![]() |
|
எங்கே போகிறது யாழ்ப்பாணம்... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: எங்கே போகிறது யாழ்ப்பாணம்... (/showthread.php?tid=8345) |
- P.S.Seelan - 08-11-2003 கிணத்துத் தண்ணியோ குளத்துத்தண்ணியோ தமிழீழ மண்ணில் எதைக் குடித்தால் என்ன? வன்னித் தண்ணி குடித்தால் வீரமாவது வரும் அல்லவா? சிங்களத்தின் சோம பானமாக இல்லாவிட்டால் நல்லது. ஒன்றுபடு தமிழா அன்புடன் சீலன் - Mathivathanan - 08-11-2003 P.S.Seelan Wrote:கிணத்துத் தண்ணியோ குளத்துத்தண்ணியோ தமிழீழ மண்ணில் எதைக் குடித்தால் என்ன? வன்னித் தண்ணி குடித்தால் வீரமாவது வரும் அல்லவா? சிங்களத்தின் சோம பானமாக இல்லாவிட்டால் நல்லது.அண்மையில்.. வன்னிமண்ணிற்குப்போய்.. குடல்.. ரேஸ்ருடன்.. சோமபானம்.. அருந்தியதை.. வீணிவடியச்.. சொல்லிக்.. கேட்டேன்.. எங்களுரில். இல்லாத.. குளங்களா..? அதைக்.. குடிப்பதற்கு.. பொதுமக்கள்.. தயாராக.. இல்லைப்போலும்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- P.S.Seelan - 08-11-2003 அதுக்கென்டே சில ஜென்மங்கள் ஓடுதுகள். அவையிட்ட கேக்கையில்லையே ஏத்தினமோ இறக்கினமோ என்று? புலத்தில போத்தல் தண்ணி குடிச்சு வளந்தவை குளத்துத் தண்ணியை குடிப்பினமோ? ஒன்றுபடு தமிழா அன்புடன் சீலன் - Mathivathanan - 08-11-2003 P.S.Seelan Wrote:அதுக்கென்டே சில ஜென்மங்கள் ஓடுதுகள். அவையிட்ட கேக்கையில்லையே ஏத்தினமோ இறக்கினமோ என்று? புலத்தில போத்தல் தண்ணி குடிச்சு வளந்தவை குளத்துத் தண்ணியை குடிப்பினமோ?ஏன்ராப்பா.. கிணத்துத்.தண்ணி இருக்க.. குளத்துத்தண்ணி.. குடி.. யெண்டும்.. திணிப்பியள்.. போலை.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- sethu - 08-12-2003 அது கள்ளு எண்டு நினைக்கிறன். - P.S.Seelan - 08-12-2003 குடா நாட்டின் கிணற்று நீர் அதிக உவர்ப்புத் தன்மையுடன் காணப்படுவதாக செய்திகள் சொல்கின்றன. பல இடங்களில் உள்ள கிணருகள் உபயோகத்திற்கு பயன்படாத தண்ணீர் உள்ளதாக கண்டுபிடித்திருக்கிறார்கள். சேது கிணத்துத் தண்ணி தான் கலப்பு கள்ளு இன்னும் ஒரிஜினல் தான். ஒன்றுபடுதமிழா அன்புடன் சீலன் - kuruvikal - 09-10-2003 வடக்குக்கிழக்கில் எயிட்ஸ் நோயின் தாக்கம் அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது...மிக அண்மைக்காலத்தில் மட்டும் எயிட்ஸ் தொற்றுக்குள்ளான 12 பேர் (யாழ்ப்பாணம்-06,மட்டக்களப்பு-04,திருமலை-02) இங்கு இனங்காணப்பட்டுள்ளனர்...! தொற்றுக்குள்ளானவர்களில் பலரும் வெளிநாடுகளில் (மேற்குல நாடுகள் மற்றும் இந்தியா) இருந்து வருபவர்களாக அல்லது அவர்களுடன் நெருங்கிய தொடர்புள்ளவர்களாக இருப்பதால் வெளிநாடுகளில் இருந்து செல்வோர் எதிர்காலத்தில் கடும் பரிசோதனைக்கு உள்ளாக்கப்படவுள்ளதாகவும் தெரியவருகிறது.....! தற்போதய யாழின் சமுதாயச் சீரழிவு விரைவான எயிட்ஸ் தொற்றுக்கு வழிவகுக்கவும் செய்யலாம் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது...எனவே இவற்றை முளையிலேயே அழிப்பதே சமுதாயத்திற்கு சிறந்ததாகவும் அமையும்...! Our Thanks to Tamilnet. - Kanani - 09-10-2003 சங்கர் போல யாராவது "புலம்பெயர் போய்ஸ் அன்ட் கேள்ஸ்" என்று படம் எடுத்து எல்லாத்தையும் வெளிச்சத்துக்கு கொண்டுவரவேண்டும்.... ஈழமக்களே வெளிநாட்டிலிருந்து வருவோரிடம் அவதானமாக இருத்தல் நல்லது! - Paranee - 09-10-2003 நல்லதொரு தகவல் வெளிநாட்டில் இருந்துவருபவர்களை கட்டாயம் மருத்துவ பரிசோதனை செய்தல்வேண்டும்;. நான் வாழும் இந்த அரேபிய மண்ணில் வருடத்திற்கு இரண்டு தடவை எமக்கு கம்பனிமூலமாக கட்டாய மருத்துவபரிசோதனை செய்கின்றார்கள். எந்தவித வருத்தம் இல்லாவிட்டாலும் எமக்கு மருத்துவபரிசோதனை செய்தே இருக்கவேண்;டும் - sOliyAn - 09-11-2003 அது சரி.. எய்ட்ஸ் எப்படி தொற்றும்..? - sethu - 09-11-2003 புhனைபோல கண்னை முhடிக்கொண்டு பால் குடிச்சால் எயிற்ஸ் வராமல் என்ன வரும். - kuruvikal - 09-11-2003 எயிட்ஸ் HIV எனும் வைரசின் மூலம் பரவுகிறது...! இவ்வைரசானது உடற்பாய் பொருட்கள் (குருதி,நிணநீர்,பிறப்புறுப்புத் திரவங்கள்,உமிழ்நீர்,பாற்சுரப்பு) என்பனவற்றில் உடல் வெப்பநிலையில் பல காலம் வாழக்கூடியவை...ஆனால் உடலுக்கு வெளியில் சில நிமிடங்களிலேயே அழிந்துவிடக்கூடியவை.....! மேற்படித்திரவங்கள்..... குருதி மாற்றீடு, தொற்று நீக்கற்ற ஊசிகளை பாவித்தல் சவர அலகுகளைப்பாவித்தல்,உடற்காயங்கள்,ஊசிகள்,உடலுறவு,பாலூட்டல்,காயம்பட்ட உதட்டில் முத்தமிடல்,தாயின் சூல்வித்தகத்தின் மூலம்..... நேரடியாகப் பரிமாறப்படும் போது ஓர் எயிட்ஸ் நோயாளியிடமிருந்து வைரசானது மற்றவருக்கு பரவுக்கூடியது....! இந்நோயை முழுமையாகக் கட்டுப்படுத்தக்கூடிய மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை...ஆனாலும் நோயாளியின் ஆயுளை சற்றே அதிககாலம் அதிகரித்து வைக்கக் கூடிய விலைகூடிய மருந்துகள் உள்ளன....! எது எப்படி இருப்பினும் வருமுன் காப்பதே சிறந்தது எனவே வைரஸ் தொற்றுக்கான சந்தர்ப்பங்களைத் தவிர்ப்பதே இந்நோயிலிருந்தும் விலகியிருக்க உறுதியான வகை செய்யும்....! முக்கியமாக இந்நோய் எயிட்ஸ் தாயிலிருந்து குழந்தைக்கும் எயிட்ஸ் கணவன் அல்லது மனைவியிடமிருந்து மற்றவருக்கென பரிமாறப்படுகிறது...இன்று உலகில் தகாத தெரியாத நபர்களுடனான உடலுறவின் மூலமே இந்நோய் அதிகம் பரவுகிறது...அதையடுத்து போதவஸ்து பாவிக்கும் நபர்கள் ஏற்றும் ஊசிகள் மூலம் பரவுகிறது....! உடலுறவின் போது ஆணுறைகள் பாவிப்பது குறைந்த சதவீதப்பாதுகாப்பையே உத்தவாதப்படுத்துகிறது என்பதையும் இங்கு கவனிப்பது நல்லது...! உலகில் பெண்களே இந்நோய்க்கான காவிகளாக அதிகம் விளங்குகின்றனர்....! இந்நோய் குரங்கிலிருந்து மனிதனுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது...அண்மையில் சார்ஸ் வைரசும் விலங்குகளில் இருந்தே மனிதனுக்கு தொற்றியதாக சீன உயிரியல் விஞ்ஞானிகள் மிக அண்மையில் தெரிவித்திருந்தனர். எமது சமூகத்தின் ஒருவனுக்கு ஒருத்தி எனும் சமூகவியல் ஒழுக்கம் இந்நோய் எமது சமூகத்தில் அதிகம் பெருகுவதை நிச்சயம் தடுக்கும்...