Yarl Forum
சினிமா சினிமா - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39)
+--- Thread: சினிமா சினிமா (/showthread.php?tid=7402)

Pages: 1 2 3 4 5


சினிமா சினிமா - Mathan - 02-29-2004

<span style='font-size:25pt;line-height:100%'>ஆட்டோகிராப் - திரை விமர்சனம்</span>

<img src='http://www.tamilcinema.com/cinenews/review/2004/auto1.jpg' border='0' alt='user posted image'>

இளமையில் கல்! இது சாத்தியமோ, இல்லையோ, இளமையில் காதல்... -இது சத்தியம்! இப்படி ஒவ்வொருத்தன் வாழ்க்கையிலும் தொலைந்து போன காதல் சொர்க்கத்தை மீட்டெடுத்து கொடுத்திருக்கிறார் சேரன். மனசின் அடியில் மூழ்கிக்கிடக்கும் காதல் கல் வெட்டுகளை தன் மாயக்கரங்களால் தடவி தடவி படித்திருக்கிறார்! அடேயப்பா... சிலிர்த்துக் கொள்கிறது ஒவ்வொரு மயிற்கால்களும்!

பட்டிணத்தில் வேலை பார்க்கும் சேரனுக்கு திருமணம். தன் வாழ்க்கையில் கடந்து போன முக்கியமான மனிதர்களுக்கு பத்திரிகை கொடுக்க புறப்படுகிறார். அந்த முக்கியமானவர்களில் மனசை கிள்ளிய மல்லிகாவையும், கோபிகாவையும், சந்திக்கிறார். சந்திப்பு நிகழும் அந்த நிமிடமும், அதற்கு முந்தைய பிளாஷ்பேக்குகள் இரண்டும் கிழட்டு இதயங்களையும், இன்னொரு முறை
காதல் பதியம் போட வைக்கும்! நதியாய் நடந்து, தென்றலாய் தழுவி, கனலாய் கொதித்து, கவிதையாய் இனித்திருக்கிறார் சேரன். ஹீரோவும் அவரே! இயக்குனரும் அவரே! இந்த வெவ்வேறு தளங்களில் சேரனின் பங்கு ஒன்றுக்கொன்று சளைத்ததல்ல.

அந்த ஸ்கூல் லவ் எல்லாருக்கும் வாய்த்திருக்க கூடிய இனிய அனுபவம்தான். மல்லிகாவுடனான விடலை காதலில் சொக்கிப்போய், ''ஹேப்பி வயசுக்கு வந்த டே'' என்று சொல்லி மல்லிகாவுக்கு பூங்கொத்து வழங்கும் குட்டி சேரனின் குறும்பை ரொம்பவே ரசிக்கலாம். மல்லிகாவின் நினைவாக அவளின் கூந்தல் குஞ்சத்தை வெட்டி எடுத்து பாதுகாக்கிறாரே... அது, காதலிக்கிற சிறுசுகளின் கண்ணியத்திற்குரிய மியூசியம்.

மல்லிகா, தமிழுக்கு கிடைத்த தங்க பொக்கிஷம். என்னவொரு தேர்ந்த நடிப்பு! தனக்கு கல்யாண பத்திரிகை கொடுக்க வரும் சேரனை அடையாளம் தெரியாமல் நெற்றிச்சுருக்கும் அந்த கணமும், பிறகு தெரிந்தவுடன் ''வா செந்திலு...'' என்று வாய்நிறைய மகிழ்வதும் சில்லிப்பு.... சிலிர்ப்பு! மணமேடையில் மனசுக்குள் பொத்தி வைத்த காதலின் வேகத்தில் திரும்பி பார்த்துவிட்டு போகிறாரே...விசில் பறக்கிறது தியேட்டரில்!

இதுதான் இப்படி என்றால் கேரள கரையோரம் மனசை தொலைத்துவிட்டு சேரன் சுமந்த பாரம் இருக்கிறதே, நத்தையின் முதுகில் இமயம்! டவுண் பஸ் கணக்காக படகில் சவாரி செய்யும் மாணவர் கூட்டத்தில் தமிழனை இழிவு படுத்தியவர்களை தண்ணிக்குள்ளேயே புரட்டியெடுக்கும் காட்சி, சேரனின் இனப்பற்றுக்கு சாட்சி!

அங்கே கோபிகாவுடன் காதல்! முந்தைய காதலைவிட, சற்றே மெச்சுரிடியான காதல் இது. வீணை கற்றுக் கொள்ளும் சேரனின் விருப்பத்திற்கு கோபிகா வளைந்து கொடுக்க, சேரனின் தமிழும் சேர்ந்து வளைந்து கொடுத்து மலையாளத்திற்கு மாறுவது அழகு. வீட்டில் நாலைந்து யானைகளை வளர்க்கிற அளவிற்கு கம்பீரமான கோபிகாவின் வீடு காலமாற்றத்தில், நான்கைந்து கன்றுக்குட்டிகள் மட்டுமே வளர்க்கும் நிலைக்கு போயிருப்பதையும், உள்ளே கோபிகாவின் நிலையும் அதுதான் என்பதையும் அழகாக முடிச்சு போட்டிருக்கிறார் சேரன். சேரனுக்கு மூக்குத்தி பிடிக்கும் என்பதற்காக தானே மூக்கை பஞ்சராக்கிக் கொள்ளும் கோபிகாவின் காதல் பித்து, சேரனுக்கு மட்டுமல்ல, ரசிகனுக்கும் வலியேற்படுத்தும். கோபிகா கொடுக்கிற ஆப்பிளை வாங்கி கடித்து, கற்பனையில் இருவரும் ஆதாம், ஏவாளாக மாறிவிடும் காதல் காட்சியில் ரசனை அதிகம்!

சேரனின் வாழ்க்கையில் வரும் அந்த மூன்றாவது பெண்ணான சினேகாவின் பகுதி மட்டும் விக்ரமன் படம் போல் இருக்கிறது. இருவரின் நட்பையும் கொச்சைப்படுத்தாமல் காட்டியிருப்பது ஆரோக்கியம்! பார்வையற்றவர்களின் இசை நிகழ்ச்சியில் சினேகா பாடும் அந்த பாடல், குளுக்கோஸ்!

சில காட்சிகளே வந்தாலும் கனிஹாவும் நெஞ்சையள்ளிக் கொண்டு போகிறார். கடைசியில், சேரனுக்கு விதிக்கப்பட்டவர் இவரே! சேரனின் காதல்கள் ஏதும் தெரியாத அப்பாவி!

மனசில் பச்சை குத்திய இந்த நான்கு பெண்களையும் சேரனையும் விடுங்கள்... கிராமத்து வாத்தியார் இளவரசுவின் அத்தனை அசைவையும் மூக்கை பிடித்துக் கொண்டு ரசிக்கலாம்! ஆனாலும் சேரன்...இது ரொம்ப அநியாயம்!

எஸ்.ரவிவர்மன், விஜய்மில்டன், துவாரகநாத், ஷங்கிமகேந்திரா! -சேரனின் காதல்களை சேதாரமில்லாமல் சேகரித்த ஒளிப்பதிவாளர்கள் இவர்கள்தான். அந்தந்த காலத்திற்கே நம்மை அழைத்துப்போன கால யந்திரங்கள்! இந்த பிரம்மாக்கள் வரிசையில் ஆர்ட் டைரக்டர் மணிராஜுக்கும் அசைக்க முடியாத இடம் உண்டு.

கதையின் வேகத்தில் பிற்பாதி திணறினாலும், இந்த ஆட்டோகிராப், சேரனின் கிராஃபை தாறுமாறாக உயர்த்தப்போவது மட்டும் நிச்சயம்!

நன்றி - தமிழ் சினிமா


- Mathan - 03-13-2004

எதிரி பட காட்சிகள்

<img src='http://www.tamilcinema.com/cinenews/gallery/movies/ehiri/1.jpg' border='0' alt='user posted image'><img src='http://www.tamilcinema.com/cinenews/gallery/movies/ehiri/2.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.tamilcinema.com/cinenews/gallery/movies/ehiri/3.jpg' border='0' alt='user posted image'><img src='http://www.tamilcinema.com/cinenews/gallery/movies/ehiri/4.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.tamilcinema.com/cinenews/gallery/movies/ehiri/5.jpg' border='0' alt='user posted image'><img src='http://www.tamilcinema.com/cinenews/gallery/movies/ehiri/6.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.tamilcinema.com/cinenews/gallery/movies/ehiri/7.jpg' border='0' alt='user posted image'><img src='http://www.tamilcinema.com/cinenews/gallery/movies/ehiri/8.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.tamilcinema.com/cinenews/gallery/movies/ehiri/9.jpg' border='0' alt='user posted image'><img src='http://www.tamilcinema.com/cinenews/gallery/movies/ehiri/10.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.tamilcinema.com/cinenews/gallery/movies/ehiri/11.jpg' border='0' alt='user posted image'>

நன்றி - தமிழ் சினிமா


- Mathan - 03-13-2004

பூஜாவின் கலவரம்

<img src='http://www.thatstamil.com/images20/cinema/laila-pooja-asin425.jpg' border='0' alt='user posted image'>

ஜே.ஜே' படத்தில் அமோகா, பூஜா என்று இரண்டு கதாநாயகிகள் அறிமுகமானார்கள். படம் வெளிவருவதற்கு முன்பே அமோகா குறித்து மிகுந்த எதிர்பார்ப்பு உருவானது. படம் சம்பந்தமாக வெளிவந்த போட்டோக்களில் எல்லாம் அமோகாவின் அழகு முகம்தான் இருந்தது.

ஏராளமான தயாரிப்பாளர்கள் தங்களது அடுத்த படத்துக்கு ஒப்பந்தம் செய்யத் தயாராக இருந்தார்கள். ஆனால், படத்தில் அமோகாவின் நடிப்பு படு சொதப்பலாக இருந்தது. இதனால் தயாரிப்பாளர்கள் ஜகா வாங்கினார்கள்.

<img src='http://www.thatstamil.com/images20/cinema/pooja1-500.jpg' border='0' alt='user posted image'>

அதே நேரத்தில் பூஜாவின் குறும்பு கொப்பளிக்கும் நடிப்புக்கு அனைத்து தரப்பிலிருந்தும் பாராட்டு குவிந்தது.

இதனையடுத்து தயாரிப்பாளர்களின் பார்வை பூஜா பக்கம் திரும்பியது. குறிப்பாக தெலுங்குப் பக்கம் அவருக்கு அதிகமாகவே ஈர்ப்பு இருந்தது.

இதனால் பல தெலுங்குப் படங்களில் புக் ஆகி நடித்துக் கொண்டிருக்கும் பூஜாவின் கைவசம் இப்போது 2 தமிழ் படங்கள்.

'ஜே.ஜே' படத்தைத் தொடர்ந்து தனது அடுத்த படத்திலும் சரண் பூஜாவுக்கு வாய்ப்பளித்துள்ளார். அஜீத்குமார் கதாநாயகனாக நடிக்கும் 'அட்டகாசம்' படத்தில் பூஜாதான் கதாநாயகி.

அஜீத்ர், சரண், பரத்வாஜ் கூட்டணி 'காதல் மன்னன்', 'அமர்க்களம்' ஆகிய வெற்றிப்படங்களைத் தந்த கூட்டணி என்பதால் இந்த படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

இந்தப் படத்தில் அஜீத் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். ஒரு டிரைவிங் ஸ்கூல் நடத்துபவராகவும், பிரபல தாதாவாகவும் என இரண்டு மாறுபட்ட வேடங்களில் நடிக்கிறார். டிரைவிங் ஸ்கூல் அஜீத்துக்குத்தான் பூஜா ஜோடி. பூஜாவுக்கு அஜீத் டிரைவிங் சொல்லிக் கொடுக்கும்போது, கூடவே காதல் பற்றிக் கொள்கிறதாம்.

பூஜா நடிக்கும் இன்னொரு படம் 'உள்ளம் கேட்குமே'. நீண்ட நாட்களாகவே தயாரிப்பில் இருந்து வரும் இந்தப் படத்தை இயக்குவது '12பி'யை இயக்கிய ஜீவாதான்.

ஜீவாவின் முதல் படத்தில் அறிமுகமாகிய ஷாம்தான் இந்தப் படத்துக்கும் ஹீரோ.

இந்தப் படத்தில் ஆஷின், லைலா, பூஜா என மூன்று கதாநாயகிகள். மூவரில் பூஜா தான் கவர்ச்சியில் புகுந்து விளையாடியிருக்கிறாராம்.

பூஜாவுக்கு மிகவும் 'கிக்'கான ரோலாம். இதனால் கவர்ச்சி கலவரமே நடத்தி முடித்திருக்கிறார்.

படப்பிடிப்பு சமீபத்தில் தான் முடிந்திருக்கிறது. இந்தப் படம் ரிலீஸ் ஆனால் தமிழில் தனக்கு மேலும் பல கவர்ச்சிகரமான ரோல்கள் கிடைக்கும் என்று காத்திருக்கிறார் பூஜா.

Thanx: ThatsTamil


- Mathan - 03-19-2004

மாதவன் + சதா + கனிகா = எதிரி

'ஜேஜே' படத்தைத் தொடர்ந்து 'எதிரி' படத்திலும் மாதவனுக்கு இரட்டைக் குதிரை சவாரி

இந்தப் படத்தில் மாதவனுக்கு ஜோடியாக சதா, கனிகா நடிக்கிறார்கள். கனிகாவை விட சதாவுக்குத்தான் படத்தில் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள்.

வேலையில்லாத பட்டதாரி சந்தர்ப்ப சூழ்நிலையால் ரவுடியாக மாறுவதும், அதனால் ஏற்படும் பிரச்சனைகளை சமாளிப்பதும்தான் கதை. ரவுடியாக மாறும் வேலையில்லாத பட்டதாரியாக மாதவன் நடிக்கிறார்.

தன் மீதிருந்த அமுல் பேபி முத்திரையை 'ரன்' படம் மூலம் ஓரளவுக்கு மாற்றினார் மாதவன். இவரால் ஆக்ஷன் கதையும் பண்ண முடியும் என்ற நம்பிக்கை அதன் பிறகே இயக்குநர்களுக்கு வந்தது. அந்தத் தைரியத்தில் தான் இந்தப் படத்தில் இவரை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் என்பதால் காமெடி கட்டாயம் உண்டு. காமெடிக்காக விவேக்கை போட்டிருக்கிறார்கள். காமெடி, காதல், அடிதடி கலந்து எடுக்கிறார்கள்.

காதல் காட்சிகளில் மாதவனும், சதாவும் புகுந்து விளையாடியிருக்கிறார்களாம் (பட ஸ்டில்ஸ்லேயே தெரியுதே).

படத்தில் இன்னொரு முக்கியமான விஷயம் வில்லனாக ரீஎண்ட்ரி ஆகிறார் நடிகர் ரகு என்ற ரகுமான். விஜயனுடன் இணைந்து வில்லனாக மிரட்டியிருக்கிறாராம்.

பெரும்பாலும் கே.எஸ்.ரவிக்குமாரின் படங்களில் பாடல்கள் அவ்வளவாக வரவேற்பு பெறாது. அவரது சில படங்களில் பாடல்கள் ஹிட்டானது இசையமைப்பாளரின் தயவினால் நடந்ததாக இருக்கும்.

ஆனால் இந்த படத்தில் பாடல்களுக்கு மிகுந்த முக்கியவத்துவம் கொடுத்திருக்கிறார்கள்.

பாடல் சூட்டிங் வெளிநாடு செல்வதுபோல், பாடல் கம்போசிங்க்காகவும் விமானம் ஏறுவது தமிழ் சினிமாவில் அதிகரித்து வருகிறது.'எதிரி' படத்தின் பாடல் கம்போசிங்கை கே.எஸ்.ரவிக்குமாரும், இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜாவும் லண்டன், சுவிஸர்லாந்து, மலேசியா ஆகிய நாடுகளில் வைத்து முடித்திருக்கிறார்கள். பாடல்கள் இந்த ஆண்டின் மிகப் பெரிய ஹிட்டாக அமையும் என்கிறார்கள்.

ஏவி.எம் பிரசாத் ஸ்டியோக்களில் பிரம்மாண்டமான செட் அமைத்து மாதவன் சதா ஆடிய டூயட் படமாக்கப்பட்டது. இயக்குவது ரவிக்குமார் என்பதால் படப்பிடிப்பு அசுர வேகத்தில் நடந்து வருகிறது. திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடப்பதால், டப்பிங் வேலைகளும் அடுத்தடுத்து நடந்து வருகிறது.

நன்றி - தட்ஸ் தமிழ்


- kuruvikal - 03-20-2004

காட்சிகள் சுப்பர் BBC....! அரைகுறை முழுகுறை எண்டு புலம்பினவையைக் காணேல்ல திருந்திட்டினம் போல....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

சுதந்திரக் கொடிக்கட்ட ஆடைகள் பறக்குது போல....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- AJeevan - 03-20-2004

<b><span style='font-size:25pt;line-height:100%'> சாதனைகளும் சாகஸங்களும் தமிழ் சினிமாவின் தொழில்நுட்பம் ஒரு பார்வை </span>
<img src='http://www.dinamalar.com/2004march14varamalar/17a-sathanaikalum%20sakasangalum.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://www.dinamalar.com/2004march14varamalar/17-sathanaikalum%20sakasangalum.jpg' border='0' alt='user posted image'>

ஸ்ரீதரின் சகோதரர் சி.வி.ராஜேந்திரன் பாடல் காட்சிகளை வித்தியாசமான கோணத்தில் படமாக்குவதில் வல்லவர் என்று பெயரெடுத்தவர்.

"நில் கவனி காதலி' என்றொரு படம். ஜெய்சங்கர், பாரதி நடித்த இந்த படத்தை இயக்கியவர் சி.வி.ராஜேந்திரன். இதில் நீச்சல்குளத்தில் ஜெய்சங்கரும், பாரதியும் நீச்சலடித்தபடியே பாடுவது போல், "ஜில்லென்று காற்று வந்ததோ, சொல்லென்று கேட்டுக் கொண்டதோ' என்ற காட்சி வரும். அந்தப் பாடலின் போது தண்ணீருக்கு மேலே ஜெய்சங்கரின், பாரதியின் தலைகள் தெரியும். அதே சமயம் தண்ணீருக்கு கீழே அவர்களது உடல் பகுதியின் அசைவுகள் தெரியும். "அண்டர் வாட்டர் போட்டோகிராபி' முறையில் படமாக்கப்பட்ட காட்சி இது.

அதற்கு முன் வெளிவந்த படங்களில் தண்ணீருக்கு அடியில்தான் காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கின்றன. "நில் கவனி காதலி'யில் நீரின் மேல்மட்டமும், கீழ்ப்பகுதியும் ஒரே சமயத்தில் வந்தது அன்றைய ரசிகர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது. இதனால் பாரதியின் நீச்சலுடை கவர்ச்சி கூட பெரிதாகப்படவில்லை. அந்தப் படத்தில் ஒளிப்பதிவாளர் பி.என்.சுந்தரம், இந்தக் காட்சி படமாகும்போது, கண்ணாடி தொட்டி உடைந்து ரத்தக்காயம் பட்டிருக்கிறார்.

சுந்தரம் ஆலோசனையின் பேரில் "அவளுக்கென்று ஓர் மனம்' படத்தில் நீச்சல் குளத்தில் பாரதி பாடியபடி நீந்துவது போல் யு.ராஜகோபால் படமாக்கினார் "நில் கவனி காதலி' பாணியில்.

இதே உத்தியைக் கடைப்பிடித்து "கலியுகம்' படத்தில் பிரபு பாதாள சாக்கடையில் சண்டை போடுவதை படமாக்கினார் இயக்குனர் சுபாஷ்.

"பாய்ஸ்' படத்தில் "யாரைக் கேட்டு எந்தன் நெஞ்சில்' என்ற பாடலில் இதே போல் நீருக்கு மேலும், கீழும் உருவங்கள் இருப்பதை ரவி கே.சந்திரன் படமாக்கியிருக்கிறார்.

சி.வி.ராஜேந்திரன் இயக்கிய முதல் படம் அனுபவம் புதுமை. 1968ல் வெளிவந்தது. அதில், நாயகன்–நாயகியான முத்துராமன்–ராஜஸ்ரீ இருவரும் ஆடிப்பாடுவது போல் "கனவில் நடந்ததோ கல்யாண ஊர்வலம்' என்ற பாடல் காட்சி வரும். பி.சுசீலா, பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடிய பாடல் அது. அந்தப் பாடலில் விதம் விதமான திரைச் சீலைகள் பறந்து செல்லும். உள் அரங்கத்தில் ராட்சத மின் விசிறிகள் மூலம் பறக்க வைத்து படமாக்கியிருக்கின்றனர். அதில் வியப்புக்குரிய விஷயம் முத்துராமனும், ராஜஸ்ரீயும் ஸ்லோ மோஷனில் நடித்திருப்பர்.

