Yarl Forum
மாற்றங்கள்... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: மாற்றங்கள்... (/showthread.php?tid=3430)

Pages: 1 2

மாற்றங்கள்... - Thala - 09-05-2005

<b>மாற்றங்கள் வந்ததேன்....?

<img src='http://img389.imageshack.us/img389/3977/flower3300ln.gif' border='0' alt='user posted image'>

காதலியாய் உனைப்
பார்த்து.
பன்னிரு மாதங்கள்
பறந்தோடிப் போச்சு
என் மனைவியாய்
உன் மீது
எத்தனை மாற்றம்

சீராய் வாரிய
கூந்தல்..
பொலிவாய்ச் சிரிக்கும்
உன் கண்கள்.
அழுத்தி தேய்த்த
உன் உடைகள்..
எங்கே போனது
உன்
சிங்கார அழகு..

அள்ளிமுடித்த கூந்தலோடு
ஏன் இன்று
இந்தக் கோலம்
உன் வியர்வை மணியை
ஒற்றி எடுத்த உன்
கைக்குட்டை எங்கே?

உன் காதலனாய்
தாமதமாய் வந்த
போதெல்லாம் நீ
செல்லமாய் கோபிப்பாய்
இன்றும் நான்
தாமதமாய்தான் வருகிறேன்.
வழமைபோல் நீயும்
காத்திருக்கின்றாய்..
எனக்கு
உணவு தருவதற்காய்
இன்றும் கோபிக்கிறாய்
நான் குறைவாய்
உண்கிறேன்
என்று..

உன்னில்
ஏனிந்த மாற்றம்
கண்மணியே !
உண்மையைச் சொல்
காதலியாய் என்னைக்
காதலித்தாய்
மனைவியாய் என்னை
நேசிக்கிறாய்
உன்மேல் எனக்கு
இல்லாத பாசம்
எப்படி என் மீது
உனக்கு வந்தது??

கணவனாய் என்
கடமைகளைச் செய்ய
என் வாழ்வின்
முடிவின் முன்
ஒரு சந்தர்ப்பம்
தருவாயா???

[b]புதிதாய் யாழ்களத்துக்கு வந்த என் நண்பனுக்காக எழுதிக் கொடுத்தது</b>

- kuruvikal - 09-05-2005

இந்தக் கவிதையைப் பார்த்ததும்... எங்கள் அன்புக்குரியவர் சொன்னது ஞாபகம் வருகிறது..காதலிக்கும் போது காதலன் காதலியின் மனதோடு கலந்து வாழ்வானாம்...அவனே கணவனானதும் துணைவியின் உடல் பொருள் ஆவி என்று கலந்து வாழ்வானாம்...! அதுதான் மாற்றத்துக்குக் காரணம் போல..!

ஒரு ஆணின் யதார்த்தமான எதிர்பார்ப்பை தொனிக்கும் நல்ல கவிதை...நன்றி தல..! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- narathar - 09-05-2005

புதிய நன்பனுகாய் எழுதிக் கொடுத்ததோ தல,உந்த வேலையும் செய்யிறீங்களோ, ஆனா என்ன சொல்லி இருக்கிறீங்க என்டு எனக்கு விளங்கேல்ல,சில வேளை உங்கட நண்பனுக்கும் ,உங்களுக்கும் விளங்கி இருக்கலாம்.

என் வாழ்வின்
முடிவின் முன்
ஒரு சந்தர்ப்பம்
தருவாயா???

இது என்ன ஏன் வாழ்வின் முடிவில்?

- MUGATHTHAR - 09-05-2005

narathar Wrote:புதிய நன்பனுகாய் எழுதிக் கொடுத்ததோ தல,உந்த வேலையும் செய்யிறீங்களோ, ஆனா என்ன சொல்லி இருக்கிறீங்க என்டு எனக்கு விளங்கேல்ல,சில வேளை உங்கட நண்பனுக்கும் ,உங்களுக்கும் விளங்கி இருக்கலாம்.

என் வாழ்வின்
முடிவின் முன்
ஒரு சந்தர்ப்பம்
தருவாயா???

இது என்ன ஏன் வாழ்வின் முடிவில்?

சில வேளை 7G ரொயின்போ காலணி படம் பார்த்த பாதிப்பில் எழுதியிருக்கலாம் ................இருந்தாலும் வாழ்த்துக்கள் தல..

- Thala - 09-05-2005

narathar Wrote:புதிய நன்பனுகாய் எழுதிக் கொடுத்ததோ தல,உந்த வேலையும் செய்யிறீங்களோ, ஆனா என்ன சொல்லி இருக்கிறீங்க என்டு எனக்கு விளங்கேல்ல,சில வேளை உங்கட நண்பனுக்கும் ,உங்களுக்கும் விளங்கி இருக்கலாம்.

என் வாழ்வின்
முடிவின் முன்
ஒரு சந்தர்ப்பம்
தருவாயா???

இது என்ன ஏன் வாழ்வின் முடிவில்?

நாரதா...!

இது என் நண்பன் ஒரு நாள் தன் துணையைப் பற்றிச்சொன்னது.. கரு அவனுடையது.. கவிதை ஆக்கினதுதான் நான்..

எனக்காக எல்லாம் செய்யும் நீ... என்வாழ்வில் ஒருதடவையாவது உனக்காக எதாவது செய்ய சந்தர்ப்பம் தா எண்டு அர்த்தப் படுத்தித்தான் அப்பிடி எழுதினான்...

- narathar - 09-05-2005

கனவன்,மனைவி என்றால் இருவரும் அல்லவா பகிர்ந்து எல்லாவற்றையும் செய்ய வேண்டும்,அது என்ன ஒருக்கா மட்டும்? :wink:

- வெண்ணிலா - 09-05-2005

Thala Wrote:[quote=narathar]

இது என் நண்பன் ஒரு நாள் தன் துணையைப் பற்றிச்சொன்னது.. கரு அவனுடையது.. கவிதை ஆக்கினதுதான் நான்..

எனக்காக எல்லாம் செய்யும் நீ... என்வாழ்வில் ஒருதடவையாவது உனக்காக எதாவது செய்ய சந்தர்ப்பம் தா எண்டு அர்த்தப் படுத்தித்தான் அப்பிடி எழுதினான்...

தல கரு நண்பனுடையதாயினும் கவிதை எழுதிய உங்களுக்கு வாழ்த்துக்கள்.
நிஜத்தை கவிதையாக்கியதற்கு நன்றிங்க. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- Rasikai - 09-05-2005

ஆஆ தல நீங்கள் கவிதை எழுதுவீர்களா? Confusedhock: சொல்லவே இல்லையே? சரி சரி யாருக்காக எழுதினீர்களோ. கவிதை நல்லா இருக்கு <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- வெண்ணிலா - 09-05-2005

Rasikai Wrote:ஆஆ தல நீங்கள் கவிதை எழுதுவீர்களா? Confusedhock: சொல்லவே இல்லையே? சரி சரி யாருக்காக எழுதினீர்களோ. கவிதை நல்லா இருக்கு <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

நீங்களும் கதை சொன்னால் தல கவிதையாக்கி தருவார் ரசிகை <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- Rasikai - 09-05-2005

vennila Wrote:நீங்களும் கதை சொன்னால் தல கவிதையாக்கி தருவார் ரசிகை <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

சீச்சீ என்ட கதை எல்லாம் கவிதையா பப்பிளிக்ல எழுத எனக்கு விருப்பம் இல்லை <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- வெண்ணிலா - 09-05-2005

Rasikai Wrote:

உங்களுடைய கதையை சொல்ல சொல்லி சொல்ல இல்லையே நான். :roll:

- Rasikai - 09-05-2005

vennila Wrote:உங்களுடைய கதையை சொல்ல சொல்லி சொல்ல இல்லையே நான். :roll:

சரி பட் யாருடைய கதைச்சொல்ல? :roll:

- SUNDHAL - 09-05-2005

ke ke ke பப்ளிக்ல எழுத முடியாத கதையா....அப்ப சரி சொல்லாதைங்க..
வாழத்துக்கள்.. ல......தல...............

- வெண்ணிலா - 09-05-2005

Rasikai Wrote:
vennila Wrote:உங்களுடைய கதையை சொல்ல சொல்லி சொல்ல இல்லையே நான். :roll:

சரி பட் யாருடைய கதைச்சொல்ல? :roll:

ஏதாவது ஒரு கதை சொல்ல சொன்னேன்பா. உதாரணத்துக்கு களத்து நண்பர்கள் ரசிகை வீட்டில் சந்தித்தால் எப்படி இருக்கும் என்ற ஒரு கற்பனைக் கதையை சொன்னால் தல கவிதையாக்குவார் தானே.
தலவிடம் அவ்வளவு ஆற்றல் இருக்கு

- narathar - 09-05-2005

வீட்டில் சந்திக்க இல்ல சாப்பிடப் போனால் .....

- Rasikai - 09-05-2005

vennila Wrote:ஏதாவது ஒரு கதை சொல்ல சொன்னேன்பா. உதாரணத்துக்கு களத்து நண்பர்கள் ரசிகை வீட்டில் சந்தித்தால் எப்படி இருக்கும் என்ற ஒரு கற்பனைக் கதையை சொன்னால் தல கவிதையாக்குவார் தானே.
தலவிடம் அவ்வளவு ஆற்றல் இருக்கு

ஆ தலட்டையா வேண்டாம் நான் ஒன்று சொல்ல அவர் அதற்கு இன்னொன்று எழுத எதற்கு வம்பு ஆளை விடுங்க <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

நீங்கள் தானே கதை சொல்ல போறீங்க அப்புறம் அவர் ஏன் வேறை எழுதுறார்? சரி தல வரட்டும் கேட்பம் எழுத முடியுமான்னு? :roll:

- Rasikai - 09-05-2005

vennila Wrote:நீங்கள் தானே கதை சொல்ல போறீங்க அப்புறம் அவர் ஏன் வேறை எழுதுறார்? சரி தல வரட்டும் கேட்பம் எழுத முடியுமான்னு? :roll:

ஏன் என்றால் தலக்கு என்னுல ரொம்ப பாசம் அதுதான் எனக்குப்பயம் <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

- அனிதா - 09-05-2005

Quote:உன் காதலனாய்
தாமதமாய் வந்த
போதெல்லாம் நீ
செல்லமாய் கோபிப்பாய்
இன்றும் நான்
தாமதமாய்தான் வருகிறேன்.
வழமைபோல் நீயும்
காத்திருக்கின்றாய்..
எனக்கு
உணவு தருவதற்காய்
இன்றும் கோபிக்கிறாய்
நான் குறைவாய்
உண்கிறேன்
என்று.

சககோதரம் கவிதை அருமையாக இருக்கு.. வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- Senthamarai - 09-05-2005

கவிதை நன்றாக இருக்கின்றது தல.
யார் அந்த நண்பன் என்று சொல்லவில்லையே.