Yarl Forum
தாவர போசனத்தின சாதக பாதகங்கள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: மருத்துவம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=28)
+--- Thread: தாவர போசனத்தின சாதக பாதகங்கள் (/showthread.php?tid=3558)

Pages: 1 2


தாவர போசனத்தின சாதக பாதகங்கள் - KULAKADDAN - 08-24-2005

http://www.yarl.com/other/article_749.shtml



<img src='http://img390.imageshack.us/img390/7641/untitled2vm.png' border='0' alt='user posted image'>

உணவானது ஒரு குடித்தொகையின் போசணைத்தேவையை பூர்த்திசெய்யக்கூடியதாக இருப்பதோடு அது அக்குடித்தொகையின் சுகநலன்களை நன்நிலையில் பேணுவதாகவும் இருக்கவேண்டும்.

இன்றைய காலகட்டத்தில் அதிகரித்த உடல் நிறை, நீரிழிவு, என்பவை மிகவும் பாதிப்புதரும் அளவில் உயர்ந்து காணப்படுகிறது. அதேவேளை தாவர பொருட்களை அதிகமாக உட்கொள்வதும் அது சார் வாழ்க்கைமுறையும் உடல் நிறை அதிகரிப்பு உயர் இரத்த அழுத்தம் நீரிழிவு இதய நோய்கள் ஆகியவற்றின் ஆபத்தை குறைக்கும் திறன் வாய்ந்தவையாக நம்பப்படுகிறது.

<b>தாவர போசனத்தின் வகைகள்</b>

எம்மை பொறுத்தவரை சைவம், அசைவம் (மச்சம்) என பெரும்படியாக பிரித்து விடுவோம். எமது எண்ணக்கருவில் தாவர போசனம் என்பது பாலுடன் சேர்ந்த தாவர உணவு உண்போரை குறிக்க பயன்படுகிறது. ஆனால் தற்போதய நவீன பாகுபாடு வேறானது

1. <b>தாவரபோசனம் (veganism)</b>முழுமையாக தாவர உணவை உண்போர், பால் முட்டையும் உள்ளெடுப்பதில்லை

2. <b>பாலுடனான தாவர போசனம் (Lactovegetarianism)</b>இறைச்சி, மீன் , முட்டை உண்பதில்லை
3. <b>பால், முட்டையுடனான தாவரபோசனை ( Lacto ovo vegeterianism)</b>மீன் இறைச்சியை தவிர்ப்போர்.
4. <b>முட்டைய்டனான தாவர போசனம் (Ovo vegeterianism)</b>
மீன் இறைச்சி பால் உள்ளெடுப்பதில்லை

பொதுவாக தாவரபோசணை உள்ளெடுப்போரில் 70% பேர் பால் முட்டையுடனான தாவரபோசணிகளாக உள்ளனர். மிககுறைவாக 10 வீதத்திலும் குறைவானோர் தனி தாவர போசணிகளாவர். இவ்வகையான உணவுபழக்கம் உடல் நலனை பாதிக்க கூடியதாக இருக்கும்.

பொதுவாக தனித்தாவர உணவை மட்டும் உள்ளெடுப்பதால் இரண்டு பிரதான ஊட்டச்சத்து குறைபாடுகள் ஏற்படுவது சாத்தியம் ஆகும். அவையாவன

1. <b>இரும்பு (Iron)</b>தாவர உணவை மட்டும் உண்போருக்கு போதுமான அளவில் இரும்புசத்து கிடைப்பதில்லை. தாவர உணவுல் ஒப்பீட்டளவில் அதிகளவான இரும்பு காணப்பட்டலும் அது உடலால் இலகுவில் அகத்துறுஞ்ச முடியாத சிக்கல் சேர்வைகளாக காணப்படுகிறது. இதனால் இரும்பு பற்றக்குறை ஏற்படுகிறது. இது அதிகளவில் தாவர உணவை மட்டும் அல்லது தாவர உணவை அதிகமாக உண்போரில் காணப்படிகிறது. இப்பிரச்சனை கர்ப்பிணி பெண்களில் மேலும் அதிகமாக இருக்கும். தாயில் ஏற்படும் இரும்பு பற்றாகுறையானது வளரும் கருவினதும் பிறக்கும் குழந்தையினதும் மூளைவளர்ச்சியை பாதிக்கும்.

2. <b>விற்றமின் வழங்கல் (B12)</b>
தாவர போசனையின் இன்னுமொரு பாதகமான அம்சம் விற்றமின் B12 போதுமான அளவில் கிடைக்காமையாகும். விலங்குணவுகளான பால், முட்டை, இறைச்சி, மீன் என்பவை விற்றமின் B12 ஐ அதிகளவில் கொண்டிருப்பதுடன் இது எந்தவொரு தாவர உணவிலும் காணப்படுவதில்லை என்பது அதன் சிறப்பம்சமாகும். தொடர்ச்சியான தாவர போசணமானது குருதியில் விற்றமின் B12 அளவில் வீழ்ச்சியை ஏற்படுத்துவது அவதானிக்கப்பட்டுள்ளது.
போதுவாக ஈரலில் சேமிப்பாக விற்றமின் B12 காணப்படுகிறது. இச்சேமிப்பனது ஓரளவு நீண்டகாலத்துக்கு போதுமானதாக இருந்தாலும் தொடர்ச்சியாக பால் முட்டை உட்பட எந்த விலங்குணவையும் உள்ளெடுக்கது விடுவது விற்றமின் B12 பற்றக்குறைக்குரிய அறிகுறைகள் , அது சார் நோய்கள் தோன்ற வழிவகுக்கும் . இதன் குறைபாட்டு அறைகுறிகளாக குருதிச்சொகை, இளைப்பு, சோர்வு, என்பவை விழங்குகிறன.இவை விற்றமின் மீள கிடைக்கும் போது இல்லது போககூடியவை.

அதிகரித்த விற்றமின் B12 பற்றக்குறை மைய நரம்புதொகுதியை மீள் முடியாதவாறு பாதிக்குமற்றல் வாய்ந்ததாகையால் தாவர உணவை உள்ளேடுப்போர் விற்றமின் B12 குறைநிரப்பு உணவு உள்ளெடுத்தல் அவசியம்.

அதேநேரம் தாவர போசணையின் பிரதான உணவுகளாக பழங்கள், மரக்கறிகள் விழங்குகிறன.இவை அதிகளவு விற்ற்மின்கள் ஒட்சியேற்ற எதிரிகாளையும் உயிர்தொழிற்பட்டு சேர்வைகளையும் கொண்டிருக்கிறன. இதனால் தாவர உணவை உணபவர்களின் குருதியில் அதிகளவில் விற்றமின் C , B கரோட்டீன் என்பவை பல்வேறு நீடித்த நோய்களான புற்று நோய், இதய குருதிகலனில் ஏற்படும் நோய்களை குறைப்பதில் உதவுகிறன.

A) <b>நார்பொருள் உள்ளெடுத்தல்</b>
நார்பொருள் உள்ளெடுதலானது தாவர போசனை பிரிவினரில் அதிகளவில் காணப்படுகிறது. நீண்ட காலமாக நார் பொருள் உள்ளெடுத்தல் சாதகமானதா பாதகமானதா என்பது விவதத்துகுரியதாக இருக்கிறது. ஆயினும் தறபோது அதன் புற்று நோயைகட்டுப்படுத்தும் சாதகத்தன்மை பெரிதும் மெச்சப்படுகிறது.

<b>தாவர போசணையை திட்டமிடல்</b>

<b>பால், முட்டையுடனான தாவர போசணையானது உடலுக்கு தேவையான அனைத்து உட்டச்சத்துகளையும் வழங்க கூடியதாக இருக்கிறது.</b>

தனித்தாவர உணவு உண்போர் கர்ப்பகாலம், வளரும் பருவம், நோய்வாய்பட்ட நேரங்களில் விற்றமின் B12, இரும்பு சத்துக்கான குறை நிர்ப்பு உணவு உள்ளெடுத்தல் அத்தியாவசியமானது.

இறைச்சி உணவானது மேலே குறிப்பிட்ட நோய்களை குறைத்தலுக்கான காரணியாக கொள்லமுடியாதயினும் உணவு பழக்கத்தை மீள ஒழுங்கு படுத்தல் சீரான் உடற்பயிற்சி, குறைந்த மது, புகையிலை பாவனை என்பன உடல் நலனை பாதுகாப்பதில உதவும்


- MUGATHTHAR - 08-26-2005

[b]மனித உடல் அசைவ உணவுக்கு ஏற்றதல்ல

மனித உடல் அசைவ உணவு உண்பதற்கு ஏற்றாற் போல் வடிவமைக்கப்பட்டதல்ல என்று விஞ்ஞானிகளின் பல ஆராய்ச்சிகள் கூறுகின்றன. விலங்குகளை தாவரங்களை உண்ணும் விலங்குகள்இ மாமிசம் உண்ணும் விலங்குகள் என இரு வகையாகப் பிரிக்கலாம். இதில் தாவரங்களை உணவாக உண்ணும் விலங்குகளின் குடல் அதிக நீளமானதாகவும்இ விலங்குகளை உணவாக உண்ணும் விலங்குகளின் குடல் குறுகியதாகவும் காணப்படுகிறது. மனிதனின் குடல் அமைப்பை ஒப்பிடும் பொழுது அது தாவர உணவை உண்ணும் விலங்குகளின் குடல் போன்று மிக நீளமானதாகவே காணப்படுகின்றது.

மாமிசம் மிக விரைவில் கெட்டு அழுகி துர்நாற்றம் வீசத் தொடங்கிவிடும். அத்துடன் மிக விரைவில் கிருமிகள் பரவத் தொடங்குவதுடன் ஹரொக்சின்' என்ற நச்சுப் பொருளையும் வெளிவிடுகின்றது. ஆனால் தாவரங்கள் அவ்வாறு விரைவில் கெட்டு அழுகிவிடுவதில்லை.

மாமிசம் உண்ணும் விலங்குகளின் குடல் குறுகியதாக இருப்பதனால் உணவுப் பொருட்கள் அதிக நேரம் குடலில் தங்குவதில்லை. விரைவில் மலமாக வெளியேறிவிடும். மனிதனின் குடல் மிக நீளமானதாகக் காணப்படுவதனால் மனிதர்கள் மாமிசங்களை உண்ணும் பொழுது அவை பல மணிநேரம் குடலிலேயே தங்கிவிடுகின்றன. இதனால் அவை அழுகிவிடுவதுடன் ரொக்சினையும் வெளிவிடுகின்றன. குடலிற்கு அதை பிரித்தறியும் சக்தியில்லாததால் இரசாயனப் பொருட்கள் நச்சுப் பொருட்கள் உட்பட அனைத்தையும் குடல் உறிஞ்சி விடுகின்றது. இதனால் மனிதன் பல நோய்களுக்கு ஆளாகின்றான்.

மேலும்இ இவ் இரசாயனப் பொருட்கள் மனிதனின் உடலின் தசைப் பகுதிகளில் படிந்து விடுவதால்இ தசைகளின் கலங்கள் கழிவுப் பொருட்கள் நிறைந்து தூய்மையற்றவை ஆகின்றன. புதிய கலங்களின் உற்பத்தியின் போது இக்கழிவுப் பொருட்களை வெளியேற்ற அதிக அளவு ஒட்சிசன் தேவைப்படுகின்றது. இதனால் அதிகமான சுவாசமும் தேவைப்படுகின்றது. இதனால் சைவ உணவு உண்பவரும் அசைவ உணவு உண்பவரும் போட்டியிடும் போது அசைவ உணவு உண்பவர் மிகவிரைவில் களைப்படைந்துஇ அதிக மூச்சு வாங்குவதால் தோற்றுவிடும் வாய்ப்பு அதிகமாக காணப்படுகின்றது. சைவ உணவு உண்பவர்கள் போட்டியில் களைப்படையாது அதிக நேரம் நிலைத்திருப்பதுடன் மிக விரைவாக முன்னேறி விடுகின்றனர்.

அசைவ உணவை இன்று பலர் நாடுவதற்கு நாகரிகமும் பிரதானமான காரணமாக அமைகின்றது. இன்று பலர் அசைவ உணவை உண்பதே நாகரிகமெனக் கருதுகின்றனர். மாமிசம் உண்பவர்கள் பலர் மரக்கறியை மட்டும் உண்பவர்களை ஏளனமாகவே பார்க்கின்றனர். கீழைத்தேய நாடுகளைச் சேர்ந்தவர்கள் மேற்கத்தேய உலகில் அசைவ உணவு ஒரு நாகரிகத்தின் உதாரணம் என்றே கருதுகின்றனர். அது சமூகத்தில் ஓர் உயர்ந்த அந்தஸ்தை காட்டுவதாகக் கருதப்படுகின்றது. இதனால் இன்று நமது சமூகத்தைச் சார்ந்தவர்களும் முக்கிய விருந்து உபசாரங்களின் போதுஇ தமது மேன்மையான ஆரோக்கியமான பாரம்பரிய உணவு முறைகளைத் தவிர்த்து மேற்கத்தேய பாணியிலான அசைவ உணவுகளையே பரிமாறுகின்றனர். விருந்துகளில் சைவ உணவு பரிமாறுவது தமது தரத்தைக் குறைத்துவிடும் என்ற அபிப்பிராயத்தையே அவர்கள் கொண்டுள்ளனர்.

மரக்கறி உணவானது புராதன காலத்தில் இருந்தே ஆரோக்கியமானதாகவும் மேன்மையான நாகரிகமாகவும் பின்பற்றப்படும் பழக்கமாகும். சைவ உணவு உண்பவர்களே சமூகத்தில் உயர்ந்தவர்களாக கருதப்பட்டு வந்தனர். அசைவ உணவு நாகரிகமாகக் கருதப்பட்டது கடந்த 20 ஆண்டுகளிலேயே ஆகும்.


- Danklas - 08-26-2005

எட கன விசயங்களை ஆரச்சி செய்த ஜரோப்பிய அமெரிக்கனுகள் இந்த விசயத்தில (அதுவும் முக்கிய விசயம்) கோட்டை விட்டுட்டாங்களோ.... பார்த்தீங்களா நம்ம ஆட்களை.. விரதம் கிரதம் எண்டு சொல்லி மரக்கறி வகைகளை விழுங்கினம்.. பறாவாயில்லையே நம்ம மூதாதையர்களும் அந்த மாதிரித்தான் ஆரட்சி செய்திருக்கினம்...<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> அதுதான் யூரோப்பில அதிகமானோர் கான்சரால் மண்டையை போடுறாங்களோ?? :?


- MUGATHTHAR - 08-26-2005

அடா........ இப்பதான் விளங்குது ஜயர் ஆத்திலை இருக்கிற மாமியள் எல்லாம் எப்படி சும்மா "கும்" எண்டு இருக்கினம் என எல்லாம் மரக்கறி சாப்பாட்டின்ரை மகிமைதான் போலக் கிடக்கு...........


- Rasikai - 08-26-2005

தகவலுக்கு நன்றிகள் குளக்கோட்டன் & முதத்தார்


- Rasikai - 08-26-2005

MUGATHTHAR Wrote:அடா........ இப்பதான் விளங்குது ஜயர் ஆத்திலை இருக்கிற மாமியள் எல்லாம் எப்படி சும்மா "கும்" எண்டு இருக்கினம் என எல்லாம் மரக்கறி சாப்பாட்டின்ரை மகிமைதான் போலக் கிடக்கு...........
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Mathan - 08-27-2005

<!--QuoteBegin-MUGATHTHAR+-->QUOTE(MUGATHTHAR)<!--QuoteEBegin-->[b]மனித உடல் அசைவ உணவுக்கு ஏற்றதல்ல
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

வேல்ஸ் கோயிலுக்கு போகும் போது அசைவ உணவு சாப்பிட்டு வர கூடாது என்று அறிவுறுத்தி இருந்தார்ந்தர். அதற்காக 3 நாட்கள் மரக்கறி உண்பதே கடினமாக இருந்தது. அது தவிர லண்டனின் இருந்து 4 மணித்தியால பயணத்தில் போய் வரும் போதும் கடைகளில் சைவ உணவு எடுக்க வலு சிரமம். இதில் நாள் எப்போது போது சைவ உணவு என்றால் அவ்வளவு தான். வீட்டில் இல்லாத நேரங்களில் உணவு பிரைச்சனையிலேயே பாதி நாள் ஓடிவிடும்.


- vasisutha - 08-27-2005

பயனுள்ள தகவல்கள் நன்றி குளம் அண்ணா.. முகத்தார் ஐயா..


- Mathan - 08-27-2005

<!--QuoteBegin-MUGATHTHAR+-->QUOTE(MUGATHTHAR)<!--QuoteEBegin-->அடா........ இப்பதான் விளங்குது ஜயர் ஆத்திலை இருக்கிற மாமியள் எல்லாம் எப்படி சும்மா \"கும்\"  எண்டு இருக்கினம் என எல்லாம் மரக்கறி சாப்பாட்டின்ரை மகிமைதான் போலக் கிடக்கு...........<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

இதை மரக்கறி சாப்பாட்டின் மகிமை என்றதை விட பாலின் மகிமை என்றுதான் சொல்லணும். பிராமணர்கள் மரக்கறி உணவில் கிடைக்காத சத்துக்களை பெறவோ என்னவோ பாலையும் அதன் வடிவங்களாக தயிர், மோர், வெண்ணையையும் அதிகம் பாவிப்பார்கள், அதனால் தான் அவர்கள் தோல் மினுமினுப்பாக இருக்கலாம்.


- ப்ரியசகி - 08-27-2005

Mathan Wrote:
MUGATHTHAR Wrote:அடா........ இப்பதான் விளங்குது ஜயர் ஆத்திலை இருக்கிற மாமியள் எல்லாம் எப்படி சும்மா "கும்" எண்டு இருக்கினம் என எல்லாம் மரக்கறி சாப்பாட்டின்ரை மகிமைதான் போலக் கிடக்கு...........

இதை மரக்கறி சாப்பாட்டின் மகிமை என்றதை விட பாலின் மகிமை என்றுதான் சொல்லணும். பிராமணர்கள் மரக்கறி உணவில் கிடைக்காத சத்துக்களை பெறவோ என்னவோ பாலையும் அதன் வடிவங்களாக தயிர், மோர், வெண்ணையையும் அதிகம் பாவிப்பார்கள், அதனால் தான் அவர்கள் தோல் மினுமினுப்பாக இருக்கலாம்.

ஆகா..ஆனால் பாலில் கொழுப்பு எண்டும் சொல்கிறார்களே..அப்பொ அது ஒண்டும் செய்யாதா? :roll:


- Mathan - 08-27-2005

மாமிச உணவில் தான் கொழுப்பு அதிகம் இருக்கும் என்று நினைக்கிறன். அது உட்கொள்ளாதவர்கள் பாலை சேர்க்கும் போது கொழுப்பு மித மிஞ்சி போக வாய்ப்பு இல்லை என்று நினைக்கின்றேன்.


- ப்ரியசகி - 08-27-2005

Mathan Wrote:மாமிச உணவில் தான் கொழுப்பு அதிகம் இருக்கும் என்று நினைக்கிறன். அது உட்கொள்ளாதவர்கள் பாலை சேர்க்கும் போது கொழுப்பு மித மிஞ்சி போக வாய்ப்பு இல்லை என்று நினைக்கின்றேன்.

அப்போ ஏன் மாமிங்க குண்டா இருக்காங்க? :roll:


- Thala - 08-27-2005

இது எனக்குப் பறவாய் இல்லை.. நான் பறக்கிரதில விமானத்தையும், நீந்திறதில கப்பலையும், 4கால் இருக்கிறதில கதிரை மேசை கட்டி தவிர , எதையும் உபயோகிக்கிறதில்லை.... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Thala - 08-27-2005

ப்ரியசகி Wrote:ஆகா..ஆனால் பாலில் கொழுப்பு எண்டும் சொல்கிறார்களே..அப்பொ அது ஒண்டும் செய்யாதா? :roll:

பாலின் கொழுப்பும் மாமிசக்கொழுப்பும், தாவரக் கொழுப்பும் வித்தியாசமானது எண்டு படிச்ச ஞாபகம். அதுதான் ஆடை நீக்கிய பால்(கொழுப்பு இல்லாம) வருது எண்டு நினைக்கிறன்.. வேற யாராவது தெரிஞ்சவை சொல்லூங்கோவன்..


- ப்ரியசகி - 08-27-2005

Thala Wrote:இது எனக்குப் பறவாய் இல்லை.. நான் பறக்கிரதில விமானத்தையும், நீந்திறதில கப்பலையும், 4கால் இருக்கிறதில கதிரை மேசை கட்டி தவிர , எதையும் உபயோகிக்கிறதில்லை.... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

எதுக்கு உபயோகிக்கிறீங்க? சாப்பிடவா? Confusedhock:


- MUGATHTHAR - 08-27-2005

தம்பி ஆடை நீக்கிய பாலைக் குடிப்பது பச்சைத்தண்ணியை குடிப்பதுபோல இருக்கும் இப்ப பெப்சி கோலாக்கிலையும் டயட் எண்டு போட்டு வருகுதுதானே கனக்க வேண்டாம் நோன் அற்ககோல் பியரெண்டு இஞ்சை அடிச்சுத் திரியுறம் என்ன பிரயோசம் ஏதோ தண்ணின்ரை சுவைத்தான் மாறாமல் இருக்கும் ஒருவித கிக்கோ அல்லது வேறை விளையாட்டோ இல்லை அதுபோலத்தான் பாலும் ஏலுமானா அப்படியே குடியுங்கோ அதைவிட்டுப்போட்டு ஆடை நீக்கினது சட்டை நீக்கினது எண்டு ஏன் குடிக்கப் போறியன்.......


- Thala - 08-27-2005

ப்ரியசகி Wrote:
Thala Wrote:இது எனக்குப் பறவாய் இல்லை.. நான் பறக்கிரதில விமானத்தையும், நீந்திறதில கப்பலையும், 4கால் இருக்கிறதில கதிரை மேசை கட்டி தவிர , எதையும் உபயோகிக்கிறதில்லை.... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

எதுக்கு உபயோகிக்கிறீங்க? சாப்பிடவா? Confusedhock:

இதெல்லாம் சாப்பிடவும் உபயோகிப்பாங்களா? Confusedhock: :roll:

நான் சாப்பிட தட்டு மட்டும் தான் உபயோகிக்கிறனான் :wink:


- Vishnu - 08-27-2005

Thala Wrote:நான் சாப்பிட தட்டு மட்டும் தான் உபயோகிக்கிறனான் :wink:

கூடவே கை இல்லயென்றால்... ஸ்பூன் தேவையெல்லோ.. நான் அப்படித்தான்.. ஆனால் எங்க வீட்டில ஒரு ஆள் உங்களைப்போலத்தான்..


- Thala - 08-27-2005

Vishnu Wrote:
Thala Wrote:நான் சாப்பிட தட்டு மட்டும் தான் உபயோகிக்கிறனான் :wink:

கூடவே கை இல்லயென்றால்... ஸ்பூன் தேவையெல்லோ.. நான் அப்படித்தான்.. ஆனால் எங்க வீட்டில ஒரு ஆள் உங்களைப்போலத்தான்..

யாருங்க அது.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Vishnu - 08-27-2005

Thala Wrote:யாருங்க அது.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

சொன்னால்.. நீங்க அல்லது எங்க வீட்டு ஆள் இரண்டில ஒரு ஆள் கோபிப்பார்.. வேணாம்