடி ரூபா செலவில் பத்து அதிவேக பீரங்கிப் படகுகளையும் 60 கோடி ரூபா செலவில் துருப்புக் காவி, தரையிறங்கு கலங்களையும் கொள்வனவு செய்வதே இந்த ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தம் கைசாத்தாகி நான்கு நாட்களில் கடல்கோளினால் கடற்படை பாரிய இழப்பைச் சந்தித்ததால், தற்போது சர்வதேச சமூகம் அள்ளிக் கொடுக்கும் நிதியில் ஒரு பகுதியை கடற்படைக்காக கிள்ளியெடுப்பதற்கான திட்டங்களுடன் கடற்படைத் தளபதி காய் நகர்த்தி வருகிறார். கடற்படையை கட்டியெழுப்ப முயற்சி ஒரு புறம் நடக்கையில், விமானப் படையினருக்கான போர் விமானக் கொள்வனவில் தீவிர அக்கறை காட்டி வரும் விமானப் படைத்தளபதி ஏயார் மாஷல் டொனால்ட் பெரேரா, பலாலி விமானத் தள ஓடு பாதையையும் பலகோடி ரூபா செலவில் அவசர அவசரமாகப் புனரமைத்து வருகின்றார். இதற்காக அமெரிக்க படையினரின் ஆலோசனைகளும் பெறப்பட்டுள்ளன. நிவாரணப் பணிக்கென அமெரிக்கப் படைகள் பாரிய சரக்கு விமானங்களிலும் பாரிய கடற்படைக் கப்பல்களிலும் வந்திறங்கிய போது அவர்கள் பெருமளவு இயந்திர உபகரணங்களையும் கொண்டு வந்தனர். ஆனால் அவை குறித்த விபரங்கள் வெளியிடப்படவில்லை. ஆனாலும் இங்கு கொண்டு வந்த இந்த இயந்திர உபகரணங்களில் பெரும்பாலானவற்றை அவர்கள் இங்கேயே விட்டுச் செல்லவுள்ளனர். அவை இராணுவத் தளபாடங்களாகக் கூட இருக்கலாம். வேறொரு நாளில் அமெரிக்க கப்பல்கள் அல்லது விமானங்கள் வந்தால் அவை மிக நுணுக்கமாக அவதானிக்கப்படும். அவற்றில் என்னென்ன வருகின்றன என்பதும் அறியவரும். ஆனால் நிவாரணப் பணிக்கென நூற்றுக்கணக்கான விமானங்கள் அடுத்தடுத்து வந்திறங்கிய போது அவற்றில் வந்தவை பற்றி எதுவுமே தெரியாது. இராணுவத் தளபாடங்கள் கூட அவற்றில் அடங்கியிருக்கலாம். இந்த நிலையில் அமெரிக்காவிடமிருந்து இலங்கை விமானப் படையினர் போர் விமானங்களை கொள்வனவு செய்யவுள்ளதுடன், பாரிய சரக்கு விமானமான சி.130 ற்கான உதிரிப்பாகங்களையும் கொள்வனவு செய்யவுள்ளனர். அமெரிக்கத் தயாரிப்பான சி.130 ரக ஹேர்குலிஸ் சரக்கு விமானங்கள் இரண்டு தற்போது இலங்கை விமானப் படையினரிடம் இருக்கின்றபோதிலும் அவை பழுதடைந்த நிலையில் ஒரு மூலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இவற்றை திருத்துவதற்கான உதிரிப்பாகங்களை தந்துதவுமாறு விமானப் படைத்தளபதி கேட்டுள்ளார். அத்துடன், அமெரிக்காவில் தேவைக்கு அதிகமாயிருக்கும் சரக்கு விமானங்களில் ஒன்றையாவது தந்துதவுமாறும் அவர் கேட்டுள்ளார். பல நூறு துருப்புகளையும் யுத்த டாங்கிகள் போன்ற கனரக வாகனங்களையும் ஒரே நேரத்தில் ஏற்றியிறக்கும் வல்லமை கொண்ட இந்தச் சரக்கு விமானங்கள் தரையிறங்கும் வகையிலேயே தற்போது பலாலி விமான ஓடு பாதையும் திருத்தியமைக்கப்படுகிறது. கடல்கோளினால் கடற்படையினர் பெரும் இழப்பைச் சந்தித்த அதேநேரம் கடற்புலிகளின் பெரும் வளர்ச்சியும், புலிகள் வசம் தற்போது வானூர்திகள் இருப்பதான தகவல்களுமே கடற்படையை பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது. இதையடுத்தே குடாநாட்டுக்கான படையினரின் பயணத்திற்கு இனிமேல் விமானப் படையை நம்பியிருக்க வேண்டிய நிலையை ஏற்படுத்த, விமானப் படையினரின் பலத்தை அதிகரிக்கும் நடவடிக்கையில் அரசு இறங்கியுள்ளது. புலிகளின் வான் படையிடமிருப்பதாக படையினர் கருதும் வானூர்திகள் யுத்த விமானங்களல்ல.அவை இலகு ரக விமானங்களென்பதால் விமானப் படையினரின் போர் விமானங்களுடன் அவை மோதலில் ஈடுபடமாட்டாது. ஆனாலும், அதனைப் பயன்படுத்தி புலிகள் முக்கிய இலக்குகள், படைத்தளங்கள், பாரிய போர்க் கப்பல்கள் மீது தற்கொலைப் படைத் தாக்குதல்களை நடத்தி விடக் கூடுமென்பதாலேயே விமானப் படையின் பலத்தை அதிகரிக்க வேண்டிய கட்டாய நிலைக்கு அரசு தள்ளப்பட்டுள்ளது. இலங்கை அரசின் அவசர வேண்டுகோளையடுத்து சி.130 ரக போக்குவரத்து விமானத்தை இலவசமாக வழங்க அமெரிக்கா முன் வந்துள்ளது. இதேநேரம் பெல்-412 மற்றும் `மில் மி-17' ரக போக்குவரத்து ஹெலிகொப்டர்களை கூடுதலாக வாங்க வேண்டுமென அமெரிக்கா சிறிய நிபந்தனையொன்றையும் விதித்துள்ளதால் இவற்றில் இரண்டு ஹெலிகொப்டர்களை உடனடியாக கொள்வனவு செய்ய இலங்கை அரசு தீர்மானித்துள்ளது. பெல் விமான நிறுவனமும் தனது ஹெலிகொப்டர்களை இலங்கைக்கு விற்பனை செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றது. கடல்கோள் அனர்த்தத்தால் அழிந்து போன தங்கள் தேசத்தின் மீள் கட்டுமாணப் பணிகளிலும் மக்களுக்கான நிவாரணப் பணிகளிலும் விடுதலைப் புலிகள் மிகவும் தீவிரமாக உள்ள இவ்வேளையில் அரசு ஏன் ஆயுதக் கொள்வனவிலும் யுத்தத்திற்கான தயார்படுத்தலிலும் தீவிரம் காட்டுகின்றதென்ற கேள்வியும் எழுகிறது. கடல்கோள் அனர்த்த நிவாரணப் பணிக்காகவும் ஏனைய தேவைகளுக்காகவும் வழங்கப்படும் வெளிநாட்டு உதவியை பயன்படுத்தி முப்படைகளையும் இவ்வேளையில் நன்கு கட்டியெழுப்பி விடலாமென அரசு கருதுவது போல் தெரிகிறது. இந்த நிதியை அரசு போர்த் தளபாடக் கொள்வனவுக்காகப் பயன்படுத்துவதாக விடுதலைப் புலிகளும் பகிரங்கமாக குற்றஞ்சாட்டிய நிலையில் இது குறித்து சர்வதேச சமூகமும் கவனம் செலுத்த வேண்டுமென்ற வற்புறுத்தலும் அதிகரித்து வருகின்றது. சமாதான முயற்சிகள் மீண்டும் ஆரம்பமாகும் வாய்ப்பே இல்லையென்ற நிலையிலும் தங்கள் இடைக்கால தன்னாட்சி அதிகார சபை யோசனையின் அடிப்படையில் மீண்டும் பேச்சுக்கள் ஆரம்பமாகாவிடின் ஈழ விடுதலைப் போராட்டத்தை தாங்கள் தொடரப் போவதாக புலிகள் அறிவித்த நிலையிலும் நாட்டில் மீண்டும் யுத்தம் வெடித்து விடலாமென்ற கடுமையான சூழ்நிலை நிலவியது. ஆனாலும் கடல்கோளானது சமாதான முயற்சிகளை மட்டுமல்லாது யுத்த சூழ்நிலையையும் அடித்துச் சென்றுவிட்டது. தற்போதைய நிலையில் அமெரிக்கப் படைகள் போன்று அந்நியப் படைகள் நிலை கொண்டிருக்கையில் இலங்கை அரசு யுத்த முனைப்பிலும் ஆயுதக் கொள்வனவிலும் தீவிரம் காட்டுவது குறித்து கேள்விகள் எழுகின்றன. இது குறித்து இந்தியாவும் மிக அவதானமாக இருக்கின்ற போதும் இலங்கை அரசு தனது நடவடிக்கைகளைத் தொடர்கிறது. தற்போதைய சூழ்நிலையைப் பயன்படுத்தி நாட்டைக் கட்டியெழுப்புகிறதோ இல்லையோ, அரசு படைபலத்தை கட்டியெழுப்புகிறது என்பது அப்பட்டமான உண்மை. தினக்குரல் - Mathan - 02-06-2005 அரசாங்கத்துக்குள் முறுகல் தீவிரம் ஜே.வி.பி. தலைவர் திடீரென நாட்டை விட்டு வெளியேற்றம் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் பிரதான பங்காளிகளான சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஜே.வி.பி.க்குமிடையில் முறுகல் நிலை உச்சக்கட்டத்தை அடைந்திருக்கும் நிலையில், ஜே.வி.பி. தலைவர் சோமவன்ஸ அமரசிங்க கடந்த செவ்வாய்க்கிழமை திடீரென நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். ........... தினக்குரல் |