ஸ்லோ மோஷனிலிருந்து சட்டென்று வழக்கமான வேகத்திற்கு மாறும். காட்சி உறைந்து மீண்டும் பழைய நிலைக்கு வரும். இது ஒரே ஷாட்டில் வந்தது தான் வியப்பே. இந்த உத்தி "சிங்கிங் இன் தி ரெயின்' என்ற ஆங்கிலப் படத்திலிருந்து கையாண்டது. இந்த படத்தையும் பி.என்.சுந்தரம் ஒளிப்பதிவு செய்தார்.

இப்படி திரைச்சீலைகள் பறந்து செல்ல பாண்டியராஜன்–பல்லவி ஆடிப்பாடும் பாடல் காட்சி – "ஊரைத் தெரிஞ்சிகிட்டேன்' படத்தில் (1986ல்) வந்தது. "சிலுசிலுவென சிறுசிறு மழைத்துளி' என்ற பாடல் அது.

டி.எம்.சவுந்தர்ராஜன் பாடிய இன்னொரு பாடல் காட்சியொன்று "அனுபவம் புதுமை'யில் வரும். முத்துராமன், ராஜஸ்ரீ நடித்த அந்தக் காட்சியில், ராஜஸ்ரீ ஊஞ்சலில் ஆட, டாப் ஆங்கிளில் ஊஞ்சல் கயிற்றின் உச்சியில் இருந்து கேமரா மூலம் ஊஞ்சல் அசைவுகளை படமாக்கியிருப்பர். அப்போது கேமராவும் ஊஞ்சலோடு அசையும்.

இதே பாணியில் தான் "நினைத்தேன் வந்தாய்' படத்தில் ரம்பா ஊஞ்சலில் ஆட, உச்சியிலிருந்து டாப் ஆங்கிளில் இளவரசு படமாக்கியிருந்தார். வித்தியாசமாக இருக்கிறதென்று அது படமாக்கப்பட்ட விதம் பற்றி பத்திரிகைகளில் வெளிவந்தது. "வண்ண நிலவே வண்ண நிலவே, வருவது நீ தானா?' என்று விஜய் பாடுவது போன்ற காட்சி அது.

"சிங்கிங் இன் தி ரெயின்' என்றதும் புன்னகை மன்னன், மவுனராகம் ஆகிய படங்கள் நினைவில் வருகின்றன. இரண்டு படங்களுக்கும் வேடிக்கையான ஒரு ஒற்றுமை உண்டு.

"புன்னகை மன்னன்' படத்தில் ரேவதி மழையில் நனைந்தபடி "வான்மேகம் பூப்பூவாய்த் துõவும்' என்று ஆடிப்பாடுவார். "மவுனராகம்' படத்திலும் ரேவதி "ஏதோ மேகம் வந்தது' என்று மழையில் நனைந்தபடி ஆடிப்பாடுவார். இரண்டு படத்திற்கும் இசை இளையராஜா. இரண்டிற்கும் நடன இயக்குனர் சுந்தரம் (பிரபுதேவாவின் அப்பா) "புன்னகை மன்னன்' பாடல் காட்சியில் ரேவதியுடன் சுந்தரமும் நடனமாடி நடித்திருப்பார். ஆங்கிலப் படங்களை காப்பியடிக்கும் போது இப்படி ஒற்றுமைகள் நிகழ்ந்து விடுகின்றன.

"ஊரைத் தெரிஞ்சுகிட்டேன்' "புன்னகை மன்னன்' "மவுனராகம்' – ஒரே ஆண்டிற்குள் (1987) வந்தவை. ஆனால், 1968ல் வெளிவந்த "அனுபவம் புதுமை'யிலேயே "சிங்கிங் இன் தி ரெயின்' படத்தை முன்னோட்டம் காட்டி விட்டனர். அதாவது, வசதிகள் இல்லாத நேரத்தில், மிட்சல் கேமராவில், கறுப்பு–வெள்ளையில் பி.என்.சுந்தரம் முன் பதிவு செய்து விட்டார்.

இப்படி பாடல் காட்சிகளில் ஒற்றுமை நிகழ்வதற்கு காரணம், கடந்த சில வருடங்களாக பெரும்பாலான பாடல் காட்சிகளை நடன இயக்குனர்களே இயக்குகின்றனர். கேமரா கோணங்களை அவர்களே முடிவு செய்கின்றனர். நடனக் காட்சிகள், குறிப்பாக சண்டைக் காட்சிகளில் பாலசந்தர் பெரும்பாலும் தலையிடுவதில்லை. அதிலெல்லாம் அவருக்கு ஆர்வம் இருப்பதில்லை.

இதில் ஒரு வேடிக்கையான விஷயத்தை நேரிலேயே பார்க்க நேரிட்டது. ராமராஜன் நடித்து, இயக்கிய படம் விவசாயி மகன். அதில் அவருக்கு ஜோடி தேவயானி. இருவரும் சம்பந்தப்பட்ட சோக பாடல் காட்சியொன்றை ஏவி.எம்.,மிலுள்ள "சம்சாரம் அது மின்சாரம்' (அந்தப் படத்திற்காகவே கட்டப்பட்ட வீடு. அதிலிருந்து தொடர்ந்து அந்த வீட்டில் ஏராளமான படங்களின் படப்பிடிப்பு நடந்திருக்கிறது) செட்டில் படமாக்கினர். ரவீந்தர் ஒளிப்பதிவைக் கையாள – சோகப் பாடல் காட்சியின் கேமரா கோணங்களை நடன இயக்குனர் மஸ்தான் சொல்லிக் கொண்டிருந்ததை தான் வேடிக்கை என்று குறிப்பிட வேண்டியதாயிற்று.

இன்றைக்கு மணிரத்னம், ஷங்கர், பி.வாசு, பாலா என்று வெகு சில இயக்குனர்களே – எல்லா காட்சிகளையும் இயக்குபவர்களாக இருக்கின்றனர். தொழில், தொழில் நுட்பத்தை முழுமையாக கற்றுக் கொண்டு படங்களைச் செய்ய வேண்டும் என்ற போக்கில் பெரிய வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. இது சினிமாவின் வளர்ச்சிக்கு உதவாத உத்தி என்று சொல்லலாம்.

இரட்டை வேடக் காட்சிகளை கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் முறையில் திரையில் அறிமுகம் செய்தவர் ஷங்கர். "இந்தியன்' படத்தில் இரண்டு கமல்ஹாசன்களையும் சர்வ சாதாரணமாக நெருக்கமாகக் காண்பித்தார். "ஜீன்ஸ்' படத்தில் இரண்டு பிரசாந்தையும், இரண்டு நாசர்களையும் – அதாவது இரட்டை வேடக் காட்சிகளை அபாரமாக வெளிப்படுத்தினார். புளுமேட்டிக் முறையில் இரட்டை வேடக் காட்சிகளைப் படமாக்கி, கிராபிக்ஸ் மூலம் அவற்றை இணைத்து விடுகின்றனர்.

அடர்ந்த நீல வண்ணத்தில் அகன்ற திரை அல்லது சுவரை பின்னணியாகக் கொண்டு, அதன் முன்புறம் நடிப்பவர்களை நிறுத்தி அவர்களுக்கு மட்டும் "லைட்டிங்' (ஒளியமைப்பு) செய்து அவர்கள் நடிப்பை படமாக்கும்போது பின்னணியில் உள்ளது பதிவானாலும், கம்ப்யூட்டர் திரையில் நீல வண்ண பின்னணியை எளிதில் பிரித்து விடலாம்.

இப்போது நடிப்பவர்களின் அசைவுகள் மட்டுமே மிஞ்சி நிற்கும். அதை படத்தில் எந்த இடத்தில் தேவையோ அங்கு சேர்த்து விடுவர். இதில் இயக்குபவரின் காட்சியமைப்பு, ஒளிப்பதிவாளரின் படமாக்கம், கம்ப்யூட்டர் திரையில் கிராபிக்ஸ் முறையைக் கொண்டு வருபவரின் திறமை ஒருங்கிணைய வேண்டும். கொஞ்சம் பிசகினாலும் நீல வண்ண திரையின் பிசிறுகள் வெளிச்சம் காட்டி விடும்.

கிராபிக்ஸ் வருவதற்கு முன் புளுமேட்டிக் முறையில் "விக்ரம்' படத்தின் கிளைமாக்ஸின் ஒரு பகுதியை படமாக்கினர். விமானத்திலிருந்து கமல்ஹாசனும், லிஸியும் தப்பித்து, தரையில் இறங்குவது போன்ற காட்சி அது. விமானத்திலிருந்து குதித்த பின் இருவரும் தத்தளிப்பது, ஒன்று சேர்வதை புளுமேட்டிக் முறையில் படமாக்கி, ஆப்டிகல் முறையில் நீல வண்ண பின்னணியைப் பிரித்தனர். தமிழில் அது போல் விண்ணில் நடக்கும் காட்சிகளை படமாக்கியது அது முதல் முறை. அதனால் தானோ என்னவோ ஆப்டிகல் முறையில் பிரித்த போது, நீல வண்ண பிசிறுகள் அங்கங்கே தென்பட்டன.

புளுமேட்டிக் முறையில் படமாக்கி, கிராபிக்ஸ் மூலம் இரட்டை வேடக் காட்சிகள் சிறப்பாக அமைந்த இன்னொரு படம் ஆளவந்தான். அதில் இரண்டு கமல்ஹாசன்களும் மோதிக் கொள்ளும் காட்சியில் காட்சியமைப்பும், படத்தொகுப்பும் (எடிட்டிங்), கமலின் நடிப்பும் ஒன்றையொன்றை பிரிக்க முடியாத அற்புதங்கள். இதற்கு முன் இரட்டை வேட படங்களில் இப்படி சண்டைக் காட்சியும், நடிப்பும், படத்தொகுப்பும் மிகச் சிறப்பாக அமைந்தவை, இரண்டு எம்.ஜி.ஆர்., மோதி நடித்த நீரும் நெருப்பும், ஆசை முகம், நினைத்ததை முடிப்பவன் ஆகிய படங்களைக் குறிப்பிடலாம்.

எம்.ஜி.ஆர்., நடித்ததெல்லாம் மாஸ்க் முறையில், ஒரே பிரேமில் தனித்தனியாகப் படமாக்கி இணைத்ததாகும். [b]அதிக உழைப்பு, மன உளைச்சல், அதிக நேரம் இதெல்லாம் எம்.ஜி.ஆர்., கொடுத்த விலை. </b>அதை "ஆளவந்தான்' மிஞ்சி விட முடியாது என்றாலும், இன்றைய படங்களில் அது குறிப்பிட்டு சொல்லும்படி இருக்கிறது.

நன்றி: தினமலர்


- Mathan - 03-21-2004

ஆய்த எழுத்து படங்கள்

நன்றி - தட்ஸ் தமிழ்

<img src='http://gallery.indiainfo.com/tamil/albums/album51/17_G.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://gallery.indiainfo.com/tamil/albums/album51/16_G.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://gallery.indiainfo.com/tamil/albums/album51/05_G.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://gallery.indiainfo.com/tamil/albums/album51/02_G.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://gallery.indiainfo.com/tamil/albums/album51/04_G.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://gallery.indiainfo.com/tamil/albums/album51/08_G.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://gallery.indiainfo.com/tamil/albums/album51/06_G.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://gallery.indiainfo.com/tamil/albums/album51/09_G.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://gallery.indiainfo.com/tamil/albums/album51/01_G.sized.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://gallery.indiainfo.com/tamil/albums/album51/03_G.jpg' border='0' alt='user posted image'>


- Mathan - 03-21-2004

குங்குமம் - சோனியா அகர்வால்

<img src='http://cinesouth.com/images/new/18032004-NSV0image1.jpg' border='0' alt='user posted image'>

"பீர் குடிப்பது என்ன அப்படி ஒரு தப்பான காரியமா என்ன நான் பொய் சொல்ல விரும்பவில்லை. பீர் குடித்து இருக்கிறேன். ஏன் தம் கூட அடிச்சிருக்கேன். பீர் எப்பவாவது பார்ட்டிக்கு போனால் குடிப்பேன். வீட்டில் எதுவும் வேலை இல்லாம சும்மா ஹாய்யாக இருந்தால் இரண்டு மூன்று பஃப் சிகரெட்"


- Mathan - 03-21-2004

வண்ணத்திரை - தனுஷ்

<img src='http://cinesouth.com/images/new/18032004-NSV0image3.jpg' border='0' alt='user posted image'>

"இந்த மூஞ்சியையும் மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். அதுக்காக மக்களுக்கு நன்றி சொல்கிறேன். ஒரு நடிகனுக்கு முகம் தேவையில்லை என்ற விஷயத்தை கே.பி. சார் பல வருடங்களுக்கு முன்பாகவே நிரூபித்துவிட்டார். தன்னம்பிக்கை, கடின உழைப்பு, தைரியம், அதிர்ஷ்டம், திறமை இதெல்லாம்தான் ஒரு நடிகனுக்குத் தேவை. முகம் இல்லை"


- Mathan - 03-21-2004

குமுதம் - த்ரிஷா

<img src='http://cinesouth.com/images/new/18032004-NSV0image2.jpg' border='0' alt='user posted image'>

"காதலன், 2 மணி நேரம் பெரிய கருத்தரங்கில் விடாமல் லெக்சர் கொடுக்கிற அளவுக்கு அறிவாளியாக இருக்க வேண்டும். நல்ல நகைச்சுவை உணர்வுடன் பேசத் தெரிந்திருக்க வேண்டும். காரை விட்டு நான் இறங்கும் போது கதவை ஓடி வந்து திறக்கும் அந்தமாதிரி அப்பாவி நபர்களை ரொம்ப பிடிக்கும்"

யாருக்கு திரிஷா கண்ணு வேணும் ? பாத்து நடந்துக்குங்க. நம்ம ஐஸ் மாதிரி வராது தான் இருந்தாலும் பரவால்ல <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->


- Mathan - 03-22-2004

ஆய்த எழுத்து பாடலின் புதுமை!

