Yarl Forum
எமது பலவீனம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31)
+--- Thread: எமது பலவீனம் (/showthread.php?tid=2677)

Pages: 1 2 3 4 5 6


எமது பலவீனம் - kurukaalapoovan - 10-31-2005

Michael Palin தனது பயண அனுபவத்தில் கவனித்ததாக கூறிய ஒன்று: சீனாவில் தனது படப்பிடிப்புக் குழுவோடு நடமாடிய பொழுது தங்களைச்சுற்றி விடுப்புப் பாக்கிற கூட்டம் கூடவில்லை. எல்லோரும் தத்தமது வேலைகளை தொடர்ந்து செய்து கொண்டிருந்தனர். ஆனால் இந்தியாவில் போகுமிடமெல்லாம் விடுப்புப்பாக்கிற கூட்டம் மொய்த்துக் கொண்டிருந்ததாம்.

இந்தியாவில் செய்வதற்கு ஒன்றும் இல்லாமல் இருக்கவில்லை. எமது பலவீனம் அது. விடுப்புப் பாக்கிறது தெருக்கூத்தை ரசிக்கிறது விசிலடிச்சு குசுகுசுத்துப்போட்டு போறது எங்களுக்கு அபிமானப் பொழுது போக்கு.

பலவீனத்தை (பொறுப்பற்ற நடத்தையை) நிவர்த்தி செய்ய விதிமுறைகள் சட்டங்கள் கொண்டுவரப்படவேண்டும். சிறுவருக்கு உகந்த களமாக பயனுள்ள தளமாக இருக்க விரும்பிற இடத்தில் ஆபாசம் கவர்ச்சி மாத்திரம் தான்தடை செய்யப்படவேண்டியதல்ல.

இணையத்திற்கு முன்னர் கிடைத்த தொழில் நுட்பமான தொலைக்காட்சியை எடுத்தால் என்ன சாதித்துள்ளோம்? திரைப்படங்கள் நாடகங்கள் என்ற குப்பைகளை எம்மீது கொட்டத்தான் பயன்படுத்தியுள்ளோம். எத்தனை அறிவியல் தொழில்நுட்பம் விஞ்ஞானம் சம்பந்தமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறார்கள் தமிழ் தொலைக்காட்சிகளில்? சொந்தமாக தயாரிக்காவிட்டாலும் எத்தனை ஆக்கபூர்வமான நிகழ்ச்சிகளை குறைந்த பட்ச்சம் மொழிப்பெயர்பாவது செய்து தன்னும் போடுகிறார்கள்? ஒரு நாளின் அல்லது ஒருவாரத்திற்கான வான் அலை நேரங்களில் ஒவ்வொரு தமிழ் வானொலி தொலைக்காட்ச்சி நிலையத்தாரும் எத்தனை வீதத்தை திரை, சின்னத்திரை குப்பைகள் அற்ற சிகழ்ச்சிகளிற்கு ஒதுக்குகிறார்கள்.

இன்று தமிழ் இணையத்தளங்களை எடுத்தால் பொரும்பாலானவை என்ன வழங்குகிறார்கள்?
திரைப்பாடல்கள், திரை நடிகர் நடிகைகளின் படங்கள், அவர்கள் சார்ந்த செய்திகள், கவிதை, நகச்சுவை, அரட்டை. ஏதோ பொறுப்புள்ள தளமாக காட்டிக் கொள்ள 100...200 தளங்கள் 2..3 மூலத்தில் இருந்து கிடைக்கும் செய்திகளை வெட்டி ஒட்டிக் கொள்கின்றன.
சொந்தமாக ஆக்கபூர்வமாக என்ன பயன்தரக்கூடிய வகையில் என்ன content அய் உருவாக்கியிருக்கிறார்கள் தமிழ் இணையத்தளப் பயன் பாட்டில்?

இணையத் தொழில்நுட்பத்தினூடாக தகவல்களை இலகுவாகவும் துரிதமாகவும் பரிமாறிக்கொள்ள கிடைத்த சந்தர்ப்பத்தை நாம் எவ்வாறு யாழ்களத்தில் பெரும்பாலும் செலவிடும் நேரத்தில் பயன்படுத்திக் கொள்கிறோம்?

எல்லோருக்கும் படிப்பு வேலை குடும்பம் என பல பொறுப்புக்கள் மத்தியில் இணையத்திற்கு, யாழிற்கு வரக் கிடைக்கும் நேரம் மட்டுப்படுத்தப்பட்டது. இந்த நேரத்தை எவ்வாறு செலவிடுகிறோம் என்பது எமது மேல் கூறிய பலவீனம் காரணமாக எம்மை இணைக்கும் களவிதிகளாலும் கட்டுப்படுத்தப்படவேண்டும். பொதுவாக தெருக்கூத்தை ரசித்து விசிலடித்துவிட்டு போவதற்கு ஊக்குவிப்பு தேவையில்லை. சிறுவர்களும் குளந்தைகளுக்கும் 24 மணத்தியாலங்களும் 7 நாளும் அனுமதித்தால் அதைத்தான் செய்யவிரும்புவார்கள்.

யாழ்களத்தில் தெருக்கூத்தை அனுமதிப்பது மனித உரிமை அடிப்படையில் நியாமாக இருக்கலாம் ஆனால் எமது பலவீனத்தின் நோக்கில் பார்க்கும் போது அது ஆரோக்கியமானதா?


- narathar - 10-31-2005

நல்ல சிந்தனை தான் குறுக்ஸ்,

ஆனால் யாழ் களம் இவ்வாறான நோக்கத்துடனா நடத்தாப் படுகிறது.இங்கே யார் நேரம் செலவழித்து எதனை யாருக்காக எழுதுகின்றனர்?யார் இங்கே இடப் படுபவற்றை வழி நடத்துகின்றனர்?
இப்போதாவது கொன்ச்சம் உருப்படியன விசயங்கள் வருகுது.முன்னர் என்ன நடந்தது அரச குடும்பம் ஆண்டிகள் குடும்பம் மாந்தோப்பு என்று அரட்டை தான் நடந்தது.சிலருக்கு இது ஒருவகை வாழ்க்கையுடன் பிரிக்க முடியாத பொழுது போக்காகி அவர்கள் இதனுடன் ஒன்றி விட்டனர்.இதில் அவர்கள் எழுதிய கருத்து எண்ணிக்கையை (அது மிகப் பெரியது)அவதானித்தால் பலது முக நயனமாகவும்,அரட்டை ஆகவுமே இருக்கும்.யாழ் களம் அதற்கானது என்பதுவே அவர்களின் வாதம்.இவர்களே யாழ் களத்தின் விதிகளை நிர்ணையிப்பவர்களாக மட்டுறுத்துனர்களாக இருக்கின்றனர்.இது தனி ஒருவர் நடாத்தும் களம்.இதில் மட்டுறுத்தினர்களும் அவ்வாறே நியமிக்கப் படுகின்றனர்.இங்கே இதனை மீறி உண்மயான தேசிய இன வளர்ச்சியை நோக்கிய கருத்துக்களோ அல்லது ஆக்கங்களுக்கு மட்டுமே இடம் பெறும் என்று நீங்கள் நினைப்பது தவறு என்று நினைகிறேன்.இவர்களிடம் இருந்து நீங்கள் கனக்க எதிர்பார்க்கிறீர்கள்.இங்கே மட்டுறுத்தினர்கள் நீண்டகால கள உறுபினர்களாக இருகின்றனர்.அவர்களுக்கு எண்டு ஒரு கூட்டம் இருக்கு.அவர்களுக்கு எண்டு உறவு முறைகள் இருகின்றன.

இந்த தனி நபர் அபிலாசைகளை மீறி காரியம் ஆற்ற களத்தின் முகாமைத்துவ முறமைகள் வழி விடா.இது ஒரு பொது தொண்டு நிறுவனமோ அன்றி சேவை நோக்கிலான தன் ஆர்வ நிறுவனமோ அல்ல.

மேலும் எழுதலாம் ஆனால் அது தனை நபர்களும் அவர்கள் சார்ந்த விமர்சனமும் ஆகிவிடும் என்பாதால் எழுதவில்லை.இறுதியில் இதைப் பற்றி முடிவெடுப்பது மோகன்.அவர் இங்கே இடப்படும் கருத்துக்களைப் படிகிறாரா என்பது எனக்குத் தெரியது. அப்படிப் படித்தால் நான் என்ன சொல்லுகிறேன் என்பது விளங்கும்.சொல்ல நினைத்தது எவ்வளவோ சொல்ல முடிந்தது இவ்வளவே ,மிகுதி உங்கள் விருப்பம்.இதையும் ஆட்களைக் கூட்டி,முகமூடிகளைப் போட்டு வந்து எழுதி பூட்டுங்கோ.அது தானே உங்களுக்கு கைவந்த கலை.