ஆனால் இன்று அதை எத்தனை பேர் கடைப்பிடிக்கிறார்கள்.....?????!!!!!!! அத்துடன் போதவஸ்த்துப்பழக்கம் அதிகரிப்பு, பாதுகாப்பற்ற குருதி மாற்றீடு,சலூன்களில் சவர அலகுகள் பாவிப்பு என்பன எமது சமூகத்துள் இந்நோய் அதிகம் பரவவும் வகை செய்யலாம்....! - Mathan - 05-29-2005 தற்போது யாழ் நிலவரம் எப்படி இருக்கின்றது? தெரிந்தவர்கள் சொல்லுங்களேன் - மகேசன் - 05-30-2005 Mathan Wrote:தற்போது யாழ் நிலவரம் எப்படி இருக்கின்றது? தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்மதன் தற்போது நிறைய மாற்றங்கள் கடந்த நான்கு வாரங்கள் நேரில் பார்வையிட்டேன் - sOliyAn - 05-30-2005 என்ன மதன்! கவுணாவத்தையைப்பற்றி மறைமுகமாகக் கேட்கிறீர்களா? இம்முறையும் 800 ஆடுகள், 150க்கு மேற்பட்ட கோழிகள் என 1000க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியிடப்பட்டதாக அறிகிறேன். - Nilavan - 05-30-2005 Mathan Wrote:தற்போது யாழ் நிலவரம் எப்படி இருக்கின்றது? தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்தற்போது யாழ் நிலமை மோசமான மோசமான நிலையில் இருக்கிறது. சண்டையணிகளின் அடாவடித்தனங்கள் விடுதலைப்புலிகளின் தலையீட்டினால் குறைந்தாலும் ஆங்காங்கே பிரச்சினைகள் நடைபெறுகின்றது. அதை விட குடிப்பழக்கம் மற்றும் புகைத்தலும் சிறியவர்களிடம் மிக வேகமாக பரவி வருவதுடன். தொழிநுட்ப வளர்ச்சியில் பல முன்னேற்றகரமான வளர்ச்சிகளும் ஏற்ப்பட்டுள்ளன. அத்தோடு இன்னோரு விடையம்... சும்மா வைப்பகங்களில் தொழில் பார்த்தவர்களும் கணக்கியல் கற்ப்பிக்க முனைகின்றனர்.... (தனியார் கல்வி நிலையங்களிலிலும் பிரத்தியோக வகுப்புக்களிலும்). ஈ.பி.டி.பியினர் தமது வழமையான நடவடிக்கையில் ஈடுபடுகின்ர். ஆனால் அவர்களின் முகாமுக்கு அருகாக அடிக்கடிச் சென்றால் பல கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய நிலையேற்றப்படும். அதே போலவெ படையினரும் தமது பங்கிற்க்கு தமது வழமையான நடவடிக்கைகளை மேற்க்கொள்கின்றனர். யாழ் பல்கலைக்கழகத்தை பொறுத்தவரை தமிழ் தேசியத்துக்காய் உழைக்கும் அவர்கள் தமது கலாச்சாரத்தினை மறந்து செயற்ப்படுகின்றனர் என்று எண்ணத்தோன்றுகின்றது. அவர்களது தமிழ்த் தேசியத்துக்கான போராட்டங்களால் அவர்கள் செய்யும் பல தவறான விடையங்கள் வெளிவருவதில்லை என்பது வருந்தத்தக்கது. மக்களை பொறுத்தவரை அமைதியாக கவும் அத்தோடு ஏதோ ஒரு பதட்ட மனநிலையிலுமு; இருக்கின்றனர். அவர்களின் ஏக்கம் எல்லாம் மீண்டும் போர் மூழுமா? என்பதே. அதை விட் சந்தோசமாக வெளிநாட்டு பணத்தில் வீடுகளை புதப்பித்துக்கொண்டு...(அதுக்குள் சிங்கப்புஸ்ரீர் டிசைன் அது இது என்று கனக்க) வாழகின்றனர். இளைஞர்கள் சிலருக்கு வெளிநாட்டிலிருந்து கிடைக்குமு; பணம் அங்கு மோட்டார்சைக்கிளாகவோ... ஹைஸ் வானாகவோ மாறுவதை அவதானிக்க முடிகிறது. அதை விட எமது இளைஞர்களோடு ஒட்டிப்பிறந்த விடையங்களும் நடைபெறுகின்றன (அதான்க பெண்களுக்கு பின்னால போவனுகளே! அது தான்) வேற ஏதும் தெரியோனும் என்றால் சொல்லிபோடுங்க.. நிலவன் |