Yarl Forum
அழகான மலரே..! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: அழகான மலரே..! (/showthread.php?tid=6480)

Pages: 1 2 3 4


அழகான மலரே..! - kavithan - 11-09-2004

<img src='http://kavithan.yarl.net/kavithan_pic/rose4awp6-thumb.jpg' border='0' alt='user posted image'>

<span style='font-size:30pt;line-height:100%'><b>அழகான மலரே..!</b></span>

<span style='font-size:25pt;line-height:100%'>அடுக்கடுக்காய்
இதழ் கொண்டு
அழகழகாய்
உன்னை
வடிவமைத்த
அந்த சிற்பி
யாரோ?

அழகான
இரு இதழ்கள்
கொண்ட
பெண்கள்
உன்னை
நேசிப்பதன்
மாயம்
ஏதோ?


தினம்தினம்
காலையில்
தினசரியாய்
நீ
மலர்ந்திடும்
நோக்கம்
என்னவோ?

யாரும்
நெருங்க முடியாத
இடத்தில் எல்லாம்
நீ மட்டும்
அமர்ந்திருந்து
அழகாய்
புன்னகைப்பது
எப்படியோ?


அன்புக்கு
பரிசாய்
தூதாய்
அழகாய்
மிளிரும் உன்னை
எனக்கும் ரொம்ப பிடிக்கும்
ஆனால் ஒன்று
அழகான
பெண்களின்
கூந்தலில்
இருந்து கொண்டு
நீ என்னை பார்த்து
செய்கின்ற
குறும்பு சிரிப்பு......!.
இருக்கே......!
அது ...!
அது..!
உன்னை..!
உன்னை..!
என்னை
கொல்லுதே...!
அட,
பொறாமையில்லை
உன்னழகு.</span>


கவிதன்
07/11/2004

http://www.kavithan.yarl.net


- kuruvikal - 11-09-2004

கவிஞனே....
மலர் எனக்கு
அழகு கொடை
அழகழகாய்
சந்ததி தந்திட
சத்தியமாய் அது
எனக்குத் தேவை....!

மங்கை அவளுள்
அழகு திமிர்..!
அவள் கொண்டது
இரு இதழ் அல்ல
சொல் கொண்டு கொட்டும்
நச்சுக் கொடுக்குகள்...!
கண்ணி வைத்து
பறந்து திரியும் அவள்
கூந்தலுக்குள்
ஏன் சிக்கியது உன் கண்கள்..??!
வஞ்சகி அவளிடத்தில்
நான் அனுபவித்தேன்
கொடுங்கோல் சிறை
உடல் வாடி அழகொடிந்து
உயிர் வீழும் வரை....
உனக்கும் வேண்டுமோ அக்கதி...!

இளைய கவியே....
நீ பழைய பஞ்சாங்கமல்ல
பழைய பல்லவி பாட...!
புரட்சி உலகம் படைக்க
புறப்பட்ட வரிப்புலி...!
வஞ்சியவள் மெய்யழகில்
மெய் மறந்து உளறாதே
மெய்யாய் நீயும் வீழ்வாய்
பாதாளச் சிறையில்
பறிபோகும் உன்
அழகு சுதந்திரம்....!
பருவ மயக்கத்தில்
பரத்தை அவள் பொய்யழகில்
தடக்கி விழாதே...!

மலர் நான்
மங்கையிடம்
கண்ட உண்மை
உன் கவிக்கு பரிசாய்
தருகின்றேன்
கற்றுத் தேறிக்கொள்
தவறுகள் தொடராதே
இன்றே திருத்திக் கொள்.....!


- hari - 11-09-2004

ஆகா, என்ன எது? நினைச்சவுடனே கவிதை அருவி மாதிரி கொட்டுது உங்கள் இருவருக்கும், நானும் எழுதுவம் என்றால் அதும் கொட்டுது ஆனால் தேளாக! வெகுவிரைவில் நானும் கவிதையுடன் சந்திக்கின்றேன்! என் தாய் தமிழுக்கா தட்டுப்பாடு? நான் எழுதத்தொடங்கினால் செந்தமிழ் வறுமையடையும் என எவ்வளவு காலமும் அமைதியாக இருந்துவிட்டேன். அருமையான கவிதைகள் வடித்த இருவருக்கும் எனது வாழ்த்துக்கள்!


- sOliyAn - 11-09-2004

<span style='font-size:25pt;line-height:100%'>மலரே!
நின் இதழ்களில்தான் எவ்வளவு பூரிப்பு
மாற்றான் மகிழ நீ மலர்ந்தாய்
அவனின் நிமிர்வில் நீ கரைந்தாய்
வேற்றுவனோ மாற்றானோ
உன்னால்தானே சபை தன்னில்
மாலைசூடும் தகுதிபெற்றான்!

தகுதியும் தராதரமும்
உன்னால் வரும்போது
நீயோ மணமாய் தேனாய்
உனையே உருக்கி
சருகாய் போகும் தியாகம் என்னே!

கவியே! நீ சமைத்துக்கொள்
மலர்களின் மகிமைதனை
உந்தன் இலக்கியச் சட்டிகளில்!
அவை
அட்சய பாத்திரங்களாய்
உன்னோடு வாழட்டும்! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

வானத்தை நோக்கிப் பறக்கும்
குருவிகளே!
கொஞ்சம் கிளைக்கு வாருங்கள்!
மலர்கள் தந்த கனியிருக்கு
நீங்கள் பசியாற!
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> </span>


- kuruvikal - 11-09-2004

மலரோடு இருக்கு
வாடாத நேசம்
அவள் அழகே
ஆண்டவன் எமக்காய்
அருளியதல்லோ....
வானில் பறக்க முதலாய்
அவள் இதழ் புகுந்து
கூடிக் களித்து
கூத்தடித்தது....
குருவிதன் உடலோடொட்டிய
மணத்தோடு மகரந்தம் வரை
சாட்சியாய்....!
கனிக்காய் காத்திருப்பு
காலம் தாழ்தலல்லோ....! :wink:

மலருக்குள் இல்லா
சங்கதிகள் மங்கைக்குள்...?????!
மறந்தும் புலம்பாதீர் பாவலரே
மங்கை ஒருக்காலும் மலராகாள்
அவளுக்குள் உள்ளதெல்லாம்
மலரின் குணமல்ல
மலர் தாங்கும்
காம்பொடு முள்ளின் குணம்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- tamilini - 11-09-2004

எங்கும் மங்கையவள்...
தன்னை மலர் என்று
விழித்ததும் இல்லை
அது போல் நினைத்ததும் இல்லை...
பாவலர்கள் பெண்களை
மலர் என்பர் மணியென்பர்
தத்தம் கற்பனைக்கேற்றாற்போல்
உருவகிப்பர்..

மலருக்குமட்டுமா உருவகிக்கிறீர்..
அரக்கி என்பர் அழகி என்பர்..
பாவை என்பர் கு}வை என்பர்
நிலவென்பர் இன்னும் எத்தனையாய்...
தம் எண்ணங்களிற்கு வடிவமைப்பர்
இத்தனைக்கம் பெண்ணவள்
இவற்றை நினைப்பதில்லை
சிறிதளவும்...

கவிஞர்களாய் கற்பனையாளர்களாய்..
தத்தம் நினைவுகளிற்கு
பெண்களுக்கு உருவம்
கொடுத்து உருவகிப்பர்
இது பெண்ணின் தவறா..??
இல்லை பெய் கூறி
கவி வடிக்கும் அவர்கள் தவறா..??

எது எப்டியோ.. அம்மா என்று..
அக்கா என்று தங்கை என்று..
பாட்டியென்று..
காதலியென்று..மனைவி என்று..
பல பெயர்களை நியமாக பெற்றவள்..
புலவர்களாய் புலம்பும் இவர்களாது
புனை பெயர்கள் கண்டு
வருந்தவா போகிறாள்.. ??
எதையும் எதிர்பார்ப்பதில்லை
அதனால் வருத்தமும்
பெண்களிற்கில்லை...!
பாவம் மலரது.. அழிகிய வாழ்வு..
ஒரு நாளிலில் முடிவடையும்..
அதையே அனுபவித்து வாழ்கிறது..
இவர்கள் புலம்பல் கேட்டு
வருந்தவா போகிறது..??


- tamilini - 11-09-2004

கவிதன் குருவிகள் மற்றும் சோழியன் அண்ணா அனைவரது கவிகளும் நன்றாக இருக்கிறது.. வாழ்த்துக்கள்.. ஹரி அண்ணாவின் கவிகளை எதிர்பார்த்தபடி.......! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kavithan - 11-09-2004

அனைவரின் கவிதைகளுக்கும் நன்றிகள்.. வாழ்த்துக்கள்...மாலை எல்லாவற்றுக்கும் பதில் எழுதுகிறேன்


- hari - 11-09-2004

அனைவரின் கவிதைகளும்
அருமை, எனது கவிதை இல்லாத குறையை தீர்த்துவிட்டார்கள், தமிழினி நான் மறந்தாலும் நீங்கள் விடமாட்டீங்கள் போல? வெரி சொரி ஐயாம் வெரி பிசி.


- tamilini - 11-09-2004

Quote:வெரி சொரி ஐயாம் வெரி பிசி.
_________________

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- hari - 11-09-2004

தமிழினி, இந்த பகுதிக்கு ஒரு ரிமிக்ஷ் கவிதை போடலமென்று புதுவையாரின் கவிதைகளை எல்லாம் படித்துபார்த்தேன். ஆனால் சரிவரவில்லை, அங்கை இன்னவென்றால் தமிழ்,வீரம்,தாய்மண், விடுதலை,சுதந்திரம்,யுத்தம், என்று இருந்தது. இங்க பார்த்தால் மரம்,செடி,கொடி,பூ, மலர், கனி என்று இருக்கு. அதனால அந்த ஐடியாவை கைவிட்டுட்டன்


- kanavulakan - 11-09-2004

<span style='font-size:25pt;line-height:100%'>
ஒருவர் காதலில்...
மற்றையவர் காவியில்...
ஆனால் அனைவரும் கனவுகளில்...
மொத்தமாய் அவரவர் காலங்களில்
அவரவர் நினைவுகள்
எனது நினைவுகளும்...
மீண்டும் கனவுகளில் நான்,
நினைவு திரும்பும் வரை.....</span>


- kuruvikal - 11-09-2004

ஒருவர் காதலில்
மெய்யாகலாம்....??!
மற்றவர் காவியில்
சுத்தப் பொய்
அவர் சுதந்திரப் பறவை....!
பறவைகள் பலவிதமா
ஆதலால்...
கற்பனையும் பல விதம்...!
தங்கள் கற்பனை
கனவோடுதானோ
இல்ல..
நினைவோடும் இருக்கோ..???!
நிஜத்தில் நினைவில்
கற்பனை....
வளம்...!
கனவோடு கற்பனை
விடியலோடு அஸ்தமனம்...!


