![]() |
|
ஏக்கத்தில் நான் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: ஏக்கத்தில் நான் (/showthread.php?tid=6866) Pages:
1
2
|
ஏக்கத்தில் நான் - tamilini - 07-27-2004 <img src='http://www.nagina.org/images/girl.jpg' border='0' alt='user posted image'> பெண் நான் தனித்து இயங்க முடியாது... என் விருப்பத்தை நிறைவேற்ற முடியாது.... சழுகத்திற்காக பயந்து..... பிறரில் சார்ந்து வாழும் ஒரு பிறவி...... நெஞ்சம் நிறைய இலட்சியங்கள் உண்டு...... அதை சாதிக்க பல தடைகள் முன்னால்..... காரணம் நான் ஒரு பெண்......... எதற்கும் மண்டியிட வேண்டும்.... நானாய் எதையும் செய்ய முடியாது..... காரணம் நான் ஒரு பெண்....... நான் செய்வதை இந்த சழுகம் ஏற்காது.... என் மேல் வசை பாடும்...... இதனால் எனக்கு எல்லாம் தடை......! என்னை பாதுகாக்க வேண்டியது என் குடும்பத்தின் கடமை....... கடமையால் என் கனவுகள் சிதைக்க படுகிறது.... எனக்கு திறமையிருக்கலாம்... என்னால் எல்லாம் செய்ய முடியாலாம்...... பாழாய் போன இந்த சழுகத்தால்... வசைபாடுவதை நிறுத்த முடியாது.... என் குடும்பத்தால் சமூகத்திற்கு பயப்படாது இருக்க முடியாது.... என் இலட்சியங்கள் கற்பனைகளாகவே மட்டும் என்னுடன்..... சந்தர்ப்பங்கள் கிடைத்தும்..... சாதிக்க முடியாமல்..... நான் கோழையாக வாழ்கிறேன்.... இப்படி இருந்தால் தான் நான் பெண் என்பதை சழூகம் ஏற்கும் என்பதற்காக இல்லை.... நான் இப்படி இருந்தால் தான்.... என் குடும்பம் இந்த சழுகத்தில் தலை நிமிர்ந்து வாழு முடியும் என்பதனால் என் இலட்சியங்களை என்னுள் புதைத்து....... எனக்கு தடையான சழுகத்தை என்ன செய்ய முடியும் என்ற ஏக்கத்தில் நான்.......! Re: ஏக்கத்தில் நான் - வெண்ணிலா - 07-27-2004 tamilini Wrote:பெண் நான் <b>கவிதை நன்றாக இருக்கிறது அக்கா. ஆனால் ஏன் அக்கா உலகில் பெண் தனித்து வாழ முடியாது. இப்படி நீங்களே ஒரு பெண்ணாக இருந்துகொண்டு சொல்கிறீர்களே. தடைகளை உடைத்து வாழ முயற்சியுங்கள். </b> - kuruvikal - 07-27-2004 <b>நெறியும் நேர்மையும் மனிதருக்குப் பொது மனிதன் மனிதனாய் வாழ...! ஆங்கு சேதம் இன்றி தேசம் ஆளவும் பெண்ணுக்கென்ன சிற்றெறும்புக்கும் தகுதி இருக்கு இயற்கையாம் இவ்வுலகில்....!</b> சமூகம் சொல்லிச்சோ சொல்லல்லையோ நீங்களே உங்கள் திறமைகளுக்கு சமூகத்தின் பெயரால் தடை போடுவதுதான் உண்மை... சமூகம் என்றால் என்ன.... நீங்களும் உங்களைப் போன்றவர்களும் தான் சமூகம்...அதென்ன பூதமா..தடை போடவும் பிடித்து விழுங்கவும்....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll: பெண்ணின் பெயரால் உங்கள் மனக்கிடக்கைகளை கொட்டிய கவிதை நன்று...