![]() |
|
தனிப்பட்ட வாழ்வு வேறு ? பொது வாழ்வு வேறா ? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: தனிப்பட்ட வாழ்வு வேறு ? பொது வாழ்வு வேறா ? (/showthread.php?tid=6520) |
தனிப்பட்ட வாழ்வு வேறு ? பொது வாழ்வு வேறா ? - aswini2005 - 11-01-2004 பொது வாழ்வில் இருக்கின்ற பெருந்தகைகள் புரிகின்ற சில்மிசங்களை அம்பலப்படுத்தப்படுவது சரியா தவறா ? அல்லது தனிப்பட்ட வாழ்வு வேறு ? பொது வாழ்வு வேறா ? உங்களுக்குத் தெரிந்ததை எங்களுக்கும் பகிருங்கோ !
- kuruvikal - 11-01-2004 எங்கள் பார்வையில் மனிதன் என்றால் எல்லோரும் சமம்... பொது வாழ்வென்றால் என்ன தனிப்பட்ட வாழ்வென்றால் என்ன மனித நாகரிகத்துக்கு மனித விழுமியங்களுக்கு மனிதாபிமானத்துக்கு மனிதனுக்கே சிறப்பான பகுத்தறிவுக்கு வேலை கொடுக்காமல் வாழும் அனைத்தும் மனிதனாக கருதப்பட முடியாதவையே....! இதற்குமேல் விளக்க வேண்டியதில்லை என்றே எண்ணுகின்றோம்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- Thiyaham - 11-01-2004 பொது வாழ்வில் இருப்பவர்கள் பொதுச் சொத்து போன்று நோக்கப்படுகிறார்கள். தனிப்பட்ட அறியப்படாதவர்களை பற்றி யார் கவலைப்படுகிறார்.. அண்மையில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில்கிளின்ரன் அவருடைய செயலாளர் மோனிக்காவுடன் திருமணத்துக்கு மீறிய தொடர்பு என்று பலத்த சர்ச்சை, வழக்குகள் வேறு..... ஏன் அமெரிக்காவில் கிளின்ரனை தவிர மற்றவர்கள் அடுத்தவர்களுடன் படுக்கவில்லையா? காரணம் ஊடகங்கள் ஊர் பேர் தெரியாதவர்களை பற்றி செய்தி வெளியிட்டால் அவர்களுக்கு என்ன பயன் ... அத்துடன் கிளின்ரனுடன் தொடர்பு என்றால் தனக்கு மக்களிடையே popularity கிடைக்கும் சம்மந்தப்பட்டவர் நினைப்பார். இலங்கயில் அண்மையில் நீதியரசர் ஒருவர் தனது காரில் இளம் பெண் ஒருத்தியுடன் தகாத உறவில் ஈடுபட்டதாகவும். முஸ்லிம் அமைச்சர் ஒருவர் திருமணத்திற்கு புறம்பான உறவில் ஈடுபட்டதாகவும் செய்திகள் வந்தன.. இலங்கையில் இவர்களைத்தவிர ஏனையவர்கள் சோரம் போனதில்லையா? இவைகளை எல்லாம் ஊதி பெரிது படுத்துவது ஊடகங்கள் மட்டுமே. ஊடகங்கள் தங்கள் பிழைப்புக்காக இவைகளை செய்ய தயங்குவதில்லை. இவைகளை விட சினிமாவில் இருப்பவர் பாடு பெரும் பாடு. கிசுகிசு என்று பத்திரிகைகளே நாங்கள் பொய் கூறுகின்றோம் என்று சொல்வதை நாம் விரும்பி படிக்கின்றோம் அதைப்பற்றி விவாதிக்கின்றோம். இதனால் சம்பந்தப்பட்டவர்களின் மனது எப்படி வேதனைப்படும் என்பதை ஒருவரும் சிந்திப்பதில்லை. இது இன்று நேற்றல்ல தொன்று தொட்டு நடந்து வருகின்றது. இப்படியான செய்திகளால் மனம் நொந்த சாளி சப்பிளின் கூறினார் சினிமாவில் என் நடிப்பை பாருங்கள் எனது தனிப்பட்ட வாழ்வை அல்ல. ஊடகங்கள் தனது பிழைப்புக்காக சிலரை நோகடித்து பலரை தமது நேயர்கள்/வாசகர்கள் ஆக்குகின்றார்கள். பொது வாழ்வில் ஈடுபடுபவர் - Nitharsan - 11-01-2004 பொது வாழ்வில் ஈடுபடுபவர் தவறு செய்ய மாட்டாhகள் என்றோ அவர்கள் தவறு செய்யக் கூடாதென்றோ ஒரு சட்டமும் இல்லை. ஆனால் தனி நபராய் தவறு செய்யும் போது அது ஒருவரைப் பாதிக்கிறது. அதே ஒரு பொது வாழ்வில் ஈடுபடும் நபர் தவறு செய்தால் அது குறிப்பிட்ட் சமூதாயத்தையும் பாதிக்கும். கருணா என்ற தனிநபரின் தவறான நடவடிக்கையின் விளைவாய் இன்று யார் பாதிக்கப்படுகின்றனர்? இப்படி உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம் -நேசமுடன் நிதர்சன்- - Nitharsan - 11-01-2004 Thiyaham Wrote:அமெரிக்காவில் கிளின்ரனை தவிர மற்றவர்கள் அடுத்தவர்களுடன் படுக்கவில்லையா? .களத்தில் நாகரிகமான வார்த்தைகளை பாவித்து உங்கள் கருத்துக்களைத் தெரிவித்ததால் நன்று -நேசமுடன் நிதர்சன்- - shanmuhi - 11-01-2004 பொது வாழ்வில் இருக்கின்ற பெருந்தகைகள் புரிகின்ற சில்மிசங்களை அம்பலப்படுத்தப்படுவது சரி§Â... «¨Éòதுõ ¦ÅÇ¢îºòதுìகு ¦¸¡ñடு ÅÃôÀ¼ §Åñடுõ ±ýÀ§¾ ±ý «À¢ôÀ¢Ã¡Âõ. - Jude - 11-01-2004 ஷண்முகி Wrote:பொது வாழ்வில் இருக்கின்ற பெருந்தகைகள் புரிகின்ற சில்மிசங்களை அம்பலப்படுத்தப்படுவது சரி§Â... அப்படியானால் தனிப்பட்ட வாழ்வில் ஒடுங்கிக்கொண்டவ÷கள் தாராளமாக சில்மிசங்கள் புரியலாமோ? தனிப்பட்டவாழ்வில் அனைத்தும் இருட்டுக்குள் மறைக்கப்பட தாங்கள் சம்மதமோ? "பொதுவாழ்வு" என்பது, பெயருக்கேற்றபடி, சிலரது தனிப்பட்ட வாழ்வை, அவ÷கள் தே÷ந்து கொண்ட தொழில் காரணமாக, மற்றவ÷கள் அபகரித்து பொதுச்சொத்தக்கியதால் உருவானது. இந்த அபகரிப்புக்கு பல விதமான தொழில்கனள தே÷ந்து கொண்டவ÷களும் ஆளாகிறா÷கள். உதாரணமாக, ஒரு நடிக÷, பிரபலமான கள்ளன், தொட÷ கொலைகாரன், விடுதலைப் போராளி, அரசியல்வாதி, பிரபலமான மருத்துவ÷, விஞ்ஞானி, மக்களுக்கு உதவும் ஊ÷ப்பொதுமகள், விளையாட்டுத்துறையில் சாதனை செய்பவ÷, பெரும்பாலானோ÷ பள்ளிக்கூடம் போகாதவ÷களின் ஊரில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு அனுமதி பெற்றவ÷, ஏன், அதிஷ்டலாப சீட்டிழுப்பில் பலகோடி வென்றவ÷ கூட தனது தனிப்பட்ட வாழ்வை மற்றவ÷கள் அபகரித்து பொதுவாழ்வாக்கும் நிலைக்கு ஆளாகிறா÷கள். இவ÷கள் எல்லோரும் தம்மை