கவிஞர் வைரமுத்து தன் ஒவ்வொரு படைப்பிலும் ஒரு புதுமையைச் செய்பவர். அதிலும் மணிரத்னம் போன்றோரின் கூட்டணி கிடைத்தால் சும்மா விடுவாரா. ஆயுத எழுத்திலும் ஒரு புதுமையை செய்துள்ளார்.


மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான், வைரமுத்து கூட்டணி என்றாலே ஆடியோ பிஸினஸ் 3 கோடி ஆகிவிடும் என்று பேசப்படுவதன் மூலமே இவர்களின் உழைப்பையும், முக்கியத்துவத்தையும் அறியலாம். ஒரு வித எதிர்பார்ப்பும் கூடிவிடும்.


அப்படி ஏற்படும் எதிர்பார்ப்பை சிறிதும் குறைக்காமல் ஆய்தஎழுத்து ஆடியோ ரிலீஸ் ஆகி உள்ளது. சின்ன சின்ன ஆசை என்று வரிசையாக ஆசைகளை ரோஜா படத்தில் சொன்ன வைரமுத்து இப்போது இந்த ஆய்தஎழுத்தில் எது காதல், எதுவெல்லாம் காதல் என்று கூறியுள்ளார். "யாக்கை திரி" எனத் தொடங்கும் பாடலில் பெரிதாய் வாக்கியங்கள் ஏதும் இல்லாமல் வார்த்தைகளாகவே


"யாக்கை திரி
காதல் சுடர் அன்பே.....
ஜீவன் நதி
காதல் கடல் நெஞ்சே....
பிறவி பிழை
காதல் திருத்தம் நெஞ்சமே...
இருதயம் கல்
காதல் சிற்பம் அன்பே...
ஜென்மம் விதை
காதல் பழம்
லோகம் துவைதம்
காதல் அத்வைதம்
சர்வம் சூன்யம்
காதல் பிண்டம்
மானுடம் மாயம்
காதல் அமரம்"


என்று எவையெவை காதல் என்பதை தெரிவித்துள்ளார். மேலும் தேசிய கீதம் ரேஞ்சிற்கு ஒரு பாடலையும் எழுதி அசத்தியிருக்கும், சாகித்ய அகாடமி விருது பெற்ற வைரமுத்து நம் தமிழ் உலகிற்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் என்றால் மிகையாகாது.

நன்றி - சினி சவுத்


- Paranee - 03-22-2004

இதே பாடல் வரிதான் குமுதம் இதழில் கொஞ்சம் தேனீர் நிறைய வானம் என்ற கவிதை தொடரில் எழுதியுள்ளார்.


- Mathan - 03-22-2004

விவேக் ஓபராயை லவ் பண்ண ஆசை!

<img src='http://www.vikatan.com/av/2004/mar/28032004/p16.jpg' border='0' alt='user posted image'>

த்ரிஷா சிரித்தால் பூ மலர்கிறது. தெலுங்கில் நடித்த வர்ஷம் வரலாறு காணாத வெற்றியாம். சூர்யா, விக்ரம், மாதவன், விஜய், அஜீத் என்றுஅத்தனை ஹீரோக்களுடனும் ஆட்டம் போடுகிற டீன் டிக்கெட். ஒரு நாள் லீவில் வீட்டுக்கு வந்திருந்தார். அம்மா சாதம் பிசைந்துதர, Ôநிலாச்சோறுÕ சாப்பிட்டுக்கொண்டிருந்த பெண்ணை ஓரங்கட்டினோம்...

ÔÔÔவர்ஷம்Õனா மழைனு அர்த்தம்.தெலுங்குல படம் பிச்சிக்கிச்சு. முழுக்க முழுக்க மழையிலேயே எடுத்த படம். இப்போ அங்கே நான்தான் பரபரப்பான பொண்ணு தெரியுமா! அதனால தமிழை மட்டுமே நம்பாம, தமிழ், தெலுங்கு இரண்டையும் ஃபிப்டி ஃபிப்டி வெச்சுக் கலாம்னு முடிவு பண்ணி இருக்கேன்.

சும்மா ஜாக்கிரதை உணர்ச்சிதான்! சிரிக்கும்போது குட்டிக்கண்கள் மூடிக் கொள்கின்றன.

<img src='http://www.vikatan.com/av/2004/mar/28032004/p18.jpg' border='0' alt='user posted image'>

<b><span style='color:#ff0000'>விக்ரம், விஜய், அஜீத், சூர்யா, மாதவன்னு கலக்கறீங்களே.. பார்ட்டிங்க எப்படி? கொஞ்சம் பர்சனலா சொல்லுங்களேன்?

விக்ரம்தான் தெரியுமே, முதல் நிமிஷத் திலேயே மனசுக்குப் பக்கத்தில் வந்திடுவார். ஜாலியா இருப்பார். ஆனா, நடிப்புனு வந்துட்டால் மனிதர் செம சீரியஸ். காமிரா முன்னால நிக்கும்போது வேற ஆளா இருப் பார். முகத்தில அந்த சிரிப்புகூட காணாமப் போயிரும்.

விஜய் ரொம்ப சமத்து. நாங்க ரெண்டு பேரும் கில்லி படத்துக்காகக் கிட்டத்தட்ட நூறு நாட்கள் சேர்ந்து நடிச்சோம். முதல் ஒரு மாசமும் Ôஹலோ.. குட்மார்னிங்Õ.. அதோட சரி. அப்புறம்தான் லேசா சிரிக்கவே ஆரம்பிச்சார். ரொம்ப ஹானஸ்ட். அமைதியா இருப்பாரே தவிர, ஸ்பாட்ல வந்து நின்னுட்டா செம ஸ்டைலா இருப்பார். டிரஸ், நடை எல்லாம் மாறிடும். பேசுவதில் ஒரு நக்கல் இருக்கும். மத்தவங்க நடிக்கிறதில் குறுக்கீடு பண்ணவே மாட்டார். ரொம்ப பிடிச்ச விஷயம் அதுதான்.

அஜீத்தோட இப்பத்தான் பழக்கம்.ரொம்ப வெளிப்படையான மனுஷன். எதையும் பளிச்சுனு பேசுவார். மனசுல எதையோ வெச்சுக்கிட்டு உள்ளே புகையற ஆள் இல்லை. நான் பர்சனலா அஜீத் ரசிகை. வாலி படம் என்னோட ஃபேவரைட். நானும் ஷாலினியும் ஒரே ஸ்கூல்... நண்பர்கள் வேற. அதனால் அஜீத்திடம் ஈஸியாக பழகுவேன்.

சூர்யா என் முதல் ஹீரோ. என்னோட முதல் ஸ்டேஜ் ஷோவும் அவரோடதான். ஆனா ரொம்ப பேசிக்கிட்டதுகூடக் கிடையாது. காக்க.. காக்க.. படம் அவரோட பெஸ்ட்னு சொல்வேன். அவர் நடிப்பு மேலே எனக்கு ரொம்ப மரியாதை.

மாதவனை ரொம்பப் பிடிக்கும். மாடலா இருக்கும்போதே பெப்ஸி விளம்பரத்தில் சேர்ந்து நடிச்சோம். அவரிடம் கம்ப்யூட்டர், புக்ஸ்னு எதைப் பற்றியும் மணிக்கணக்கில் பேசலாம்.நடமாடும் பல்கலைக்கழகம்.. டான்ஸ் ஆடத் திணறும்போது, ஸ்டெப்ஸைவிட ஸ்டைல் முக்கியம்னு சொல்லிட்டேயிருப்பார். க்யூட் ஹீரோ, சாக்லெட் ஹீரோனா அது மாதவன்தான். ஒரு நண்பன் மாதிரி பெண்கள் நினைக்கிறது அவரைத்தான்!

[b]யோசிச்சுப் பார்த்தா த்ரிஷாவுக்குனு ஸ்பெஷலா தனியா ஒரு அடையாளமே கிடையாது... ஏன்? </b>

நான் சின்னப் பொண்ணு தானே. அதுக்கு இன்னும்கொஞ்ச நாளாகும். நான் சிம்ரன் மாதிரி ஆல்ரவுண்டர் கிடையாது. அவங்களை க்யூட்னு சொல்ல முடியாது. ப்யூட்டினு கொண்டாட முடியாது. செக்ஸினு முத்திரை குத்த முடியாது. எல்லாம் சேர்ந்ததுதான் சிம்ரன்! செம கிளாமர் ரோல்ஸ் செய்திருக்காங்க. தடால்னு எல்லாத்தையும் விட்டுட்டு, கன்னத்தில் முத்தமிட்டால் மாதிரி அம்மா ரோல் செய்திருக்காங்க. அவங்க மாதிரி நானும் ரெடியாக இன்னும் கொஞ்சம் டைம் ஆகணும். ப்ளீஸ் வெய்ட்.!

<b>பாய் ஃப்ரெண்ட்ஸ் உங்களுக்கு அதிகமாமே... நிஜம்தானா? அவங்களைச் சமாளிக்கிறது கஷ்டம் இல்லையா?

ஓயெஸ்! எனக்கு இரண்டுதரப்பிலும் நண்பர்கள் இருக்காங்க. ஒரு பொண்ணு தோள்மீது கையைப் போட்டுட்டுப் போற மாதிரிஒரு ஆண் தோளிலும் கை போட்டுட்டு என்னால் போக முடியும். இதுலலவ் வரவே வராது. அப்படி மீறி வந்தால், கண்ணு ஓரத்துலதெரிஞ்சுடும். அப்படியே அவங்களைத் தூக்கித் தூரப் போட்டுருவோம். புத்தியில காதலை வெச்சுக்கிட்டுப் பழகினால், அது நட்பே இல்லை. முதல் பார்வையிலேயே காதல்னு யாராவது சொன்னா, நான் ரெண்டு நாளைக்குச் சிரிச்சுட்டே இருப்பேன்.

சரி[b].. யாரோட உங்களைச்சேர்த்து கிசுகிசு எழுதலாம். நீங்களே சொல்லிட்டா வசதியா இருக்கும்.. </b>

விவேக் ஓபராய். ச்சே.. என்னா ஸ்மார்ட்! லவ் பண்ணி ஆளை அள்ளிக்கிட்டுப் போயிடலாம் போல ஆசையா இருக்கு.

எங்கே பார்த்தாலும் கையைக் கோத்துக்கிட்டு அலையறாங்க.ஒருத்தரை ஒருத்தர் பார்வையால முழுங்கிக்கிறாங்கனு கசமுசானு ஏதாவது எழுதுங்க.

நான் எப்படியாச்சும் அந்தக் கிசுகிசுவை உண்மையாக்கப் பார்க்கறேன்!

[b]எந்த ஹீரோவுடன் நடிக்க உடனே சரி சொல்வீங்க?

மாதவன், சித்தார்த்!</span>

நன்றி - விகடன்


- kuruvikal - 03-22-2004

அடேயப்பா...இதுக்க இப்ப இரண்டு நாளைக்கு முன்னால ஒருத்தி அரையும் குறையுமா நிண்டாள் இப்ப காணல்ல...அட நடிகையாச்சே சொல்லாமல் கொல்லாமல் ஓடிப்போட்டாள் போல...! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- kuruvikal - 03-22-2004

இல்ல இல்ல நிக்கிறாள்..அது மட்டுமல்லாமல் கனபேர் புதுசாயும் வந்திருக்கிறாளவ.......பக்கம்தான் 'லோட்டேறி' 'டவுன்லோட்' ஆக மாட்டன் எண்டிட்டுது....யாழ்களத்தில இப்ப நல்லாத்தான் சுதந்திரம் விளங்குது...எங்களுக்கு ஒரு 'டவுட்டு' அதேன் பொண்டுகள் மட்டும் அரையும் குறையுமா நிக்கிறாளவ பொடியள்(ஒருத்தனத் தவிர) அப்படியில்ல...பொடியளுக்கு இன்னும் சுதந்திரம் கிடைக்கல்லையோ....அவுத்துப்போட்டு நிக்க....!! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

இப்ப யாழ் என்று ஆரம்பிக்கிறது எல்லாத்துக்கும் கெட்ட நேரம் போல...அங்க யாழ்ப்பாணம் அக்கிரமத்துக்கு முதலிடம் போல...இங்க சினிமா சில்மிசங்கள் அதிகரிச்சுப் போட்டுது....! தனித்துவம் கொடிக்கட்டுது போல...!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll:


- AJeevan - 03-22-2004

<b>ரஹ்மான் சிம்பொனி!</b>
<img src='http://www.vikatan.com/av/2004/mar/28032004/p75.jpg' border='0' alt='user posted image'>

ரஹ்மானுக்கு எப்போதும் பிடித்த வெள்ளிக்கிழமை... ஏராளமான இசைவிரும்பிகள் குவிந்திருந்த லண்டன் பர்மிங்ஹாம் சிம்பொனி ஹாலில் ஏ.ஆர்.ரஹ்மான்!

மார்ச் 5... சிஙிஷிளி என்கிற சிட்டி ஆஃப் பர்மிங்ஹாம் சிம்பொனி ஆர்க்கெஸ்ட்ரா, லண்டனில் ரஹ்மானின் இசைநிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. அவரது புகழ்பெற்ற இந்தி இசைக்கோவைகளை சிஙிஷிளி|வின் சிம்பொனி ஆர்க்கெஸ்ட்ரா குழுவினர் வழங்குவதாகத் திட்டம். ரஹ்மான் நேரடியாக அதை நடத்தித் தர வந்திருந்தார்!

"லகான்", பாம்பே ட்ரீம்ஸ், என்று ஏ.ஆர்.ரஹ்மான் அங்கே ஏற்கெனவே பிரபலம். பாம்பே ட்ரீம்ஸ், பாம்பே, ரிலீஸாகப் போகிற எம்.எஃப்.ஹ§ஸைனின் Ôமீனாட்சி என அடுத்தடுத்து வாசித்தார்கள். தில் சே, மியூஸிக்கை அவர் பியானோவில் வாசித்தபோது பெரும் வரவேற்பு!

அந்த மிகப் பெரிய அரங்கம் ஆசியர்களாலும் ஆப்பிரிக்கர் களாலும் பல வெளிநாட்டு இசைவிரும்பிகளாலும் நிரம்பி வழிந்தது. குவிந்திருந்தவர்கள், பாலிவுட்டின் மணத்தை வெஸ்டர்ன் கிளாஸிக் கலந்து பிரமாதப்படுத்தப் போகிறார் ரஹ்மான் என்று காத்திருந்தார்கள்.

அந்தப் பெரும் சிம்பொனி ஆர்க்கெஸ்ட்ரா குழுவை ரஹ்மான் தன் கட்டுப்பாட்டில் வைத்து இசை கொடுப்பாரா என்றெல்லாம் யாரும் கவலைப்படவில்லை. ஏனெனில், 1980|ல் அந்த அரங்கில் இசையமைத்த சர்.சைமன் ராட்டலுக்கு வயது இருபத்தைந்துதான்.

ரஹ்மான் வந்தார். இசைக் குறிப்புகளைக் கொடுத்துவிட்டு நிகழ்ச்சியை நடத்த ஆரம்பித்தார். குழுவினர் இசைக்க ஆரம்பித்தார்கள்.

ஆனாலும் ஏதோ ஒன்று நெருடலாகவே இருந்தது. தனது திரைப்பாடல்களின் இசைக் குறிப்புகளை ஆர்க்கெஸ்ட்ரா ஸ்கோராக மாற்றுவதில் ரஹ்மானுக்குப் போதிய தயாரிப்பு இல்லாதது தெளிவாக வெளிப்பட்டது. சற்று நேரம்தான்... ரஹ்மான், இன்னொருவரிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு , அரங்கத்தில் ஒருவராக அமர்ந்து தன் இசையை ரசிக்க ஆரம்பித்தார்.

சன்னமான குரலில் ரஹ்மானே சொன்னார்.

"நான் தவறு செய்து விட்டேன்... அடுத்த முறை நன்றாகப் பயிற்சி செய்து கொண்டு திரும்ப வருகிறேன்..."

ரஹ்மான் தரப்பில் விசாரித்தபோது, அந்த நிகழ்ச்சிக்கு ரஹ்மானுடன் செல்ல வேண்டிய நவீன், சிவகுமார் போன்ற பலருக்கு கடைசி நிமிடம் வரை விசா கிடைக்காமல் போனதுதான் பிரச்னை. அதனால் இசை நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகள் செய்ய முடியாமல் போனது. தனியாக ரஹ்மானே எல்லா வேலைகளையும் சுமக்க வேண்டி இருந்தது. அவகாசம் இருந்திருந்தால் நிகழ்ச்சி இன்னும் சிறப்பாக அமைந் திருக்கும். மற்றபடி ரஹ்மான் அங்கே சொன்ன வார்த்தைகள் அவரது தன்னடக்கத்துக்கு இன்னொரு உதாரணம். அவ்வளவுதான்!என்றார்கள்.
நன்றி: விகடன்


- Mathan - 03-23-2004

விஸ்வரூபமெடுக்கிறார் ஏ.ஆர். ரஹ்மான்-

கொஞ்ச காலமாக சற்றே இசையுலகில் தொய்வாக இருந்த ஏ.ஆர். ரஹ்மான் இப்போது மறுபடியும் விஸ்வரூபமெடுக்கிறார்.

'ரோஜா' படத்தின் மூலம் தமிழ் திரையலகில் நுழைந்தவர் ஏ.ஆர். ரஹ்மான். பிறகு 'ஜென்டில்மேன்', 'காதலன்', 'பம்பாய்' போன்ற படங்களின் மாபெரும் ஆடியோ ஹிட் அவரை நட்சத்திர இசையமைப்பாளராக உயரித்தியது. தொடர்ந்து இந்திப்படங்களின் நுழைந்து 'தால்', 'லகான்' போன்ற படங்களின் இசை சாதனை மூலம் இந்தியிலும் முன்னனி இசையமைப்பாளரானார். ஆனால் சமீப காலமாக அவரது பாடல்கள் எதிர்பார்த்த அளவில் ஆடியோ விற்பனை ஆகவில்லை.


இந்நிலையில் ரஹ்மான் 'ஆய்தஎழுத்து' படத்தின் பாடல்கள் மூலம் தனது மறுபிரவேசத்தை அசத்தலாக ஆரம்பித்துள்ளார். வைரமுத்து-மணிரத்னம்-ரஹ்மான் கூட்டணி இசையில் எப்போதும் வெற்றிக் கூட்டணி என்றால், அவர்கள் இந்த ஆய்தஎழுத்து படப்பாடல்கள் மூலம் ஒரு மாயாஜாலமே நடத்தி ரசிகர்களை கிறங்கடித்துள்ளனர்.


படத்தின் ஆறு பாடல்களும் இளமை துள்ளலுடன் அனைவரையும் தாளம் போட வைக்கின்றன. வழக்கம் போலவே இந்தப் படத்திற்கும் ரஹ்மான் முதலில் இசை அமைத்துவிட்டு பிறகே வைரமுத்துவை பாடல்கள் எழுத வைத்துள்ளார்.


படத்தில் 'டோல் டோல்' என்று ஆரம்பிக்கும் 'ராப்' பாடல் ரஹ்மானுக்கே உரிய ஸ்டைலில் இளைஞர்களின் மனதை கொள்ளை கொள்ளப்போகிறது. இது இனி இந்திய டிஸ்கோதேக்கள் அனைத்திலும் திரும்ப திரும்ப ஒலிக்கப்போவது நிச்சயம். 'ஜன கண மன' பாடல் அட்டென்ஷனில் நிற்க முடியாமல் அனைவரையும்

ஆடவைக்கும்படி உள்ளன. 'நெஞ்சம் எல்லாம்' என்ற இனிய மெலடி பாடலும் உள்ளத.


சந்தேகத்திற்கிடமில்லாமல், ரஹ்மானின் இசைப்பயணத்தில், அதுவும் அவர் மார்க்கெட் ஓரளவு தொய்வடைந்த நேரத்தில் வருவதால், 'ஆய்தஎழுத்து' ஒரு மைல்கல்லாகவே அமையும்.

நன்றி - சினிசவுத்


- Mathan - 03-23-2004

இந்த பழைய தமிழ் பொப் பாட்டுக்களை எங்கே எடுக்கலாம்? யாருக்காவது தெரியுமா?


- Eelavan - 03-23-2004

http://www.tamilsongs.net/page/build/categ.../Sri_Lankan_POP/


- Mathan - 03-23-2004

Eelavan Wrote:http://www.tamilsongs.net/page/build/categ.../Sri_Lankan_POP/

மிக்க நன்றி ஈழவன். இது Real player வடிவில் இருக்கின்றது. எங்கேயாவது MP3 வடிவில் எடுக்க முடியுமா?