Yarl Forum
அன்பின் கிரீடம்...! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: அன்பின் கிரீடம்...! (/showthread.php?tid=6185)

Pages: 1 2 3


அன்பின் கிரீடம்...! - kuruvikal - 12-14-2004

<img src='http://kuruvikal.yarl.net/archives/crown.jpg' border='0' alt='user posted image'>

அது ஒரு உலகம்
அங்கு...
அன்பின் அடையாளம்
அன்னை
பண்பின் அடையாளம்
தந்தை
பாசத்தின் அடையாளம்
உடன் பிறந்த உறவுகள்
நேசத்தின் அடையாளம்
சூழ இரு சுற்றம்
இத்தனையும் குறைவிலா
வாழ்வு வாழ்ந்திட...
கருணையது
மனிதனைச் சிறப்பிக்க
அன்பது கோலோஞ்ச
இறை எனும்
ஞானம் வழிகாட்ட
மனிதன் அறிவு வளர்த்து
பகுத்தாய்ந்து
மானுடம் கொண்டு
மாண்புடன் வாழ்ந்தான்....!

இன்று அந்த உலகில்...
அன்னைக்குரியவள்
அன்பு தொலைத்து
அலையும் விலங்கானாள்
பண்புக்குரியவன்
பாவியாகி பரிதவிக்கிறான்
பாசத்து உறவுகள்
பஞ்சமா பாதகங்கள் புரிய
சூழ இரு சுற்றம்
குற்றம் இரு சுற்றமாச்சு....!
கருணை சுருக்கில் தொங்க
அன்பு அடைக்கப்பட்டு
கொடுங்கோலாட்சி நடக்குது...
இறை ஞானம் மறந்து
மனித ஆணவம்
விஸ்வரூபம் எடுக்குது...
மெஞ்ஞானம் போய்
அஞ்ஞானம் வளருது....
அறிவுக்கு வேலை போய்
ஆயுதத்துக்கு வேலை கொடுத்தாச்சு....
ஆக்கம் போய் அழிவு
விளைவாச்சு....!

இவை கண்டு
அன்பின் முதல்வன்
அனுப்பி வைத்தான்
தன் புதல்வன்...!
மானிலத்தில்
அன்பு ஆட்சி செய்ய...
மானுடம் மரிக்காது
மனித மனங்கள் கொண்ட
மாசறுத்து மனுநீதி வளர்த்து
மனிதனை மாண்பு கொண்டு
சிறப்பிக்க....!

ஆனால்....
பாவத்தின் விதி வலைக்குள்
சிக்கிவிட்ட மானிடன்
அன்பின் அர்த்தம் புரியா
விலங்கினும் கொடிய மிருகமாய்....
அன்பின் தூதனை
முட்கிரீடமிட்டு
குருதியால் பூஜித்தான்...!
அதன் பலனாய்
இன்றும் இதயத்துள் அன்பின்றி
முட்களைச் சுமக்கிறான்
அன்பு அர்த்தமற்றதாய்
அவனை அழிக்கிறது....
பாவ வலைக்குள்
மீளமுடியாச் சிக்கலில்
அவன் ஆயுள் முடியும் வரை....!

மனிதா..
உனக்கொரு ஆறுதல் வார்த்தை....
காதில் விழுந்தால் பற்றிக் கொள்
கவலை விடு...
பாவத்தின் வலைக்குள்
சிக்கலுக்குள்
நீ பரிதவிப்பது உணரின்
இன்னும் இருக்கு
மீட்சிக்கு வழி
உணர்ந்து கொள்....!
அன்புக்கு அன்று
நீ முட்கிரீடமிட்டாய்
இன்று
அன்பு முட்கிரீடமாய்
உனக்கு...!
நீ செய்த
பாவத்தின் விளைவு களைந்து
அன்பை அரவணைக்க வேண்டின்
அணிந்து கொள்
இக் கிரீடம்...!
முள்ளானாலும்
உன் இதயம் கிழித்தாயினும்
மீண்டும் உன்னுள்
அன்பு மலர வைக்கும்....!

நன்றி.. http://kuruvikal.yarl.net/


- tamilini - 12-14-2004

கவிதை அருமையாக இருக்கிறது... நல்ல நேரத்தில் நல்ல கவிதை.. வாழ்த்துக்கள்..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- KULAKADDAN - 12-14-2004

கவிதை தொடர வாழ்துகள்


- ஊமை - 12-14-2004

நல்ல கவிதை குருவி...... நன்றி

ஊமை


- hari - 12-15-2004

அருமையான கவிதை, வாழ்த்துக்கள் குருவிகளே! உங்கள் சிந்தனை ஆற்றல் வியக்கத்தக்கது! உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்!


- kavithan - 12-15-2004

வித்தியாசமான ஒரு கவிதை.. வாழ்த்துக்கள் குருவிகளே


- வெண்ணிலா - 12-15-2004

குருவியண்ணா கவிதை சூப்பர்


- kuruvikal - 12-15-2004

வாழ்த்துச் சொன்னீங்க சரி... நன்றி...! இப்ப உங்க மனச்சாட்சிகளைத் தொட்டுக் கேளுங்க... உங்களில எத்தின பேரின் இதயத்தில உண்மையா எதிர்பார்ப்பில்லாம மற்றவர்கள் மீது பொழிய அன்பிருக்கென்று....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea


- tamilini - 12-15-2004

சாத்தியமாய் நாங்கள் ஆரிட்டையும் எந்த எதிர்பார்ப்புடனும் பழகிறதில்லை.. அன்பு செலுத்திறதில்லை... அம்மா அப்பா.. சகோதரங்கள் தவிர.....! :wink: Idea


- kuruvikal - 12-15-2004

tamilini Wrote:சாத்தியமாய் நாங்கள் ஆரிட்டையும் எந்த எதிர்பார்ப்புடனும் பழகிறதில்லை.. அன்பு செலுத்திறதில்லை... அம்மா அப்பா.. சகோதரங்கள் தவிர.....! :wink: Idea

அப்ப உங்களுக்கு உண்மையில இதயமே இல்ல... சும்மா அப்பா அம்மா சகோதரம் அன்பு என்றது சாட்டு... அவர்களைக் கண்டு கேட்க யார் இருக்கினம் என்ற எண்ணத்தில வார பொய்க்கதை உது...!

இறைவனை நம்பும் நீங்கள் அவன் அன்பின் வடிவம் என்பதை அறியாமல் அதாவது அன்பு கூட ஒரு நிலைச் சக்தி....அது மட்டுமே உயிரிக்கு உயிரி உணர்வுகளால் பரிமாறத்தக்கது... என்பது அறியாமல்... எப்படிங்க அப்பா அம்மாவுக்கு அன்பு செலுத்துவீங்க....

சரி ஒன்றும் வேணாம் நீங்க எப்படி உங்க அப்பா அம்மாவில அன்பு செலுத்துறீங்க.. கடவுள் கூட மனிதனை அணுகித்தான் அன்பு செலுத்தினார்...நீங்க தூர இருந்தே செலுத்துவீங்களோ....கடவுள வென்றாக்கள் பாருங்க கதையளக்கிறதில...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: Idea


- KULAKADDAN - 12-15-2004

அருகிலிக்கும் பொது பொிதாக தொியாது, இடம் விட்டு இடம் பெயா்ந்தபின் உறவும் அதன் அன்பும் தேவைபடும் அதிகமய்


- kuruvikal - 12-15-2004

KULAKADDAN Wrote:அருகிலிக்கும் பொது பொிதாக தொியாது, இடம் விட்டு இடம் பெயா்ந்தபின் உறவும் அதன் அன்பும் தேவைபடும் அதிகமய்

தேவைப்படும்... கிடைக்காதே...! :roll: Cry


- tamilini - 12-15-2004

Quote:அப்ப உங்களுக்கு உண்மையில இதயமே இல்ல... சும்மா அப்பா அம்மா சகோதரம் அன்பு என்றது சாட்டு... அவர்களைக் கண்டு கேட்க யார் இருக்கினம் என்ற எண்ணத்தில வார பொய்க்கதை உது...!

குருவிகள் அன்பு எனகிறது நாலு பேர் நான் அன்பு வைச்சிருக்கன் என்று புரிந்து கொள்வதற்காக வாறது அல்ல.. மற்றவர்கள் எம்மேல அன்பு சொலுத்த வேண்டும் என்று.. நாங்கள் எதிர்பார்க்க முடியாது.. நம்மாலான அன்பை மற்றவர்களிற்கு நாம் சொலுத்தனும்.. ஆனால் ஒரு அப்பா அம்மாவிடம் கண்டிப்பா ஒரு பிள்ளை அன்பை எதிர் பார்க்கும் அதில தப்பு கிடையாது.. நான் என் அப்பா அம்மா சகோதரங்கள் மேல அன்பு வைத்திருக்கேன் என்றால் அதை.. எழுதி ஒட்டிக்கொண்டிருக்க வேண்டிய அவசியம் கிடையாது.. எனக்கு வேண்டிய ஒரு உயிருக்கு.. ஏதாவது என்றால்.. என் உள்ளம் படுற பாட்டைப்பாத்தே புரிஞ்சு கொள்ளலாம் அன்பின் அடையபளத்தை இது மற்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது...! இப்படி மற்றவர்கள் புரிஞ்சு கொள்ள வேணும் என்று வெளிக்கிட்டால் அங்க அன்பிராது.. வெறும் வேசம் தான் இருக்கும்.......!
Quote:சரி ஒன்றும் வேணாம் நீங்க எப்படி உங்க அப்பா அம்மாவில அன்பு செலுத்துறீங்க.. கடவுள் கூட மனிதனை அணுகித்தான் அன்பு செலுத்தினார்...நீங்க தூர இருந்தே செலுத்துவீங்களோ....கடவுள வென்றாக்கள் பாருங்க கதையளக்கிறதில...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

இங்க நம்ம தமிழ் சனம் இருக;கில்ல.. இங்க இருகிற அனேகர் அம்மா அப்பாவை பிரிஞ்சி தான் இருக்கினம்.. அப்ப அவர்கள் எல்லாம் அனgpல்லாமலா இருக்கிறார்கள்.... உண்மையா கு}டிய பாகமானவர்கள் தங்கள் குடும்பத்திற்காக தான் பிரிஞ்சிருக்கார்... பிசிஞ்சவுடன் மறந்து போனவர்களும் இருக்கார்கள்.... நீங்கள் ஒன்றைப்புரிஞ்சு கொள்ள வேணும்.. அன்புக்கு பிரிவு ஒரு தடையில்லை.. எங்கிருந்தாலும் அன்பு வளரும்.. சரியா....!

Quote: இறைவனை நம்பும் நீங்கள் அவன் அன்பின் வடிவம் என்பதை அறியாமல் அதாவது அன்பு கூட ஒரு நிலைச் சக்தி....அது மட்டுமே உயிரிக்கு உயிரி உணர்வுகளால் பரிமாறத்தக்கது... என்பது அறியாமல்... எப்படிங்க அப்பா அம்மாவுக்கு அன்பு செலுத்துவீங்க....
சத்தியமாய்.. கடவுள் மேல எமக்கு இப்ப அவ்வளவாய் நம்கிக்கையில்லை இருந்தாலும் நம்மால் முடிஞ்ச வரை.. மற்றவர்களை துன்புறுத்த கு}டாது.. அன்பாய் இருக்க தான் நாங்கள் முயலுறம்.. அதை மாதிரி மற்றவர்கள் அந்த அன்பை நமக்கு திருப்பி செலுத்த வெண்டும் என்று நாம் எதிர்பார்ப்பது இல்லை யசரியா.....???


- kuruvikal - 12-15-2004

இதில நீங்க தவறாக அன்பை அர்த்தப்படுத்துறீங்க தமிழினி...அன்பு வேற உங்கள் உறவுகள் மேல உள்ள ஆசை அக்கறை பாசம் ஏன் நேசம் கூட வேற பரிமானம் உடையவை... அன்பு எல்லோருக்கும் பொதுவானது...இப்ப தெருவில போற ஒரு ஆள் மீதும் அன்புகாட்டலாம் அது தவறல்ல... அங்கு உங்கள் புனிதமும் அவனின் புனிதமும் பாதுகாக்கப்படும்..ஆனால் அன்பு மட்டும் பரிமாறப்படும்... ஆனால் அதற்கு பிரதிபலன் எதிர்பார்க்கக் கூடாது அதுதான் அன்பு.... அது மனிதனுக்குப் பொது தமிழனுக்கு என்றில்லை....!

எதிரிக்கும் அன்பு காட்டத்தான் வேண்டும் காரணம் அவன் மனிதன் என்பதால் எங்களைப் பொறுத்தவரை நாங்க கடவுள் இல்லை... அன்பே உருவாக விளங்க....ஆனால் இயன்றவரை எல்லாவற்றிலும் அன்பு செலுத்துவோம் அதற்காக மற்றவர்களை நம்ப வேண்டும் என்றில்லை... ஜேசுவுக்கு கூட தனது கூட்டத்தில் இருக்கும் ஒருவன் தன்னைக் காட்டிக் கொடுப்பான் என்ற உண்மை தெரியும்...அவன் யார் என்றும் தெரியும்...ஆனால் அவர் இறுதி வரை அவன் மீது அன்பு செலுத்தினார்...! காரணம்...அவன் மனிதன்... அன்பை புரிந்து கொள்ளக் கூடியவன் என்ற நிலையைக் கொண்டவன் என்று கருதியதால்...!
இது எதைக்காட்டுகிறது மற்றவர்கள்/மற்றவை மகிழ்ந்திருக்க அன்பை உணர்ந்திருக்கப் எங்களால் இயன்றதை செய்ய வேண்டும்... அன்பால் செய்ய வேண்டும் என்பதையே...! எங்களைப் பொறுத்த வரை அன்புக்கு தவறான விளக்கம் எடுக்கப்பட்டு ஆபத்து என்றால் விலகிக் கொள்வோம்...ஆனால் ஒன்று... அன்பின் உண்மையான பெறுமதி தெரியாத இடத்தில் கூட அன்பு செலுத்தப்படுதல் அவசியம்... அவர்களும் அன்பைப் புரிந்துகொள்ள அவகாசம் அளிக்கும் முகமாக....ஆனால் அதற்கு ஒரு எல்லை இருக்கு....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea


- tamilini - 12-15-2004

Quote:இயன்றவரை எல்லாவற்றிலும் அன்பு செலுத்துவோம் அதற்காக மற்றவர்களை நம்ப வேண்டும் என்றில்லை

Quote:எங்களைப் பொறுத்த வரை அன்புக்கு தவறான விளக்கம் எடுக்கப்பட்டு ஆபத்து என்றால் விலகிக் கொள்வோம்...
Idea

இதைத்தான் நாங்கள் சொல்லுறம்.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kuruvikal - 12-15-2004

tamilini Wrote:
Quote:இயன்றவரை எல்லாவற்றிலும் அன்பு செலுத்துவோம் அதற்காக மற்றவர்களை நம்ப வேண்டும் என்றில்லை

Quote:எங்களைப் பொறுத்த வரை அன்புக்கு தவறான விளக்கம் எடுக்கப்பட்டு ஆபத்து என்றால் விலகிக் கொள்வோம்...
Idea

இதைத்தான் நாங்கள் சொல்லுறம்.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

அதையேதான் நாங்களும் சொல்லுறம்... செய்யுறம்..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Idea


- shanmuhi - 12-15-2004

Quote:பாவத்தின் விதி வலைக்குள்
சிக்கிவிட்ட மானிடன்
அன்பின் அர்த்தம் புரியா
விலங்கினும் கொடிய மிருகமாய்....
அன்பின் தூதனை
முட்கிரீடமிட்டு
குருதியால் பூஜித்தான்...!
அதன் பலனாய்
இன்றும் இதயத்துள் அன்பின்றி
முட்களைச் சுமக்கிறான்
அன்பு அர்த்தமற்றதாய்
அவனை அழிக்கிறது....
பாவ வலைக்குள்
மீளமுடியாச் சிக்கலில்
அவன் ஆயுள் முடியும் வரை....!

Å¢ò¾¢Â¡ºÁ¡É ¸ñ§½ð¼ò¾¢ø ±ழு¾ôÀ𼠸ި¾ «ரு¨Á.
Å¡úòதுì¸û....


- kuruvikal - 12-15-2004

நன்றி அக்கா தங்கள் வாழ்த்துக்கு...எங்கே அடிக்கடி காணாமல் போய் விடுறீங்கள்...!


- shanmuhi - 12-15-2004

«டிì¸டி ¸¡½Á¡ø §À¡É¡லுõ þ¨¼ì¸¢¨¼ Åóது ¿¢îºÂõ ¸ருòது ±ழுது§Åý. ¯í¸û ¸Å¢¨¾ Å¡º¢ì¸Å¡Åது ÅçÅñ¼¡§Á¡....? ?


- kuruvikal - 12-15-2004

நன்றி அக்கா..!