Yarl Forum
பெண்களின் உளவியல் விளையாட்டு முதல் பத்து...! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37)
+--- Thread: பெண்களின் உளவியல் விளையாட்டு முதல் பத்து...! (/showthread.php?tid=6248)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11


பெண்களின் உளவியல் விளையாட்டு முதல் பத்து...! - kuruvikal - 12-09-2004

<b>10.</b> காத்திருக்கும் விளையாட்டு: அவளை அழைத்தீர்கள், அவள் இல்லையென்றதால் திரும்ப அழைக்கச் சொல்லி செய்தி அளித்தீர்கள், ஆனால் பதில் வராமல் இருக்கிறது.

எதனால்: அவளுக்கு உங்களைப் பிடிக்கிறது, ஆனால் உங்களைத் தொடர்பு கொள்ள மிகுந்த ஆவலாக இருப்பதைப் போல் அவள் காட்டிக் கொள்ள விரும்பவில்லை. எனவே காத்திருக்கிறாள்.

நீங்கள் செய்ய வேண்டியது: ஓரளவு நேரம் கழிந்த பிறகு மீண்டும் அழைத்து, அவளுக்கு செய்தி கிடைத்ததா என்று உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அதற்குப் பிறகும் பதில் இல்லையென்றால் புரிந்து கொண்டு விலகி விடுங்கள்.

<b>9.</b> தூண்டில் விளையாட்டு: "நான் இந்த டிரஸ்ல கொஞ்சம் குண்டாத் தெரியறேன்.. இல்லையா?" என்பது போன்ற கேள்விகளைக் கேட்கிறாள்.

எதனால்: உங்கள் கருத்து அவளுக்கு முக்கியம் என்பதாகக் காட்டிக் கொள்ளும் அதே நேரத்தில் அவளது கருத்தை ஒப்புக் கொள்கிறீர்களா அல்லது மறுக்கிறீர்களா என்பது போல் கேள்வியை அமைத்து எப்படி பதில் சொல்வது என்று புரியாத சிக்கலில் உங்களை ஆழ்த்தி விடுகிறாள்.

நீங்கள் செய்ய வேண்டியது: கவனமாக இருக்க வேண்டும். தூண்டிலில் அகப்பட்டு விடக் கூடாது. பதில் சொல்ல ரொம்ப யோசிக்கக் கூடாது. "அப்படியெல்லாம் இல்லையே, நீ அழகாத் தான் இருக்கிறே" என்பது போல் பதில் சொல்லுங்கள். உள்ளூர மகிழ்ந்தாலும், "சும்மா பொய் சொல்றே" என்று உங்களை மேலும் டபாய்ப்பாள். உறுதியாக, "நீ எது போட்டாலும் என் கண்ணுக்கு அழகாத்தான் தெரிவே" என்று சொல்லித் தப்பித்துக் கொள்ளுங்கள்.

<b>8.</b>'எனக்கு அதெல்லாம் தெரியாது' விளையாட்டு: உங்களை ஒரு வேலையைச் செய்ய வைக்க "எனக்கு அதெல்லாம் செய்யத் தெரியாது, நீயே செஞ்சிடேன்" என்று சொல்வாள்.

எதனால்: அவளுக்கு அது தெரிந்து தான் இருக்கும். ஆனால் செய்வதற்குப் பிடிக்காமலோ அல்லது சோம்பேறித்தனத்தினாலேயோ அப்படிச் சொல்வாள். உதாரணமாக வீட்டு கணினியில் ஒரு புதிய மென்பொருளை நிறுவுவது.

நீங்கள் செய்ய வேண்டியது: ரொம்பப் பெரிய வேலைகளாக இருக்காது என்பதால் ரொம்ப முணுமுணுக்காமல் நீங்களே செய்து விடுவது நலம். இருந்தாலும் செய்யும் போது அவளை அழைத்து வைத்துக் கொண்டு கற்றுத் தர முயற்சிக்கலாம். அடுத்த தடவையாவது தப்பிக்கப் பார்க்கலாம்.

<b>7.</b> 'கேட்பது கிடைக்காது' விளையாட்டு: நீங்கள் எதைக் கேட்கிறீர்களோ (வேறு எது, எல்லாம் அது தான்), அது கிடைக்காதபடிக்குப் போக்குக் காட்டிக் கொண்டிருப்பாள்.

எதனால்: தன்னை உங்களுக்கு ஒரு சவாலாக முன்னிறுத்துவது மட்டும் அவளது நோக்கமாக இருக்காது. நீங்கள் அவளுக்காக எவ்வளவு தூரம் மெனக்கெடுகிறீர்கள் என்று அறிந்து கொள்ள ஆவல் இருக்கலாம்.

நீங்கள் செய்ய வேண்டியது: அவளுக்காக இயன்றதைச் செய்யுங்கள். செய்ய இயலுபவற்றைப் பற்றிச் சொல்லுங்கள். வார்த்தைகளை விட காரியம் அதிகம் "பேசும்" என்பதை நினைவில் கொள்ளவும்.

<b>6.</b> 'ஒரு முக்கியமான விஷயம் பேசணும்' விளையாட்டு: நீங்கள் உங்களுக்கு மிகப் பிடித்தமான கிரிக்கெட் விளையாட்டை டி.வி.யில் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கும் போது, "உன் கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்" என்று வந்து நிற்பாள்.

எதனால்: உங்களுக்கு அவளா, விளையாட்டா, எது முக்கியம் என்று சோதனை செய்கிறாள். அவளுக்கு எந்த வித சூழ்நிலையிலும் உங்களுடைய முழு கவனம் கிடைக்கிறதா என்று சோதிக்கிறாள்.

நீங்கள் செய்ய வேண்டியது: ம்யூட் பட்டனை ஐந்து நிமிடம் அழுத்தி விட்டு ஒழுங்கு மரியாதையாக அவள் சொல்வதைக் கேளுங்கள். மாறாக, "அப்புறம் பேசலாமே" என்றெல்லாம் ஜல்லியடிக்க நினைத்தால் டி.வி.யை முழுவதுமாக அணைத்து விடவும். அடுத்த ஐந்து மணி நேரத்துக்கு உங்களுக்கு திட்டு விழப் போகிறதே, கேட்க வேண்டாமா?

<b>5.</b> 'சேவைகளுக்கு விலையாக பொருட்கள்' விளையாட்டு: அவளுக்குப் பிடிக்காத சில சேவைகள் அவளிடமிருந்து எதிர்பார்க்கப்படும்போது ஏதாவது பொருள் வேண்டுமென்று கேட்பாள். "ஊர்ல இருந்து எங்கம்மா கண் ஆப்பரே்ஷன் செஞ்சுக்க வர்றாங்க" என்று நீங்கள் சொல்லும் போதே இதை எதிர்பார்க்கத் துவங்கி விடலாம்.

எதனால்: இதற்கெல்லாம் 'எதனால்' சொல்லிக் கொண்டிருக்க முடியாது. இது பெண்களுக்கு மட்டும் உரியதல்ல, மனித சுபாவம்.

நீங்கள் செய்ய வேண்டியது: 'காரியம் ஆகவேண்டுமானால் கழுதையின் காலைக் கூடப் பிடித்துத் தான் ஆக வேண்டும்' என்பது தமிழ்ச் சமுதாய ஆன்றோரின் முதுமொழி. அவ்வப்போது இது போன்ற கோரிக்கைகளை நிறைவேற்றுவதைத் தவிர வேறு வழி இல்லை. ஆனால் இதை அடிக்கடி செய்து பழக்கப்படுத்தி விடாமல் இருப்பது உங்கள் சாமர்த்தியம்.

<b>4.</b> எதிர்மறை உளவியல் விளையாட்டு: அவளுக்கு என்ன வேண்டுமோ அதைச் சொல்லாமல், அதற்கு நேரெதிராக ஒன்றைச் சொல்வாள். அப்புறம் நாம் அதைச் செய்யாமல் விட்டதற்குக் கோபித்துக் கொள்வாள். உதாரணமாக, 'வீட்டை இன்னிக்கு நான் சுத்தம் செஞ்சுடறேன்" என்று சொல்வாள். இதன் அர்த்தம், 'நீ சுத்தம் செஞ்சுடு' என்பது ஆகும். அது புரியாமல் நாம் ஹாயாக பேப்பர் வாசித்துக் கொண்டிருந்தால், 'ஏன் வீட்டை சுத்தம் செய்யலை?' என்று திட்டு விழும். குழப்பமாக இருக்கிறதா? என்ன செய்வது, ஆண்டவன் அப்படித்தான் படைத்துத் தொலைத்திருக்கிறான்.

எதனால்: இது எதனால என்று அறியப்படவில்லை. It is a given.

நீங்கள் செய்ய வேண்டியது: அவள் எதிர்மறை உளவியல் விளையாட்டை விளையாடினால் அநேகமாக நீங்கள் தோற்றுப் போவீர்கள். நீங்கள் செய்யாமல் விட்ட வீடு சுத்தம் செய்யும் காரியத்தை அவள் எந்த அளவு முணுமுணுப்புடன் செய்து முடிக்கிறாள் என்பதைக் கவனித்து, ஒத்தாசைக்குப் போங்கள். வேறொன்றும் செய்வதற்கில்லை.

<b>3.</b> 'மனசில் இருப்பதைக் கண்டுபிடி' விளையாட்டு: இது எதிர்மறை உளவியல் விளையாட்டைப் போன்ற மற்றொரு வடிவம்.அவள் மனசில் இருப்பதை அவள் சொல்லாமல் கண்டுபிடிக்குமாறு கேட்பாள்.

எதனால்: அவளை நீங்கள் உண்மையாக நேசித்தால் அவள் மனசில் இருப்பதெல்லாம் உங்களுக்குத் தெரிய வேண்டும் என்பது அவளது எதிர்பார்ப்புக்கான லாஜிக். என்ன எழவு லாஜிக்கோ!

நீங்கள் செய்ய வேண்டியது: இதுவா, அதுவா என்று இஷ்டத்துக்கு எதையாவது சொல்ல ஆரம்பிக்கும் முன், ஓரளவு, "என்னம்மா வேணும், உன்னை சந்தோஷமா வச்சுக்கறது தானே எனக்கு எப்பவும் முதல் கடமை" என்று கொஞ்சம் தாஜா செய்து வைப்பது உதவும்.

<b>2.</b> மௌன விளையாட்டு: நீங்கள் ஏதோ தப்பு செய்து விட்டதால் உங்களைக் கண்டுகொள்ளாமல், உங்களோடு பேசாமல், கோபத்தால் மௌனமாக இருப்பாள். மௌனமாக இருப்பதால் என்ன தப்பு என்று உங்களுக்கு விளங்காது.

எதனால்: கோபத்தை வெளிப்படுத்துகிறாள். அது உங்களை காயப்படுத்துகிறதா என்றும் பரிசோதிக்கிறாள்.

நீங்கள் செய்ய வேண்டியது: 'ஏன் இப்படி கோபத்தில் இருக்கிறாய்?" என்று திருப்பித் திருப்பி மட்டும் கேட்டுத் தொலைக்காதீர்கள். இரண்டொரு முறை கேட்டு பதில் வரவில்லையா, முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு ஒதுங்கி விடுங்கள். கோபம் கொஞ்சம் குறைந்து நிதானம் அடைந்து, அவள் கண்களிலிருந்து கண்ணீர் வரத்துவங்கும் போதோ, அல்லது அவள் உங்கள் மேல் தலையணையை எறிய ஆரம்பிக்கும் போதோ, அப்போது தான் நீங்கள் உள்ளே நுழைய ஏற்ற தருணம். போய் அணைத்துக் கொண்டு அப்புறம் விசாரணையில் ஈடுபட்டு, தருகின்ற தண்டனையை அமைதியாக ஏற்றுக் கொள்ளுங்கள்.

<b>1.</b> 'இறுதி எச்சரிக்கை' விளையாட்டு: "தீபாவளிக்கு ரெண்டு நாள் முன்னாடி என் கைக்கு அந்தப் பட்டுப் புடவை வரலை, அவ்வளவு தான்" என்பது போன்ற மிரட்டல்கள் இந்த வகையின் கீழ் அடங்கும்.

எதனால்: மிரட்டல் உண்மையாவதற்கும் பிசுபிசுத்துப் போவதற்கும் இணையான வாய்ப்புகள் உண்டு. வெற்று மிரட்டல்கள் அவ்வப்போது கொடுத்து உங்களைக் கட்டுக்குள் வைத்திருப்பது ஒரு மாஸ்டர் ப்ளானின் ஒரு பகுதி.

நீங்கள் செய்ய வேண்டியது: இங்கு என்ன செய்ய வேண்டுமென்பது அவரவர் விருப்பத்துக்கு விடப்படுகிறது. மேல்Kind குழுமம் ஓரளவுக்குத் தான் உங்களின் சொந்த விவகாரத்தில் தலையிட முடியுமென்று ரீஜன்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

நன்றி... http://malekind.blogspot.com/ (தகவல் : சென்னைத் தமிழில் இருக்கிறது)


- kavithan - 12-09-2004

குருவிகளே இவ்வளவு விடையம் இருக்கா.. நமக்கு உந்த லொள்ளு எல்லாம் சரிப்பட்டு வராது...


- kuruvikal - 12-09-2004

ஐயோ... குருவிகளே இப்பதான் உந்தப் பத்தைப் பார்த்தே பதறிப்போய் இருக்குதுகள்... அதுக்க நீங்கள் வேற.... உதுகள் உண்மை என்றால் உதில இருந்து என்ன விளங்குது... உதுகள்... வுமன்... சைக்கோ கேசுகள் எண்டது....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- kavithan - 12-09-2004

குருவிகள் ஏன் பதறனும் .. நீங்கள் பறக்கணும் எல்லா... உண்மைதான் போலை கிடக்கு எனக்கு தெரிந்தவர்கள் சிலர் இப்படி தான்... இருக்கிறார்கள்....


- kuruvikal - 12-09-2004

குருவிகள் தாங்கள் சுதந்திரமாத்தான் பறக்குதுகள்... மனிசருக்கதான் ஆண் பிரசுகள் படும்பாட்டைப் கண்டு பதறிப் போட்டுதுகள்....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

நீங்கள் வேற ஆதாரம் கொடுக்கிறதப் பாத்தா உது சென்னை விட்டு கனடாவிலும் செற்றில் ஆகிட்டுது என்றது போலக் கிடக்கு....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- sOliyAn - 12-09-2004

உலகம் முழுக்கா இதுதான்.. இதுக்கை சென்னை கனடாவெண்டு வயித்தெரிச்சலைக் கிளப்பிக்கொண்டு.. 'உந்த மனுசன் மிண்டுக்கண்டைபோலை இருக்கும்... ஆபத்தந்தரத்துக்கு அதிலை கிடக்கிறதை இதிலை எடுத்துப் போடாது..' இப்பிடி கேட்டுக் கேட்டு.. 'உந்த மனுசனுக்கு' பேரில்லையோ உறவில்லையோ எண்டு ஏங்கி ஏங்கி... உக்கிப்போனமப்பா.. நீங்க என்னடாண்டா பத்தைக் கொண்டந்து பம்மாத்துக் காட்டுறியள்.. பத்தோட முடியுற காரியமே.. பத்தோட பத்தா பத்து மடங்கானாலும் பத்தாதுங்க! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- hari - 12-09-2004

குருவிகளே இவ்வளவு விசயம் இருக்கா??? கட்டாயம் print-out ஒன்று எடுத்து விடிய 4 மணிக்கு எழும்பி பாடமாக்கவேண்டியதுதான்,


- hari - 12-09-2004

முதல் பத்து என்கிறீர்கள் அப்ப என்னும் வருமா???<img src='http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons6/20.gif' border='0' alt='user posted image'>


- tamilini - 12-09-2004

Quote:உலகம் முழுக்கா இதுதான்.. இதுக்கை சென்னை கனடாவெண்டு வயித்தெரிச்சலைக் கிளப்பிக்கொண்டு.. 'உந்த மனுசன் மிண்டுக்கண்டைபோலை இருக்கும்... ஆபத்தந்தரத்துக்கு அதிலை கிடக்கிறதை இதிலை எடுத்துப் போடாது..' இப்பிடி கேட்டுக் கேட்டு.. 'உந்த மனுசனுக்கு' பேரில்லையோ உறவில்லையோ எண்டு ஏங்கி ஏங்கி... உக்கிப்போனமப்பா.. நீங்க என்னடாண்டா பத்தைக் கொண்டந்து பம்மாத்துக் காட்டுறியள்.. பத்தோட முடியுற காரியமே.. பத்தோட பத்தா பத்து மடங்கானாலும் பத்தாதுங்க!
_________________

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- tamilini - 12-09-2004

Quote:எடுத்து விடிய 4 மணிக்கு எழும்பி பாடமாக்கவேண்டியதுதான்,

இதென்ன தேவாரமேய்..?? <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- tamilini - 12-09-2004

Quote:எனக்கு தெரிந்தவர்கள் சிலர் இப்படி தான்... இருக்கிறார்கள்....

நாங்களும் தான் பரத்திருக்கம் கிட்டத்தட்ட இப்படி மனநிலை படைத்த ஆண்களை...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Danklas - 12-09-2004

«¼ À¡Å¢¸Ç¡??? ´Õ "¸Ø¾¨ƒ" Á¼ìÌÈÐìÌ þùÅÇ× ¸Š¼ôÀ§¼¡ÛÁ¡?? ¿¡ý ±øÄ¡õ þùÅÇ× ¸Š¼ôÀ§¼øÄ ±øÄ¡õ þó¾¢Â¡×ìÌ §À¡É¡ø «í¸ º¡Á¢Â¡÷ §Å¼ò¾¢Ä ¸É §À÷ ¸É §Å¨Ä À¡÷츢Éõ «í§¸ §¸ð¼¡ø ²øÄõ ºÃ¢ ÅóÐÎõ.. «¾¡ý «Êì¸Ê ´ÎÈý ¦¾Ã¢Ôõ ¾¡§É?? <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> 8)


- Danklas - 12-09-2004

hari Wrote:குருவிகளே இவ்வளவு விசயம் இருக்கா??? கட்டாயம் print-out ஒன்று எடுத்து விடிய 4 மணிக்கு எழும்பி பாடமாக்கவேண்டியதுதான்,


±ýÉ ¸Ã¢! þ¨¾ Ó¾§Ä ¦¾Ã¢Â¡¾ ¬û Á¡¾¢Ã¢ ¿Ê츢Ȣ¡û???
¿¡§É ¯í¸Ç¢ð¼¾¡§É ÀÊîºÁ¡Ã¢ ¿¢¨É× þÕìÌ?? ±ÐìÌõ ¯í¸¼ ¦ÀÂ¨Ã ÓØº¡ ¦º¡øÖí¸?? º¢ÄÐ §È¡í ¦À÷ºÉ þÕìÌõ... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- kuruvikal - 12-09-2004

tamilini Wrote:
Quote:எனக்கு தெரிந்தவர்கள் சிலர் இப்படி தான்... இருக்கிறார்கள்....

நாங்களும் தான் பரத்திருக்கம் கிட்டத்தட்ட இப்படி மனநிலை படைத்த ஆண்களை...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

நீங்க என்ன தான் பார்க்காமல் விட்டிருக்கீங்க...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:


- kuruvikal - 12-09-2004

sOliyAn Wrote:உலகம் முழுக்கா இதுதான்.. இதுக்கை சென்னை கனடாவெண்டு வயித்தெரிச்சலைக் கிளப்பிக்கொண்டு.. 'உந்த மனுசன் மிண்டுக்கண்டைபோலை இருக்கும்... ஆபத்தந்தரத்துக்கு அதிலை கிடக்கிறதை இதிலை எடுத்துப் போடாது..' இப்பிடி கேட்டுக் கேட்டு.. 'உந்த மனுசனுக்கு' பேரில்லையோ உறவில்லையோ எண்டு ஏங்கி ஏங்கி... உக்கிப்போனமப்பா.. நீங்க என்னடாண்டா பத்தைக் கொண்டந்து பம்மாத்துக் காட்டுறியள்.. பத்தோட முடியுற காரியமே.. பத்தோட பத்தா பத்து மடங்கானாலும் பத்தாதுங்க! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

