Yarl Forum
கொதிக்கிறது திருமலை... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: கொதிக்கிறது திருமலை... (/showthread.php?tid=1634)

Pages: 1 2 3 4 5 6


கொதிக்கிறது திருமலை... - iruvizhi - 01-03-2006

கொதிக்கிறது திருமலை

திருகோணமலையில் நேற்று ஐந்து அப்பாவி மாணவர்கள் படையினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளதால், இன்று திருமலையில் அனைத்து வணிக நிலையங்களும், மூடப்பட்டுள்ளதுடன், பாடசாலைகளிற்கு மாணவர்கள் வராமையாலும், அலுவலகங்களிற்கு ஊழியர்கள் செல்லாiமாயலும் அவை வெறிச்சோடிக் காணப்படுகின்றன. இன்று வழமை மறுப்புப் போராட்டத்திற்கு எந்த அமைப்பும் அழைப்பு விடுக்காத போதும், மக்களால் இந்த வழமை மறுப்புப் போராட்டம் நடாத்தப்படுகிறது.
அரச அலுவலகங்களிலும் வரவு குறைவாக இருந்ததை முன்னிட்டு ஏனையவர்களும் வீடுதிரும்பியுள்ளனர் எனத்தெரியவருகின்றது.

அத்தோடு இன்று காலையிலேயே மக்கள் ஒரு வித பதட்டத்துடனேயே காலையில் அவசர அவசரமாக வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதே வேளை பெரும் எண்ணிக்கையான சிறீ லங்கா காவற்துறையினரும், சிறீ லங்கா இராணுவத்தினரும் சுற்றுக்காவல் நடவடிக்கைகளில் ஈடுபடடுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.




தகவல்: சங்கதி


- iruvizhi - 01-03-2006

இறந்த மாணவர்களுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள். Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry


- தூயவன் - 01-03-2006

கல்விச் சமூகத்தை அழிக்கும் சிங்கள ஆதிக்க சக்திகளின் எண்ணங்களுக்கு இரையாகிப் போன உறவுகளுக்கு கண்ணீர் அஞ்சலிகள் Cry Cry Cry Cry


- கீதா - 01-03-2006

<span style='font-size:25pt;line-height:100%'>இறந்த மாணவர்களுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்</span> Cry Cry Cry Cry Cry Cry Cry Cry


- நர்மதா - 01-03-2006

உயிர்நீத்த அப்பாவி மாணவர்களுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள் Cry

அப்ப இனி என்ன இராணுவத்துக்கு கலக்கம் தான் எங்க அடி விழது என்று பார்துக் கொண்டிருக்க வேண்டியது தான் :?:


- Mathuran - 01-04-2006

மாணவரை கொன்று குவிக்கப் படிவதையா உலகம் மௌனமாக பார்த்துக்கொண்டு இருக்கின்றது? இது என்ன விந்தையான உலகமப்பா? சிறுவர்கள் மாணவர்களென பலர் கொல்லப்பட்டவண்ணம் உள்ளனர். இதனை நிகழ்த்தும் சிங்கள பயங்கரவாத அரசாங்கத்தை உலகம் கண்டிக்கத்தவறினால். பின்னர் இதுவே முன்மாதிரி ஆகிவிடும். அதனையா உலகம் விரும்புகின்றது????

<b>சிங்கள இனவெறிக்கு பலியான மாணவர்களுக்கு எனது அண்ணீர் அஞ்சலிகள்.</b>


- MUGATHTHAR - 01-04-2006

இந்த கொலையைப் பாக்கும் போது சின்ன சந்தேகம் 1983ம் ஆண்டு தின்னவேலி குண்டு வெடிப்பைத் தொடர்ந்து மானிப்பாய் வெஸ்லி தியேட்டருக்குப் பக்கத்தில் பத்து அப்பாவி பொது மக்கள் வரிசையாக நிக்க வைச்சு சுட்டுக் கொல்லப்பட்டார்கள் இன்றும் அதே மாதிரியாக எங்கையோ குண்டு வெடிக்க அவ்வழியில் வந்த மாணவர்கள் பிடித்து வரிசையாக நிக்க வைச்சு சுடப்பட்டுள்ளார்கள் கிட்டத்தட்ட 22 ஆண்டுகள் எமது போராட்டம் என்ன பலனைத் தந்துள்ளது என சிந்திக்க வைக்கிறது சிங்களவன் அன்று செய்ததைத்தான் இன்றும் செய்கிறான் இதுக்கு என்ன முடிவு???????

இறந்த மாணவர்களுக்கு கண்ணீர் அஞ்சலிகள்.........


- RaMa - 01-04-2006

அப்பாவி மாணவர்களுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்.... Cry Cry


- Luckyluke - 01-04-2006

சில நாட்களாகவே அப்பாவி ஈழத்தமிழரின் மீதான வன்முறை இலங்கையில் தலைவிரித்து ஆடுகிறது.... சிறுமிகளை கூட பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தும் கேவலம் அரங்கேறுகிறது... மீண்டும் ஒரு 1983 வருமோ என அஞ்சுகிறேன்.... சிங்கள ராணுவத்துக்கு ஆண்மை இருந்தால் விடுதலைப் புலிகளுடன் மோதி பார்க்கட்டும்... அதை விட்டு அப்பாவி மக்களை கொல்வதில் அவர்களுக்கு என்ன லாபம்?

* லக்கிலுக் கேட்டு கொண்டபடி மாற்றப்பட்டுள்ளது - மதன்


- Nitharsan - 01-04-2006

கனவுகள் நிறைவு பெறாமல்..
கலைந்த கனவுடன்
கயவனின்..
கருவிக்கு இரையான
கண்மணிகள் இவர்கள்
கல்வி சமூகத்தை
கருவிலே அழிக்கும்..
கயவரின் செயலை..
கண்டு கொள்ளுமா உலகம்?
காணமல் இருப்பதால்..
கருக்கொள்ளும் யுத்த மேகத்தை
கருத்தில் கொள்ளுமா?
கண்ணீரால் அஞ்சலிக்கிறேன்
கண்கான தேசத்திலிருந்து..


- வர்ணன் - 01-04-2006

Luckyluke Wrote:சில நாட்களாகவே அப்பாவி ஈழத்தமிழரின் மீதான வன்முறை இலங்கையில் தலைவிரித்து ஆடுகிறது.... சிறுமிகளை கூட பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தும் கேவலம் அரங்கேறுகிறது... மீண்டும் ஒரு 1983 வருமோ என அஞ்சுகிறேன்.... சிங்கள ராணுவத்துக்கு ஆண்மை இருந்தால் விடுதலைப் புலிகளுடன் மோதி பார்க்கட்டும்... அதை விட்டு அப்பாவி மக்களை கொல்வதில் அவர்களுக்கு என்ன லாபம்?

உங்களோட உணர்வுகள் வரவேற்ககூடியதுதான்.. ஆனால் தயவு செய்து கற்பழிப்பு என்ற சொல்லை ஈழத்தமிழர் படும் அவலம் பற்றி பேசும் எந்த இடங்களிலும் பாவிக்காதீர்கள். "பாலியல் வன்முறை" என்று மட்டும் பிரயோகியுங்கள். நன்றி 8)


- Luckyluke - 01-04-2006

மட்டுறுத்துனர் யாராவது அந்த வார்த்தையை மாற்றினால் நன்றி உடையவனாக இருப்பேன்...


- MUGATHTHAR - 01-04-2006

Luckyluke Wrote:சில நாட்களாகவே அப்பாவி ஈழத்தமிழரின் மீதான வன்முறை இலங்கையில் தலைவிரித்து ஆடுகிறது.... சிறுமிகளை கூட பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தும் கேவலம் அரங்கேறுகிறது... மீண்டும் ஒரு 1983 வருமோ என அஞ்சுகிறேன்.... சிங்கள ராணுவத்துக்கு ஆண்மை இருந்தால் விடுதலைப் புலிகளுடன் மோதி பார்க்கட்டும்... அதை விட்டு அப்பாவி மக்களை கொல்வதில் அவர்களுக்கு என்ன லாபம்?

அப்பு லுக்குலக் உமது அன்பான ஈழதமிழ்மக்களின் பரிவுக்கு அடியேனின் <img src='http://www.mayyam.com/hub/images/smiles/notworthy.gif' border='0' alt='user posted image'><img src='http://www.mayyam.com/hub/images/smiles/notworthy.gif' border='0' alt='user posted image'>


- Luckyluke - 01-04-2006

தயவுசெய்து இதுபோன்ற பிரச்சினைகளின் போது என் உணர்வுகளை நையாண்டி செய்வதை நிறுத்தவும்.....


- sinnappu - 01-04-2006

Luckyluke Wrote:சில நாட்களாகவே அப்பாவி ஈழத்தமிழரின் மீதான வன்முறை இலங்கையில் தலைவிரித்து ஆடுகிறது.... சிறுமிகளை கூட பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தும் கேவலம் அரங்கேறுகிறது... மீண்டும் ஒரு 1983 வருமோ என அஞ்சுகிறேன்.... சிங்கள ராணுவத்துக்கு ஆண்மை இருந்தால் விடுதலைப் புலிகளுடன் மோதி பார்க்கட்டும்... அதை விட்டு அப்பாவி மக்களை கொல்வதில் அவர்களுக்கு என்ன லாபம்?

:oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops:
:oops: :oops: :oops: :oops: :oops:

:oops: :oops: :oops: :oops: :oops: :oops:


- மேகநாதன் - 01-04-2006

திருகோணமலையில் கடந்த திங்கட்கிழமை இரவு படையினரின் கைக்குண்டு வீச்சிலும், கண்மூடித்தனமான துப்பாக்கிப் பிரயோகத்திற்கு இலக்காகி உயிரிழந்த ஐந்து தமிழ் இளைஞர்களினதும் இறுதிச் சடங்குகள் நாளை வியாழக்கிழமை இடம்பெறும் என தெரியவருகின்றது.

இது தொடர்பான ஏற்பாடுகளில் திருமலை தமிழ் மாணவர் பேரவையினர் ஈடுபட்டுவருவதாக அறியமுடிகின்றது.

இதே நேரம் இச்சம்பவங்களை கண்டித்து திருமலையில் இன்று முதல் இடம்பெறும் வழமை மறுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனவும் அதே சமயம் மேற்படி இளைஞர்களின் இறுதிச் சடங்குகளை முன்னிட்டு எதிர்வரும் வியாழக்கிழமை பொது மக்கள் கலந்துகொள்வதற்காக வழமை மறுப்புப் போராட்டம் தளர்த்தப்படும் எனவும் தெரியவருகின்றது.

தகவல் மூலம் - சங்கதி


- மேகநாதன் - 01-04-2006

<b>திருமலையில் 5 மாணவர்களின் மரணங்களுக்கும் குண்டு வெடிப்பும் துப்பாக்கி சூட்டுக் காயங்களுமே காரணம் பிரேத பரிசோதனையில் முடிவு.</b>


திருக்கோணமலையில் இடம்பெற்ற ஐந்து மாணவாகளின் மரணங்களுக்கு குண்டு வெடிப்பும்,துப்பாக்கி சூட்டுக காயங்களுமே காரணம் என பிரேத பரிசோதனையின் முடிவுகளில் தெரியவந்துள்ளது. திருக்கோணமலையில் நேற்றிரவு எட்டு மணியளவில் கடற்கரையில் நின்று கொண்டிருந்த மாணவர்கள் மீது குண்டு வீச்சு தாக்குதலும் பின்னர் துப்பாக்கி சூடும் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. கடற்படையினரே இந்த தாக்குதலை மேற்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.எனினும் படையினரை இலக்கு வைத்து எடுத்து வரப்பட்ட குண்டு வெடித்தமை காரணமாகவே மாணவர்கள் மரணமானதாக படைத்தரப்பு தெரிவித்திருந்தது. துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்றும் படைத்தரப்பால் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று பிற்பகல் நடத்தப்பட்ட மரணமான ஐந்து மாணவாகளின் பிரேத பரிசோதனையின் போது குண்டு வெடிப்பும், துப்பாக்கி சூட்டுக்காரணமாகவே மரணங்கள் சம்பவத்திருப்பதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை பிரேத பரிசோதனையின் பின்னர் திருக்கோணமலை வைத்தியசாலையில் இருந்து ஐந்து மாணவர்களின் சடலங்களும் உறவினர்களால் அவர்களின் இல்லங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. திருக்கோணமலை தமிழ் மக்கள் பேரவை ஒரு அவசர சந்திப்பு ஒன்றை ஒழுங்கு செய்திருக்கிறது. இதில் கொல்லப்பட்ட ஐந்து மாணவர்களினதும் இறுதி கிரியைகள் தீர்மானம் எடுக்கப்படவுள்ளன.

பெருமபாலும் ஐந்து மாணவாகளினதும் உடலங்கள் எதிர்வரும் வியாழக்கிழமை நகரின் கல்லூரிகளுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் தியாகிகள் அரங்கில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் தீர்மானம் இங்கு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

<b>தகவல் மூலம்- நிதர்சனம்.கொம்</b>


- ப்ரியசகி - 01-04-2006

வீணாக இறந்து போன நம் மாணவர்களுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்.. Cry Cry


- iruvizhi - 01-04-2006

இராணுவ வெறியர்களுக்கு பதில் கொடுக்க நல்ல தருணம் பார்த்துக்காத்திருக்கிறோம் - திருமலை மாணவர் சமூகம் அறிக்கை
றுசவைவநn டில Pயனெயசய ஏயnnலையn றுநனநௌனயலஇ 04 துயரெயசல 2006

எங்கள் உயிர்களை நாமே பாதுகாக்கவேண்டிய சூழ்நிலைகள் தற்போது எழுந்துள்ளன. இந்தநிலையில் எங்களுக்கும் ஆயுதப்பயிற்சிகளை தாருங்கள். இவ்வளவு காலமும் நாங்கள் பொறுத்திருந்தமைக்கு சிங்கள இனவாதிகளினால் நல்ல வெகுமதிகள் அளிக்கப்படுகின்றது. இந்த நிலையில் இன்னும் நாம் பொறுமைகாக்க முடியாது. இனியும் நாம் பொறுத்திருக்கப்போவதில்லை என திருமலை மாவட்ட மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து திருமலை மாணவர்கள் விடுத்துள்ள
அறிக்கையில மேலும் கோரியிருப்பதாவது

இந்த சிங்கள காடை வெறியர்களின் கைகளினால் வீணாக சாவதற்கு நாம் என்ன கோளைகளா? ஆழிக்க வந்த படைகள் மீது அனலெடுத்து சென்று எதிரியை விரட்டி புலிக்கொடி நாட்டிய எமது தேசியத்தலைவனின் மண்ணில் பிறந்தவர்கள்தான் நாமும் எனவே, எமது திருமலை மாவட்ட, எமது தமிழ் இராணுவத்தளபதி கேணல் சொர்ணம் அவர்களே.. நாங்கள் தமிழ் மாணவர்களும், மக்களும் இப்போது எதற்கும் தயாராகவே இருக்கின்றனர். இந்த வெறியர்களின் வெறியாட்டத்திற்கு நல்லதொரு பதில் கொடுக்க தருணம் பார்த்திருக்கின்றனர்.

இனி யுத்தம் ஒன்று மூண்டால் இந்த சிங்கள படைகளில் எவரும் உயிருடன் வீடுதிரும்பப்போவதில்லை என்பதும் உறுதி. எனவே எங்களுக்கும் ஆதப்பயிற்சிகளை தாருங்கள். இந்த இராணுவ வெறியர்களை எமது தாயக மண் எங்குமிருந்தும் ஒரேயடியாக விரட்டியடிப்போம். இந்த வெறிநாய்களின் ஆயுதஅச்சுறுத்தல்களுக்கு நாமும் அந்த வழியல் உரிய பதில் கொடுக்கின்றோம். சமீப காலமாக தமிழ் மாணவர்கள் மீதும் தமிழ் மக்கள் மீதும் தாக்கிவரும் இராணுவத்தின் ஆயுத அச்சுறுத்தல்களை எமக்காக எந்த சமுகமம் தட்டிக்கேட்கப்போவதில்லை. இந்த இராணுவ வெறியர்களுக்கு உரிய பதிலை நாமே அளிக்கின்றோம். வேண்டும் எங்களுக்கும் ஆயுதப்பயிற்சி வேண்டும் ! என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டள்ளது.

<b>தகவல்: சங்கதி</b>


- selvanNL - 01-04-2006

பாருங்கள் சிங்கள இராணுவத்தின் காட்டுமிராண்டித்தனத்தை,, தற்போதைய தமிழர்கள் தந்தை செல்வா காலத்து தமிழர்கள் என்று என்னிக்கொண்டு இருக்கிறார்கள் சிங்களப்பேரினவாதிகள்..

பாருங்கள்,, பொது இடத்தில் கதைத்துக்கொண்டு இருந்த 7 பல்கலைகழக மாணவர்வகளை பிடித்துச்சென்று ஒவ்வொர் ஒவ்வொருவராக வீதியில் படுக்க வைத்து காதுக்கு அருகில் மூளை சிதறும்படியாக சுட்டு இருக்கிறார்கள்,, 5 மாணவர்கள் கொல்லப்பட்ட நிலையில் மீதி 2 மாணவர்களும் சாவது உறுதியாகிவிட்டது எதற்கும் தப்பிக்க முயற்சித்துப்பார்ப்போம் என நினைத்து ஓடிய வேளை முதுக்குபுறத்தில் சுட்டு இருக்கிறார்கள்,,, அவர்கள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.. இதில் பொலிஸ் அதிகாரி சிங்களமக்களின் காதுகளில் பூ சுற்றுகிறன் என்று நினைத்தோ என்னவோ, அந்த கொலைச்சம்பவங்களூக்கும் இராணுவத்துக்கும் தொடர்பு இல்லை என்று பொருள் பட கூறியுள்ளார்,, இந்த கேனை பொலிஸ் அதிகாரிக்கு தெரியாதா 2 மாணவர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவது? அல்லது அந்த பிறவிக்கு அந்த மாணவர்கள் உண்மைகளை சொல்லமாட்டார்கள் என்ற அகங்காரத்தில் தான் அப்படி செய்தாரா??

எமது தேசியத்தலைவரால் சிங்கள தேசத்துக்கு வழங்கப்பட்ட நாட்களின் எண்ணிக்கை குறைவடைந்து செல்கிறது, அதற்கிடையில் செய்யவேண்டிய அட்டூழியங்களை செய்து முடித்துடுவோம் என நினைத்து செய்துகொண்டு இருக்கிறார்கள்,,,


அனைத்து தமிழீழ பல்கலைகழக மாணவர்களூக்கு...

ஆனையிறவு பெரும் தாக்குதலில் (ஓயாத அலை 4) 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆயுதம் தரித்த சிங்கள இராணுவத்தின் உயிர்களுக்கு தமிழீழ தேசியத்தலைவர் அவர்கள் மனிதாவிமான அடிப்படையில் அவர்களின் உயிர்களை பாதுகாக்கும் நோக்குடன் ஓடித்தப்புவதற்கு ஒரு பாதையை அமைத்துக்கொடுத்தார்,, இப்பொழுது அந்த தப்பி போன மறு பிறவி எடுத்ததாக நினைத்துக்கொண்டு இருக்கும் சிங்கள இராணுவத்தினர் செஞ்சோற்றுக்கடன் தீர்பாதக எண்ணி அப்பாவி தமிழ் மக்களை துன்புறுத்தி அனு அனுவாக அழித்துக்கொண்டு இருக்கிறார்கள்,, அனைத்து சிங்கள நா****களையும் தமிழ் மண்ணில் இருந்து பினமாக அனுப்புங்கள் என்பதே எமது ஆசை,,,, :evil: :evil: :evil: :evil: