Yarl Forum
சச்சின் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39)
+--- Thread: சச்சின் (/showthread.php?tid=4535)

Pages: 1 2 3 4 5


சச்சின் - Mathan - 04-07-2005

சச்சின்: பாடல் விமர்சனம்

<img src='http://thatstamil.indiainfo.com/images27/optimized/harini-vijay-500.jpg' border='0' alt='user posted image'>

விஜய், ஜெனீலியா நடிப்பில், கலைப்புலி தாணுவின் தயாரிப்பில், ஆந்திர இளம் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத்தின் இசையில் உருவாகியுள்ள சச்சின் இளமை ததும்பும் பாடல்களுடன், விஜய் ரசிகர்களுக்கான எதிர்பார்ப்புகள் நிறைந்ததாக உள்ளது.

வழக்கம்போல "தல"யையும் விடவில்லை இளைய தளபதி. ¬முதல் பாட்டிலேயே அஜீத்தைக் குறிவைத்து வரிகள் வருகின்றன. சரி பாட்டுக்களைக் கேப்போமா?

""வா வா என் தலைவா'' ரஜினி டைப் பாட்டு. பா. விஜய் எழுதியிருக்கிறார். விஜய்யின் கொள்கை பரப்பு பாடல்களை இவர்தான் சமீப காலமாக எழுதி வருகிறார். விஜய் ரசிகர்களின் விருப்பப் பாடல்களாகவும் இருப்பதால், பா.விஜய்யின் பாட்டு தவறாமல் இடம் பெற்று விடுகிறது.

அந்த வகையில், விஜய் ரசிகர்களுக்கு குஷியூட்ட வைக்கும் பூஸ்டர் பாட்டு, ""வா வா என் தலைவா''. ரசிகர்களுக்கான பாட்டு போலத் தெரிந்தாலும், அஜீத்தை குறி வைத்து எழுதியிருப்பது போல, அஜீத்துக்கு மட்டுமல்ல நமக்கும் நிச்சயம் புரியும்.

""ஒரு தடவை ஜெயிப்பதெல்லாம் சரித்திரம் ஆகாது

தினசரி நீ ஜெயித்து விடு திசைகளெல்லாம் உன்னோடு!

கடவுளாகவும் வேண்டாம், மிருகமாகவும் வேண்டாம்

ரசிகர் ஒவ்வொருவரோடும் ரசனையோடு பழகு!''

இந்த வரிகள் நிச்சயம் அஜீத்துக்குக் கடுப்பை ஏத்தும் என்பதை சொல்ல வேண்டியதில்லை.

சங்கர் மகாதேவனின் குரல், விஜய்க்குப் பொருத்தமாக இருக்கும். இசையிலும் கலக்கியிருக்கிறார் தேவிஸ்ரீபிரசாத்.

நிறைய அட்வைஸ் வரிகள் பாட்டை ஆக்கிரமித்திருப்பதால், விஜய் ரசிகர்கள் கண்டிப்பாக இந்தப் பாட்டைக் கேட்டு "¬முன்னேற" ¬முயற்சிக்க வேண்டும்.

அடுத்து, ""கண் மூடித் திறக்கும்போது'' நா. ¬முத்துக்குமாரின் பாட்டுக்குக் குரல் கொடுத்திருக்கிறார் தேவி ஸ்ரீபிரசாத். சோலோ பாட்டு.

காதலில் விழுந்த விஜய் பாடுவது போல பாட்டு வருகிறது.

<img src='http://thatstamil.indiainfo.com/images27/optimized/harini-vijay-380.jpg' border='0' alt='user posted image'>

""கண் மூடித் திறக்கும்போது கடவுள் எதிரே வந்தது போல

அடடா என் கண் ¬முன்னே அவளே வந்தாளே!''

என்று ஆரம்பித்து,

""உன் பேரும் தெரியாதே என் பேரும் தெரியாதே,

அழகான பறவைக்கு பேர் வேண்டுமா?''

என்று தொடர்ந்து,

""உயிருக்குள் இன்னோர் உயிரை சுமக்கின்றேன் காதல் இதுவா

வீதியுலா நீ வந்தால்

தெருவிளக்கும் கண்ணடிக்கும்

நதியோரம் நீ குளித்தால்

நீருக்கும் காய்ச்சல் வரும்

பூகம்பம் வந்தால் கூட பதறாத நெஞ்சம் எனது

பூ ஒன்று மோதியதாலே பட்டென்று சரிந்தது இன்று''

என்று கவிதை போலப் போகிறது பாட்டு. ¬முத்துக்குமாரின் வரிகளில் பெரிய அளவில் விசேஷம் இல்லாவிட்டாலும், பாட்டு ரசிக்க வைக்கிறது.

""குண்டு மாங்காத் தோப்புக்குள்ளே'' கபிலனின் பாட்டு. ஜாலியான வரிகளைப் போட்டு ரசிக்க வைத்திருக்கிறார்.

"லஜ்ஜாவதியே' புகழ் ஜெஸ்ஸி கிஃப்ட்டும், "மன்மதராசா' புகழ் மாலதியும் பாடியிருக்கிறார்கள். இரண்டு குரல்களுக்கும் ஒட்டவே இல்லை என்பது இங்கே ¬முக்கியமாகச் சொல்ல வேண்டும்.



ஒருபக்கம் ஜெஸ்ஸி கிஃப்ட் கரகரவென பாடுகிறார், சைட்ல, மாலதி அவர் பாட்டுக்குக் கத்துகிறார். மென்மையாக இந்தப் பாட்டைப் பாட ¬முடியாதுதான். இருந்தாலும் "மொள்ளமா" பாடியிருக்கலாம்ல!.

எம்புட்டு நாளைக்கு இப்படிக் கத்திக்கிட்டிருக்கப் போறாரோ?

பாடல் வரிகளும் சொல்லும்படி இல்லை. ஏற்கனவே எத்தனையோ பாடல்களில் வந்த வரிகளை பொறுக்கி, எடுத்து கொடுத்தது போல இருக்கிறது.

""குண்டு மாங்காத் தோப்புக்குள்ளே

நண்டு போல வந்தாயே

யாருமில்லா நேரம் பார்த்து

கை புடிச்சாயே!

அந்த இடத்தில் விட்டுப்புட்ட, இப்ப கத்துறியே

¬முந்தானை சேலைக்குள்ளே உன்னை மூட்டைக் கட்டி வைக்கப் போறேன்''

என்று வரும் வரிகள் ஏற்கனவே பல பாடல்களில் கேட்டதுதான். விஜய்யை ரசிக்கும் பொடிசுகளுக்கு இந்தப் பாட்டு புடிக்கும்.