குருவே நீங்க சொன்னாச் சரியாத்தான் இருக்கும்...அப்ப நொந்து நூலாகிட்டீங்க என்றீங்க....! :wink:


- tamilini - 12-09-2004

இப்படி ஆண்களில் எத்தனை உளவியல் விளையாட்டு இருக்கு.. அதை ஒருவரும் ஆராய்ச்சி செய்வதில்லை...?? ஏன் என்று தெரியவில்லை.. அதை விட இவர்களுக்கெல்லாம் அப்படி என்ன அவசியம் வந்திச்சு பெண்களை இப்படி எல்லாம் ஆராய்ச்சி பண்ண...??? பெண்களை ஆராய்ச்சி பண்ணுறதும் அவர்கள் தான்.. விளம்பரம் பண்ணுறதும் அவர்கள் தான்.. எல்லாம் அவர்கள் செய்ய பாவம் பெண் பிறப்புகள்... அவர்களுக்கு தெரியாது சில விடயங்களையும் இந்த ஆராய்ச்சிகள் சொல்லுது...?? இப்படி எல்லாம் ஆண்கள் செய்ய காரணம்.. :?: எவனாவது.. தாயை ஆராய்ச்சி பண்ணி தாய்மையை பற்றி ஆராய்ச்சி பண்ணியிருக்கானா..?? பெண்ணுக்குள் அது அடக்கம் என்று சொல்லுவியளே..?? :twisted:


- kuruvikal - 12-09-2004

வெளிப்படைகளை ஆராய்வது முட்டாள் தனம்... ஆண்கள் முட்டாள்கள் இல்லை....! விரும்பினால் பெண்கள் அப்படி இருக்கலாம்...! தாய்மை மட்டுமல்ல... பெற்றோர் பரிகரிப்பென்பது உயிரிக்குப் பொது...அது பெண்களுக்கு ஒன்றும் விசேடம் அல்ல....! Idea


- hari - 12-09-2004

tamilini Wrote:
Quote:எடுத்து விடிய 4 மணிக்கு எழும்பி பாடமாக்கவேண்டியதுதான்,

இதென்ன தேவாரமேய்..?? <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
வாழ்க்கை என்ற பரீட்சையில் சித்தி பெறவேண்டுமே! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- hari - 12-09-2004

Danklas Wrote:
hari Wrote:குருவிகளே இவ்வளவு விசயம் இருக்கா??? கட்டாயம் print-out ஒன்று எடுத்து விடிய 4 மணிக்கு எழும்பி பாடமாக்கவேண்டியதுதான்,


±ýÉ ¸Ã¢! þ¨¾ Ó¾§Ä ¦¾Ã¢Â¡¾ ¬û Á¡¾¢Ã¢ ¿Ê츢Ȣ¡û???
¿¡§É ¯í¸Ç¢ð¼¾¡§É ÀÊîºÁ¡Ã¢ ¿¢¨É× þÕìÌ?? ±ÐìÌõ ¯í¸¼ ¦ÀÂ¨Ã ÓØº¡ ¦º¡øÖí¸?? º¢ÄÐ §È¡í ¦À÷ºÉ þÕìÌõ... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
என்ன சொல்கிறீர்கள் மான்புமிகு டக்ளஸ் அவர்களே, நீங்கள் நினைக்கும் நபர் நான் அல்ல. நீங்கள் தவறாக நினைத்துவிட்டீர்கள், இந்த சமாச்சரங்களில் நான் பால்குடி :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- kavithan - 12-10-2004

tamilini Wrote:
Quote:எனக்கு தெரிந்தவர்கள் சிலர் இப்படி தான்... இருக்கிறார்கள்....

நாங்களும் தான் பரத்திருக்கம் கிட்டத்தட்ட இப்படி மனநிலை படைத்த ஆண்களை...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

அப்படியா.. ஒரு சிலரை ஆனால் பெண்கள்........?