![]() |
|
மீண்டும் பகுத்தறிவு!! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: மீண்டும் பகுத்தறிவு!! (/showthread.php?tid=1114) Pages:
1
2
|
மீண்டும் பகுத்தறிவு!! - Rasikai - 01-30-2006 [b]இளைஞனின் ஊக்குவிப்பான விமர்சனத்தை கருத்தில் கொண்டு மீண்டும் முயற்சி செய்து இருக்கிறேன். மீண்டும் பகுத்தறிவு!! மனிதன் நான் என்று சொல்லிக்கொள்வாய்........... ஆறறிவு கொண்டேனென்று அழகாய் ஒரு கிரீடம் ........... உனக்கு நீயே சூட்டிக்கொள்வாய்!.......... கண்ணுக்கு முன்னாலொரு சிசு பாலின்றியழுது தன் ஜீவன் கரைக்கையில்..... கண்ணுக்கு தெரியா கடவுளுக்கதை குடம் குடமாய் கொண்டு சென்று.. ஊற்றி கும்பாபிஷேகம் செய்வாய்! ஏழைச்சிறுவன் ஒருவனுக்கு கல்வி தராய்............ எரிகின்றதொரு வீட்டில் தணல் எடுத்து உன் வீட்டு உலை மூட்டுவாய்......... மஞ்சள் கயிறில்கூட ஒருதாலி கொள்ள முடியாமல் மலர்கள் சில.......... "மணமிழந்து" போகையிலே இல்லத்தாள் இருக்க.... இன்னொரு துணை தேடி........... தங்கத்தால் கொலுசு அவளுக்கு வேண்டியலைந்து - நீ தரங்கெட்டு போயிருப்பாய்! பட்டினியோடு உன் தாய் குடலெரிந்து குமுறியழுவாள் அங்கே-நீயோ..... இங்கு... விஜய் படத்துக்கு சென்று விசில் அடித்து மகிழ்ந்திருப்பாய்! இனம் .. இனம் என்று எழுத்தில் மட்டும் வீரம் கொள்வாய்.... எடுத்துச்சொல்லி வந்து யாரும் உதவி கேட்டால்........... கதவை இழுத்துச் சாத்தி அவர் மனசை கொல்வாய்.... பழம் கிடைத்தால் போதும்... தாயை வெட்டி வாழை கன்றின் காலடியில் புதைப்பாய் பட்டாம் பூச்சி சிறகில் நூல் கட்டி.. அது பதைப்பதை பார்த்து ..பட்டம் விட்டேன் என்பாய்! உயிர்களை வதைப்பதை ஒரு பொழுதுபோக்காய் கொள்வாய்... உருப்படாத இந்த அறிவுக்கு... பகுத்தறிவென்று பதிலும் வேறு சொல்வாய்! ஆற்றில் அள்ளுண்டு செல்லும் புள்ளிமான் பற்றி கவலை கொள்ளாய்........... கரையில் இருந்துகொண்டு புல்லாங்குழலிசைத்தபடி அதை ரசிப்பாய்....! கற்றால் என்ன கனவானென்று ஆனால்தானென்ன......... உன்னையே நீயறியாவிடில்.... நீ திரியை தொலைத்த தீபமென்றாவாய்! அலரிப்பூக்கள் கொண்டு அலங்கரித்த மகுடம் யாருக்கு வேண்டும்? கறையான் புற்றை அலங்கரித்த கனகாம்பர மலரானாய் .. நீ போ நீயும் உன் பகுத்தறிவும்....!!! - Vasampu - 01-30-2006 வர வர இரசிகையின் கவிதை மெருகேறுகின்றது. வாழ்த்துக்கள். இளைஞனின் ஊக்குவிப்பால் வந்த கவிதை சரி அதற்காக ஆண்களை மட்டும் சாடலாமோ?? :roll: :roll: - RaMa - 01-31-2006 பட்டினியோடு உன் தாய் குடலெரிந்து குமுறியழுவாள் அங்கே-நீயோ..... இங்கு... விஜய் படத்துக்கு சென்று விசில் அடித்து மகிழ்ந்திருப்பாய்! இனம் .. இனம் என்று எழுத்தில் மட்டும் வீரம் கொள்வாய்.... எடுத்துச்சொல்லி வந்து யாரும் உதவி கேட்டால்........... கதவை இழுத்துச் சாத்தி அவர் மனசை கொல்வாய்.... ---------------------------- ரசிகை உங்கள் கவி பலரை சிந்திக்க வைக்கின்றது. வாழ்த்துக்கள். - kuruvikal - 01-31-2006 Quote:"மஞ்சள் கயிறில்கூட ஒருதாலி கொள்ள முடியாமல் மலர்கள் சில.......... மஞ்சள் தாலி பெண் மானம் கண்ட இழுக்கு பொன் தாலி பெண்ணுக்கு வேலி மனத் தடைகள் தாம் அவை... பெண் தடை தாண்டி பாலுணர்வு வழி பாமரமாய் வாழ வீர வசனம் பேசி வீசி எறிய வீணே கட்ட வேண்டுமா அது..??! பகுத்தறிவால் விட்டெறிந்தான் பதிலுக்கு தேடினான் உற்றவள் இருக்க தானும் ஒருத்தி..! அவள் புத்தியில் உரைக்க - ஒரு வழி பதிலடி பகுத்தறிவு...! ஏட்டிக்குப் போட்டி எதுக்கு வாழ்க்கையில் நிற்க நிலைக்க சிந்திக்க சுயவழி..! தங்கிக்கொள் உன் காலடி..! மாற்றான் வேதத்தில் மந்திரம் ஏன்... மனதுக்கு பிடித்ததை மற்றவனை வதைக்காததை வரையறுக்கக் கற்றுக்கொள்..! மதி உன்னது மட்டும் பெரிசென்று மமதையில் மந்தியாகாதே மானிடா பகுத்தறிவு புலப்படாமலே பட்டுப்போயிடுவாய்..! - poonai_kuddy - 01-31-2006 வசனங்கள் நீண்டுபோச்சக்கா.......வாசிக்கேக்க கவிதைய கவிதையா உள்ளுக்க எடுக்க முடியேல................. பகுத்தறிவே இல்லாததுகள் பகுத்தறிவு பற்றிக் கதைக்குங்கள்......................என்னை கொடுமையடா சாமி.............................உங்கட கவிதையில நல்லாச்சொன்னிங்க அக்கா.........தனக்கு சொந்தமானதுகள மாற்றானின்ர எண்டு சொல்லுவாங்கள்.....................தனக்கு சொந்தமில்லாத படுகேவலமான தாலிய எல்லாம் தங்கட எண்டு புத்திகெட்டுப்போய் உளறுவாங்கள்....................அதுக்குள்ள தங்கத்தாலியாம் மஞ்சல் தாலியாம் மண்ணாங்கட்டித் தாலியாம்..........இவனுகள என்ன செய்யுறது.................தாலி எண்டுற பேரிலயும் தறிகெட்டுப்போன சடங்கு சம்பிரதாயம் எண்டற பேரிலயும் தறிகெட்டு அலையுறாங்கள்....................திருந்தாதுகள் உதுகள்............................. நல்லா தொடந்து எழுதுங்கக்கா கவிதைய................. - வர்ணன் - 02-01-2006 ஒரு கவிதை- சுருக்கமாய் அமைந்தும்- அது -ஒரு புலம்பலாய் போகலாம்- ! ஒரு கவிதை நீளமாய் - இருந்தும்- அதனுள் எந்தவொரு கருத்தும் இல்லாம-போயிடலாம்! சோ- சுருக்கம்- நீளம் - என்பது முக்கியமில்லை- சொல்ல வந்ததை தெளிவாய் சொல்வதில்தான் ஒரு படைப்பாளி வெற்றி பெறுகிறார்- அது- எந்த வடிவில் அமைந்தாலும்-! அந்த வகையில்- உங்கள் கவிதை- யதார்த்த சாட்டையால்- பலர் முதுகில் அறைகிறது-ரசிகை- தொடருங்கள்-! 8) - Rasikai - 02-02-2006 <!--QuoteBegin-Vasampu+-->QUOTE(Vasampu)<!--QuoteEBegin-->வர வர இரசிகையின் கவிதை மெருகேறுகின்றது. வாழ்த்துக்கள். இளைஞனின் ஊக்குவிப்பால் வந்த கவிதை சரி அதற்காக ஆண்களை மட்டும் சாடலாமோ?? :roll: :roll:<!--QuoteEnd--><!--QuoteEEnd--> ம்ம் பொதுவாக எழுதும் போது ஆண்களை சாடுறமாதிரி வந்துவிட்டது இனிமேல் அவ்வாறு நடக்காது பார்த்துக்கொள்கிறேன். உங்கள் வாழ்த்துக்கு நன்றி <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- Rasikai - 02-02-2006 ஆஹா குருவிகாள் உங்கள் பதில் கவி நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள் - Rasikai - 02-02-2006 ரமா,பூனைக்குட்டி, வர்ணன் உங்கள் கருத்துக்கு நன்றி. அதனை கருத்தில் கொண்டு கவி வடிக்கிறேன். :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- ப்ரியசகி - 02-02-2006 அழகான கவி அக்கா..திருப்பி எழுதும் போதும் கவிதையோட கரு மாறாமல் எழுதி இருக்கின்றீர்கள்..நல்ல வரிகள்.. தொடர்ந்து எழுதுங்கள்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Rasikai - 02-02-2006 நன்றி சகி - poonai_kuddy - 02-03-2006 varnan Wrote:ஒரு கவிதை- சுருக்கமாய் அமைந்தும்- அது -ஒரு புலம்பலாய் போகலாம்- ! அண்ணா கவிதை சுருக்கமா இருக்கோணுமெண்டு சொல்லலயே.........................................ஒவ்வொரு வரியும் நிளமா இருக்கிறதால வாசிக்கிறதுக்கு கட்டுரை அல்லூட்டி கதையள் வாசிகஇகிற மாதிரி இருக்கும்............வரியள் ஒரு அளவோட இருக்கணும் அப்பதான் வாசிக்கிறாளுக்கு கவிதையின்ர தாக்கம் இருக்கும்...........................................ஏதோ என்ர அறிவுக்கு பட்டத சொல்லிட்டனுங்கோ...............எடுக்கிறதும் எடுக்காம விடுறதும் உங்கட பிரோப்ளம்...... இங்கதானே கன பெரிய கவிஞ்ஞர்கள் இருக்கினம்.................அவையெண்ண சொல்லுயினம் எண்டு பாப்பம்.................. - தூயவன் - 02-03-2006 வாழ்த்துக்கள் அக்கா. பள்ளிநேரத்திலும் சொந்த ஆக்கங்கள் தருவதையிட்டு <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- வர்ணன் - 02-03-2006 <b>மேற்கோள்: வரியள் ஒரு அளவோட இருக்கணும் அப்பதான் வாசிக்கிறாளுக்கு கவிதையின்ர தாக்கம் இருக்கும்...........................................</b> இந்த வரிகளின் மூலம் நீங்களூம் கவிதை பற்றி நல்லா தெரிஞ்சவர் என்னு நம்புகிறேன்! எங்கே- மேலே ரசிகை என்பவர் - அனுப்பிய கவிதையை அர்த்தம் மாறாமல்-அதே வரிகளை உள்வாங்கி- சுருக்கமா -ஒரு வழில எழுதி காட்டுங்க -பூனைக்குட்டி-! 8) கட்டாயம் நாளைக்கே செய்வீங்க என்று எனக்கு நம்பிக்கை இருக்கு-! பதிலுக்கு ஏதும் வசனம் விடாமல்- கவிதை மட்டும் எழுதி என்று-! உங்க திறமையில-உங்களை விட- எனக்கு நம்பிக்கை இருக்கு! 8) - இளைஞன் - 02-03-2006 நன்றி இரசிகை. முன்னையதைக் காட்டிலும் வளர்ச்சி தெரிகிறது. தொடர்ந்து எழுதுங்கள். அன்றாட நிகழ்வுகளை கவிதை வரிகளில் வெளிப்படுத்துங்கள். வாசிப்போம். கருத்துப் பகிர்வோம். வளர்வோம். - Rasikai - 02-03-2006 தூயவன் இளைஞன் நன்றி. நேரம் கிடைக்கும் போது நிச்சயமாக. Re: மீண்டும் பகுத்தறிவு!! - starvijay - 02-07-2006 நல்ல உவமையுடன் எழுதியுள்ளீர்கள்....இன்னும் சிறப்பாக நிறைய எழுத வாழ்த்துக்கள். Re: மீண்டும் பகுத்தறிவு!! - Rasikai - 02-07-2006 starvijay Wrote:நல்ல உவமையுடன் எழுதியுள்ளீர்கள்....இன்னும் சிறப்பாக நிறைய எழுத வாழ்த்துக்கள். நன்றி .ம்ம் நேரம் கிடைக்கும் போது எழுதுகிறேன் - poonai_kuddy - 02-07-2006 varnan Wrote:<b>மேற்கோள்: ஒரு வாசகியா நான் என்ர கருத்த சொன்னா என்னைக் கவிதை எழுத சொல்றீங்க........அப்ப நாங்க நல்லாருக்கு எண்டு மட்டுந்தான் சொல்லணுமா??????? கவிதை பற்றி உங்களுக்கொரு கருத்து இருந்தா எனக்கொண்டு இருக்குந்தானே???????????அதுக்காக நான் என்ர கருத்த சொல்லாம இருக்க முடியுமா??????????? எனக்கு கவிதை எழுத வராதுங்கண்ணா..........பல கவிதையள வாசிச்ச அனுபவத்தில சொன்னன்..............அத எடுக்கிறதும் எடுக்காததும் ரசிகை அக்கான்ர பிரச்சனை............................... :roll: :roll: :roll: :roll: - Mathan - 02-10-2006 உங்கள் கருத்துக்களை அழகாக சொல்லியிருக்கீங்க. வாழ்த்துக்கள் ரசிகை தொடர்ந்து எழுதுங்க. |