Yarl Forum
இனிய தீபாவளித்திருநாள் வாழ்த்துக்கள்....! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=13)
+--- Thread: இனிய தீபாவளித்திருநாள் வாழ்த்துக்கள்....! (/showthread.php?tid=6514)

Pages: 1 2 3


இனிய தீபாவளித்திருநாள் வாழ்த்துக்கள்....! - tamilini - 11-02-2004

[b]<span style='font-size:25pt;line-height:100%'>யாழ் நண்பர்கள் நண்பிகள் சகோதரிகள் சகோதரர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளித்திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்....!

அன்புடன் தமிழினி...</span>


- kuruvikal - 11-02-2004

எப்பையங்கோ தீபாவளி....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:


- வெண்ணிலா - 11-02-2004

அக்கா தீபாவளிக்கு இன்னும் ஒன்பது தினங்கள் இருக்கின்றனவே. ஏன் இப்பவே வாழ்த்துக்கள் சொல்லுறீங்க. ஏன் எங்காவது போகப்போறீர்களா தீபாவளிக்கு? சரி உங்கள் வாழ்த்துக்கு நன்றி தெரிவிப்பதுடன் உங்களுக்கும் மற்றும் களஉறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்கள்


- tamilini - 11-02-2004

எல்லாம் ஒரு அட்வான்ஸ் வாழ்த்துக்கள் தான்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- tamilini - 11-02-2004

Quote:எப்பையங்கோ தீபாவளி....!

11/11/04 :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kuruvikal - 11-02-2004

நன்றிங்க... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<img src='http://img.123greetings.com/events/eoct_diwali_wishes/8455-002-09-1047.gif' border='0' alt='user posted image'>

[size=14]<b>உங்களுக்கும் மற்றும் தீபாவளியைக் கொண்டாடும் கள உறவுகளுக்கும் எமது தீபாவளி வாழ்த்துக்கள்...!</b>


- Mathan - 11-02-2004

<b><span style='font-size:22pt;line-height:100%'>தீபத்திருநாளை போலவே கள உறுப்பினர்களுக்கு ஓளிமயமான எதிர்காலம் அமைய வாழ்த்துக்கள்.</b></span>


- kavithan - 11-02-2004

அனைவருக்கும் என் தீபாவளி வாழ்த்துக்கள்


- cannon - 11-02-2004

இத்தீபாவளி திருநாளில் அணைத்து ஈழதவர்களின் இல்லங்களில் இருளகன்று தீபத்தின் ஒளி போல பிரகாசிக்க எனது நல்வாழ்த்துக்கள்.


- சாமி - 11-03-2004

இதுக்கு ஒரு முடிவு கட்டிவிடுவீர்கள் என்று பார்த்தால் தீபாவளி கொண்டாட வெளிக்கிட்டு விட்டீர்கள் <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

http://www.yarl.com/forum/viewtopic.php?t=2009


- kavithan - 11-03-2004

சாமி Wrote:இதுக்கு ஒரு முடிவு கட்டிவிடுவீர்கள் என்று பார்த்தால் தீபாவளி கொண்டாட வெளிக்கிட்டு விட்டீர்கள் <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
http://www.yarl.com/forum/viewtopic.php?t=2009

அது அவர்கள் பாக்கட்டும் நமக்கு இது தேவை <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- hari - 11-03-2004

மானம் உணரும் நாள்!
நரகனைக் கொன்றநாள் நல்விழா நாளா?
நரகன் இறந்ததால் நன்மை யாருக்கு?
நரகன் என்பவன் நல்லனா? தீயனா?
அசுரன் என்றவனை அறைகின்றாரே?
இராக்கதன் என்றும் இயம்புகின்றாரே?
இப்பெயரெல்லாம் யாரைக் குறிப்பது?

இன்றும் தமிழரை இராக்கதர் எனச்சிலர்
பன்னுகின்றனர் என்பது பொய்யா?
இவைகளை நாம் எண்ண வேண்டும்.
எண்ணாதெதையும் நண்ணுவதென்பது
படித்தவர் செயலும் பண்பும் ஆகுமா?
வழக்கம் என்பதில் ஒழுக்கம் இல்லையேல்
கழுத்துப் போயினும் கைக்கொளவேண்டாம்.
ஆயிரம் கோடி ஆண்டு செல்லினும்
தூயது தூயதாம் துரும்பிரும்பாகாது!
‘உனக்கெது தெரியும், உள்ள நாளெல்லாம்
நினைத்து நடத்திய நிகழ்ச்சியை விடுவதா?
என்றுகேட்பவனை, ‘ஏனடா குழந்தாய்!
உனக்கெது தெரியும் உரைப்பாய் என்று
கேட்கும் நாள், மடமை கிழிக்கும் நாள், அறிவை
ஊட்டும் நாள் மானம் உணருநாள் இந்நாள்.
தீவாவளியும் மானத்துக்குத்
தீபாவாளி ஆயின் சீ என்று விடுவீரே!

- புரட்சிக்கவிஞர் பாரதிதாசன,


- TMR - 11-03-2004

அனைவருக்கும் என் தீபாவளி வாழ்த்துக்கள்


- Sriramanan - 11-04-2004

தீபாவளி வாற அதே 11ஆம் திகதிதான் பூநகரித் தள அழிப்பின் வெற்றி நாளும் வருகிறது. அந்தச் சமரில் 456 போராளிகள் தமது இன்னுயிர்களை ஈகம் செய்தார்கள்.

எனவே அந்த 456 வேங்கைகளுக்கும் விளக்கேற்றி அஞ்சலி செலுத்துங்கள்.


- kuruvikal - 11-04-2004

அதையேன் இதுக்க கலக்குறியள்...அதுக்குத்தானே மாவீரர் வாரமும் தினமும் இருக்கே....! அதையதை அங்கங்க அப்பப்ப செய்யுறதுதான் சிறப்பு....!

இது தீபத்திருநாள் மனிதனை பீடித்துள்ள துன்பமாகிய அரக்கனை ஒரு நாளிலாவது அகற்றி மகிழ்ச்சியாக இருக்க விடுங்களேன்...அதுக்கும் விடுறியள் இல்ல...! :wink:

உங்கட விமர்சனத்துக்குரிய அரக்க சித்தாந்தம் விடுத்து இப்ப இங்க புதுத் தொனியிலதான் கள உறவுகள் தீபாவளியக் கொண்டாடுகிறார்கள் என்று கொள்ளுங்களேன்....! இத்தீபாவளியை தாம் கொண்ட துன்பங்கள் மறந்து களித்திருக்கும் திருநாளாகக் கொள்ளுங்களேன் அதுபோதும்...! Idea


- Sriramanan - 11-04-2004

Quote:இது தீபத்திருநாள் மனிதனை பீடித்துள்ள துன்பமாகிய அரக்கனை ஒரு நாளிலாவது அகற்றி மகிழ்ச்சியாக இருக்க விடுங்களேன்...அதுக்கும் விடுறியள் இல்ல...!
அரக்கனை அழிச்சதுக்காக அந்த நாளிலை கெட்டவன் ஒளிஞ்சான் எண்டு தீபாவளி கொண்டாடுறீங்கள் (அந்த அரக்கன் அழிப்பின் மூலம் எங்களிற்கு என்ன நன்மை ஏற்பட்டிருக்கு எண்டு தெரியாது அது வேறை விடயம் )

ஆனால், கிளாலி நீரேரியில் வைத்து எம் மக்களை அழித்த கடற்படை அரக்கர்களின் கொட்டத்தை விடுதலைப் புலிகள் நாகதேவன்துறை (பூநகரி இராணுவத் தளத்துடன் இணைந்த கடற்படைத்தளம்) அழிப்பின் மூலம் அடக்கினார்கள். அதற்குப் பிறகு எம் மக்கள் பயமின்றி சுதந்திரமாக கிளாலி நீரேரியில் பயணம் செய்தார்கள். அதற்கு வழிவகுத்த அந்த புனிதமானவர்களினின் நினைவு நாளும் உங்களின் தீபாவளி வரும் அதே நாளில்த்தான் வருகிறது. உங்களை நான் தீபாவளி கொண்டாட வேண்டாம் எண்டு சொல்லவில்லை. தீபாவளிக்கு ஏற்றும் தீபங்களுடன் அவ் வீரர்களுக்கும் தீபம் ஏற்றி ஒரு நிமிசம் அஞ்சலி செலுத்தி அவர்கள் செய்த உயிர்த் தியாகத்திற்கு நன்றி செலுத்துவோம் எண்டுதான் சொல்கிறேன்.


- kuruvikal - 11-04-2004

தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்காக தம் இன்னுயிர்களை தந்த மாவீரர்களை நினைவு கூறத்தான் புனித நாளாக மாவீரர்தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது...அதை சர்வதேசமும் அறியும்.... அம்மாவீரகளுக்கு தனித்துவமான ஒரு இடம் அவர்கள் நேசித்த மக்களின் மனதில் இருக்கிறது...அதில் எந்தச் சந்தேகமும் இருக்க முடியாது..இப்படியான விசேட தினங்களுக்குள் தியாகத்தால் உயர்ந்த அம் மாவீரர்களுக்கும் அஞ்சலி செலுத்தக் கேட்பது இரண்டு விடயத்தைப் பாதிக்கும்...

1. கொண்டாடப்படும் விசேட தினம் எதிர்பார்க்கும் சமூகவிளைவை...!

2. மாவீரர்களுக்கான தனித்துவத்தையும் அவர்களை நினைவு கூறும் மதிப்புமிக்க புனிதப் பணியையும்....!


- hari - 11-04-2004

குருவிகளிடம் சில கேள்விகள்.
1.எந்த இனத்தவர்களால் தீபாவளி முதலில் கொண்டாடப்பட்டது?
2.(முதல் கேள்விக்கு விடை தமிழர் இல்லையெனில்) தமிழர் எப்பொழுது கொண்டாட ஆரம்பித்தனர்?
3.ஏன் தமிழருக்கு அதற்குமுன் துன்பம் ஒளிந்த நாளாக இந்த நாள் தெரியவில்லை?


- hari - 11-04-2004

Quote:சிங்களவர் இலங்கைக்கு வருமுன் எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் ஈழவேந்தனாகிய இராவணன் தொடக்கம் 1621 வரை தமிழர் சுதந்திரத்துடன் ஆட்சி புரிந்தமை வரலாற்றில் உண்டு. இந்த உண்மையை சரித்திர வல்லுநர்கள் தகுந்த ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டியுள்ளனர். ஈழவேந்தனாகிய இராவணன் வட இந்திய அரசனான இராமன் கையால் தோற்கடிக்கப்பட்டான். இந்தத் தோல்வி அன்றைய எட்டப்பனாகிய அனுமான் கூட்டத்தினர் இராவணனுக்குத் துரோகம் செய்து விட்டனர்.
நன்றி: தினக்குரல்


இராவணன் அழிந்த நாளையும் வட இந்தியர்களால் கொண்டாடப்பட்டால்,தமிழர்களும் கொண்டாடுவார்களா?


- kuruvikal - 11-04-2004

தீபாவளி இந்து சமயக் கோட்பாடுகளை வலியுறுத்தி அதாவது மனித மனதின் நீடித்த இன்பத்திற்கு அது கொண்டுள்ள ஆசை ஆணவம் போன்ற அசுர குணங்களை அகற்றி கருணை தியாகம் ஞானம் என்று தர்மத்தின் வழி செல்வதற்கும்....அதன் வழி வாழ்வதற்கும் வழிகாட்டவும் அதை தொடர்ந்து சமூகத்தில் எளிய முறையில் நினைவூட்டவுமே இத்தினம் கொண்டாடப்படுகிறது....!

இதற்கு ஒரு புனைகதையை உருவாக்கி உலாவவிட்டதும் அதற்குள் இனத்துவக் கருத்துக்களை விதைத்ததும் காலத்துக்குக் காலம் மதங்கள் மீது ஆதிக்கம் செலுத்திய மனித ஆணவத்தின் அகம்பாவத்தின் வெளிப்பாடுகளா இருக்கலாம்...எம்மைப் பொறுத்தவரை ஒரு திருநாள் உணர்த்த விளையும் உள்ளார்ந்த அர்த்தங்களையும் அது சொல்லும் நீதியையும் உள்வாங்க அந்தத் தினத்தை ஆணவத்தால் ஆசைகளால் அநியாயங்களால் கட்டுண்டு கிடக்கும் மனிதன் பயன்படுத்தலே அவசியம்....!

உண்மையில் இப்பண்டிகை இந்திய உபகண்டத்தில் இந்து மத செல்வாக்குள்ள சமூகங்கள் எங்கினும் வெவ்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் கொண்டாடப்படினும்...அது சொல்லும் சாரம் எங்கினும் ஒன்றுதான்...நாம் மேலே சொன்னது போல....!

மீண்டும் சொல்ல விரும்புகிறோம்...நாம் தமிழர்களாக இருக்க முதல் மனிதனாக இருக்கவே விரும்புகின்றோம்...எம்மை எமது மனத்தை எண்ணங்களை வளப்படுத்த எவையெவை தேவையோ அவற்றை கடைப்பிடிக்கும் சுதந்திரம் எமக்கு உண்டு....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea