![]() |
|
கிரிக்கெட் - ஆசியக் கோப்பை 2004 - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37) +--- Thread: கிரிக்கெட் - ஆசியக் கோப்பை 2004 (/showthread.php?tid=6908) |
கிரிக்கெட் - ஆசியக் கோ - kuruvikal - 07-20-2004 <img src='http://www.webulagam.com/cricket/images/top-cricket.gif' border='0' alt='user posted image'> கிரிக்கெட்: இந்தியா இலங்கையிடம் தோல்வி ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 13 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இந்த ஆட்டத்தில் காயம் அடைந்த வி.வி.எஸ். லட்சுமணுக்கு பதிலாக விக்கெட் கீப்பர் பார்த்தீவ் பட்டேல் அணியில் சேர்க்கப்பட்டார். டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. தொடக்க வீரர்களாக ஜெயந்தாவும், குணவர்த்தனேயும் களம் இறங்கினர். இரண்டாவது ஓவர் தொடங்கியபோது ஆட்டம் மழையால் சிறிது நேரம் தடைபட்டது. பின்னர் இலங்கை அணியினர் இந்திய அணியினரின் பந்து வீச்சை எதிர்கொள்ள மிகவும் தடுமாறினர். ரன்வேகம் மிகவும் மெதுவாக இருந்தது. ஸ்கோர் 63 ஆக இருந்தபோது 34 ரன் எடுத்திருந்த ஜெயந்தா பாலாஜி பந்தில் அவுட் ஆனார். பின்னர் கேப்டன் அட்டபட்டு ஆட வந்தார். இந்த ஜோடி 20.4 ஓவர்களில் அணியின் ஸ்கோர் 100யைக் கடக்க உதவியது. ஸ்கோர் 128 ஆக இருந்தபோது குணவர்த்தனே (49 ரன்கள்) ரன் அவுட் ஆனார். அடுத்த வந்த சங்கக்கரா அடித்து ஆட ஆரம்பித்தார். மறுமுனையில் 50 ரன்களை எடுத்திருந்த அட்டபட்டு ரன் அவுட் ஆனார். பின்னர் சங்கக்கராவுடன் ஜெயவர்த்தனே இணைந்து அதிரடி ஆட ஆரம்பித்தார். சங்கக்கரா 57 ரன் எடுத்து அவுட் ஆனார். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இலங்கை 4 விக்கெட் இழப்புக்கு 282 ரன்கள் எடுத்தது. 283 ரன்கள் இலக்குடன் தொடக்கவீரர்களாக டெண்டுல்கரும், பார்த்தீவ் பட்டேலும் களம் இறங்கினர். 4 ஓவரில் 11 ரன் எடுத்து இருந்த டெண்டுல்கர் ஜோய்சா பந்தில் அவுட் ஆனார். அப்போது அணியன் ஸ்கோர் 16. பின்னர் வந்த ஷேவாக் அடித்து ஆட ஆரம்பித்தார். அதிர்ஷ்டவசமாக இவர் கொடுத்த கேட்ச்சை சமிந்தா வாஸ் தவறவிட்டுவிட, ஷேவாக் ரன்களை வேகமாக சேகரிக்கத் தொடங்கினார். மறுமுனையில் 6 ரன் எடுத்து இருந்த பார்த்தீவ் பட்டேல் ஜோய்சா பந்தில் கேட்ச் அவுட் ஆனார். இதனையடுத்து கங்குலி ஷேவாக்குடன் இணைந்தார். 13.4 ஓவரில் ஷேவாக் இரண்டு ரன்களை எடுக்க முயன்று ரன் அவுட் ஆனார். அதற்கு அடுத்த ஓவரிலேயே கங்குலியும் அவுட் ஆனார். 4 முக்கிய விக்கெட்டுகளை 71ரன்களில் இழந்த அணியை டிராவிட், யுவராஜ் ஜோடி சரிவில் இருந்த மீட்டது. டிராவிட் 73 பந்துகளில் 50 ரன்களைக் கடந்தார். இந்தியா 40.1 ஓவரில் 200 ரன்களை எடுத்தது. அப்போது 47 ரன்களை எடுத்திருந்த யுவராஜ் சிங் வாஸ் பந்தில் கேட்ச் அவுட் ஆனார். பின்னர் வந்த கயூப் 22 ரன்களிலும் டிராவிட் 82 ரன்களிலும் அவுட் ஆனார்கள். இறுதியில் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. மற்றொரு ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 173 ரன்கள் வித்தியாசத்தில் ஹாங்காங்கை தோற்கடித்தது. பாகிஸ்தான் வீரர்கள் சோயப் மாலிக், யூனுஸ்கான் ஆகியோர் சதம் அடித்தனர். thatstamil.com - kuruvikal - 07-20-2004 <b>Asia Cup 2004</b> Group A: Pakistan, Bangladesh, Hong Kong. Group B: Sri Lanka, India, UAE Phase one: 16 July: Bangladesh beat Hong Kong by 116 runs India beat UAE by 116 runs 17 July: Pakistan beat Bangladesh by 76 runs Sri Lanka beat UAE by 116 runs 18 July: Pakistan beat Hong Kong by 173 runs (D-L) Sri Lanka beat India by 13 runs (Dambulla) Phase two: 21 July: Bangladesh v India (SSC), Pakistan v Sri Lanka (Premadasa) 23 July: Bangladesh v Sri Lanka (Premadasa) 25 July: Pakistan v India (Premadasa) 27 July: Sri Lanka v India (Premadasa) 29 July: Pakistan v Bangladesh (Premadasa) 1 Aug: Final (Premadasa) 2 Aug: Reserve day bbc.com - kavithan - 07-20-2004 [size=18]<b>இலங்கையிடம் போராடித் தோற்றது இந்தியா!</b> திங்கள், 19 ஜூலை 2004 இலங்கை அணியின் முன்னணி ஆட்டக்காரர்களின் பொறுப்பான ஆட்டமும், நூவான் சொய்சாவின் அபார பந்து வீச்சும், ராகுல் திராவிட்-யுவராஜ் சிங் இணையின் அபார ஆட்டத்தையும் தாண்டி இலங்கை அணிக்கு வெற்றித் தேடித் தந்தன! இந்தியன் ஆயில் ஆசியக் கோப்பைக்காக ரங்கிரி டம்புல்லா சர்வதேச மைதானத்தில் இன்று நடந்த 6வது பரபரப்பான போட்டியில், இலங்கை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வென்றது. பூவா-தலையா வென்ற இலங்கை அணி முதலில் களமிறங்கி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 282 ரன்களை எடுத்தது. 283 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, முதல் 15 ஓவர்களிலேயே 70 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகளை இழந்தாலும், அதன் பிறகு திராவிடும், யுவராஜூம் இணைந்து எடுத்த 134 ரன்களின் உதவியால் இலக்கை நெருங்கியும் வெற்றியை எட்ட முடியாமல் 269 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. முதல் 20 ஓவர்களில் இந்திய அணியின் அபார பந்து வீச்சை மிக எச்சரிக்கையாக எதிர்கொண்ட இலங்கை அணி, ஒரு விக்கெட்டை இழந்து 94 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. அதற்குப் பிறகும் விக்கெட்டுகளை இழக்காமல் நிதானமாக ஆடி குணவர்தனேயும், அட்டப்பட்டுவும் அந்த அணியின் எண்ணிக்கையை 34வது ஓவரில் தான் 150 ரன்களை எட்டச் செய்தனர். அட்டப்பட்டு 50 ரன்களும், அவிஷ்கார் குணவர்தனே 49 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இலங்கை அணி 3 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்களை எடுத்திருந்த நிலையில் இணைந்த குமார சங்ககாராவும், மஹிலா ஜெயவர்தனேயும் மிகச் சிறப்பாக ஆடி 93 பந்துகளில் 116 ரன்களைக் குவித்தனர். இவர்களின் சிறப்பான ஆட்டத்தின் உதவியால் 282 ரன்களை இலங்கை அணி குவித்தது. இந்திய அணியின் துவக்க பந்து வீச்சாளர்களைப் போலவே இலங்கை அணியின் சமிந்தா வாசும், நூவான் சொய்சாவும் மிகச் சிறப்பாக பந்து வீசினர். சொய்சா, சச்சின், பட்டேல், கங்குலி ஆகியோரை வீழ்த்தினார். நன்றாக விளையாடிக் கொண்டிருந்த சேவக்கை (37) அருமையான பந்து ஒன்றை வீசி ஃபர்வீஸ் மஹாரூஃப் ஆட்டமிழக்கச் செய்தார். 15வது ஓவரின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 70 ரன்களை மட்டுமே எடுத்திருந்த இந்திய அணியை, திராவிடும், யுவராஜூம் இணைந்து தூக்கி நிறுத்தினர். இவர்கள் இருவரும் இன்று ஆடிய ஆட்டம் அபாரமானது என்கின்ற வார்த்தைக்கு உதாரணமாகும். கடினமான ஒரு சூழ்நிலையில் பந்துக்கு பந்து ரன் எடுத்து இவர்கள் இருவரும் அடுத்த 26 ஓவர்களில் இணைந்து எடுத்த 134 ரன்களின் உதவியால் இந்திய அணி, வெற்றியை நோக்கி முன்னேறியது. யுவராஜ் 78 பந்துகளில் 4 பௌண்டரிகளுடன் 47 ரன்கள் எடுத்திருந்தபோது வாசின் பந்தை தூக்கியடிக்க முயன்று ஆட்டமிழந்தார். அதன் பிறகு ஆட வந்த கய்ஃபுடன் இணைந்து மேலும் 30 ரன்கள் குவித்த ராகுல் திராவிட், முரளிதரனின் பந்தை சரியாகக் கணிக்காமல் பின்னால் சென்று தடுத்தாட முயன்று 82 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தார். கய்ஃப் வேகமாக ஆடி 21 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார். இறுதிக் கட்டத்தில் பத்தானும், பாலாஜியும் தங்களால் இயன்ற அளவுக்கு சிறப்பாக ஆடினர். ஆயினும் வெற்றி இலக்கை எட்ட முடியவில்லை. பி-பிரிவில் 11 புள்ளிகளுடன் இலங்கை முதலிடத்திலும், 7 புள்ளிகளுடன் இந்தியா 2வது இடத்திலும் உள்ளன. வரும் புதன்கிழமை கொழும்புவில் நடைபெற உள்ள போட்டியில் ஏ-பிரிவில் 2வதாக வந்துள்ள வங்கதேச அணியுடன் இந்தியாவும், முதலிடத்தில் வந்துள்ள பாகிஸ்தான் அணியுடன் இலங்கையும் மோதுகின்றன. நன்றி வெப் உலகம் - kavithan - 07-20-2004 [size=18]<b>ஆசியக் கோப்பை : ராகுல் சதம்! இந்தியா வெற்றி!!</b> ராகுல் திராவிட் 90 பந்துகளில் அடித்த அபார சதமும், கங்குலியின் அரை சதமும், இர்ஃபான் பத்தான், லக்ஷ்மிபதி பாலாஜி, சச்சின் டெண்டுல்கர் ஆகியோரின் அருமையான பந்து வீச்சும் இந்திய அணிக்கு ஆசியக் கோப்பை ஒரு நாள் போட்டிகளில் முதல் வெற்றியைப் பெற்றுத் தந்தன! ரங்கிரி டம்புல்லா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் சற்று முன் நடந்து முடிந்த பி பிரிவு போட்டியில் முதல்முறையாக சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற ஐக்கிய அரபு குடியரசுகள் அணியை 116 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி சுலபமாக வென்றது. பூவா - தலையா வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி, ஐக்கிய அரபு அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் அலி அப்பாஸும், அசிம் சையதும் வீசிய பந்துகளை எதிர்கொள்வதில் பெரும் சவாலை சந்தித்தது. முதல் ஓவரிலேயே அவசரமாக ரன் எடுக்க முயன்ற வீரேந்திர ஷேவக் ரன் அவுட்டாகி வெளியேறினார். 8வது ஓவரிலேயே 18 ரன்களை எடுத்த சச்சின் (18) ஆட்டமிழந்தார். முதல் 15 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து வெறும் 58 ரன்களை மட்டுமே எடுத்திருந்த இந்திய அணி, 17வது ஓவரில் லக்ஷ்மணையும் (14) இழந்தது. அதன் பிறகு இணை சேர்ந்த திராவிடும், சௌரவும் மிக நிதானமாக ஆடி அணியின் எண்ணிக்கையை கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தினர். ராகுல் திராவிட் ஒவ்வொரு பந்திலும் 1 ரன்னாக எடுத்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தினார். இவர்கள் இருவரும் இணைந்து 4வது விக்கெட்டிற்கு 88 ரன்கள் அணியை நிலைப்படுத்த உதவியது. அரை சதத்தைக் கடந்த சௌரவ் கங்குலி, ரன் எண்ணிக்கையை வேகப்படுத்த முயன்று விக்கெட்டை பறிகொடுத்தார். ஆனால் அதன் பிறகு ஆட வந்த யுவராஜூம் (22), மொஹம்மது கய்ஃபும் (32) ராகுலுடன் இணைந்து மிக வேகமாக ரன்களை எடுத்து அணியின் எண்ணிக்கையை 260 ரன்களுக்கு உயர்த்தினர். ராகுல் திராவிட் 90 பந்துகளில் சதம் எடுத்தார். வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான ஆட்டக்களத்தில் நேரம் ஆக ஆக பந்தின் வேகம் குறைந்தபொழுதும் சூழ்நிலைக்கு தக்கவாறு மிகச் சிறப்பாக ஆடி ரன்களை எடுத்தது மட்டுமின்றி, குறைந்த பந்துகளில் சதமும் அடித்து அணியை கரையேற்றினார் திராவிட். பத்தான், பாலாஜி அபார பந்து வீச்சு! 261 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐக்கிய அரபு அணி, முதல் ஓவரிலேயே பத்தானின் பந்திற்கு முதல் விக்கெட்டை இழந்தது. அந்த அணி 8வது ஓவரை எட்டுவதற்குள் முதல் 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. பத்தான் அபாரமாக பந்து 3 விக்கெட்டுகளையும், பாலாஜி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஐக்கிய அரபு அணியின் தாகீர், ஜாஹீர் கானின் தாக்குதலை மிகத் திறமையாக சமாளித்து அரை சதத்தை எடுத்து அந்த அணியின் எண்ணிக்கையை 100 ரன்களை தாண்டச் செய்தார். சச்சினின் பந்தை மேலேறி வந்து தூக்கியடிக்க முயன்று தாகீர் ஆட்டமிழந்ததுடன் அந்த அணியின் சவாலும் முடிவுற்றது. 35 ஓவர்களில் 144 ரன்களுக்கு ஐக்கிய அரபு அணி ஆட்டமிழந்தது. இந்தியா 116 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இர்ஃபான் பத்தான் 28 ரன்களைக் கொடுத்து 3 விக்கெட்டுகளையும், பாலாஜி 28 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும், சச்சின் கடைசிக் கட்டத்தில் 4 ஓவர்கள் வீசி 21 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் போனஸ் புள்ளியையும் பெற்றது இந்திய அணி. - ÀÃ狀¡¾¢ - 07-20-2004 ¸¢Ã¢ì¦¸ð §À¡ðʸ¨Ç ¦¾¡¼÷óÐ ¦¸¡ÎìÌõ ÌÕÅ¢¸ÙìÌ, ¸Å¢¾ý ¬¸¢§Â¡ÕìÌ ¿ýÈ¢. þí§¸ ¸¢Ã¢ì¦¸ð ÀüÈ¢ §Àº ¿ñÀ÷¸û ¸¢¨¼ò¾Ð, ºó§¾¡ºÁ¡¸ þÕ츢ÈÐ. - kavithan - 07-23-2004 <span style='font-size:25pt;line-height:100%'><b>இலங்கை-வங்கதேசம் இன்று பலப்பரீட்சை </b></span> கொழும்பு, ஜூலை 23- ஆசிய கோப்பை கிhpக்கெட் போட்டிக்கான சூப்பர்லீக் ஆட்டத்தில் இலங்கை, வங்கதேச அணிகள் இன்று மோத உள்ளன. ஆசிய கோப்பை கிhpக்கெட் போட்டிக்கான சூப்பர்லீக் ஆட்டத்தில் இலங்கை, வங்கதேச அணிகள் இன்று மோத உள்ளன. இந்தப்போட்டியில் இலங்கை அணி இன்னும் எந்த மோதலிலும் தோற்கவில்லை. நேற்று முன்தினம் நடந்த முதல் சூப்பர்லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை 122 ரன்னில் இலங்கை சுருட்டியது. இந்த ஆட்டம் இலங்கை வீரர்களின் நம்பிக்கையை அதிகப் படுத்தி உள்ளது. ஜெயசூர்யா, அட்டப்பட்டு உள்ளிட்ட முன்னணி ஆட்டக்காரர்கள் பேட்டிங்கில் தடுமாறி வந்தாலும், இலங்கையின் பந்துவீச்சு உன்னத நிலையில் இருக்கிறது. முரளிதரன், சொய்சா, வாஸ் ஆகியோர்களின் அசத்தல் பந்துவீச்சுக்கு இதுவரை நல்ல முடிவு கிடைத்துள்ளது. இன்றைய ஆட்டத்தில் இலங்கை அணியின் வெற்றி உறுதியாக இருந்தாலும், வங்கதேச அணியை எச்சாpக்கையுடன் எதிர்கொள்ள இருப்பதாக காப்டன் அட்டப்பட்டு தொpவித்தார். இலங்கை அணிக்கு பயிற்சியாளராக இருந்த வாட்மோர் தற்போது வங்கதேச அணிக்கு பயிற்சி அளித்து வருகிறhர். எனவே இலங்கை வீரர்களின் ப்ளஸ் மற்றும் மைனஸ் பாயின்ட் வாட்மோருக்கு நன்றhக தொpயும். இந்த வாய்ப்பை வங்கதேச வீரர்கள் சாpயான அளவில் பயன்படுத்திக்கொண்டால் இலங்கை அணிக்கு லேசான சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கடைசி லீக் போட்டியில் இந்தியாவை 13 ரன் வித்தியாசத்தில் இலங்கை வீழ்த்தியது. இந்தப்பந்தயத்தை பொறுத்தவரை முன்னணி இடத்தில் இருக்கும்2 அணிகளையும் இலங்கை தோற்கடித்துவிட்டது. கடந்த மோதலில் போனஸ் புள்ளியை பெற்றிருக்கும் இலங்கைக்கு இறுதி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. வங்கதேசத்தை தோற்கடித்த இந்தியாவுக்கும் போனஸ் புள்ளி கிடைத்துள்ளது. தற்போதுள்ள நிலவரப்படி இந்தியா, இலங்கை அணிகள் இறுதிக்கு முன்னேற அதிகப்படியான வாய்ப்பு இருக்கிறது. எந்த நேரத்திலும் வீறு கொண்டு எழும்பும் பாகிஸ்தான் எஞ்சிய மோதல்களை எந்த அளவுக்கு எதிர் கொள்ளப்போகிறது என்பதை பொறுத்தே இறுதி முடிவு தீர் மானிக்கப்படும் என்பது உறுதி. இந்தியா-பாகிஸ்தான் அணிகள் வருகிற 25-ந்தேதி மோத இருக்கின்றன. இதன்பின்னர் வருகிற 27-ந்தேதி இந்தியா- இலங்கை அணிகள் பலப்பாPட்சை நடத்துகின்றன. நன்றி தினகரன் - kavithan - 07-23-2004 <span style='font-size:25pt;line-height:100%'><b>ஆசியக் கிண்ணத்திலும் சச்சினின் சாதனை தொடர்கிறது பங்களாதேஸ் உடனான போட்டியில் பலவற்றை படைத்தார்</b></span> ஆசியக் கிண்ண 2 ஆம் சுற்றுப் போட்டிýயில் நேற்று முன்தினம் புதன்கிழமை பங்களாதேர்{டனான போட்டிýயில் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் பல சாதனைகளைப் படைத்துள்ளார். ழூ ஒரு நாள் போட்டிýகளில் கப்டன் சௌரவ் கங்குலி 55 ஆவது அரைச்சதம் (3 பவுண்டரி, 3 சிக்ஸருடன் 100 பந்துகளில் 60) அடிýத்தார். சச்சின் 67 ஆவது அரைச் சதத்தை (10 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 126 பந்துகளில் 82) ப10ர்த்தி செய்தார். அவர் இப்போட்டிýயில் மேலும் பல சாதனைகள் செய்தார். ழூ ஆசியக் கிண்ணத் தொடர்களில் சச்சின் 600 ரன்களைக் கடந்தார். இதன் மூýலம் ஆசியக் கிண்ணத் தொடர்களில் அதிக ரன்கள் குவித்து இந்தியர் என்ற சாதனை செய்தார். ழூ ஒரு நாள் போட்டிýகளில் பங்களாதேர்{க்கு எதிராக சச்சின் எடுக்கும் அதிகபட்ச ஓட்டம் இது தான் (82ழூ). முன்னதாக 54 ரன்கள் எடுத்ததே அவரது அதிக பட்சமாக இருந்தது. ழூ சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட், ஆட்டமிழக்காமல் 82 ரன்கள் குவித்த சச்சினுக்கு ஒரு நாள் போட்டிýகளில் 50 ஆவது ஆட்ட நாயகன் விருது கிடைத்தது. இதுவும் ஒரு சூýப்பர் சாதனை. அதிக ஆட்ட நாயகன் விருது வென்றவர்கள் பட்டிýயலில் அவருக்கு அடுத்ததாக இருப்பவர் இலங்கை வீரர் ஜெயசூýரிய. அவர் 34 முறை கைப்பற்றியுள்ளார். ழூ இரண்டாவது விக்கெட்டுக்கு சச்சின்-சௌரவ் ஜோடிý 154 ரன்கள் சேர்த்தது ஆசியக் கிண்ணக் கிரிக்கெட்டிýல் இது புதிய சாதனை. பங்களாதேர்{க்கு எதிராக பாகிஸ்தானின் சயித் அன்வர் - ரமீஸ் ராஜா ஜோடிý 1997 இல் இரண்டாவது விக்கெட்டுக்கு கொழும்பு நகரில் 123 ரன்கள் குவித்ததே இதுவரை சாதனையாக இருந்தது. ழூ இந்தியா ஆடும் போது 11 ஆவது ஓவரில் ஒரு வேடிýக்கை நடந்தது. சச்சின் துடுப்பெடுத்தாட... தாரிக் அஸீஸ் பந்து வீச ஓடிý வந்து கொண்டிýருந்தார். அவர் ஓடிý வந்து கொண்டிýருக்கும் நேரத்தில் 'குறும்பு" காகம் ஒன்று சச்சினைக் கடந்து ஆடுகளத்துக்குள் பறக்க.. கவனம் சிதறிப் போன சச்சின் கிரிசீல் இருந்து விலகி, ஒதுங்கிக் கொண்டார். அஸீஸ் வீசிய பந்து விக்கெட்டுகளை வீழ்த்த சச்சின் கிளீன் போல்ட். ஆனால், நடுவர் அதை 'டெட் போல்" என்று அறிவித்தார். ஆசியக் கிண்ணத் தொடரில் இதுவரை நடந்த மூýன்று போட்டிýகளில் ஆறு விக்கெட் வீழ்த்தி அசத்தியிருக்கிறார் சச்சின். ஆனாலும், இலங்கைக்கு எதிரான கடந்த போட்டிýயில் அவருக்கு ஒரு ஓவர் கூýட வழங்கப்படவில்லை. இதுபற்றிக் கேட்டதற்கு 'கிரிக்கெட்டைப் பொறுத்தவரை கப்டன் தான் எல்லாமே. அவர் சொல்வதைத் தான் நாங்கள் கேட்க வேண்டும். அவர் என்ன முடிýவெடுக்கிறாரோ அதன்படிý தான் நான் செயற்பட முடிýயும்" என்றார். 'கையில் கொப்புளம் ஏற்படுவதால் தான் தொடர்ச்சியாக பந்து வீசுவதில்லை" என்றும் சச்சின் தெரிவித்தார். நன்றி தினக்குரல் - kavithan - 07-23-2004 <span style='font-size:25pt;line-height:100%'><b>'இலங்கை அணியின் தொடர்ச்சியான வெற்றிக்குபந்து வீச்சாளர்களின் பங்களிப்பே முக்கிய காரணம்\"</b></span> ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கையின் வெற்றி நடைக்கு பந்து வீச்சாளர்களின் பங்களிப்பே முக்கிய காரணம் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி கூýறியுள்ளார். இது பற்றி அவர் மேலும் கூýறுகையில்;இந்தியாவிற்கு எதிரான போட்டிýயில் அற்புதமாக பந்து வீசிய சொய்ஸா, நட்சத்திர வீரர்களான சச்சின், கங்குலியின் விக்கெட்டை வீழ்த்தினார். மேலும் இவர், சேவக்கை ரன் அவுட் செய்து இந்திய அணிக்கு தொடக்கத்திலேயே அதிக நெருக்கடிý அளித்தார். இதே போல் பாகிஸ்தானுக்கு எதிரான சூýப்பர் லீக் போட்டிýயிலும் இவர் மூýன்று முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி, அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தார். இலங்கை அணியில் வேகப்பந்து வீச்சில் சொய்ஸா என்றால், சுழற்பந்து வீச்சில் முரளிதரன் கலக்குகிறார். இவர், இந்தியாவிற்கு எதிரான போட்டிýயில் டிýராவிட்டையும், பாகிஸ்தானுக்கு எதிராக இன்சமாமையும் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு வழி வகுத்தார். இந்த அணியில் அனுபவ வீரர்கள் மட்டுமல்லாமல் இளம் வீரர்களும் சிறப்பாக செயல்படுகின்றனர். குறிப்பாக மஹேல ஜெயவர்தன, சங்கக்கார ஆகியோரது அபார ஆட்டம் அணியை எழுச்சி அடையச் செய்துள்ளது. இவர்கள் இருவரும் இளம் வீரர்களாக இருப்பது சாதகமான அம்சம். இவர்களது போர்ம் 'நீடிýக்கும் பட்சத்தில் மினி உலகக் கிண்ணம், உலகக் கிண்ணத் தொடர்களில் இலங்கை அணி சிறப்பாக செயல்பட உதவிகரமாக அமையும் என்றார். நன்றி தினக்குரல் - kuruvikal - 07-23-2004 சிரமம் பாராது இப்போட்டித் தொடர் பற்றிய செய்திகளை தந்துவரும் கவிதனுக்கு பாராட்டுகளும் நன்றிகளும்... தொடருங்கள்.. போட்டித் தொடர் நிறைவு வரை...! - kavithan - 07-23-2004 <span style='font-size:25pt;line-height:100%'><b>ஆசியக் கிண்ண இன்றைய போட்டிýயில் இலங்கை அணி பங்களாதேஸ் உடன் மோதுகிறது</b></span> ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிýயின் இரண்டாம் சுற்று ஆட்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை இலங்கை அணி பங்களாதேர்; அணியை எதிர்கொள்கிறது. முதல் சுற்று ஆட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஹொங்கொங் அணிகள் வெளியேற்றப்பட்ட நிலையில், 2 ஆம் சுற்றில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேர்; அணிகள் தகுதிபெற்றன. இந்த 2 ஆம் சுற்றில் புதன்கிழமை நடைபெற்ற இரு போட்டிýகளில் இந்திய அணி பங்களாதேiர்யும், இலங்கை அணி பாகிஸ்தானையும் தோற்கடிýத்தன. இதன் மூýலம் 2 ஆம் சுற்றில் இலங்கை அணி 6 புள்ளிகளுடனும் 101.40 என்ற ஓட்ட வீகிதத்துடனும் முதலிடத்திலும், இந்திய அணி 6 புள்ளிகளுடனும் -1.08 என்ற ஓட்ட விகிதத்துடன் 2 ஆம் இடத்திலும், பங்களாதேர்; அணி புள்ளிகள் எதனையும் பெறாத போதிலும் -0.08 என்ற ஓட்ட வீததத்துடன் மூýன்றாமிடத்திலும், பாகிஸ்தான்அணி புள்ளிகள் எதுவும் பெறாத நிலையில் -1.40 என்ற ஓட்ட வீததத்துடன் நான்காமிடத்திலுமுள்ளன. ஒவ்வொரு அணியும் ஏனைய மூýன்று அணிகளுடன் தலா ஒரு போட்டிýயில் விளையாடிý, இதில் முதல் இரு இடங்களைப் பெறும் அணிகள் ஆகஸ்ட் முதலாம் திகதி இறுதியாட்டத்தில் மோதவுள்ளன. நன்றி தினக்குரல் - kavithan - 07-23-2004 <b><span style='font-size:30pt;line-height:100%'>தற்போதைய நிலவரம்.....</span> <span style='font-size:25pt;line-height:100%'> [b] 46 ஓவர்களில்...163 ரன்களை 6 விக்கற் இழப்புடன் பங்களாதேஸ் அணி பெற்று தொடர்ந்து ஆடிக்கொண்டிருக்கிறது</b></span> - kavithan - 07-23-2004 நாங்கள் பார்ப்பதை உங்களுக்கும் தருகிறோம்..இதில் ஒரு சிரமமும் இல்லை குருவி அண்ணா..நன்றி சுரதா அண்ணவுக்கு தான் சொல்லவேண்டும்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- பரஞ்சோதி - 07-23-2004 நாளைய போட்டியில் இந்தியா வெற்றிப் பெற்றால் இறுதிப் போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் விளையாடும். இந்தியா வெற்றிப் பெற வாழ்த்துக்கள். - kavithan - 07-24-2004 <span style='font-size:25pt;line-height:100%'> <b>ெசன்ற புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கையிடம் பாக்கிஸ்தான் படுதோல்வி.. </b></span> ஆசியக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்றது. பூவா தலையா வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட் செய்தது. ஆனால் பாகிஸ்தான் அணி வீரர்களால் இலங்கையின் பந்து வீச்சை சமாளிக்க முடியவில்லை. பாகிஸ்தான் அணி வீரர்கள் அடுத்தடுத்து வந்த வேகத்தில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். அணியில் அப்துர் ரசாக் அதிகபட்சமாக 43 ரன்கள் எடுத்தார். பல வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களிலேயே ஆட்டமிழந்தனர். 39.2 ஓவர்களில் 122 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது பாகிஸ்தான். பின்னர் 123 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் அடுத்து களமிறங்கிய இலங்கை அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 123 ரன்களை எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஜெயசூர்யாவும், குணவர்தனேவும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் அணித் தலைவர் அட்டப்பட்டுவும் 19 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இந்நிலையில் ஜோடி சேர்ந்த சங்ககாராவும், மகிள ஜெயவர்த்தனேவும் இணைந்து இலங்கை அணியை 32 ஓவர்களில் 123 ரன்களை எடுத்து வெற்றி பெற உதவினர். இறுதியில் சங்ககாரா 14 ரன்களுடனும், ஜெயவர்தனே 19 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நன்றி வெப்உலகம் - kavithan - 07-24-2004 <span style='font-size:25pt;line-height:100%'><b>10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி!</b></span> சனி, 24 ஜூலை 2004 ஆசிய கோப்பை சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டியில் இலங்கை 10 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வென்றது. முதலில் ஆடிய வங்கதேசம் 9 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்களை எடுத்தது. அடுத்து ஆடிய இலஙகை அணி 33.3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி இலக்கை எட்டியது. வங்கதேச அணியில் முகமது அஸ்ரபுல் 66 ரன்களைச் சேர்த்து அணியில் எண்ணிக்கை உயர்விற்கு முக்கிய காரணமானார். தொடக்க வீரர்கள் சோபிக்காவிட்டாலும், அஸ்ரபுல் அபாரமா ஆடி அணியின் மானத்தை காத்தார். ஒரு நிலையில் 4 விக்கெட்டுகளை இழந்து வெறும் 31 ரன்களை மட்டுமே சேர்ந்திருந்தது வங்கதேசம். இந்நிலையில் ரானாவுடன் இணைந்து 100 ரன்களைக் குவித்தார் அஷ்ரபுல், ரானா 43 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். இலங்கையின் மிதவேகப்பந்து வீச்சாளர் சமிந்தா வாஸ் அபாரமாக வீசி 3 விக்கெட்டுகளையும், மஹ்ரூப், முரளிதரன், மாலிங்கா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். இலங்கை அணியின் ஜெயசூர்யா ஆட்டமிழக்காமல்i 107 ரன்களை எடுத்தார். குணவர்த்தனே ஆட்டமிழக்காமல் 64 ரன்களை எடுத்தார். நன்றி வெப்உலகம் - kavithan - 07-26-2004 26 ஒஞிஙீட், 2004 <img src='http://www.dailythanthi.com/images/news/20040726/spo1.jpg' border='0' alt='user posted image'> [b]<span style='font-size:25pt;line-height:100%'>ஆசிய கோப்பை கிரிக்கெட் பழிதீர்த்தது பாகிஸ்தான் அணி 59 ரன் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி </span> கொழும்பு, ஜுலை. 26- ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 59 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பழைய தோல்விக்கு பழி தீர்த்தது. லட்சுமண் நீக்கம் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2-வது சுற்று ஆட்டங்கள் இலங்கையில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டத்தில் இந்தியா, பரம எதிரி அணியான பாகிஸ்தானை எதிர்கொண்டு விளையாடியது. இந்திய அணி தரப்பில் ஒரு மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. வி.வி.எஸ். லட்சுமண் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக சுழற்பந்து வீச்சாளர் கும்பிளே அணியில் சேர்க்கப்பட்டு இருந்தார். பாகிஸ்தான் பேட்டிங் `டாஸ்' வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் இன்ஜமாம் தமது அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார். அதன்படி தொடக்க வீரர்களாக இம்ரான் நசீரும், யாசிர் ஹமீதும் களம் இறங்கினர். யாசிர் ஹமீது 31 ரன் முதல் ஓவரின் கடைசி பந்திலேயே தொடக்க ஜோடி பிரிந்தது. இந்த ஜோடியை பிரித்தவர் இர்பான் பதான். 1 ரன் எடுத்து இருந்த இம்ரான் நசீர், பதான் பந்தில் எல்.பி.டபிள்ï முறையில் அவுட் ஆனார். இம்ரான் நசீரை தொடர்ந்து யாசிர் ஹமீதுடன் சோயிப் மாலிக் ஜோடி சேர்ந்தார். ஹமீது தடுப்பு ஆட்டத்தில் ஈடுபட சோயிப் மாலிக் அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டார். இந்திய பந்து வீச்சாளர்கள் எந்த திசையில் பந்து வீசினாலும் அதை மாலிக் வெளுத்துக் கட்டினார். தொடர்ந்து ஆக்ரோஷமாக ஆடிய மாலிக் பவுண்டரி அடித்து அரை சதத்தை பூர்த்தி செய்தார். 41 பந்துகளை சந்தித்த சோயிப் மாலிக் அரை சதத்தை கடந்தார். அப்போது பாகிஸ்தானின் ஸ்கோர் 14.2 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 84 ரன்னாக இருந்தது. 18.3 ஓவரின் முடிவில் யாசிர் ஹமீது - மாலிக் ஜோடியை கும்பிளே பிரித்தார். 31 ரன் எடுத்து இருந்,த யாசிர் ஹமீது கும்பிளே பந்தில் கிளீன் போல்டு ஆனார். அவரைத் தொடர்ந்து இன்ஜமாம் களம் இறங்கினார். மோசமான பீல்டிங்-பந்துவீச்சு இந்திய அணியினரின் பந்து வீச்சு தான் நேற்றைய ஆட்டத்தில் மோசமாக இருந்தது என்றால், பீல்டிங் அதைவிட மோசமாக இருந்தது. 25 ஓவர்களின் முடிவில் பாகிஸ்தான் 137 ரன் எடுத்து இருந்தது. இன்ஜமாம்-மாலிக்கின் அதிரடி ஆட்டத்தால் 27.4 ஓவரில் பாகிஸ்தான் 150 ரன்னை கடந்தது. முதல் 50 ரன்னை 71 பந்துகளில் எடுத்த பாகிஸ்தான் 2-வது 50 ரன்னை 46 பந்துகளிலும், 3-வது 50 ரன்னை 60 பந்துகளிலும் எடுத்தது. சோயிப் மாலிக் `சதம்' 29.1 ஓவரில் ஹர்பஜன்சிங் வீசிய பந்தில் இன்ஜமாம் இமாலய சிக்சர் ஒன்றை விளாசினார். 34 ரன் எடுத்து இருந்த நிலையில் ஹர்பஜன் வீசிய பந்தை இன்ஜமாம் வேகமாக அடிக்க யுவராஜ்சிங் அபாரமாக கேட்ச் செய்து அவரை அவுட் ஆக்கி மைதானத்தில் இருந்து பெவிலியனுக்கு அனுப்பினார். பின்னர் எந்தவித பதட்டமும், சிரமமும் இன்றி சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த சோயிப் மாலிக் சதம் அடித்தார். இதனால் 42.4 ஓவரில் பாகிஸ்தான் 4 விக்கெட் இழப்புக்கு 250 ரன்னை தொட்டது. பாகிஸ்தான் அணி ரன் வேட்டை நடத்தியதைத் தொடர்ந்து மைதானத்தில் இருந்த அந்நாட்டு ரசிகர்கள் ஆனந்த துள்ளாட்டம் போட்டனர். மாறாக இந்திய அணியினரின் மோசமான பீல்டிங் மற்றும் பந்து வீச்சு தொடரவே அது இந்திய ரசிகர்களை எரிச்சல் அடைய செய்தது. தெண்டுல்கர் அபாரம் முன்னணி பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசாத நிலையில், பகுதி நேர பந்து வீச்சாளரான தெண்டுல்கர் அபாரமாக பந்து வீசினார். கடைசி கட்ட ஓவர்களில் படுநேர்த்தியாக பந்து வீசிய தெண்டுல்கர் பாகிஸ்தான் அணியினரின் ரன் வேட்டைக்கு அணை போட்டார். 46-வது ஓவரின் முடிவில் சோயிப் மாலிக்கின் அபார ஆட்டத்திற்கு தெண்டுல்கர் முற்றுப் புள்ளி வைத்தார். 127 பந்துகளை சந்தித்த சோயிப் மாலிக் 18 பவுண்டரிகள், ஒரு சிக்சருடன் 143 ரன் குவித்து அவுட் ஆனார். பாகிஸ்தான் 300 ரன் மாலிக்கின் அவுட்டை தொடர்ந்து அந்த அணியின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தன. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் பாகிஸ்தான் 9 விக்கெட் இழப்புக்கு 300 ரன் குவித்தது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக பதான், தெண்டுல்கர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஷேவாக் அவுட் 301 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இந்தியா பின்னர் பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க வீரர்களாக ஷேவாக்கும், நட்சத்திர வீரர் தெண்டுல்கரும் களம் இறங்கினர். <img src='http://www.dailythanthi.com/images/news/20040726/spo2.jpg' border='0' alt='user posted image'> முதல் ஓவரில் ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் பந்து வீசினார். இந்த ஓவரில் தொடக்க ஜோடி 12 ரன் எடுத்தது. அதற்கு அடுத்த ஓவரில் ஷேவாக் 1 ரன் எடுத்திருந்த நிலையில் சபீர் அகமது பந்தில் அவுட் ஆனார். கங்குலி அதிரடி ஆட்டம் ஷேவாக்கை தொடர்ந்து தெண்டுல்கருடன் கங்குலி இணைந்தார். தெண்டுல்கர் ஒருபுறம் நிதானமாக ஆட மறுமுனையில் கங்குலி ஆக்ரோஷ ஆட்டத்தில் ஆடுபட்டார். 7.5 ஓவரில் இந்திய அணி 50 ரன்னை கடந்தது. ஸ்கோர் 79-ஐ எட்டியபோது சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த கங்குலி 39 ரன்னில் அவுட் ஆனார். 45 பந்துகளை சந்தித்த கங்குலி 4 பவுண்டரிகளுடன் இந்த ரன்னை எடுத்தார். பின்னர் வந்த டிராவிட் 5 ரன்னிலும், யுவராஜ்சிங் 28 ரன்னிலும் (29 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன்), கïப் 3 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர். அப்போது அணியின் ஸ்கோர் 5 விக்கெட் இழப்புக்கு 151 ரன்னாக இருந்தது. தெண்டுல்கர் அரை சதம் ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்த நிலையிலும், மறுமுனையில் தெண்டுல்கர் பொறுப்புடன் நிலைத்து நின்று நிதானமாக ஆடினார். ஸ்கோர் 155 ஆன போது தெண்டுல்கர் அரை சதத்தை தொட்டார். 77 பந்துகளை சந்தித்த தெண்டுல்கர் 4 பவுண்டரிகளுடன் அரை சதத்தை அடித்தார். 7-வது வீரராக இறங்கிய பதான், தெண்டுல்கருடன் இணைந்து ஒன்றிரண்டு ரன்னாக அடித்தார். 41.1 ஓவரில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 200 ரன்னை கடந்தது. முதல் 50 ரன்னை 52 பந்துகளில் அடித்த இந்திய அணி, 2-வது 50 ரன்னை 66 பந்துகளிலும், 3-வது 50 ரன்னை 74 பந்துகளிலும், 4-வது 50 ரன்னை 70 பந்துகளிலும் அடித்தது. ஸ்கோர் 42.5 ஓவர்களில் 214 ஆக உயர்ந்த நிலையில் தெண்டுல்கர் 78 ரன்னில் அவுட் ஆனார். 103 பந்துகளை சந்தித்து அவர் இந்த ரன்னை எடுத்தார். எதிர்பார்ப்பு தெண்டுல்கர் அவுட் ஆவதற்கு முன்பு வரை லாட்டரியில் பரிசு விழுவது போல் ஒருவேளை இந்திய அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அவரது அவுட்டுக்கு பின்னர் இருந்த நம்பிக்கையும் தவிடு பொடியானது. பொதுவாக இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் என்றால் ஒரு பரபரப்பு இருக்கும். ஆனால் நேற்றைய ஆட்டத்தின்போது சிறிது கூட பரபரப்பும், எதிர்பார்ப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. பதான் 38 ரன்னில் அவுட் ஆனார். பாகிஸ்தான் வெற்றி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் இந்திய அணியால் 241 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் பாகிஸ்தான் 59 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் சொந்த மண்ணில் இந்தியாவிடம் பெற்ற தோல்விக்கு பாகிஸ்தான் நேற்று பழிதீர்த்துக் கொண்டது. <img src='http://www.dailythanthi.com/images/news/20040726/spo3.jpg' border='0' alt='user posted image'> போனஸ் புள்ளி பாகிஸ்தானுக்கு எதிராக 240 ரன் எடுத்தால் இந்திய அணிக்கு ஒரு போனஸ் புள்ளி கிடைக்கும் நிலை இருந்தது. எந்த வழியிலும இந்திய அணி இனிமேல் வெற்றி பெற முடியாது என்ற நிலையில் இந்த போனஸ் புள்ளியையாவது பெற வேண்டும் என்ற முனைப்புடன் கடைசி கட்ட வீரர்கள் போராடினர். அவர்கள் நினைத்தது போல் தட்டுத்தடுமாறி 241 ரன் எடுத்தனர். இதன் மூலம் இந்திய அணி ஒரு போனஸ் புள்ளியை பெற்றது. பாகிஸ்தான் 5 புள்ளியை மட்டுமே பெற்றது. அந்த அணிக்கு ஒரு போனஸ் புள்ளி கைநழுவிப் போனது. பாகிஸ்தான் அணியை தான் இந்திய அணியால் வீழ்த்த முடியவில்லை. மாறாக போனஸ் புள்ளியையாவது பெற முடிந்ததே என ரசிகர்கள் ஆறுதல்பட்டுக் கொண்டனர். ஸ்கோர் போர்டு பாகிஸ்தான்:- இம்ரான் நசீர் எல்.பி.டபிள்ï (பி) பதான் 1 யாசிர் ஹமீது (பி) கும்பிளே 31 சோயிப் மாலிக் (சி) கïப் (பி) தெண்டுல்கர் 143 இன்ஜமாம் (சி) யுவராஜ் (பி) ஹர்பஜன் 34 யுகானா (சி) கïப்(பி )கும்பிளே 29 அப்துல் ரசாக் (பி) பதான் 22 மொயின்கான் (சி) ஹர்பஜன் (பி) பதான் 14 யுனுஸ்கான் (பி) தெண்டுல்கர் 4 சமி (சி) கïப் (பி)தெண்டுல்கர் 1 அக்தர் (அவுட் இல்லை) 0 எக்ஸ்டிரா 21 மொத்தம் (50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு) 300 -- விக்கெட் வீழ்ச்சி:- 1-2, 2-105, 3-171, 4-234, 5-277, 6-286, 7-296, 8-300, 9-300. பந்து வீச்சு விவரம்:- பதான் 10-0-52-3 பாலாஜி 7-0-61-0 நெக்ரா 8-1-54-0 ஹர்பஜன் 10-0-50-1 கும்பிளே 10-0-49-2 தெண்டுல்கர் 5-0-28-3 இந்தியா:- ஷேவாக் (சி) மொயின்கான் (பி) சபீர் அகமது 1 தெண்டுல்கர் (சி)இம்ரான்நசீர் (பி) மாலிக் 78 கங்குலி (பி) சமி 39 டிராவிட் எல்.பி.டபிள்ï (பி) அப்துல் ரசாக் 5 யுவராஜ் (சி மற்றும் பி) மாலிக் 28 கïப் (ரன் அவுட்) 3 பதான் (சி) இம்ரான் நசீர் (பி) அக்தர் 38 ஹர்பஜன் (சி) யுனுஸ்கான் (பி) சபீர் அகமது 2 பாலாஜி (அவுட் இல்லை) 5 கும்பிளே (அவுட் இல்லை) 4 எக்ஸ்டிரா 38 மொத்தம் (50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு) 241 -- விக்கெட் வீழ்ச்சி:- 1-17, 2-79, 3-94, 4-139, 5-151, 6-214, 7-223, 8-233 பந்துவீச்சு விவரம்:- அக்தர் 10-0-51-1 சபீர் அகமது 10-0-38-2 சமி 10-0-57-1 அப்துல் ரசாக் 10-2-38-1 சோயிப்மாலிக் 10-0-42-2 நன்றி தினத்தந்தி - kuruvikal - 07-28-2004 அபாரமாக ஆடி வென்றது இந்தியா! கங்குலியுடன் இணைந்து அணியின் ரன் எண்ணிக்கையை உயர்த்தியது மட்டுமின்றி, அபாரமாக பந்து வீசி சிறப்பாக ஆடிய ஜெயசூர்யாவின் விக்கெட் உட்பட 3 விக்கெட்டுகளையும் வீழ்த்திய வீரேந்திர சேவக்கின் அபார ஆட்டத்தின் உதவியால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது! ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில் இன்று நடைபெற்ற முக்கிய அரையிறுதிச் சுற்றுப் போட்டியில் இலங்கை அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது. இந்த வெற்றியின் வாயிலாக 5 புள்ளிகளைப் பெற்ற இந்திய அணி 12 புள்ளிகளுடன் இறுதிக்குத் தகுதிப் பெற்றுவிட்டது. <b>ஆசியக் கோப்பைக்காக ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் இலங்கை அணியுடன் இந்திய அணி மீண்டும் மோதும். </b> பூவா-தலையா வென்ற இந்திய அணி, முதலில் களமிறங்கி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 271 ரன்களை எடுத்தது. துவக்க ஆட்டக்காரர் சனத் ஜெயசூர்யா, 132 பந்துகளில் எடுத்த 130 ரன்களின் உதவியால் வெற்றி இலக்கை நோக்கி வேக நடைப் போட்ட இலங்கை அணி, அவர் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து இந்திய அணியின் சுறுசுறுப்பான பந்து வீச்சினாலும், மனோதிடத்தாலும் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 267 ரன்களை மட்டுமே எடுத்தது. கடைசி 2 ஓவர்களில் 15 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் 7 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 257 ரன்களை எடுத்திருந்த இலங்கை அணி, பத்தானின் பந்து வீச்சில் ரன் எடுக்க முடியாமல் திணறியது மட்டுமின்றி, சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த சந்தனாவின் விக்கெட்டை கடைசிப் பந்தில் இழந்தது. 8 விக்கெட்டுகளை இழந்து 261 ரன்களை எடுத்திருந்த இலங்கை அணி, கடைசி 6 பந்துகளில் 11 ரன்களை எடுக்க வேண்டும் என்ற நிலையில் கானிடம் பந்தைக் கொடுத்த அணித்தலைவர் கங்குலி. முதல் பந்தில் 2 ரன்களையும், அடுத்த பந்தில் 1 ரன்னையும் எடுத்தார் நூவான் சொய்சா. அடுத்த பந்தில் 2 ரன்களை எடுத்தார் மஹாரூஃப். ஆனால், கான் வீசிய யார்க்கரை அடித்தாட முயன்று க்ளீன் போல்ட் ஆனார் மஹாரூஃப். கடைசி 2 பந்துகளில் 6 ரன்களை எடுக்க வேண்டிய நிலை இலங்கைக்கு. 1 விக்கெட்டை வீழ்த்தினால் வெற்றி என்ற நிலை இந்திய அணிக்கு. அடுத்தப் பந்தில் 1 ரன் எடுத்தார் கடைசியாக ஆட வந்த மலிங்கா. கடைசிப் பந்தில் 4 ரன்கள் எடுத்தால் ஆட்டத்தை சமநிலையில் முடிக்கலாம். 6 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இலங்கை அணியும், பௌண்டரி அடிக்க விடாமல் தடுத்தாலே போதும் வெற்றி நமதே என்ற நிலையில் இந்திய அணியும் இருந்தன. நன்றாக அடித்தாடும் வல்லமைப் பெற்ற சொய்சா, கானின் பந்தை எதிர்பார்த்துக் காத்திருந்தார். சற்றும் எதிர்பாராத வண்ணம் ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே அழகாகக் குத்தி கடைசிப் பந்தை வீசினார் கான். அதனை அடித்தாட முயன்றார் சொய்சா. முடியவில்லை. அவ்வளவு தான். 4 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்தியா. இந்திய அணித்தலைவர் கங்குலியும், மற்ற வீரர்களும் ஈக்களைப் போல பறந்துச் சென்று ஜாஹீர் கான் மீது விழுந்து அவருக்கு பாராட்டுத் தெரிவித்தனர். தோல்வியின் விளிம்பில் இருந்து சாதுர்யமாக ஆடி இந்திய அணி வெற்றி பெற்று இறுதிக்குத் தகுதிப் பெற்றது. சேவாக்-கங்குலியின் சிறப்பான ஆட்டம்! இந்திய அணிக்கு ஒரு அருமையான துவக்கத்தைக் கொடுத்த சச்சின் டெண்டுல்கர், எதிர்பாராத விதமாக சொய்சாவின் பந்தில் எல்பிடபிள்யூவாகி வெளியேறினார். அதன் பிறகு ஆட வந்த கங்குலியுடன் இணைந்து வீரேந்திர சேவாக் ஆடிய ஆட்டம் மிக மிகப் பொறுப்புடையதாக இருந்தது. தனது அதிரடி பாணியில் ஆடாமல் பந்துகளை நன்கு தெரிவு செய்து சிறப்பாக அடித்தாடி 92 பந்துகளில் 6 பௌண்டரிகளுடனும், 2 சிக்ஸர்களுடனும் 81 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஜெயசூர்யாவின் பந்தில் தவறாக அவுட் கொடுக்கப்பட்டார் வீரேந்திர சேவாக். கங்குலியுடன் இணைந்து 2வது விக்கெட்டிற்கு 26 ஓவர்களில் 134 ரன்கள் குவித்தார் சேவாக். அடுத்து ஆட வந்த திராவிட் ரன் எண்ணிக்கையை துரிதப்படுத்த முயன்று மஹாரூஃபின் பந்தில் ஆட்டமிழந்தார். யுவராஜூம், கங்குலியும் சிறப்பாக ஆடி 4வது விக்கெட்டிற்கு 71 ரன்களைக் குவித்தனர். கங்குலி 120 பந்துகளில் 9 பௌண்டரிகளுடன் 79 ரன்களை எடுத்திருந்த நிலையில் மலிங்காவின் பந்தை தூக்கியடிக்க முயன்று ஆட்டமிழந்தார். யுவராஜ் சிங் 46 பந்துகளில் 4 பௌண்டரிகளுடன் சரியாக அரை சதத்தை எட்டியப் பிறகு ஆட்டமிழந்தார். இந்தியாவை மிரட்டிய சனத் ஜெயசூர்யா ஆட்டம்! 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, முதல் 14 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை இழந்தது. ஆனால், ஒரு முனையில் ஜெயசூர்யா மிகச் சிறப்பாக ஆடி தனது அதிரடி பாணியில் மளமளவென்று ரன்களைக் குவித்துக் கொண்டிருந்தார். 134 ரன்களை எட்டுவதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது இலங்கை அணி. இந்திய அணியின் வெற்றி உறுதிதான் என்று நினைத்தபோது ஆட வந்த தில்ஷானின் துணையுடன் ஜெயசூர்யா மிக வேகமாக ஆடி அடுத்த 16.3 ஓவர்களில் 6வது விக்கெட்டிற்கு 101 ரன்களைக் குவித்தார். தில்ஷான் ஆட்டமிழக்கும்போது (43.5 ஓவர்கள்) இலங்கை அணி 237 ரன்கள் எடுத்து, வெற்றி பெற 35 ரன்கள் மட்டுமே தேவை என்கின்ற நிலையில் இருந்தது. சதத்தை அடித்துவிட்டு வெற்றியை நோக்கி அணியை முன்னேற்றிக் கொண்டிருந்த ஜெயசூர்யாவை வீழ்த்தினால்தான் இறுதிக்குச் செல்ல முடியும் என்பதனை உணர்ந்த இந்திய அணித்தலைவர் கங்குலி, சேவாக்கை மீண்டும் பந்து வீச அழைத்தார். 48வது ஓவரை வீசிய சேவாக்கின் முதல் பந்தை தூக்கியடிக்க முயன்று ஜெயசூர்யா ஆட்டமிழந்தவுடன் சுறுசுறுப்படைந்த இந்திய அணி, திட்டமிட்டு ஆடி வெற்றி பெற்றது. 81 ரன்கள் எடுத்தது மட்டுமின்றி, 3 விக்கெட்டுகளையும் வீழ்த்திய வீரேந்திர சேவாக் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். webulagam.com - kuruvikal - 07-28-2004 <img src='http://www.webulagam.com/cricket/images/top-cricket.gif' border='0' alt='user posted image'> <b>SECOND ROUND STANDINGS </b> <b>Sri Lanka- P3 W2 L1 BP2 Pts 13 India - P3 W2 L1 BP2 Pts 12 Pakistan - P2 W1 L1 BP0 Pts 5 Bangladesh - P2 W0 L2 BP0 Pts 0 </b> (P- Played W - won L -Lost Pts - Points) <b>So Asia cup final will be played between India and Sri Lanka on 1 st of August 2004</b> (bbc.com and webulagam.com) - tamilini - 07-28-2004 இலங்கை இந்திய அணிகளிக்கு வாழ்த்துக்கள்...! இந்த விளையாட்டால் ஏற்படுகின்ற நன்மை தீமைகளை எடுத்துவிளக்கிறது.......! - kuruvikal - 07-28-2004 tamilini Wrote:இலங்கை இந்திய அணிகளிக்கு வாழ்த்துக்கள்...! அதுசரி... இந்த விளையாட்டால் தாங்கள் கண்ட தீமைகளைக் கொஞ்சம் சொல்லுறீங்களா...????! :twisted: :roll: |