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 07-27-2004 <b>சிறகு முளைத்த குருவி உனக்கு சிறைகளா தமிழ்தேசமெங்கும் பறக்க உனக்குத் தடைகளா அடுப்பங்கரையில் உறங்கிக் கிடந்து அழுவதா நீ அடிமையபகி இன்னும் இன்னும் விழுவதா விழியில் நெருப்பு ஏந்தி நீ வெளியில் வருக நிந்தி வழியில் உள்ள தடைகள் யாவும் எரிய வருக தாண்டி பேரம் பேசி பெண்ணை விற்கும் கோரம் இது பிள்ளை பெற்றுக் கொடுப்பதற்கா நேரம் தாரம் என்றும் தாய்மை என்றும் பேசும் இந்தத் தடைகள் யாவும் உடைய எழுந்து வாரும் புனிதப் போரில் குதித்து நிற்கும் நாடு பெண்புலிகள் களத்தில் உலவுகின்ற வீடு குனிந்த தலைகள் நிமிர்ந்து நின்று ஆடு உன் குரல்கள் உலக முகடை உடைக்க பாடு ஓயுதல்கள் இனி உனக்கு இல்லை இதை உணர்ந்துகொண்டால் இல்லை உனக்குத் தொல்லை</b>. <b>தமிழினி அக்கா பெண் என்று முடங்கி இருந்தது போதும். முடக்குபவர்களை பார்த்து பயப்படாதீர்கள்</b>. - tamilini - 07-27-2004 Quote:ஆனால் ஏன் அக்கா உலகில் பெண் தனித்து வாழ முடியாது. இப்படி நீங்களே ஒரு பெண்ணாக இருந்துகொண்டு சொல்கிறீர்களே. தடைகளை உடைத்து வாழ முயற்சியுங்கள்.ஒரு பெண் அப்படி தனியாக தனித்து வாழ்ந்தால் அவளிற்கு இந்த சமூகம் கொடுக்கும் பெயர் என்ன....! - kuruvikal - 07-27-2004 தன்னளவில் மனதில் நேர்மையும் வாழ்வில் நெறியும் உள்ளவன் சமூகத்தின் இதர உறுப்பினர்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை.... இல்லாதவர்கள்....கோழைகளாக ஓடிப் பதுங்க வேண்டிய இடத்தில் பதுங்க வேண்டியதுதான்....சமூகத்தில் இருக்கும் அத்தனை குப்பைகளும் பறந்து வந்து முதுகில் விழுவதைத் தவிர்ப்பதற்காக....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> இதைத்தான் பெண்கள் என்ன சில ஆண்களும் செய்ய விளைகின்றனர்...அவர்களால் குற்றவாளிக் கூண்டில் நிற்பது சமூகம்....குப்பையும் குண்டுமணிகளும்....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 07-27-2004 Quote:சமூகம் சொல்லிச்சோ சொல்லல்லையோ நீங்களே உங்கள் திறமைகளுக்கு சமூகத்தின் பெயரால் தடை போடுவதுதான் உண்மை... சமூகம் என்றால் என்ன.... நீங்களும் உங்களைப் போன்றவர்களும் தான் சமூகம்...அதென்ன பூதமா..தடை போடவும் பிடித்து விழுங்கவும்....! பூதமும் இல்லை பேயும் இல்லை அதனைவிட கொடிய அணுஆயுதம் போன்றது...! நாமும் நம்மைப்போன்றவர்களும் தான் சமூகம் இல்லை என்று சொல்லவரவில்லை ஆனால் மற்றவர்களில் பிழைகண்டுபிடிக்கும் சமூகம்.. இந்த நிலை தனது வீட்டில் வரும் என்று நினைப்பதில்லை... இந்த சமூகம் நாம் தான்.. என்று சில பெற்றோர் நினைப்பதில்லை.. நீ அது செய்தால் இது நடக்கும்.. இப்படி பேசுவார்கள் என்று சொல்லுற