""டே டே கட்டிக்கோடா'' இப்பத்தாய்யா நம்ம பாட்டு வருது! ¬மும்பை குலாபி லிண்டா, விஜய்யுடன் ¬முண்டா தட்டிப் பாடியுள்ள பாட்டு.

மொத வரியிலிருந்து கடைசி வரைக்கும் "ஏஏஏஏஏ" அப்பா என்று சொல்ல வைக்கும் அளவுக்கு வரிகளில் வாலிபம் தெரிக்கிறது.

""டே டே கட்டிக்கோடா!

பசை போல என்ன ஒட்டிக்கோடா

வாடி என் பாம்பே பீடா

உடையாத கோலி சோடா''

என்று புல்லரிக்க வைக்கிறார்கள். அதென்ன உடையாத கோலி சோடான்னு கேக்கப் படாது! என்ன சொல்ல வர்றான்னு புரியுதோன்னோ?

""நான்தான்டா கம்பங் கூழு

நீதானடா மோர் மிளகாய்

நான்தானடி நாதஸ்வரம்

நீதானடி மிருதங்கம்

நான் ஒன்ன வாசிக்க

நீ என்ன வாசிக்க ...''

என்று மாறி மாறி வாசித்து நம்மை ரொம்பவே யோசிக்க வைக்கிறார்கள்.

""என்ன வச்சுக்கோ, வச்சுக்கோ என்னப் பிச்சுக்கோடா'' என்று ரொம்பத்தான் மருகுகிறார் லிண்டா.

சும்மா சொல்லக் கூடாது, இந்தப் பாட்டு, இளசுகளின் ரத்தத்தை சுண்டி இழுத்து சூடாக்கும் ஓய்!

குடும்பத்தோட மட்டும் மறந்தும் கேட்காதேள், பார்க்காதேள்!

"சச்சின்' பீட் பாட்டும் இருக்கு. வரிகள் இல்லை, வெறும் மீஜிக்தான். எதுக்குன்னு படம் பார்த்தாத்தான் தெரியும்.

""வாடி வாடி கை படாத சிடி!'' கட்டக் கடேசியா, விஜய் குரலில் ஒரு கானா. கானாவால் வளர்ந்தவர் ஆச்சே, அதனால படு ஸ்பீடில், படா உற்சாகத்துடன் பாடியிருக்கிறார்.

மென்மையான பாடல்களுக்கு விஜய் குரல் ஐஸ்க்ரீம் போல இருக்கும். ""தொட்டபெட்டா ரோட்டு மேல மு¬ட்டை பரோட்டா'' என்று ¬முன்னாடி பாடின கானாவிலும் கூட அவரது குரலில் ஒரு மென்மை தெரியும்.

ஆனால் இந்த ""வாடி வாடி கைபடாத சிடி''யில் அந்த மென்மை மிஸ்ஸிங். மாறாக, ஹை பிட்ச்சில் தம் கட்டிப் பாடியிருக்கிறார். ஆனாலும் நல்லாவே இருக்கு.

இது, ""சாலையோர தாபா,'' ரோட்டோர டீக்கடைகளுக்காக எழுதப்பட்ட ஸ்பெஷல் பாட்டு. அப்படியே நம்ம அஜீத்தையும் லேசு பாசா சீண்டியிருக்காரு விஜய்.

கானாதான் என்றாலும் கலக்கலாக வரிகளைப் போட்டிருக்கிறார் இளங்கோ என்ற புதுமு¬க கவிஞர்.

""வா வா வாடி கை படாத சிடி,

தௌசன்ட் வால்ட் பல்பு போல கண்ணு கூசுதேடி

நான் அவுத்து விடும் பாட்டுல

விசில் சத்தம் நாட்டுல

18 வயசுல பேசிக்கிட்டா தப்பில்லே

தொட்டபெட்டா மலைல மட்டும் ஏறாதே! (ஏனுங்க்னா?)

ஏ சோ¬ எதுக்கு பிலி¬

நீ நீயாக வாழ்ந்து பாரு மா¬,

பந்தா எதுக்குடா கொஞ்சம் அடங்குடா(நோட் திஸ் பாய்ன்ட் யுவர் ஆனர்!)

நேத்து வெந்த நாயர் கடை பன்னுதானே! (ரசிக்க வைக்கும் வரி)

என்று ஆரம்பித்து ஹை பிட்ச்சில் போயிருக்கிறார் விஜய்.

பாட்டோட ஆரம்பத்துல, ரஜினி ஸ்டைலில், "அபி தேக்கோ, சூப்பிஸ்தானு' (அப்படீன்னா?) என்று கூறி ரஜினியை தான் தொடர்ந்து காப்பி அடித்து வருவதை மறக்காமல் நினைவூட்டுகிறார் விஜய்.

ஒரு வழியாப் பாட்டு கேட்டு ¬முடிச்ச பிறகு யோசிச்சா, பாடல் வரிகளை விட இசைதான் மனதில் நிற்பதை உணர ¬முடியும். நீங்களும் கேட்டுப் பாருங்களேன்!

தட்ஸ் தமிழ்


- Mathan - 04-07-2005

சச்சின் பாடல்களை இங்கே தரவிறக்கம் செய்யலாம் .......

http://www.tamilbeat.com/tamilsongs/newrel...eleases/sachin/


- Mathan - 04-07-2005

பிபாஷாவுக்குப் பிடிக்காத ஹீரோக்கள்!

<img src='http://thatstamil.indiainfo.com/images27/optimized/bipasa-vijay-375.jpg' border='0' alt='user posted image'>

"கவர்ச்சிப் பிசாசு' என்று பாலிவுட்டில் செல்லமாக அழைக்கப்படும் பிபாஷா, சச்சின் மூலம் தமிழிலும் கால் வைத்துள்ளார்.

மு¬தல் படத்திலேயே அவர் பரபரப்பாக பேசப்பட்டார். அவரது சம்பளம் மட்டும் அதற்கு காரணமல்ல, சின்னப் பையன் விஜய்யுடன் நடிக்கும் பிபாஷா, பெரியவர் கமலுடன் நடிக்க வந்த வாய்ப்பை நிராகரித்த காரணத்தால்தான்.

அதுகுறித்து பிபாஷாவிடமே கேட்போமே!

கமலுடன் நடிக்க மறுத்தேன் என்று கூற ¬முடியாது. உண்மையில் நான் கமல் சாருடன் ¬முன்பே ஒரு படத்தில் (பஞ்ச தந்திரம்?) நடித்திருக்க வேண்டும். அப்போது எனது கால்ஷீட் ஒத்துவரவில்லை. இதனால் அதில் நடிக்க மு¬டியாமல் போய் விட்டது.

இப்போது ¬"மும்பை எக்ஸ்பிரஸ்' படத்திலும் வாய்ப்பு வந்தது. துரதிர்ஷ்டவசமாக இப்போதும் கால்ஷீட் பிரச்சினை வந்ததால், நடிக்க ¬முடியாமல் போனது. உண்மையில் இது எனக்கு ஏமாற்றமாக இருந்தது. இதுதான் காரணம், வேறு காரணம் எதுவும் இல்லை.

விஜய்யுடன் நடித்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. அமைதியாக இருக்கிறார், ஆர்ப்பாட்டமாக ஆடுகிறார், அருமையாக நடிக்கிறார்.

எனக்கு பாலிவுட்டில் சில ஹீரோக்களுடன் நடிக்கப் பிடிக்கவில்லை. அவர்களின் கெட்ட பழக்கங்கள் சில எனக்குப் பிடிக்கவில்லை. அதனால் பல இந்திப் படங்களை நான் மறுத்திருக்கிறேன்.

அதேபோல, எனது ஹீரோக்கள் யார் என்பதை ¬முடிவு செய்யும் உரிமையும் எனக்கு இருக்கிறது. என்னைத்தான் நடிக்க வைக்க வேண்டும் என்று கூறும் ஹீரோக்கள், எனக்குப் பொருத்தமானவர்களா என்று பார்த்துத்தான் நான் எனது ¬முடிவைத் தெரிவிப்பேன்.

சீரியஸாக போகிறார் என்று பிரேக் போட்டு உங்களைப் பற்றிச் சொல்லுங்களேன் என்று டிராக்கை மாற்றினோம்.

என்னைப் பற்றியா? நான் ரொம்ப அழகானவள் என்று எல்லோருமே கூறுகிறார்கள். சமீபத்தில் அமிதாப் பச்சன் கூட எனது அழகைப் புகழ்ந்து தள்ளினார், அத்தோடு எனக்கு நிறைய அறிவும் உள்ளதாக பாராட்டினார்.

அப்ப பிபாஷாவுக்கு தமிழில் அறிவழகி என்று பெயர் வச்சிரலாமா?

http://thatstamil.indiainfo.com/specials/c...es/bipasha.html


- kavithan - 04-08-2005

சச்சின் படபாடல் இப்போது ஒலிபரப்பாகிறது

http://www.jetaudio.com/jetcast_directory/...ile/2385942.pls


- KULAKADDAN - 04-08-2005

என்ன கவிதன் வலு ஜோரத்தான் போகுது.............. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Mathan - 04-08-2005

மும்முனை போட்டியில் சச்சின்

கமல், ரஜினியுடன் போட்டி போடும் 'தில்' விஜய்க்கு மட்டுமே இருக்கிறது. ஏப்ரல்-14ம் தேதி தமிழ் புத்தாண்டில் 'மும்பை Xபிரஸ்', 'சந்திரமுகி'யுடன் ரிலீஸாகும் ஒரே படம் விஜய்யின் 'சச்சின்'.

மும்பை Xபிரஸின்' இயக்குனர் அனுபவஸ்தர். கமலை வைத்தே பல படங்களை இயக்கிய சிங்கீதம் சீனிவாசராவ். 'சந்திரமுகி' இயக்குனர் பி. வாசு வசூல் சாதனை படைத்த 'சின்ன தம்பி'யை தந்தவர். 'உழைப்பாளி', 'மன்னன்' என ரஜினியை வைத்து இரண்டு சூப்பர் ஹிட் படங்களை இயக்கியிருக்கிறார்.

ஆனால், 'சச்சின்' இயக்குனர் ஜானுக்கு இந்த பாரம்பரியமில்லை. 'சச்சின்' அவருக்கு முதல் படம். ஆனாலும் அசராமல் மும்முனை போட்டிக்கு சச்சின் தயார். இது பற்றி கேட்டால் விஜய் பதறுகிறார் (போலியாக?)

"யார் யார்கூட போட்டி சார்? ஏதோ என் வயசுல உள்ள நடிகரோ, இல்ல சின்ன வயசு நடிகரோட படமோ சேர்ந்து வந்தால் போட்டினு சொல்லலாம். கமல்சார், ரஜினிசார் கூட நான் போட்டி போட முடியுமா? அவங்க ஜாம்பவான்கள்... லெஜன்ஸ்! பண்டிகை நாள் நாலு படம் ரிலீஸாகும்.அதில் ஒன்று 'சச்சின்'. மத்தபடி போடடிங்கிற வார்த்தையே தப்பு"

விஜய் என்ன விளக்கம் கூறினாலும் கமல், ரஜினி, விஜய் ரசிகர்கள் இதை போட்டியாகவே நினைக்கிறார்கள்.

மக்கள் தீர்மானத்தை மகேசனால் கூட மாற்றமுடியாது!

சினி சவுத்


- kavithan - 04-08-2005

KULAKADDAN Wrote:என்ன கவிதன் வலு ஜோரத்தான் போகுது.............. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
உங்கள் விருப்பபாட்டு போட்டம் கேட்டீர்களா.. ?


- tamilini - 04-08-2005

Quote:யார் யார்கூட போட்டி சார்? ஏதோ என் வயசுல உள்ள நடிகரோ, இல்ல சின்ன வயசு நடிகரோட படமோ சேர்ந்து வந்தால் போட்டினு சொல்லலாம். கமல்சார், ரஜினிசார் கூட நான் போட்டி போட முடியுமா? அவங்க ஜாம்பவான்கள்... லெஜன்ஸ்! பண்டிகை நாள் நாலு படம் ரிலீஸாகும்.அதில் ஒன்று 'சச்சின்'. மத்தபடி போடடிங்கிற வார்த்தையே தப்பு"
ஓல்ட்டுகள் சும்மா அப்பா வேடம் போடுறதுக்கு.. என்ன இருந்தாலும். ஒலப்பரீட்சைதான்.. பாப்பம். :mrgreen:


- KULAKADDAN - 04-08-2005

தமிழ்படத்துக்கு பிடிச்சிருக்கும் சனி முன்னனி ஹீரோக்களின் துதி தான். பாடல்களின் வார்த்தை ஜாலங்களும், காட்சி அமைப்பில் கதாநாயகன் செய்யும் வண்ண ஜாலங்களும் அடிதட்டு மக்கள் முதல் மேல் தட்டு வர்க்கம் வரை கதாநாயகனுக்கு தட்டு தூக்க வைக்கிறது.கதாநாயகன்களை துதி பாடி வரும் பாடல்களும்,கதாநாயகனுக்கு பில்ட்-அப் கொடுத்து வரும் பாடல்களும் கேட்டு கேட்டு காதுகள் தான் புண்ணாகிப் போகிறது. ஊருக்கு நல்லது செய்யும் பெரியவராக,சேரி மக்களுக்கு நல்லது செய்யும் சேவகனாக..... டேய் டேய் நிப்பாட்டுங்கடா.... திருந்த விடுங்கடா மக்களை.

வேகமாக வளர்ந்துக் கொண்டிருக்கும் இந்த கதாநாயகனுக்கு சச்சின் அடிக்கும் செஞ்சுரி கணக்காக ஐஸ் கட்டிகளை பாடல்களில் வைத்து மக்களை நோக்கி விளாசுகிறார்கள். விளாசிக்கிட்டே இருங்க... ஆனால் என் கடன் இந்த மாதிரி பாடல்களை போட்டுத் தாக்குவதே.

கதாநாயகன் துதிக்கு வழிவகுக்கும் 'திருப்பாச்சி'யிலிருந்து இந்தப் பாடலும் என் பதிலடிகளும் கீழே....(இந்த வார பாடல்களை போட்டுத் தாக்கும் கோட்டா இத்துடன் முடிவடைந்தது)

பாடல் வரி நீல கலரிலும், என்னுடைய பதிலடிகள் கருப்பு கலரிலும் இருக்கிறது.


நீ எந்த ஊரு நான் எந்த ஊரு முகவரி தேவையில்ல
நீ என்ன உறவு நான் என்ன உறவு சொந்தத்தில் அர்த்தமில்ல
தொப்புள் கொடி உறவா.... இல்ல இல்ல
கட்சிக் கொடி உறவா... இல்ல இல்ல
மேட்டுக் குடி உறவா... இல்ல இல்ல
கள்ளுக் கடை உறவா... இல்லவே இல்ல
<b>ஆக மொத்தம் நீ பொறம்போக்குங்கிறதை சுத்தி வளச்சி சொல்றே...</b>

உன்னை யாரோ பெத்திருக்க என்னை யாரோ பெத்திருக்க
ஆனாலும் நீயும் நானும் அண்ணன் தம்பிடா....
<b>எலேய் எலேய் எலேய்.... நிறுத்து... நிறுத்து மேலே உறவு மற்றும் சொந்தத்தில அர்த்தமில்லைன்னு சொல்லிட்டு இப்ப என்ன பங்காளி ஆகலாமென்று பாக்குறீயா? சொத்துல ஒரு பைசா கிடையாது. ஓடிப்போ....</b>

சாமி வரம் தந்துட்டா கொட்டும் மழை கொட்டும்டா
ஏழை மனம் பொங்கும்டா நான் அய்யனாரு பக்தண்டா

<b>நீ கொஞ்சம் வாயை மூடிக்கிட்டு பாட்டை நிப்பாட்டினாலே மழை பெய்ஞ்சிரும். ஏழைங்க உன் படத்துக்கு தெண்டத்துக்கு காசு செலவழிக்கிறத நிப்பாட்டினாலே ஏழை மனம் பொங்கிரும்டா...</b>

மன்னை நம்பி வேரு விண்ணை நம்பி யாரு
என்னை நம்பி கெட்டதில்ல பாரு
அது தான் ரசிக மன்ற தறுதலைகளை பார்க்கிறேனே...

பொறப்பு இறப்பு அவன் கையில
நாம வாழும் வாழ்க்கை நம்ம கையில
ஸ்ஸ்... அய்யோ அப்பா... எத்தனை வாட்டி இந்த மாதிரி வரிகளை கேட்கிறது. இத சொல்லி சொல்லியே தமிழ்மக்கள் தலையில மிளகாய் அரைக்கிறீங்களே...

உனக்கொரு பேரு எனக்கொரு பேரு
ஒன்னு சேர்த்து பாரு இந்தியன்னு பேரு
ஆமா உன் பேரு 'இந்தி' அவன் பேரு 'யன்'. ரெண்டு சேர்ந்த இந்தியன்.

அம்மையப்பன் தானடா நம்மையாலும் சாமிடா
கருவரை தோழிடா நம்ம உயிர் நாடிடா
<b>எதுக்கு இப்ப தேவையில்லாம இந்த மாதிரி பில்ட்-அப் எல்லாம்.</b>
கண்ணை பொத்தி வாழு காதை பொத்தி வாழு நம்ம காந்தி மொழி கேளு
<b>அப்படியே மூக்கை பொத்தி வாழு. போய் சேர்ந்திரலாம் சீக்கிரம்.</b>

ஆத்திகம் தான் மூச்சி சத்தியம் தான் பேச்சி ஆசையெல்லாம் போச்சி
நம்ம கூட்ட கொடியேத்து
<b>ஆத்திகம் தான் மூச்சி. ம்ம்ம்... டியர் தி.க பேராண்டீஸ். நோட் த பாயிண்ட்.
சத்தியம் தான் பேச்சி. ம்ம்... நீ மொதல்ல வாயை திறந்து பேசிப் பழகு. அப்புறம் நீ என்ன பேசுறேன்னு கேட்கிறோம்.
என்னது நம்ம கூட்ட கொடியேத்தனுமா? அங்க தொட்டு இங்க தொட்டு கூட்டத்தை சேர்த்து கோட்டையில் முதலமைச்சர் சேர் வேணும். சரி தானே?</b>
பொறப்பு இறப்பு அவன் கையில
நாம வாழும் வாழ்க்கை நம்ம கையில

<b>ஆண்டவா....நீ ஏம்பா பொறப்பு இறப்பு டிபார்ட்மெண்ட கையில வச்சிருக்கே. வாழ்க்கை டிபார்ட்மெண்டை நீ வச்சிக்கிட்டு பிறப்பு இறப்பு டிபார்ட்மெண்டை மனுசங்க கையில கொடுத்துருப்பா... இல்லேன்ன இதையே போட்டு பல பாட்டுகளில் உருட்டிக் கொண்டிருப்பார்கள்.</b>
இப்படியே அடுத்தவாரக் கடைசியில் 'சந்திரமுகி' பாடலோடு வருகிறேன்


From
போட்டுத் தாக்கியது!!! அல்வாசிட்டி.விஜய்
நன்றி.............


- Mathan - 04-10-2005

<img src='http://www.tamilcinema.com/IMAGES/naiyandi/naiyandi06.jpg' border='0' alt='user posted image'>

Tamil Cinema


- Mathan - 04-13-2005

திடீர் சிக்கலில் "சச்சின்": நாளை ரிலீஸாகுமா?


விஜய் நடித்துள்ள "சச்சின்' படப் பாடலை, தெலுங்குப் படத்திலிருந்து திருடி விட்டதாக கூறி தெலுங்குப் படத் தயாரிப்பாளர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதையடுத்து "சச்சின்' படச் சுருளை வினியோகஸ்தர்களிடம் வழங்க உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

விஜய் நடித்து நாளை (தமிழ்ப் புத்தாண்டு தினத்தில்) வெளியாகவுள்ள படம் "சச்சின்'. இப்படத்தை கலைப்புலி தாணு தயாரித்துள்ளார். பிரபல இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் இயக்கியுள்ளார். தெலுங்குப் பட இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார்.

இந் நிலையில் தெலுங்கில் சிரஞ்சீவி நடித்து வெளியான "சங்கர்தாதா எம்.பி.பி.எஸ்.' (வசூல்ராஜாவின் தெலுங்கு ரீமேக்) படத்தை தயாரித்த ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனத்தைச் சேர்ந்த பாப்பய்யா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், நாங்கள் தயாரித்த "சங்கர்தாதா எம்.பி.பி.எஸ்.' படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் தான் இசையமைத்தார். அவரே தற்போது சச்சின் படத்திற்கும் இசையமைத்துள்ளார்.

"சங்கர்தாதா எம்.பி.பி.எஸ்'. படத்தில் வரும் "நா பேரு காஞ்சனமாலா' என்ற பாடலுக்கான ட்யூனை, அப்படியே அச்சுப் பிசகாமல், சச்சின் படத்தில் வரும் "கட்டிக்கோடா' என்ற பாடலுக்கு தேவி ஸ்ரீபிரசாத் பயன்படுத்தியுள்ளார்.

"சங்கர்தாதா' பாடல்களுக்காக இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத்துக்கு ரூ. 30 லட்சம் சம்பளம் கொடுத்தோம். அவரும் 8 பாடல்களுக்கு இசையமைத்தார். இதில் "நா பேரு காஞ்சனமாலா' பாட்டு சூப்பர் ஹிட் ஆனது.

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் என்றாலும் கூட அதைப் பயன்படுத்தும் உரிமை எங்களது நிறுவனத்திடமே உள்ளது. இதே ட்யூன்களை நாங்கள் எங்களது அடுத்த படத்திலும் பயன்படுத்துவதாக இருந்தோம். ஆனால் சச்சின் படத்தில் இந்த ட்யூனை அவர்கள் பயன்படுத்தியுள்ளனர்.

சச்சின் பட ஆடியோ கேசட் விற்பனை மூலம் தயாரிப்பாளர் தாணு பல லட்சம் சம்பாதித்து விட்டார். தற்போது படம் ரிலீஸாகவுள்ள நிலையில் படச் சுருள் அவரிடம் வழங்கப்பட உள்ளது.

எனவே இதற்குத் தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார் பாப்பய்யா.

மனுவை விசாரித்த நீதிபதி கண்ணதாசன், சச்சின் படச் சுருள் பெட்டிகளை வினியோகஸ்தர்களிடம் அளிக்கக் கூடாது என்று தடை விதித்து விசாரணையை இன்றைக்கு (13ம் தேதிக்கு) ஒத்திவைத்தார்.

நாளை (14ம் தேதி) படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கால் சச்சின் படம் வழக்கில் சிக்கியுள்ளது. தடை நீக்கப்பட்டால் தான் படம் ரிலீஸ் ஆகும்.

தட்ஸ் தமிழ்


- tamilini - 04-13-2005

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Mathan - 04-14-2005

"சச்சின்' படத்தை வெளியிடுவதில் சிக்கில் தீர்ந்தது

<img src='http://www.indiavarta.com/gallery/images/2004/dec/9/pic1.jpg' border='0' alt='user posted image'>
<b>விஜய் மனைவியுடன்</b>


சென்னை, ஏப்.14:விஜய் நடித்த "சச்சின்' திரைப்படம், திட்டமிட்டபடி வியாழக்கிழமை வெளியாகிறது. இப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு சுமுகமாக தீர்க்கப்பட்டது.

தெலுங்கில் வெளியான சங்கர் தாதா எம்.பி.பி.எஸ். என்ற படத்தில் இடம் பெற்ற "நா பேரு காஞ்சனமாலா' என்ற பாடலின் மெட்டு, அப்படியே சச்சின் திரைப்படத்தில் இடம் பெற்றிருப்பதாகவும் அந்தப் பாடலுடன் அப்படத்தை வெளியிடக் கூடாது என்றும் தெலுங்கு படத் தயாரிப்பாளர் பாப்பையா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

"டேய் டேய் கட்டிக்கோடா' என்று தொடங்கும் அப்பாடலின் மெட்டை மாற்றி வேறு மெட்டில் அந்தப் பாடலுக்கு இசையமைத்துப் படத்தை வெளியிடுவதாக சச்சின் திரைப்படத்தின் தயாரிப்பாளர் தாணு சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து இவ் வழக்கை நீதிபதி என்.கண்ணதாசன் பைசல் செய்தார்.

Dinamani


- Mathan - 04-15-2005

<img src='http://cinesouth.com/images/specials/sachinspl08042005.jpg' border='0' alt='user posted image'>

எம்.ஜி. ஆருக்குப் பிறகு திட்டமிடலுடன் படம் பண்ணுவதில் முதலிடத்தில் இருக்கிறார் விஜய். 'கில்லி' என்ற மாபெரும் வெற்றிப் படம். அதன் நூறாவது நாள் தாண்டியதும் 'மதுர'. 'மதுர' செஞ்சுரி அடிக்கும்போது திருப்பாச்சி'. 'வசூலில் 'திருப்பாச்சி' அறுவடை முடிக்கும் நேரம் 'சச்சின்'. மூன்று மாதங்களுக்கொரு சிக்ஸரை அசராமல் அடிப்பதில் விஜய் ஒரு கில்லி.

வழக்கமான விஜய் படங்களிலிருந்து வித்தியாசமானது 'சச்சின்'. முதலில் கதை. தொடர்ந்து ஆக்ஷ்ன் படங்கள் செய்துவரும் விஜய்க்கு இதில் மென்மையான காதலன் வேடம்.

பொதுவாக கதை கேட்டு இரண்டு நாள்கள் கழித்தே எஸ், ஆர் நோ சொல்வார். ஆனால் 'சச்சின்' கதை கேட்கத் தொடங்கிய அரை மணி நேரத்தில் விஜய் உறுதி செய்துவிட்டார். இந்தப்படத்தில் நாம்தான் நடிக்கிறோம் என்று.

படத்தின் இயக்குனர் ஜானுக்கு இது முதல் படம். அதனாலென்ன? 'உதிரிப்பூக்கள்' தந்த மகேந்திரனின் மகனுக்கு முதல் படம் என்ற பயம் இருக்குமா? "ஆக்ஷ்ன் என்றதும் 'கில்லி' எப்படி ஞாபகம் வருதோ, அதுபோல மென்மையான காதல் கதைனு சொன்னால் 'சச்சின்' ஞாபகம் வரும். பத்து வருஷம் கழிந்தாலும்" விஜய்யிடம் ஜான் சொன்ன வார்த்தைகள் இவை.

'பாய்ஸ்' படத்தில் நடித்த ஹரிணி விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். இப்போது இவரது பெயர் ஜெனிலியா டிஸோஸா. இவரும் விஜய்யும் கல்லூரி மாணவர்கள். இவர்களே ஹீரோ, ஹீரோயினாக இருப்பதால் இருவரும் காதலிக்கிறார்கள்.

விஜய்க்கு துறுதுறுவென சச்சின் பேட்டிங் போல அசத்தல் கேரக்டர். ஒருமுறை இவர் போல் வாழமாட்டோமா என்று ஏங்கும் அளவிற்கு ஜாலி பேர்வழி. பைக் பிரியர்.

இவர்கள் இருவருக்கும் நடுவில் இன்ப இடைச்செருகலாக பிபாஷாபாசு. இந்தி இதயங்களை காதல் மாசுபடுத்திவிட்டு இங்கு அடித்து தூசி கிளப்ப வந்திருக்கிறார். இவரும் விஜய்யும் போடும் இளமை ஆட்டம் கள்வெறி கொள்ளச்செய்யும்.

"இந்தப் படத்தை பொறுத்தவரை காதலும் ஆக்ஷ்னும் கலந்திருக்கும். விஜய்யும், ஜெனிலியாவும் காதலர்கள். க்ளைமாக்ஸுக்கு அரைமணி முன்பு கதையில் ஒரு திருப்புமுனை வரும். அதெப்படி விஜய்யும், ஜெனிலியாவும் காதலிக்கமுடியும் என்று ரசிகர்களே யோசிக்கத் தொடங்குவார்கள். ஆனால் விஜய் தொடர்ந்து காதலித்துக் கொண்டிருப்பார். கடைசியில் வெற்றியும் பெறுவார். அது எப்படி என்பதை சஸ்பென்ஸாக சொல்லியிருக்கிறோம். அதனால்தான் டைட்டிலில் 'மிராக்கிள் ஆஃப் லவ்' என்று போடுகிறோம்" எதிப்பார்ப்பை அதிகரிக்கிறார் ஜான்.

சச்சினின் பெரிய பலம் கேமரா. ஊட்டி குளிரை அப்படியே பிரேமுக்கு ட்ரான்ஸ்பர் செய்திருக்கிறார் ஜீவா. பல காட்சிகள் சென்னை செட்டில் எடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அது வெளியே தெரியாதவாறு செய்ததில் ஆர்ட் டைரக்டருக்கும் கேமராமேனுக்கும் பெரும்பங்கு உள்ளது.

* ஊட்டியில் 'சச்சின்' ஷூட்டிங். தினமும் நூற்றுக்கணக்கில் ரசிகர்கள் விஜய்யை வாழ்த்தியதில் அசந்து போனார் பிபாஷா. "பார்க்க பாவமாய் இருக்கார். அவருக்கு இவ்வளவு பாப்புலாரிட்டியா?"

* கமலுக்கு நோ சொன்ன பிபாஷா சச்சினில் நடிக்க இரண்டு காரணம். விஜய் மற்றும் கதை.

* கபிலன், பா. விஜய், நா. முத்துக்குமார் பாடல்களுக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார்.

* 'சச்சின்' தயாரிப்பாளர் எஸ். தாணு. ஆகவே தமிழ்நாடு முழுக்க 'சச்சின்' விளம்பரங்களே மின்னுகின்றன. விளம்பரங்களை பொறுத்துவரை 'சந்திரமுகி', 'மும்பை Xபிரஸை' முந்திவிட்டார் 'சச்சின்'.

* பெயர் 'சச்சின்' என்றாலும் இது கிரிக்கெட்டை பற்றிய படமல்ல. படத்தில் விஜய்யின் பெயர் சச்சின். எளிமையான அதேநேரம் வலிமையான, குழந்தைகளை கவரும் பெயர் என்பதால் இந்த டைட்டில் என்கிறார் இயக்குனர் ஜான்.

* படத்தில் விஜய்க்கு அப்பாவாக நடித்திருப்பவர் ரகுவரன். பல மாதங்களாக நடிக்காமலிருந்த ரகுவரன், விஜய் அடம்பிடித்து அழைத்ததால் நடித்துக்கொடுத்துள்ளார். "என் தனிமையை போக்கிய விஜய்க்கு நன்றி" என பதிலுக்கு நெகிழ்ந்திருக்கிறார் ரகுவரன்.

* விஜய், வடிவேல் காமெடி சோடை போனதில்லை. இந்தப்படத்திலும் இவர்கள் இருவரும் அடித்து தூள்கிளப்பியிருக்கிறார்கள்.

மொத்தத்தில் இளமையின் இன்னொரு பெயர் 'சச்சின்'.

சினி சவுத்


- Mathan - 04-15-2005

பாடல் 'கட்': நிபந்தனையுடன் ரிலீஸான 'சச்சின்'


<img src='http://thatstamil.indiainfo.com/images27/optimized/sachin3-500.jpg' border='0' alt='user posted image'>
<b>விஜய்க்கு பாலாபிஷேகம் செய்யும் ரசிகர்கள்</b>

சச்சின் படத்தின் பாடலுக்குத் தடை விதித்து, அந்தப் படத்தை திரையிட உயர் நீதிமன்றம் நிபந்தனையுடன் அனுமதி வழங்கியது. இதையடுத்து அந்தப் படம் திட்டமிட்டபடி நேற்று வெளியானது.

சச்சின் படத்தில் எங்கள் படத்தின் பாடலை சுட்டு டியூன் போட்டு விட்டார்கள் என ஆந்திர திரைப் படத் தயாரிப்பாளர் ஒருவர் வழக்குத் தொடர்ந்தார்.

சிரஞ்சீவி நடித்து வெளியான "சங்கர்தாதா எம்.பி.பி.எஸ்.' (வசூல்ராஜாவின் தெலுங்கு ரீமேக்) படத்தை தயாரித்த ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனத்தைச் சேர்ந்த பாப்பய்யா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில்,

நாங்கள் தயாரித்த "சங்கர்தாதா எம்.பி.பி.எஸ்.' படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் தான் இசையமைத்தார். அவரே தற்போது சச்சின் படத்திற்கும் இசையமைத்துள்ளார்.

<img src='http://thatstamil.indiainfo.com/images27/optimized/sachin2-480.jpg' border='0' alt='user posted image'>

"சங்கர்தாதா எம்.பி.பி.எஸ்'. படத்தில் வரும் "நா பேரு காஞ்சனமாலா' என்ற பாடலுக்கான ட்யூனை, அப்படியே அச்சுப் பிசகாமல், சச்சின் படத்தில் வரும் " டேய் டேய் டேய் கட்டிக்கோடா' என்ற பாடலுக்கு தேவி ஸ்ரீபிரசாத் பயன்படுத்தியுள்ளார். எனவே படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதி கண்ணதாசன் விசாரித்தார். அப்போது சச்சின் படத் தயாரிப்பாளரான கலைப்புலி எஸ்.தாணுவின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுப்பிரமணியம்,

சங்கர் தாதாவில் 8 பாடல்களுக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்தார். அதற்கு அவருக்கு ரூ. 30 லட்சம் ஊதியமாகத் தரப்பட்டது. எங்கள் படத்தில் ஒரு பாடலை மட்டும் பயன்படுத்தியிருக்கிறோம். அதற்காக ரூ. 5 லட்சம் வேண்டுமானால் டெபாசிட் செய்கிறோம் என்றார்.

இதை ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனத்தின் வழக்கறிஞர் ராமனுஜம் ஏற்கவில்லை. ரூ. 60 லட்சம் தர வேண்டும், இல்லாவிட்டால் படத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்றார்.

சுப்பிரமணியம்: தெலுங்கில் அந்தப் படமே பிளாப் ஆகிவிட்டது. இந் நிலையில் இவ்வளவு பணம் கேட்பது நியாமல்ல.


<img src='http://thatstamil.indiainfo.com/images27/optimized/sachin1-500.jpg' border='0' alt='user posted image'>
<b>அலங்கரிக்கப்பட்ட தியேட்டர்</b>

ராமானுஜம்: படத்தின் இசை வெற்றி பெற்றது. பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகின.

இதையடுத்து இரு படங்களின் பாடல்களையும் ஆடியோ கேசட்டில் போட்டுக் கேட்டார் நீதிபதி. இதையடுத்து இரு தரப்பினரும் கலந்து பேசுமாறு நீதிபதி அறிவுறுத்தினார். அரை மணி நேரம் ஆலோசனை நடத்திவிட்டு வந்த அவர்கள் மீண்டும் விவாதத்தைத் தொடங்கினர்.

சுப்பிரமணியம்: வேண்டுமானால் ரூ. 15 லட்சம் டெபாசிட் செய்கிறோம்.

ராமானுஜம்: நாங்கள் வேண்டுமானால் ரூ. 15 லட்சம் தருகிறோம். அதை வாங்கிக் கொண்டு சச்சின் படத்தை ரிலீஸ் செய்யாமல் இருங்களேன்.

<img src='http://thatstamil.indiainfo.com/images27/optimized/sachin4-400.jpg' border='0' alt='user posted image'>
<b>விஜய்க்கு பாலாபிஷேகம் செய்யும் ரசிகர்கள்</b>

இதையடுத்து தீர்ப்பு வழங்கிய நீதிபதி கண்ணதாசன் கூறியதாவது:

டேய் டேய் டேய் கட்டிபிடிடா பாடலில் தற்போதுள்ள இசை, பின்னணி இசை இல்லாமல் சச்சின் படத்தை திரையிடலாம். வேண்டுமானால் வேறு இசையை இந்தப் படத்துக்கு பயன்படுத்தலாம். இதன் அடிப்படையில் சச்சின் படம் திரையிட அனுமதிக்கப்படுகிறது என்றார்.

இது குறித்து சச்சின் தயாரிப்பாளரான கலைப்புலி எஸ்.தாணு கூறுகையில்,

படம் திட்டமிட்டபடி வெளியாகும். முதல் 2 நாட்கள் டேய் டேய் பாட்டுக்குரிய காட்சிகள் படத்தில் இடம் பெறாது. அதற்குள் புது மெட்டு போட்டு பாடல் காட்சியை படத்தில் சேர்ப்போம் என்றார்.

இதனால் இந்த பாடல் கட் செய்யப்பட்டு நேற்று படம் ரிலீஸ் ஆனது. நாளை அல்லது மறுதினத்துக்குள் புதிய இசையுடன் இந்தப் பாடல் படத்தில் சேர்க்கப்படும் என்று தெரிகிறது.

ரஜினி ரசிகர்களுக்கு இணையாக விஜய்யின் ரசிகர்களும் அவரது கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்தும், பூ மாலைகள் தூவியும் 'பக்தியை' வெளிப்படுத்தினர். திரையில் விஜய் தோன்றும்போதெல்லாம் கையிலேயே கற்பூரம் எரித்து அதைக் காட்டி பூரித்துப் போனார்கள் அந்த கை புண்ணான ரசிகர்கள்.

thats tamil


- Mathan - 04-16-2005

சச்சின் - விமர்சனம்


சமீப காலங்களாகவே சிக்ஸரும், பவுண்டரிகளுமாக அடித்துக் கொண்டிருக்கிற விஜய்க்கு ஏற்ற தலைப்பு. ஒரே கல்லூரியில் படிக்கும் ஜெனிலியாவுக்கும், விஜய்க்கும் காதல். அதை வெளியில் காட்டிக் கொள்ளாத இருவருக்கும் நடக்கிற இனிப்பான ஊடல்தான் கதை. எங்கோ பார்த்த மாதிரி இருக்கே என்று மண்டையை பிய்த்துக் கொள்பவர்கள், அதிகம் சிரமப்பட வேண்டாம். குஷியின் குளோனிங்தான் சச்சின்.

காதல் தேவதையாக வலம் வரும் ஜெனிலியாவை கண்டு மொத்த கல்லூரியும் பித்தம் பிடித்து அலைகிறது. ஆனால் விஜயோ, இதெல்லாம் ஒரு ஃபிகரா என்கிறார் உள்ளுக்குள் பொங்குகிற காதலை அடக்கிக் கொண்டு. இது போதாதா? ஈகோ வெடிக்கிறது. ஒரு கட்டத்தில் காதலை சொல்லும் விஜயிடம், எனக்கு அந்த மாதிரி எண்ணமெல்லாம் இல்லை என்கிறார் ஜெனிலியா. எண்ணி முப்பது நாளுக்குள் உன்னை தானாக வந்து ஐ லவ் யூ சொல்ல வைக்கிறேன் என்று விஜய் சவால் விட, அந்த முப்பதாவது நாள்...? க்ளைமாக்ஸ்!

வர வர அழகாகிக் கொண்டே போகிறார் விஜய். வந்திட்டேங்ணா... என்று சொல்லிக் கொண்டே ஓடிவரும் அவரின் நக்கலையும், நையாண்டியையும் ரசித்துக் கொண்டேயிருக்கலாம். போதும் போதாததற்கு வடிவேலு காம்பினேஷன் வேறு! அவர் அதட்ட, இவர் பயப்படுவது போல் ஒடுங்க, ரகளையோ ரகளை! வீட்டில் தன்னந்தனியே வசீகரா பாடலுக்கு அரை ஸ்கர்ட்டுடன் ஆட்டம் போடும் ஜெனிலியா, விஜய் பார்த்துவிட்டார் என்று தெரிந்ததும் அவசர அவசரமாக புத்தகம் ஒன்றை எடுத்து மறைக்க வேண்டியதை மறைப்பது ஜாலி. இதை போய் காலேஜ்ல சொன்னே...? என்று தானாக போய் பொறியில் மாட்டுகிறாரே, அது இன்னுமோர் ஜாலி. மறுநாள் கல்லூரியில் மாணவிகள் மத்தியில் வசீகரா பாட்டுக்கு விஜய் ஆட, ஜெனிலியா பொருமி நடந்ததை சொல்லி உளறுவதெல்லாம் இளமை திருவிழா.

ஜெனிலியா. பார்ப்பவர்களை பரவசப்படுத்தும் பட்டாம்பூச்சி!

பிபாஷா...? பாலிவுட் அழகிற்கு கோலிவுட்டில் வேறு அர்த்தம் போலிருக்கிறது.

இதை முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக்க வேண்டும் என்று முடிவெடுத்த இயக்குனர், லொள்ளுசபா சந்தானத்தை எதற்கு சேர்த்தார் என்பதுதான் புரியவில்லை. அந்த ரீல்களை வடிவேலுவுக்கு தாரை வார்த்திருந்தால், கோடை தாகத்திற்கு குளிர் மோரை வார்த்த புண்ணியம் கிடைத்திருக்கும். இந்த வளவள ஆசாமி டி.வி நேயர்களையே சோதனைக்குள்ளாக்குபவர். சினிமா பிரமோஷன் வேறா?

ஜீவாவின் கேமிராவுக்கு இருமலே வந்திருக்கும். எல்லாக் காட்சிகளிலும் புகை. கேட்டால் ஊட்டியின் மிஸ்ட் என்பார்கள்.

இசை தேவி ஸ்ரீ பிரசாத். பாடல்கள் இனிப்பு என்றால் பின்னணி இசை துவர்ப்பு. பல காட்சிகளில் டயலாக்கை கபளீகரம் செய்துவிடுகிறது பின்னணி சப்தம்.

அந்த சண்டைக்காட்சியும், அதற்கான உழைப்பும் வாவ்...

இப்படத்தின் இயக்குனர் ஜான், உதிரிப்பூக்கள் இயக்கிய மகேந்திரனின் வாரிசு!

சாண் ஏறியிருக்கிறார். அடுத்தடுத்த படங்களில் முழம் சறுக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்!

-ஆர்.எஸ்.அந்தணன்/தமிழ் சினிமா


- tamilini - 04-16-2005

இன்று எதேற்சையாய்.. கற்ககசறட பட காட்சிகள் சில பார்த்தேன். விஜயையின் தம்பி அச்சு அசலாய் விஜயை மாதிரியே இருக்கார்.. பேச்சுக்கூட ஒத்துப்போகுது.. ரசிகர்கள் என்ன செய்யப்போறார்கள்..?? தம்பியே அண்ணாவுக்கு போட்டி போடுவாரா என்ன..?? :roll: :wink:


- Mathan - 04-16-2005

ம் பார்க்கலாம். நடனம் நக்கல் நையாண்டி என்று விஜயை போலவே செய்தால் போட்டியாக வரலாம்


- kuruvikal - 04-16-2005

tamilini Wrote:இன்று எதேற்சையாய்.. கற்ககசறட பட காட்சிகள் சில பார்த்தேன். விஜயையின் தம்பி அச்சு அசலாய் விஜயை மாதிரியே இருக்கார்.. பேச்சுக்கூட ஒத்துப்போகுது.. ரசிகர்கள் என்ன செய்யப்போறார்கள்..?? தம்பியே அண்ணாவுக்கு போட்டி போடுவாரா என்ன..?? :roll: :wink:

இப்ப நாட்டுக்கு அவசியமான ஆராய்ச்சி... செய்தால் நல்ல பாலா அபிசேகம் கிட்டும்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Idea


- tamilini - 04-16-2005

பின்ன வருங்கால முதலமைச்சருக்கு தம்பியே போட்டியாய் வந்திடுவாரா என்று.. ஒரு சிறய ஆராச்சி தான். :evil: :twisted: