![]() |
|
NTT வன்னியிலிருந்து ஐரோப்பாவுக்கு புதிய தொலைக்காட்சி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=19) +--- Thread: NTT வன்னியிலிருந்து ஐரோப்பாவுக்கு புதிய தொலைக்காட்சி (/showthread.php?tid=4665) Pages:
1
2
|
NTT வன்னியிலிருந்து ஐரோப்பாவுக்கு புதிய தொலைக்காட்சி - selvanNL - 03-26-2005 <b>தமிழீழ தேசிய தொலைக்காட்சியின் ஒளிபரப்பு சேவை தொடங்கியது</b>! <img src='http://img196.exs.cx/img196/6699/ntt2603059dn.jpg' border='0' alt='user posted image'> [b]ஐரோப்பாவில் ரிரிஎன் தொலைகாட்சிäடாக இன்று இரவு தாயக நேரம் 11.30 மணிக்கு தனது சேவையை தமிழீழத் தொலைக்காட்சியை ஆரம்பிக்கின்றது. தமிழீழ தாயகத்தின் தேசியக்குரலை வெளிப்படுத்துகிற ஒளி ஊடகமாக தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி தன் சேவையை ஆரம்பிக்கின்றது. தாயகத்திலிருந்து இப்போது 30 நிமிடங்களுக்கான ஓளிபரப்பு இடம்பெறும்.இதில் முதன்மையாக செய்திப் பகுதி இடம்பெறும் என தமிழீழ தேசிய தொலைக்காட்சி இயக்குனர் தெரிவித்துள்ளார். இந்த ஒளிபரப்பு நேரம் ஒன்றரை மணிநேரம் அதிகரிக்கப்பட உள்ளது. விரைவில் உலகின் பல்வேறு பகுதிகளிலும் தமிழீழத் தேசிய தொலைக்காட்சியின் ஒளிபரப்பு சேவை விரிவுபடுத்தப்படவுள்ளது. ஆங்கிலத்தில் என்ரிரி என்ற சுருக்கப்பேரில் தமிழீழ தேசியத் தொலைக்காட்சி ஆரம்பமாகின்றது. தமிழீழத் தேசியப் பூவான கார்த்திகைப் பூவை மைய்யமாகக் கொண்டு தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியின் இலச்சினை உருவாக்கப்பட்டுள்ளது ¿ýÈ¢ Ò¾¢Éõ. ----------------------------------------------------------------------- NTT ¦¾¡¨Äì¸¡ðº¢ Å£Ú ¿¨¼ §À¡¼ ±ÉÐ ÁÉÁ¡÷ó¾ ¿ø Å¡úòÐì¸û. · - tamilini - 03-26-2005 தகவலுக்கு நன்றி செல்வன். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 03-26-2005 தமிழீழத் தொலைக்காட்சி வளர்ச்சியும் சிறப்பும் பெற எமது வாழ்த்துக்கள்..! - AJeevan - 03-26-2005 <span style='font-size:25pt;line-height:100%'> தொடரட்டும் பணிகள் திக்கெட்டும் முரசத்தோடு........... தமிழீழத் தொலைக் காட்சிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்....... </span> - Mathan - 03-26-2005 தகவலுக்கு நன்றி, தமிழீழத் தொலைக் காட்சிக்கு வாழ்த்துகள் - KULAKADDAN - 03-26-2005 தகவலுக்கு நன்றி, தமிழீழத் தொலைக் காட்சிக்கு வாழ்த்துகள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- vasisutha - 03-26-2005 இன்று பிரித்தானிய நேரம் மாலை 6 மணிக்கு TTN தொலைக்காட்சியில் தமிழீழ தேசிய தொலைக்காட்சி சேவை ஒளிபரப்பாக போகின்றது <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> .
- eelapirean - 03-26-2005 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- tamilini - 03-26-2005 Quote:இன்று பிரித்தானிய நேரம் மாலை 6 மணிக்கு TTN தொலைக்காட்சியில் தமிழீழ தேசிய தொலைக்காட்சி சேவை ஒளிபரப்பாக போகின்றது . ஒளிபரப்பி என்ன பிரியோசனம் நாங்க பாக்கமுடியாது..
- வியாசன் - 03-26-2005 குறைந்த நேரம்தான் ஒளிபரப்பாகியது. தரமாக இருக்கிறது. தொழில்நுட்பத்தில் நிறைவுதெரிகிறது. இஞஇசை தொலைக்காட்சி நடத்துறவையள் அங்குபோய் பழகிவிட்டுவரலாம். அவையள் முழுமையான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பத்தொடங்கினால் இஞ்சை எல்லாரும் மூட்டையை கட்டத்தான் வேணும். வன்னியிலிருந்து ஐரோப்பாவுக்கு புதிய தொலைக்காட்சி - AJeevan - 03-27-2005 <span style='font-size:22pt;line-height:100%'>வன்னியிலிருந்து ஐரோப்பாவுக்கு புதிய தொலைக்காட்சி தமிழீழ தேசியத் தொலைக்காட்சி என்ற பெயரில் விடுதலைப்புலிகள் சார்பான புதிய தமிழ் தொலைக்காட்சி ஒன்று இன்று முதல் ஆரம்பமாவதாக அந்த நிலையத்தின் இயக்குனர் கருணாகரன் என்பவர் தெரிவித்துள்ளார். இன்று சனிக்கிழமை இரவு இலங்கை நேரம் 11.30 மணிக்கு ஆரம்பமாகும் இந்த தொலைக்காட்சி சேவை முதலில் அரை மணித்தியாலத்துக்கு ஒலிபரப்பாகும் என்றும் செய்திகளுக்கே தற்போதைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார். முதலில் ஐரோப்பிய நாடுகளுக்கு வன்னியில் இருந்து செய்மதி மூலம் ஒளிபரப்பப்படும் இந்த சேவை பின்னர் படிப்படியாக அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளுக்கும் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார். ஐரோப்பிய நாடுகளுக்கு விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வன்னிப் பகுதியில் இருந்து தொலைக்காட்சி ஒன்று ஒளிபரப்பப்படுவது இதுவே முதல் தடவையாகும். ஆயினும் யாழ் குடாநாடு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த போது, அங்கு அவர்கள் உள்ளுர் மட்டத்தில் ஒரு தொலைக்காட்சி சேவையை நடத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது. </span> thanks: BBC tamil - glad - 03-27-2005 தமிழீழத் தேசியத் தொலைக்காட்சிக்கு என் வாழ்த்துக்கள். மென்மேலும் சிறப்புற உலகமெங்கும் வீறு நடை போட வாழ்த்துகிறேன். நேற்றைய முத்ல் நாள் நிகழ்ச்சிகள் மிகச் சிறப்பாக இருந்தன. glad - hari - 03-27-2005 <b>தமிழீழத் தொலைக்காட்சி சேவை: திருச்;சி மொழிப்போர் மாநாட்டில் மக்கள் வாழ்த்து</b> ஜ தமிழ்நாட்டிலிருந்து திராவிடன் ஸ ஜ ஞாயிற்றுக்கிழமை, 27 மார்ச் 2005, 9:41 ஈழம் தமிழீழத் தேசிய தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு தமிழ்நாட்டு மக்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். திருச்;சியில் நேற்று நடைபெற்ற 3 ஆம் மொழிப்போர் மாநாட்டில் உரையாற்றிய எழுச்;சிக் கவிஞர் அறிவுமதிää தொலைக்காட்சி ஒளிபரப்புச்; சேவை குறித்த தகவலை மேடையில் அறிவித்தார். அத்துடன்ää தமிழ்நாட்டுத் தமிழர்கள் தங்களது ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் கரவொலி எழுப்பி வாழ்த்துத் தெரிவிக்குமாறும் அறிவுமதி வேண்டுகோள் விடுத்தார். மாநாட்டில் பெருந்திரளாகக் கூடியிருந்த தமிழர்கள்ää தமிழீழத் தொலைக்காட்சி சேவைக்குத் தங்களது வாழ்த்துகளை கரவொலிகளை எழுப்பி தெரிவித்தனர். - adithadi - 03-27-2005 இவ் தொலைக்காட்சி தமிழ் ஈழத்தின் வெற்றிக்கனியை தொடும் வெற்றியின்படிகட்டுக்கள். என் இனியநல் வாழ்ததுக்கள். - ¸ÅâÁ¡ý - 03-27-2005 Å¢¨ÃÅ¢ø ÓØ §¿Ã ´Ç¢ÀÃôÀ¡¸ ÅÇà šúòÐì¸û. 8) - Mathan - 04-07-2005 அரசின் ஊதகமும் புலிகளின் ஊடகமும் விடுதலைப்புலிகள் தமது புலனாய்வு யுத்தத்தால் உலகையே பிரமிக்கவைத்த அதே வீச்சில் இன்று ஆரம்பித்திருக்கும் அதன் இன்னொரு அத்தியாயம் தென்னிலங்கை அரசியல் வட்டாரத்தை கிலிகொள்ளச் செய்திருக்கிறது. அதாவது சர்வதேச அளவிலும் பிரசாரம் செய்யக்கூடிய வகையில் அவர்கள் ஆரம்பித்திருக்கும் ஈழத்தி;ன் தேசிய தொலைக்காட்சி பலரது கண்களை குத்திக்குடைந்துவிட்டது. தொலைக்காட்சி சேவை ஆரம்பிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட மாத்திரத்திலேயே புற்றீசல்கள் போல கண்டன அறிக்கைகளும் பயங்கரவாத அமைப்பொன்றுக்கு இவ்வளவு சுதந்திரத்தை வழங்குவதா என்ற கோஷங்களும் தென்னிலங்கையில் எழுந்து பறக்கத் தொடங்கிவிட்டன. புலிகளைப் பொறுத்தவரை அவர்கள் யுத்தத்துக்கு தமது புலனாய்வுச்செயற்பாட்டை எவ்வளவுக்கு வலுப்படுத்தி அதற்கு செயலூக்கம் கொடுத்தார்களோ அதே விகிதாசாரத்தில் தமது போராட்டம் பற்றிய உண்மை நிலையை ஈழத்துக்கு அப்பால் தென்னிலங்கை மக்களுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் எடுத்துக்கூறுவது தொடர்பான அரசியல் பிரசார வேலைத்திட்டத்தை நிதானமாக முன்னெடுத்து வருகிறார்கள். ஒரு கெரில்லா அமைப்பு என்ற பரிணாமத்திலிருந்து ஒரு அரசாங்கமாக - சுதந்திரப்போராட்ட இயக்கமாக - மக்கள் தேர்ந்த அமைப்பாக உருவெடுத்துள்ள புலிகள் அமைப்பு இன்று தமது கடப்பாடுகளை செவ்வனே நிறைவேற்றி வருகிறார்கள். அந்த வகையில் இதுவரை நிறைவுபெறாத தமது போராட்டம் பற்றியும் தமது மக்கள் தொடர்ந்து அனுபவிக்கும் அல்லல்கள் தொடர்பாகவும் சர்வதேச சமூகத்துக்கும் தென்னிலங்கை மக்களுக்கும் எடுத்துக்கூற பல்வேறு வகையிலும் பிரசார வேலைத்திட்டங்களை புலிகள் முன்னெடுத்து வருகிறார்கள். 1) தேதுன்ன என்ற சிங்களப் பத்திரிகை ஆரம்பித்து அதில் தமிழ் மக்களினதும் புலிகளினதும் போராட்டம், இலட்சியம் அவற்றுக்கு சிங்கள அரசுகளால் மேற்கொள்ளப்படும் அடக்குமுறைகள் என்பவற்றை விளக்கி சிங்கள் மக்கள் மத்தியில் ஒர் பிரசார உத்தியை கையாண்டனர். 2) புலிகளது அரசியல் கொள்கைகள் தேர்தல் விஞ்ஞாபனமாக மக்கள் முன்வைத்து சிறீலங்கா நாடாளுமன்றுக்கு தெரிவு செய்யப்பட்வர்களைக்கொண்டு கொழும்பில் வெளிநாட்டு தூதுவர்கள், இராஜதந்திரிகள் ஆகியோருக்கு தமிழ் மக்கள் பிரச்சினையில் சர்வதேச சமூகம் ஆற்றவேண்டிய பங்கு, பணி என்ன என்பவை குறித்து விளக்கமளித்தது. அதற்காக தமிழ்த் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஐவர் கொண்ட அரசியல் விவகாரக்குழு புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனால் நியமிக்கப்பட்டது. 3) புலிகளி;ன் சில முக்கியஸ்தர்கள் நேரடியாக கொழும்புக்கு வந்தே சில முக்கிய இராஜதந்திரிகளுடன் பேச்சு நடத்தி தமது கொள்கை விளக்கங்களை மேற்கொள்கின்றனர். 4) புலிகளின் அரசியல் விவகாரக்குழுவினர் மாதமொரு தடவை சுழற்சி முறையில் வெளிநாடுகளுக்குச் சென்று அங்கு புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களை நேரடியாகச் சந்தித்தும் அங்கு இராஜதந்திரிகள் மற்றும் பன்னாட்டு அமைப்பின் பிரதிநிதிகளை சந்தித்தும் தமது போராட்டத்தின் தற்போதைய நிலை குறித்து விளக்கமளித்து வருகின்றனர். 5) இடையிடையே கொழும்பிலுள்ள சகல பத்திரிகையாளர்களையும் வன்னிக்கு அழைத்து முக்கிய விடங்கள் குறித்த தமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியும் சிலவேளைகளில் அறிக்கைகள் வாயிலான அறிவிப்புகளாகவும் தமது கருத்துக்களை வெளியிட்டுவருகின்றனர். இந்த உத்திகளால் இன்று புலிகள் தொடர்பான சர்வதேச நிலைப்பாடு சிறீலங்கா அரசே எதிபாராத அளவுக்கு மாற்றம கண்டுவருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. கனடாவில் புலிகளை தடைசெய்ய மேற்கொள்ளப்பட்ட பகீரதப்பிரயத்தனம் புஸ்வாணமாக மாறியமை இதற்கொரு உதாரணமாகக்கொள்ளலாம். இந்த ஒரு பிரசார படிமுறைகளின் அங்கம்தான் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள ஈழத் தேசிய தொலைக்காட்சி. இதன் ஊடாக புலிகள் உடனுக்குடன் தமது செய்திகளை மக்களுக்கு தெரியப்படுத்துவர். ஆனால் இந்த பிரசார இயந்திரத்தின் காத்திரத்தை ஊகித்துக்கொண்ட சிறீலங்கா அரசும் அதன் அடிவருடிகளும் புலிகளின் உண்மையான நோக்கத்தை பிழையான வழியில் பிரசாரப்படுத்துவதில் முழுமூச்சாக உள்ளனர். அதாவது இனி உண்மைகளை மூடிமறைத்து தென்னிலங்கை மக்களுக்கு கப்ஸா அடிக்கும் அரசின் பாச்சா பலிக்காது. புலிகளுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துவிடக்கூடாது என்பதற்காக இலங்கைக்கு வந்த ஐ.நா. செயலாளர் நாயகம் கொபி அனானையே வன்னி செல்ல அனுமதிக்காத சிறீலங்கா ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, புலிகளின் புதிய முயற்சியால் சர்வதேச சமூகத்தின் மத்தியில் மேலும் மாற்றமடையப்போகும் புலிகள் தொடர்பான நிலைப்பாடு குறித்தும் தான் இவ்வளவு காலமும் ஆஸ்தான வித்தகர் கதிர்காமரை அனுப்பி மேற்கொண்ட பிரசாரமெல்லாம் விழலுக்கு இறைத் நீராகிவிடுமோ என்பது குறித்தும் கலங்கிவிட்டார். உடனே தனக்கு அருகிலேயே வைத்திருக்கும் அரசியல் அடியாட்களான ஜே.வி.பியை கிளறிவிட்டுவிட்டு தான் சத்தமில்லாமல் இருக்கிறார். எந்த ஒரு போராட்ட அமைப்பினது ஊடகத்தையும் அதற்கு எதிரான அரசு வளரவிட்டதாக சரித்திரம் இல்லை. ஏனெனில் யுத்தத்தில் படையணி ஒட்டுமொத்தமாக பாவிக்கும் ஆயுதங்களுக்கு சரிசமமான வலுக்கொண்டது ஒரு ஊடகம். அதனால்தான் ஆப்கானுக்குள் தனது ஆக்கிரமிப்பு கால்களை எடுத்து வைக்கமுன்னர் அமெரிக்கா செய்த முதல் வேலை பின்லேடனின் பேட்டிகள் மற்றும் அமெரிக்காவின் அட்டூழியங்களையும் பட்டவர்த்தனமாக காண்பித்துவந்த 'அல் ஜஸீரா" தொலைக்காட்சியை முதலில் தாக்கியது. ஈராக்கில் அமெரிக்கா போரை ஆரம்பித்த பின்னரும் சதாமின் காட்சிகளை ஒளிபரப்பிவந்த பக்தாத் தொலைக்காட்சிச் சேவையை குண்டுவீசி தகர்த்தது. சிறீலங்கா அரசும் சும்மா நின்று விடவில்லை. யுத்தகாலத்தல் யாழ். குடாநாட்டில் அரசு குண்டுவீச்சுகளால் கொன்றொழிக்கப்பட்ட மக்களின் படங்களையும் செய்திகளையும் அப்போது வெளியிட்டுவந்த பத்திரிகை ~உதயன். அதன் செய்திகளை அப்போது தூக்கிப்பிடித்த மனித உரிமை அமைப்புக்களும் பன்னாட்டு சமூகமும் சிறீலங்கா அரசை கடிந்தன. உடனே சிறீலங்கா அரசு உதயன் பத்திரிகையை தடைசெய்தது. அதேபோல அரசின் அட்டூழியங்களை தென்னிலங்கையில் விமர்சித்தவந்த ~சண்டே லீடர் பத்திரிகையையும் தடைசெய்தது. இந்தக் கைங்கரியங்களை செய்தவர் அப்போது ஆட்சியிலிருந்த இதே சந்திரிகா குமாரதுங்கதான். இன்று மீண்டும் கொடுகொட்டி ஆடத்தொடங்கிவிட்டார். ஜே.வி.பி உட்பட சில புலி எதிர்ப்பு அமைப்புக்களின் ஊடாக புலிகளின் புதிய ஊடகத்துக்கு எதிரான பிரசாரத்தை முடுக்கிவிட்டிருப்பதுடன் தென்னிலங்கை ஊடகங்களிலும் சில பத்தி எழுத்தாளர்கள் மற்றும் செய்தியாளர் ஊடாக எதிர்பிரசார வேலைகளை தட்டிவிட்டிருக்கிறார் ஜனாதிபதி சந்திரிகா. வான்புலிகள் விவகாரத்தின்மூலம் புலிகளை இக்கட்டில் மாட்டிவிட முழுமூச்சாக நின்ற அரசின் வாய்க்கு தற்போது தொலைக்காட்சி விவகாரம் ருசியான அவல். மென்று கொண்டிருக்கிறது. by தெய்வீகன் - hari - 04-08-2005 நன்றி மதன் - iruvizhi - 04-08-2005 தமிழீழ தொலைக்காட்சியின் சேவைதனை பாராட்டுவோம். - Sriramanan - 04-08-2005 இத் தொலைக்காட்சியைப் பார்த்துவரும் கள உறுப்பினர்களே. தயவு செய்து இதன் நிகழ்ச்சிகள் பற்றியும் அதன் நிறைகள் மற்றும் குறைகள் பற்றியும் கொஞ்சம் எழுதுங்கோவன் NTT ஒரு பிரதான நீரோட்ட ஊடகமா? அல்லது மாற்று ஊடகமா? - spyder12uk - 04-10-2005 புகழ்பெற்ற இந்தியப் பொருளியலாரான அமர்தியா சென் ஒருமுறை பின்வருமாறு சொல்லியிருந்தார், "சுயாதீனமான ஊடகங்கள்களைக் கொண்டிருந்த நாடுகள் எப்பொழுதும் பஞ்சத்தை அனுபவித்ததில்லை ஏனெனில், சுயாதீன ஊடகங்கள் எப்பொதும் குறைபாடுகளை முக்கியத்துவம் கொடுத்து வெளியில் கொண்டு வந்து விடுவதால் அரசாங்கங்கள் அவற்றிற்குப் பரிகாரம் காணும் நடவடிக்கைகளை எடுக்குமாறு நிர்பந்திக்கப்படுகின்றன." என்று. அதாவது ஒரு சுயாதீன ஊடகம் எந்த மக்கள் திரளைப் பிரநிதித்துவம் செய்கிறதோ அந்த மக்கள் திரளையும் அதை ஆள்வோரையும் சதா உசார் நிலையில் விழிப்பு நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று அர்த்தம். "ஒரு சுயாதீன ஊடகம் சிலவேளைகளில் உனக்கு எரிச்சலூட்டலாம். ஆனால் உனக்கு ஆபத்து வரும் போது அதுதான் உன்னைப் பாதுகாக்கும்" என்று ஒரு மேற்கோள் உண்டு. அண்மை ஆண்டுகளில் ஆசியாவில் ஆப்கானிலும் ஈராக்கிலும் இரத்தம் சிந்தி நிரூபிக்கப்பட்ட ஒரு கூற்றாக இது காணப்படுகிறது. கட்டாரை தளமாகக் கொண்டியங்கும் அல்ஐசீரா தொலைக்காட்சி இன்று அரப்புக்களின் இதயத் துடிப்பாக மாறியிருக்கின்றது. ஒசாமா பின்லாடன் தொடக்கி வைத்த "நவீன சிலுவை யுத்தத்தின்" பேறாகவே அல்ஐசீரா இன்று இத்துணை கவனிப்பைப் பெற்றிருக்கிறது. முன்பு தலிபான்களின் ஆட்சிக்காலத்தில் ஊடகங்களை முரட்டுத்தனமாக கையாண்ட தலிபான்கள் வழமைக்கு மாறாக அல் ஐசீராவில் மட்டும் கைவைக்கவில்லை. இதன் நற்பலனை அமெரிக்கா ஆப்கானுக்குள் நுழைந்த பின்பே தலிபான்கள் அனுபவித்தார்கள். ஆப்கானில் நடப்பவைகள் பற்றி அமெரிக்காவின் நோக்கு நிலையிலிருந்து செய்திகளைத் தரும் ஊடகங்களே சக்திமிக்கவைகளாகவும் சர்வவியாபகமானவைகளாகவும் காணப்பட்ட ஒரு ஊடகச் சூழலில் ஆப்கானியர்கள் நோக்கு நிலையிலிருந்து செய்திகளை வெளியில் கொண்டு வந்தது அல் ஐசீராதான். இப்போது ஈராக்கிலும் அதே தொண்டைத்தான் அல் ஐசீரா செய்துகொண்டிருக்கிறது. அல் ஐசீராவை மூடிவிடும்படி கட்டார் அரசாங்கத்தின் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன. வர்த்தக நோக்கு நிலையில் ஆதாயமின்றி ஓடிக்கொண்டிருக்கும் அல்ஐசீராவின் பங்குகளை தனியாருக்கு விற்று விடுமாறும் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன. முடிவில், அண்மையில், அல்ஐசீராவுக்குப் போட்டியாக அல்குரான் என்றொரு புதிய தொலைக்காட்சிச் சேவை தொடங்கப்பட்டுள்ளது. அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகள் இஸ்லாமியத் தீவிரவாதத்திற்கு எதிரான தமது உலகளாவிய போரில் அல் ஐசீராவை ஓரங்கட்டாமல் அரபுக்களை மனோவசியம் செய்வது கடினம் என்று நம்புகிறன. பலம் வாய்ந்த மிக நீண்ட பாரம்பரியங்களையுடைய சர்வ வியாபகமான மேற்கின் ஊடகங்களோடு ஒப்பிடுகையில் அல் ஐசீரா ஒரு மாற்று குரல் போலத் தோன்றினாலும் அரபுலகத்தைப் பொறுத்தவரை அது ஒரு பிரதான நீரோட்ட ஊடகமாகத்தான் காணப்படுகின்றது. அல் ஐசீராவை நியப்படுத்துவது இன்று இப்பந்தியின் நோக்கமல்ல. மாறாக பலசாலி நாடுகளைத் தளமாகக் கொண்டியங்கும் சர்வவியாபகமான பேரூடகங்களால் போதியளவு பிரதிநிதித்துவம் செய்யப்படாத ஒரு பிராந்தியமோ அல்லது நாடோ அல்லது மக்கள் திரளோ தனக்கென்று ஒரு மாற்று ஊடகவலப்பின்னலை உருவாக்கி வரும் போக்கின் மேற்காசிய உதாரணம் இது என்பதாலேயே இன்று இப்பந்தியில் அல்ஐசீரா பற்றிக் குறிப்பிடவேண்டியிருக்கிறது. ஆம் இன்றைய உலகளாவிய ஊடகப்பரப்பில் இரண்டு பிரதான நீரோட்டத்திற்குரிய பேரூடகங்கள் மற்றது மாற்று ஊடகங்கள் இவை ஓல்றனேற்றில் மீடியாக்கள் என்று அழைக்கப்படுகின்றன. பொதுவாக பேரூடகங்கள் எனப்படுபவை புரட்சிகரமானவைகளாக் காணப்படுவதில்லை ஏற்கனவே தரப்பட்ட நம்பிக்கைகள் ஏற்கனவே நன்கு ஸ்தாபிக்கப்பட்ட ஒழுங்குகள் போன்றவற்றின் குரலாகக் காணப்படுவதனால் இவை பிறப்பியல்பிலேயே அந்த நம்பிக்கைகளையும் ஒழுங்குகளையும் மீற முடியாத வைகளாகக் காணப்படுவதுண்டு சர்ச்சைகளைக் கிளப்புவது என்ற புரட்சிகரமான அம்சத்தைத் தவிர மற்றெல்லா விசயங்;களிலும் இவை போராடும் இனங்கள், நாடுகள் அல்லது மக்கள் திரளின் குரலாக எழ முடியாதவைகளாகக் காணப்படுகின்றன. மற்றது, மாற்று ஊடகங்கள். பேரூடகங்களின் சர்வ வியாபகத்தன்மையோடு ஒப்பிடுகையில் இவற்றின் வீச்செல்லை மிகவும் வரையறைக்குற்பட்டதே. ஆனால் பேரூடங்களால் பாதுகாக்கப்படும் ஏற்கனவே தரப்பட்ட நம்பிக்கைகளையும் ஸ்தாபிக்கப்பட்ட ஒழுங்குகளையும் எதிர்த்து உருவாகுபவை என்பதால் இவை பிறப்பால் புரட்சிகரமானவை, எனவே போராடும் இனங்கள் மற்றும் நாடுகளின் நலிந்த குரலை இவை வெளிக்கொண்டு வருகின்றன. இத்தகைய மாற்று ஊடகங்களின் பிரதான தளமாக இன்று இன்ரனெற் காணப்படுகின்றது. பலஸ்தீனத்தின் சமாதான முயற்சிகளைப் பற்றி எழுதப்பட்டதும் அதிகம் வாசிக்கப்பட்டதுமாகிய THE END OF THE PEACE PROCESS என்று நூலை எழுதிய எட்வேர்ட் டபிள்யூ செய்ட் அந்த நூலின் இரண்டாவது பதிப்புக்குரிய அறிமுகத்தில், பலஸ்தீனத்தில் நிகழும் அட்டூழியங்கள் எப்படி வெளித்தெரிய வருகின்றன என்பது பற்றி பின்வருமாறு கூறுகிறார். "நூற்றுக்கணக்கான கண் கண்ட சாட்சிகளின் வாக்கு மூலங்களையும், ஒளிப்படச் சான்றுகளையும் இன்ரனெற் வழங்கியிருக்கிறது. இது அரபு மற்றும் ஐரோப்பியத் தொலைகாட்சிகளிலும் வந்திருக்கிறது. இதில் பெரும் பகுதி அமெரிக்காவின் பிரதான நீரோட்ட ஊடகங்களில் கிடைப்பதில்லை. அல்லது அவை வெளிவருவது தடுக்கப்படுகிறது. அல்லது அவை நொய்ந்து போகுமாறு செய்யப்படுகின்றன.." என்று. இத்தகைய ஒரு பூகோள யதார்த்தத்தின் பின்னணியில் வைத்தே அண்மையில் அரங்கினுற் பிரவேசித்திருக்கும் NTT ஐ அதாவது தமிழீழ தேசியத் தொலைக்காட்சியை பார்க்கவேண்டும். கிறிஸ்தவர்களின் மிகப் புனிதமான நாட்களில் ஒன்றாகிய பெரிய சனியன்று அதாவது கொல்லப்பட்ட மீட்பர் உயிர்த்தெழப்போகிறார் என்று காத்திருக்கும் ஒரு நாளிலே புகலிடத் தமிழர்களை நோக்கி ஒரு புதிய ஊடக வாசல் திறக்கப்பட்டிருக்கிறது. தற்பொழுது பர்Pட்சார்த்தமாக செய்திகள் மற்றும் பாடல்கள் என்று சுமாராக 15 நிமிடங்களுக்கு குறையாமல் ஒளிபரப்படும் NTT காலப் போக்கில் தனது நேரத்தை மேலும் அதிகரித்துச் செல்லும் என்று கூறப்படுகிறது. இப்பொழுதுள்ள பிரதான கேள்வி NTT ஒரு பிரதான நீரோட்ட ஊடகமா? அல்லது மாற்று ஊடகமா? என்பதே. தமிழ் மீடியாப் பாரம்பரியம் என்று பார்க்கும் போது பொதுவாக புரட்சி கரமானதாக இருந்ததில்லை. அது பெருமளவுக்கு தமிழ்ச்சினிமாவின் நீட்சியும் அகற்சியுமாகி எல்லாவற்றிலும் ஒரு வித சினிமாத்தனமே விரவிக் கிடக்கக் காணலாம். அதே சமயம், புரட்சிகரமானவை என்று கூறப்படும் மாற்று ஊடகங்கள் பெருமளவுக்கு சிறு சஞ்சிகைகள் அல்லது சிறுபத்திரிகைகள் (ரப்லொயிற்ஸ்) என்ற அளவிலே சுருங்கிக் கிடக்கக் காணலாம். இத்தகைய ஒரு பகைப்புலத்தில் ஒரு விடுதலை இயக்கத்தின் தொலைக்காட்சியாக வந்து பிறந்திருக்கும் NTT எத்தகைய ஒரு பாத்திரத்தை வகிக்கப்போகிறது? ஒரு விடுதலை இயக்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள ஒரு விடுதலை பிரசேத்திலிருந்து முதலில் புலம் பெயர்ந்த தனது மக்களை நோக்கிவரும் ஒரு தொலைக்காட்சிச் சேவை என்று பார்க்கும் போது அது சிறுசஞ்சிகைகள், சிறு பத்திகைகள் அல்லது புலமைசார் இணையத்தளங்கள் போன்ற சிறிய வட்டத்துள் சுருங்கி நின்று விட முடியாத அளவுக்கு பொறுப்பு அதிகமுடையதாகக் காணப்படுகிறது. அதேசமயம், ஒரு விடுதலை இயக்கத்தின் ஊடகம் என்பதால் அது ஆகக் கூடிய பட்சம் புரட்சிகரமாதாகவும் இருக்க வேண்டியுள்ளது. எனவே, NTT தனது சனங்களை அணிதிரட்டுவது என்ற நோக்கு நிலையிலிருந்து வரும் போது ஒரு விதத்தில் பிரதான நீரோட்ட ஊடகமாக வரவேண்டியிருக்கிறது. அதேசமயம் அது ஒரு விடுதலை மீடியா என்பதால் அதிகம் புரட்சி கரமானதாகவும் இருக்க வேண்டியுள்ளது. முன்னாள் சிறிலங்கா சனாதிபதி பிரேமதாஸவின் ஆலோசகரும் மூத்த சிவில் அதிகாரியுமான நெவில் ஐயவீர ஒரு முறை "பொருளியல் நோக்கில்" எழுதியிருந்தார். "சீரியஸானதுக்கும் ஜனரஞ்சமாகனதுக்கும் பொதுவாகப் பொருந்தி வருவதில்லை" என்று. தமிழில் இது தான் பொதுப் போக்காய் இருந்து வருகின்றது. ஆனால் தமிழீழ விடுதலைப் போராட்டம் இந்த வாய்ப்பாட்டை உடைந்து சீரியஸானதை ஜனரஞ்சகமாக்கவேண்டிய ஒரு கள யதார்த்ததை திறந்து விட்டிருக்கிறது. ஜனரஞ்சகமானதை சீரியஸான தாக்க முடியாது. ஆனால் சீரியஸானதை ஜனவசியமுடையதாக மாற்ற முயற்சிக்கலாம். எல்லா விடுதலைப் போராட்டங்களும் கலைஞர்கள், எழுத்தாளர்கள், மீடியாக்காரர்களிடம் கோரிநிற்பது இதைத்தான். இந்த யதார்த்தத்தை உள்வாங்கி NTT யும், தமிழில் ஒரு புதுக்கலவையாக ஒரு நூதனமாக சேர்க்கையாக புதிய முன்னுதாரணமாக வெளிவரவேண்டிய ஒரு தேவையிருக்கிறது. அது போலவே, உலக மெலாம் சிதறிவாழும் தமிழர்களை ஒருங்கிணைக்க வேண்டிய ஒரு தொலைக்காட்சி என்ற மிகவும் சர்ச்சைக்குரிய ஆனால் மகத்தான ஒரு பொறுப்பையும் அது சுமக்க வேண்டியிருக்கிறது. Nilanthan/Eelanaatham |