பெற்றோர்கள் இருக்கிறார்கள் இன்னமும். இல்லை நான் இந்த சமூகத்திற்கு பயப்பட போறதில்லை என்டு பெண் வெளிக்கிடலாம்... ஆனால் எப்படி என்டாலும் பெற்றோருக்கு பணியத்தானே வேண்டும்.... பெற்றோரது மனம் கோணும் படியாக எப்படி நடந்து கொள்வது. இன்னும் பழைய பஞ்சாங்கமாக இருக்கிற பெற்றோருக்கு எதைச் சொன்ாலும் புரிகிறதில்லை... இதே வேளை இன்னொரு விடயத்தை பெண் மனதில் வைக்க வேண்டி இருக்கிறது.. பெற்றோர் சொல்லை எதிர்த்து நான் சாதிப்பேன் என்று வெளிக்கிட்டு.... பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வந்துவிட்டால்.. என்ன செய்யமுடியும்... பெற்றோரின் முகத்தில் முழிக்க முடியுமா யாவும் நாம் சினைக்கிற மாதிரி நடப்பதில்லையே... எதிர்த்து வெளிக்கிடும் போது பல வழிகளில் யோசிக்க வேண்டி இருக்கிதே......! - இளைஞன் - 07-27-2004 Quote:இப்படி இருந்தால் தான் நான் பெண் சமூகத்திற்காக குடும்பமும், குடும்பத்திற்காக நீங்களும்! உள்ளதை உண்மையாச் சொன்னீர்கள் தமிழினி! நன்றி! - kuruvikal - 07-27-2004 இளைஞன் Wrote:Quote:இப்படி இருந்தால் தான் நான் பெண் இப்படி இருந்தாத்தான் மனிதன் என்று ஒன்றும் இருக்கிறதை ஏன் கவனிக்கிறீங்கள் இல்லை...?????! ஆண்கள்...மற்றும் பெண்கள்....! - kuruvikal - 07-27-2004 tamilini Wrote:Quote:சமூகம் சொல்லிச்சோ சொல்லல்லையோ நீங்களே உங்கள் திறமைகளுக்கு சமூகத்தின் பெயரால் தடை போடுவதுதான் உண்மை... சமூகம் என்றால் என்ன.... நீங்களும் உங்களைப் போன்றவர்களும் தான் சமூகம்...அதென்ன பூதமா..தடை போடவும் பிடித்து விழுங்கவும்....! இப்படிப் பெற்றோருக்குப் பணிய வேண்டியது பெண்ணுக்கு மட்டுமானதல்ல ஆணுக்கும் பொதுவானதுதான்... ஆனால் ஆண் எதிர்நீச்சல் போல முயற்சிக்கிறான் பெண் முயற்சிக்கவில்லை.... காரணம் மனப்பயம்...சமூகப்பயம்... சமூகத்தில் உள்ள விசக் கிருமிகள் மீதான பயம்....! ஆக பெண்ணை செயற்படாமல் தடுப்பது அவள் கொண்ட மனப்பயமே அன்றி சமூகம் அல்ல....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 07-27-2004 அனால் பெண்ணுக்கிருக்கும் தடைகள் ஆணுக்கிருப்பதில்லை... இருந்தாலும் குறைவு... அந்த மனப்பயத்தை ஏற்படுத்துவது சமூகம் தானே...! ஏதாவது தடக்கிவிழும் நேரத்தில்.. அதனை தட்டிக்கொடுத்து.. ஆறுதல் சொல்ல மாட்டார்கள்... கை கால் வைத்து அதனை நடமாட விட்டுவிடுவார்கள்... இந்த பொட்டைச்சிக்கு ஏன் இந்த வேளை பேசாமல் வீட்டுக்க இருக்கிறதுக்கு..... இப்படி என்டு நான் நேரடியாக கேட்டிருக்கிறேன்...! இப்படி பட்டவர்களை காணும் போது என்ன பண்ணவேணும் என்றே தெரியாமல் இருக்கும்.... அதைவிட இவர்களது கதைக்கெல்லாம் சில பெற்றோர் கவலைப்படுகிறார்கள் என்று எண்ணும் போது இன்னும் விசர் தான் வரும் அட முடிந்தவரை முயற்சி செய்தாள் முடியல.. என்டு ஆறுதல் மாட்டார்கள்... சரி ஆறுதல் வேண்டாம் அவதூறு என்றாலும் சொல்லாமல் இருக்கலாம் இல்லை... ஒரு ஆண் பெற்றோரின் சொல்லை மீறி ஒரு காரியம் பண்ணினால் ஏற்படுகின்ற தாக்கத்தைவிட ஒரு பெண்ணுக்கு தாக்கம் அதிகம்.. அது அவளின் வாழ்க்கைக்கே உளைவைக்கிற விடயமாக மாறும்......! - இளைஞன் - 07-27-2004 சிறகுகள் விரித்து நீ பறந்து வா தமிழினி சிறைகளை உடைத்து நீ நிமிர்ந்து வா தமிழினி கனவுகள் சுமந்துநீ கரைதொடும் கடலலை இரவுகள் அழித்துநீ ஒளிர்ந்திடும் கதிரலை திறந்திடுன் விழிகளை - திரித்திடுன் மதியினை தெறித்திடும் விலங்குகள் - தெரிந்திடு தமிழினி மறந்திடுன் வலிகளை - மாற்றிடுன் மனதினை முடிவெடுன் வாழ்வினை - முழித்திடு தமிழினி <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- kuruvikal - 07-27-2004 tamilini Wrote:அனால் பெண்ணுக்கிருக்கும் தடைகள் ஆணுக்கிருப்பதில்லை... இருந்தாலும் குறைவு... அந்த மனப்பயத்தை ஏற்படுத்துவது சமூகம் தானே...! ஏதாவது தடக்கிவிழும் நேரத்தில்.. அதனை தட்டிக்கொடுத்து.. ஆறுதல் சொல்ல மாட்டார்கள்... கை கால் வைத்து அதனை நடமாட விட்டுவிடுவார்கள்... இந்த பொட்டைச்சிக்கு ஏன் இந்த வேளை பேசாமல் வீட்டுக்க இருக்கிறதுக்கு..... இப்படி என்டு நான் நேரடியாக கேட்டிருக்கிறேன்...! இப்படி பட்டவர்களை காணும் போது என்ன பண்ணவேணும் என்றே தெரியாமல் இருக்கும்.... அதைவிட இவர்களது கதைக்கெல்லாம் சில பெற்றோர் கவலைப்படுகிறார்கள் என்று எண்ணும் போது இன்னும் விசர் தான் வரும் அட முடிந்தவரை முயற்சி செய்தாள் முடியல.. என்டு ஆறுதல் மாட்டார்கள்... சரி ஆறுதல் வேண்டாம் அவதூறு என்றாலும் சொல்லாமல் இருக்கலாம் இல்லை... ஒரு ஆண் பெற்றோரின் சொல்லை மீறி ஒரு காரியம் பண்ணினால் ஏற்படுகின்ற தாக்கத்தைவிட ஒரு பெண்ணுக்கு தாக்கம் அதிகம்.. அது அவளின் வாழ்க்கைக்கே உளைவைக்கிற விடயமாக மாறும்......! பெற்றோருக்கு தங்கள் பெண்பிள்ளைகள் மீது பயம் வரக் காரணம்... அவர்கள் தாங்கள் வாழ்ந்த சூழலையே இன்னும் எண்ணிக்கொண்டு காரியம் ஆற்ற முயல்வதால்தான்....! ஆனால் இன்று காலம் நல்ல பல மாற்றங்களை கருத்துப்பரப்புரைகளினூடாகவும் புரிந்துணர்வுகளின் ஊடாகவும் சட்டங்கள் செயற்பாடுகள் மூலமும் கண்டிருக்கிறது....! அதை பெற்றோர் எல்லோரும் அறிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை...அது சாத்தியமற்றதும் கூட...! ஆனால் பிள்ளைகள் ஆண்கள் ஆகட்டும் பெண்கள் ஆகட்டும் அவர்கள் தான் பெற்றோருக்கு தாம் சமூகத்தில் எதையும் சாதிக்கும் நிலையில் இருக்கின்றோம்...எதையும் சந்திக்கும் துணிவோடு இருக்கின்றோம் என்று வெளிக்காட்ட வேண்டும்...! இப்போ உதாரணத்துக்கு சுதந்திரத்தின் பின் சிங்களவர்கள் தமிழர்களை அடக்கிய போதும் நெழிந்து கொடுத்துக் கொண்டிருந்த தமிழ் தலைமைகள்....பிரபாகரன் எனும் இளைஞன் வந்து தமிழர்களின் உரிமைகளுக்காக புரட்சிகரக் குரல் எழுப்பும் வரை வெறும் அறிக்கைகளில் தான் தமிழர் உரிமைகள் கண்டனர்... கதைத்தனர்.....! அந்த அறிக்கைகளை பிரபாகரன் அறிந்திருந்தாரோ இல்லையோ...ஆனால் அவர் கண்ணால் கண்டதும் தான் சந்தித்த தமிழ் மக்கள் மீதான கொடூரங்களின் பாதிப்புமே..... அவரின் பெற்றோர்களின் எதிர்ப்பையும் மீறி... இன்று உலகம் போற்றும் ஒரு மக்கள் விடுதலைப் போராட்டமாக வளர்ந்து நிற்கிறது....இது ஒரு சாதாரண விடையம் அல்ல.... ஒரு சமூகத்தையே தனது கருத்தின் பால் இழுத்து வரவேண்டும்..! உங்களால் உங்கள் வீட்டில் உள்ள உங்கள் அப்பா அம்மாவையே உங்கள் பக்கம் இழுத்துவர முடியவில்லை என்றால்...அது அப்பா அம்மாவினது ஆளுமைக் குறைவல்ல...உங்களுடையதே...அதற்காக எப்படி ஒரு சமூகத்தைக் குறை சொல்ல முடியும்....சமூகம் என்பது பல நிலைக் குழப்பதாரிகளைக் கொண்டது...நாம் தெளிந்திருந்தால் மட்டுமே அந்தக் குழப்பதாரிகளை தெளிவாக இனங்கண்டு எம் முயற்சிகளால் மற்றவர்கள் எம்மீது நம்பிக்கை கொள்ள வைத்து ஒரு மாற்றத்தை உண்டுபண்ண முடியும்...குழப்பதாரிகளோடு சேர்ந்து நாமும் குழம்பிக் கொண்டு அல்லது அவர்களைக்கண்டு அஞ்சிக்கொண்டு சமூகத்தையே குறை சொல்வதில் பயனில்லை......! அதனால் எவரிலும் எந்த வளமான மாற்றமும் வரப் போவதில்லை....அது ஆண்கட்டும் பெண்ணாகட்டும்....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 07-27-2004 இளைஞன் Wrote:சிறகுகள் விரித்து நீ பறந்து வா தமிழினி புதிய உலகம் படைக்க நினைக்கும் மனிதரே தமிழினிக்கு புதிய உலகின் பாதை காட்டிறீங்களோ.... வாழ்த்துக்கள்....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 07-27-2004 Quote:சிறகுகள் விரித்து நீ பறந்து வா தமிழினிநாம் சிறகு விரித்து ரொம்ப நாளாச்சு.. நாம் கண்டவைகள்.. மனதில் பட்டவைகளை கவிதையாக எழுதினோம் உங்கள் கருத்திற்காக...நன்றி இளைஞன் அண்ணா நன்றி குருவிகள் நன்றி வெண்ணிலா...! வளர்ந்து வருகின்ற இளைஞர் சமுதாயத்தில் இப்படியான முடிவுகள் திடமாக இருக்கும் போது இனிமேல் பஞ்கங்கங்கள் பற்றி ஏன் கவலைப்படுவான் என்ன........! - Paranee - 07-27-2004 முழித்திடு தமிழினி விழித்திடும் தமிழ்(இ)னி வாழ்த்துக்கள் தமிழினி அருமையான கவிதை இளைஞன் அதற்கு இன்னும் மெருகேற்றியிருக்கின்றார் இளைஞன் Wrote:சிறகுகள் விரித்து நீ பறந்து வா தமிழினி - tamilini - 07-27-2004 வாழ்த்துக்கு நன்றி பரணீ அண்ணா......! - வெண்ணிலா - 07-28-2004 tamilini Wrote:Quote:ஆனால் ஏன் அக்கா உலகில் பெண் தனித்து வாழ முடியாது. இப்படி நீங்களே ஒரு பெண்ணாக இருந்துகொண்டு சொல்கிறீர்களே. தடைகளை உடைத்து வாழ முயற்சியுங்கள்.ஒரு பெண் அப்படி தனியாக தனித்து வாழ்ந்தால் அவளிற்கு இந்த சமூகம் கொடுக்கும் பெயர் என்ன....! <b>ஒரு பெண் சிரித்துத் தவறான வழியில் போனால் அதற்கு ஆணும் உடந்தைதானே! அப்படியிருக்க பெண்ணை மட்டும் பழிப்பானேன்? ஏதோ ஆண்களெல்லாம் நல்லவர்கள் போன்றும் பெண்கள் மட்டும் நல்லவர்களில்லை என்றும் கூறி "சீறும் பாம்பை நம்பினாலும் சிரிக்கும் பெண்ணை நம்பக்கூடாது" என்று வழக்கத்திலேயே சொல்ல ஆரம்பித்தார்கள். இதுபோன்ற கருத்துக்கள் பெண்ணினத்தையே எப்போதும் அடிமையாக நடத்துவதற்கு உண்டாக்கப்பட்டது. வீட்டின் நான்கு சுவர்களுக்குள் பெண்கள் அடங்கியிருக்கவேண்டும் ஆண்களின் தேவைகளை ஆண்களின் விருப்பப்படி நிறைவேற்றவேண்டும். இப்படி இருப்பதன் காரணத்தினாலே தான் அடுப்பு ஊதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்றெல்லாம் கூறப்பட்டது. சுருங்கச் சொன்னால் குழந்தைகளைப் பெறுவது வீட்டைக் காப்பது இவைகள் தான் பெண்களுடைய தொழிலே தவிர வாழ்க்கையிலே பெண்களுக்கு வேறு எந்தவிதமான பங்கும் கிடையாது. கணவன் எவ்வளவு கொடுமைப் படுத்தினாலும் பெண்தான் வளைந்துகொடுக்கவேண்டும். பிறந்ததிலிருந்து இறக்கும்வரை யாரையாவது சார்ந்துதான் இருக்கவேண்டுமே தவிர தனித்து வாழக்கூடாது என்ற தவறான கருத்தின் அடிப்படையிலிருந்துதான் இதுபோன்ற பழமொழிகள் ஏற்பட்டுள்ளன. ஒருவேளை இதே காரணத்தினால் தான் முந்தைய "இந்து சட்டத்தில் கூட" பெண்களுக்கு சொத்துரிமை மறுக்கப்பட்டிருக்கலாம். பாரதி கண்ட கனவு போல ஆணுக்குப் பெண் சரிநிகர் வாழ்க்கைத்துணை அகத்தின் அழகு இல்லறத்தின் நல்லற விளக்கு என்ற சீரிய கருத்துக்கள் நம்மிடையே மிகவிரைவிலேயே பரவவேண்டும்.</b> <b>She is a tender comrade sweet comrade loving mother a benevolent angel.</b> - kavithan - 07-29-2004 tamilini Wrote:சந்தர்ப்பங்கள் கிடைத்தும்..... அக்கா சந்தர்பம் கிடைக்கும்போது யாருக்கும் தீங்குபயக்காமல்.... நன்மைபயப்பது எதுவாக இருந்தாலும் சாதித்தே தீரவேண்டும்.....அது தான் வெற்றியின் முதல்படியே. கவிதை நன்றாக இருக்கிறது தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் - kavithan - 07-29-2004 நீங்கள் சொல்லும் கருத்துக்கள் எல்லம் ஏற்றக்கொள்ளக்கூடியவையே...... ஆனாலும் நான் கண்கூடாக கண்ட உண்மை.....ஏன் நீங்களும் கூட.... சில (பிரபலமான) பெண்கள் பதவி என்பது கைக்கு கிடைத்ததும் கண்மண் தெரியாது நடப்பார்கள்.... இது ஆண்களிடம் குறைவு... இதனை பற்றி... |