- kavithan - 11-09-2004

hari Wrote:தமிழினி, இந்த பகுதிக்கு ஒரு ரிமிக்ஷ் கவிதை போடலமென்று புதுவையாரின் கவிதைகளை எல்லாம் படித்துபார்த்தேன். ஆனால் சரிவரவில்லை, அங்கை இன்னவென்றால் தமிழ்,வீரம்,தாய்மண், விடுதலை,சுதந்திரம்,யுத்தம், என்று இருந்தது. இங்க பார்த்தால் மரம்,செடி,கொடி,பூ, மலர், கனி என்று இருக்கு. அதனால அந்த ஐடியாவை கைவிட்டுட்டன்

அதைவைத்து மாவீரர்களுக்காக ஒரு கவிதை வடிக்கலாம்


- sOliyAn - 11-09-2004

Quote:எங்கும் மங்கையவள்...
தன்னை மலர் என்று
விழித்ததும் இல்லை
அது போல் நினைத்ததும் இல்லை...
பாவலர்கள் பெண்களை
மலர் என்பர் மணியென்பர்
தத்தம் கற்பனைக்கேற்றாற்போல்
உருவகிப்பர்..
மலரே!
முளையாகி மொட்டாகி
இதழ்விரித்து அழகு செய்வாய்
மகரந்தத் துகள்களிலே
தேன்குழைத்து இன்சொரிவாய்
பறந்துவரும் வண்டினத்தை
மேல்தாங்கி விருந்தளிப்பாய்
தேனுண்ட வண்டினத்தை
துறந்தும் தனித்திருப்பாய்
அழகான உருத்துறந்து
பிஞ்சாகிக் காயாகி
அவையே நீயாகி
அடுத்த சந்ததிக்காய்
உன்னை நீமறைப்பாய்
எனினும்
சந்திப் பெருக்கத்துள்
நீயே அகத்திருப்பாய்!
மலரே!
நீ பெண்தானே?! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kuruvikal - 11-09-2004

சந்ததி தருவதற்காய்
மங்கைதனை மலரென்றால்
காண்டாமிருகமும் தான்
சந்ததி தருகிறது
அதையும் மலரென்று விளிப்பரோ...?!
மலருக்கும் வேண்டும் அழகு
வண்டுகள் கவிர்ந்திழுக்க...
மலருக்கோ பாஷை மெளனம்
மாந்தருக்கு அதுவோ நிலை..???!
நினைத்தது போல் நிலைக்குநிலை
கதை பேசி வசீகரிக்க
வாய் பிளந்து வழிந்து செல்லும்
தறிகெட்ட ஆடவர் கூட்டம்...!
மங்கை வஞ்சித்து வீழ்த்துபவள்
மலர் வஞ்சகம் அறியா
வாசனை கொண்டு கவர்பவள்
மலருக்கும் மங்கைக்கும்
இதுபோதும்
வைக்க ஒரு இடைவெளி....!


- kavithan - 11-09-2004

kuruvikal Wrote:கவிஞனே....
மலர் எனக்கு
அழகு கொடை
அழகழகாய்
சந்ததி தந்திட
சத்தியமாய் அது
எனக்குத் தேவை....!

மங்கை அவளுள்
அழகு திமிர்..!
அவள் கொண்டது
இரு இதழ் அல்ல
சொல் கொண்டு கொட்டும்
நச்சுக் கொடுக்குகள்...!
கண்ணி வைத்து
பறந்து திரியும் அவள்
கூந்தலுக்குள்
ஏன் சிக்கியது உன் கண்கள்..??!
வஞ்சகி அவளிடத்தில்
நான் அனுபவித்தேன்
கொடுங்கோல் சிறை
உடல் வாடி அழகொடிந்து
உயிர் வீழும் வரை....
உனக்கும் வேண்டுமோ அக்கதி...!

இளைய கவியே....
நீ பழைய பஞ்சாங்கமல்ல
பழைய பல்லவி பாட...!
புரட்சி உலகம் படைக்க
புறப்பட்ட வரிப்புலி...!
வஞ்சியவள் மெய்யழகில்
மெய் மறந்து உளறாதே
மெய்யாய் நீயும் வீழ்வாய்
பாதாளச் சிறையில்
பறிபோகும் உன்
அழகு சுதந்திரம்....!
பருவ மயக்கத்தில்
பரத்தை அவள் பொய்யழகில்
தடக்கி விழாதே...!

மலர் நான்
மங்கையிடம்
கண்ட உண்மை
உன் கவிக்கு பரிசாய்
தருகின்றேன்
கற்றுத் தேறிக்கொள்
தவறுகள் தொடராதே
இன்றே திருத்திக் கொள்.....!



சத்தியமாய் அது வேறை
இது என் மலர் குருவியே

எல்லா மங்கையும்
திமிர் பிடித்தவர்களா...?
இதழ்கள்
நச்சு கொடுக்குகள்
சிலருக்கு
ஆனால் பலருக்கு
இனிய தேன்
பருகும் கிண்ணத்தின்
விளிம்புகளாம்..!
ஏன் பூக்களில்
கூட நச்சு பூக்கள்
இருக்கிறதாமே..!
கண்ணி வைத்தா
இருகிறாள் கூந்தலில்
தெரியாமல் போய் விட்டது
ஆனாலும்
சிக்கவில்லை
என் கண்கள்
அவள் கூந்தலில்
என் கண்கள் சிக்கியது
அவள் சூடி இருந்த
மலரில்.
அப்படியே
சுட்டுவிட்டேன்
அம்மலரை
அதனால் தான்
மலரிடம் கேள்வி எழுப்பி
களத்திலும், குடிலிலும்
இட்டுவிட்டேன்
அதுவும் பதில் சொல்லுது
எனவே
என் மலர் பேசுது
ஜ லவ் யூ என் பூவே.
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- kavithan - 11-09-2004

Quote:வானத்தை நோக்கிப் பறக்கும்
குருவிகளே!
கொஞ்சம் கிளைக்கு வாருங்கள்!
மலர்கள் தந்த கனியிருக்கு
நீங்கள் பசியாற!

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
கனிவாக கூப்பிடுகிறார்.. போனீர்களா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- kavithan - 11-09-2004

kuruvikal Wrote:மலரோடு இருக்கு
வாடாத நேசம்
அவள் அழகே
ஆண்டவன் எமக்காய்
அருளியதல்லோ....
வானில் பறக்க முதலாய்
அவள் இதழ் புகுந்து
கூடிக் களித்து
கூத்தடித்தது....
குருவிதன் உடலோடொட்டிய
மணத்தோடு மகரந்தம் வரை
சாட்சியாய்....!
கனிக்காய் காத்திருப்பு
காலம் தாழ்தலல்லோ....! :wink:

மலருக்குள் இல்லா
சங்கதிகள் மங்கைக்குள்...?????!
மறந்தும் புலம்பாதீர் பாவலரே
மங்கை ஒருக்காலும் மலராகாள்
அவளுக்குள் உள்ளதெல்லாம்
மலரின் குணமல்ல
மலர் தாங்கும்
காம்பொடு முள்ளின் குணம்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

உங்கள்
அம்மா குருவியை
கேட்டு பாருங்கள்
அழகாக சொல்வா
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- kuruvikal - 11-09-2004

கவிஞரே....
மங்கைக்குள்
மலரும் இல்லை இதழும் இல்லை
மதுவும் இல்லை தேனும் இல்லை
ஏன் உமக்கு இந்தப் பித்தலாட்டம்...!
உமக்கொரு உபதேசம்
கியுமன் அனொட்டொமியும்
பிசியோலஜியும்
புத்தகத்தைப் புரட்டிப்பாரும்
அதுகண்டும்
புத்தி தெளியவில்லை என்றுணரின்
நிச்சயம்
காணும் ஒரு வைத்தியரை....!

இன்றேல்...
மலரை மலராய் வையும்
அதன் அழகுதனை மங்கைக்குள்
உவமை வைத்து உருவழிக்காதீர்...!
மங்கைக்குள் மலரை
கலப்படம் செய்தல்
இன்று முதல் கடுங்குற்றம்....!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: