![]() |
|
அழகான களத்தை அசிங்கம் பண்ணலாமா??? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31) +--- Thread: அழகான களத்தை அசிங்கம் பண்ணலாமா??? (/showthread.php?tid=6933) Pages:
1
2
|
அழகான களத்தை அசிங்கம் - Mayuran - 07-16-2004 அழகான களத்தை அசிங்கம் பண்ணலாமா??? தமிழில் உறவாட கருத்தாட உருவாக்கப்பட்டிருக்கும் இத்தளத்தில் திருவிழா மலசலகூடம் போல் சிலர் அப் பகுதிக்கு ஒவ்வாத தேவையற்ற கருத்துக்களை எழுதி அரிய கருத்தாடலை அசிங்கப்படுத்துகிறார்களே! அவர்கள் புரிந்துகொண்டு ஒழுங்கான முறையில் கருத்தாடினால் களம் இன்னும் சிறப்பாக இருக்கும். இது என் தனிப்பட்ட கருத்து. - Ilango - 07-16-2004 நான் அப்படி ஒன்றும் எழுதவில்லையே. Re: அழகான களத்தை அசிங்கம - kuruvikal - 07-16-2004 Mayuran Wrote:அழகான களத்தை அசிங்கம் பண்ணலாமா??? அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே நெஞ்சிலே.... நண்பரே...நண்பரே..... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Mayuran - 07-16-2004 இளங்கோ நான் உங்களை என்று குறிப்பிடவி;ல்லையே! ஒரு சிலர் என்று தானே குறிப்பிட்டிருக்கிறேன். அந்த ஒரு சிலரில் நீங்களும் ஒருவரா? :wink: - kuruvikal - 07-16-2004 அந்தச் சிலரோடு நீங்களும் சேராதிருக்க உங்களை உங்கள் சித்தம் வழிநடத்தட்டும்....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- shanmuhi - 07-16-2004 Quote:இத்தளத்தில் திருவிழா மலசலகூடம் போல் சிலர் அப் பகுதிக்கு ஒவ்வாத தேவையற்ற கருத்துக்களை எழுதி அரிய கருத்தாடலை அசிங்கப்படுத்துகிறார்களே! திருவிழா இதன் விளக்கம் என்ன...? ? ? அறியத்தருவீர்களா...? - வெண்ணிலா - 07-16-2004 <b>தவறு என்று நீங்கள் குறிப்பிடும் அந்தத் தவறுகளையும் தவறு செய்பவர்களையும் சுட்டிக்காட்டினால் தவறுகளை திருத்துவதற்கு இலகுவாக .இருக்குமல்லவா</b> - tamilini - 07-16-2004 :| :| :mrgreen: - Ilango - 07-16-2004 Mayuran Wrote:இளங்கோ நீங்கள் விடயத்தை சொல்லாமல் மொட்டையாக சொன்னால் என்னையும் நினைப்பதில் தவறில்லையே? என்ன? யார்? என்று கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கள் - vasisutha - 07-16-2004 மயூரனின் வாயிலிருந்து யாருடைய பெயரோ வரவேணும் என்று இளங்கோ எதிர்பார்க்கிற மாதிரி இருக்கே.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> சொல்லுங்க மயூரன் சொல்லுங்க நாங்களும் ஆவலோட எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறம். 8) - vasisutha - 07-16-2004 ஒருவேளை நானா
- tamilini - 07-16-2004 எனக்கு தெரியுமே <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- kuruvikal - 07-16-2004 பழையதை மீட்டல் நன்று...புதியதை படிப்பிக்க முதல்....உதாரணங்கள் அழிவதில்லை....மீண்டும் உதாரணமாகும்....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:
- tamilini - 07-16-2004 Quote:பழையதை மீட்டல் நன்று...புதியதை படிப்பிக்க முதல்....உதாரணங்கள் அழிவதில்லை....மீண்டும் உதாரணமாகும்....! ஓன்டுமே புரியல அண்ணை.......! - Eelavan - 07-16-2004 தலைப்புக்குப் பொருத்தமில்லாமல் கருத்துக்கள் எழுதுபவர்கள் என்று மயூரன் விளக்கமாகச் சொல்லிவிட்டாரே இனி பெயர் வேறு சொல்லவேண்டுமா சிலவேளைகளில் நான் கூட யோசிப்பதுண்டு விவாதம் என்ற பெயரில் சுவருடன் முட்டிக்கொண்டிருக்கின்றேனா என்று.யோசிப்போம் - kuruvikal - 07-16-2004 என்னத்தைச் யோசிக்கிறது... திசை திருப்பிகள் எங்கு தான் இல்லை...ஏன் திருவிழா மலசல கூடம் போனவர்களில் சொன்னவரும் கூட ஒரு காலத்தில் இருந்திருக்கலாம்... மீண்டும் மீண்டும் சொல்வதல்ல முக்கியம்... செய்யும் போது தானே சொல்வதை கடைப்பிடிப்பதுதான் தேவை....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> யோசிப்பதிலும் பார்க்க சமயோசிதமே களத்திற்குத் தகும்... அதுதான் கூடிய சாத்தியம்....களம் களமாக இருக்க....!
அனைவருக்கும் தெரியும - Mayuran - 07-16-2004 நான் கூறிய விடயத்திலேயே அனைத்தையும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளேன். எது தேவையற்ற கருத்து என்பதும் தலைப்புக்கு பொருத்தமற்ற கருத்தென்பதும் எழுதும் அனைவருக்கும் தெரியும். - kuruvikal - 07-17-2004 ஏதோ வந்ததுக்கு சொல்லுறியள் போல சொல்லுங்கோ சொல்லுங்கோ...கேக்கிறவ கேப்பினம்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Eelavan - 07-17-2004 சமயோசிதமாக எழுதுவதென்பது ஆளாளுக்கு வேறுபடும் குருவிகாள் நீங்கள் ஒரு கருத்துக்குப் பதிலளிக்கும் போது அது உங்களுக்கு சமயோசிதமான கருத்தாகத் தோன்றலாம் இன்னொருவருக்கு அலட்டலாகத் தோன்றும் அதுதான் யோசிப்போம் என்று சொன்னேன். யார் என்ன சொன்னாலும் அதற்குப் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும் என்று கட்டாயம் இல்லை அதற்குச் சொல்லும் பதில் அந்த இடத்தில் தேவையா பொருத்தமானதா என்று பார்த்துத் தான் சொல்லவேண்டும். ஒருவர் ஒரு கருத்தைச் சொல்லும்போதே அதனைப் பற்றி தன்னைச் சுயவிமர்சனம் பண்ணிக்கொண்டே வரவேண்டும் அதையே மயூரனும் செய்திருப்பார் என நம்புகின்றேன் அதையே "அவர் அப்போது அப்படிச் செய்தார் நான் இப்போது இப்படிச் செய்கிறேன்" என்று விதண்டாவாதப் சொல்வதில் அர்த்தம் இல்லை - Ilango - 07-17-2004 Eelavan Wrote:சமயோசிதமாக எழுதுவதென்பது ஆளாளுக்கு வேறுபடும் குருவிகாள் நீங்கள் ஒரு கருத்துக்குப் பதிலளிக்கும் போது அது உங்களுக்கு சமயோசிதமான கருத்தாகத் தோன்றலாம் இன்னொருவருக்கு அலட்டலாகத் தோன்றும் அதுதான் யோசிப்போம் என்று சொன்னேன். Eelavan தவறைச்சுட்டிக்காட்டுவதில் தவறில்லை. ஆனால் தவறுகளைச்சுட்டிக்காட்டவதனால் மட்டும் களம் அழகாகிவிடாது. இங்கு எழுதும் ஒவ்வொருவரின் எழுத்தில் தான் அது உள்ளது. எல்லோரும் வருடத்திற்கு ஒரு முறை வந்து தவறுகளை மட்டுமே சுட்டிக்காட்டினால் களம் வளர்ந்துவிடாது. களத்தில் நிறைய எழுதுபவர் என்ற ரீதியில் குருவிகள் தனது கருத்தை முன்வைத்தது சரியே. அதே போல்த்தான் நானும் கேட்டிருந்தேன். அப்படி என்ன தான் மலசலகூடத்துடன் ஒப்பிடும் அளவுக்கு எழுதப்பட்டிருந்தது. மலசலகூடத்துடன் ஒப்பிடக்கூடிய கருத்துக்களை அப்பகுதிக்கு பொறுப்பானவர்கள் நீக்காது இருக்கின்றனரா? அதனை மயூரன் விளக்குவாரா? இதனைக்கேட்ட போது தெளிவாக எழுதியுள்ளாராம். தலைப்புக்கு பொறுத்தமில்லாததும். தேவையில்லாதுமாம். அது தான் எது ஐயா? சும்மா நொட்டை நொடுக்கு சொல்லாமல் ஆதாரத்துடன் சொல்லுங்கள். கண்காணிப்பாளர்களுக்கு இலகுவாக இருக்கும் அதனை அகற்றுவதற்கு. அதே போல் நாமும் அறிந்து கொள்ளலாம். உண்மையில் அவை மலசலக்கூடக்கருத்தா அல்லது உங்கள் கண்ணில் கோளாறா என்று? என்னைப்பொறுத்தவரை மற்றவர்களின் கருத்தை மலசலகூடத்துன் ஒப்பிட்டதே தவறு. அப்படி எழுதி நீங்கள் தான் களத்தை அசிங்கமாக்கிவிட்டீர்கள். நான் இங்கு சிநியளவே எழுதியுள்ளேன். அவற்றில் சில சிலவேளை மயூரன் கண்ணுக்கு மலசலக்கூடகருத்தாக இருக்கலாம்.இல்லாமலும் இருக்கலாம். ஆனால் சிலர் அதிகளவில் எழுதுகின்றனர். அதில் பல நல்லவிடயங்கள் உண்டு. சில தேவையில்லாமல் இருக்கலாம் ஆனால் அவை மலசலகூடத்துடன் ஒப்பிடுமளவுக்கு அருக்கவில்லை. நான் எல்லாப்பகுதிகளும் வாசிப்பதில்லை. அதனால் கவனிக்காமல் விட்டிருக்கலாம். அது தான் கேட்கிறேன். எங்கு அப்படி உள்ளது? |