Yarl Forum

Full Version: ரெஸ்ட் போட்டிகளில் இருந்து விடைபெறுகின்றார் ஜெயசூரியா
You're currently viewing a stripped down version of our content. View the full version with proper formatting.
<img src='http://www.rediff.com/wc2003/2003/jan/24jaya.jpg' border='0' alt='user posted image'>

<b>இலங்கை அணியின் அதிரடி ஆரம்ப துடுப்பாட்ட வீரரும் நட்சத்திரத் துடுப்பாட்ட வீரரும் ஆன சனத் ஜெயசூரியா ரெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றுள்ளார். ஆயினும் தொடர்ந்து ஒருநாள் துடுப்பாட்ட போட்டிகளில் கலந்துகொள்வார் என்று தெரியவந்துள்ளது. </b>
<img src='http://www.cricket-online.com/images/players/JAYASURIYA_SANATH_TEST_WALK.jpeg' border='0' alt='user posted image'>



2007 இல் மேற்கிந்தியத்தீவுகளில் நடைபெறும் உலகக் கிண்ணப் போட்டிகளின் பின்னர் கிரிக்கட்டில் இருந்து முற்றுமுழுதாக ஓய்வுபெறப்போவதாகவும் சனத் தெரிவித்துதுள்ளார்.

ஜெயசூரியா ராய்ட்டர் நிறுவனத்திற்கு கருத்துத் தெரிவிக்கையில், " ரெஸ்ட் போட்டிகளில் விளையாடாது ஒதுங்கியிருப்பது உலகக்கிண்ணப் போட்டிகளில் விளையாடக் கூடியவாறு உடல் நலத்தைப் பேண உதவும்" என்றார். அவர் மேலும் கூறுகையில் "நிச்சயமாக நான் அச்சுற்றுப் போட்டியின் பின் கிரிக்கடிலிருந்து விலகுவேன். நாங்கள் உலகக்கிண்ணச் சுற்றுப்போட்டியை வெல்லக்கூடிய சாத்தியம் உள்ளதெனக் கருதுகிறேன்; அதற்கு நாங்கள் கடுமையாக உழைப்பதுடன் கிரிக்கட்டின் மூன்று தளங்களிலும் சிறப்பாக விளையாடவேண்டும்" என்றும் கூறினார்.

<img src='http://img80.imageshack.us/img80/5826/sanath2wp.jpg' border='0' alt='user posted image'>
இறுதி ரெஸ்ட் போட்டியின் ஆரம்பநாளில் கேக் வெட்டும் போது

தகவல் தந்துதவிய சுண்டலிற்கு நன்றிகள்
மேலதிகவிபரம்
அவர் ஒய்வு பெற்றால் தான் என்ன ஒய்வு பெறாவிட்டால் தான் என்ன
இலங்கை அணி யினுடைய பெயரை சர்வதேச மட்டத்துக்கு எடுத்து சென்ற மிக சிறந்த வீரர்.........
putthan Wrote:அவர் ஒய்வு பெற்றால் தான் என்ன ஒய்வு பெறாவிட்டால் தான் என்ன

யாராக இருந்தாலும் அவர்கள் திறமையை பாராட்டுவது
தமிழர் நம் பண்பாடு,
அவர் ஒரு சிறந்த சகலதுறை ஆட்டகாரர்.......
இலங்கை அணி யினுடைய பெயரை சர்வதேச மட்டத்துக்கு எடுத்து சென்ற மிக சிறந்த வீரர்.........
_________________

சுண்டல் எழுதியது

12 நாடுகள் விளையாடும் போட்டியை எப்படி தம்பி சர்வதேசம் என்று சொல்வது.கிரிக்கட் விளையாடும் நாடுகள் எல்லாம் பிரித்தானிய காலணித்துவ நாடுகள் இப்ப அவர்களுக்கு எஜமான விசுவாசத்தை காட்டுகிறார்கள்.

ஜசுரியா என்றால் ஒரு அமெரிகனுக்கோ,ரசியனுக்கோ அல்லது ஒரு சீனனுக்கோ தெரியுமா??

சுசந்திகா ஒலிம்பிக் போட்டியின் போது எடுத்த வெண்கல பதக்கத்தை பற்றி சர்வதேசம் அறிந்திருக்க கூடும்.
இவர் தமிழன் தானே இவருக்கு என்னுடைய வாழ்த்துகள்
தமிழனோ சிங்களவனோ.. விளையாட்ட விளையாட்டா மட்டும் பாருங்க...அவர் சிங்களவர் என்டதுக்கா..அவருடைய திறமையை கொச்சை படுத்தாதிர்கள்....அவருடைய ஒய்வை அவுஸ்த்திரேலியாவின்...மிக பிரபலமான பத்திரிகையான the daily telegraph ல யே பெரிசா போடுறாங்கள் என்டா அது அவருடைய திறமையை அவர் ஒரு மிகச்சிறந்த வீரர் என்கிறதை தான் எடுத்து காட்டிகின்றது...
ஜெயசூரியாவின் 96ம் ஆண்டு இந்தியாவிற்கு எதிராக முதல் சுற்றில், இந்தியவீரர்களை சில ஒவர்களில் மிகவும் கழைப்புற செய்து, இந்தியாவின் கிரிகெட் திமிரை சுக்கு நூறாக்கிய பெருமை இவருக்கே உரியதாகும்.
விளையாட்டை விளையாட்டாகவும், விளையாட்டு வீரர்களை விளையாட்டு வீரர்களாகவும் மதித்தாலே போதும். இன்று இலங்கை அணியில் முரளி இவ்வளவு காலமும் நிலைத்து நிற்பதற்கு அர்ஜுன ரணதுங்காவும் ஓர் காரணம் என்றால் மிகையாகது. ஆயினும் அர்ஜுன ரணதுங்காவின் அரசியல் நிலைப்பாடு வேறு விதமாக இருக்கின்றது. அதற்காக ஓர் விளையாட்டு வீரனிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கவில்லை. விளையாட்டு வீரனை அவனது தளத்திலிருந்து பார்த்தாலே போதும்.
அப்பிடி போடு அருவால அருவி.......... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
விளையாட்டை விளையாட்டாகவும், விளையாட்டு வீரர்களை விளையாட்டு வீரர்களாகவும் மதித்தாலே போதும்

சுண்டல் மற்றும் அருவிக்கு

அரசியலை அரசியலா பாருங்கோ வைகோ அம்மாகிட்ட போனா என்ன அப்பாகிட்ட போனா என்ன?

நீங்க இதனை இவ்வளவு பெரிசா தூக்கி பிடிக்கீறிங்கள்???

நீங்க விளையாட்டில ஒற்றுமையாக இருக்கிற மாதிரி (சிங்களவர் தமிழர்) அரசியலிலும் இருந்திருக்கலாம் அல்லவா?

அப்படி இருந்திருந்தால் சிறிலங்கா சொர்கபூமியாக இருந்திருக்கும் அல்லவா,உங்களுக்கு கிறிக்கட் என்றால் உயிரு சிங்களவன் கீறோ என்றாலும் தூக்கி வைத்திருப்பீங்கள் உங்களுக்கு கிறிக்கட் மாதிரி எங்களுக்கு அரசியல் உயிர்.
உங்களுக்கு இந்த அரசியல் ஞானம் எப்ப வந்ததுங்கோ!
1948 ஆம் ஆண்டு எல்லாத்தயும் தூக்கிக் குடுத்தனீங்க தானே இப்பவந்து அரசியல் பேசுறீங்க!!

மனிதனின் பண்பு என்ற ஒன்று முதல்ல தேவை, அந்தப் பண்பையாவது முதல்ல தெரிஞ்சுகொள்ளுங்க!!!
vaikoo Wrote:எங்களுக்கு அரசியல் உயிர்.

உங்கட அரசியல இந்தியாவோட மட்டும் வைச்சிருங்க :wink: :wink: :wink:
அந்த நாத்தம் பிடிச்ச அரசியல் எங்களுக்கு வேணாம். :wink:
உங்கட அரசியல் உயிர் என்று எங்களுக்கு தெரியும் அதை உங்களை விட அதிகம் நேசிப்பவன் நான். உங்கள் கிரிக்கட் பைத்தியத்தால் சிங்களவனை தூக்கி பிடிப்பதை பற்றி தான் கூறுகிறேன்.

அரசியல் வேறு விளையாட்டு வேறு என்று நீங்கள் கூறலாம் காரணம் நீங்கள் வெளிநாடுகளில் வசதியாக இருந்து கொண்டு கணணியில் அரசியல் நடத்துவீர்கள் அங்கு அப்பாவி பொதுமக்களும் போராளிகளும் சமாதானகாலத்திலும் கொல்லபடுகிறார்கள்.
ஏன் சிங்களவனுக்கு(விளையாட்டு வீரர்கள்,அரசியல் வாதிகள்,இராணூவத்தினர்)அப்பாவி பொதுமக்கள் வேறு புலி வேறு என்று பிரித்தறிய முடியாதா???
எங்க நாட்டு அரசியல் மாதிரி உங்க நாட்டு அரசியலையும் மாற்ற முற்படவேண்டாம்.

நடுதர மேல்தட்டு வர்க்கம் போராட்டத்தில் பங்கு பெறாது ஆனால் நல்லாக தூண்டிவிடும்.அந்த வர்க்கம் தான் விளையாட்டு வேறு அரசியல் வேறு என்று டயலோக் விடுவார்கள்.நீங்கள் சிங்களவனிட்ட அடி வாங்கியிருந்திங்க என்றால் ஜயசுரியவிற்கும் சப்போட் பண்ணியிருக்க மாட்டிங்க அவரின்ட நைனாவிற்கும் சப்போட் பண்ணியிருக்க மாட்டிங்க.

தம்பி பிரபாவும் புலிபடையும் இல்லையென்றால் இன்றைக்கு உங்களை உலகமே இணம் கண்டிருக்கமுடியாது அப்படிருக்கையில் இந்த மொட்டையனுக்கு பாராட்டுவோம் என்றால் எந்த விதத்தில் நியாயம்?

இலங்கை அணி என்று பீத்திகொள்ளுரிங்க ஈழத்தில் இருந்து எவனையாவது விளையாட எடுத்து இருக்கிறார்களா??

என்னை பொறுத்தவரையில் இவர்கள் ஈழம் என்ற போர்வையை போர்த்த துரோகிகள்.

இவ்வாரு துரோகியாக இருப்பதை விட எதிரியாக இருப்பது மேல்.

பெளடர் தீபன் இலண்டனில் நடத்திய கிரிக்கட் போட்டியில் ரணதுங்க பிரதம விருந்தினர்.!!!!!!!!!!!!!!!!!!!!
[ஃஉஒடெ="அடிதடி"]ஜெயசூரியாவின் 96ம் ஆண்டு இந்தியாவிற்கு எதிராக முதல் சுற்றில், இந்தியவீரர்களை சில ஒவர்களில் மிகவும் கழைப்புற செய்து, இந்தியாவின் கிரிகெட் திமிரை சுக்கு நூறாக்கிய பெருமை இவருக்கே உரியதாகும்.[/ஃஉஒடெ]

88லில தம்பி பிரபாகரன் இந்திய இராணுவத்தை மிகவும் களைப்புற செய்து இந்தியாவின் பிராந்திய வல்லரசு திமிரை அடக்கியவர் இதை விட உங்க சாதனை எந்த மூளைக்கு.

வெள்ளை இனத்தவரின் அணியின் திமிரை அடக்கினாலும் பரவாயில்லை போயும் போய் இந்தியனின்ட திமிரை அடக்கினது பெரிய சாதனை...அது சரி இந்தியகாரனுக்கு ஒழுங்காக பந்து பொறுக்க தெரியுமா?????
சுண்டல் எழுதியது

அப்படி போடு அருவால அருவி........

போட்டானே திருமலையில அப்பாவி தமிழன் மேல..அங்கே சிங்களவன் அப்பாவி தமிழன் வேறு புலி வேற என்று சிந்திக்கவில்லை....
அவர்கள் அப்பிடி சிந்திக்க வில்லை என்டதுக்காக நாங்களும் அப்பிடி சிந்திக்க கூடாதா?ke ke ke சின்னபுள்ள தனமால்ல இருக்கு......
நீங்கள் எல்லாத்திலும் அரசியலைச் சேர்ப்பவர்கள் தானே. உங்களிற்கு எங்கே தெரியும் அதனதன் அருமை. பாகிஸ்தான் இந்தியப் போட்டிகளில் தெரியும் அங்கு விளையாடுவது அரசியலா இல்லை விளையாட்டா என்று. இப்பக்கம் ஒரு விளையாட்டு வீரனைப் பற்றிய செய்தியைக் கூறவே ஆரம்பிக்கப்பட்டது. நீங்கள் உங்கள் அரசியல் பற்றிப் பேசுவதென்றால் இன்னொரு பக்கத்தை ஆரம்பியுங்கள், அங்கு தாராளமாக விவாதிப்போம் அரசியல் பற்றி. அரசியலையும் விளையாட்டையும் ஒன்றாக்கி நீங்களும் குழம்பி மற்றவர்களையும் குழப்பாதீர்கள்.