பெருந்தகைகள் என்று நினைப்பதும் இல்லை சொல்வதும் இல்லை. மற்றவ÷கள் அப்படி நினைத்து இவ÷கள் வாழ்வை நாசமாக்கும் போது, அதைத்தடுக்க கூட ஆற்றல் அற்றவ÷கள் பலபே÷ இதற்குள் அடக்கம். இவ்வாறாக தனது வாழ்வை இளம் வயதில் இழந்த பரிதாபத்துக்குரிய பால÷ வகுப்பு ஆசிரியை டயானா, இதற்கு சிறந்த உதாரணம். ஏற்கனவே திருமணம் செய்த கமிலா பா÷க்க÷ என்ற பெண்ணுடன் இரகசிய உறவில் ஈடுபட்டிருந்த பிரித்தானிய இளவரச÷ சா÷ள்ஸூக்கு, அரச குடும்பத்துக்கு ஒரு வாரிசை பெற்றுத்தர ஒரு தாய் வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக ஏமாற்றப்பட்டு மனைவியாக்கப்பட்டவ÷ டயானா. அவரது சோகமான தனிப்பட்ட வாழ்வு பொது மக்களால் பறிக்கப்பட்டு அழிக்கப்பட்டது. டயானா யாருக்குமே எப்படி வாழவேண்டும் என்று போதிக்கவும் இல்லை, சட்டங்கள் தீட்டவும் இல்லை, தன்னை பெருந்தனக என்று நினைக்கவும் இல்லை. மற்றவ÷களை நினைக்க தூண்டவும் இல்லை. - Jude - 11-01-2004 Nitharsan Wrote:[quote=Thiyaham] அமெரிக்காவில் கிளின்ரனை தவிர மற்றவர்கள் அடுத்தவர்களுடன் படுக்கவில்லையா? .களத்தில் நாகரிகமான வார்த்தைகளை பாவித்து உங்கள் கருத்துக்களைத் தெரிவித்ததால் நன்று -நேசமுடன் நிதர்சன்- எந்த வா÷த்தை நாகரிகமானது? இதை யா÷ தீ÷மானிப்பது? கருந்து ஒன்றாக இருக்கும் நிலையில் தே÷ந்து கொண்ட வா÷த்தைக்கு ஏன் இந்த முக்கியத்துவம் நித÷சன்? மேற்படி வசனத்தை ஒருவ÷, "அமெரிக்காவில் கிளின்ரனை தவிர மற்றவர்கள் அடுத்தவர்களுடன் புண÷வதில்லையா?" "அமெரிக்காவில் கிளின்ரனை தவிர மற்றவர்கள் அடுத்தவர்களுடன் கலவி செய்வதில்லையா?" "அமெரிக்காவில் கிளின்ரனை தவிர மற்றவர்கள் அடுத்தவர்களுடன் உடலுறவில் ஈடுபடுவதில்லையா?" இப்படி பலவிதமான சொற்களை பயன்படுத்தி எழுத முடியும். இந்த சொற்கள் தமிழ் இலக்கியங்களில் மட்டுமல்ல, சமய நூல்களிலும், விஞ்ஞான நூல்களிலும் தாராளமாக பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் "தியாகம்" பயன்படுத்தய வா÷த்தை மேற்படி அ÷த்தத்தை குறிக்கும் குறியீட்டு சொல்லாக (அதாவது இந்த செயற்பாட்டை விஞ்ஞான, மருத்துவ ஏடுகளில் உள்ளதைப் போல அப்படியே சொல்லாமல்) சொல்ல பேச்சுவழக்கில் பயன்படும் ஒன்று. - Thiyaham - 11-01-2004 Nitharsan Wrote:[quote=Thiyaham] அமெரிக்காவில் கிளின்ரனை தவிர மற்றவர்கள் அடுத்தவர்களுடன் படுக்கவில்லையா? .களத்தில் நாகரிகமான வார்த்தைகளை பாவித்து உங்கள் கருத்துக்களைத் தெரிவித்ததால் நன்று -நேசமுடன் நிதர்சன்- இப்படியான மனநிலை எம்மவர்களிடம் இன்னும் காணப்படுவதால் சில வார்த்தைகளை மட்டுமல்ல சில விடயங்களை கூட நாம் விவதிக்க முடியாமல் உள்ளோம். இந்த நிலை என்று மாறுமோ?? :roll: :roll: இந்த நிலை என்றோ மாறி விட்டதால் - Nitharsan - 11-02-2004 இந்த நிலை என்றோ மாறி விட்டதால் தான் தமிழ் மொழி இன்று இவ்வாறு இருக்கிறது. <span style='font-size:25pt;line-height:100%'>-நிதர்சன்-</span> - Nitharsan - 11-02-2004 Thiyaham Wrote:இப்படியான மனநிலை எம்மவர்களிடம் இன்னும் காணப்படுவதால் சில வார்த்தைகளை மட்டுமல்ல சில விடயங்களை கூட நாம் விவதிக்க முடியாமல் உள்ளோம். உங்களுக்கே விவாதிக்க முடியாது என்று தோன்றும் போது பின் எதற்கு மற்றவர்களை சாட்டுகின்றீர்?????????? -நேசமுடன் நிதர்சன்- - kuruvikal - 11-02-2004 அழகு தமிழ் இருக்கும் போது ஏன் அலங்கோலத் தமிழைக் கையில் எடுப்பான்...அப்படி என்பதுதான் நிதர்சனின் ஆதங்கம்...அது நியாயமும் கூட....! மேடையில் பேச அழகு தமிழ் வேண்டும்... மேடைக்கும் அல்ல பேச்சாளருகும் அல்ல கூடியிருக்கும் அனைவருக்கும் தமிழின் அழகைக் காட்டுவதற்கு.... தெருச் சண்டையில் தமிழின் அழகு தேவையில்லை...ஆத்திரம் கோபத்தைக் கொட்ட வார்த்தை மட்டும் தேவை....! சாப்பாட்டு மேசையில் நாய்க்கு உணவு வைக்க முடியாதோ....??!மனிதருக்குத்தானே வைப்பது...!!! ஏன் நாய்க்கு வைத்தா உண்ணாதோ என்று கேட்டால்....சிலவேளை பழக்கதோஷத்தில் நாய் உண்ணாவிடினும் கேட்கும் மனிதர்கள் இருப்பார்கள்...குதர்க்கத்திற்கென்றே காத்திருப்போருக்கு உண்மையை விளக்க.... விளங்க நேரம் எடுக்கும்....காலம் பிடிக்கும்.....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- Suji - 11-02-2004 பொதுவாக எல்லா மனிதரும் அடுத்தவனுடைய அந்தரங்கத்தை அறிய ஆவலாக உள்ளனர் தன்னுடைய அந்தரங்கம் வெளியே வருவதை விரும்பமாட்டார்கள். ஆளால் பொதுவாழ்க்கையில் ஈடுபடுபவர்கள் மற்றவர்களுக்கு வழிகாட்டுபவர்கள் அவர்கள் தப்புசெய்து தப்புக்கும் வழிகாட்டியாக இருக்கக்கூடாது. ஊடககங்களின்தாமம் செய்திகளை வெளிக்கொணர்வது அவர்கள் தங்கள் கடமையை சரிவர செய்யவேண்டும் அப்படி இல்லையென்றால் பொதுவாழ்க்கையில் ஈடுபடுவாகளின் உழல்கள் வெளிவேராமல் போய்விடும் - Suji - 11-02-2004 உசார் உசார் நண்பர்ளே உசார் [size=24]வதந்தீ(நெருப்பு)மீண்டும் வர ஆரம்பித்துவிட்டது அணைக்க (நூர்க்க)தயாராகுங்கள் - Kanani - 11-02-2004 பொதுவாழ்வில் ஈடுபடுபவரது தனிவாழ்வை ஆராய்வது நாகரிகமற்ற செயல்...அவரது தனிப்பட்ட நடவடிக்கைகள் பொதுவாழ்வை பாதிக்குமாயின் ஆராய்வது ஏற்கத்தக்கது தலையிடியும் காய்ச்சலும் தனக்குவந்தால்தான் தெரியும்...அவங்களை நிம்மதியா விடுங்கப்பா..... - kuruvikal - 11-02-2004 ஏண்டாம்பி... தனி வாழ்விலேயே சீரில்லாதவன் எப்படி பொதுவாழ்வில் சீரானவனாய் இருப்பான்... தன்னுடைய வாழ்வையே சரியாக தீர்மானிக்க முடியாதவன் எப்படி சமூகத்தில் உள்ளோரின் வாழ்க்கையில் நடவடிக்கைகளில் செல்வாக்குச் செலுத்த முடியும்...அதை சரியான பாதையில் இட்டுச் செல்ல முடியும்....???! :roll: தப்புச் செய்து திருந்திட்டன் என்பவனை எந்தளவுக்கு நம்பலாம்...எனி தப்பே செய்யமாட்டான் என்பதற்கு என்ன உத்தரவாதம்... அது அவனின் தனிப்பட்ட மன உறுதியைப் பொறுத்தது...எனவே தனி வாழ்க்கையில் உறுதில்லாதவன் எப்படிப் பொதுவாழ்வில் சீராக இருக்க முடியுமா... கஸ்டம் தான்....என்றுதானே சாதாரணமாக உணரமுடியுது...! ஆகவே மொத்தத்தில் தனி வாழ்வென்றால் என்ன பொது வாழ்வென்றால் என்ன மனிதன் மனிதனாக இருக்க வேண்டும்...இன்றேல் மற்ற மனிதர்கள் அவனைப் புறக்கணிக்க புறந்தள்ள அதிக நேரம் செல்லாது... இப்ப இந்தக் களத்திலேயே பாருங்கள்...எங்களோடு கருத்தால் மோதுபவர்கள் கூட தங்கள் பக்கம் நியாயம் இல்லை என்றவுடன் எங்களை தனிப்பட்ட ரீதியில் ஏன் தாக்குகிறார்கள்.... எங்கள் தனிப்பட்ட வாழ்வை (ஆட்களைப் பற்றி சரியாக அறிகிறார்களோ இல்லையோ) சீரில்லாதது என்று காட்டிவிட்டால் எங்கள் பொதுக் கருத்தும் சீரில்லாதது என்று இலகுவில் மற்றவர்களை நம்ம வைத்துவிடலாம் என்பதால்தான்...இதுதான் உலகில் பொதுவான பார்வையும் கூட...!
- Mathan - 11-02-2004 நல்ல தலைப்பு. நேரமின்மையால் கருத்துக்களுக்கு பதில் எழுதமுடியவில்லை, தொடருங்கள், - சாமி - 11-03-2004 Nitharsan Wrote:[quote=Thiyaham] அமெரிக்காவில் கிளின்ரனை தவிர மற்றவர்கள் அடுத்தவர்களுடன் படுக்கவில்லையா? .களத்தில் நாகரிகமான வார்த்தைகளை பாவித்து உங்கள் கருத்துக்களைத் தெரிவித்ததால் நன்று -நேசமுடன் நிதர்சன்- தமிழ்ப்பாடல்களில் நீங்கள் குறிப்பிடும் நாகரீகம் கடைப்பிடிக்கப்படுகின்றதா? சமீபத்தில் வந்த பாடல் ஒன்றில் <b>'என் தேகமெங்கும் அவன் முத்தமிட்டபோது என் தலையில் நட்சத்திரங்கள் சிதறின! அந்த இடத்தில் அவன் முத்தமிட்டபோது ஆயிரம் சூரியன்கள் எனக்குள் உடைந்தன!' பாடல்: வெள்ளைக்கார முத்தம். படம்: செல்லமே. 'பஞ்சு மெத்தையில் பந்தயம் நடக்கும் அந்தப் பந்தயத்தில் இருவருமே ஜெயிப்பார்கள்' பாடல்: கும்மியடி. படம்: செல்லமே</b>என்று உள்ளதாம் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->மேலதிகத் தகவல்கள் http://www.yarl.com/forum/viewtopic.php?p=42760#42760 அண்ண வணக்கம் - Nitharsan - 11-03-2004 அண்ண வணக்கம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> மற்றவனைப் மட்டும் பற்றி; கதைக்காதீங்கே.... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> உன்னை திருத்து உலகம் தானே திருந்தும் என்றார்கள்..ஆனால் நீங்கள் களத்திலிருந்து நீக்க வேண்டியதைப்பற்றி சொன்னால் இல்லை தமிழ் சினிமாவில் இப்படி வந்தது என்று கூறினால் நான் என்ன செய்ய... மன்னிக்கவேண்டும் தென்னிந்திய தமிழ் கலையுலகினரே... தமிழ் திரையுலகத்திற்கு தமிழ் தெரியாது என்றது உங்களுக்கு தெரியாதே??? :?: இப்பெல்லாம் தமிழாக்கள் பாடல் படிப்பது குறைவு பாட்டு எழுதுவது மட்டுந்தான் பிறகு வட இந்தியாவிலிருந்து பாடகர்களை இறக்கு மதியேல்லே செய்யிறவை???? :?: தமிழ் பாடினா தமிழை ஒழுங்கா பாடிடுவான் என்று தான் இந்த வேலை அவை பாடினா சொல்ல வேணுமேஅதைத்தான் நிப்பாட்ட எத்தின பேர் உங்களிட்ட கேட்டிட்டினம் தமிழ் பண்பாட்டை சீரழிக்கிற படத்தை நிராகரியுங்கே என்று செய்தனிங்களே... பேந்தேன் கதைக்கிறியள்.. ஏதோ நான் உங்கள் வீட்டு குப்பையைப் பற்றி சொன்னேன்.... ஆதற்காய் அடுத்தவன் தன் வீட்டுக்குப்பையை அள்ள வில்லை என்று புகார் கொடுக்கச் சொல்லவில்லை - kuruvikal - 11-03-2004 சாமியார்... இந்த இரண்டு பாடல்வரிகளிலும் தகாத வார்த்தைகள் இல்லை.... முத்தம் தேகம் பஞ்சு மெத்தை பந்தயம் தலை நட்சத்திரம் அந்த இடம்...இதில் எதுவும் தகாத வார்த்தைகளாத் தெரியவில்லையே...! பாடல் வரிகளின் பொருள் உங்களுக்குத் தகாததாய் தெரிந்தாலும் மனிதன் தனது உணர்வுகளை நாகரிகமாகச் சொல்ல இடமளிக்கத்தானே வேண்டும்... இல்ல விலங்குகள் போல...ஊமைப்பாசையா பேசுறது....! ஆங்கிலப் பாடல்களைக் கேட்டீர்கள் என்றால் பச்சத் தூசணம் அப்படியே வரும் வார்த்தைகளில்.....அதைவிட இது பல மடங்கு மேல்...! சாமியாரே எவ்வளவோ வரிகள் அழகான தமிழில் காதலின் காமத்தின் நிலை சொல்லும் போது (திருவள்ளுவருந்தான் காமத்துப்பால் பாடியுள்ளார்) தங்களுக்கு இந்த வரிகளில் பார்வை விழுந்ததேனோ....நல்லத்தான் ரசிக்கிறியள் சினிமாப்பாட்டுக்கள்....! உண்மையச் சொன்னா மனித உயிரியலில் படிக்க முடியாத நுட்பமான உணர்ச்சி வெளிப்பாடுகளை ரசனையோடு தமிழ் சினிமாப் பாடல்களில் சொல்லுகிறார்கள்...எல்லாம் அநுபவம் போலும்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
|