உலக நடப்பு

நான் தொடர்ந்தும்இனப்படுகொலையுடன் தொடர்புபட்டிருக்க விரும்பவில்லை - இஸ்ரேலிய தூதரகத்திற்கு வெளியே அமெரிக்க விமானப்படை வீரர் தீக்குளிக்க முயற்சி

1 month 3 weeks ago

Published By: RAJEEBAN   26 FEB, 2024 | 11:15 AM

image

காசா யுத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்வகையில் அமெரிக்க விமானப்படையை  சேர்ந்த ஒருவர் வோசிங்டனில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு வெளியே தனக்குதானனே தீமூட்டிக்கொண்டார்  என  சர்வதேச ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.

உடனடியாக தீயை அணைத்த அமெரிக்க இரகசிய சேவையை சேர்ந்தவர்கள் அந்த நபரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

தீக்குளிக்க முயற்சித்த நபர் தொடர்ந்தும் ஆபத்தான நிலையில் காணப்படுகின்றார் அவர் விமானப்படையை சேர்ந்தவர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இராணுவசீருடையில் காணப்படும்  அந்த நான் தொடர்ந்தும்இனப்படுகொலையுடன் தொடர்புபட்டிருக்க விரும்பவில்லை என தெரிவிக்கும் இணையவீடியோவொன்று வெளியாகியுள்ளது.

தன்மேல்எரிபொருளை ஊற்றி தனக்குதானே தீமூட்டிக்கொள்வதற்கு முன்னர் அந்த நபர் சுதந்திர பாலஸ்தீனம் என கோசமிட்டார் என டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

காசாவில் யுத்தம் ஆரம்பித்த பின்னர் வோசிங்டனில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு முன்னால் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/177304

குடியரசுக் கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் தேர்தல்: தெற்கு கரோலினாவில் டிரம்ப் வெற்றி

1 month 3 weeks ago
ஜனாதிபதி வேட்பாளர் தேர்தல்: தெற்கு கரோலினாவில் டிரம்ப் வெற்றி

அமெரிக்காவில் ஜனநாயக கட்சி சார்பில் ஜனாதிபதி ஜோ பைடன் பதவி வகித்து வருகிறார். இந்த ஆண்டு அவரது பதவிக்காலம் முடியவுள்ள நிலையில், எதிர்வரும் நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடக்கவுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் கட்சி உறுப்பினர்களின் ஆதரவைப் பெறவேண்டும். அதற்கு மாகாணங்கள் தோறும் வாக்குப்பதிவு நடைபெறும். இரு கட்சிகள் சார்பிலும் நடக்கும் மாநாட்டில் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்கள் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை தேர்ந்தெடுப்பார்கள்.

trump.jpg

இதற்கிடையே, அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் களம் களைகட்டத் தொடங்கியுள்ளது. குடியரசுக் கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு நடந்து வருகிறது. இதில் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப், இந்திய வம்சாவளியைச் சோ்ந்தவரும், தெற்கு கரோலினா மாகாண முன்னாள் ஆளுநருமான நிக்கி ஹாலே இடையே போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்ய தெற்கு கரோலினா மாகாணத்தில் நடந்த தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். தெற்கு மாகாணத்தில் நடந்த வாக்குப்பதிவில் அவர் வெற்றி பெற்றுள்ளார்.

ஏற்கனவே நியூ ஹாம்ப்ஷையர் மற்றும் லோவா காகசஸ் மாகாணங்களில் நடந்த தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/293106

உறவில் கடும் விரிசல் இருந்தும் பருப்பு இறக்குமதிக்கு கனடாவை நம்பியிருக்கும் இந்தியா

1 month 3 weeks ago

சீக்கிய பிரிவினைவாதி படுகொலையை அடுத்து, கனடாவுடன் உறவில் கடும் விரிசல் ஏற்பட்டிருந்தாலும் பருப்பு இறக்குமதி அளவை இந்தியா இருமடங்கு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியாகியுள்ளது.

பருப்பு இறக்குமதி

உற்பத்தியில் ஏற்பட்ட பற்றாக்குறை காரணமாக இந்தியாவை வெளிநாட்டு கொள்முதல்களை அதிகரிக்க தூண்டியதாக கூறுகின்றனர். சீக்கிய பிரிவினைவாதி ஹர்தீப் சிங் சஜ்ஜர் படுகொலையில் இந்தியாவின் பங்கு தொடர்பில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளிப்படையாக குற்றஞ்சாட்டியிருந்தார்.

உறவில் கடும் விரிசல் இருந்தும் பருப்பு இறக்குமதிக்கு கனடாவை நம்பியிருக்கும் இந்தியா | India Lentil Imports From Canada Surge@reuters

 

தங்களிடம் போதுமான ஆதாரங்கள் இருப்பதாகவும் ட்ரூடோ நாடாளுமன்றத்தில் பதிவு செய்தார். ஆனால் அந்த குற்றச்சாட்டுகளை இந்தியா மறுத்ததுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான தூதரக உறவுகள் பாதிப்புக்குள்ளானது.

இந்த நிலையில், கனடாவில் இருந்து பருப்பு இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் அளவை குறைத்துக் கொண்டது. இந்தியா அல்லது கனேடிய நிர்வாகம் தங்கள் வர்த்தகத்தில் தடைகளை விதிக்கலாம் என்ற அச்சமே காரணமாக கூறப்பட்டது.

ஆனால் அந்த அச்சமும் நீடிக்கவில்லை. கனடாவில் இருந்து இந்தியாவின் பருப்பு இறக்குமதி முந்தைய ஆண்டை விட 2023ல் 120 சதவிகிதம் அதிகரித்து 851,284 மெட்ரிக் டன்னாக இருந்தது என்று அரசு தரப்பில் இருந்து தகவல் கசிந்துள்ளது.

சுமார் 3 மில்லியன் டன்

 

பருப்பு இறக்குமதிக்கு இந்தியா பெருமளவில் கனடாவையே நம்பியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் இரு நாடுகளுக்கும் இடையே அரசியல் நெருக்கடி ஏற்பட்ட நிலையில், பருப்பு இறக்குமதிக்கு வணிக நிறுவனங்கள் மாற்று வழியைத் தேடியதாக கூறப்படுகிறது.

உறவில் கடும் விரிசல் இருந்தும் பருப்பு இறக்குமதிக்கு கனடாவை நம்பியிருக்கும் இந்தியா | India Lentil Imports From Canada Surge@reuters

 

2023ல் அதிக விளைச்சல் காரணமாக அவுஸ்திரேலியாவிலிருந்தும் பருப்பு இறக்குமதி மேம்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவுஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவின் பருப்பு இறக்குமதி 2023ல் முந்தைய ஆண்டை விட 162 சதவிகிதம் அதிகரித்து, 1.68 மில்லியன் டன்களை எட்டியது.

இதன் மொத்த மதிப்பு 1.25 பில்லியன் டொலர் என்றே கூறப்படுகிறது. இந்தியாவில் பருப்பு வகைகளின் தேவை சுமார் 3 மில்லியன் டன்களாக அதிகரித்துள்ளது. ஆனால் உற்பத்தி என்பது வெறும் 1.3 மில்லியன் டன் அளவுக்கே இருப்பதாக கூறுகின்றனர். 

https://news.lankasri.com/article/india-lentil-imports-from-canada-surge-1708556576

பிபிசி தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரித்தானிய குடிமகன் தெரிவு., யார் அவர்?

1 month 3 weeks ago

பிபிசியின் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் குடிமகனும், ஊடகவியலாளருமான டாக்டர் சமீர் ஷா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

 

இது தொடர்பாக, பிரித்தானிய கலாச்சாரத்துறை செயலர் லூசி பிரேசர் வியாழக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் எம்.பி.க்கள் அடங்கிய தேர்வுக் குழு அவரது பெயரை இறுதி செய்யும், இது பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸால் அங்கீகரிக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டது.

 

BBC News, BBC New Chairman, British Broadcasting Corporation, Dr Samir Shah BBC, Indian Origin British, பிபிசியின் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரித்தானிய குடிமகன், சமீர் ஷா

தொலைக்காட்சி தயாரிப்பு மற்றும் பத்திரிகையில் 40 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள சமீர் ஷா, முன்பு பிபிசியின் நடப்பு விவகாரங்கள் மற்றும் அரசியல் நிகழ்ச்சிகளின் தலைவராகப் பணியாற்றினார். 

அவர் மார்ச் 2028 வரை (நான்கு ஆண்டுகள்) பிபிசி தலைவராக நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

மேலும், பிபிசியின் தலைவராக (Chairman) சமீர் ஷா ஆண்டுக்கு 160,000 Pounds (இலங்கை பணமதிப்பில் ரூ.6.3 கோடி) சம்பளம் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனுடனான (Boris Johnson) திரைமறைவு விவகாரம் வெளியானதை அடுத்து ரிச்சர்ட் ஷார்ப் (Richard Sharp) கடந்த ஆண்டு பிபிசி தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

https://news.lankasri.com/article/bbcs-first-indian-origin-chairman-in-dr-samir-shah-1708675470

சீனா தயாரிக்கும் கிரேன்களைக் கண்டு அமெரிக்கா பயப்படுவது ஏன்?

1 month 3 weeks ago
சீன கிரேன்களுக்கு எதிராக அமெரிக்கா முன்வைக்கும் குற்றச்சாட்டு என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

2 மணி நேரங்களுக்கு முன்னர்

சீனாவில் தயாரிக்கப்படும் எடைதூக்கும் கருவிகளான கிரேன்கள் தொடர்பாக அமெரிக்கா சமீபத்தில் எடுத்த முடிவை சீனா விமர்சித்துள்ளது. தங்கள் நாட்டில் தயாரிக்கப்படும் கிரேன்கள் தொடர்பாக அமெரிக்கா கூறும் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரம் இல்லாதவை என்றும் சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த வெள்ளியன்று (பிப்ரவரி 23) செய்தியாளர் சந்திப்பின்போது எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவோ நிங், “சீனாவில் தயாரிக்கப்பட்ட கிரேன்கள் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்ற அமெரிக்காவின் கூற்று முற்றிலும் ஆதாரமற்றது,” என்றார்.

இதற்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான், அமெரிக்காவின் பைடன் அரசாங்கம், உள்நாட்டிலேயே கிரேன்களை தயாரிக்க அடுத்த ஐந்து ஆண்டுகளில் 20 பில்லியன் டாலர்களை (இந்திய மதிப்பில் சுமார் 1.65 லட்சம் கோடி ரூபாய்) செலவிடவுள்ளதாக கூறியது.

மேலும், சீனாவில் தயாரிக்கப்பட்ட கிரேன்கள் தொடர்பான சைபர் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, அமெரிக்க கடலோர காவல்படை புதிய அறிவுறுத்தல்களை வெளியிடும் என்றும் அமெரிக்க அரசு தெரிவித்தது.

 
உலகின் மிகப்பெரிய கிரான் ஏற்றுமதியாளரான சீனா

கட்டடங்களின் கட்டுமானப் பணிகள், துறைமுகங்களில் கொள்கலன்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டுசெல்வது, கப்பல்களில் அவற்றை ஏற்றி இறக்குவது போன்ற பணிகளுக்கு கிரேன்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை 'டவர் கிரேன்கள்' என்றும் அழைக்கப்படுகின்றன.

சர்வதேச வர்த்தகத்தில் பணிகளை விரைவுபடுத்த இத்தகைய ராட்சத கிரேன்களுக்கான இடம் இன்றியமையாதது. சமீப காலங்களில், தானியங்கி கிரேன்களும் தயாரிக்கப்படுகின்றன. இவை தங்களின் வேலையை விரைவாக செய்து முடிக்கின்றன.

ஸ்டேடிஸ்டா அறிக்கையின்படி, 2022-ஆம் ஆண்டில் உலக சந்தையில் கிரேன்களை அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் நாடாக சீனா இருந்தது. ஜெர்மனி இரண்டாவது இடத்திலும், ஸ்பெயின் மூன்றாவது இடத்திலும் இருந்தன.

சீன கிரேன்களுக்கு எதிராக அமெரிக்கா முன்வைக்கும் குற்றச்சாட்டு என்ன?

பட மூலாதாரம்,WWW.FMPRC.GOV.CN

படக்குறிப்பு,

மாவோ நிங்

சீனா கூறியது என்ன?

பிப்ரவரி 23-ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த, சீன வெளியுறவு அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் மாவோ நிங்கிடம் சீனாவில் தயாரிக்கப்படும் கிரேன்கள் தேச பாதுகாப்புக்கு அச்சறுத்தலாக இருப்பதாக லாஸ் ஏஞ்சல்ஸ் துறைமுகத்தின் நிர்வாக இயக்குநர் கூறியது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர், இந்த குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என்றார்.

"தேசிய பாதுகாப்பு என்ற கருத்தை அமெரிக்கா மிகைப்படுத்துவதையும், சீன தயாரிப்புகள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக அரச அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதையும் நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்," என்றார்.

"பொருளாதார மற்றும் வர்த்தக பிரச்னைகளை ஆயுதமாக பயன்படுத்துவது என்பது சர்வதேச அளவில் தொழில்துறை மற்றும் விநியோகச் சங்கிலிகளுக்கு ஆபத்தானது என்பதோடு பின்விளைவுகளை ஏற்படுத்தும்," என்று கூறிய அவர், சந்தை பொருளாதாரத்தின் கோட்பாடுகளையும் நியாயமான போட்டிகளையும் அமெரிக்கா மதிக்க வேண்டும். சீன நிறுவனங்கள் செயல்பட நியாயமான, பாரபட்சமற்ற சூழலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

சீன நிறுவனங்களின் நலன்களுக்காகவும் அவற்றின் சட்டப்பூர்வமான உரிமைகளை பாதுகாக்கவும் சீன தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும் மாவோ நிங் கூறியுள்ளார்.

ராட்சத கிரேன்களை உற்பத்தி செய்யும் நாடுகளில் சீனா முன்னணியில் இருந்தாலும், சீன கிரேன்களின் பயன்பாட்டை நிறுத்துவது உலக வர்த்தகம் மற்றும் உலகப் பொருளாதாரத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்.

 
சீன கிரேன்களுக்கு எதிராக அமெரிக்கா முன்வைக்கும் குற்றச்சாட்டு என்ன?

பட மூலாதாரம்,CAROLINE BREHMAN/EPA-EFE/REX/SHUTTERSTOCK

என்ன நடந்தது?

சமீபத்தில், வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்ட செய்தி ஒன்றில், பைடன் நிர்வாகம் உள்நாட்டிலேயே கிரேன்கள் தயாரிக்கப் பல பில்லியன் டாலர்களை (பல நூறு கோடி ரூபாய்கள்) முதலீடு செய்யத் தயாராக உள்ளது என்று கூறியிருந்தது.

இதற்கிடையே, அமெரிக்கத் துறைமுகங்களில் இணைய பாதுகாப்பை அதிகரிப்பதற்கான முன்னெடுப்புகளை கடந்த பிப்ரவரி 21-ஆம் தேதியன்று பைடன் நிர்வாகம் அறிவித்தது. இந்த வாரம், பிப்ரவரி 21 அன்று, பைடென் நிர்வாகம் அமெரிக்கத் துறைமுகங்களில் இணைய பாதுகாப்பை அதிகரிப்பதற்கான பிரச்சாரத்தை அறிவித்தது. அடுத்த ஐந்தாண்டுகளில் அமெரிக்க துறைமுகங்களின் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக அரசாங்கம் 20 பில்லியன் டாலர்களை (1.65 லட்சம் கோடி ரூபாய்) முதலீடு செய்யும் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டது.

அமெரிக்காவில் உள்ள புவிசார் அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகங்களுக்கு பொருட்களை எடுத்துச் செல்ல பயன்படுத்தப்படும் சீன கிரேன்கள் தொடர்பான சைபர் பாதுகாப்பு குறித்த கடல் பாதுகாப்பு தொடர்பான வழிமுறைகளை அமெரிக்க கடலோர காவல்படை வெளியிடும் என்றும் வெள்ளை மாளிகை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இத்தகைய கிரேன்களின் உரிமையாளர்களும் அதனை இயக்குபவர்களும் புதிதாக வெளியிடப்படும் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் அதற்கேற்ப கிரேன்களில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் தொடர்பாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சீன கிரேன்களுக்கு எதிராக அமெரிக்கா முன்வைக்கும் குற்றச்சாட்டு என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
கிரேன்கள் குறித்து கவலை ஏன்?

சீனாவில் தயாரிக்கப்பட்ட கிரேன்களில் தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான நவீன மென்பொருட்கள் பொருத்தப்பட்டுள்ளதாகக் கூறும் அமெரிக்கா அவற்றுக்கு பதிலாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கிரேன்களைப் பயன்படுத்த விரும்புவதாக சீனாவின் அரச ஊடகமான குளோபல் டைம்ஸ் ஒரு செய்தியை வெளியிட்டது.

கடந்த ஜனவரி மாதம் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாள வாங் வென்பின் செய்தியாளர் சந்திப்பின்போது, 'சீனாவால் அச்சுறுத்தல் என்று சில அரசியல்வாதிகள் பூதாகரமாக கூறி வருகிறார்கள். அவர்களின் உண்மையான நோக்கம் தேச பாதுகாப்பு என்ற பெயரில் சீனாவில் வளர்ச்சியை மட்டுப்படுத்துவதே' என்று கூறியதாகவும் குளோபல் டைம்ஸ் குறிப்பிட்டிருந்தது.

இசட்.பி.எம்.சி. நிறுவனத்தால் தயாரிக்கப்படும் கிரேன்களை ட்ரோஜன் ஹார்ஸ் உடன் ஒப்பிட்டு அவற்றில் கொள்கலன்களின் சேருமிடத்தை பதிவு செய்து கண்காணிக்கும் அதிநவீன சென்சார்கள் உள்ளதாக தேசிய பாதுகாப்பு மற்றும் பெண்டகன் அதிகாரிகள் சிலர் கூறியதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் குறிப்பிட்டதாகவும் தனது செய்தியில் குளோபல் டைம்ஸ் மேற்கோள் காட்டியிருந்தது.

ஷாங்காய் ஜினஹாவ் ஹெவி இண்டஸ்ட்ரீஸ் (ZPMC) என்பது துறைமுகங்களுக்கான கிரேன்களை உற்பத்தி செய்யும் உலகின் மிகப்பெரிய கிரேன் உற்பத்தி நிறுவனமாகும். இந்த சீன நிறுவனம் சுவிஸ் நிறுவனமான எபிபி உடன் நெருக்கமாக செயல்படுகிறது. இது அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் கிரேன்களில் எபிபி நிறுவனத்தின் கருவுகளை பொருத்தி அனுப்புகிறது.

 
சீன கிரேன்களுக்கு எதிராக அமெரிக்கா முன்வைக்கும் குற்றச்சாட்டு என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆனால் இந்த ஒப்பந்தம் தொடர்பாக சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக விசாரிக்க அமெரிக்க நாடாளுமன்றத்தில் இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன, அவை இந்த இரண்டு நிறுவனங்களின் பணியின் பாதுகாப்பு குறித்து விசாரித்து வருகின்றன.

சீ ட்ரேட் மேரிடைம் நியூஸ் (Seatrade Maritime News) பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியின்படி, 'நாங்கள் பல நாடுகளுக்கு கிரேன்களுக்கான மென்பொருளை வழங்குகிறோம், சீனா உட்பட உலகின் பல நாடுகளின் நிறுவனங்கள் தங்கள் கிரேன்களில் அவற்றை நிறுவுகின்றன. அனைவருக்கும் ஒரேமாதிரிதான் வேலை செய்கிறோம்' என எபிபி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம், ஜப்பானின் மிகப்பெரிய துறைமுகமான நகோயாவில் பணம் பறிக்கும் நோக்குடன் ஒரு இணைய தாக்குதல் நடத்தப்பட்டது. இதன் காரணமாக துறைமுகத்தின் பணிகள் 48 மணி நேரம் நிறுத்தப்பட்டது. ஆண்டுக்கு சுமார் 20 லட்சம் கன்டெய்னர்கள் இந்த துறைமுகம் வழியாக செல்கின்றன.

இந்த சைபர் தாக்குதலுக்குப் பிறகு, கடல்சார் பாதுகாப்பு தொடர்பான வல்லுநர்கள் கடல்சார் தொழில் குறித்து கவலை தெரிவித்ததோடு, சைபர் தாக்குதலை எதிர்கொள்ள இந்தத் தொழில் முழுமையாக தயாராக இல்லை என்று கூறினர்.

 

வெள்ளை மாளிகையின் கூற்றுப்படி சீனாவில் தயாரிக்கப்பட்ட 200 கிரேன்கள் அமெரிக்காவில் உள்ளதாகவும் இது அமெரிக்காவில் உள்ள மொத்த கிரேன்களின் எண்ணிக்கையில் 80% என்றும் என்.பி.ஆர் ஊடகம் கூறுகிறது.

கடலோர காவல்படை சைபர் செக்யூரிட்டி கமாண்டின் தலைவரான அட்மிரல் ஜே வான் கருத்துப்படி, தொலைதூரத்தில் இருந்து இயக்க முடியும் என்பதால், அவற்றின் பாதுகாப்பு குறித்து சந்தேகம் எழுப்பப்படுகிறது. கடலோர காவல்படை அவற்றின் பாதுகாப்பை சரிபார்த்து வருகிறது, மேலும் அவை தொடர்பாக சில விதிகளை உருவாக்க வேண்டும் என்கிறார்.

சி.என்.என் வெளியிட்ட செய்தி ஒன்றில், அமெரிக்க உளவுத்துறை நிறுவனமான எஃப்.பி.ஐ.யின் இயக்குநர் கிறிஸ்டோபர் வ்ரே, அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒரு குழுவிடம், 'சீன ஹேக்கர்கள் அமெரிக்க உள்கட்டமைப்பில் வலுவான பிடிப்பை கொண்டிருக்கிறார்கள், எனவே, அவர்கள் சீனாவுக்கு ஆதரவாக அமெரிக்க குடிமக்களுக்கு அழிவையும் தீங்கையும் ஏற்படுத்தக்கூடும்' என்று கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன கிரேன்களுக்கு எதிராக அமெரிக்கா முன்வைக்கும் குற்றச்சாட்டு என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
கிரேன் சந்தை

கோவிட் தொற்றுநோய்க்குப் பிறகு, விநியோகச் சங்கிலி சீரானது, கட்டுமானத் துறையில் ஏற்றம் மற்றும் சர்வதேச வர்த்தகத்தின் அதிகரிப்பு போன்றவை காரணமாக கிரேன்களின் தேவை அதிகரித்தது. ஜப்பான், சீனா மற்றும் ஜெர்மனி ஆகியவை உலகின் மிகப்பெரிய கிரேன் ஏற்றுமதியாளர்களாக உள்ளன. 2022-இன் தரவுகளின்படி, கிரேன்கள் இறக்குமதியில் அமெரிக்கா முன்னணியில் உள்ளது. சுரங்கத் தொழில் மற்றும் நகரமயமாக்கல் அதிகரிப்பு போன்றவை காரணமாக அந்நாட்டில் கிரேன்களுக்கான தேவை அதிகரித்தது. 2022-இல் அமெரிக்கா $1.5 பில்லியன் (இந்திய மதிப்பில் சுமார் 12,000 கோடி ரூபாய் ) மதிப்புள்ள கிரேன்களை வாங்கியது.

அதே காலகட்டத்தில் இந்தியா 700 மில்லியன் டாலர் (சுமார் 5,800 கோடி ரூபாய்) மதிப்புள்ள கிரேன்களையும், ஜெர்மனி 600 மில்லியன் டாலர் ( சுமார் 4,900 கோடி ரூபாய் ) மதிப்பிலான கிரேன்களையும் வாங்கியது.

எனினும் 2021-ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது கிரேன் இறக்குமதியில் ஜெர்மனி, ஸ்பெயின் மற்றும் தென் கொரியாவுக்கு அடுத்தபடியாக அமெரிக்கா உள்ளது.

https://www.bbc.com/tamil/articles/ckrdxg8g537o

240 மில்லியன் ஆண்டுகள் பழமையான ட்ரேகன் போன்ற விலங்கின் அமைப்பு கண்டுபிடிப்பு!

1 month 3 weeks ago
24 FEB, 2024 | 06:08 PM
image

சீனாவில் சுமார் 240 மில்லியன் ஆண்டுகள் பழமையான  ட்ரேகன் போன்ற விலங்கின் அமைப்பொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . 

இந்த அமைப்பு 2003 ம் ஆண்டு முதன்முதலில் தெற்கு சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர் . 

ட்ரேகன் போன்ற விலங்கின் அமைப்பு 16 அடி நீளம் கொண்டதாகவும் கடந்த காலத்தில் வாழ்ந்ததாக நீர்வாழ் உயிரினத்தின் அமைப்பு எனவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இந்து விலங்கினுடைய கழுத்து பகுதியைப்   பார்க்கும் போது ட்ரேகன் விலங்காக  இருக்கலாம் எனவும் நம்பப்படுகின்றது . 

இந்த விலங்கு அறிவியல் ரீதியாக "டைனோசெபலோசரஸ் ஓரியண்டலிஸ்" என்று அழைக்கப்படுகிறது.

https://www.virakesari.lk/article/177196

கனடா, பிரிட்டனில் பணிபுரிவோர் வாழ்க்கைத் துணையை அழைத்துச் செல்வது இனி கடினம் - புதிய விதிகள் என்ன?

1 month 3 weeks ago
கனடா, பிரிட்டனுக்கு உங்கள் குடும்பத்தை அழைத்துக்கொள்ள விரும்புகிறீர்களா? - புதிய விதிகள் என்னென்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

பல மேற்கத்திய நாடுகள் தங்கள் விசா கொள்கைகளை மாற்றியுள்ளன. கனடா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் புலம்பெயர்ந்தோர் பல்வேறு வகையான விசாக்களைப் பெறுவதற்கான சட்டங்களையும் விதிமுறைகளையும் கடுமையாக்கியுள்ளன.

கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகள் வாழ்க்கைத் துணைக்கான விசா பெறுவதற்கான விதிகளை கடுமையாக்குவதாக அறிவித்துள்ளன. இதனால், அந்நாடுகளில் பணிபுரிவோர் தங்களது வாழ்க்கைத் துணையை உடன் அழைத்துச் செல்வது இனி கடினமாகலாம்.

இந்தியாவில் தமிழ்நாடு, குஜராத், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கனடாவில் குடியேற இந்தியர்கள் பலரும் முயற்சிக்கின்றனர்.

அவ்வாறு, தங்கள் மனைவி மற்றும் குழந்தைகளை வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்ல வாழ்க்கைத் துணைக்கான விசா தேவை. வாழ்க்கைத் துணை விசாவைப் பெற வெவ்வேறு நாடுகள் வெவ்வேறு கால அவகாசத்தை எடுத்துக் கொள்கின்றன.

வாழ்க்கைத் துணை விசா என்பது ஒரு வகையான சார்பு விசா அல்லது அனுமதிப் பத்திரமாகும். இது உங்களை குறிப்பிட்ட அந்த நாட்டில் வாழ அனுமதிக்கிறது.

வாழ்க்கைத் துணை விசா என்றால் என்ன?
கனடா, பிரிட்டனுக்கு உங்கள் குடும்பத்தை அழைத்துக்கொள்ள விரும்புகிறீர்களா? - புதிய விதிகள் என்னென்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

சித்தரிப்புப் படம்

வாழ்க்கைத் துணை விசாவைப் பெற விண்ணப்பதாரர் மற்றும் சார்ந்திருப்பவர் இருவரும் 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும். இது தவிர, இருவருக்கும் திருமண சான்றிதழ் இருக்க வேண்டும்.

கூடுதலாக, ஒவ்வொரு நாடும் தனது துணையை அழைத்துக் கொள்பவருக்கு (ஸ்பான்சர் பார்ட்னர்) குறைந்தபட்ச ஆண்டு வருமானத்தை நிர்ணயிக்கிறது. ஒவ்வொரு நாட்டிலும் இதற்கு வெவ்வேறு அளவு உள்ளது. இது மாறுபடலாம்.

இது தவிர, ஸ்பான்சர் செய்யும் பார்ட்னர் தனது மனைவியுடன் வாழ போதுமான ஏற்பாடுகளை வைத்திருக்க வேண்டும்.

சார்ந்திருக்கும் துணைவர், அங்கீகரிக்கப்பட்ட ஆங்கில மொழித் தேர்வில் வெற்றிகரமாக தேர்ச்சி பெறுவதும் அவசியம்.

இதுதவிர, சம்பள சான்றிதழ், வங்கி விவரங்கள், செல்லுபடியாகும் பாஸ்போர்ட் ஆவணம், திருமணச் சான்றிதழ் ஆகியவை வாழ்க்கைத் துணை விசாவிற்கு தேவை. விவாகரத்து செய்திருந்தால், விவாகரத்து சான்றிதழ் மற்றும் குழந்தைகள் இருந்தால், அவர்களின் விவரங்களும் தேவை.

இங்கு ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு விதிகளின்படி ஆவணங்களை அளித்தல் வேண்டும்.

நேரடி விசா நிர்வாக இயக்குனர் குர்பிரீத் சிங் கூறுகையில், "வாழ்க்கைத் துணை விசா பெறுவதற்கு, ஒருவர் விண்ணப்பதாரராகவும் மற்றொருவர் சார்ந்திருப்பவராகவும் இருப்பர். விண்ணப்பதாரர் தன் வாழ்க்கைத் துணைக்குத் தேவையான சில நிபந்தனைகளை பூர்த்தி செய்தால் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். வெவ்வேறு நாடுகளுக்கு அந்த விதிமுறைகள் வேறுபட்டிருக்கலாம். வாழ்க்கைத் துணை விசா பெற வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு கால அவகாசம் எடுக்கலாம்” என்றார்.

 
கனடா என்ன மாற்றங்களைச் செய்துள்ளது?
கனடா, பிரிட்டனுக்கு உங்கள் குடும்பத்தை அழைத்துக்கொள்ள விரும்புகிறீர்களா? - புதிய விதிகள் என்னென்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

சித்தரிப்புப் படம்

கனடாவில் வாழ்க்கைத் துணை விசாவிற்கு விண்ணப்பித்து பெற எட்டு-ஒன்பது மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை ஆகும். இருப்பினும், அது பின்னர் ஏழு மாதங்களாகவும் பின்னர் ஆறு மாதங்களாகவும் இறுதியாக இரண்டு மாதங்கள் என்றும் குறைக்கப்பட்டது.

சில சந்தர்ப்பங்களில் இந்த விசாக்கள் ஒரு மாதத்திற்குள் வழங்கப்படுகின்றன.

இருப்பினும், முதுநிலை அல்லது முனைவர் பட்டத்திற்கு படிக்கும் சர்வதேச மாணவர்கள் மட்டுமே தங்கள் வாழ்க்கைத் துணையை அழைக்க வாழ்க்கைத் துணை விசாவைப் பயன்படுத்த முடியும் என்று கனடா அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

அதற்கும் குறைந்த படிப்புகளில் படிக்கும் மாணவர்கள், இந்த விசாவில் தங்கள் வாழ்க்கைத் துணையை கனடாவுக்கு அழைக்க முடியாது.

கூடுதலாக, ஸ்பான்சர் செய்யும் பார்ட்னர், கனடா குடிமகனாகவோ அல்லது நிரந்தர குடியிருப்பாளராகவோ இருக்க வேண்டும். இயலாமை தவிர வேறு காரணங்களுக்காக அவர்கள் சமூக உதவியைப் பெறவில்லை என்பதை அவர் நிரூபிக்க வேண்டும்.

அவர் தன் வாழ்க்கைத் துணையின் நிதித் தேவைகளை மூன்று வருடங்கள் பூர்த்தி செய்ய வேண்டும்.

கனடாவின் ஐஆர்சிசி அமைச்சர் மில்லர் கூறும்போது, “கனடாவுக்கு அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் வீடு, சுகாதாரம் மற்றும் பிற வசதிகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர். இங்கு வரும் மாணவர்கள் தீய சக்திகளின் வலையில் சிக்காமல் இருக்கவும் கனடாவின் மக்கள்தொகை நிலையானதாக வளரவும் வேண்டும் என்பதே எங்கள் முயற்சி” என்றார்.

இந்த புதிய விதி குறித்து பிபிசியிடம் பேசிய குர்பிரீத் சிங், “கனடா அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. ஆனால் அதை இன்னும் செயல்படுத்தவில்லை. எனவே விதிகள் அமலுக்கு வருவதற்கு முன்பாக, மக்கள் விண்ணப்பிக்க இன்னும் நேரம் உள்ளது” என்றார்.

 
பிரிட்டன் என்ன மாற்றங்களைச் செய்துள்ளது?
கனடா, பிரிட்டனுக்கு உங்கள் குடும்பத்தை அழைத்துக்கொள்ள விரும்புகிறீர்களா? - புதிய விதிகள் என்னென்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

சித்தரிப்புப் படம்

வாழ்க்கைத் துணை விசா பெறுவதற்கான விதிகளை பிரிட்டனும் கடுமையாக்கியுள்ளது. இத்தகைய கடுமையான சட்டங்களால் நாட்டுக்கு வரும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையை குறைக்க முடியும் என்று பிரிட்டன் அரசு நம்புகிறது.

பிபிசியின் செல்சியா வார்டு மற்றும் விக்டோரியா ஷியர் கூறுகையில், ஏப்ரல் 2024 முதல் தங்கள் விசா மூலம் வாழ்க்கைத் துணையை பிரிட்டனுக்கு அழைத்துக்கொள்ள விரும்புவோருக்கு ஊதிய விதிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

முன்னதாக, பிரிட்டனில் ஸ்பான்சர் பார்ட்னர், வாழ்க்கைத் துணை விசாவுக் விண்ணப்பிப்பதற்கான குறைந்தபட்ச ஆண்டு வருமானம் 18,600 பவுண்டுகளாக இருந்தது. இருப்பினும், புதிய விதிகள் இந்த குறைந்தபட்ச ஆண்டு வருமானத்தை ஏப்ரல் 2024-ல் 29,000 பவுண்டுகளாகவும், ஆண்டின் இறுதியில் 34,500 பவுண்டுகளாகவும் அதிகரிக்கும். இந்த குறைந்தபட்ச வருமானம் இறுதியாக 2025-ம் ஆண்டின் தொடக்கத்தில் 38,700 பவுண்டுகளாக உயர்த்தப்படும்.

மற்ற நாடுகளின் அரசாங்கங்களும் தொடர்ந்து தங்கள் விதிகளை மாற்றிக்கொண்டு இந்த விதிகளை மிகக் கடுமையாக்குகின்றன என்கிறார் குர்பிரீத் சிங்.

https://www.bbc.com/tamil/articles/cyx7zze9xqgo

யுக்ரேனுடனான இரண்டாண்டு போர் ரஷ்யாவை எப்படியெல்லாம் மாற்றியுள்ளது?

1 month 3 weeks ago
ரஷ்யா - யுக்ரேன் போர்
படக்குறிப்பு,

சோல்னெக்னோகோர்ஸ்க் கல்லறையில் ராணுவ வீரர்கள் ஓவியம்

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஸ்டீவ் ரோசன்பெர்க்
  • பதவி, பிபிசி ரஷ்ய ஆசிரியர்
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

சமீபத்தில் சிறையில் இறந்து போன அலெக்ஸே நவால்னியின் கல்லறை மீது பலரும் மலர்களை வைத்து அஞ்சலி செலுத்துவதை பார்த்துக் கொண்டிருந்தேன்.

அங்கிருந்த இளைஞர் ஒருவர், “இரண்டாண்டுகளுக்கு முன்பு 24 பிப்ரவரி அன்று போர் ஆரம்பித்த போது இருந்தது போலவே, இப்போது நான் அதிர்ச்சியில் இருக்கிறேன்” என்று என்னிடம் கூறினார்.

இது எனக்கு, ரஷ்ய அதிபர் புதின் முழுவீச்சில் யுக்ரேனை ஆக்கிரமிக்க உத்தரவிட்டதில் இருந்து கடந்த இரண்டாண்டுகளாக நடந்த பல நிகழ்வுகளை நியாபகப்படுத்தியது.

இது முழுக்க நாடகத்தன்மை, ரத்தம், கொடுமை என அனைத்தும் கலந்த கலவை.

 
  • ரஷ்யா-யுக்ரேன் போரால் யுக்ரேனில் பல உயிர்சேதமும், அழிவும் ஏற்பட்டுள்ளது. அதே சமயம் ரஷ்ய ராணுவமும் பெரிய அளவிலான இழப்பை சந்தித்துள்ளது.
  • ரஷ்ய நகரங்கள் குண்டுவீச்சுக்கும், டிரோன் தாக்குதலுக்கும் உள்ளாகின.
  • ஆயிரக்கணக்கான ரஷ்ய இளைஞர்கள் ராணுவத்தில் சேர்க்கப்பட்டனர்.
  • வாக்னர் படை கிளர்ச்சி செய்து மாஸ்கோவில் அணிவகுப்பு நடத்தியது. பின்னர் அவர்களின் தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் விமான விபத்தில் உயிரிழந்தார்.
  • சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் புதினை போர் குற்றவாளியாக அறிவித்து அவருக்கு பிடி உத்தரவு பிறப்பித்தது.
  • புதினின் தீவிர விமர்சகரான நவால்னி உயிரிழப்பு.
 
ரஷ்யா - யுக்ரேன் போர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

போரால் பாதிக்கப்பட்ட யுக்ரேன் கிராமம்

ரஷ்ய - யுக்ரேன் வரலாற்றில் 24 பிப்ரவரி 2022 ஒரு திருப்புமுனையான நாள்

ஆனால், கடந்து வந்த பாதையை திரும்பி பார்த்தால் எல்லாம் தெளிவாக இருக்கிறது. 2014 இல் ரஷ்யா யுக்ரேனின் கிரைமியா பகுதியை தன்னோடு இணைத்துக்கொண்டது. டான்பாஸ் பகுதியில் தனது முதல் ராணுவ தலையீட்டை தொடங்கியது. 2020-இல் அலெக்ஸே நாவல்னி மீது நரம்பு மண்டலத்தை தாக்கும் விஷத்தாக்குதல் நடத்தப்பட்டது. பின் 2021-இல் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். உக்ரைன் படையெடுப்புக்கு முன்பு ரஷ்யாவில் உள்நாட்டு அடக்குமுறை தொடங்கியது.

விளாடிமிர் புதினை பொறுத்தவரை, இந்த இரண்டு வருட போரில் நாட்டிற்குள்ளேயும், வெளியேயும் உள்ள எதிரிகளை வீழ்த்துவதில் உறுதியாகவும், தீர்மானமாகவும் இருக்கிறார். புதின் யுக்ரேனுக்கு எதிரான போரை “மேற்குலக கூட்டணியால்” ரஷ்யா மீது தொடுக்கப்பட்டுள்ள போராகவும், தனது நாடு பிழைத்திருப்பதற்கான போராகவும் குறிப்பிடுகிறார். அமெரிக்கா, நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் மீதும் அவர் குற்றச்சாட்டுகளை அடுக்குகிறார்.

இது எப்போது எப்படி முடியும்? என்னால் எதிர்காலத்தை கணிக்க முடியாது. ஆனால், வரலாற்றை திரும்பி பார்க்க முடியும்.

சமீபத்தில் எனது வீட்டு அலமாரியில் தூசு படிந்த சில கோப்புகளை நான் கண்டெடுத்தேன். அதில் 20 ஆண்டுகளுக்கு முந்தைய ரஷ்யா குறித்த எனது குறிப்புகள் இருந்தன. அது புதினின் தொடக்க காலம்.

அவற்றை புரட்டிப்பார்க்கும் போது, ஏதோ பல்வேறு ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ள வேற்று உலகத்தை பற்றி படிப்பது போல் இருந்தது.

“சமீபத்திய கருத்துக் கணிப்பின்படி, 59% ரஷ்யர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் ரஷ்யா சேரும் யோசனைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்" என்று 17 மே 2001 அன்று நான் எழுதியுள்ளேன்.

"நேட்டோவும் ரஷ்யாவும் தீவிரமான ஒத்துழைப்பை நாடுகின்றன : இதுவே உலக அமைதிக்கான உண்மையான அச்சுறுத்தல் இவர்களிடத்தில் இல்லை என்பதற்கான அடையாளம்" (20 நவம்பர் 2001)

ஆனால், எந்த புள்ளியில் இந்த நிலை மாறியது? எங்கு தப்பு நடந்தது? என்ற கேள்விக்கு நான் ஒருவன் மட்டும் ஆச்சரியப்படவில்லை.

சமீபத்தில் நான் லண்டனில் சந்தித்த நேட்டோவின் முன்னாள் தலைவர் லார்ட் ராபர்ட்சனும் இதே போன்றதொரு உணர்வை என்னிடம் பகிர்ந்துகொண்டார்.

 
ரஷ்யா - யுக்ரேன் போர்
படக்குறிப்பு,

நேட்டோவின் முன்னாள் தலைவர் லார்ட் ராபர்ட்சன்

“நான் பார்த்த, நல்லுறவை பேணிய, நேட்டோ - ரஷ்யா கவுன்சிலை உருவாக்கிய புதின் இது இல்லை. தற்போது தன்னை தானே அதிகாரமிக்கவராக கருதிக்கொள்ளும் அவர் முழுமையாக வேறு மனிதராக தெரிகிறார்” என்று என்னிடம் கூறினார்.

“2002 மே மாதம் எனதருகில் நின்றுக்கொண்டு யுக்ரேன் ஒரு இறையாண்மை கொண்ட சுதந்திர நாடு. அது தனது பாதுகாப்பு குறித்த முடிவுகளை தானே எடுக்கும் என்று கூறிய அதே நபர் தான், இன்று யுக்ரேன் ஒரு நாடே இல்லை என்று கூறுகிறார்”

ரஷ்யா நேட்டோவில் உறுப்பினராவதற்கு யோசித்ததை கூட லார்ட் ராபர்ட்சன் நினைவு கூர்ந்தார்.

"புதினுடனான எனது இரண்டாவது சந்திப்பில், அவர் வெளிப்படையாகவே 'ரஷ்யாவை நேட்டோவில் சேர எப்போது அழைக்கப் போகிறீர்கள்?' என்று கேட்டார். நானோ, 'நாங்கள் நேட்டோவில் சேர நாடுகளை அழைப்பதில்லை, அவை விண்ணப்பிக்கின்றன' என்றேன். அதற்கு அவர், 'அப்படியா சரி, ஒரு பொருட்டே இல்லாத நாடுகளின் அருகில் வரிசையில் நாங்கள் நிற்கப் போவதில்லை' என்றார்.”

புதின் உண்மையில் நேட்டோவுக்கு விண்ணப்பிக்க விரும்பவில்லை என்றே தான் நினைப்பதாக கூறினார் லார்ட் ராபர்ட்சன். “அது அவருக்கு வழங்கப்பட வேண்டும் என்று அவர் விரும்பினார். காரணம், அவர் எப்போதுமே உலகிலேயே உயர்ந்த நாடு ரஷ்யா என்றும், சோவியத் யூனியனுக்கு இருந்த மரியாதை போல் தற்போதும் இருக்க வேண்டும் என்ற சிந்தனையை கொண்டுள்ளார் என்றே நான் நினைக்கிறன்” என்று என்னிடம் கூறினார் அவர்.

“அவர் ஒருபோதும் அனைத்து நாடுகளும் சமமாக அமர்ந்து பொது நலனின் கொள்கைக்காக விவாதிக்கும் நாடுகளின் கூட்டணிக்குள் பொருந்தி போகப்போவதில்லை.” என்றார் லார்ட் ராபர்ட்சன்.

 
ரஷ்யா - யுக்ரேன் போர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்

‘வளரும் ஈகோ’

ஒருகாலத்தில் உலகின் இரண்டாவது சக்திவாய்ந்த நாடக சோவியத் ஒன்றியம் அங்கீகரிக்கப்பட்டது என்று கூறும் லார்ட் ராபர்ட்சன், தற்போது அதே வழியில் ரஷ்யா தன்னை கருதிக்கொள்ள முடியாது என்கிறார்.

“அதுவே அவரது ஈகோவை அழித்துவிட்டது என்று நினைக்கிறேன். அதோடு அவரது பலவீனம், சில நேரங்களில் மேற்குலகம் மற்றும் பல்வேறு வழிகளில் அவர் எதிர்கொண்ட கோபமூட்டல்கள், அவருக்குள் வளர்ந்த ஈகோ ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதுவே முன்பு நேட்டோவோடு ஒத்துழைக்க நினைத்த ஒரு நபரை, தற்போது அதே நேட்டோவை பெரும் அச்சுறுத்தலாக பார்க்கும் நிலைக்கு தள்ளியுள்ளது என நான் நினைக்கிறன்”

இவற்றை மாஸ்கோ வேறு மாதிரியானதாக பார்க்கிறது. கிழக்கு நோக்கிய நேட்டோவின் விரிவாக்கமே ஐரோப்பிய பாதுகாப்பை வலுவிழக்க செய்தது மற்றும் போருக்கு வழிவகுத்தது என்று ரஷ்ய அதிகாரிகள் கூறுகின்றனர். சோவியத் ஒன்றியத்தின் இறுதி நாட்களில் முன்பு மாஸ்கோவின் வளையத்திற்குள் இருந்த நாடுகளை இந்த கூட்டணியில் சேர்த்துக்கொள்ள மாட்டோம் என கிரெம்ளினுக்கு அளித்த வாக்குறுதியை நேட்டோ மீறியதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

“அப்படி ஆவணப்பூர்வமாக எதுவும் இல்லை” என்று என்னிடம் கூறினார் லார்ட் ராபர்ட்சன்.

“அப்படி எதுவுமே ஒப்புக்கொள்ளப்படவில்லை. அது சார்ந்து எந்த ஒப்பந்தமும் போடப்படவில்லை. ஆனால், விளாடிமிர் புதின்தான் 2002 மே 28இல், பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் பிற நாடுகளில் தலையிடாமல் இருத்தலுக்கான அடிப்படைக் கொள்கைகளை உள்ளடக்கிய ரோம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அதே ஒப்பந்தத்தில் நானும் கையெழுத்திட்டேன். எனவே அவர் யாரையும் குற்றம்சாட்ட முடியாது.”

மாஸ்கோவிலிருந்து 40 மைல் தொலைவில் உள்ள சோல்னெக்னோகோர்ஸ்க் நகரில் தான், ரஷ்யாவின் கடந்த இரண்டு ஆண்டு வரலாற்றின் நினைவுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

வாக்னர் படைக்கு ஆதரவான எழுத்துருக்களை என்னால் பார்க்க முடிந்தது.

அலெக்ஸே நவால்னியின் நினைவாக மலர்கள் வைக்கப்பட்டிருந்தன.

இரண்டு உள்ளூர் ஆண்கள் மற்றும் யுக்ரேனில் கொல்லப்பட்ட ரஷ்ய படைவீரர்களின் கல்லறைகள் இருந்தன. அதற்கு அருகில் ஒரு இளம் ராணுவ வீரர் அவர்களுக்கு ராணுவ வணக்கம் வைப்பதை போல் ஓவியம் தீட்டப்பட்டிருந்தது.

 
ரஷ்யா - யுக்ரேன் போர்
படக்குறிப்பு,

சோல்னெக்னோகோர்ஸ்க் போர்வீரர்கள் நினைவுக் கல்லறை

நகரத்தின் மையத்தில் அமைந்துள்ள இந்த கல்லறையில் கீழ்காணும் வாக்கியங்களோடு, இரண்டாம் உலகப்போர் மற்றும் ஆப்கன் போரில் உயிரிழந்த வீரர்களின் நினைவு கல்லறைக்கு அருகில் மற்றுமொரு பகுதியும் சேர்க்கப்பட்டுள்ளது.

“சிறப்பு ராணுவ நடவடிக்கையில் கொல்லப்பட்ட ராணுவ வீரர்களுக்காக”

46 பெயர்கள் இந்தக் கல்லில் பொறிக்கப்பட்டிருந்தது.

அப்போது அந்த பக்கம் தனது பேரனோடு நடந்துபோன லிடியா பெட்ரோவ்னாவிடம், இந்த இரண்டாண்டுகளில் வாழ்க்கை எப்படி மாறியுள்ளது என்று கேட்டேன்.

“முன்பு வெளிநாடுகளில் இருந்து வாங்கி கொண்டிருந்த பொருட்களை இப்போது எங்கள் தொழிற்சாலைகள் தயாரித்து வருகின்றன. அது நல்லதுதான்” என்று கூறினார் லிடியா.

“ஆனால், கொல்லப்பட்ட அனைவருக்காகவும் நான் வருத்தப்படுகிறேன். எங்களுக்கு கண்டிப்பாக மேற்குலகோடு போர் தேவையில்லை. எங்கள் மக்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் போரை தவிர வேறு எதையும் பார்த்தது இல்லை.” என்றார் அவர்.

அடுத்து மரினாவோடு நான் பேசுகையில், ரஷ்ய வீரர்கள் யுக்ரேனில் தங்கள் கடமையை செய்வதாக அவர்களை பாராட்டினார் அவர். பின் தனது 17 வயது மகன் ஆண்ட்ரியை பார்த்த அவர், ஒரு அம்மாவாக எங்கு எனது மகனையும் போருக்கு அழைத்து விடுவார்களோ என்று பயமாகத்தான் இருக்கிறது என்றார்.

எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் எங்களுக்கு அமைதி வேண்டும். அப்போதுதான் அடுத்த நாள் என்ன வரும் என்பது குறித்து பயப்படாமல் எங்களால் வாழ முடியும் என்றார் மரினா.

https://www.bbc.com/tamil/articles/c6pvv4ljwx0o

உலகின் இரண்டாவது மிகப்பெரிய மீத்தேன் கசிவு விபத்து எப்படி நடந்தது? - அதிர்ச்சி தகவல்கள்

1 month 3 weeks ago
கஜகஸ்தான், மீத்தேன் கசிவு

பட மூலாதாரம்,INSTAGRAM/MANGYSTAU ECOLOGY DEPARTMENT

படக்குறிப்பு,

கஜகஸ்தானில் பதிவான மோசமான மீத்தேன் கசிவு சம்பவம்

கட்டுரை தகவல்
  • எழுதியவர், மார்கோ சில்வா, டேனியல் பலும்போ, எர்வான் ரிவால்ட்
  • பதவி, பிபிசி வெரிஃபை
  • 22 பிப்ரவரி 2024

பசுமைக்குடில் வாயுக்களில் கார்பன் டை ஆக்ஸைடை விட, அதிக பாதிப்பை ஏற்படுத்துவது மீத்தேன். உலக நாடுகள் அனைத்தும் மீத்தேன் உமிழ்வை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன.

ஆனாலும், உலகம் முழுவதிலும் ஆங்காங்கே நடைபெறும் விபத்துகளால் ஏற்படும் மீத்தேன் கசிவு அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

கடந்த ஆண்டு உலகின் மிக மோசமான மீத்தேன் கசிவு கஜகஸ்தானின் கிராமப்புறப்பகுதி ஒன்றில் உள்ள கிணற்றில் நடந்துள்ளது. சமீபத்தில் வெளியான புதிய பகுப்பாய்வு அறிக்கை மூலம் இதை உறுதி செய்துள்ளது பிபிசி வெரிஃபை குழு.

இந்த விபத்தில் ஏற்பட்ட தீப்பரவல் ஆறு மாதங்களுக்கும் மேலாக நீடித்தது. இதில் 1,27,000 டன் வாயு வெளியேறியதாக ஆய்வில் மதிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், மீத்தேன் வெளியேறிய கிணற்றின் உரிமையாளரான புசாச்சி நெஃப்ட் நிறுவனம், இந்த அளவுக்கான மீத்தேன் வெளியேறியுள்ளது என்ற கூற்றை மறுத்துள்ளது.

அமெரிக்கச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் பசுமைக்குடில் வாயு கால்குலேட்டரின் படி, இந்த அளவிற்கான மீத்தேன் கசிவினால் ஏற்படக்கூடிய சுற்றுச் சூழல் பாதிப்பானது, ஒரு ஆண்டிற்கு 7,17,000 க்கும் மேற்பட்ட பெட்ரோல் கார்களை ஓட்டுவதற்கு நிகரானது என்று கூறப்பட்டுள்ளது.

இந்தக் கசிவு குறித்து பேசியுள்ள ஐ.நா.வின் சர்வதேச மீத்தேன் உமிழ்வு ஆய்வகத்தின் தலைவர் மன்ஃப்ரெடி கால்டகிரோன், "இந்தக் கசிவின் அளவு மற்றும் கால அளவு அசாதாரணமானது என்றும், இது மிகவும் பெரியது," என்றும் கூறியுள்ளார்.

 
கஜகஸ்தான், மீத்தேன் கசிவு
படக்குறிப்பு,

2023 ஜூன் தொடங்கிய தீ பரவல் 2023 இறுதி வரை அணையாமல் எரிந்து கொண்டிருந்தது.

விபத்து எப்படி நடந்தது?

தென்மேற்கு கஜகஸ்தானின் மங்கிஸ்டாவ் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் துளையிட்டுக் கொண்டிருக்கும்போது, 2023-ஆம் ஆண்டு ஜூன் 9-ஆம் தேதி இந்த வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில் அந்த கிணற்றில் இருந்து மீத்தேன் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட தீ பரவல் 2023-ஆம் ஆண்டு இறுதி வரை அணையாமல் எரிந்து கொண்டிருந்தது.

இறுதியில் 2023-ஆம் ஆண்டு டிசம்பர் 25-ஆம் தேதி அன்றுதான் தீப்பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தற்போது அந்த கிணற்றை சிமெண்ட் கொண்டு மூடும் பணி நடந்து வருவதாக உள்ளூர் அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர்.

இயற்கை எரிவாயுவின் முதன்மைகூறான மீத்தேன் வாயுவை மனிதர்களால் வெறுங்கண்ணால் பார்க்க முடியாது.

ஆனால், மீத்தேன் கூட்டமாக சூழ்ந்துள்ள இடத்தில் சூரியஒளி படும்போது, தனித்துவமான தடயத்தை அது உருவாக்குகிறது. இதை சில செயற்கைக்கோள்களால் கண்டறிய முடியும்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள மீத்தேன் கசிவு குறித்து முதலில் பிரெஞ்சு புவி பகுப்பாய்வு நிறுவனமான கெய்ரோஸ் ஆய்வு செய்தது. அவர்களது ஆய்வு முடிவுகள் தற்போது நெதர்லாந்தின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ஸ்பெயினில் உள்ள வலென்சியா பாலிடெக்னிக் பல்கலைக்கழகத்தால் சரிபார்க்கப்பட்டுள்ளது.

ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடைப்பட்ட செயற்கைக்கோள் தரவுகளை ஆராய்ந்து, 115 தனித்தனி சூழல்களில் அதிக செறிவுள்ள மீத்தேன் காணப்பட்டதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

 
கஜகஸ்தான், மீத்தேன் கசிவு
படக்குறிப்பு,

மீத்தேன் கசிவு ஏற்பட்ட கிணறு

'இரண்டாவது மிகப்பெரிய மீத்தேன் கசிவு'

இந்த அளவீடுகளை அடிப்படையாக கொண்டு, அந்த ஒரே கிணற்றிலிருந்து 1,27,000 டன் மீத்தேன் வெளியேறியுள்ளது என்ற முடிவுக்கு வந்துள்ளனர் விஞ்ஞானிகள்.

எனவே, இந்த நிகழ்வை மனிதர்களால் உருவாக்கப்பட்ட இரண்டாவது மோசமான மீத்தேன் கசிவு என்று எடுத்துக் கொள்ளலாம் என்றும் கூறுகின்றனர்.

கசிவை உறுதிசெய்யும் ஆய்வில் உதவிய வலென்சியா பாலிடெக்னிக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த லூயிஸ் குவாண்டர், " 'நோர்ட் ஸ்ட்ரீம்' (Nord Stream) அழிவு மட்டுமே இந்தளவு அதிகமான கசிவை ஏற்படுத்த முடியும்," என்று கூறுகிறார்.

செப்டம்பர் 2022-இல், ரஷ்யாவில் இருந்து ஜெர்மனிக்கு இயற்கை வாயுவைக் கொண்டு செல்லும் இரண்டு குழாய்கள், நீருக்கடியில் குண்டு வெடித்ததில் சேதமடைந்தது. இதில் நோர்ட் ஸ்ட்ரீம் 1 மற்றும் 2 குழாய்களில் இருந்து 2,30,000 டன் மீத்தேன் வளிமண்டலத்தில் வெளியிடப்பட்டது.

சர்வதேச ஆற்றல் முகமையின் கூற்றுப்படி, தொழிற்ப்புரட்சிக்குப் பின் உலக அளவில் ஏற்பட்ட 30% வெப்பநிலை அதிகரிப்புக்கு மீத்தேன் தான் காரணம்.

மேகமூட்டம் உள்ளிட்ட வேறு சில காரணங்களால் செயற்கைக்கோள் கணக்கீடுகளில் தாக்கம் ஏற்பட்டிருந்தாலும், இந்த ஒரு கிணற்றில் இருந்து மட்டும் அதிகளவிலான மீத்தேன் கசிந்துள்ளது என்பதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளனர் விஞ்ஞானிகள்.

இதுகுறித்து பேசிய குவாண்டர், “வெவ்வேறு மீத்தேன் உணர்திறன் கொண்ட ஐந்து செயற்கைக்கோள்களின் மூலம், இந்த மீத்தேன் புகைப்படலம் (Plume) கண்டறியப்பட்டுள்ளது,” என்று கூறினார்.

மேலும், “இந்த ஒவ்வொரு செயற்கைக்கோள்களும் மீத்தேனை குறிப்பிட்ட வழிகளில் அளவிடுகின்றன, ஆனால், அவற்றிலிருந்து நிலையான அளவீடுகளை மட்டுமே நாங்கள் எடுத்துக்கொண்டோம்,” என்று தெரிவிக்கிறார்.

மங்கிஸ்டாவ் சூழலியல் துறை தனது அறிக்கை ஒன்றில், ஜூன் 9 மற்றும் செப்டம்பர் 21-க்கு இடைப்பட்ட காலத்தில் 10 வெவ்வேறு நேரங்களில், காற்றில் மீத்தேன் செறிவு சட்டவரம்புகளுக்கு அதிகமாக காணப்பட்டதாக, உறுதிப்படுத்தியுள்ளது.

 
கஜகஸ்தான், மீத்தேன் கசிவு
படக்குறிப்பு,

கிணற்றின் உரிமையாளரான கஜகஸ்தானை சேர்ந்த புசாச்சி நெஃப்ட் நிறுவனம், அதிகளவிலான மீத்தேன் வெளியாகியுள்ளது என்ற தகவலை மறுத்துள்ளது.

நிறுவனம் என்ன சொல்கிறது?

மேலும், வெடிவிபத்துக்கு அடுத்த சில மணிநேரங்களில் காற்றில் மீத்தேன் அளவு அனுமதிக்கப்பட்ட அளவை விட 50% அதிகமாக இருந்ததாக அதில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், கிணற்றின் உரிமையாளரான கஜகஸ்தானை சேர்ந்த புசாச்சி நெஃப்ட் நிறுவனம், அதிகளவிலான மீத்தேன் வெளியாகியுள்ளது என்ற தகவலை மறுத்துள்ளது.

மேலும், அந்தக் கிணற்றில் குறைந்த அளவு வாயுவே இருந்ததாகவும், ஆழ்துளை கிணற்றில் இருந்து எந்தளவிலான வாயு வெளியாகியிருந்தாலும் தீ பற்றியிருக்கும் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.

அதேபோல், கிணற்றிலிருந்து நீராவி மட்டுமே வெளியாகியிருக்கும் என்றும், அதுவே செயற்கைக்கோள் பார்க்கும்போது வெள்ளை புகைப்படலாம் போல் தெரிந்திருக்கும் என்றும் தாங்கள் நம்புவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பிபிசியிடம் பேசியுள்ள அந்த நிறுவனத்தின் மூலோபாய வளர்ச்சிக்கான துணை இயக்குனர் டானியார் துசெம்பாயேவ் , “நாங்கள் இந்த விபத்தை பொறுப்புடன் அணுகியுள்ளோம்,” என்று தெரிவித்துள்ளார்.

இந்த விஷயம் குறித்து ஆராய புசாச்சி நெஃப்ட் நிறுவனமும், தனி ஆய்வு குழு ஒன்றை அமர்த்தியுள்ளது. இந்த ஆய்வு கெய்ரோஸின் ஆய்வு முடிவுகளை கேள்விக்குட்படுத்தியுள்ளது. ஆனால், அதன் அறிக்கைகளை பார்க்க பிபிசி அனுமதிக்கப்படவில்லை.

அந்த நிறுவனத்தின்படி, செயற்கைகோள்கள் மீத்தேனுக்கு பதிலாக, வளிமண்டலத்தில் தெரிந்த நீராவி போன்ற வேறு வாயுக்களை தவறுதலாக கணிக்கிட்டு விட்டதாகவும், கெய்ரோஸின் ஆய்வில் இந்த வெடிப்பு சம்பவத்திற்கு முன்பே வளிமண்டலத்தில் காணப்பட்ட மீத்தேன் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை என்றும், அந்த ஆய்வு பரிந்துரைத்துள்ளது.

ஆனால், கசிவு குறித்த கெய்ரோஸின் ஆரம்பகட்ட ஆய்வை சரிபார்த்த குழுக்கள் இந்த கூற்றை மறுக்கின்றன.

இதுகுறித்து பேசிய குவாண்டர், “நீராவி அல்லது புகையின் விளைவுகள் என்ன என்பதை நாங்கள் சோதித்தோம். அதன் முடிவுகளுக்கும், எங்களது அளவீடுகளுக்கும் எந்த தொடர்பையும் நாங்கள் கண்டறியவில்லை,” என்று கூறியுள்ளார்.

மேலும், தங்களது விஞ்ஞானிகள் 'ஒற்றை மீத்தேன் புகைப்படலங்களை' மட்டுமே தேடியதாகவும், எனவே 'விபத்திற்கு முன்பு ஏற்கனவே வளிமண்டலத்தில் காணப்பட்ட மீத்தேன் தங்களது வழிமுறையில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது' என்றும் அவர் கூறியுள்ளார்.

 
கஜகஸ்தான், மீத்தேன் கசிவு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

இயற்கை எரிவாயு உற்பத்தி அதிகரிப்பின் மூலம், மேலும் அதிகமான மீத்தேன் கசிவு அபாயத்தை கஜகஸ்தான் எதிர்கொள்ளும் என்று கூறுகின்றனர்.

மீத்தேன் உமிழ்வை குறைக்க கஜகஸ்தான் முடிவு

இந்த விபத்து குறித்த அதிகாரபூர்வ விசாரணை அட்யூராவின் தொழில்துறை பாதுகாப்புக் குழுவால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த விசாரணையில், புசாச்சி நெஃப்ட் நிறுவனம் கிணறு துளையிடும் பணியை சரியாக மேற்பார்வை செய்யவில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் துளையிடும் பணியில் ஏற்பட்டுள்ள பல்வேறு குளறுபடிகளுக்கு துணை ஒப்பந்ததாரான ஜமான் எனர்கோ மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால், இதுகுறித்து அவர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

கஜகஸ்தான் எரிசக்தி அமைச்சகம் பிபிசிக்கு வழங்கியுள்ள அறிக்கையில், “இந்தக் கசிவை கையாள்வது சிக்கலான தொழில்நுட்ப பணி என்றும், இது போன்ற விபத்துகளுக்கு உலக அளவில் எந்த விதமான தீர்வும் இல்லை,” என்றும் தெரிவித்துள்ளது.

மத்திய ஆசிய பகுதியில் இது போன்ற பெரிய மீத்தேன் கசிவு விபத்து ஏற்படுவது இது முதல் முறையல்ல.

அண்டை நாடான துர்க்மெனிஸ்தானைப் போலவே, கஜகஸ்தானும் டஜன் கணக்கான 'சூப்பர்-எமிட்டர்' நிகழ்வுகளைப் பதிவு செய்துள்ளது.

சூப்பர்-எமிட்டர் என்பது வளிமண்டலத்தில் அதிக அளவு மீத்தேன் வெளியிடப்படும் நிகழ்வுகளை விவரிக்க விஞ்ஞானிகளால் பயன்படுத்தப்படும் பதமாகும்.

ஆனால், இதுவரை நடந்த மீத்தேன் கசிவு சம்பவங்களிலேயே மங்கிஸ்டாவில் நடந்த நிகழ்வே பெரியது எனவும், மற்றவற்றில் இருந்து அது தனித்து நிற்பதாகவும் தெரிவிக்கிறார் குவாண்டர்.

காலநிலை மாற்றத்தைத் தொடர்ந்து கண்காணித்து வரும் காலநிலை நிபுணர்கள், இயற்கை எரிவாயு உற்பத்தி அதிகரிப்பின் மூலம், மேலும் அதிகமான மீத்தேன் கசிவு அபாயத்தை கஜகஸ்தான் எதிர்கொள்ளும் என்று கூறுகின்றனர்.

கடந்த ஆண்டு நடந்த COP28 காலநிலை உச்சிமாநாட்டில், 2030-ஆம் ஆண்டுக்குள் உலகளவிலான மீத்தேன் உமிழ்வை 30% குறைப்பதற்கான தன்னார்வ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட 150 நாடுகளில் கஜகஸ்தானும் ஒன்று.

https://www.bbc.com/tamil/articles/cpr8xrdvq1lo

அமைதிக்கான நோபல் பரிசு: எலான் மஸ்க் பெயர் பரிந்துரை

1 month 3 weeks ago
mask-300x188.jpg

டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் X- நிறுவனங்களின் தலைவரான எலான் மஸ்க்குக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என நோர்வே எம்.பி மரியஸ் நில்சன் முன்மொழிந்துள்ளார்.

ரஷ்யா-உக்ரைன் போரின் போது செயற்கைக்கோள் தகவல் தொடர்புகளை வழங்கியது, சுதந்திரமான பேச்சு மற்றும் திறந்த உரையாடலுக்கான ஆதரவுக்காக 2024 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசை வழங்க வேண்டும் என மரியஸ் நில்சன் முன்மொழிந்துள்ளார்.

இதற்கிடையில், நோர்வே எம்.பியான சோபி மர்ஹாக், ஜூலியன் அசாஞ்சேவை பரிந்துரைத்தார். அசாஞ்சே மேற்கத்திய போர்க்குற்றங்களை அம்பலப்படுத்தினார், இதனால் அமைதிக்கு அவர் பங்களித்துள்ளார். ஆகவே அவர் அமைதிக்கான நோபல் பரிசுக்கு தகுதியானவர் என அவர் தெரிவித்தார்.

https://thinakkural.lk/article/292864

உக்ரைனுக்கு எதிராக போலந்து விவசாயிகள் போராட்டம்.. தீர்வு காண அரசியல் தலைவர்களுக்கு ஜெலன்ஸ்கி அழைப்பு

1 month 3 weeks ago
உக்ரைனுக்கு எதிராக போலந்து விவசாயிகள் போராட்டம்.. தீர்வு காண அரசியல் தலைவர்களுக்கு ஜெலன்ஸ்கி அழைப்பு 8-17.jpg

உக்ரைன் மீது ரஷியா தனது முழு அளவிலான ராணுவ நடவடிக்கையை தொடங்கி இரண்டு ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. போர் தொடங்கியதில் இருந்தே அண்டை நாடான போலந்து, உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது. நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடான போலந்து, உக்ரைனில் இருந்து வந்த அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததுடன், உக்ரைனுக்கு ஆயுதங்களையும் வழங்கியது.

இந்நிலையில், உக்ரைனில் இருந்து தானியங்கள் மற்றும் பிற உணவுப் பொருட்கள் இறக்குமதி செய்வதால் தங்களின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக போலந்து விவசாயிகள் குற்றம்சாட்டி போராடத் தொடங்கியதில் இருந்து பிரச்சினை உருவானது. இந்த விவகாரம் நாளுக்குநாள் வலுத்து, பெரிய அளவில் வெடித்துள்ளது. நேற்று முன்தினம் போலந்து விவசாயிகள் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தினர். உக்ரைனுக்கு செல்லக்கூடிய அனைத்து சாலைகளையும் மறித்து போக்குவரத்தை தடை செய்தனர். அத்துடன் சிலர் ரஷிய அதிபர் புதினுக்கு ஆதரவாக முழக்கமிட்டனர். இந்த செயல் உக்ரைனின் கோபத்தை தூண்டும் வகையில் அமைந்தது.

இதையடுத்து போலந்து விவசாயிகளின் பிரச்சினை குறித்து பேசுவதற்காக போலந்து தலைவர்களுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக ஜெலன்ஸ்கி கூறியிருப்பதாவது:-

இரு நாடுகளின் விவசாயிகளும் ஒருவரையொருவர் அவமதிக்கக்கூடாது. நாம் ஒற்றுயாக இருக்க வேண்டும். நம்மிடையே உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவேண்டும். உக்ரைன் மற்றும் போலந்து இடையே மட்டுமல்லாமல் முழு ஐரோப்பா அளவிலும் தீர்வு தேவை. விவசாயிகளின் பிரச்சினை தொடர்பாக விவாதித்து தீர்வு காண்பதற்காக எல்லையில் ஆலோசனைக் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ரஷியா போர் தொடங்கி இரண்டு ஆண்டு நிறைவடைய (பிப்ரவரி 24) உள்ள நிலையில், அதற்கு முன்னதாக போலந்து பிரதமர் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதி ஆகியோருடனான சந்திப்பு நடைபெறும் என நம்புகிறேன். இது தேசிய பாதுகாப்பு தொடர்பான விஷயம்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

https://akkinikkunchu.com/?p=269216

காஸா எல்லைக்கு திரும்பிய இஸ்ரேலியர்கள் கண்டது என்ன? ஹமாஸ் தாக்குதல் நடத்திய இடம் இப்போது எப்படி இருக்கிறது?

1 month 3 weeks ago
காஸா எல்லைக்கு திரும்ப விரும்பும் இஸ்ரேலியர்கள்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,

அய்லெத் கோன் மற்றும் ஷச்சார் ஷ்னுர்மன் ஆகிய இருவர் மட்டுமே தங்கள் வீடுகளுக்கு திரும்பி வந்தவர்கள்.

கட்டுரை தகவல்
  • எழுதியவர், லூசி வில்லியம்சன்
  • பதவி, மத்திய கிழக்கு நிருபர், இஸ்ரேல் குறித்த செய்திகளை அளிப்பவர்
  • 59 நிமிடங்களுக்கு முன்னர்

இஸ்ரேலைச் சேர்ந்த அய்லெத் கோன் மற்றும் ஷச்சார் ஷ்னுர்மன், ஆகிய இருவரும் தங்கள் வீட்டில் இந்த மாதம் திராட்சைப்பழங்களை அறுவடை செய்துள்ளனர்.

இது கேட்பதற்கு சாதாரணமாக தோன்றலாம். அவர்கள் வசிக்கும் பகுதி கடந்த வருடம் ஹமாஸ் தாக்குதலால் சேதமடைந்தது, எரிந்து கிடக்கும் அண்டை வீடுகளுக்கு நடுவே அவர்கள் இந்த அறுவடையைச் செய்துள்ளனர்.

இஸ்ரேலின் கஃபர் அஸாவில் உள்ள அவர்களது வீட்டில், வாராந்திர பார்பிக்யூ பார்ட்டிகளுக்காக பிளாஸ்டிக் பாட்டில்களில் சேமிக்கப்படுகிறது இந்த திராட்சைச் சாறு. ராணுவ வீரர்கள் மட்டுமே அவர்களின் விருந்தினர்கள்.

காஸாவிலிருந்து 2 கிமீ (1.2 மைல்) தொலைவில் உள்ள கஃபர் அஸா, அக்டோபர் 7 அன்று ஹமாஸ் ஆயுதக்குழுவால் குறிவைக்கப்பட்ட இடங்களில் ஒன்றாகும். ஹமாஸின் இந்த தாக்குதலில் தெற்கு இஸ்ரேலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர், மேலும் 240க்கும் மேற்பட்டோர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர்.

அடுத்தடுத்த நாட்களில், இஸ்ரேலின் பிற பகுதிகளின் ஹோட்டல்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

 
காஸா எல்லைக்கு திரும்ப விரும்பும் இஸ்ரேலியர்கள்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,

ராணுவ வீரர்கள், நன்கொடையாளர்கள், பத்திரிகையாளர்கள், மனிதாபிமான அமைப்புகளின் உறுப்பினர்கள் கஃபர் அஸா கிராமத்திற்கு வருகிறார்கள்

ஆளில்லாத இஸ்ரேலிய கிராமங்கள்

வெளியேறிய மக்களில், அய்லெத் கோன் மற்றும் ஷச்சார் ஷ்னுர்மன் ஆகிய இருவர் மட்டுமே தங்கள் வீடுகளுக்கு திரும்பி வந்தவர்கள்.

"மாலையில், இங்கு மிகவும் தனிமையாக இருக்கிறது," அய்லெத் கூறுகிறார். "மக்கள் சாலையில் நடந்து செல்வதையும், நம்மைப் பார்த்து ஹலோ சொல்வதையும் வழக்கமாக பார்க்கலாம். இப்போது எல்லாம் மாறிவிட்டது, இங்கு யாரும் இல்லை." என்கிறார் அவர்.

பகல் நேரத்தில், ராணுவ வீரர்கள், நன்கொடையாளர்கள், பத்திரிகையாளர்கள், மனிதாபிமான அமைப்புகளின் உறுப்பினர்கள் இந்த கிராமத்திற்கு வருகிறார்கள்.

கஃபர் அஸா ஒரு வகையான அருங்காட்சியகமாக மாறிவிட்டது. அதன் எரிந்த மற்றும் உடைந்த வீடுகள் ஆளில்லாமல் கிடக்கின்றன, அவற்றின் வாசல்கள் கயிறுகளால் தடுக்கப்பட்டுள்ளன, இடிபாடுகள் மற்றும் பொருட்கள் தரையில் சிதறிக்கிடக்கின்றன.

கிராமத்திற்கு வந்த வெவ்வேறு குழுக்கள் வெளியேறிய பிறகு, தம்பதிகள் தங்கள் வராண்டாவில் அமர்ந்தனர். இஸ்ரேலிய இராணுவ ட்ரோன்களின் சிணுங்கல் மற்றும் வெளியேறும் பீரங்கிகளின் வழக்கமான சத்தம் மட்டுமே அங்கே கேட்டது. காலியான வீடுகளோடு இருள் சூழப்பட்டு நிற்கிறது கிராமம்.

எதிரே உள்ள வீட்டையும், சாலையின் மற்றொரு பகுதியில் உள்ள ஒரு வீட்டையும் சுட்டிக்காட்டுகிறார் அய்லெத்.

"எங்கள் பக்கத்து வீட்டுக்காரர், மிகவும் நல்ல நண்பராக இருந்தவர், ஆனால் அவரை கொலை செய்துவிட்டனர்," என்று அவர் கூறுகிறார். "இது மற்ற அனைவருக்கும் இங்கு நடந்ததைப் பற்றிய ஒரு நினைவூட்டலாக இருக்கும்." என்கிறார்.

அக்டோபர் 7 அன்று ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து, இங்கு வசித்த பலரால் இன்னும் வெளியே வர முடியவில்லை. காஸாவில் நடந்து கொண்டிருக்கும் போர், அந்த தாக்குதல்களால் தூண்டிவிடப்பட்டது.

காஸாவின் பெய்த் ஹனோன் போன்ற இடங்களில் ஏற்பட்டுள்ள அழிவை இந்த கிராமத்தின் எல்லையிலிருந்து பார்க்கும் அளவுக்கு நெருக்கமாக உள்ளது இந்தப் பகுதி.

 
காஸா எல்லைக்கு திரும்ப விரும்பும் இஸ்ரேலியர்கள்
படக்குறிப்பு,

பணயக்கைதிகளுக்கு ஆதரவாக, தங்கள் வராண்டாவில் கருப்புக் கொடியைத் தொங்கவிட்டுள்ளனர் அய்லெத் கோன் மற்றும் ஷச்சார்.

போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு மறுப்பு தெரிவிக்கும் இஸ்ரேல்

நாட்டின் இடம்பெயர்ந்த சமூகங்களின் செலவுகள், அரசியல் மற்றும் நிதி ரீதியாக மாதந்தோறும் அதிகரித்து வருவதால், மீண்டும் தங்கள் வீடுகளுக்கு திரும்பும் வகையில் அவர்களின் பாதுகாப்பு உணர்வை எவ்வாறு மீட்டெடுப்பது என்பது இஸ்ரேலிய பிரதமரின் சவாலாகும்.

தாக்குதல்களுக்குப் பிறகு, 200,000 மக்கள் இஸ்ரேலின் எல்லைப் பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர், காஸாவின் தெற்கு எல்லை மற்றும் லெபனானின் வடக்கு எல்லை ஆகிய இரண்டு எல்லையிலிருந்தும். ஹமாஸுக்கு ஆதரவாக இரான் ஆதரவுக் குழுவான ஹெஸ்பொலா, இஸ்ரேலியப் படைகளுடன் இந்த பகுதிகளில் போரில் ஈடுபட்டுள்ளது.

பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இஸ்ரேலை அதன் எதிரிகளிடமிருந்து பாதுகாக்கும் ஒரு வலிமையான தலைவராக, தனது அரசியல் வாழ்க்கையை வடிவமைத்தார். ஆனால் காலியான எல்லைப் பகுதிகள், அவர் மக்களை பாதுகாக்கத் தவறியதை தினமும் நினைவூட்டுகின்றன.

"நாங்கள் ஏமாந்து விட்டோம் என்று தான் சொல்ல வேண்டும்," என்று அய்லெத் கூறுகிறார். "அவர்கள் சொல்வது பொய் எனத் தெரிந்தும், அதை நாங்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டோம்." என்கிறார்.

போர் முடிந்த பிறகு, ஏதாவது மாற்ற வர வேண்டும் என்று அவர் சொல்கிறார்.

"ராணுவம் ஒழுங்கமைக்கப்பட்ட விதம், பாலத்தீனியர்களை அரசாங்கம் அணுகிய விதம், இந்த போர்ச் சூழலை முழு உலகமும் அணுகும் விதம், என நிறைய மாற வேண்டும்."

காஸாவில் "முழு வெற்றி" மற்றும் ஹமாஸை முழுமையாக அழிப்பது மட்டுமே எதிர்காலத்தில் இஸ்ரேலுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் என்று நெதன்யாகு வலியுறுத்தியுள்ளார்.

ஆனால் வெற்றி அவ்வளவு எளிதில்லை. ஹமாஸின் சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, இந்தப் போரில் கிட்டத்தட்ட 30,000 காஸா மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் காஸா மக்களின் துன்பங்களைத் தணிக்கவும், ஹமாஸால் சிறைப்படுத்தப்பட்டிருக்கும் 100க்கும் மேற்பட்ட பணயக்கைதிகளை விடுவிக்கவும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை அறிவிக்க பிரதமருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.

ஆனால் இதுவரை அதற்கு பிரதமர் ஒப்புக்கொள்ளவில்லை.

"இஸ்ரேலுக்கு எதிரிகளே இருக்கக்கூடாது என்பது சாத்தியமில்லை. ஹமாஸ் இல்லாவிட்டால், ஹமாஸைப் போல் வேறு ஒரு குழு இருக்கும், அதனால் எனக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லை." என்று அய்லெத் கூறுகிறார்.

பணயக்கைதிகளுக்கு ஆதரவாக, இந்த தம்பதியினர் தங்கள் வராண்டாவில் ஒரு பெரிய கருப்புக் கொடியைத் தொங்கவிட்டுள்ளனர். பணயக்கைதிகளில் 19 பேர் கஃபர் அஸாவைச் சேர்ந்தவர்கள்.

"கடத்தப்பட்டவர்கள் காஸாவிலிருந்து வீட்டிற்கு திரும்ப வர வேண்டும்" அய்லெட் கூறுகிறார். "அதற்கு ஒரு ஒப்பந்தம் வேண்டும். அவர்கள் போரை நிறுத்த வேண்டும்" என்கிறார்.

காஸாவில் ஒரு தெளிவான திட்டமில்லாமல் போர் தொடரும் நிலையில், இஸ்ரேலின் வடக்கு எல்லையில் மக்களுக்கான பாதுகாப்பை எவ்வாறு உறுதிசெய்வது என்ற கேள்வி இப்போது அதிகமாக எழுகிறது.

 
ஹெஸ்பொல்லாவுடனான போர்
காஸா எல்லைக்கு திரும்ப விரும்பும் இஸ்ரேலியர்கள்

காஸா எல்லையில் இருந்து 200 கிமீ (120 மைல்கள்) தொலைவில், கலிலீ கடற்கரையில் உள்ள ஒரு சுற்றுலா விடுதியில் தங்கியிருக்கும் மைக்கேல் பிஹா, இஸ்ரேலின் எல்லைச் சமூகங்களில் ஏதாவது மாற்றம் தேவை என்பதை ஒப்புக்கொள்கிறார்.

"ஒருவேளை மக்களை வெளியேற்றியது மிகப்பெரிய தவறாக இருக்கலாம்" என்று அவர் கூறுகிறார். "இப்போது வீடுகளுக்கு திரும்பிச் செல்ல முடியாது என்பதை மக்கள் உணர்கிறார்கள்" என்கிறார்.

தொடர்ந்து பேசிய அவர், "இதுவரை எங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக எல்லை இருந்தது. சில நேரங்களில் அங்கே அமைதி நிலவும், சில நேரங்களில் பதற்றமாக இருக்கும். நாங்கள் அதற்குப் பழகிவிட்டோம்," என்று விளக்கினார்.

"ஆனால் இனியும் பெய்ரூட்டில் இருந்து யார் எப்போது துப்பாக்கியால் சுடுவார்கள் என்ற பயத்தில் வாழ முடியாது" என்கிறார் மைக்கேல்.

லெபனான் எல்லையில் இருந்து 3 கிமீ (1.9 மைல்) தொலைவில் உள்ள மலைவாழ் சமூகமான கிப்புட்ஸ் சாஸாவிலிருந்து வெளியேற்றப்பட்ட 400 குடியிருப்பாளர்களில் மைக்கேலும் ஒருவர்.

அங்குள்ள பள்ளி ஒரு ஹெஸ்பொலா ஏவுகணையால் நேரடியாக தாக்கப்பட்டது என்றும், அதிர்ஷ்டவசமாக பள்ளி மூடப்பட்டு மாணவர்கள் வெளியேறிய பிறகு இது நடந்தது என்றும் கூறினார் மைக்கேல்.

கடந்த நான்கு மாதங்களாக, சிறிய விடுதிக் குடிசைகளில் வெளியேற்றப்பட்ட குடியிருப்பாளர்கள் வசித்து வருகின்றனர். ஆனால் இந்தப் பகுதியின் குளிர்கால மழைக்கும் மற்றும் வெளிறிய மூடுபனிக்கும் இக்குடிசைகள் ஏற்றவை அல்ல.

ஒரு மருத்துவமனையுடன் கூடிய கிப்புட்ஸ் பள்ளியும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. சாஸாவில் சமைக்கப்பட்ட உணவு தினமும் இங்கு கொண்டுவரப்படுகிறது, இது இங்குள்ளவர்களுக்கு ஒரு ஆறுதலை அளிக்கும் என்பதால்.

குடியிருப்பாளர்கள் ஜூன் மாத இறுதியில் வீடுகளுக்கு திரும்ப முடியும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் அது எப்படி நடக்கும் என்று யாருக்கும் தெரியவில்லை.

எல்லையில் நிலைமை மோசமடைந்து வருகிறது, இஸ்ரேலின் இராணுவம் மற்றும் அரசியல்வாதிகள் 'இராஜதந்திர அவகாசம்' முடிந்துவிட்டதாக எச்சரித்துள்ளனர்.

சர்வதேச மத்தியஸ்தம் பலனைத் தரவில்லை என்றால், இராணுவப் பலத்தைப் பயன்படுத்தி எல்லையின் லெபனான் பக்கத்திலிருந்து ஹெஸ்பொல்லாவைத் தாக்கி பின்வாங்கச் செய்வோம் என அவர்கள் தெளிவாக தெரிவிக்கின்றனர்.

பிரதமர் நெதன்யாகு காஸாவில் இராணுவ நடவடிக்கைகளில் உறுதியாக இருப்பதாகத் தோன்றினாலும், இங்கு வடக்கில், ஹெஸ்பொலாவுடன் போர் என்பது ஒரு கடைசி முயற்சியாக தான் இருக்கும்.

ஹமாஸுடன் ஒப்பிடுகையில் சிறந்த ஆயுதங்களையும் சிறந்த பயிற்சிகளையும் பெற்ற ஹெஸ்பொலா ஒரு வித்தியாசமான எதிரி. எனவே இது வேறு வகையான போராக இருக்கும்.

நாட்டின் வடக்குப் பகுதிகளிலிருந்து இன்னும் பலர் வெளியேற்றப்படுவதால் இஸ்ரேலுக்கான செலவுகள் மிக அதிகமாக இருக்கும். ஆனால் இஸ்ரேலின் எல்லைகளில் மக்களை மீண்டும் குடியமர்த்துவதற்கான அழுத்தம் அதிகரித்து வருகிறது.

"அவர் அதை எப்படி செய்வார் என்பது குறித்து எனக்கு கவலையில்லை. ஆனால் இந்த நிலைமை ஒரு தெளிவான முறையில் முடிவடைய வேண்டும். இதனால் நாம் சாதாரண சூழ்நிலையில் பாதுகாப்பாக வாழ முடியும், எல்லையில் ஏவுகணைகள் இல்லாமல்" என்கிறார் மைக்கேல் பிஹா.

 
காஸா எல்லைக்கு திரும்ப விரும்பும் இஸ்ரேலியர்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ஹமாஸால் பணயக் கைதிகளாக வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டவர்கள் கஃபர் அஸாவில் உள்ள தங்கள் வீடுகளுக்குத் திரும்பி வருகின்றனர்.

வீடுகளுக்கு திரும்ப விரும்பும் இஸ்ரேலியர்கள்

காஸா எல்லையில் உள்ள தெற்கு சமூகங்களில், ஒரு சிலர் வீடுகளுக்கு திரும்பத் தொடங்கியுள்ளனர்.

இஸ்ரேலின் கிப்புட்ஸ் இயக்கத்தின் தலைவரான நிர் மீர், இஸ்ரேலின் ஹாரெட்ஸ் செய்தித்தாளிடம், "கிப்புட்ஸ் ஆர் ஹானர் பகுதிக்கு மாத இறுதியில் மக்கள் திரும்பி வருவார்கள் என்றும், இதற்காக பல தரப்பட்ட மக்களிடமிருந்தும் தொடர்ந்து பெருமளவில் விண்ணப்பங்கள் வருவதாகவும்" கூறினார்.

கிப்புட்ஸ் பீரியில், இடிபாடுகள் மற்றும் சேதமடைந்த வீடுகளை அகற்றத் தொடங்கியுள்ளனர். மீண்டும் வீடுகள் கட்டுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

மேலும் கஃபர் அஸாவில், தங்கள் அண்டை வீட்டார் அவ்வப்போது வந்து உடமைகளை சேகரித்துச் செல்வதையும், வீடுகளுக்கு ஏற்பட்ட சேதங்களை ஆய்வு செய்வதையும் அய்லெத் மற்றும் ஷச்சார் காண்கின்றனர்.

"வாரத்திற்கு ஒரு முறை சிவப்பு எச்சரிக்கை சைரனையும், மாதத்திற்கு ஒரு முறை ஏவுகணைத் தாக்குதலையும் பொறுத்து கொள்வதற்கு ஈடாக இந்தச் சமூகங்கள் குறைந்த விலையில் சிறந்த வாழ்க்கைத் தரத்தை வழங்கின" என்று நிர் மீர் கூறினார். "இப்போது ஆபத்து அதிகரித்துள்ளது, மக்கள் படுகொலைக்கான வாய்ப்பும் உள்ளது" என்கிறார்.

"ராணுவம் ஒரு பாடத்தைக் கற்றுக்கொண்டது என்று நாங்கள் நம்புகிறோம், இனியாவது இந்த பகுதிக்கும் காஸாவிற்கும் இடையில் ஒரு சில வீரர்களை நிறுத்தி வைப்பார்கள்" என ஷச்சார் கூறுகிறார்.

"சில மாதங்களில் நிலைமை எப்படி மாறும் என்று யாருக்குத் தெரியும், ஆனால் இப்போதைக்கு எங்களுக்கும் காஸாவிற்கும் இடையில் 10,000 வீரர்கள் உள்ளனர். இது இஸ்ரேலில் மிகவும் பாதுகாப்பான இடம்" என்று கூறுகிறார் ஷச்சார்.

https://www.bbc.com/tamil/articles/cqv66wvj4p1o

உலகத் தாய்மொழிகள் தினம் கொண்டாடப்படுவது ஏன்?

1 month 3 weeks ago
  • ஜோ மகேஸ்வரன்
  • பிபிசி தமிழ்
21 பிப்ரவரி 2022
புதுப்பிக்கப்பட்டது 21 பிப்ரவரி 2024
தாய்மொழி

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ ) பிப்ரவரி 21ம் தேதியை உலக தாய்மொழி தினமாக கடைப்பிடிக்கிறது.

இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிவினையைத் தொடர்ந்து, பாகிஸ்தான், மேற்கு, கிழக்கு என்று இரண்டு பகுதிகளாக இருந்தது. இதில், கிழக்கு பாகிஸ்தான், தற்போதைய வங்கதேசம். வங்க மொழி பேசும் மக்கள் அதிகளவில் வசிக்கும் கிழக்கு பாகிஸ்தானில், உருது மட்டுமே தேசிய மொழியாக இருந்தது. ஒரே மதத்தினராக இருந்தாலும், மேற்கு பாகிஸ்தானில் அதிகம் பேசப்படும் உருது மொழியானது, கிழக்கு பாகிஸ்தானில் திணிக்கப்படுவதை, மக்கள் ஏற்கவில்லை.

இதையடுத்து கிழக்கு பாகிஸ்தானில் தேசிய மொழியாக வங்க மொழியே வேண்டும் என்று 1952-ம் ஆண்டு பிப்ரவரி 21ம் தேதி 'வங்க மொழி இயக்கம்' உருவானது. இதையடுத்து வங்க மொழி இயக்கத்தைச் சார்ந்த மாணவர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல் துறையின் நடவடிக்கையால், மாணவர்கள் 4 பேர் உயிரிழந்தனர். போராட்டம் தீவிரமாக பரவியது. கடந்த 1956ம் ஆண்டு, கிழக்கு பாகிஸ்தான் மொழியாக வங்க மொழி அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, டாக்காவில் நடைபெற்ற போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக ஆண்டுதோறும், பிப்ரவரி 21ம் தேதியை உலக தாய்மொழிகள் தினமாகக் கடைபிடிக்க வேண்டும் என்கிற தீர்மானத்தை வங்கதேச அறிஞர் ரபீக்குல் இஸ்லாம் 1998ம் ஆண்டு யுனெஸ்கோவில் முன்மொழிந்தார். தாய் மொழிக்காக போராடி உயிரிழந்தவர்கள், அதற்கான இயக்கத்தை நினைவுகூறி, அனைத்து மக்களின் தாய் மொழி உரிமையைப் பாதுகாக்கும் வகையில், பிப்ரவரி 21ம் தேதியை சர்வதேச தாய்மொழி தினமாக யுனெஸ்கோ 1999ம் ஆண்டு அறிவித்தது. இதையடுத்து 2000ம் ஆண்டிலிருந்து, பிப்ரவரி 21ம் தேதி உலக தாய்மொழிகள் தினமாக கொண்டாடப்படுகிறது.

 

யுனெஸ்கோவின் அறிக்கையில், தாய்மொழி வழியிலான பன்மொழிக்கற்றலை வலியுறுத்துகிறது. தாய்மொழியில் கற்பது அடிப்படை உரிமை என்றும் தெரிவித்துள்ளது. ஆனால், ''அனைத்து தரப்பும் தாய்மொழியில் கல்வி கற்பதை உறுதி செய்ய இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. பெரும்பான்மையானவர்கள் தாய்மொழி தவிர பிற மொழிகளில் கற்பிக்கப்படுகிறார்கள்.

உலக மக்கள் தொகையில் 40 சதவீதம் பேருக்கு அவர்கள் பேசுகின்ற மொழி அல்லது அவர்களுக்கு புரிகின்ற மொழியில் கல்வி கிடைப்பதில்லை. இன்றைக்கு உலகம் முழவதும் 7 ஆயிரம் மொழிகள் பேசப்படுகின்றன. பல மொழிகள் அழியும் நிலையில் இருக்கின்றன. ஒரு மொழி அழிந்து விட்டால், ஒரு கலாச்சாரமும், அறிவு சார் பாரம்பரியமும் அத்தோடு போய்விடுகின்றன. இன்றைய டிஜிட்டல் உலகில் மொழிகளை இணைப்பதும் கற்றல் உள்ளடக்கத்தை உருவாக்குவதும் இன்றியமையாதது. தாய்மொழியை அடிப்படையாகக் கொண்ட தொலைநிலைக் கல்விக் கற்றல் முறைகள் இணைக்கப்பட வேண்டும்'' என்று யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் நடைபெற்ற மொழிப்போராட்டம்

மொழிப்போராட்டம்

பட மூலாதாரம்,DMK

படக்குறிப்பு,

1965ல் இந்தித் திணிப்புக்கு எதிராக தமிழ்நாட்டில் நடைபெற்ற போராட்டம்

இதைப்படிக்கின்ற போது, வங்கதேசத்தைப் போல் இந்தியாவில், தமிழ்நாட்டில் 1938, 1965ம் ஆண்டுகளில் இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டங்கள் பலருக்கும் நினைவிற்கு வரலாம். இந்தித் திணிப்புக்கு எதிராக தமிழ்நாட்டில், நடைபெற்ற போராட்டத்தில் 1939ம் ஆண்டு நடராசன், தாளமுத்து இருவரும் உயிரிழந்தனர். தொடர்ந்து 1965ம் ஆண்டு இரண்டாம் கட்ட போராட்டத்தில் 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். தமிழ்நாட்டில் ஜனவரி 25ம் தேதி மொழிப்போர் தியாகிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய தினம் திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினரும் மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தி, பொதுக் கூட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.

ஆனால், இது ஏன் உலக அளவில் கவனம் பெறவில்லை? என்கிற கேள்வி எழும். வங்க தேசம் கிழக்கு பாகிஸ்தானாக இருந்த போது உள்நாட்டில் அந்த போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து, வங்கதேசம் தனி நாடாகவும் உருவாவனது. அந்நாட்டின் பிரதிநிதி உலக தாய்மொழிகள் தின, தீர்மானத்தை முன்மொழிந்தார். அதை, யுனெஸ்கோவும் அங்கீகரித்தது. ஆனால், தமிழ் மொழி காக்கும் போராட்டம் கவனத்தை பெறவில்லை. இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன என்கிறார்கள் மொழிப்போரில் பங்கேற்றவர்கள்.

தாய்ப்பாலும் தாய்மொழியும் உயிர்ப்பானவை
கவிஞர் அறிவுமதி

பட மூலாதாரம்,ARIVUMATHI

படக்குறிப்பு,

கவிஞர் அறிவுமதி

கவிஞர் அறிவுமதி பிபிசி தமிழிடம் கூறுகையில், ''வங்கதேசத்தில் நடைபெற்றதை விட பன் மடங்கு வீரியமான போராட்டம், தமிழ்நாட்டில் நடைபெற்றது. ஆனால், வழக்கமான நம்முடைய பெருந்தன்மையால், மொழிப் போராட்ட வரலாறு யுனெஸ்கோ வரை செல்லவில்லை. பதிவு செய்யப்படவில்லை. ஆனால், இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் ஈகம் பெரும் வணக்கத்திற்குரியது. ஈடு, இணையற்றது. உலகத்தில் உள்ள மொழிகளைக் காக்க வேண்டும் என்று யுனெஸ்கோ உலக தாய்மொழி தினத்தை அறிவித்துள்ளது.

ஒரு குழந்தை முதலில் அறிகின்ற ருசி தாய்ப்பால். அந்த குழந்தை முதலில் உணர்கின்ற மொழி தாய் மொழி. எனவே, தாய்ப்பாலை போல் தாய்மொழியும் நம் உயிர்ப்பானது. உணர்வோடு கலந்தது. தாய்மொழி என்பதும் ஒரு மொழிதானே என்று கடந்து போய்விட முடியாது. நம்முடைய 3 ஆயிரம் ஆண்டு மரபு, பண்பாடு, கலாச்சாரத்தை நினைவு அடுக்குகளில் கடத்தி வருகிறது. கருவில் இருக்கும் போதே தாய்மொழிச் சொற்களை குழந்தை கேட்கத் தொடங்கி விடுகிறது. நம்முடைய எண்ணம், படைப்பாற்றல் தாய்மொழி வழியாகவே நடக்கிறது. மனிதன் பேசும் மொழியில் கல்வி கற்பிக்கப்பட்டால் சிந்தனைத்திறன் பெருகும். ஆகையால் அடிப்படைக் கல்வி என்பது தாய்மொழியில் கற்பிக்கப்பட வேண்டியது கட்டாயம். அதுதான் ஒரு அறிவார்ந்த சமூகத்தை தொடரச் செய்யும்.'' என்கிறார்.

பன்மொழிக் கற்றலுக்கு தொழில்நுட்பத்தின் பயன்பாடு
பொன்னவைக்கோ

பட மூலாதாரம்,PROF. PONNAVAIKO

படக்குறிப்பு,

முன்னாள் துணைவேந்தர் பொன்னவைக்கோ

பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பொன்னவைக்கோ பிபிசி தமிழிடம் கூறுகையில், ''பன்மொழிக் கற்றலுக்கு தொழில்நுட்பத்தின் பயன்பாடு என்கிற கருதுகோளை யுனேஸ்கோ அறிவித்துள்ளது. இன்றைய தொழில்நுட்பத்தில் யுனிகோட்-டில் அனைத்து மொழிகளையும் எளிதில் கற்றுக் கொள்ள முடியும். பல மொழிகளைக் கற்றுக் கொள்வதற்கு இன்றைய தொழில்நுட்பம் பெரும் பயனாக இருக்கிறது. அதை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக, பள்ளிகளில் அடிப்படைக் கல்வி மட்டுமல்ல, கல்லூரிகளில் மருத்துவம், பொறியியல், சட்டம் உள்ளிட்ட அனைத்தும் தாய்மொழியில் வழங்கப்பட வேண்டும்.

இதற்கான பரிந்துரையை கடந்த 2006ம் ஆண்டு எனது தலைமையிலான, கல்வியாளர் குழு அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. அதில் சிலவற்றை நடைமுறைப்படுத்தியுள்ளார்கள். காரணம், ஒரு மனிதனுக்கு அறிவு வளர்ச்சி இல்லை என்றால், எந்த சாதனையையும் படைக்க முடியாது. சாதனையாளராக வளர தாய்மொழி வழிக் கல்வி மிக அவசியமானது. அடிப்படையானது. குறிப்பாக, ஜப்பான், கொரியா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் தாய்மொழி வழிக்கல்வியை வழங்கி பல கண்டுபிடிப்புகளை, சாதனைகளை நிகழ்த்தி வருவதைக் காணலாம். மாறாக வேற்றுமொழியில் பயிற்றுவிக்கப்படும் கல்வி எதிர்மறை விளைவுகளைத்தான் தரும். தமிழ் இணையப் பல்கலைக்கழகம் உள்ளிட்டவை மூலம் இணைய வழியில் நேரடியாக கல்வி நிறுவனங்களுக்குச் செல்லாமல், உலகம் முழுவதும் இருந்தும் படிக்க வாய்ப்புள்ளது'' என்கிறார்.

தாய்த் தமிழ் பள்ளிகளுக்கு அரசு உதவி கிடைக்குமா?

சிவ காளிதாசன்

பட மூலாதாரம்,SIVA KALIDASAN

படக்குறிப்பு,

அம்பத்தூர் தாய்த் தமிழ் தொடக்கப்பள்ளி தாளாளர் சிவ காளிதாசன்

தமிழ்நாட்டில் தமிழ் வழிக்கல்வியை கட்டாயமாக்கக் கோரி, கடந்த 1999ம் ஆண்டு சென்னை வள்ளுவர் கோட்டத்தில், தமிழண்ணல் தலைமையில் 102 பேர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் பங்கேற்றவரும் அம்பத்தூர் தாய்த் தமிழ் தொடக்கப்பள்ளியின் தாளாளருமான சிவ.காளிதாசன் பிபிசி தமிழிடம் கூறுகையில், ''அடிப்படை மொழி அறிவு அனைவருக்கும் முக்கியம். கருவில் இருக்கும் போதே 10 ஆயிரம் கலைச்சொற்களை உள்வாங்கி வைத்துள்ளது என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். தாய்மொழியில் அடிப்படை வலுவாக அமையும் போது, எத்தனை மொழிகளையும் எளிதில் கற்றுக் கொள்ள முடிகிறது. இதை தாய்மொழி வழிக் கல்வியின் மூலமே இந்த அடிப்படை வலுவாகும். ஆனால், குழந்தையின் பெற்றோர் பேசும், குழந்தை கேட்கும் வார்த்தைகளை வேறு மொழியில் பள்ளியில் கற்பிக்கும் போது குழந்தை குழப்பமடைகிறது. குறிப்பாக, அம்மா, அப்பா, பூனை என்று சொல்லி, கேட்டதை பள்ளியில் மம்மி, டாடி, கேட் என்று படிக்கும் போது குழந்தை குழப்பமடையும்.

தாய்த் தமிழ் தொடக்கப்பள்ளியை 1993ம் ஆண்டு தொடங்கி நடத்தி வருகிறோம். இதுபோல் தமிழ்நாடு முழுவதும் 21 தாய்த் தமிழ் தொடக்கப்பள்ளிகள் உள்ளன. ஆனால், பெற்றோர்கள் விரும்புகிறார்கள் என்று கூறி, 2006ம் ஆண்டில் இருந்து தற்போது வரை தமிழ்நாட்டில் 23, 968 அரசுப் பள்ளிகள் தமிழ் வழிக் கல்வியில் இருந்து ஆங்கில வழிக் கல்விக்கு மாறியுள்ளன. இது பெரும் வருத்தமாக இருக்கிறது. ஆனால், தனியார் சுயநிதிப் பள்ளிகளில், 45, 000 மாணவர்கள் தமிழ் வழியில் பயின்று வருவது ஆறுதலாக இருக்கிறது. எனவே, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், தமிழ் வழிக் கல்வியைக் கட்டாயமாக்க வேண்டும். தனியாரால் நடத்தப்படும் தாய்த் தமிழ் பள்ளிகளை அரசு உதவி பெறும் பள்ளிகளாக்க வேண்டும். இந்த பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு அரசு உதவ வேண்டும்.''என்கிறார்.

https://www.bbc.com/tamil/global-60454435

சவர்க்காரங்கள் மற்றும் சலவைத்தூள்களில் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள்

1 month 3 weeks ago

சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும் பல்வேறு வகையான சவர்க்காரம், கிருமிநாசினிகள், சலவைத்தூள்கள் மற்றும் துணிகளில்  உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் இருப்பதாக சுற்றுச்சூழல் நீதி மையம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த இரசாயனங்களால் சிறுநீரகநோய், புற்றுநோய், தைராய்ட், கர்ப்பம் தொடர்பான உயர் ரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளதோடு இரத்தம் மற்றும் தாய்ப்பாலின் மூலம் தாயிடமிருந்து குழந்தைக்கு இந்த இரசாயனங்கள் பரவ வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

மேலும் செக் குடியரசில் உள்ள சார்லஸ் பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் ஆய்வுத் துறை நடத்திய ஆய்வில் நீரை வடிய விடும் துணியால் செய்யப்பட்ட ஏப்ரன்கள், ரெயின்கோட்கள் போன்றவற்றிலும் மோசமான இரசாயனங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/292667

வாக்னர்: ரஷ்ய கூலிப்படை ஆப்பிரிக்காவில் தங்கம், யுரேனியம் சுரங்கங்களை கைப்பற்றி என்ன செய்கிறது?

1 month 3 weeks ago
‘வாக்னர்`: ரஷ்ய கூலிப்படை ஆப்பிரிக்காவில் வேறு பெயரில் செயல்படுவது எப்படி?

பட மூலாதாரம்,AFP

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஜோ இன்வுட் & ஜேக் டாச்சி
  • பதவி, பிபிசி நியூஸ்நைட் & பிபிசி ஐ இன்வெஸ்டிகேஷன்ஸ்
  • 5 மணி நேரங்களுக்கு முன்னர்

தங்கம், யுரேனியம் போன்ற மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இயற்கை வளங்களை பயன்படுத்திக் கொண்டு, அதற்கு ஈடாக ஆப்பிரிக்காவில் உள்ள அரசாங்கங்களின் "ஆட்சி தொடர்வதற்கான" வழிவகையை ரஷ்யா மேற்கொள்வதாக, சமீபத்தில் வெளியான முக்கிய அறிக்கையின் வாயிலாக தெரியவந்துள்ளது.

மேற்கத்திய நிறுவனங்களை மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பகுதியிலிருந்து வெளியேற்றும் இலக்குடன், மேற்கு ஆப்பிரிக்காவில் சுரங்கச் சட்டங்களை மாற்றுவதற்கு ரஷ்யா எவ்வாறு செயல்படுகிறது என்பதையும் பிபிசிக்குக் கிடைத்த ரஷ்ய அரசாங்க ஆவணங்கள் விவரிக்கின்றன.

கடந்த ஆண்டு ஜூனில் ரஷ்யாவில் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி தோல்வியடைந்த பிறகு, ’வாக்னர்’ கூலிப்படையின் வணிகங்களை ரஷ்ய அரசாங்கம் எடுத்துக்கொள்ளும் செயல்முறையின் ஒரு பகுதியாகும் இது.

`வாக்னர்` குழுவின் பல பில்லியன் டாலர் மதிப்பிலான நடவடிக்கைகள், தற்போது `ரஷ்யன் எக்ஸ்பெடிஷனரி கார்ப்ஸ்` எனும் பெயரில் செயல்படுகின்றன. பிரிட்டன் தெருக்களில் நோவிசோக் எனும் ரசாயன ஆயுதத்தைப் பயன்படுத்தி செர்ஜேய் ஸ்க்ரிபாலைக் கொலை செய்யும் முயற்சியின் பின்னணியில் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட நபரால் இவை நிர்வகிக்கப்படுகின்றன. ஆனால், இந்த குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்துள்ளது.

 

ராயல் யுனைடெட் சர்வீசஸ் இன்ஸ்டிட்யூட்டின் தரைவழிப் போர் நிபுணரும் இந்த அறிக்கையின் ஆசிரியர்களில் ஒருவருமான ஜாக் வாட்லிங் கூறுகையில், "இது ரஷ்ய அரசு அதன் ஆப்பிரிக்கக் கொள்கையின் நிழலில் இருந்து வெளிப்படுவதைக் காட்டுகிறது" என்றார்.

ஜூன் 2023-ல், யெவ்ஜெனி ப்ரிகோஜின் அநேகமாக உலகில் மிகவும் அஞ்சப்படும் பிரபலமான கூலிப்படை தலைவராக இருந்திருக்கலாம். அவரது வாக்னர் குழு, பில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்புள்ள நிறுவனங்கள் மற்றும் திட்டங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது. அதேநேரத்தில், அக்குழுவின் போராளிகள் யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்கு மையமாக இருந்தனர்.

பின்னர், அவர் மாஸ்கோவில் அணிவகுத்துச் செல்ல முடிவு செய்தார் பிரிகோஜின். பாதுகாப்பு அமைச்சர் மற்றும் ராணுவத்தின் தலைவரை அகற்ற வேண்டும் என்று வெளிப்படையாக அவர் அழைப்பு விடுத்தார். ஆனால் உண்மையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு அதுவரை யாரும் தராத அச்சுறுத்தல் அது.

சில வாரங்களுக்குள் அவர் மிகவும் சந்தேகத்திற்கிடமான விமான விபத்தில் இறந்தார். வாக்னர் குழுவுக்கு என்ன நடக்கும் என்பது பற்றி அந்த நேரத்தில் பரவலான ஊகங்கள் இருந்தன. இப்போது, அதற்கு பதில் இருக்கிறது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்

கிரெம்ளினில் நடைபெற்ற கூட்டம் என்ன?

டாக்டர் வாட்லிங்கின் கூற்றுப்படி, "ப்ரிகோஜினின் கலகத்திற்குப் பிறகு கிரெம்ளினில் ஒரு கூட்டம் நடந்தது. அதில் வாக்னரின் ஆப்பிரிக்க நடவடிக்கைகள் ரஷ்ய ராணுவ உளவுத்துறையான GRU-ன் கட்டுப்பாட்டின் கீழ் நேரடியாக வரும் என்று முடிவு செய்யப்பட்டது" என்றார்.

யூனிட் 29155-ன் தலைவரான ஜெனரல் ஆண்ட்ரே அவெரியனோவிடம், 'குறிவைக்கப்பட்ட கொலைகள்' மூலம் வெளிநாட்டு அரசாங்கங்களை நிச்சயமற்றதாக மாற்றுவதில் நிபுணத்துவம் வாய்ந்த ஒரு ரகசிய நடவடிக்கையாக ஒப்படைக்கப்பட்டது.

ஆனால், ஜெனரல் அவெரியனோவின் புதிய பணி, அரசாங்கங்களை நிச்சயமற்றதாக மாற்றுவதாக இல்லை. மாறாக, தங்களுக்குப் பணம் செலுத்தும் வரை ஆப்பிரிக்க ஆட்சியாளர்களின் அரசைப் பாதுகாப்பதாகத் தெரிய வருகிறது.

செப்டம்பர் தொடக்கத்தில், துணை பாதுகாப்பு அமைச்சர் யூனுஸ்-பெக் யெவ்குரோவ் உடன், ஜெனரல் அவெரியனோவ் ஆப்பிரிக்காவில் முன்பு நடந்த வாக்னர் குழுவின் நடவடிக்கைகள் குறித்து அறிய சுற்றுப்பயணத்தைத் தொடங்கினார்.

அவர்கள் லிபியாவில் போர்த் தளபதி ஜெனரல் கலீஃபா ஹஃப்தாரை சந்தித்தனர். அடுத்ததாக புர்கினா ஃபாசோவில் 35 வயதான தலைவர் இப்ராஹிம் ட்ரேரே அவர்களை வரவேற்றார்.

அதன் பிறகு, அவர்கள் மத்திய ஆப்பிரிக்கக் குடியரசுக்கு சென்றனர். ஆப்பிரிக்க கண்டத்தில் மிகவும் நன்கு நிறுவப்பட்ட வாக்னர் நடவடிக்கைகள் அங்குதான் செயல்பட்டதாக கருதப்படுகிறது. பின்னர், மாலிக்கு சென்று அங்குள்ள ராணுவ ஆட்சித் தலைவர்களைச் சந்தித்தனர்.

 
‘வாக்னர்`: ரஷ்ய கூலிப்படை ஆப்பிரிக்காவில் வேறு பெயரில் செயல்படுவது எப்படி?

பட மூலாதாரம்,AFP

படக்குறிப்பு,

மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் உள்ள இந்த பேனரில், `ரஷ்யா வாக்னர், நாங்கள் ரஷ்யாவை நேசிக்கிறோம், வாக்னரை நேசிக்கிறோம்` என எழுதப்பட்டுள்ளது.

இன்னும் ஆழமான நடவடிக்கைகள்

அடுத்த பயணத்தில், கடந்த ஆண்டு நைஜரில் ஆட்சியைக் கைப்பற்றிய ராணுவ வீரர்களில் ஒருவரான ஜெனரல் சாலிஃபோ மோடியையும் அவர்கள் சந்தித்தனர்.

ப்ரிகோஜினின் மறைவு அவரது வணிக ஒப்பந்தங்களின் முடிவைக் குறிக்கவில்லை என்று, வாக்னரின் கூட்டாளிகளுக்கு இருவரும் உறுதியளித்தனர் என்பதை பல்வேறு சந்திப்புகள் நிரூபிக்கின்றன.

புர்கினா ஃபாசோவின் தலைவர் இப்ராஹிம் ட்ரேரே உடனான சந்திப்பு பற்றிய அறிக்கைகள், "விமானிகள் உட்பட அனைத்து மட்டங்களிலும் ராணுவ பயிற்சிக்கான" ஒத்துழைப்பு தொடரும் என்பதை உறுதிப்படுத்தியது.

சுருக்கமாக, ப்ரிகோஜினின் மரணம் ரஷ்யாவுடனான ராணுவ ஆட்சிக்குழுவின் உறவின் முடிவைக் குறிக்கவில்லை. சில வழிகளில், அது இன்னும் ஆழமாகியுள்ளது.

வாக்னருடன் நெருங்கிய தொடர்பு கொண்ட மூன்று மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான மாலி, நைஜர் மற்றும் புர்கினா ஃபாசோ, அனைத்தும் சமீபத்திய ஆண்டுகளில் ராணுவ ஆட்சிக்குள் சென்றன. பின்னர் அவர்கள் பிராந்திய அமைப்பான எக்கோவாஸ் (Ecowas) எனப்படும் மேற்காப்பிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகத்திலிருந்து விலகுவதாகவும் தங்களுக்கென சொந்தமாக "சஹேல் நாடுகளின் கூட்டணியை" உருவாக்குவதாகவும் அறிவித்தன.

கூலிப்படையினருடன் மிகவும் பின்னிப்பிணைந்த மாலிக்கு, முன்னதாக, பிரெஞ்சு ராணுவத்தின் கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கையுடன் மினுஸ்மா எனப்படும் ஐ.நா. திட்டத்தின் வடிவத்தில் பாதுகாப்பு உதவி வந்தது.

ஆனால் முன்னாள் காலனித்துவ சக்தியான பிரான்ஸ் மீது மாலி ஆட்சியாளர்களுக்கு விருப்பம் இல்லை. எனவே, ரஷ்ய ஆதரவுடன் தங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை மாற்ற வாக்னர் குழு முன்வந்தபோது, அந்த திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

’ஆம்பர் அட்வைசர்ஸ்’-க்காக பணிபுரியும் ஆப்பிரிக்க அரசியல் குறித்த ஆய்வாளர் எட்விஜ் சோர்கோ-டெபக்னே கூறுகையில், "பிரெஞ்சுக்காரர்கள் வரவேற்கப்படுவதற்குப் பதிலாக பொறுத்துக் கொள்ளப்பட்டனர்” என்றார்.

"சஹேலில் பயங்கரவாத நெருக்கடிக்கு உதவுவதற்கான பிரெஞ்சு திட்டம், குறிப்பிட்ட காலக்கெடுவைக் கொண்டது. எனவே, நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வழியைக் கண்டுபிடிக்காமல் பிரெஞ்சுக்காரர்கள் நீண்ட காலம், அதாவது 10 ஆண்டுகளுக்கும் மேலாக தங்கியிருப்பது பயன்படவில்லை" என அவர் தெரிவித்தார்.

 
‘வாக்னர்`: ரஷ்ய கூலிப்படை ஆப்பிரிக்காவில் வேறு பெயரில் செயல்படுவது எப்படி?

பட மூலாதாரம்,TELEGRAM

படக்குறிப்பு,

எவ்ஜெனி ப்ரிகோஜின் மற்றும் டிமிட்ரி உட்கின் ஆகியோரின் நினைவாக இந்த மலர்கள் CAR-ல் உள்ள ரஷ்ய கூலிப்படையினரின் நினைவுச்சின்னத்தில் வைக்கப்பட்டன.

மனித உரிமை மீறல்கள்

மாலியில் நடைமுறைக்கு அப்பால், ஏக்கமும் இருந்தது. "இந்த நாடுகளில், ரஷ்யா ஒரு புதிய கூட்டாளி அல்ல. முன்பு 1970 மற்றும் 1980களில் இங்கு இருந்திருக்கிறது" என்கிறார் அவர்.

"இது பெரும்பாலும் ரஷ்யாவுடனான உறவுடன் தொடர்புடையது” என எட்விஜ் சோர்கோ கூறுகிறார்.

ஆனால், இந்த நாடுகளை இயக்கும் ராணுவ ஆட்சிக்குழுக்களுக்கு, ரஷ்யாவின் ராணுவ பரவல் வெளிப்படையான நன்மைகள் இருக்கின்றன.

"ஆரம்பத்தில், இந்த ஆட்சியாளர்கள் இடைநிலைத் தலைவர்களாக இருந்தனர். அவர்கள் தேர்தல்களை ஒழுங்கமைத்து ஜனநாயக நடைமுறைக்கு திரும்பக் கொண்டு வர வேண்டும்" என்கிறார் அவர்.

"ஆனால், இப்போது ரஷ்யக் கூலிப்படைகள் கொண்டு வரப்பட்டு, அவர்கள் விரும்பும் வரை தங்குவதற்கு அனுமதிக்கின்றனர்."

பிரெஞ்சுப் படைகளை வெளியேறுமாறு மாலி ராணுவ ஆட்சிக் குழு உத்தரவிட்டது. இப்போது அதன் உள்நாட்டுப் பாதுகாப்புக்காக வாக்னரைச் சார்ந்துள்ளது. இது சாதாரண மாலியர்கள் மீது உடனடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

"ரஷ்யா மேம்பட்ட திறன்கள் மற்றும் வலுவான தாக்கும் திறன் கொண்ட ஹெலிகாப்டர்களுடன் கூடிய அதிரடிப் படையை வழங்கியது" என்கிறார் டாக்டர் வாட்லிங்.

"அவர்கள் பாரம்பரிய சோவியத் முறைகளைப் பயன்படுத்துகின்றனர். போராளிகளையும், போராளிகளுடன் தொடர்புடைய பொதுமக்களையும் தூக்கிலிடப்படுவதை நீங்கள் காணலாம்" என்கிறார் அவர்.

ஆப்பிரிக்க கண்டத்திலும், யுக்ரேன் மற்றும் சிரியாவிலும் வாக்னர் படைகள் மனித உரிமை மீறல்களை நடத்தியதாக பல கூற்றுகள் உள்ளன.

மிகவும் நன்கு ஆவணப்படுத்தப்பட்ட சம்பவங்களில் ஒன்று, மத்திய மாலி நகரமான மௌராவில் நடந்தது. ஐ.நா அறிக்கையின்படி, குறைந்தது 500 பேர் மாலி துருப்புக்களால் கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது. "தெரியாத மொழி" பேசிய "ஆயுதமேந்திய வெள்ளையர்களால்" இவை நிகழ்த்தப்பட்டதாக, நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்”.

இதற்கு சுயாதீன சரிபார்ப்பு சாத்தியமில்லை என்றாலும், மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறியப்படாத தாக்குதல்காரர்களை ரஷ்ய கூலிப்படையினர் என்று அடையாளம் கண்டுள்ளது.

 
‘வாக்னர்`: ரஷ்ய கூலிப்படை ஆப்பிரிக்காவில் வேறு பெயரில் செயல்படுவது எப்படி?

பட மூலாதாரம்,TELEGRAM

படக்குறிப்பு,

நூறு ரஷ்ய ராணுவ வல்லுநர்கள் கடந்த மாதம் உபகரணங்கள் மற்றும் ஆயுதங்களுடன் புர்கினா ஃபாசோவிற்கு வந்தனர், மேலும் பலர் விரைவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

வளங்களின் மூலம் வருவாய்

மாலி, பல ஆப்பிரிக்க நாடுகளைப் போலவே, மரம் மற்றும் தங்கம் முதல் யுரேனியம் மற்றும் லித்தியம் வரையிலான இயற்கை வளங்கள் நிறைந்தது. சில மதிப்புமிக்கவை. மற்றவை மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்தவை.

டாக்டர் வாட்லிங்கின் கூற்றுப்படி, வாக்னர் கூலிப்படை நன்கு கட்டமைக்கப்பட்ட பாரம்பரியத்தில் இயங்குகிறது: "ஒரு நிலையான ரஷ்ய செயல் முறை உள்ளது. செயல்பாட்டுக்கான செலவுகளை வணிக நடவடிக்கைகள் மூலம் ஈடு செய்வது. ஆப்பிரிக்காவில், அவை சுரங்கங்களால் ஈடுசெய்யப்படுகின்றன” என்றார்.

வாக்னர் குழு செயல்படும் ஒவ்வொரு நாட்டிலும், மதிப்புமிக்க இயற்கை வளங்களைப் பயன்படுத்தி, செலவுகளை மட்டும் ஈடுசெய்யாமல், கணிசமான வருவாயையும் ஈட்டுவதாக தெரிகிறது. பிளட் கோல்ட் ரிப்போர்ட்டின் படி, (Blood Gold Report) ரஷ்யா கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆப்பிரிக்காவில் இருந்து 2.5 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள தங்கத்தை பிரித்தெடுத்துள்ளது, இது யுக்ரேனில் நடந்த போருக்கு நிதியளித்திருக்கலாம்.

இந்த மாதம், முன்பு வாக்னர் கூலிப்படையினராக இருந்த ரஷ்ய போராளிகள், புர்கினா ஃபாசோவின் எல்லைக்கு அருகில் உள்ள மாலியின் இன்டஹாகா தங்கச் சுரங்கத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றினர். வடக்கு மாலியின் மிகப்பெரிய சுரங்கம், இப்பகுதியில் செயல்படும் பல்வேறு ஆயுதக் குழுக்களால் பல ஆண்டுகளாக சர்ச்சைக்குள்ளானது.

ஆனால், புவிசார் அரசியல் முக்கியத்துவத்துடன் வேறு ஒன்று உள்ளது.

"முக்கியமான கனிமங்கள் மற்றும் வளங்களுக்கான அணுகல் மீதான மேற்கத்திய கட்டுப்பாட்டை யுக்தி ரீதியாக இடமாற்றம் செய்ய ரஷ்யர்கள் முயற்சிப்பதை நாங்கள் இப்போது கவனித்து வருகிறோம்" என்று டாக்டர் வாட்லிங் கூறுகிறார்.

மாலியில், இயற்கை வளங்கள் மீது ராணுவ ஆட்சிக்கு அதிகக் கட்டுப்பாட்டை வழங்குவதற்காக சுரங்கக் குறியீடு சமீபத்தில் மீண்டும் எழுதப்பட்டது. அந்த செயல்முறை ஏற்கனவே ஒரு ஆஸ்திரேலிய லித்தியம் சுரங்கம், குறியீட்டை செயல்படுத்துவதில் நிச்சயமற்ற தன்மையைக் காரணம் காட்டி, அதன் பங்குகளின் வர்த்தகத்தை இடைநிறுத்தியுள்ளது.

லித்தியம் மற்றும் தங்கச் சுரங்கங்கள் முக்கியமானவை என்றாலும், டாக்டர் வாட்லிங்கின் கூற்றுப்படி, இன்னும் பெரிய மூலோபாய தலைவலி இருக்கலாம் என்கிறார் அவர். "நைஜரில் ரஷ்யர்கள் இதேபோன்ற சலுகைகளைப் பெற முயற்சிக்கின்றனர். இது யுரேனியம் சுரங்கங்களை பிரான்ஸ் பயன்படுத்துவதை தடுக்கும்" என்கிறார் அவர்.

 
‘வாக்னர்`: ரஷ்ய கூலிப்படை ஆப்பிரிக்காவில் வேறு பெயரில் செயல்படுவது எப்படி?

பட மூலாதாரம்,AFP

படக்குறிப்பு,

மாலி நாட்டில் பலர் தங்க சுரங்கம் மூலம் தங்கள் வாழ்க்கையை நடத்துகிறார்கள்.

"தீவிர அச்சுறுத்தல்"

மாலியில் செய்யப்பட்டதை நைஜரில் அடைய முயற்சி செய்வதில் கவனம் செலுத்திய ரஷ்ய குறிப்புகளை இந்த அறிக்கை விவரிக்கிறது. மேற்கு ஆப்பிரிக்காவின் யுரேனிய சுரங்கங்களின் மீதான கட்டுப்பாட்டை ரஷ்யா பெற முடிந்தால், ஐரோப்பா மீண்டும் ரஷ்ய "எனர்ஜி பிளாக்மெயில்" என்று அழைக்கப்படுவதை அம்பலப்படுத்தலாம்" என்றார்.

உலகின் மற்ற எந்த நாட்டையும் விட பிரான்ஸ் அணுசக்தியை அதிகம் சார்ந்துள்ளது, 56 உலைகள் நாட்டின் ஆற்றலில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கை உற்பத்தி செய்கின்றன. அதன் ஐந்தில் ஒரு பங்கு யுரேனியம் நைஜரில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. நைஜர் போன்ற நாடுகளை முன்னாள் காலனித்துவ சக்தி சுரண்டுகிறது என்ற கருத்துகளுடன், வர்த்தக விதிமுறைகள் குறித்து முன்பு புகார்கள் வந்துள்ளன.

"மேற்கத்திய நாடுகள் தங்கள் அணுகுமுறை அடிப்படையில் காலனித்துவமாக இருக்கின்றன என்ற கருத்தை ரஷ்யா முன்வைக்கிறது" என்று டாக்டர் வாட்லிங் கூறுகிறார். "இது மிகவும் முரண்பாடானது, ஏனெனில் இந்த ஆட்சிகளைத் தனிமைப்படுத்துவது, அவர்களின் இயற்கை வளங்களைப் பிரித்தெடுப்பது போன்ற ரஷ்ய அணுகுமுறை தான் மிகவும் காலனித்துவமானது" என்றார்.

உண்மையில், "எக்ஸ்பெடிஷனரி கார்ப்ஸ்" என்பது ரஷ்ய வெளியுறவுக் கொள்கைக்கான தீவிரமான புறப்பாட்டைக் காட்டிலும் "வாக்னர் 2.0" என்பது போலவே தோன்றுகிறது. ப்ரிகோஜின் ஆப்பிரிக்க கண்டத்தில் ஆழமான அரசியல், பொருளாதார மற்றும் ராணுவ உறவுகளை உருவாக்கினார். எனவே, இந்த சிக்கலான வலையை அகற்றுவது கடினமாக இருக்கும்.

"எக்ஸ்பெடிஷனரி கார்ப்ஸ்" அதே நாடுகளில், அதே கருவிகளுடன் அதே இறுதி இலக்குடன் செயல்படுகிறது.

டாக்டர் வாட்லிங்கின் கூற்றுப்படி, அடிப்படை மாற்றம் "ரஷ்யா தனது கொள்கையைப் பின்பற்றும் வெளிப்படையான தன்மையில்" உள்ளது. ப்ரிகோஜினின் வாக்னர் குழுமம் எப்போதும் ரஷ்யாவிற்கு செயல்பாடுகள் மற்றும் வெளிநாட்டில் செல்வாக்கு ஆகியவற்றில் நம்பத்தகுந்த உதவியை வழங்கியது.

யுக்ரேனின் முழு அளவிலான ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து, மேற்கத்திய பாதுகாப்பு அமைப்புகளில் உள்ள பலர் ரஷ்யாவின் முகமூடி நழுவிவிட்டதாகக் கூறுகிறார்கள்.

"அவர்கள் செய்ய விரும்புவது சர்வதேச அளவில் நமது நெருக்கடிகளை அதிகப்படுத்துவதாகும். அவர்கள் வெவ்வேறு இடங்களில் தீயை மூட்ட முயற்சிக்கின்றனர், மேலும் ஏற்கனவே உள்ளவற்றை தீவிரப்படுத்தி பாதுகாப்பில்லாத உலகத்தை உருவாக்குகிறார்கள்," என்கிறார் டாக்டர் வாட்லிங்.

"இறுதியில், நாம் தற்போது எதிர்கொள்ளும் உலகளாவிய போட்டியில் இது நம்மை பலவீனப்படுத்துகிறது. அதனால் தாக்கம் உடனடியாக உணரப்படாது. ஆனால் காலப்போக்கில், இது ஒரு தீவிர அச்சுறுத்தலாக மாறும்" என்றார் வாட்லிங்.

https://www.bbc.com/tamil/articles/crg9771dg6ko

வடகொரிய அதிபருக்கு ரஷியாவில் தயாரிக்கப்பட்ட சொகுசு காரை பரிசளித்த அதிபர் புதின்

1 month 4 weeks ago
kim.jpg

ரஷியாவும், வடகொரியாவும் நட்பு நாடுகளாக திகழ்கின்றன. வடகொரிய அதிபர் கிம் ஜங் உன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரஷியா சென்றார். இந்த பயணத்தின்போது அவர் ரஷிய அதிபர் புதினை சந்தித்தார். இந்த சந்திப்பில் ரஷிய அதிபர் புதின், தான் பயன்படுத்தும் ரஷிய தயாரிப்பு சொகுசு காரான அன்ரூஸ் செனட் காரை வடகொரிய அதிபருக்கு காட்டினார். அந்த காரில் வடகொரிய அதிபர் கிம், பின் இருக்கையில் இருந்து பயணம் செய்தார்.

இந்நிலையில், வடகொரிய அதிபருக்கு ரஷிய அதிபர் புதின் கடந்த ஞாயிற்றுக்கிழமை புதிய கார் ஒன்றை பரிசளித்துள்ளார். ரஷியாவில் தயாரிக்கப்பட்ட அந்த கார் வடகொரிய அதிபரின் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக பரிசளிக்கப்பட்டுள்ளது. பரிசளிக்கப்பட்ட கார் எந்த வகையானது? எவ்வாறு வடகொரியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது? என்ற விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

அதேவேளை, கார் பரிசளித்த ரஷிய அதிபருக்கு வடகொரிய அதிபரின் தங்கை கிம் யொ ஜாங் நன்றி தெரிவித்தார்.

https://thinakkural.lk/article/292500

கழுதைகளை சீனா வாங்குவது ஏன்?

1 month 4 weeks ago
ஆப்ரிக்கா, பாகிஸ்தானில் இருந்து லட்சக்கணக்கான கழுதைகளை சீனா வாங்குவது ஏன்?
வேலை செய்யும் கழுதைகள் குவாரியில் வண்டியை இழுக்கின்றன

பட மூலாதாரம்,THE DONKEY SANCTUARY

படக்குறிப்பு,

வேலை செய்யும் கழுதைகள் குவாரியில் வண்டியை இழுக்கின்றன

கட்டுரை தகவல்
  • எழுதியவர், விக்டோரியா கில் மற்றும் கேட் ஸ்டீபன்ஸ்
  • பதவி, அறிவியல் குழு, பிபிசி செய்திகள்
  • 18 பிப்ரவரி 2024

இளமையை நீட்டிக்கும், கருத்தரிக்க உதவும், இரத்தத்தை வலுப்படுத்தும், தூக்கம் வர உதவும் என பல நன்மைகள் இருபதாக நம்பப்படும் ஒரு சீன பாரம்பரிய மருந்து தயாரிக்க கழுதைத் தோலில் உள்ள ஒரு ரசாயனம் தேவைப்படுகிறது. இதற்காகச் சீனாவுக்கு ஏறுமதி செய்ய, ஆப்பிரிக்கா முதல் பாகிஸ்தான் வரை பல நாடுகளில் கழுதைகள் தோலுக்காகக் கொல்லப்படுகின்றன. இது ஒரு பெரும் சிக்கலாக உருவெடுத்துள்ளது.

தண்ணீர் விற்று தனது வாழ்க்கையை நடத்துபவர் ஸ்டீவ். அதறகாக அவர் தனது கழுதைகளையே முழுமையாக நம்பியிருந்தார். 20 தண்ணீர் கேன்களுடன் அவரது வண்டியை அவைதான் வியாபாரத்துக்கு இழுத்துச் செல்லும்.

இந்நிலையில், ஸ்டீவின் கழுதைகள் தோலுக்காக திருடப்பட்டபோது, அவர் மனமுடைந்துபோனார். அவரால் வேலை செய்ய முடியவில்லை.

அந்த நாளும் சாதாரணமாகத்தான் தொடங்கியது. காலையில், அவர் நைரோபியின் புறநகரில் உள்ள தனது வீட்டை விட்டு வெளியேறி தனது கழுதைகளை அழைத்து வர வயலுக்குச் சென்றார்.

"ஆனால் என் கழுதைகளைக் காணவில்லை. இரவு பகலாக அவற்றைத் தேடினேன். மறுநாளும் தேடினேன்," என்று அவர் நினைவு கூர்ந்தார்.

மூன்று நாட்களுக்குப் பிறகு, அவற்றின் எலும்புக்கூடுகளைக் கண்டுபிடித்ததாக ஒரு நண்பர் அவரிடம் சொன்னார்.

"அவை கொல்லப்பட்டிருந்தன. அவற்றின் தோல் எடுக்கப்பட்டிருந்தது," என்றார்.

ஆப்பிரிக்காவிலும், மற்றும் கழுதைகள் அதிகம் உள்ள உலகின் பிற பகுதிகளிலும் இப்படியான கழுதைத் திருட்டுகள் அதிகரித்து வருகின்றன. கழுதைத் தோலைக் கொண்டு நடைபெறும் ஒரு உலகலாவிய சர்ச்சைக்குரிய வர்த்தகத்தில், ஸ்டீவ் மற்றும் அவரது கழுதைகளும் பாதிக்கப்பட்டனர் என்றே சொல்ல வேண்டும்.

காய வைக்கப்பட்டுள்ள கழுதைத் தோல்கள்

பட மூலாதாரம்,THE DONKEY SANCTUARY

படக்குறிப்பு,

ஆப்பிரிக்கா முழுவதும் கழுதை தோல்களை அறுப்பது மற்றும் ஏற்றுமதி செய்வது தடை செய்யப்படலாம்

ஒவ்வொரு ஆண்டும் கொல்லப்படும் 56 லட்சம் கழுதைகள்

இந்த வர்த்தகம், கென்யாவில் உள்ள அந்த வயலில் இருந்து ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் துவங்கப்பட்டது. சீனாவில், கழுதை தோலில் உள்ள ஜெலட்டின் மூலம் தயாரிக்கப்படும் பாரம்பரிய மருத்துவத்திற்கு அதிக தேவை உள்ளது. இது எஜியாவோ (Ejiao) என்று அழைக்கப்படுகிறது.

இது ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மற்றும் இளமையை நீட்டிக்கும் பண்புகளைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. ஜெலட்டின் பிரித்தெடுக்க கழுதை தோல்கள் வேகவைக்கப்படுகின்றன. பிறகு தூள், மாத்திரைகள் அல்லது திரவமாக மாற்றப்படுகின்றன. சில சமயங்களில் உணவில் சேர்க்கப்படுகிறது.

இந்த வர்த்தகத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்பவர்கள், ஸ்டீவ் போன்றவர்கள் - மற்றும் அவர்கள் சார்ந்திருக்கும் கழுதைகள் - எஜியாவோவின் பாரம்பரிய மூலப்பொருளுக்கான நீடித்த தேவையால் தாம் பாதிக்கப்பட்டதாகக் கூறுகிறார்கள்.

ஒரு புதிய அறிக்கையில், 2017 முதல் இந்த வர்த்தகத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்து வரும் கழுதை சரணாலயம், உலகளவில் குறைந்தபட்சம் 59 லட்சம் கழுதைகள் ஒவ்வொரு ஆண்டும் படுகொலை செய்யப்படுவதாக மதிப்பிடுகிறது. பிபிசியால் அந்த புள்ளிவிவரங்களை சுயாதீனமாக சரிபார்க்க முடியவில்லை என்றாலும், கழுதைகளின் தேவை அதிகரித்து வருவதாக தொண்டு நிறுவனம் கூறுகிறது.

எஜியாவோ தொழிற்துறைக்கு வழங்குவதற்காக எத்தனை கழுதைகள் கொல்லப்படுகின்றன என்ற துல்லியமாக தெரிந்துகொள்வது மிகவும் கடினம்.

எஜியாவோ

பட மூலாதாரம்,THE DONKEY SANCTUARY

படக்குறிப்பு,

எஜியாவோ என்பது உணவு, திரவம் அல்லது மாத்திரைகள் வடிவில் வரும் ஒரு பழங்கால தீர்வாகும்

உலகம் முழுதும் குறைந்து வரும் கழுதைகள்

உலகில் வாழும் 5.3 கோடி கழுதைகளில் மூன்றில் இரண்டு பங்கு ஆப்பிரிக்காவில் இருக்கின்றன. ஆனால் அந்நாட்டின் விதிகளில் சில சிக்கல்கள் உள்ளன.

கழுதை தோல்களை ஏற்றுமதி செய்வது சில நாடுகளில் சட்டப்பூர்வமாகவும், சில நாடுகளில் சட்டவிரோதமாகவும் உள்ளது. ஆனால் அதிக தேவை மற்றும் தோலுக்கான அதிக விலை கழுதைகளின் திருட்டை தூண்டுகிறது. மேலும் வர்த்தகம் சட்டப்பூர்வமாக இருக்கும் இடங்களுக்குச் செல்ல விலங்குகள் சர்வதேச எல்லைகள் வழியாக கடத்தப்படுவதை கண்டுபிடித்துள்ளதாக கழுதை சரணாலயம் கூறுகிறது.

ஆனால், கழுதைகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால், அவை கொல்லப்படுவதைத் தடை செய்ய ஒவ்வொரு ஆப்பிரிக்க மாநில அரசாங்கமும், பிரேசில் அரசாங்கமும், தயாராக இருக்கின்றன. இதனால் விரைவில் இவ்விவகாரத்தில் ஒரு திருப்புமுனை ஏற்படலாம்.

நைரோபியில் உள்ள கழுதை சரணாலயத்தில் பணிபுரியும் சாலமன் ஒன்யாங்கோ, “2016 மற்றும் 2019-க்கு இடையில், கென்யாவின் கழுதைகளில் பாதி (தோல் வர்த்தகத்திற்காக ) படுகொலை செய்யப்பட்டதாக நாங்கள் மதிப்பிடுகிறோம்," என்றார்.

மக்கள், பொருட்கள், தண்ணீர் மற்றும் உணவை சுமந்து செல்லும் அதே விலங்குகள் - ஏழை, கிராமப்புற சமூகங்களின் முதுகெலும்பாக உள்ளன. எனவே தோல் வர்த்தகத்தின் அளவு மற்றும் விரைவான வளர்ச்சி பிரச்சாரகர்களையும் நிபுணர்களையும் கவலையடையச் செய்துள்ளது. மேலும், கென்யாவில் பலரை தோல் வர்த்தக எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்க தூண்டியுள்ளது.

பிப்ரவரி 17 மற்றும் 18 தேதிகளில் ஆப்பிரிக்காவின் அனைத்து மாநிலத் தலைவர்களும் சந்தித்த ஆப்பிரிக்க யூனியன் உச்சிமாநாட்டில் ஆப்பிரிக்கா முழுவதும் கழுதைத் தோல் வர்த்தகத்துக்கான காலவரையற்ற தடையை கொண்டுவரும் முன்மொழிவு நிகழ்ச்சி நிரலில் இருந்தது.

கழுதைகள்

பட மூலாதாரம்,FAITH BURDEN

படக்குறிப்பு,

ஒரு கழுதை சில குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்திற்கும் வறுமைக்கும் உள்ள வேறுபாட்டைக் குறிக்கும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன

கழுதை இறைச்சிக் கூடங்கள்

ஆப்பிரிக்கா முழுவதும் தடை செய்யப்படுவதைப் பற்றி ஸ்டீவ் பேசுகையில், இது விலங்குகளைப் பாதுகாக்க உதவும் என நம்புகிறார், "இல்லை என்றால், அடுத்த தலைமுறைக்கு கழுதைகள் இருக்காது," என்கிறார்.

ஆனால் ஆப்பிரிக்கா மற்றும் பிரேசிலில் உள்ள தடைகள் வர்த்தகத்தை வேறு இடத்திற்கு மாற்றுமா?

எஜியாவோ தயாரிப்பாளர்கள் சீனாவில் இருந்து பெறப்படும் கழுதைகளின் தோல்களைப் பயன்படுத்தினர். ஆனால், அங்குள்ள வேளாண்மை மற்றும் கிராமப்புற விவகார அமைச்சகத்தின் கூற்றுப்படி, நாட்டில் கழுதைகளின் எண்ணிக்கை 1990 இல் 1.1 கோடியில் இருந்து 2021-இல் 20 லட்சத்திற்கும் கீழே குறைந்தது. அதே நேரத்தில், எஜியாவோ பிரபலமானது.

சீன நிறுவனங்கள் தங்கள் தோல் பொருட்களை வெளிநாடுகளில் தேடத் தொடங்கின. ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் கழுதை இறைச்சிக் கூடங்கள் நிறுவப்பட்டன.

ஆப்பிரிக்காவில், இது வர்த்தகத்தில் கடுமையான இழுபறிக்கு வழிவகுத்தது.

கழுதை

பட மூலாதாரம்,THE DONKEY SANCTUARY

படக்குறிப்பு,

ஒரு கழுதை என்பது ஏழை, கிராமப்புற சமூகங்களில் உள்ள பலருக்கு வாழ்வாதாரத்திற்கும் ஏழ்மைக்கும் உள்ள வித்தியாசத்தைக் குறிக்கும்

பாகிஸ்தானுக்கு மாறிய கழுதை வர்த்தகம்

எத்தியோப்பியாவில், கழுதை இறைச்சி சாப்பிடுவது தடைசெய்யப்பட்ட நிலையில், பொதுமக்களின் எதிர்ப்புகள் மற்றும் சமூக ஊடகங்களின் கூக்குரலுக்கு பதிலளிக்கும் விதமாக, நாட்டின் இரண்டு கழுதை இறைச்சிக் கூடங்களில் ஒன்று 2017-இல் மூடப்பட்டது.

தான்சானியா மற்றும் ஐவரி கோஸ்ட் உள்ளிட்ட நாடுகள் 2022-ஆம் ஆண்டில் கழுதை தோல்களை அறுப்பதற்கும் ஏற்றுமதி செய்வதற்கும் தடை விதித்தன, அதனால், இந்த வர்த்தகம் பாகிஸ்தானுக்கு மாறியது. கடந்த ஆண்டின் பிற்பகுதியில், 'சில சிறந்த கழுதை இனங்களை' வளர்ப்பதற்காக அந்நாடு 'அதிகாரப்பூர்வ கழுதை வளர்ப்பு பண்ணை' ஆகிவிட்டதாக என அங்குள்ள ஊடகங்கள் விமர்சித்தன.

சிட்னி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சீனா-ஆப்பிரிக்கா உறவுகள் அறிஞர் பேராசிரியர் லாரன் ஜான்ஸ்டன் கருத்துப்படி, சீனாவின் எஜியாவோ சந்தையின் மதிப்பு 2013-இல் சுமார் 320 கோடி டாலராக இருந்தது, 2020இல் 780 கோடி டாலராக உயர்ந்துள்ளது.

இது பொது சுகாதார அதிகாரிகள், விலங்கு நல பிரசாரகர்கள் மற்றும் சர்வதேச குற்ற புலனாய்வாளர்களுக்கு கூட கவலையாக உள்ளது. மற்ற சட்டவிரோத வனவிலங்கு பொருட்களை கடத்துவதற்கு கழுதை தோல்கள் ஏற்றுமதி செய்யப்படுவதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

கழுதைகள்

பட மூலாதாரம்,THE DONKEY SANCTUARY

படக்குறிப்பு,

தோல் வர்த்தகத்திற்கு எதிரான பிரச்சாரகர்கள் இது மனிதாபிமானமற்றது மற்றும் நீடித்து நிலைக்க முடியாதது என்று கூறுகிறார்கள்

'எங்கள் கழுதைகள் படுகொலைக்காக அல்ல'

"எனது சமூகத்தில் உள்ள பெரும்பாலான மக்கள் சிறிய அளவிலான விவசாயிகள் மற்றும் அவர்கள் தங்கள் பொருட்களை விற்க கழுதைகளைப் பயன்படுத்துகிறார்கள்," என்கிறார் ஸ்டீவ். மருத்துவம் படிக்க பள்ளிக் கட்டணம் செலுத்த தண்ணீர் விற்று பணத்தை சேமித்து வந்தார், ஸ்டீவ்.

கழுதை சரணாலயத்தில் கால்நடை மருத்துவராக இருக்கும் ஃபெயித் பர்டன், உலகின் பல பகுதிகளில் உள்ள கிராமப்புற வாழ்க்கைக்கு விலங்குகள் 'முற்றிலும் அவசியமானவை' என்று கூறுகிறார். இவை வலிமையான, எந்த சூழ்நிலையையும் சமாளிக்கக்கூடிய விலங்குகள். "ஒரு கழுதை 24 மணிநேரம் தண்ணீர் குடிக்காமல் நடக்கும். எந்த பிரச்சனையும் இல்லாமல் மிக விரைவாக நீரேற்றம் செய்ய முடியும்." என்றார் அவர்.

கழுதைகள் எளிதில் அல்லது விரைவாக இனப்பெருக்கம் செய்யாது. எனவே வர்த்தகம் குறைக்கப்படாவிட்டால், கழுதைகளின் எண்ணிக்கை தொடர்ந்து சுருங்கி, ஏழை மக்களின் வாழ்வாதாரத்தையும் துணையையும் இழக்க நேரிடும் என்று பிரச்சாரகர்கள் அஞ்சுகின்றனர்.

"நாங்கள் எங்கள் கழுதைகளை படுகொலைக்காக வளர்க்கவில்லை," என்கிறார் ஒன்யாங்கோ.

பேராசிரியர் ஜான்ஸ்டன் கூறுகையில், “கழுதைகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஏழைகளைச் சுமந்துள்ளன. அவை குழந்தைகளை, பெண்களை சுமக்கின்றன," என்றார் அவர்.

கழுதை

பட மூலாதாரம்,THE BROOKE

படக்குறிப்பு,

Some worry that, if the trade is not curbed, the next generation will not have access to a donkey

பெண்களும் சிறுமிகளும், ஒரு கழுதை திருடப்படும்போதுஏற்படும் இழப்பின் சுமைகளைத் தாங்குவதாக அவர் கூறுகிறார்.

"கழுதை போய்விட்டால், பெண்கள் மீண்டும் கழுதையாக மாறுகிறார்கள்," என்று அவர் விளக்குகிறார். அதில் ஒரு கசப்பான முரண் உள்ளது, ஏனெனில் எஜியாவோ, முதன்மையாக பணக்கார சீனப் பெண்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இது ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான ஒரு தீர்வாகும், இது இரத்தத்தை வலுப்படுத்துவதில் இருந்து தூக்கத்திற்கு உதவுவதற்கு, கருவுறுதலை அதிகரிப்பதற்கு என பல நன்மைகள் இருப்பதாக நம்பப்படுகிறது. ஆனால், 2011-ஆம் ஆண்டு சீனத் தொலைக்காட்சி நிகழ்ச்சியான 'எம்பிரஸ் இன் தி பேலஸ்' - ஒரு ஏகாதிபத்திய நீதிமன்றத்தின் கற்பனைக் கதை - இது மருந்தின் மதிப்பை உயர்த்தியது.

"நிகழ்ச்சியில் உள்ள பெண்கள் அழகாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க ஒவ்வொரு நாளும் எஜியாவோ-ஐ உட்கொண்டனர். அது உயரடுக்கு பெண்மையின் தயாரிப்பாக மாறியது. முரண்பாடாக, அது இப்போது பல ஆப்பிரிக்க பெண்களின் வாழ்க்கையை அழித்து வருகிறது," என்றார் பேராசிரியர்.

24 வயதான ஸ்டீவ், தனது கழுதைகளை இழந்தபோது, தனது வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தின் மீதான கட்டுப்பாட்டை இழந்துவிட்டதாகக் கவலைப்பட்டார். "நான் இப்போது வழியின்றித் தவிக்கிறேன்," என்கிறார் அவர்.

கழுதைகள் சரணாலயத்தைச் சேர்ந்த ஜன்னெக் மெர்க்ஸ், கழுதைகளைப் பாதுகாக்க எத்தனை நாடுகள் சட்டம் இயற்றுகிறதோ, கழுதைத் தோல் வர்த்தகம் அவ்வளவு கடினமாக மாறும் என்று அவர் கூறுகிறார்.

கழுதை சரணாலயத்தில் கழுதை ஒன்றுடன் ஜன்னெக் மெர்க்ஸ்

பட மூலாதாரம்,VICTORIA GILL/BBC

படக்குறிப்பு,

டெவோனில் உள்ள சரணாலயத்தில் கழுதை ஒன்றுடன் ஜன்னெக் மெர்க்ஸ்

"நாங்கள் பார்க்க விரும்புவது என்னவென்றால், எஜியாவோ நிறுவனங்கள் கழுதை தோல்களை இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டு நிலையான மாற்று வழிகளில் முதலீடு செய்ய வேண்டும் - செல்லுலார் விவசாயம் (ஆய்வகங்களில் உற்பத்தி செய்தல்) போன்றவற்றில் ஏற்கனவே பாதுகாப்பான மற்றும் பயனுள்ள வழிகள் உள்ளன," என்கிறார் அவர்.

கழுதை சரணாலயத்தின் துணை தலைமை நிர்வாகியான ஃபெயித் பர்டன், கழுதை தோல் வர்த்தகம் 'நிலையற்றது மற்றும் மனிதாபிமானமற்றது' என்று கூறுகிறார்.

"அவை திருடப்படுகின்றன. நூற்றுக்கணக்கான மைல்கள் நடக்கக்கூடும், நெரிசலான இடத்தில் வைக்கப்பட்டு பின்னர் மற்ற கழுதைகளின் பார்வையில் படுகொலை செய்யப்படுகின்றன. இதற்கு எதிராக நாம் பேச வேண்டும்," என்றார் அவர்.

ஸ்டீவ் தனது புதிய கழுதை ஜாய் லக்கியுடன்

பட மூலாதாரம்,BROOKE

படக்குறிப்பு,

ஸ்டீவ் இப்போது ஒரு புதிய கழுதையை வைத்திருக்கிறார், அது அவருடைய கனவுகளை அடைய உதவும் என்று அவர் நம்புகிறார்

ப்ரூக் இப்போது ஸ்டீவ்விற்கு ஒரு புதிய கழுதையைக் கொடுத்துள்ளார், அதற்கு அவர் ஜாய் லக்கி என்று பெயரிட்டார், ஏனெனில் அவர் அதை பெற்றதற்கு அதிர்ஷ்டமாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்கிறார்.

"என் கனவுகளை அடைய அவள் எனக்கு உதவுவாள் என்று எனக்குத் தெரியும். அவள் பாதுகாக்கப்பாக இறுப்பதை நான் உறுதி செய்வேன்,” என்கிறார் ஸ்டீவ்.

https://www.bbc.com/tamil/articles/cldqx7nw4qlo

ரஸ்யாவிலிருந்து உக்ரைனிற்கு தப்பிச்சென்ற விமானி ஸ்பெயினில் சடலமாக மீட்பு – உக்ரைன் புலனாய்வு பிரிவினர் தகவல்

1 month 4 weeks ago
ரஸ்யாவிலிருந்து உக்ரைனிற்கு தப்பிச்சென்ற விமானி ஸ்பெயினில் சடலமாக மீட்பு – உக்ரைன் புலனாய்வு பிரிவினர் தகவல் 10-13.jpg

கடந்தவருடம் இடம்பெற்ற இரகசிய நடவடிக்கையின் போது உக்ரைனிற்கு தப்பிவந்த ரஸ்ய விமானி ஸ்பெயினில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

உக்ரைனின் புலனாய்வு பிரிவினர் இதனை தெரிவித்துள்ளனர். தெரிவித்துள்ளனர்.

மாக்சிம் குஸ்மினோவ் என்ற விமானியே உயிரிழந்தநிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

தொடர்மாடியொன்றின் வாகனத்தரிப்பிடத்தில் இவரது உடல் மீட்கப்பட்டுள்ளதாக  உக்ரைனின் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.அலிகண்டோவில் உள்ள வில்லாஜோயோசா நகரில் இவரது உடல் மீட்கப்பட்டுள்ளதாகவும் அருகில் உள்ள பகுதியில்கார் ஒன்று எரியுண்ட நிலையில்மீட்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதலில் இது குற்றவாளிகும்பலின் நடவடிக்கை என ஸ்பெய்ன் பொலிஸார் கருதியுள்ளனர் எனினும் பின்னரே இது ரஸ்ய உக்ரைன் மோதல் தொடர்பான விவகாரம் என்பது தெரியவந்துள்ளது.

கடந்த வருடம் ஆகஸ்ட்மாதம் குஸ்மினோவ் இரண்டு தளங்களிற்கு இடையிலான விமானபறத்தலின் போது ரஸ்ய தரப்பிலிருந்து உக்ரைனிற்கு தப்பிவந்தார்.

ஹெலிக்கொப்டரில் எஸ்யு 27- எஸ்யு 30 போர்விமானங்களி;ற்கான உதிரிப்பாகங்களை கொண்டு செல்லும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இவர் தனது ஹெலிக்கொப்டர் மூலம் உக்ரைனின் கட்டுப்பாட்டு பகுதியில் தரையிறங்கினார்.

ஆறுமாத இரகசிய நடவடிக்கையின் பயனாக இவரை உக்ரைனின் பக்கம் வரச்செய்ததாக உக்ரைனின் புலனாய்வுபிரிவினர் தெரிவித்திருந்தனர்.

அதற்கு முன்னதாக அவரது குடும்பத்தினர் ரஸ்யாவிலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

குஜ்மினோவ் மரணம் உறுதி செய்யப்பட்டால் அதற்கு ரஸ்ய அரசாங்கமே காரணம் என்ற குற்றச்சாட்டுகள் வெளியாகலாம்.

கடந்தகாலங்களில்அதன் கொலையாளிகள் ஐரோப்பாவில் பல கொலைகளில் ஈடுபட்டுள்ளனர்.

 

https://akkinikkunchu.com/?p=269046

முன்னாள் மனைவியைக் கொன்ற நபருக்கு 45 ஆண்டுக்குப் பிறகு தண்டனை - எப்படி தெரியுமா?

2 months ago
முன்னாள் மனைவியை கொன்ற நபரை 45 ஆண்டுக்குப் பிறகு காட்டிக் கொடுத்த விந்தணு - எப்படி தெரியுமா?
பிரெண்டா பேஜ் மற்றும் அவரது கணவர்

பட மூலாதாரம்,NEWSLINE MEDIA

படக்குறிப்பு,

ஸ்காட்லாந்தைச் சேர்ந்த பிரெண்டா பேஜ், தன் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற ஒரு வருடத்தில் கொலை செய்யப்பட்டார்.

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ரெபேக்கா கர்ரான், கென் பேங்க்ஸ்
  • பதவி, பிபிசி ஸ்காட்லாந்து
  • 19 பிப்ரவரி 2024, 06:58 GMT
    புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

ஸ்காட்லாந்தில் தனது முன்னாள் மனைவியை கொன்று 45 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அவரை கைது செய்த துப்பறியும் நபர் ஒருவரின் வார்த்தைகளில் கூற வேண்டும் என்றால், கைது செய்யப்பட்ட நபர் தன்னைத் தானே புத்திசாலி என நினைத்துக்கொண்டிருந்துள்ளார்.

ஸ்காட்லாந்தின் வட-கிழக்கு மாநிலமான அபெர்டீனைச் சேர்ந்தவர் கிறிஸ்டோபர் ஹாரிசன். இவர், 32 வயதான தனது மனைவி பிரெண்டா பேஜிடம் இருந்து விவாகரத்து பெற்று ஒரு ஆண்டுக்கு பிறகு, 1978 ஆம் ஆண்டு தன் மனைவியை கொலை செய்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்தவர்களில் ஒருவரான ஜேம்ஸ் காலண்டர், பிரெண்டா பேஜின் கொலை குற்றவாளியை எப்படி கண்டுபிடித்தனர் என்பதை விளக்கினார்.

“அவர் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்துகொண்டதாக நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால், விசாரணையில், அவரையே அறியாமல், அவர் அதனை ஒப்புக்கொண்டார்,” என்றார் ஜேம்ஸ்.

பிரெண்டா பேஜ் இறந்து 45 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் கைது செய்யப்பட்டு, குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

விசாரணை அதிகாரி ஜேம்ஸ் காலண்டர்,
படக்குறிப்பு,

பிரெண்டா பேஜ் கொலை வழக்கை விசாரித்து வந்த அதிகாரி ஜேம்ஸ் காலண்டர், குற்றவாளி தன்னை ஒரு புத்திசாலி என நினைத்துக்கொண்டிருந்ததாகக் கூறினார்.

கொலை நடந்து 30 ஆண்டுகளுக்கு பின் மறு விசாரணை

இந்தக் கொலைக் குற்றத்தை மையமாகக் கொண்டு, பிபிசியின் ஆவணப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. தி கில்லிங் ஆஃப் டாக்டர் பிரெண்டா பேஜ் என்ற பெயரில் வெளியாகியுள்ள இந்த ஆவணப்படம், 2020இல் ஹாரிசன் கைது செய்யப்படும் காட்சிகளுடன் தொடங்குகிறது.

ஆவணப்படத்தை தயாரித்தது. 2020 இல் ஹாரிசன் கைது செய்யப்பட்ட காட்சிகளுடன் ஆவணப்படம் தொடங்குகிறது. ஆரம்பக்காட்சியில், ஹாரிசனை போலீஸ் தேடி வரும்போது, ‘அவர் இங்கே கொல்லப்படவில்லை,’ எனக் கூறுவது கேட்கிறது.

மரபியல் நிபுணரான டாக்டர் பிரெண்டா பேஜ், ஜூலை 14, 1978 அன்று தனது படுக்கையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

அவரை அவரது முன்னாள் கணவர் ஹாரிசன் கொலை செய்திருக்கக்கூடும் என முதலில் சந்தேகிக்கப்பட்டது. கொலை நடந்த சில மணி நேரங்களிலேயே அவரை போலீசாரும் கைது செய்தனர்.

ஆனால், அந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடந்தபோதும், அவர் தான் கொலை செய்தார் என்பதற்கான எந்த ஆதரமும் போலீசாருக்கு கிடைக்கவில்லை.

இந்தக் கொலைக்கான ஆதரங்களை, ஸ்காட்லாந்து போலீசாரும், ஊடகங்களும் தொடர்ந்து தேடி வந்தன. ஆனால், நீண்ட காலத்திற்கு கொலை தொடர்பாக எந்த ஆதரமும் கிடைக்கவில்லை.

அதன் பிறகு இந்த வழக்கை, கிடப்பில் போட்டனர். பின், 32 ஆண்டுகளுக்குப் பிறகு, 2015-இல் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க போலீசாருக்கு உத்தரவு வந்தது.

 
கொலை செய்யப்பட்ட மருத்துவர் பிரெண்டா பேஜ்

பட மூலாதாரம்,PAGE FAMILY

படக்குறிப்பு,

பிரெண்ட பேஜ் கொலை வழக்கில், எந்த ஆதரமும் கிடைக்காத நிலையில், வழக்கு கிடப்பில் போடப்பட்டது.

மறுவிசாரணையில் சிக்கிய புதிய ஆதாரம்

வழக்கை மீண்டும் விசாரித்த போலீசார், பிரெண்டா பேஜின் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தடயங்களை சேகரித்திருந்தனர். அப்போது, ஒரு போர்வையில் விந்துக் கறை காணப்பட்டது. அந்த விந்து, ஹாரிசனின் டிஎன்ஏ,வுடன் ஒப்பிடப்பட்டது.

ஆய்வின் முடிவில், போர்வையில் காணப்பட்ட விந்துவும், ஹாரிசனின் டிஎன்ஏ,வும் ஒத்துப்போனது. ஆனால், அதற்கு முன் நடந்த விசாரணையில், தான் பிரெண்டாவுடன் உடலுறவு கொள்ளவில்லை என ஹாரிசன் கூறியிருந்தார்.

ஆனால், அந்த விந்து அவருடையது தான் என்பதற்கு வலுவான ஆதாரம் இருப்பதாக போலீசார் முடிவு செய்தனர். அதேபோல, பிரெண்டாவின் அடுக்குமாடி குடியிருப்பில் கண்டெடுக்கப்பட்ட சில உடைந்த ஓவியங்களும், ஹாரிசனின் காரில் கண்டெடுக்கப்பட்டது.

கொலை நடந்த மூன்று தசாப்தத்திற்கு பிறகு, மார்ச் 27, 2020 அன்று ஹாரிசனை மீண்டும் கைது செய்து, விசாரணை நடத்தி வந்தனர்.

ஆனால், ஹாரிசன், தொடர்ந்து தனக்கும் தனது முன்னாள் மனைவின் கொலைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என வாதிட்டு வந்தார். ஆனால், ஆதாரங்கள் வலுவாக இருந்ததால், அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இறுதியாக, மார்ச் 2023 இல், 10 நாட்கள் தொடர்ந்து விசாரணை நடந்தது. அந்த விசாரணைக்கு பின், ஹாரிசன் தான் அவரது முன்னாள் மனைவி பிரெண்டா பேஜை கொலை செய்தார் என நிரூபிக்கப்பட்டது. அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரிவிட்டது. சிறையில் அடைக்கப்பட்ட ஹாரிசன், 20 ஆண்டுகளுக்குப் பிறகு தான் பரோலுக்கு விண்ணப்பிக்க முடியும்.

இந்த வழக்கை விசாரித்த போலீஸ் அதிகாரி காலண்டர், வழக்கு குறித்து பிபிசியிடம் பேசினார். அப்போது அவர், ஹாரிசன் அவரது முன்னாள் மனைவி பிரெண்டா பேஜ் கொலை வழக்கில் 45 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என எதிர்பார்க்கவில்லை.

“அவரத அதீத புத்திசாலித்தனமே அவர் வீழ்ச்சிக்கு காரணம் என்று நினைக்கிறேன். ஏனென்றால், 45 ஆண்டுகளுக்குப் பிறகு அவரை கைது செய்வார்கள் என அவர் நினைக்கவில்லை,”என்றார் காலண்டர்.

மேலும், வழக்கு விசாரணையின்போது, அவரே குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும், அவரே வழக்கில் சிக்கிக்கொண்டதாகவும் காலண்டர் பிபிசியிடம் கூறினார்.

"வீடியோ கேமராக்களுக்கு முன்னால் போலீசார் அவரிடம் விசாரணை நடத்திய விதத்தை நீங்கள் பார்த்தால், அவரே குற்றத்தை ஒப்புக்கொள்வது உங்களுக்கு புரியும். அவரேதான் இந்த வழக்கில் சிக்கினார்,”என்றார்.

தான் எல்லோரையும் விட புத்திசாலி என்றும், வழக்கில் இருந்து எளிதில் தப்பிக்க முடியும் என்றும் அவர் தன்னை நம்பியிருந்ததாக காலண்டர் கூறினார்.

 
ஹாரிசன்
படக்குறிப்பு,

திருமணம் நடந்த மூன்று ஆண்டுகளில் தனது மனைவியை விவாகரத்து செய்த ஹாரிசன், விவாகரத்து நடந்த ஒரே ஆண்டில் அவரை கொலையும் செய்துள்ளார்.

ஹாரிசன் மற்றும் பிரெண்டாவின் வாழ்க்கை

ஹாரிசன் மற்றும் பிரெண்டா பேஜ், 1972 இல் திருமணம் செய்து கொண்டனர். இருப்பினும், தனது திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இல்லை என்று பிரெண்டா தனது நெருங்கிய நண்பர்களிடம் கூறி வந்தார். தன்னுடைய கணவனைக் கண்டால், பயமாக இருப்பதாகவும் சொல்லிக்கொண்டே இருந்துள்ளார்.

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்கள் பிரிந்தனர். பிரெண்டா பேஜ், அடுக்குமாடி குடியிருப்பில் சொந்தமாக ஒரு வீடு வாங்கினார்.

விவாகரத்துக்குப் பிறகும் ஹாரிசன், பிரெண்டாவை தொடர்ந்து துஷ்பிரயோகம் செய்ததாக பிரெண்டா பேஜின் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர். அவர் மற்ற ஆண்களுடன் தொடர்பு வைத்திருப்பதாக ஹாரிசன் சந்தேகிப்பதாக பிரெண்டா தங்களிடம் கூறியதாக பிரெண்டாவின் குடும்ப உறுப்பினர்கள் கூறினர்.

பிரெண்டாவின் 59 வயதான மருமகன் கிறிஸ் லிங், வழக்கு விசாரணையின்போது, தினமும் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

"நீதிமன்றத்திற்கு வருவது மிகவும் விசித்திரமான உணர்வு. எனது அத்தையைக் கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் பல ஆண்டுகளாக எங்களுடனே இருந்தார். அவர் எங்கள் கண் முன்னே தான் இருந்தார்," என லிங் பிபிசியிடம் கூறினார்.

டிஎன்ஏ தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியின் காரணமாக, குற்றம் சாட்டப்பட்டவர்களை தற்போது அடையாளம் காண முடிந்ததற்கு அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

இந்த வழக்கின் விசாரணைக்காக, 40 ஆண்டுகளில் 4 ஆயிரம் சாட்சிகளிடம் போலீசார் விசாரணை நடத்தினர். மூன்று ஆயிரம் பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. வழக்கு விசாரணைக்கு பிறகு சுமார் 500 வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன.

https://www.bbc.com/tamil/articles/cq57pn33q4xo

ரஷ்யாவுக்கு எதிராக, இங்கிலாந்துக்கு சக்தி வாய்ந்த அணுகுண்டுகளை நகர்த்துகிறதா அமெரிக்கா?

2 months ago
அமெரிக்கா vs ரஷ்யா

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், மாட் பிரேசி
  • பதவி, பிபிசி நியூஸ், சஃபோல்க்
  • 30 நிமிடங்களுக்கு முன்னர்

இங்கிலாந்தின் சஃபோல்க்கில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளத்திற்கு மீண்டும் அணு ஆயுதங்களை அமெரிக்கா அனுப்பப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 15 ஆண்டுகளுக்குப் முன் சஃபோல்க் தளத்தில் இருந்து அனைத்து அணு ஆயுதங்களையும் திரும்பப் பெற்றுக் கொண்டது அமெரிக்கா.

இரண்டாம் உலகப் போரின் முடிவில் ஹிரோஷிமாவில் வீசப்பட்ட 'லிட்டில் பாய்' என்ற அணுகுண்டை விட பன்மடங்கு சக்தி வாய்ந்த அணுகுண்டுகளை பாதுகாப்பாக சேமித்து வைப்பதற்கான வசதிகள் சஃபோல்க்கின் ஆர்ஏஎப் லேகன்ஹீத் (RAF Lakenheath) தளத்தில் உருவாக்கப்பட்டு வருவதாக ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.

அமெரிக்காவின் திட்டங்கள்
அணு ஆயுதங்களை இங்கிலாந்திற்கு அனுப்பும் அமெரிக்கா

பட மூலாதாரம்,GOOGLE EARTH

படக்குறிப்பு,

அமெரிக்க விமானப்படையால் மட்டுமே பயன்படுத்தப்படும் லேகன்ஹீத் தளம் மீண்டும் அணு ஆயுதங்களை சேமிக்க தயாராகி வருவதாக அமெரிக்க அரசாங்க ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.

ஆர்ஏஎப் லேகன்ஹீத் தளத்தில் தற்போது 48வது ஃபைட்டர் விங் எனும் அமெரிக்க விமானப்படைப் பிரிவு உள்ளது. இந்தப் பிரிவு லிபர்ட்டி விங் என்றும் அழைக்கப்படுகிறது. F-35A லைட்னிங் II எனும் அதிநவீன போர் விமானங்கள் இங்கு நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

ஐக்கிய அமெரிக்க விமானப்படை (United States Air Force- யுஎஸ்ஏஎப்) அறிக்கைப்படி, போர்க்களத்திற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட, குறுகிய தூர இலக்குகளை தாக்கும் திறன் கொண்ட ஆயுதமான B61-12 தெர்மோநியூக்ளியர் குண்டை இந்த போர் விமானங்கள் மூலம் எடுத்துச் செல்ல வெற்றிகரமாக சோதனைகள் செய்யப்பட்டன.

ஆர்ஏஎப் லேகன்ஹீத்தின் 'எதிர்கால அணுசக்தி திட்டத்திற்கு' தேவையான பாதுகாப்பான தங்குமிடங்களை கட்டுவதற்கான ஒப்பந்தம் குறித்து விவரிக்கும் ஆவணங்கள் அமெரிக்க பாதுகாப்புத் துறையால் வெளியிடப்பட்டன. பின்னர் அவை திரும்பப் பெறப்பட்டன .

இந்த விமானப்படைத் தளத்தின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் வீரர்களுக்கான தங்குமிடங்கள் கட்டுவதற்கான ஒப்பந்தங்கள் அவை.

கூடுதலாக, அமெரிக்க இராணுவத் துறை பட்ஜெட் ஆவணத்தின்படி , இந்த சஃபோல்க் தளத்தின் அடித்தளத்தில் 'ஷுரிட்டி டார்மிட்டரி' (surety dormitory) எனப்படும் வசதியை உருவாக்க லட்சக்கணக்கான டாலர் ஒதுக்கப்பட்டுள்ளது. இவை அணு ஆயுதங்களுக்கான சேமிப்பு வசதிகள் என கூறப்படுகிறது.

ஆர்ஏஎப் தளம் 1941இல் லேகன்ஹீத்தில் திறக்கப்பட்டு, இரண்டாம் உலகப் போரின் போது செயல்பட்டது.

நேட்டோவிற்கும் சோவியத் ஒன்றியத்திற்கும் இடையிலான பனிப்போர் தீவிரமடைந்ததால், அமெரிக்க விமானப்படை 1951இல் தளத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டை ஏற்றுக்கொண்டது .

தளத்தில் 4,000 அமெரிக்க இராணுவ வீரர்களும் மேலும் 1,500 பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க சிவிலியன் ஊழியர்களும் உள்ளனர்.

ஆயுதங்கள் சஃபோல்க்கிற்கு கொண்டு வரப்படுமா?
அணு ஆயுதங்களை இங்கிலாந்திற்கு அனுப்பும் அமெரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

பேராசிரியர் சர் லாரன்ஸ் ஃப்ரீட்மேன்

லண்டன் கிங்ஸ் கல்லூரியின் போர் ஆய்வுகள் துறையின் பேராசிரியரான சர் லாரன்ஸ் ஃப்ரீட்மேன், "இந்த திட்டங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக இருக்கலாம்" என கூறினார்.

"ஒருவேளை ஐரோப்பாவில் உள்ள தளங்களில் இருந்து மற்ற ஆயுதங்கள் அகற்றப்பட்டால், தங்குமிடங்கள் கூடுதல் திறன் கொண்டதாக இருக்கலாம்" என்கிறார் அவர்.

"சேமிப்பு வசதியை உருவாக்குவது ஒரு விஷயம் என்றால், அமெரிக்க ஆயுதங்கள் பிரிட்டனில் இருக்கப் போகிறது என்ற உண்மையை மறைப்பது மற்றொரு விஷயம். எனவே இந்த நடவடிக்கை என்பது நாடுகளுக்கிடையேயான ஆயுதப் போட்டியில் ஏதோ ஒரு பெரிய மாற்றமாக இல்லாமல், ஒரு சாதாரணமான நடவடிக்கையாகவும் கூட இருக்கலாம்" என அவர் கூறினார்.

ஒரு குறிப்பிட்ட இடத்தில் அணு ஆயுதங்கள் இருப்பதை உறுதிப்படுத்தவோ மறுக்கவோ கூடாது என்ற கொள்கையை நீண்ட காலமாக இங்கிலாந்து மற்றும் நேட்டோ கடைபிடித்து வருகிறது.

 
ரஷ்யாவுக்கு பதிலடியாக அமெரிக்கா நடவடிக்கையா?
அணு ஆயுதங்களை இங்கிலாந்திற்கு அனுப்பும் அமெரிக்கா

பட மூலாதாரம்,USAF

படக்குறிப்பு,

B61-12 தெர்மோநியூக்ளியர் வெடிகுண்டு மிசோரியில் உள்ள வைட்மேன் விமானப்படை தளத்தின் விமானத்தில் ஏற்றப்படுகிறது

அமெரிக்கா vs ரஷ்யா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் F-35A லைட்னிங் II எனும் அதிநவீன விமானம்

"இந்த திட்டங்கள் யுக்ரேனில் நிலவும் சூழ்நிலையுடன் தொடர்புடையவை என்று நான் நினைக்கவில்லை" என்கிறார் சர் லாரன்ஸ்.

"ரஷ்யாவுடன் அதிகரித்து வரும் பதற்றத்தின் காரணமாக இது இருக்கலாம்," என்று அவர் கூறினார்.

ஆனால் நேட்டோவின் முன்னாள் மூத்த அதிகாரியான வில்லியம் அல்பர்கி கூறுகையில், "ரஷ்யாவின் நடவடிக்கைகளால் ஐரோப்பா முழுவதும் அதிகரித்து வரும் ஆபத்தான அச்சுறுத்தல் சூழலுக்கு இது ஒரு பதிலடி" என்கிறார். இவர் இப்போது சர்வதேச மூலோபாய ஆய்வுகள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

பெலாரஸில் ரஷ்ய அணுசக்தி படைகள் நிலைநிறுத்தப்பட்டது, உக்ரைன் மீதான படையெடுப்பு மற்றும் விளாடிமிர் புதின் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான அச்சுறுத்தல்கள் பெருமளவில் அதிகரித்தது போன்றவற்றை அவர் மேற்கோள் காட்டினார்.

அணு ஆயுதங்களை இங்கிலாந்திற்கு அனுப்பும் அமெரிக்கா

பட மூலாதாரம்,WILLIAM ALBERQUE

படக்குறிப்பு,

முன்னாள் மூத்த நேட்டோ அதிகாரி வில்லியம் அல்பர்கியின் கூற்றுப்படி, ஆர்ஏஎப் லேகன்ஹீத் தளம் ஏற்கனவே ரஷ்ய இலக்காக மாறிவுள்ளது

'இந்த தளம் ரஷ்யாவின் இலக்காக மாறும்'
அணு ஆயுதங்களை இங்கிலாந்திற்கு அனுப்பும் அமெரிக்கா

பட மூலாதாரம்,HANS KRISTENSEN

படக்குறிப்பு,

அமெரிக்க விஞ்ஞானிகளின் கூட்டமைப்பைச் சேர்ந்த ஹான்ஸ் கிறிஸ்டென்சன் ஆர்ஏஎப் லேகன்ஹீத் தளத்திற்கான அமெரிக்க பாதுகாப்புத் துறையின் திட்டங்களைக் கண்காணித்து வருகிறார்.

அமெரிக்க விஞ்ஞானிகளின் கூட்டமைப்பைச் சேர்ந்தவர் ஹான்ஸ் கிறிஸ்டென்சன். அணு ஆயுதங்கள் ஆர்ஏஎப் லேகன்ஹீத் தளத்திற்கு மீண்டும் கொண்டு வரப்படுவதற்கான சாத்தியங்கள் குறித்து குரல் எழுப்பிய முதல் நபர்களில் இவரும ஒருவர்.

"ஒரு தளத்தில் அணு ஆயுதங்கள் இருந்தால், அந்த தளம் ரஷ்யாவுடனான அணுசக்தி மோதலில் இலக்காகக் கூடும் என்பதில் சந்தேகமில்லை" என்று அவர் கூறினார்.

"ஒரு நாடு அணு ஆயுதங்களை வைத்திருந்தால், பின் அது ஒரு வித்தியாசமான போர் விளையாட்டாக மாறும் என்பதில் சந்தேகமில்லை" என்றும் கிறிஸ்டென்சன் கூறுகிறார்.

ஆனால், "இந்த தளம் இப்போதே ரஷ்யாவின் இலக்காக மாறியிருப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன" என்று அல்பர்கி கூறினார்.

"நான் ஒரு ரஷ்ய இராணுவத்தைச் சேர்ந்த திட்டமிடும் நிபுணராக இருந்தால், இந்த தளத்தை தாக்க முன்பே முடிவு செய்திருப்பேன். நீங்கள் ரஷ்ய தொலைக்காட்சிகளைப் பார்த்தால், இங்கிலாந்தைப் பற்றியும் இங்கிலாந்தைத் தாக்குவது பற்றியும் அதிகம் பேசுகிறார்கள்" என்கிறார் அவர்.

இங்கிலாந்திற்கு எதிராக ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அங்கீகாரம் அளிப்பார் என்று அல்பர்கி நம்புகிறார்.

மேலும், "அவர் திறமையானவர் என்று சொல்வது மிகையாக இருக்கும். பிரச்னைக்கான தீர்வு இல்லை என்றோ அல்லது பின்விளைவுகள் வராது என நினைத்தாலோ, அவர் இதைச் செய்வார் என்று நினைக்கிறேன்" என்று கூறினார்.

 
அடுத்து என்ன நடக்கும்?
அணு ஆயுதங்களை இங்கிலாந்திற்கு அனுப்பும் அமெரிக்கா

பட மூலாதாரம்,JOHN FAIRHALL/BBC

படக்குறிப்பு,

அணு ஆயுதக் குறைப்புக்கான பிரசார அமைப்பைச் சேர்ந்த கேட் ஹட்சன், சஃபோல்க்கில் அணு ஆயுதங்கள் நிலை நிறுத்தப்படக்கூடாது என விரும்புகிறார்

அணு ஆயுதக் குறைப்புக்கான பிரசார அமைப்பு (Campaign for Nuclear Disarmament- சிஎன்டி) ஆர்ஏஎப் லேகன்ஹீத் தளத்திற்கு வெளியே போராட்டம் நடத்தி எதிர்ப்பு தெரிவித்தது.

சிஎன்டி பொதுச் செயலாளர் கேட் ஹட்சன் பேசுகையில், "இங்கே அணு ஆயுதங்கள் கொண்டு வரப்பட்டால், நாங்கள் அதை அகற்ற வலியுறுத்துவோம்." என்றார்.

'ஷுரிட்டி டார்மிட்டரி' தங்குமிடத்தை கட்டுவது சட்டப்பூர்வமானதா என்பதை ஆராய சட்ட நிறுவனமான லீ டேக்கு (Leigh Day) இந்த அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

வழக்கறிஞர் ரிக்கார்டோ காமா இதுகுறித்து பேசுகையில், "லேகன்ஹீத் தளத்தில் அணுகுண்டுகளை சேமிப்பது குறிப்பிடத்தக்க சுற்றுச்சூழல் விளைவுகளை ஏற்படுத்தாது என்று இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது. ஆனால், அந்த முடிவை எடுப்பதற்கு முன்னர் விமானப்படை தளத்தில் அணு ஆயுதங்களை நிலைநிறுத்துவதன் சாத்தியமான சுற்றுச்சூழல் விளைவுகளை அவர்கள் புறக்கணித்ததாக வாதிடுகின்றனர் சிஎன்டி அமைப்பினர். அணுசக்தி விபத்து ஏற்படுவதற்கான சாத்தியம் உட்பட" என்கிறார்.

https://www.bbc.com/tamil/articles/cw540x9nkl5o

Checked
Fri, 04/19/2024 - 17:40
உலக நடப்பு Latest Topics
Subscribe to உலக நடப்பு feed
texte-feed
svsv dfde fe