![]() |
|
உன் கண்கள் ஏன் இன்னும் கதை பேசுகிறது..?? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: உன் கண்கள் ஏன் இன்னும் கதை பேசுகிறது..?? (/showthread.php?tid=4785) |
உன் கண்கள் ஏன் இன்னும் கதை பேசுகிறது..?? - tamilini - 03-12-2005 <b>என்றோ பழகியவன் நீ என்னை விட்டுப்பிரிந்து வருடங்கள் பல சென்றபின் மீண்டும் கண்டேன் மொட்டாகி காதல் மலரானது எனக்குள் மட்டும் எட்டாத தூரத்திற்கு - உன்னை ஏற்றிச்சென்றது விதி எங்கு சென்றாலும் என்னை விட்டுப்பிரியாது உன் நினைவு... உனக்கென ஒரு உறவு வந்தபின் என்னை நான் மாற்றிக்கொண்டதாய் எப்பவோ நினைத்துக்கொண்டேன். அது பொய் என இன்று தான் புரிந்தேன் உன்னைக்கண்டபின் ஏக்கம் என் மனதில் தோன்றியபோது. வாய் மொழியின்றி பார்வையால் கதை பேசும் கண்களும். பல் தெரியாமல் பலரையும் கவர்ந்திழுக்கும் உன் சிரிப்பும். தானே என்னை உன்னை நினைக்க வைத்தது இன்னும் அப்படியே அவைகள் உன்னுடன் உற்று உற்று பாத்தேன் உன்னில் மாற்றம் ஏதும் உண்டா என்று. உனக்கென ஒருத்தி உறவாய் வந்தபின்னும் உன் கண்கள் ஏன் இன்னும் என்னுடன் கதை பேசுகிறது...?? காரணம் என் காதல் கண்களா..?? இல்லை உனக்குள்ளும் இன்னும் காதலா...?? உண்மை எதுவாய் இருந்தாலும் நீ இன்னொருத்தியின் அவன் எட்டவே நிக்கும் என் காதல் உன்னைச்சுற்றி என்னால் முடிந்தவரை உனக்கு தொந்தரவின்றி...!</b> கற்பனையாய் என்றோ கிறுக்கியது கண்டபடி நினைச்சிடாதீங்க.. ! ( :wink: ) - shanmuhi - 03-12-2005 கற்பனையாய் கிறுக்கிய கவிதை... அருமை. வாழ்த்துக்கள்... - Malalai - 03-12-2005 எட்ட நின்று கொண்ட காதல் என்றென்றும் உன்னை ஏங்க வைத்துவிட்டதே காதலன் அவன் கண்கள் கண நேரத்தில் கவிகள் பல தோற்றுவிக்கிறதே எட்டா காதல் கொண்ட எல்லா உள்ளங்களிலும் - காதலின் எண்ணங்கள் தேங்கி நிற்கும் நினைவிருக்கும் வரை! அக்கா கவிதை நல்லாக இருக்கு...பாவம் அக்கா... :wink: :wink: :wink: - Mathuran - 03-12-2005 <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 03-12-2005 நன்றியக்கா.. மழலை இது தானே வேண்டாம் என்கிறது.. :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Malalai - 03-12-2005 :wink: :wink: :wink: :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - KULAKADDAN - 03-13-2005 கவிதை அருமையக்கா...... கண்கள் கதைபேசியதாய் கதை பேசும் தோழீ- உனை கண்டதால் வந்த உவகையடி தோழி பல் ஆண்டின் பின் உனை கண்ட பேருவகை............ "உள்ளத்து உவகை பேசா ஊமை விழிகள் இருந்தென்ன பயன்" என்னவளும் கண் பேசும் கதையும் பல் தெரியாச்சிரிப்பும் கவர்ந்ததாய் கதை பேசி வந்தவள் தான் ஆயினும் ஈராண்டு புரிதலுக்காய் செலவிட்டு......... உள்ளத்தையும் புரிந்து கொண்டே இணைந்து கொண்டோம் உன் உணர்வு புரிகிறது...... "விதியை நொந்து பயனில்லை உன் உள்ளத்தை புரிந்தவனை தேடிகொள் தோழி..... கண் பேசும் கதையை அல்ல........" - Malalai - 03-13-2005 காதலுக்கு காரணமாய் இருந்து விட்டு காலத்தை நோகிறாயே காதலனே - நீ உன் காதலியை விட்டுவிட்டு கரம் பிடித்தாய் இன்னொருத்தியை... காதலியோ வாடுகிறாள் உன் நினைவால் நீ மனம் மாறி வேறு கை பிடித்தாய் அற்காக அவளையும் மாற சொல்கிறாயே... உன் மீது கொண்ட காதலுக்காக பாரதனில் நீ இருக்கும் வரை தூரத்தே இருந்து காதலிப்பாள் உன்னை என்றும்.... அண்ணா நல்லா கவி வடிக்கிறிங்க.... :wink: :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- KULAKADDAN - 03-13-2005 <!--QuoteBegin-Malalai+-->QUOTE(Malalai)<!--QuoteEBegin--> காதலன் அவன் கண்கள் கண நேரத்தில் கவிகள் பல தோற்றுவிக்கிறதே :<!--QuoteEnd--><!--QuoteEEnd--> கண் பார்த்து கவிபாடும் பேதையரே கண் பேசும் கதையினிலும் உள்ளத்து உணர்வு பேச.... மனமொத்த இணைதேடும் உம் வாழ்வு சிறக்க என்றும்.......... - KULAKADDAN - 03-13-2005 <!--QuoteBegin-Malalai+-->QUOTE(Malalai)<!--QuoteEBegin-->காதலுக்கு காரணமாய் இருந்து விட்டு காலத்தை நோகிறாயே காதலனே - நீ உன் காதலியை விட்டுவிட்டு :<!--QuoteEnd--><!--QuoteEEnd--> தப்பான வார்த்தை யான் காதலனே ......... என் இல்லாளின் உள்ளத்து மனமோத்த காதலன். என் கண் பேச்சை கண்டு மயங்கியதாய் கூறும் தோழி... உன் உள்ளத்து உணர்வறியும் சித்தனல்ல......... பிறப்போடு வந்த என் பல் தெரியாச்சிரிப்பதனை கண்டு மதிமயங்கும் -உன் பேதமையை என்னென்பேன்......... நானறியா உன் காதல்...... எவ்வாறு எனை கட்டும் உனை எவ்வாறு ஒதுக்கியதாய்.... அர்த்தப்படும்........... - Malalai - 03-13-2005 கண்கள் நான்கும் பேசும் போது உள்ளங்கள் தானே இணைகிறதே கண்களையும் உள்ளத்தையும் ஏன் பிரிக்கிறாய் - தோழனே கண்கள் இரண்டும் மோதும் போது இதயத்தில் பிரளயம் தோன்றியதே அதை நீ உணரவில்லையா? உணர்ந்தும் அதை நீ ஏன் மறுக்கிறாய் கண்பேச்சில் மயக்கம் இல்லைத் தோழனே காதலின் ஆழத்தை அது பேசும் உள்ளத்தின் உணர்வறிய நீ சித்தனாக வேண்டாம் சிந்தித்துப்பார் கொஞ்சம்... - Mathuran - 03-13-2005 வளமான சொல்கொண்டு, வார்த்தையி நாகரீகம் தான் மிழிர. கவி ஒன்று அக்கா புனைந்திட்டார். அழகாக கவினடையில் கருத்தாடல் புரிகின்ற தம்பி தங்கையரை வாழ்த்துகின்றேன். பல்வேறு கருத்துக்களில், பலர் இங்கு உண்டு. ஆகயினால் தங்களைப்போல் புரிதலுடன் கவிநடயில் கருத்தாடலினைக் காணுகயில் மனம் மகிழ்ந்து, எனை மறந்து போகின்றேன். தவறாக எதுவேனும் கூறி இருப்பின், தவறாக எண்ணாது, தொடருங்கள் அழகிய கவிநடையில் உங்கள் கருத்தரங்கை. - Malalai - 03-13-2005 ஆகா மதரன் அண்ணா தூள் கிளப்பிறங்க....வாழ்த்துக்கள்.. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - KULAKADDAN - 03-13-2005 என்கண்கள் பேசியதாய் நீ சொல்லி அறிந்து கொண்டேன் உன் கண்கள் பேசியதை நானறியேன் என் தோழி நனறியா பேச்சதனால் என் இதயத்தில் பிரளயம் தோன்றுவது எவ்வாறோ? - Malalai - 03-13-2005 உன் கண்கள் பேசும் போது என் அருகில் நீ இருந்தாய் என் கண்கள் பேசியதாய் என் இதயம் சொல்லும் போது உன் துனைவி அருகில் அல்லவா நீ இருக்கிறாய்..... நீ என்றாலும் நன்கு வாழ நான் வாழ்த்திடுவேன் நம் காதல் வாழ்வதற்கு நான் இருப்பேன் தவங்கள் பல.... - Mathuran - 03-13-2005 அக்காவின் கவிதனை, ஆராய்ந்து பார்க்கயிலே. ஆசையோடு அனுபவித்த அன்றய அன்புதனை ஆழத்துள் பூட்டி வய்த்தால் போல, ஆவலோடு ஏங்கி தவிக்கின்றார். ஆறா வடுக்களை சுமப்பத விடுத்து. அக்கா அன்பான ஒர் வாழ்க்கையை அமையுங்கள் அழகாக நீங்கள் வடித்த கவவிதனை, கிறுக்கல் என்று சொன்னாலும். ஆழமாக உங்கள் மனதுக்குள், சிறு கீறல் இருக்குமோ என எண்ணுகின்றேன். ஆதலால், இந்த கவிதைக்கு உரியவர் சிறப்போடு வாழ வாழ்துகின்றேன். - KULAKADDAN - 03-13-2005 Quote:உன் கண்கள் பேசும் போது உன் கண்கள் பேசியதை -நீ உணரப் பிந்தியது என் தவறா உன் தவறா....... நான் உணரா உன் விழியின் மொழி என் தவறா உன் தவறா யார் தவறோ நானறியேன்? வாழ்கை வாழ்வதற்கே யாரோ சொன்னர்கள் யானும் அதையே சொல்கின்றேன் தவமிருந்து உனை வருத்தி என்ன பயன். உன் வாழ்த்திற்கேன் நன்றி....... - Mathuran - 03-13-2005 கடந்த காலத்தை எண்ணி கண்ணை கசக்காது. காரியத்தில் கவனமாக இருந்து விடு. பருவங்கள் மாறுவதைப் போல், வாழ்விலும் வளைவுகள், வளைவுகள் வரலாம், அதற்காக நேற்றய காதலுக்கா தவங்கள் இருப்பது தவறு. தவங்கள் இருப்பது வாழ்வை வெறுத்தவர். நீயோ வாழ பிறந்தவள். தாடி வளர்ப்பதும் தாலி அறுப்பதும், மூடர்கள் வேலை. நீ அறிவுடயாள். எனவே ஆரோக்கியமான பாதை எதுவென அறிந்து வீறுநடை போடு. போற்றும் இந்த வையகம் உன்னை. அன்பு உள்ளவனோ உன்னை சுற்றி வருவான். நீ ஏன் அன்பு இல்லாதாரை சுற்றுகின்றாய்? - Malalai - 03-13-2005 என் கண்கள் பேசும் போது உன் கண்கள் சந்தித்து நம் கண்கள் ஆகியதை எப்படி மறந்தாய்? விழிக்கு ஏது பல மொழி? மொழியில்லா பாசை பேசும் விழி கொண்ட தேடல் தானே காதல் எனும் ஊற்று வாழ்க்கை வாழ்வற்கே அதையே தான் நானும் சொல்கிறேன் அதனால் தானே இன்றும் என்னில் வாழ்கிறாய் நீ உன்னை சுமந்து வாழும் வாழ்விலே சுகம் கண்டேன் தோழனே.... உன்னை சுமந்து வாழ்வதில் வருத்தமேது? - Malalai - 03-13-2005 Quote:கடந்த காலத்தை எண்ணி கடந்த காலம் என நான் கருதவில்லை என் காதலை காலத்தையும் வென்று வீறு நடை போடும் என் காதலை எப்படி நான் புதைப்பேன் என்னுள் காலம் மாறி மாறி வந்தாலும் காதல் கொண்ட உள்ளம் கலங்காது காத்திருக்கவில்லை காதலனுக்காக ஏனென்றால் நான் தானே வாழ்கிறேன் புனிதமான காதலுடன் பூமி சுற்றுவதை நிறுத்திவிட்டாலும் அவனை சுற்றிவரும் நினைவுகள் நிற்காதே என்றென்றும்..... |