- Nitharsan - 10-31-2005

குறுக்ஸ் மற்றும் நாரதருக்கு வணக்கம்!
குறுக்ஸ் உங்கள் கருத்துக்களிலும் எதிர் பார்ப்பிலும் பல நியாயம் இருக்கிறது. இணையங்கள் தொலைக்காட்சிகள் வானொலிகள் தமிழ் சமூகத்தை மறந்து செய்ற்ப்படுகின்றன என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை. அதே போல நாரதர் அவர்களது எதிர்பார்ப்புக்களும் விடுபடக்கூடியவை அல்ல. ஆனால் யாழ் களம் தனி நபரினது என்றாலும் அது பொது நோக்காக இயங்குகின்றது. இங்கே மட்டுறுத்தினர்கள் உறவு முறையின் அடிப்படையில் தெரிவு செய்யப்படவில்லை. நீண்ட கால உறுப்பினர்களை நம்பிக்கையின் அடிப்படையில் தான் மட்டுறுத்தினாத்களாக்கு கின்றனர். கண்டவர்களை எல்லாம் மட்டுறுத்தினராக்குமு் போது களம் மீது தாக்குதல் தொடுக்க சந்தர்ப்பம் பாாத்துக் கொண்டிருப்போருக்கு அத வாய்ப்பாகிவிடும்.. அதே நேரம் களம் என்று பொது இடத்தில்...யாழ் களத்தை பொறுத்தவரை கிட்டத்தட்ட 2000 உறுப்பினர்கள் இருக்கின்றனர்..ஆனால் முன்னைய உறுப்பினர்கள் பலர் தனி நபர் மீது நடாத்தப்பட்ட கருத்து தாக்குதாலால் தாங்கள் எழுதுவதை (யாழில்) நிறுத்தியிருக்கின்றனர். அப்படியான சம்பவங்கள் மீளவும் இடம் பெறக் கூடாது என்பதற்காகவே சில கட்டுப்ாடுகள் விதிகள் இறுக்கமாக்கப்பட்டதே தவிர..கருத்துச் சுகந்திரத்தை நசுகவல்ல. அதே போல இங்கே அரட்டை அதிகரித்திருப்பதற்க்கு காரணம் மோகன் அண்ணாவோ வலைஞனே அல்லது இதர மட்டுறுத்தினர்களோ அல்ல. இங்கே இப்போது இளைஞர்கள் கருத்தெழுதுகின்றனர். இளைஞர்கள் கருத்தெழுதும் போது..அரட்டை கலப்பது ஒன்றும் பெரியவிடையம் அல்ல..


- Danklas - 11-01-2005

குறுக்ஸ் இப்ப என்ன சொல்ல வாறீங்க? நகைச்சுவை, சினிமா, அரட்டையை நிறுத்த சொல்லுறீங்களா? நிறுத்திபோட்டு நீங்க வைக்கும் கருத்துக்களை பார்த்து அதுக்கு மறுகருத்தை வைக்க சொல்லுறீங்களா? நீங்க நாரதர் வைக்கும் கருத்துக்கள் என்ன? மாக்சியம், கம்யுனிசம், அது இதெண்டு அறியாத விடயங்களைபற்றி கதைக்கிறீங்க, களத்தில இருக்கிறவங்களுக்கு அதில இன்றஸ் இருந்தால்த்தானே அதற்கு கருத்து சொல்லுவாங்க? மற்றயபடி அவங்களும் அந்த செய்தியை கருத்தை கண்டிப்ப வாசீப்பாங்க, பட் கருத்துக்களை முன்வைக்கமாட்டாங்க,, அப்படி வைக்கிறதெண்டாலும் சிலருக்கு பிடிக்காது முக நயம், நன்றி தகவலுக்கு என்று எழுதினால் மட்டும்போதுமா எண்டு குண்டக்கா மண்டக்கா கேள்வி கேப்பாங்க, அதைவிட உங்களுக்கு தெரிஞ்சதை போடுங்க, அதைபற்றி அறிஞ்சவங்க கட்டாயம் பதில் சொல்லுவாங்க அல்லது அதைபற்றி கருத்து வைப்பாங்க, அதைவிட்டுட்டு உங்க பெயருக்கு ஏற்றமாதிரி விசமத்தனமான கருத்து தலைப்புகளை வைத்து மற்றவங்களும் உங்க கருத்துக்கு நீங்கள் நினைக்கும் கருத்தை எழுத வேண்டும் எண்டு நினைக்காதேங்க,,,

உங்களுக்கு, நாரதருக்கும் குருவி, ஸ்ராலின் போன்றவர்களுக்கு அதுகளைபற்றி தெரிந்து இருக்கும் அதனால்த்தான் அதைபற்றி கதைக்கிறார்கள்,

யூரோப் அமெரிக்கா என்று இருக்கிறவங்க இங்க வாரது சந்தோசத்துக்கு,, தனிபட கதைக்கும் பொழுது சில உறுப்பினர்கள் தெரிவித்தார்கள் முந்தி (யாழில அங்கத்தவரா இனையுமுன்னம்) வெளியில போறது, அதால கனக்க பிரச்சினைகள், கலாபம், காதலா எண்டு அரட்டை அடிக்கிறது அதில பல பிரச்சினைகள் வந்தது என்று சொன்னார்கள், ஆனால் இப்ப அப்படியில்லை, நண்பர்களுடன் கதைக்கவே நேரம் இல்லையாம் ஏன் தெரியுமா? யாழ்களம் அவர்களை தன்பக்கம் ஈர்த்துவிட்டதாம், வேலை, வீடு, இனையத்துக்கு வந்தால் யாழ்களம் இதுதான் தற்போதைய யாழ் அங்கத்தவர்களது வாழ்க்கை,

நீங்கள் நினைப்பது போல மாக்சியம், கம்யுனிசம் பற்றி நினைத்து மண்டையை போட்டு குழப்பி வேலையில், பாடசாலையில் தான் அப்படியெண்டு போட்டு இங்கவந்தால் இந்த சப்ஜெக்ட்டை பற்றி கதைச்சு வாழ்க்கையில் வெறுப்பை உண்டுபன்னபார்க்கிறீங்க உங்களுக்கு தெரிஞ்சதை எழுதுங்க கண்டிப்பா வாசிப்பாங்க அறிந்து கொள்ளுவாங்க,, Idea


- MUGATHTHAR - 11-01-2005

Quote:யாழ்களத்தில் தெருக்கூத்தை அனுமதிப்பது மனித உரிமை அடிப்படையில் நியாமாக இருக்கலாம் ஆனால் எமது பலவீனத்தின் நோக்கில் பார்க்கும் போது அது ஆரோக்கியமானதா
களஉறவுக்கு தெருக்கூத்து என்ன எண்டு தெரியவில்லைப் போல 1986 களில் யாழ் பல்கலக்கழக மாணவர் அமைப்பால் எமது போராட்ட வரவாறு மற்றும் சிங்கள அரசின் அட்டுழியங்கள் என்பவற்றை தெருக்கூத்து மூலமாகதான் பாமர மக்களிடையில் எடுத்துச் செல்லப்பட்டது இப்ப மட்டக்களப்பில் பிரபலமபக இருந்து அருகிவரும் நாட்டுக் கூத்துக்கலை அழிந்து போகாமல் இருப்பதுக்காக மாகாண கல்வி அமைச்சால் பாடசாலைகளக்கிடையில் நாட்டுக்கூத்து போட்டிகள் சேர்க்கப்பட்டிருக்கினறன் அத்தடன் யாழ் களத்துக்கு வரும் எல்லோரும் ஒரே ரசனை உள்ளவர்களாக இருக்கமாட்டார்கள் சிலருக்கு சினிமா சிலருக்கு நகைச்சுவை பிடிக்கும் குறுக்காலை போனவர் தனது கருத்தை முகத்தார் வீட்டு பகுதியில் எழுதியது தான் எனக்கு விளங்கவில்லை இதைப்பற்றி அவரிடம் விளக்கம் கேட்டபின்தான் தனிதலைப்பில் மாற்றியுள்ளார் முகத்தர் வீடு அங்கம் 1லிருந்து இங்கம் 5 மட்டும் எல்லித எதிர்ப்புகளும் தெரிவிக்காமல் ஆறாவது அங்கத்தில் இதை தெரிவித்தது ஏன் என தெரியவி;ல்லை எங்களுக்கு தெரிந்த பகுதியில்தானே நாம் ஆக்கங்களை எழுதமுடியும் படிப்பவர்களை தடுக்க வேண்டமெண்டால் இந்த பகுதிகளை மூடிவிடலாம் எங்களுக்கும் நேரம் மிச்சமாகும் இதை யாழ் கள நிர்வாகம் கருத்தில் எடுத்து குறுக்கஸ சொல்லும் இளைய சமூதாயத்துக்கு தேவையான தலைப்புகளை மட்டும் போட்டு விடுங்கோ இப்பிடி யெண்டால் உங்களுக்கும் வேலையில்லை சில குறிப்பிட்ட தலைப்புகள் தான் இருக்கும்


- Danklas - 11-01-2005

குறுக்ஸிண்ட கருத்தைபார்த்தால் நகைச்சுவைகளை நிப்பாட்டிப்போட்டு தண்ட கருத்துகளை பாருங்க எண்டுறமாதிரி இருக்கு.. அண்மைக்காலமாக குறுக்ஸ் தன்னுடைய் சிந்தனைக்கு ஏற்றமாதிரி மிகக்கேவலமான தலைப்புகளை நல்ல கருத்துகளுக்கு சுட்டுகிறார், காரணம் கேட்டால் யாழ்களத்தில இருக்கிறவங்க எல்லா குறுக்கால போனவங்க எண்ட ரீதியில் பதில் தாருகிறர். தமிழில தமிழ் மண்ணில மதிப்பு வைச்சிருக்கிறவர், தன்னுடைய பெயரையும், கை கையெழுத்தையும் எப்படி போட்டிருக்கிறார் எண்டு பாருங்க? ஏன் உங்களுக்கு வேற பெயருகள் வைக்கதெரியவில்லையா? அல்லது வேறு காரணங்கள் இருக்கா? உங்க கருத்தை வெளீபடையா சொல்லுங்க,, நகைச்சுவை, அரட்டைகளை நிறுத்த சொல்லுங்க நிறுத்திறம் அதைவிட்டுட்டு ஒவ்வொரு கருத்துகளிலையும் ஆட்டுக்கை மாட்டை விடுறமாதிரி லொள்ளுபண்ணாதேங்க...

அதற்கு நாரதர் ரொம்ப சப்போட் பண்ணுறார்.. உங்க கருத்துக்கள் என்னெண்டுறதை தெளிவா சொல்லுங்க அதற்கு முதல் உங்களில உள்ள பிழைகளை திருத்துங்க... :evil: :!:


- RaMa - 11-01-2005

[quote="narathar"]நல்ல சிந்தனை தான் குறுக்ஸ்,

ஆனால் யாழ் களம் இவ்வாறான நோக்கத்துடனா நடத்தாப் படுகிறது.இங்கே யார் நேரம் செலவழித்து எதனை யாருக்காக எழுதுகின்றனர்?யார் இங்கே இடப் படுபவற்றை வழி நடத்துகின்றனர்?
இப்போதாவது கொன்ச்சம் உருப்படியன விசயங்கள் வருகுது.முன்னர் என்ன நடந்தது அரச குடும்பம் ஆண்டிகள் குடும்பம் மாந்தோப்பு என்று அரட்டை தான் நடந்தது.சிலருக்கு இது ஒருவகை வாழ்க்கையுடன் பிரிக்க முடியாத பொழுது போக்காகி அவர்கள் இதனுடன் ஒன்றி விட்டனர்.இதில் அவர்கள் எழுதிய கருத்து எண்ணிக்கையை (அது மிகப் பெரியது)அவதானித்தால் பலது முக நயனமாகவும்,அரட்டை ஆகவுமே இருக்கும்.யாழ் களம் அதற்கானது என்பதுவே அவர்களின் வாதம்.இவர்களே யாழ் களத்தின் விதிகளை நிர்ணையிப்பவர்களாக மட்டுறுத்துனர்களாக இருக்கின்றனர்.இது தனி ஒருவர் நடாத்தும் களம்.இதில் மட்டுறுத்தினர்களும் அவ்வாறே நியமிக்கப் படுகின்றனர்.இங்கே இதனை மீறி உண்மயான தேசிய இன வளர்ச்சியை நோக்கிய கருத்துக்களோ அல்லது ஆக்கங்களுக்கு மட்டுமே இடம் பெறும் என்று நீங்கள் நினைப்பது தவறு என்று நினைகிறேன்.இவர்களிடம் இருந்து நீங்கள் கனக்க எதிர்பார்க்கிறீர்கள்.இங்கே மட்டுறுத்தினர்கள் நீண்டகால கள உறுபினர்களாக இருகின்றனர்.அவர்களுக்கு எண்டு ஒரு கூட்டம் இருக்கு.அவர்களுக்கு எண்டு உறவு முறைகள் இருகின்றன.



நாரதர்.. களத்தில் கருத்து எழுதும் உங்களைப் போன்ற சிலரைப்போல் எமக்கும் கருத்து எழுத ஆசை தான். ஆனால் உங்களுக்கு இருக்கும் தமிழ் அறிவுக்கு எம்மிடம் இருக்கும் அறிவு புஐ்சியம் தான். ஆகவே எங்களுடைய அறிவுக்கு உங்கள் தகவல்களை வாசித்துவிட்டு தகவலுக்கு நன்றி தான் போடத் தெரியும். உங்களின் கருத்துக்களில் நாம் பல தகவல்களை அறிகின்றோம் என்று சந்தோசப்பட்டு கொண்டிருக்கையில் நீங்கள் ஏன் இப்படி எழுதுகிறீர்கள்?


- kuruvikal - 11-01-2005

Danklas Wrote:குறுக்ஸ் இப்ப என்ன சொல்ல வாறீங்க? நகைச்சுவை, சினிமா, அரட்டையை நிறுத்த சொல்லுறீங்களா? நிறுத்திபோட்டு நீங்க வைக்கும் கருத்துக்களை பார்த்து அதுக்கு மறுகருத்தை வைக்க சொல்லுறீங்களா? நீங்க நாரதர் வைக்கும் கருத்துக்கள் என்ன? மாக்சியம், கம்யுனிசம், அது இதெண்டு அறியாத விடயங்களைபற்றி கதைக்கிறீங்க, களத்தில இருக்கிறவங்களுக்கு அதில இன்றஸ் இருந்தால்த்தானே அதற்கு கருத்து சொல்லுவாங்க? மற்றயபடி அவங்களும் அந்த செய்தியை கருத்தை கண்டிப்ப வாசீப்பாங்க, பட் கருத்துக்களை முன்வைக்கமாட்டாங்க,, அப்படி வைக்கிறதெண்டாலும் சிலருக்கு பிடிக்காது முக நயம், நன்றி தகவலுக்கு என்று எழுதினால் மட்டும்போதுமா எண்டு குண்டக்கா மண்டக்கா கேள்வி கேப்பாங்க, அதைவிட உங்களுக்கு தெரிஞ்சதை போடுங்க, அதைபற்றி அறிஞ்சவங்க கட்டாயம் பதில் சொல்லுவாங்க அல்லது அதைபற்றி கருத்து வைப்பாங்க, அதைவிட்டுட்டு உங்க பெயருக்கு ஏற்றமாதிரி விசமத்தனமான கருத்து தலைப்புகளை வைத்து மற்றவங்களும் உங்க கருத்துக்கு நீங்கள் நினைக்கும் கருத்தை எழுத வேண்டும் எண்டு நினைக்காதேங்க,,,

உங்களுக்கு, நாரதருக்கும் குருவி, ஸ்ராலின் போன்றவர்களுக்கு அதுகளைபற்றி தெரிந்து இருக்கும் அதனால்த்தான் அதைபற்றி கதைக்கிறார்கள்,

யூரோப் அமெரிக்கா என்று இருக்கிறவங்க இங்க வாரது சந்தோசத்துக்கு,, தனிபட கதைக்கும் பொழுது சில உறுப்பினர்கள் தெரிவித்தார்கள் முந்தி (யாழில அங்கத்தவரா இனையுமுன்னம்) வெளியில போறது, அதால கனக்க பிரச்சினைகள், கலாபம், காதலா எண்டு அரட்டை அடிக்கிறது அதில பல பிரச்சினைகள் வந்தது என்று சொன்னார்கள், ஆனால் இப்ப அப்படியில்லை, நண்பர்களுடன் கதைக்கவே நேரம் இல்லையாம் ஏன் தெரியுமா? யாழ்களம் அவர்களை தன்பக்கம் ஈர்த்துவிட்டதாம், வேலை, வீடு, இனையத்துக்கு வந்தால் யாழ்களம் இதுதான் தற்போதைய யாழ் அங்கத்தவர்களது வாழ்க்கை,

நீங்கள் நினைப்பது போல மாக்சியம், கம்யுனிசம் பற்றி நினைத்து மண்டையை போட்டு குழப்பி வேலையில், பாடசாலையில் தான் அப்படியெண்டு போட்டு இங்கவந்தால் இந்த சப்ஜெக்ட்டை பற்றி கதைச்சு வாழ்க்கையில் வெறுப்பை உண்டுபன்னபார்க்கிறீங்க உங்களுக்கு தெரிஞ்சதை எழுதுங்க கண்டிப்பா வாசிப்பாங்க அறிந்து கொள்ளுவாங்க,, Idea

டன்னின் கருத்துத்தான் எமதும்..!

வாசித்து அறிந்தவற்றைத்தான் நாமும் பகிர்ந்துகொள்கின்றோம்..! களம் என்ன உலகமே பல ரசனை மட்டங்களை கொண்டதுதான்..! அனைவரையும் அது திருப்திப்படுத்த முனைய வேண்டும்..! அப்போதுதான் சீரியஸான விடயங்களும் மற்றவர்களைப் போய் சேரும்..! வெறும் சீரியஸ் பேசிட்டு இருந்தா ஒரு சிலர்தான் அதை இங்கு பேசிட்டு இருக்க வேண்டி வரும்..! ஆரம்பத்தில் களம் அப்படித்தான் இருந்தது...ஒருவரே நாலு பெயரில் எழுதியதும் உண்டு..! அப்படியான நிலையில் அவர் விலகிக் கொண்டால் 4 பேர் கருத்தெழுதாது போனது போல இருக்கும்..! உண்மையில் இக்களத்தில் இருந்து விலகியவர்கள் என்று எவரும் இல்லை..! ஒன்றில் இதை தொடர்ந்து வாசிக்கிறார்கள்...அல்லது வேறு பெயரில் எழுதுகிறார்கள்..! எல்லாம் ஐபிக்கே வெளிச்சம்..! அப்படி இருக்கும் போது சிலரின் கருத்துக்கள் தொடர்பான ஆதங்கங்களே களத்தின் மீதான வெறுப்பாக மாற்றமடைகின்றன...அதன் விளைவுகளை தான் சமீப காலமாக களம் கண்டு வருகிறது..!

ஒரு பெரிய ஆய்வுக்கட்டுரை சொல்வதை விட முகத்தார் வீடு சொல்லும் அதே சாரமான செய்தி பல மட்டங்களையும் விரைவாக சென்றடைய முடியும்..! காரணம்.. முகத்தார் வீடு சாதாரண மக்களை மட்டுமன்றி அனைத்து தரப்பினரையும் கவரவல்லது..! தனித் திறமையைக் காட்ட சீரியஸாக கருத்துக்களை பிறப்பிப்பது பெரிய விடயமல்ல.. பிறப்பிக்கப்படும் கருத்து சென்றடையும் அளவில் தான் அதன் பயனே தங்கி இருக்கிறது..! அந்த வகையில் டன்..முகத்தார்...போன்றோரின் கருத்து வெளியிடும் வடிவம் கருத்தாளர்களை பாகுபாடின்றி கவரவல்லனவாக இருக்கின்றன..! அதுவும் அவசர உலகில் உழைத்து உடல் மூளை களைத்து இருப்போருக்கு அவை இலகு முறையில் செய்திகளை நகைசுவையோடு, சோர்வு நீக்கிகளாக இருந்து வழங்குகின்றன என்றால் அது வெறும் புகழாரம் அல்ல அதுதான் உண்மை..! குறிப்பாக பெரிய கட்டுரைகளை வாசிக்க எப்போதும் மனம் விரும்பாது...அதே விடயத்தை ஒரு படம் மூலம்...அல்லது நகைச்சுவை மூலம் சொல்லிவிட்டால்...அது இலகுவாக எல்லோரையும் அடைந்துவிடும்...! அதனால் தான் என்னவோ ஒரு பேப்பர் கூட முகத்தார் வீட்டை உள்வாங்கிக் கொண்டது போல..!

கருத்து என்பது களத்துக்கு சோடனைக்கல்ல... கருத்தாளர்கள் உள்வாங்கிக் கொள்ளவே...! கருத்தாளனின் பொது ரசனை அறிந்து வைக்கப்படும் கருத்துக்களே அவனை இலகுவில் சென்றடையும்...மற்றும் படி என்னதான் சீரியஸாக பக்கம் பக்கமாக எழுதினும்... அது ஒரு சிலரை மட்டுமே சென்றடையும்...அதில் பயன் ஏதும் பெரிதாக இருக்கப் போவதில்லை..! அதற்காக அவை தவிர்க்கப்பட வேண்டும் என்பதல்ல அர்த்தம்..சீரியஸாக எழுதக் கூடுயவை எழுதலாம்...அப்படி ஒரு வடிவம் இருப்பதை சொல்லலாம்..அதன் மூலம் பரந்த ஒரு விளக்கத்தை அளிக்கலாம்...அது வரவேற்கப்படும்...! ஆனால் அதையே பலமான கருத்தியல் வடிவம் என்று சாதிக்க எண்ணக் கூடாது...! அதையே எல்லோரும் செய்ய வேண்டும் என்றும் நிற்கக் கூடாது...! காரணம் கருத்தின் பலம் பலவீனம் என்பது அதன் சீரியஸ்தனத்தில் இல்லை... அது கருத்தாளர்களை அடையும் மட்டத்திலையே தங்கியுள்ளது...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea


- Mathan - 11-01-2005

MUGATHTHAR Wrote:முகத்தர் வீடு அங்கம் 1லிருந்து இங்கம் 5 மட்டும் எல்லித எதிர்ப்புகளும் தெரிவிக்காமல் ஆறாவது அங்கத்தில் இதை தெரிவித்தது ஏன் என தெரியவி;ல்லை எங்களுக்கு தெரிந்த பகுதியில்தானே நாம் ஆக்கங்களை எழுதமுடியும் படிப்பவர்களை தடுக்க வேண்டமெண்டால் இந்த பகுதிகளை மூடிவிடலாம் எங்களுக்கும் நேரம் மிச்சமாகும் இதை யாழ் கள நிர்வாகம் கருத்தில் எடுத்து குறுக்கஸ சொல்லும் இளைய சமூதாயத்துக்கு தேவையான தலைப்புகளை மட்டும் போட்டு விடுங்கோ இப்பிடி யெண்டால் உங்களுக்கும் வேலையில்லை சில குறிப்பிட்ட தலைப்புகள் தான் இருக்கும்

முகத்தார் வீடு தொடரை தொடர்ந்து எழுதுங்கள், அதை நிறுத்த வேண்டிய அவசியம் ஏதுமில்லை.


- MUGATHTHAR - 11-01-2005

நன்றி மதன்

இருந்தாலும் எனது நண்பன் நாரதருக்கு
நாரதருக்கு அன்புடன் ........நீங்கள் குறுக்கால போறவருக்கு சப்போட்டா நல்ல விசயம் எண்டு சொல்லுகிறீங்க சந்தோஷம் உங்களின் ஆக்கங்கள் வாசிக்கிறேன் ஆனால் படிப்பறிவு குறைந்த எனக்கு அதிலுள்ளவைகள் விளங்குதி;ல்லை என்ன செய்ய....... குறுக்காலை போனவர் நகைச்சுவை பகுதியில் நிறையபேர் பார்ப்பது தவறு இளைய சமூதாயத்தக்கு கேடானது அதை மூடும்படி நிர்வாகத்திடம் கேக்கறார் ஜயா நீங்கள்தானே நகைச்சுவை பகுதியில் முகத்தார் பகிடி எண்ட தலைப்பை தொடக்கி வைத்தினீங்கள் இண்டைக்கு அந்த பகுதியை பார்த்தவர்களின் எண்ணிக்கையை பாத்திர்;களா ஏன் சனம் இப்பிடி பார்க்குது எண்டு நினைக்கிறீங்கள்? இறுகிய மனங்களுடன் வரும் உறவுகளுக்கு இதை பார்த்து சிரிக்கும் போது சிறிது நேரமாவது கவலையை மறக்கிறார்கள்தானே அப்பிடி நகைச்சுவையின் தன்மையை புரிந்தா நீங்களும் அப்பிடியான பகுதிகளின் இளைஞர்கள் நேரத்தை செலவிடுவது தவறு எண்ட அடிப்படையில் குறுக்ஸ்க்கு ஆதரவாகக் குரல் குடுக்கிறீர்கள் உங்களுக்கும் மட்டுறுத்தினர்களுக்கும் பிரச்சனைகள் இருக்கலாம் அதுக்காண்டி காலம் காலமாக இருந்துவரும் தலைப்புகளை நிறுத்தச் சொல்வது உங்கள் அறிவுக்கு சரியாகப் படுகிறதா? இதில் நாங்கள் வீணாக கருத்தாடாமல் நீங்கள் மோகனுக்கு தெரியப்படுத்துங்கள் களவிதிமுறைகளை மாற்றி நகைச்சுவை அரட்டை பகுதிகளை மூடிவிடச்சொல்லி.....................

இன்னுமொரு கருத்து குறுக்கஸ் சொன்னார் சும்மா கைதட்டி விசில் அடித்து போவதுக்கு இடம்குடுக்க கூடாது எண்டு சிலர் தமது சந்தோஷத்தை தெரியப்படுத்த கைதட்டி விசில் அடிப்பார்கள் இது தனி மனித சுதந்திரம் இதை யாரும் தடை போட முடியாது உங்களுக்கு விருப்பமில்லையா கையை கட்டி கொண்டு பேசாமல் நில்லுங்கோ இதுக்கு ஒரு உதாரணம் 1987 சுதுமலையில் தேசியத் தலைவர் முதல் முதலில் மக்கள் முன் தோன்றி உரையாற்றியது அனைவருக்கும் தெரியும் தலைவர் உரையாற்றுவார் எண்டதும் அங்கு எழுந்த கரகோஷம் விசில் சத்தம் அடங்க ஒரு 5 நிமிடங்கள் சென்றது ஏன் மக்கள் விசில் அடித்தார்கள் அவர்களுக்குள் ஏற்பட்ட சந்தோஷம் இதை எத்தனை துப்பாக்கிகள் பக்கத்திலிருந்தாலும்; தடுக்கமுடியாது இதுஏன் சொல்லுறன் எண்டா ஒருவனின் ரசிப்புத்தன்மை தடை செய்வது அடக்குமுறைக்கு சமன் இப்ப அதை இந்த யாழ் களம் செய்யவேண்டும் எண்டு எதிர்பாக்கிறீங்களா??;


- Eelavan - 11-01-2005

யாழ் களம் சிந்தனைக்கு இடம்கொடுப்பதாய் வளர் போக்கிற்கு வழிசமைப்பதாய் இருக்கவேண்டுமென்ற ஆதங்கத்தில் குறுக்காலைபோவான் இப்படி எழுதியிருக்கிறார் என்று புரிந்து கொள்கிறேன்.சாதாரணமாக களத்தின் போக்கில் அக்கறை கொண்ட எவருக்குமே எழும் அக்கறை இது.

ஆனால் விமர்சன நோக்கில் குறுக்காலை போவானின் கருத்து ஏற்றுக்கொள்ளப்பட முடியாது.ஒரு பல்சுவைக் களம் என்ற ரீதியில் நகைச்சுவை அரட்டையில் இருந்து தத்துவச் சிந்தனை வரையிலும் அவை அவற்றிற்கெனப் பரிந்துரைக்கப்பட்ட பகுதிகளில் வாதிடுதல் நிகழ் வேண்டும் அப்போதுதான் களம் சமானமாகச் செல்லும்.தனித்த அரட்டையும் வாழ்வுக்குதவாது.உணர்வுத்தளத்தைத் தொடாத சிந்தனைகளும் வளமான வாழ்க்கைக்கு உதவாது.

ஆனால் கள உறவுகள் இரண்டினதும் தேவையைச் சரியாகப் புரிந்துகொண்டு இரண்டையுமே வளர்த்தெடுக்கவேண்டும் என்பதை சக உறிஉப்பினனானக வேண்டிக்கொள்கிறேன்.தனியே அரட்டையில் மட்டும் காலங்கடத்தாது சமூகத்தின் வளர்ச்சிக்கு வேண்டிய விடயங்களிலும் கவனஞ் செலுத்துங்கள்.

முக்கியமாக ஈழத்திலும் புலத்திலும் வெளிவரும் நூல்கள்.மற்றும் நீங்கள் படித்த நூல்கள்,பார்த்த ஆங்கில,தமிழ்,பிறமொழித் திரைப்படங்கள்,குறும்படங்கள்,உங்களுக்குப் பிடித்த ஓவியங்கள் கலைகள் பற்றியோ
அல்லது முகத்தார் சொன்னது போன்ற அருகி வரும் எம் தேசத்துக் கலைகள் பற்றியே இங்கே பகிர்ந்து கொள்ளலாமே.ஒப்பீட்டளவில் அவ்பற்றுக்கான பக்கங்கள் குறைந்தளவு பயனீட்டாளரைக் கொண்டிருப்பதாகப் படுகிறது ஏனிந்த சிந்தனை வெறுமை.

அதே போன்று அரட்டையே அடித்தாலும் ஜொள்ளு,ஜோக்கு,லொள்ளு போன்ற அழகு தமிழ்ப் பிரயோகங்களை விட்டுவிடலாமே.அதே பொருள் தரும் தமிழ்ச் சொல் இருக்க ஆங்கிலத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாமே.

ஒருவர் ஒருவரைக் குறை சொல்வதை விடுத்து.எம்மிலிருந்தே ஆரம்பிப்போம்


- narathar - 11-01-2005

எல்லோருடய கருத்துக்கும் நன்றி,
இங்கே நான் சொல்ல வந்தது கொன்ச்சம் வித்தியாசமா விளங்கப் பட்டுள்ளது போல் உள்ளது. நான் நகச்சுவைப் பகுதயையோ அல்லது அரட்டயய்யோ மூடிவிட வேண்டும் என்று சொல்ல வரவில்லை. நான் எழுதியதைக் கவனித்திருந்தீர்கள் என்றால் நான் 'மட்டும்' என்ற வார்தைப் பிரயோகத்தை பாவித்துள்ளேன்.இங்கே குறுக்கால போவனின் கோவம் எங்கிருந்து வருகிறது என்பதற்கான காரணத்திச் சொல்வதே எனது நோக்கமாக இருந்தது.அதற்காகவே இந்தக் களம் இயங்கும் நோக்கம்,முறமை பற்றி அவருக்கு எழுதினேன்.இது அவர் எதிர் பார்ப்பதைப் போன்ற நோக்கங்ககளுக்காக மட்டும் நடக்கவில்லை என்பதையே அவ்வறு எழுதினேன்.இங்கே பலரும் பலவித தேவைகளை நிவர்த்தி செய்ய வருகின்றனர்.அவர் அவர் அவர்களுக்கு விருப்பமான பகுதியில் வந்து பார்த்து விட்டு எழுதி விட்டுப் போகின்றனர்.அதில் பொழுது போக்குப் பகுதியே முகியமாக சினிமாவும் அரட்டயுமே அதிக பாவனைக்கு உள்ளாகின்றது.
குருக்ஸ் இனின் கருத்து களத்தின் நோக்கம் ஒரு ஜனரஞ்ஞகமான ஊடகமா களம் இருக்க வேண்டுமா .அல்லது ஒரு நோக்குடன் ஒரு கொள்கையுடன் இருக்க வேண்டுமா என்பதுவே.
தெரியாததைத் தெரியும் இடமா அல்லது பொழுதுபோக்குக்கா என்பதுவே இங்கே உள்ள முரண்பாடு.இரண்டுக்கும் என்பதுவே பொதுவான கருத்தாக இருக்கிறது.ஆனால் சில வேளைகளில் இந்த இரண்டு நோக்கம் முரண்படுகிறது.
உதாரணத்திற்கு அதிகம் பதில் எழுதப் படும் அரட்டயோ அன்றி ஒரு சினிமா நடிகையின் படம் போட்ட தலைப் போ தான் அதிகம் பேர் எழுதுவதனால் மேலே வருகிறது.அதனால் பிரயோசனமான விடயங்களை நேரம் மினக்கட்டு எழுதி ஒருத்தரும் பாக்காமல் அது கீழே போய் விடுகிறது.இங்கிருப்பவருக்கு இதில் நாட்டம் இல்லை என்று அவரும் தொடர்ந்து அவ்வாறனவற்றை எழுதாமல் விடுகிறார்.அப்படியே களம் மீண்டும் சினிமாவுக்குளும்,அரட்டைக்குள்ளும் அமிழ்ந்து விடுகிறது.
இப்படியான நல்ல விசயங்கள் அமிழ்ந்து விடுவதே அவரின் கோவத்திற்குக் காரணம் என்று நினைகிறேன்.
மற்றும் ஒரு சில மட்டுறுத்தினர் பக்கச் சார்பாக பிரச்சினைகளை தீர்க்காமல் அணி சேர்ப்பதுவும்,தம்மிடம் ஆயுதம் உண்டென்று விலாசம் காடுவதும் (இதைப் பல இடங்களில் காணலாம்,தாம் ஆயுதக் கடை வைத்திருக்கம் என்று சொல்லித் திரிவதும்)அணி சார்ந்தவர்களைப் பாதுகாப்பதுவும் ,முகமூடி போட்டுக் கொண்டு தனது கருத்துக்களுக்கு ஆதராவக் எழுதும் படி மற்றவ்ர்களைத் தூண்டுவதும் அண்மயில் சினேகாவின் படப் பிரச்சினயில் நான் அவதானித்த விடயங்கள்.இது களத்தின் சினிமாப் பகுதியில் 'அசின்னின் படத் தலைப்புக்குள் நடந்தது.இவற்றைப் பாக்கும் போது இவருக்கு மட்டுறுத்தினர் ஆவதற்கான் தகுதி எவ்வாறு வந்தது என்று எண்ணத் தோன்றுகிறது.

இறுதியில் எனது தனிப்பட்ட கருத்து ஒவ்வொரு ஊடகத்திற்கும் ஒரு நோக்கம்,பின் புலம் இருக்கு.எல்லோரும் புகை பிடிப்பதை ,மது அருந்துவதை,போதைப் பொருள் பாவிப்பதை விரும்புவர்.அவர்கள் விரும்புகிறார்கள் என்பதற்காக இவற்றை வழங்குவதா அல்லது சமுதாய உணர்வுடன் இவற்றைத் தடை செய்து, அல்லது குறைத்து ஆரோக்கியமான விடயங்களுக்கு முக்கியத்துவம் குடுப்பதா என்பதுவே கள நிர்வாகத்தின் முன் உள்ள தெரிவு. நான் இங்கே எழுதுவது பலருக்கு விருப்பம் இல்லை விளங்க இல்லைப் போல் உள்ளது அதலால் எனது நேரத்தை வேறு பயன் உள்ள வழிகளில் செலவழிக்கலாம் என்று நினத்துள்ளேன் . நேரம் வரும் போது அரட்டைகளிலும்,படம் போடுவத்திலும் அல்லது வெட்டி ஒட்டுவதிலும் செலவழிக்கிறேன்.


பொருள்முதல் வாதம் விளங்கக் கஸ்ட்டம் தான் ஆனா அசினின் படத்தைப் பார்த்து ஜொள்ளு விடுவது அலாதியானது தான் ஆனா அவர் அப்படியே வாழ் நாள் முழுவதும் ஜொள்ளு விட்டுக் கொண்டு இருப்பார்.மற்றவர்கள் எங்கோ போய் விடுவர்.அறிவுத் தேடல் இல்லாத இடத்தில் வளர்ச்சி எங்கே?உலகம் வளராதவர்களுக்கக நின்று விடுவதில்லை.இது தனி நபர்களுக்கும் பொருந்தும் அவர் சார்ந்த சமூகத்துக்கும் பொருந்தும்.

அனைவருக்கும் நன்றி.


- matharasi - 11-01-2005

நாரத சுவாமி ...என்னா கோவிச்சுட்டு களத்திலே வராமல் இருந்திடாதே...என்னா சாமி உனக்கு புரிஞ்சிக்காததையா நானு சொல்லிக்க போறன்.

சாமியோவ்... களத்திலை என்னா டெக்னிக்கா .அது கலகமோ...என்ன இழவோ செய்து புதிய விசயங்கள் உருவாவுகதற்கு காரணமாயிருந்தாய்..இவ்வளவு செய்து போட்டு எங்கையோ ஓட போறனென்டு சொல்றீயே.....உனக்கே அடுக்குமா....

சாமி...குறுக்ஸ் நல்லதுக்கு தான் சொல்றாரென்றாலும் நடைமுறையில் சாத்தியமில்லைங்க...

அரட்டையோ சினிமாவோ முகத்தார்வீடோ....அதுக்கைகூட நல்ல விசயங்களை டெக்னிக்கா சொல்லி ஒரு முன்னோற்றத்துக்கு படிகல்லா அமைக்கலாமுங்க... அதைத்தான் என்எஸ் கிருஸ்ணன் போன்றார் செய்தாங்க....

சேரி பயல் ஏதும் தப்பாச்சொன்னால் பொறுத்துக்குங்க <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- narathar - 11-01-2005

மதராசி நீங்க சொல்லுறது சரி நான் முகத்தார் எழுதறதைப் பற்றி சொல்லவில்லை ,அதைத் தொடங்கியதே நான் தான்.அவர் என் எஸ் கிருஸ்ணனைப் போல் நகச்சுவையுடன் நல்ல விசயங்களையும் எழுதுறார். நான் சுட்டிக் காட்டியது இந்த நடிகர், நடிகையர் படம் போடுறதையும்,அரட்டை மூலம் தேவயில்லாத அணி சேர்ப்பு , நக்கல் (ஐஸ் வர்யா மற்றும் அசின் படம் போட்ட தலைபுக்களுக்குப் போய் பார்த்தீர்கள் என்றால் விளங்கும்,அங்கே நடந்த அரட்டை ஒரு புது கள உறவுக்கு விளங்காமல் என்ன அரசியல் பேசுறீங்க எண்டு கேக்க,
அதை மறைக்க/பாதுகாக்க ஒரு மட்டுறுத்தினர் அதை அங்கிருந்து அகற்றி எங்க போட்டாவோ தெரியாது?)
தேவயா என்பதுவே.இவற்றை வளர்க்கும் ஊக்குவிக்கும் மடுறுத்தினர்கள் களத்திற்கு தேவயா?


- kuruvikal - 11-01-2005

ஆரம்பத்தில் களம் புலத்துப்படைப்பாளிகள் (ஈழத்தில் வாழ்ந்து முதிர்ந்த மொழி அறிவுடையோர் பலர்) என்போராலும் அவர்கள் சார்ந்தோராலும் மட்டுமே கருத்தாடலுக்கு என்று பயன்படுத்தப்பட்டு வந்தது...! இன்று பல தரப்பட்டவர்களும்...நிகழகால படைப்பாளிகள் அல்லாதோரும்.. இளையவர்களும் களமெங்கும் நிறைந்திருக்கிறார்கள்..! அவர்களிடம் பல வேறுபட்ட திறமைகளும் படைப்பாற்றலும் ஊக்கமும் இருக்கிறன...! பலரிடம் மொழி வளப்பிரச்சனை இருக்கிறது..! அது மட்டுமன்றி அந்நிய சூழலுக்குள் பிறமொழி கட்டாய ஆதிக்கத்துள் வாழும் இளையவர்கள் தங்களால் இயன்ற அளவு தமிழில் ஆர்வத்தோடு கருத்தாட வந்திருப்பதும்..தமது சுய படைப்புக்களைத் தருவதும் வரவேற்கப்பட வேண்டிய விடயம்..! அதில் கருத்தியல் ஆழம் இல்லாமல் இருக்கலாம்...அல்லது இருக்கலாம்.. அது இரண்டாம் பட்சம்..ஆனால் அவர்களுக்கான மொழிப் பயன்பாட்டுக்கு இக்களம் வழிவகுக்கிறது..இங்கு சிலரின் கருத்துப்படி பார்த்தால் பள்ளியில் வெறும் உயர்தர வகுப்புகள் மட்டுமே நடத்தப்பட வேண்டும் மிகுதி வகுப்புக்கள் தங்களை தரக்குறைவாக்குகிறது என்பதாக.. நகைப்புக்கு இடமாக இருக்கிறது..! இக்களம் பல்சுவைக்களம் என்பதிலும் பல்லார்வக்காரர்களையும் உள்வாங்கும் களம்..அதன் மூலம் பலதரப்பட்டவரிடமும் இருக்கும் பல்வேறு திறமைகள் தாய் மொழியில் வெளிக்கொணரப்பட உதவும் களம்..!

ஆரம்ப காலத்தில் இருந்து அரட்டைக் காலம் வரை இக்களத்தை அவதானித்து வந்திருக்கின்றோம்..! ஆரம்ப காலத்தில் படைப்பாளிகளிடம் கருத்தியல் போட்டி பொறாமை இருந்தது..! அப்போதும் தனி நபர் வசைபாடல்கள் இருந்தது..! மாற்றுக் கருத்துக்களை உள்வாங்கும் பக்குவம் இருக்கவில்லை..! இன்றும் சிந்தனை புரட்சி சீர்திருத்தம் என்று வைக்கப்படுவதை அப்படியே மற்றவர்கள் ஏற்க வேண்டும்...அதில் மற்றவர்கள் ஆர்வம் செலுத்த வேண்டும் என்ற ஒரு கட்டாயம் வலியுறுத்தப்படுகிறது..! இவை அவசியமில்லாத அழுத்தங்களை கருத்தாளர்கள் மீது திணிக்கிறது..! யாழ் களத்தின் நோக்கம் மொழி வளப்பயன்பாடும்...அதன் மூலமான கருத்துப் பிறப்பாக்கலும்.. உள்வாங்கலும் என்பதாகவே இருக்க முடியும்..! எனவே பலதரப்பட்டவர்களும் தங்கள் தங்கள் விருப்பத்துக்கு நல்ல மொழி நடையை வளர்த்துக் கொண்டு..தங்கள் பாணியில் அனுமதிக்கப்பட்ட அளவில் தங்கள் சுய ஆக்கங்களுக்கு முன்னுரிமை கொடுத்து தங்கள் திறமைகளை வெளிக்கொணர இக்களத்தைப் பயன்பட்டுத்தின் அதுவே இக்களத்தின் சமூகத்துக்கான சரியான பங்களிப்பாக இருக்க முடியும்..!

இங்கு முன்வைக்கப்படுவதில் மாக்சியமும் சோசலிசமும் முதலாளித்துவமும்...பாலியல் சுதந்திரமும் பெண்களும் என்பது போன்ற... பழைய பாடசாலை விவாதத் தலைப்புகள்..புதிய புதிய வடிவங்களில் இங்கு வைக்கப்பட்டு அவை புதிய சிந்தனைகளாக சித்தரிக்கப்படுகின்றன..! அதற்குள் இளையவர்கள் நுழைந்து கருத்தாட வேண்டும் என்றும் கோரப்படுகின்றன..! புலம் சரி தாயகம் சரி இன்று பெருமளவு பாலியல் விடயங்கள் இருபாலாராலும் சர்வசாதாரணமாக பகிரப்படுகின்றன..! அதற்கான தெளிவு பெறப்பட்டே வருகிறது..! அத்தோடு அவைக்கான வரையறைகளும் அமுலாக்கத்தில் இருக்கின்றன..! இவற்றை இன்று இளையவர்கள் தெளிவாக அந்திருப்பதால் இவ்வாறான விவாதங்களில் தங்கள் நேரத்தை செலவு செய்யாமல்...தங்கள் ஆற்றல்களுக்கு மொழி வளர்ச்சிக்கு அவசியமான எளிமையான மற்றும் மன மகிழ்ச்சிக்குரிய விடயங்களில் தங்களின் பங்களிப்பாக வழங்க முனைகின்றனர்..! இவை வரவேற்கப்பட வேண்டும்..! இன்றேல்..அவர்கள் வேற்று மொழித் தளங்களில் உள்ள கருத்தாடும் சுதந்திரத்தால் ஈர்க்கப்பட்டு அங்கு தங்களை ஈடுபடுத்தவே பெரிதும் முனைவர்....!

அடுத்து ஒரு முக்கிய விடயத்தை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.. இக்களத்தில் சிலர் வந்தது முதல் மற்றைய கள உறுப்பினர்களை தனிப்பட ஆராய்வதிலும் அவர்களின் கருத்துக்களுக்கு பதில் கூறமுடியாத போது தங்களின் கற்பனைக்குள் உருவாகும் தனிநபர் தோற்றங்களை கருத்தாக செருகுவதும் தொடர்கிறது..! அநாவசியமாக மட்டுறுத்தினர்கள் மற்றும் கள உறுப்பினர்களின் கருத்துக்கள் தொடர்பில் சிலர் களத்தின் மீது குற்றம் சுமத்த முனைவது அவர்களின் எண்ணங்களில் உண்மையான கருத்துச் செதுக்கல் மற்றும் வழங்கலுக்கு அப்பால் கருத்தாதிக்க எண்ணமே ஊன்றி இருக்கிறது..என்பதையே காட்டுகிறது..!

இதற்காக தங்கள் கல்வியியல் மற்றும் இதர பின்னணிகளை வெளிப்படையாக்கி தாங்கள் சமூகத்தில் படிக்கும் சமூகம்..தாங்கள் சொல்வது சரி என்பதாகக் காட்டி கருத்துக்களை கட்டாய உள்வாங்களுக்கு வலியுறுத்துகின்றனர்..! எங்கள் சமூகத்தில் உள்ள குறைப்பாட்டில் இதுவும் ஒன்று.. பல்கலைக்கழகத்தில் படிப்பவர்கள் சொல்லிவிட்டால்..அது வேதவாக்கு என்று எண்ணி மந்தைகள் போல அதை பிந்தொடர்வது..! எந்த ஒரு விடயத்தையும் தெளிவாக சுய ஆய்வுக்கு உட்படுத்தி உள்வாங்கும் திறமையை மக்கள் பெற்றுக் கொள்ள வேண்டும்..! குழுக்களின் அல்லது தனிநபர்களின் சிந்தனைகளை அப்படியே உள்வாங்க வேண்டும் என்பது அவசியமில்லை..! அந்தவகையில் கருத்துக்களம் ஒரு விடயம் குறித்து பலதரப்பட்ட கருத்துக்களையும் வெளிக் கொணர்கிறது..! அதை அனைவரும் பக்குவமாக ஏற்று தங்களுக்கு அவசியமானதை எடுத்துக் கொள்வதும்..சுட்டிக்காட்டுவதும் சிறந்ததாகும்..அதை விடுத்து களத்தை தனிநபர்களை குற்றம் சாட்டுவது தங்கள் எதிர்பார்ப்பு நடக்காத ஏமாற்றத்துக்கு பழிதீர்ப்பது போன்றது..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea


- தூயவன் - 11-01-2005

:roll: :roll: :roll:


- Niththila - 11-01-2005

எல்லாருக்கும் வணக்கம்

களத்தில என்னை மாதிரி நீளமாக தமிழில எழுத முடியாதவர்களும் இருக்கிறம் என்னால இங்க எழுதப்படும் விடயங்களை வாசிச்சு விளங்குற அளவு தமிழறிவு உள்ள போதும் தமிழில சிந்திச்சு உங்கள மாதிரி கோர்வையா எழுத முடியாது காரணம் நாங்க படிச்ச மொழி வேற

உண்மையில நான் களத்துக்கு வந்த பிறகுதான் தமிழில மட்டுமான உரையாடலுக்கு சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு

களத்தில என்னால பந்தி பந்தியா எழுத முடியாட்டாலும் நீங்க எழுதுறதை வாசிக்கிறமே :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

அடுத்தது தயவு செய்து தனிப்பட்ட கோபங்களால களத்தில ஒருவரை ஒருவர் தாக்கி எழுதுறதை நிப்பாட்டினால் சந்தோஷம் :wink:

உறவுமுறை சொல்லி கள உறவுகளை அழைப்பதில பிழை இருக்கிறதாக நான் நினைக்கவில்லை <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- narathar - 11-01-2005

Niththila Wrote:எல்லாருக்கும் வணக்கம்

களத்தில என்னை மாதிரி நீளமாக தமிழில எழுத முடியாதவர்களும் இருக்கிறம் என்னால இங்க எழுதப்படும் விடயங்களை வாசிச்சு விளங்குற அளவு தமிழறிவு உள்ள போதும் தமிழில சிந்திச்சு உங்கள மாதிரி கோர்வையா எழுத முடியாது காரணம் நாங்க படிச்ச மொழி வேற

உண்மையில நான் களத்துக்கு வந்த பிறகுதான் தமிழில மட்டுமான உரையாடலுக்கு சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு

களத்தில என்னால பந்தி பந்தியா எழுத முடியாட்டாலும் நீங்க எழுதுறதை வாசிக்கிறமே :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

அடுத்தது தயவு செய்து தனிப்பட்ட கோபங்களால களத்தில ஒருவரை ஒருவர் தாக்கி எழுதுறதை நிப்பாட்டினால் சந்தோஷம் :wink:

உறவுமுறை சொல்லி கள உறவுகளை அழைப்பதில பிழை இருக்கிறதாக நான் நினைக்கவில்லை <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->



வணக்கம் நித்தி,

நான் எழுதியது திரிபு படுத்தப்பட்டு கருத்தாடல் வேறு திசை நோக்கி நகர்த்தப் படுவதற்கு முன்னர்,

1) நான் எழுதியது நடிகை, நடிகயரது படக்கள் போடுவது பற்றி .இது தான் எமது இழய தலைமுறையின் பங்களிப்பு என்று அவர்களை மலினப் படுத்த வேண்டாம்.அதை விட அவர்கள் திறமையானவர்கள்.இங்கே அவர்களின் மொழி அறிவு பற்றி ஒருவரும் கலந்துரை ஆடவில்லை.

2)உறவுமுறை கூறிக் கதைப்பது பற்றியும் எதுவும் கூறவில்லை. நான் சொல்லுவது விளங்க வேண்டும் ஆகில், ஐஸ்வர்யாவின் படம் உள்ள தலைப்பிலும்,அசினினின் படம் போட்ட தலைப்பிலும் நடந்த,(இருந்த?) அரட்டயைப் பார்க்கவும்.

களத்தில் நடப்பவற்றை வைத்தே இதனை சொல்லுகிறேன் ஒழிய ,தனிப்பட்ட ரீதியாக எனக்கு எவருடனும் கோவம் கிடயாது.தேவயற்றை அணி கூடலும், நக்கல்களும் களத்தில் நடு நிலயாகச் செயற்பட வேண்டிய மட்டுறுத்தினர் செய்வது,களத்தின் போக்குக்கு ஆரோக்கியமானதா?


- kurukaalapoovan - 11-01-2005

முகத்தார், உங்கள் தனிமடலுக் நான் எழுதிய பதிலுக்கு பிறகும் நான் உங்கள் பகுதியை மூடச்சொல்லுறன் என்டு எழுதுறீங்கள்? :? சரிபறவாயில்லை... நிர்வாகத்திற்கு சிலபகுதிகளை மூடச்சொல்லுவதற்கு நான் இங்கு எல்லோரும் வாசிக்கும் படியாக எழுதவேண்டிய அவசியம் இல்லை என்பதையும் கொஞ்சம் யோசியுங்கள்.

நாட்டுக் கூத்து எங்கள் கலாச்சாரத்தின் அங்கம், இணையத் தொழில்நுட்பத்தைப் பயன் படுத்தி அதை பேணிக் காப்பாற்றுங்கள், இளயதலைமுறைக்கும் அதுபற்றி தெரிய ஆவலாக இருக்கும் சொல்லிக்குடுங்கோ, நல்லது.

ஆனால், யாழ்களத்துக்கு வாறவை எல்லாம் கைநாட்டு கேசுகள் அவைக்கு நாட்டுக்கூத்து வைச்சுத்தான் ஊர் உலகத்தில நடக்கிறதை போதிக்கலாம் என்று காரணம் கூறுவது எந்தளவுக்கு பொருத்தமோ தெரியாது. கணனியை பாவித்து ஒரு இணயத்தளத்துக்கு வரக்கூடிய விளக்கம், யுனிக்கோட், பாமினி எழுத்துரு விடயங்கள் தெரிந்தவர்களை நாட்டுக்கூத்து வைத்துத்தான் பொது அறிவுபுகட்டு வேணும் எண்டு ஏன் அவர்களின் தரத்தை குறைக்கிறீங்கள்?

6 அங்கங்கள் எழுதினா பிறகு எதிர்ப்புத் தெரிவிப்பதாக சொல்லுறீங்கள். நீங்கள் சில அங்கங்களில் நல்ல விடயங்கள் சொல்லி இருக்குறீங்கள் இல்லை எண்டு சொல்லவில்லை. ஆனால் அந்த நல்ல கருத்துக்கள் பொறுக்கு எடுக்கப்பட்டு மேற்கொண்டு கருத்தாடல் விவாதங்களிற்கு வழிவகுத்தா? உதாரணத்துக்கு ஒரு ******** யாவது உங்கள் 6 பகுதிகளில் இருந்து 1 கருப்பொருளை பொறுக்கி எடுத்து அது சார்பாக கருத்து வைத்தா?

உங்களுக்கு தனிமடலில் போட்டதை திருப்பியும் சொல்லுகிறேன். <i>நான் உங்களில் ஒருவராக சமனாகத்தான் கருத்தாட முயல்கிறேன்.

மட்டம் தட்டுவது சுயமரியாதை இல்லாமல் தனக்கு அது தெரியாது இது தெரியாது நீங்கள் பெரியமனிதர் சொல்லுங்கோ கேக்கிறம் என்று தன்னை தாழ்த்தி கதைப்பவர்களிற்கு சுறணைவர வேண்டும் என்று.

தனிநபர் தாக்குதல் செய்வது மற்றவர்களின் அறியாமை வைத்து தனது சுயவரட்டு கொளரவத்துக்கு தீனி போடுபவர்களிற்கு.</i>

புலத்தில் (மேற்குலகில்) கவனித்துப்பாருங்கள் பல்கலைக்கழகத்தில் படித்து white colar வேலை செய்பவர்களுக்குதான் நாட்டு நடப்பு உலக விவகாரங்கள் தெரியும் என்றில்லை. முடி வெட்டுபவர்க்கும் அரசியல் பேசத் தெரியும் பேரூந்து ஓட்டுநரும் பொருளாதாரம் பற்றி தயக்கமின்றி கருத்துக் கூறவார். அவர்கள் தங்களைத்தாங்களே சிறுமைப்படுத்தி "ஓ நாங்கள் பள்ளிக்கூடம் பல்கலைக்கழகம் போய் பெரிய படிப்பு படிக்கவில் சும்மா blue colar வேலை தானே செய்யிறம்" என்று தங்களை தாங்களே அவமதிப்பதில்லை. எங்களுக்கு அரசியல் தெரியாது, பொருளாதாரம் விளங்காது, தொழில்நுட்பம் வரவே வராது, வேற்று மொழி தெரியாது படிக்கவும் மாட்டம், திரை, தொடர்நாடகம், கால்பந்து பற்றித்தான் கதைக்கத் தெரியும் என்று ஒதுங்குவதில்லை. நாலுபோர் படிச்சவை, மெழியாக்கம் செய்வினம் அவையின்ரை ******* கயிறென்று பிடிச்சு மேலே ஏறப்போகிறம் எண்டு ஏமாளிகளாக இருக்கிறதில்லை.

*****களஉறுப்பினர்களை தாக்கும் வகையில் இருந்த கருத்து நீக்கப்பட்டுள்ளது = யாழினி


- adsharan - 11-01-2005

kurukaalapoovan
எழுதியது: உதாரணத்துக்கு ஒரு ****** உங்கள் 6 பகுதிகளில் இருந்து 1 கருப்பொருளை பொறுக்கி எடுத்து அது சார்பாக கருத்து வைத்தா?
நாலுபோர் படிச்சவை, மெழியாக்கம் செய்வினம் அவையின்ரை ********* கயிறென்று பிடிச்சு மேலே ஏறப்போகிறம் எண்டு ஏமாளிகளாக இருக்கிறதில்லை. :roll: :roll: :roll: :roll:

******** உறுப்பினர்களை தாக்கும் வகையில் எழுதப்பட்ட கருத்தை மேற்கோள் காட்டப்பட்டுள்ளது சொற்கள் நீக்கப்பட்டுள்ளது. - யாழினி