![]() |
|
மட்டுறுத்தினர் யாழினிக்கு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31) +--- Thread: மட்டுறுத்தினர் யாழினிக்கு (/showthread.php?tid=2694) |
மட்டுறுத்தினர் யாழினிக்கு - kurukaalapoovan - 10-30-2005 மட்டுறுத்தினர் யாழினிக்கு http://www.yarl.com/forum/viewtopic.php?p=...p=136560#136560 மேலே உள்ள இணைப்பில் போட்ட 3 படத்தில் 2 அய் நீக்கிவிட்டு ஒன்று நீக்கப்பட்டுள்ளதாக எழுதிய குறிப்பிற்கு நன்றி. நீங்கள் ஏன் அந்தப்படங்களை (2) நீக்கினீங்கள் என்றும் எழுதினீங்கள் என்றால் ஆரோக்கியமாக இருக்கும். நீங்கள் அந்த விளக்கத்தை தனிப்பட்ட அஞ்சலில் எழுத தேவையில்லை. எல்லோர் முன்னும் சுட்டிக்காட்டப்படும் தவறை ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளேன். நீங்கள் விளக்கம் எழுதாமல் விட நான் அந்தப்படங்களை திருப்பி இணைக்கவேண்டி இருக்கும். பிறகும் விளக்கமில்லாமல் நீக்கப்பட நான் மீண்டும் இணைக்க உங்களுக்கு நேரமில்லை என்று என்னை தடை செய்வியள். பிறகு நான் வேறை பாவனை சொல்லில வந்து தொடர நிர்வாகம் IP தடை செய்ய வேண்டியிருக்கும். பிறகு நான் வேறை வேறை IP களில் வர தூண்டும். இந்தக்கண்ணாம்பூச்சி விளையாட்டெல்லாம் என்னுடைய சிற்றறிவுக்கு ஆரோக்கியமாக தெரியவில்லை. உங்களுக்கு எப்படி இருக்கு? புரிந்துணர்விற்கு நன்றி. - Birundan - 10-30-2005 குறுக்ஸ்க்கே ஆப்பா? - narathar - 10-30-2005 என்ன குறுக்ஸ் இதுக்கெல்லாம் விளக்கம் கேட்டுக் கொண்டு, யாழினிக்கு திரிஸ்சாவின்ட முதுகப் பிடிக்கேல்லயாம் ஒரு படத்தில. மற்றதில என்னத்தைப் பிடிக்கேல்ல எண்டு எனக்கு விளங்கேல்ல.இதுகெல்லாம் என்ன அளவு கோலே வச்சிருக்கினம்.போடுற ஆக்கள் போட்ட விடிவினம். நீங்கள் சும்மா கிண்டலுக்குப் போட்டா விடிவினமோ? Re: மடுத்துறுத்தினர் யாழினிக்கு - yalini - 10-30-2005 kurukaalapoovan Wrote:மடுத்துறுத்தினர் யாழினிக்கு குறுக்கால போவான் முதலாவது மற்றும் மூன்றாவது படங்கள் கொஞ்சம் நாகரீகமற்று(கவர்ச்சியாக) இருந்ததால் நீக்கப்பட்டன. 1 படம் நீக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டு விட்டு 2 படம் நீக்கப்பட்டுள்ளது. இருவரால் நீக்கப்பட்டது சுட்டிக்காட்ட தவறிவிட்டோம். களத்தில் முடிந்தவரை நாகரீகமான படங்களை இணைப்பது நல்லது. அதைத்தான் எதிர்பார்க்கப்படுகிறது. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- yalini - 10-30-2005 Quote:போடுற ஆக்கள் போட்ட விடிவினம்.போடுற ஆக்கள் போட்டு நாகரீகமற்றிருந்தால் நிச்சயமாக நீக்கப்படும். அது தான் நடந்தது. அப்படி நீக்கப்பட்டதைத்தான் குறுக்கால போவான் இங்கு எழுதியிருக்கிறார். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Birundan - 10-30-2005 அப்படிப்போடுங்க அருவால. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - narathar - 10-30-2005 யாழினி இந்த நாகரிகமற்று ,கவர்ச்சி என்று சொல்லுறத்துக்கு என்ன அளவு கோல் இருக்கு?எனக்குப் பாக்க அங்க இருகிற எல்லாப் படமும் கவர்சியாத் தான் இருக்கு.இதில நாகரிகமற்று என்று எதச் சொல்லுறீங்க?எது நாகரீகம்.எது அனாகரீகம்.விளக்கினா இனிப்படங்கள் போட உதவியா இருக்கும். :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Mathuran - 10-30-2005 narathar Wrote:யாழினி இந்த நாகரிகமற்று ,கவர்ச்சி என்று சொல்லுறத்துக்கு என்ன அளவு கோல் இருக்கு?எனக்குப் பாக்க அங்க இருகிற எல்லாப் படமும் கவர்சியாத் தான் இருக்கு.இதில நாகரிகமற்று என்று எதச் சொல்லுறீங்க?எது நாகரீகம்.எது அனாகரீகம்.விளக்கினா இனிப்படங்கள் போட உதவியா இருக்கும். :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> என்ன நாரதர் பிரச்சினையை கிளப்பி விடுகிறதென்றே அடம்பிடிக்கிறீங்கள் போல இருக்கு. - Mathan - 10-30-2005 <span style='font-size:20pt;line-height:100%'>வணக்கம் குறுக்ஸ், நான் உங்களுடைய பெரும்பாலான கருத்துக்களை அவதானித்திருக்கின்றேன். நீங்கள் பல நல்ல உபயோகமான விடயங்களை சொல்ல வருவதும் அவற்றிற்கு கள உறுப்பினரிடையே ஆதரவோ அல்லது பதில் கருத்துக்ளோ கிடைக்காத போது சோர்வடைவதும் தெரிந்தது. ஆனால் அந்த சோர்வினால் நீங்கள் ஆட்களை கவரவேண்டும் என்பதற்காக பொருத்தமற்ற அல்லது அநாகரிகமான தலைப்புகளை தெரிவு செய்வதும் நல்லதல்ல. நீங்கள் அப்படி தெரிவு செய்த பல தலைப்புகளை நான் மாற்றிவிட்டிருக்கின்றேன். அதுவும் கடைசியாக நீங்கள் <b>RSS Feed கருத்துக்கு</b> இட்ட தலைப்பு எனக்கு மிக மிக வருத்தத்தை தந்தது. அதனால் அந்த தலைப்பை மாற்றி உங்களுடைய போக்கை மாற்றி தொடர்ந்து நல்ல கருத்துகளை தருமாறு அந்த தலைப்பிலேயே அன்புடன் கேட்டிருந்தேன், அதன் பின்பு <b>வடமெரிக்காவில் Dish Net தொலைக்காட்சி</b> தலைப்பில் நீங்கள் எழுதிய கருத்துக்கள் உங்கள் போக்கில் மாற்றம் ஏதும் இல்லை என்பதையும் உங்களுடைய கருத்துக்கள் தொடர்ந்து மட்டுறுத்தினர்களால் கவனிக்கப்படவேண்டியவை என்பதையும் உணர்த்தியது. உண்மையில் அந்த தலைப்பில் நீங்கள் சொல்ல விரும்புவதை அனைவருக்கும் புரியகூடியதாக இலகுவாக சில வரிகளில் சொல்லியிருக்கலாம். ஆனால் அதில் நீங்கள் பதிலளித்த விதம் கள உறுப்பினர்களுக்கு ஒரு தெரியாத விடயத்தை விளக்குவது போல அல்லாமல் அவர்களை மட்டுதட்டுவது போலவும் அறியவிரும்பும் ஆர்வத்தை கூட நசுக்குவது போலவும் இருந்தது. அனைவரும் அனைத்துவிடயங்களையும் தெரிந்து கொள்ள வாய்ப்பில்லை தானே. உங்களுக்கு தெரிந்தவற்றை கடிந்து கொள்ளாமல் இலகு தமிழில் சொல்லலாம் தான்? அதில் உங்களுக்கு பின்பு தியாகம் பதில் எழுதியிருக்கிறார் பாருங்கள். இப்போது இந்த <b>திரிஷா பட விடயத்தை</b> எடுத்து கொண்டால் அவை நாரதர் குறிப்பிட்டது போல் வேணுமென்றே கிண்டலுக்காக (வம்பு லொள்ளு எதுவாகவும் இருக்கட்டும்) இணைக்கப்பட்டது என்றும் அவை உங்களுடைய வருத்தமூட்டும் கருத்துக்களின் தொடர்ச்சி என்றும் தெளிவாக தெரிந்தது. அதனால் அவற்றில் இரண்டு படங்கள் நீக்கப்பட்டன, ஏறத்தாள ஒரே நேரத்தில் என்னாலும் யாழினியாலும் படங்கள் நீக்கப்பட்டதால் 2 படங்கள் நீக்கப்பட்டது என்பது சரிவர தெரிவிக்கப்படவில்லை. படங்கள் நீக்கப்பட்டதற்கு ஏன் மற்றய கருத்துக்களுடன் இணைத்து விளக்கம் தரப்படுகின்றது என நீங்கள் எண்ணலாம். உங்களுடைய கருத்துகளை தொடர்சியாக அவதானித்தலில் அவை என்ன நோக்கத்தற்காக இணைக்கப்பட்டுள்ளன என அறிந்தமையாலேயே அவை அவசியமற்றவை என தெரிந்து நீக்கப்பட்டன. அதனால் முழு விளக்கத்தையும் எழுதியுள்ளேன். உங்களுடைய கருத்துகள் தொடர்பாக நான் உங்களுக்கு தனிமடல் எழுதலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் நீங்கள் பகிரங்கமாக காரணம் கேட்டதால் இங்கே எழுதவேண்டியதாயிற்று. உங்களுக்கு ஒரு வேண்டுகோள், தயவு செய்து இவ்வாறான ஒரு சில பொருத்தமற்ற படங்கள், கருத்துக்கள் தலைப்புக்கள் மூலம் உங்களுடைய நல்ல கருத்துகளின் மதிப்பை பாழடித்து விடாதீர்கள், இவற்றை ஒதுக்கி பயனுள்ள தகவல்களை தொடர்ந்து தாருங்கள், ஒரு விடயத்தை வாசகர்களை சென்றடைய கூடியதாக இலகுவாக சொல்வதில் தான் கருத்தாளனின் வெற்றி தங்கியிருக்கின்றது, அதை விடுத்து இவர்கள் இதையெல்லாம் அறிந்துகொள்ள லாயக்கில்லாதவர்கள் என்றோ அல்லது வேறுவிதங்களிலோ கடிந்து கொள்ளாதீர்கள். நன்றி. நட்புடன் மதன் குறிப்பு: கருத்துக்கள் மட்டுறுத்தினர்களால் தணிக்கை செய்யப்பட்டால் அவை எந்த சமயத்திலும் மீள இணைக்கப்பட கூடாது, தணிக்கை நியாயமற்றது என உங்களுக்கு தோன்றினால் அதை தனிமடல் மூலமோ உங்கள் கருத்து பகுதியில் எழுதியோ அல்லது மோகன் அண்ணாவை நேரடியாகவோ விளக்கம் கேட்கலாம். தணிக்கை தவறு என மோகன் அண்ணா கருதினால் அவற்றை மீள இணைத்து விடுவார். அவருடைய தீர்மானமே இறுதியானது. அதனை விடுத்து மட்டுறுத்தினர்களின் தணிக்கை நீக்கப்பட்டு கருத்துக்கள் மீள மீள இணைக்கப்பட்டால் முன் எச்சரிக்கை ஏதுமின்றி உறுப்பினர் தடைசெய்யப்படுவார். ஒரு கருத்தாளன் மட்டுறுத்தினர்களின் நடவடிக்கையை மதித்து நடப்பது அவசியம், அவை பொருத்தமற்றவை நியாமில்லாதவை என கருதும் சமயத்தில் அவற்றை உரிமையுடன் சுட்டிகாட்டலாமே தவிர உதாசீனப்படுத்த கூடாது, அவ்வாறான நிலைமையில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு நிர்வாகம் தள்ளப்படுகின்றது.</span> - Vasampu - 10-30-2005 சில பிரைச்சினைகளை சரியான முறையில் தீர்வு காண்பதற்கு அங்கத்தவர்களிலும் ஒரு குழு இருந்தால் நல்லது என்று நான் நினைக்கின்றேன். 3 அல்லது 5 பேர் கொண்ட ஒரு குழு அங்கத்தவர்களிலும் இருப்பது நல்லது. சில மட்டுறுத்தினர்கள் இவ்வளவு பிரைச்சினைகளுக்குப் பின்னும் திருந்தாமலிருப்பது வேதனைப்பட வேண்டிய விடயம அவர்கள் அவர்களது கடமையைச் செய்யட்டும் ஆனால் அதைப் பற்றிய குறிப்பை ஏன் எமுதாமல் விட வேண்டும்.. எனவே நிர்வாகமும் அங்கத்தவர்களும் ஆலோசனை செய்து ஒரு குழுவை அங்கத்தவர்களிலும் அமைக்க முன்வர வேண்டும். அங்கத்துவ குழுவிற்கு சோழியான் பரணீ சுண்டல் இரசிகை து}யா போன்றோரை உதாரணத்திற்கு நான் சிபார்சு செய்கின்றேன். பி.கு: எனது இந்தக் கருத்து மேலேயுள்ள விடயங்கள் சம்பந்தமாகவே இங்கே எழுதப்படுகின்றது. எனவே மட்டுறுத்தினர்கள் எவரும் தேவையில்லாமல் இக்கருத்தை நீக்கவோ அல்லது வேறு பகுதிக்கு மாற்றவோ முயற்சிக்க வேண்டாம். - narathar - 10-30-2005 எனக்கொரு சந்தேகம் மதன் இங்க இணைக்கப் படுகிற படங்களில என்ன கருத்து இருக்கு?யாழ் களம் கருத்துக்களம் தானே.படம் பாக்க விருப்பம் எண்டா இணயத்தில எத்தனை தளம் இருக்கு.குருக்ஸுக்கு இருக்கும் கோவம் என்னாலேயும் புரிந்து கொள்ளக் கூடியது. யாழ் களம் பயனுள்ள விடயங்களுக்கான களமா இருக்க வேணும் எண்ட ஆதங்கத்தில தான் இந்தக் கோவம் வருகுது.ஆனா அதன் நோக்கம் அதுவல்ல அது எல்லாரும் வந்து போற ஒரு கள்ளுக் கொட்டில் மாதிரி எண்டு நினைச்சா ஒரு பிரச்சினயும் இல்லை.இப்ப அப்படித் தான் நான் நினைக்கிறது.இதை ஒரு பயன் தரும் கருத்தாடல்கள் மட்டும் நடக்கிற இடமா நினைகிறதில தான் இந்தக் கோவம் வருகுது. - Mathuran - 10-30-2005 என்னைப்பொறுத்தவரை மட்டுறுத்தினர்கள் காட்டும் பாதையில் பயணிப்பதே சரியாக இருக்கும். களவிதிகளுக்க்மைவாக மட்டுறுத்தினர்களை மதித்து நடப்பதே நல்ல கருத்தாளனுக்கு அழகு. மட்டுறுத்தின்றனௌக்கு தெரியும் எது நல்லது எது கெட்டது என்று. - kurukaalapoovan - 10-30-2005 கனம் யாழினி அவர்களுக்கு, உங்கள் பதிலுக்கு நன்றி. யாழ்களத்தின் சார்பாக எந்தப்படங்கள் நாகரீகமானவை என்ற விளக்கம் தந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அனாகரீகமாக நான் நடப்பதை தவிர்க்க உதவும். மேலும் கவர்ச்சி என்பது அநாகரீகமானது என்ற புதிய விளக்கத்தை தந்தமைக்கு நன்றி. - Vasampu - 10-30-2005 நன்றி மதன் உங்கள் கருத்துகளுக்கு மட்டுறுத்தினர்கள் தவறான கருத்தக்களோ அல்லது படங்களோ இருந்தால் அவற்றைத் தாராளமாக அதற்குரிய காரணத்தை எழுதிவிட்டடு நீக்கலாமே??? இதனால் களத்தில் தேவையில்லாத வாதப் பிரதிவாதங்கள் இடம் பெற வாய்ப்பில்லை. அத்துடன் தவறான முறையில் களத்தை ஒருவர் தொடர்ந்தும் பாவித்து வந்தால் அவரை (இரு முறை தனிமடல் மூலம் எச்சரித்து விட்டு) அந்த குறிப்பிட்ட பக்கத்திலேயே அவரைத் தடைசெய்யலாம். இதனால் ஏனைய கள உறுப்பினர்களுக்கும் இலகுவாக உங்கள் பக்க நியாயம் சென்றடைகின்றன. அத்துடன் தனிமடல் மூலம் பொறுப்பாளரையோ மட்டுறுத்தினர்களையோ தொடர்பு கொள்வது பற்றி நீங்கள் எழுதியுள்ளீர்கள். இவ்விடயம் என்னைப் பொறுத்தமட்டில் எங்களின் நேரத்தை வீணடிப்பதே. காரணம் நான் பலமுறை தனிமடல் போட்டுள்ளேன். அதற்கு ஒழுங்காக பதிலளிப்பது நீங்கள் ஒருவர் மட்டுந்தான். ஆனால் உங்கள் பதிலிலும் 95 வீதம் எனக்கு இது பற்றி முழுவிபரமும் தெரியவில்லையென்றோ அல்லது பிரைச்சினை நடந்த சமயம் நான் களத்திலில்லையென்றும் வேறு இருவரின் பெயர்களை குறிப்பிடடு அவர்கள் எனக்குப் பதிலளிப்பார்கள் என்று எமுதுவீர்கள் சில நேரங்களில் மட்டும் அவரகளிடமிருந்து சாட்டுக்கு ஏதாவது பதில் வரும். (இதில் குறிப்பிட வேண்டீய விடயம் என்னவென்றால் இன்றுவரை எவரும் தமது தவறுக்கு வருத்தம் தெரிவித்தது கிடையாது) எனவே முக்கியமான விடயங்களை களத்திலேயே பகிர்வது தவறாக எனக்குப் படவில்லை இதனால் தேவையற்ற வதந்திகள் தவிர்க்கப் படுகின்றன. - SUNDHAL - 10-30-2005 ok ok no fight சரியா................ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Mathan - 10-30-2005 வசம்பு, நான் சம்மந்தப்பட்ட அல்லது எனக்கு தெரிந்த விடயங்களில் என்னால் முழுமையாக விளக்கம் அளிக்க முடிகிறது, விளக்கம் அளித்தும் உள்ளேன், அது தவிர்ந்த மற்றய விடயங்களில் என்னால் பதில் அளிக்க முடியாது தானே, அதனாலேயே நீங்கள் கேட்ட இரண்டு விடயஙகளுக்கும் பெயர்களை குறிப்பிட்டு அவர்கள் பதிலளிப்பார்கள் என எழுதினேன், குறுக்ஸ் விடயத்தை பொறுத்தவரையில் களத்திலேயே அவருக்கு நாசுக்காக அறிவுறுத்தியிருக்கின்றேன், ஆனால் அதை அவர் கவனத்தில் எடுக்கவில்லை என்பது தான் வருத்தம் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> எனது விளக்கத்தில் இருக்கும் இணைப்புகளை பார்த்தால் உங்களுக்கே புரியும்
- MEERA - 10-30-2005 http://www.yarl.com/forum/viewtopic.php?t=...r=asc&start=330 - kurukaalapoovan - 10-30-2005 [quote=Mathan]<span style='font-size:20pt;line-height:100%'>வணக்கம் குறுக்ஸ், நான் உங்களுடைய பெரும்பாலான கருத்துக்களை அவதானித்திருக்கின்றேன். நீங்கள் பல நல்ல உபயோகமான விடயங்களை சொல்ல வருவதும் அவற்றிற்கு கள உறுப்பினரிடையே ஆதரவோ அல்லது பதில் கருத்துக்ளோ கிடைக்காத போது சோர்வடைவதும் தெரிந்தது. ஆனால் அந்த சோர்வினால் நீங்கள் ஆட்களை கவரவேண்டும் என்பதற்காக பொருத்தமற்ற அல்லது அநாகரிகமான தலைப்புகளை தெரிவு செய்வதும் நல்லதல்ல. நீங்கள் அப்படி தெரிவு செய்த பல தலைப்புகளை நான் மாற்றிவிட்டிருக்கின்றேன். அதுவும் கடைசியாக நீங்கள் <b>RSS Feed கருத்துக்கு</b> இட்ட தலைப்பு எனக்கு மிக மிக வருத்தத்தை தந்தது. அதனால் அந்த தலைப்பை மாற்றி உங்களுடைய போக்கை மாற்றி தொடர்ந்து நல்ல கருத்துகளை தருமாறு அந்த தலைப்பிலேயே அன்புடன் கேட்டிருந்தேன், அதன் பின்பு <b>வடமெரிக்காவில் Dish Net தொலைக்காட்சி</b> தலைப்பில் நீங்கள் எழுதிய கருத்துக்கள் உங்கள் போக்கில் மாற்றம் ஏதும் இல்லை என்பதையும் உங்களுடைய கருத்துக்கள் தொடர்ந்து மட்டுறுத்தினர்களால் கவனிக்கப்படவேண்டியவை என்பதையும் உணர்த்தியது. உண்மையில் அந்த தலைப்பில் நீங்கள் சொல்ல விரும்புவதை அனைவருக்கும் புரியகூடியதாக இலகுவாக சில வரிகளில் சொல்லியிருக்கலாம். ஆனால் அதில் நீங்கள் பதிலளித்த விதம் கள உறுப்பினர்களுக்கு ஒரு தெரியாத விடயத்தை விளக்குவது போல அல்லாமல் அவர்களை மட்டுதட்டுவது போலவும் அறியவிரும்பும் ஆர்வத்தை கூட நசுக்குவது போலவும் இருந்தது. அனைவரும் அனைத்துவிடயங்களையும் தெரிந்து கொள்ள வாய்ப்பில்லை தானே. உங்களுக்கு தெரிந்தவற்றை கடிந்து கொள்ளாமல் இலகு தமிழில் சொல்லலாம் தான்? அதில் உங்களுக்கு பின்பு தியாகம் பதில் எழுதியிருக்கிறார் பாருங்கள். இப்போது இந்த <b>திரிஷா பட விடயத்தை</b> எடுத்து கொண்டால் அவை நாரதர் குறிப்பிட்டது போல் வேணுமென்றே கிண்டலுக்காக (வம்பு லொள்ளு எதுவாகவும் இருக்கட்டும்) இணைக்கப்பட்டது என்றும் அவை உங்களுடைய வருத்தமூட்டும் கருத்துக்களின் தொடர்ச்சி என்றும் தெளிவாக தெரிந்தது. அதனால் அவற்றில் இரண்டு படங்கள் நீக்கப்பட்டன, ஏறத்தாள ஒரே நேரத்தில் என்னாலும் யாழினியாலும் படங்கள் நீக்கப்பட்டதால் 2 படங்கள் நீக்கப்பட்டது என்பது சரிவர தெரிவிக்கப்படவில்லை. படங்கள் நீக்கப்பட்டதற்கு ஏன் மற்றய கருத்துக்களுடன் இணைத்து விளக்கம் தரப்படுகின்றது என நீங்கள் எண்ணலாம். உங்களுடைய கருத்துகளை தொடர்சியாக அவதானித்தலில் அவை என்ன நோக்கத்தற்காக இணைக்கப்பட்டுள்ளன என அறிந்தமையாலேயே அவை அவசியமற்றவை என தெரிந்து நீக்கப்பட்டன. அதனால் முழு விளக்கத்தையும் எழுதியுள்ளேன். உங்களுடைய கருத்துகள் தொடர்பாக நான் உங்களுக்கு தனிமடல் எழுதலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் நீங்கள் பகிரங்கமாக காரணம் கேட்டதால் இங்கே எழுதவேண்டியதாயிற்று. உங்களுக்கு ஒரு வேண்டுகோள், தயவு செய்து இவ்வாறான ஒரு சில பொருத்தமற்ற படங்கள், கருத்துக்கள் தலைப்புக்கள் மூலம் உங்களுடைய நல்ல கருத்துகளின் மதிப்பை பாழடித்து விடாதீர்கள், இவற்றை ஒதுக்கி பயனுள்ள தகவல்களை தொடர்ந்து தாருங்கள், ஒரு விடயத்தை வாசகர்களை சென்றடைய கூடியதாக இலகுவாக சொல்வதில் தான் கருத்தாளனின் வெற்றி தங்கியிருக்கின்றது, அதை விடுத்து இவர்கள் இதையெல்லாம் அறிந்துகொள்ள லாயக்கில்லாதவர்கள் என்றோ அல்லது வேறுவிதங்களிலோ கடிந்து கொள்ளாதீர்கள். நன்றி. நட்புடன் மதன் குறிப்பு: கருத்துக்கள் மட்டுறுத்தினர்களால் தணிக்கை செய்யப்பட்டால் அவை எந்த சமயத்திலும் மீள இணைக்கப்பட கூடாது, தணிக்கை நியாயமற்றது என உங்களுக்கு தோன்றினால் அதை தனிமடல் மூலமோ உங்கள் கருத்து பகுதியில் எழுதியோ அல்லது மோகன் அண்ணாவை நேரடியாகவோ விளக்கம் கேட்கலாம். தணிக்கை தவறு என மோகன் அண்ணா கருதினால் அவற்றை மீள இணைத்து விடுவார். அவருடைய தீர்மானமே இறுதியானது. அதனை விடுத்து மட்டுறுத்தினர்களின் தணிக்கை நீக்கப்பட்டு கருத்துக்கள் மீள மீள இணைக்கப்பட்டால் முன் எச்சரிக்கை ஏதுமின்றி உறுப்பினர் தடைசெய்யப்படுவார். ஒரு கருத்தாளன் மட்டுறுத்தினர்களின் நடவடிக்கையை மதித்து நடப்பது அவசியம், அவை பொருத்தமற்றவை நியாமில்லாதவை என கருதும் சமயத்தில் அவற்றை உரிமையுடன் சுட்டிகாட்டலாமே தவிர உதாசீனப்படுத்த கூடாது, அவ்வாறான நிலைமையில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு நிர்வாகம் தள்ளப்படுகின்றது.</span> மதன் பந்தி பந்தியா புலம்பிறதை விட்டுட்டு, நேரமிருந்தால் யாழ்களத்தில போடற படங்களுக்குரிய நாகரீகத்துக்கான வரைவிலக்கணத்தை எழுதும். மேலும் என்ன பயன்பாடுகள் நேக்கங்களுக்கா படங்கள் இணைக்கப்படலாம் எண்டும் எழுதுவீராக இருந்தால் சிறப்பாக இருக்கும். - Mathan - 10-30-2005 நண்பர் குறுக்ஸ், நான் பந்தி பந்தியாக புலம்புவதாக குறிப்பிடுவதிலிருந்து என்னுடைய விளக்கம் அவசியமற்றது என்று கருதுகின்றார் போலும் :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> ....
- yalini - 10-30-2005 Quote: யாழினி இந்த நாகரிகமற்று ,கவர்ச்சி என்று சொல்லுறத்துக்கு என்ன அளவு கோல் இருக்கு?எனக்குப் பாக்க அங்க இருகிற எல்லாப் படமும் கவர்சியாத் தான் இருக்கு.இதில நாகரிகமற்று என்று எதச் சொல்லுறீங்க?எது நாகரீகம்.எது அனாகரீகம்.விளக்கினா இனிப்படங்கள் போட உதவியா இருக்கும். :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> நாரதர் உங்களுக்கு புரியுது அந்த படங்கள் கவர்ச்சியாத்தான் இருக்கிறது என்று. இதை விட மோசமாய் இருந்த படங்கள் தான் நீக்கப்பட்டது. நீங்க நினைத்தது போல ஒவ்வொரு உறுப்பினரும் தாங்கள் இணைக்கும் படத்தினை மதிப்பிட்டு இணைத்தால் பிரச்சனையே இல்லையே. ஒவ்வொருவரது அளவீடும் வேறுபடலாம். குறைந்தபட்சம் நாகரீகமாய் இணைப்பது களத்திற்கு நல்லது. அதைத்தான் கோரப்படுகிறது. அப்படி மோசமான படங்கள் தான் நீக்கப்பட்டன. :wink:
|