உலக நடப்பு

மொங்கோலியாவில் மிக கடுமையான குளிர்காலம்; ஐந்து மில்லியன் விலங்குகள் உயிரிழப்பு

3 weeks 6 days ago

Published By: RAJEEBAN    22 MAR, 2024 | 02:14 PM

image

மொங்கோலியா அரைநூற்றாண்டு  காலத்தில் சந்தித்துள்ள மிகவும் கடுமையான குளிர்காலம் காரணமாக ஐந்து மில்லியன் விலங்குகள் உயிரிழந்துள்ளன என  மனிதாபிமான அமைப்புகள் தெரிவித்துள்ளன.

மொங்கோலியா மிகவும் கடுமையான குளிரில் சிக்குப்பட்டு உறைந்துபோயுள்ளது 4.7 மில்லியன் விலங்குகள் உயிரிழந்துள்ளன ஆயிரக்கணக்கான் மக்களின் வாழ்வாதாரத்திற்கும் உணவு விநியோகத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என சர்வதேச செஞ்சிலுவை சம்மேளனம் தெரிவித்துள்ளது.

mongo_cli4.jpg

வெப்பநிலை வீழ்ச்சியடைந்துள்ளது கடும் பனி காணப்படுகின்றது மேய்ச்சல் நிலங்கள் முற்றாக மூடப்பட்டுள்ளனகால்நடைகள்ள் உணவிற்காக அலைகின்றன என செஞ்சிலுவை சம்மேளனம்  தெரிவித்துள்ளது.

மங்கோலியாவில் மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் நாடோடிகள் மற்றும் கால்நடை மேய்ப்பில் ஈடுபட்டுள்ளனர் உணவுக்காகவும் சந்தைகளி;ல் விற்பனை செய்வதற்காகவும்  அவர்கள் கால்நடைகளை நம்பியுள்ளனர்.

mongo_cli3.jpg

தங்கள் வாழ்க்கைக்காக கால்நடைகளை முற்றாக நம்பியுள்ள மக்கள் கடும் குளிர்காலம் காரணமாக ஒரு சிலமாதங்களில் ஆதரவற்றவர்களாக மாறிவிட்டனர் சர்வதேச செஞ்சிலுவை சம்மேளனத்தின் ஆசிய பசுபிக்கிற்கான பிராந்திய இயக்குநர்  அலெக்ஸாண்டர் தெரிவித்துள்ளார்.அவர்களில் சிலர் தங்களிற்கான உணவைபெற்றுக்கொள்ள முடியாத நிலையில் தங்கள் வீடுகளில் குளிரை போக்குவதற்காக எரியூட்ட முடியாத நிலையில் உள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கால்நடைமேய்ச்சலில் ஈடுபட்டுள்ள குடும்பங்களில் 2250க்கும் அதிகமான குடும்பங்கள் தங்கள் கால்நடைகளில் 70 வீதத்திற்கும் அதிகமானவற்றை இழந்துவிட்டன 7000ம் குடும்பங்கள் போதிய உணவை பெற முடியாத நிலையில் உள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடும் குளிரான காலநிலை மொங்கோலியாவின் பெரும்பகுதியை பாதித்துள்ளது.இந்த காலநிலை நீடிக்கலாம் என அச்சம் வெளியாகியுள்ளது.

mongo_cli1.jpg

தற்போது மொங்கோலியாவில் வசந்தகாலம் ஆனால் குளிர்காலம் நீடிக்கின்றது இன்னமும் நிலத்தில் பனி காணப்படுகின்றது கால்நடைகள் உயிரிழக்கின்றன எனமத்தியு தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/179391

உலக தண்ணீர் தினம் : 100 கிணறுகளை வெட்டிய ஒரே மனிதர்; கிராம மக்களின் தாகம் தீர்த்த ஹீரோ

3 weeks 6 days ago

6 மணி நேரங்களுக்கு முன்னர்
செனகலை சேர்ந்த ஜூனியர் டியாகாடே இதுவரை 100 கிணறுகளை கட்டி கொடுத்துள்ளார்.

செனகலில் உள்ள பல கிராமங்களிலும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்நிலையில் ஒரே இளைஞர் நூறுக்கும் மேற்பட்ட கிணறுகளை கட்டிக் கொடுத்து மக்களின் தாகம் தீர்த்து வருகிறார்.

இதற்காக பலரிடமும் நிதி வசூல் செய்து, கடந்த ஆண்டில் பல கிணறுகளை உருவாக்கி கொடுத்துள்ள ஜூனியர் இது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி தருவதாக கூறுகிறார்.

மேலும், இதனால் தனது குடும்ப வாழ்க்கை பாதிக்கப்பட்ட போதிலும் கூட தொடர்ந்து மக்களுக்காக கிணறு வெட்டிக் கொடுப்பதே தனக்கு மகிழ்ச்சி என்று அவர் தெரிவிக்கிறார்.

https://www.bbc.com/tamil/articles/clm75rygdrmo

இத்தாலி பெண் பிரதமரின் ஆபாச வீடியோக்கள்.. இழப்பீடு கேட்டு வழக்கு

3 weeks 6 days ago
இத்தாலி பெண் பிரதமரின் ஆபாச டீப்பேக் வீடியோக்கள்.. இழப்பீடு கேட்டு வழக்கு

இத்தாலி பெண் பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் முகத்தை, ஆபாச திரைப்படத்தில் உள்ள நடிகையின் உடலுடன் பொருத்தி வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்ததாக தெரிகிறது.
நவீன உலகம் பெருமையாக பேசிக்கொள்ளும் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் மற்றும் அதன் எதிர்விளைவுகள் டிஜிட்டல் துறையில் அதிகரித்துள்ளது. இந்த தொழில்நுட்பத்தை பொழுதுபோக்கு அம்சங்களில் அதிகம் பயன்படுத்துகிறார்கள். டீப்பேக் என்ற ஏ.ஐ. வீடியோ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ஒருவரின் முகத்தை வேறு ஒருவரின் உடலோடு பொருத்தி வீடியோ வெளியிடுவது அதிகரித்து வருகிறது.

அவ்வகையில், இத்தாலி பெண் பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் டீப்பேக் வீடியோக்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜார்ஜியா மெலோனியின் முகத்தை, ஆபாச திரைப்படத்தில் உள்ள நடிகையின் உடலுடன் பொருத்தி ஆபாச வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்ததாக தெரிகிறது. அந்த வீடியோக்கள் வைரலான நிலையில், அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், 40 வயது நிரம்பிய நபர் மற்றும் அவரது தந்தை ஆகியோர் இந்த வீடியோக்களை தயாரித்து வலைத்தளத்தில் பதிவேற்றியது தெரியவந்துள்ளது. அவர்கள் மீது அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.

மெலோனி சம்பந்தப்பட்ட ஆபாச வீடியோக்கள் அனைத்தும், 2022ல் அவர் பிரதமராக பதவியேற்பதற்கு முன்பு பதிவேற்றம் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இத்தாலிய சட்டத்தின்படி, ஒருசில அவதூறு செயல்கள் கிரிமினல் குற்றமாக கருதப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

இந்நிலையில், ஆபாச வீடியோக்கள் வெளியிட்டதால் ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு 1 லட்சம் யூரோக்கள் இழப்பீடாக வழங்க உத்தரவிடக்கோரி பிரதமர் தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பிரதமர் மெலோனி ஜூலை 2-ம் தேதி சசாரி கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளிக்க உள்ளார். பிரதமர் கோரிய இழப்பீடு வழங்கப்பட்டால், ஆண்களின் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் வகையில் அந்த தொகையை நன்கொடையாக வழங்குவார் என அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதுபோன்ற பிரச்சினையால் பாதிக்கப்படும் பெண்கள், வழக்கு தொடர பயப்படவேண்டாம் என்ற செய்தியை தெரியப்படுத்தவே இழப்பீடு கேட்டு பிரதமர் மெலோனி வழக்கு தொடர்ந்திருப்பதாக கூறப்படுகிறது.

இதேபோல் இந்தியாவில், ரஷ்மிகா மந்தனா, கத்ரீனா கைப், நோரா பதேஹி உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்களின் டீப்பேக் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/296731

டவுன் சிண்ட்ரோம் - ஒரு தன்னம்பிக்கை இளைஞரின் கதை

4 weeks ago
டவுன் சிண்ட்ரோம் என்பது என்ன? அவர்களால் என்னென்ன செய்ய முடியும்?
கட்டுரை தகவல்
  • எழுதியவர், அலெக்சாண்ட்ரா ஃபௌச்
  • பதவி, பிபிசி உலக சேவை
  • 5 மணி நேரங்களுக்கு முன்னர்

டவுன் சிண்ட்ரோம் எனும் மனநல குறைபாடு மீதான கற்பிதங்களை ஒழிப்பதுதான், இந்தாண்டு சர்வதேச டவுன் சிண்ட்ரோம் தினத்தின் கருப்பொருளாக உள்ளது.

டவுன் சிண்ட்ரோம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21-ம் தேதி இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.

டவுன் சிண்ட்ரோம் உள்ளவர்கள் குறித்தும் அவர்கள் எப்படி இருப்பார்கள் அல்லது அவர்களால் என்ன செய்ய முடியும் என்பது குறித்தும் கட்டமைக்கப்பட்டுள்ள எண்ணங்களை எதித்துப் போராடுவதே இந்நாளின் இலக்கு. டவுன் சிண்ட்ரோமுடன் வாழ்ந்துவரும் இந்தோனேசியாவை சேர்ந்த மோர்கன் மேஸ் தன் வாழ்க்கை குறித்து அவர் பகிர்ந்துகொண்டார்.

டவுன் சிண்ட்ரோம் இண்டர்நேஷனல் எனும் சர்வதேச அமைப்பின் தூதராக மோர்கன் உள்ளார். இந்த அமைப்பில், உலகம் முழுவதிலும் இருந்து தங்கள் நலன்களுக்காக தாங்களே குரல் கொடுக்கும் குழுவிலும் மோர்கன் உள்ளார்.

”என் பெயர் மோர்கன் மேஸ், எனக்கு 25 வயதாகிறது. இந்தோனேசியாவின் ஜாகர்டாவில் என் அம்மாவுடன் வசித்துவருகிறேன்.

”YAPESDI (இந்தோனேசியன் டவுன் சிண்ட்ரோம் கேர் ஃபவுண்டேசன்) எனும் அமைப்பால் டவுன் சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்ட இளம் வயதினருக்கு நடத்தப்படும் வார ஆன்லைன் வகுப்புகளுக்கு வகுப்பு உதவியாளராக நான் பணிபுரிகிறேன்.” இந்த அமைப்பு டவுண் சிண்ட்ரோம் பாதிக்கப்பட்டவர்களின் மேம்பாட்டுக்காக இயங்கிவரும் லாப நோக்கற்ற அமைப்பாகும்.

இந்த அமைப்பின் பணியாளர்கள் கூட்டத்தில், டவுண் சிண்ட்ரோம் குறைபாட்டல் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக தன்னை பிரதிநிதித்துவப்படுத்துகிறார் மோர்கன்.

ஆனால், அவருக்கு சமையல் மீதும் ஆர்வம் இருக்கிறது.

”வாரத்திற்கு இரு நாட்கள் நான் உணவகத்தில் பணிபுரிகிறேண். உணவகத்தில் பணிபுரிவது என்னுடைய கனவு. ஏனென்றால், எனக்கு சமைப்பது மிகவும் பிடிக்கும்.

”ஒருநாள் நான் சொந்தமாக உணவகம் ஆரம்பிக்க விரும்புகிறேன். என்னுடைய சம்பளம் மற்றும் மற்ற வருமானங்களை சேமித்து என்னுடைய கனவை நிறைவேற்றுவேன்.”

 
டவுன் சிண்ட்ரோம் என்பது என்ன? அவர்களால் என்னென்ன செய்ய முடியும்?
படக்குறிப்பு,

”ஒருநாள் நான் சொந்தமாக உணவகம் ஆரம்பிக்க விரும்புகிறேன்” என்கிறார் மோர்கன்.

மோர்கனுக்காக தான் செய்யும் அனைத்தையும் குறித்து தன் மகன் அறிந்திருப்பதையும் அதில் பங்கேற்பதையும் உறுதிசெய்ய தான் எப்போதும் முயற்சிப்பதாக அவருடைய தாய் டேவி தெரிவித்தார்.

சில ஆண்டுகளுக்கு முன் டவுன் சிண்ட்ரோம் உள்ளவர்கள் கலந்துகொண்ட கூட்டம் ஒன்றுக்கு முதன்முறையாக மோர்கனை அழைத்துச் சென்றபோது, தான் ஏன் நன்றாக பேசுகிறேன் என்றும் ஆனால் அவனுடைய புதிய நண்பர்கள் ஏன் அப்படி பேசுவதில்லை என்றும் அவர் கேட்டதாக தாய் டேவி தெரிவித்தார். பின்னர் அவர்கள், முணுமுணுத்துக் கொண்டிருந்ததாகவும், மோர்கன் புரிந்துகொள்ள முடியாத வகையில் உரையாடியதாகவும் அவர் கூறினார்.

வீட்டுக்குத் திரும்பிச் செல்லும்போதும் தன் புதிய நண்பர்களால் ஏன் தெளிவாக பேச முடியவில்லை என, மோர்கன் மீண்டும் கேள்வியெழுப்பியுள்ளார்.

தன்னை போன்றவர்களை நண்பர்களாக்கிக் கொள்ள விரும்புவதாகவும் அதேநேரத்தில் அவர்களை புரிந்துகொள்ள விரும்புவதாகவும் தெரிவித்த மோர்கன், எப்படி பேச வேண்டும் என அவர்களுக்குக் கற்றுக்கொடுக்க உதவ முடியுமா என்றும் தன் தாயிடம் கேட்டுள்ளார்.

இப்படித்தான் டேவி மற்றவர்களுடன் இணைந்து மோர்கன் தற்போது அங்கம் வகிக்கும் அமைப்பை உருவாக்கினார். “லெட்ஸ் ஸ்பீக் அப்” என்ற பெயரில் வகுப்புகளை நடத்த தனக்கு ஒரு நிதியுதவி வழங்கியதாகவும் பின்னர் YAPESDI அமைப்பை நிறுவியதாகவும் டேவி தெரிவித்தார்.

 
டவுன் சிண்ட்ரோம் என்பது என்ன? அவர்களால் என்னென்ன செய்ய முடியும்?
படக்குறிப்பு,

டவுண் சிண்ட்ரோம் உள்ளவர்களுக்காக சில கட்டுரைகளையும் மோர்கன் மதிப்பாய்வு செய்கிறார்.

அறிவுசார் குறைபாடு உள்ளவர்களுடன் தொடர்பு கொள்வதற்கான மொழியான ’ஈஸி லாங்வேஜ்’ எனும் மொழியை பயன்படுத்தி டவுண் சிண்ட்ரோம் உள்ளவர்களுக்காக சில கட்டுரைகளையும் மோர்கன் மதிப்பாய்வு செய்கிறார்.

”இன்றுவரை, டவுன் சிண்ட்ரோம் அல்லது அறிவுசார் குறைபாடு உள்ளவர்களில் ‘ஈஸி லாங்க்வேஜ்’ மூலம் மதிப்பாய்வு செய்வது நான் மட்டும்தான். நான் மதிப்பாய்வு செய்யும் புத்தகங்கள் என்னுடைய அமைப்பில் மட்டும் வெளியிடப்படவில்லை மாறாக மற்ற அமைப்புகளும் மதிப்பாய்வு செய்யுமாறு என்னை கேட்கின்றன."

”கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, வேலைவாய்ப்பு மற்றும் வங்கி சேவை ஆகியவற்றில் டவுன் சிண்ட்ரோம் உள்ளவர்களுக்கான உரிமைகள் குறித்த ஆய்வை தற்போது மதிப்பாய்வு செய்து வருகிறேன்,” என்கிறார் மோர்கன்.

வேலை கிடைப்பதில் சிரமம்

“இந்தோனேசியாவில் என்னை போன்று டவுன் சிண்ட்ரோம் உள்ள வயது வந்தவர்கள் வேலை செய்வது கிடையாது. நிறுவனங்கள் எங்களை வேலைக்கு எடுப்பது இல்லை. எங்களுக்கு வேலை செய்வதற்கான பயிற்சி அளிக்கப்படவில்லை என்பதற்காக எங்களை வேலையில் அமர்த்த பயப்படுகின்றனர்.”

இது உண்மைதான். சில சிறிய நிறுவனங்கள் குறைபாடு உடையவர்களுக்கு வேலை வழங்குகின்றன. ஆனால், வேலை கிடைப்பதில் சிரமம் இருப்பதாகவும் வேலைக்கு விண்ணப்பிக்கும்போது பாகுபாடுகளை சந்திப்பதாகவும் பிபிசி நியூஸ் இந்தோனேசியா செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

”எப்படி வேலை செய்ய வேண்டும் என்பதை எங்களுக்கு கற்றுக் கொடுப்பதற்கு எந்த பள்ளிகளும் தொழில் பள்ளிகளும் இல்லை. என்னுடைய அம்மா மற்றும் அவருடைய நண்பர்கள் மிக கடினமாக போராடி, எனக்கு பயிற்சி அளித்ததால்தான் என்னால் இப்போது நல்ல வேலையில் இருக்க முடிகிறது” என்கிறார் மோர்கன்.

குறைபாடு உள்ளவர்களுக்காக சில சிறப்புப் பள்ளிகள் உள்ளன என்றும் ஆனால் தொழில் பயிற்சி பள்ளிகள் இல்லை என்றும் பிபிசி நியூஸ் இந்தோனேசியா செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

அலுவலக நிர்வாக பணி தொடர்பாக சில அமைப்புகள் டவுன் சிண்ட்ரோம் உள்ளவர்களுக்கு பயிற்சியை வழங்குகின்றன. ஆனால், அவை குறைவாகவே உள்ளன என்றும் நாடு முழுவதும் உள்ள டவுன் சிண்ட்ரோம் உள்ளவர்களுக்கு அதனை பெற முடிவதில்லை என்றும் கூறுகின்றனர்.

 
டவுன் சிண்ட்ரோம் என்பது என்ன? அவர்களால் என்னென்ன செய்ய முடியும்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

சித்தரிப்புப் படம்

‘எதிர்மறை கற்பிதங்கள்’

மோர்கன் மற்ற சில திறன்களையும் கற்றுள்ளார்.

“நான் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் பல கருத்தரங்குகள், பயிற்சி பட்டறைகள், நிகழ்ச்சிகளில் பேசுவதற்கு அழைக்கப்பட்டிருக்கிறேன். ஆமாம், நான் இந்தோனேசிய மொழி, பிரெஞ்சு, ஆங்கிலம் என மூன்று மொழிகளை பேசுவேன்.

“ஆனால், இன்னும் எங்கள் மீது சமூகம் தவறான கற்பிதங்களை வைத்துள்ளது. அரசாங்கம் எங்களுக்காக அதிகமாக ஏதும் செய்வதில்லை.”

மாற்றுத்திறனாளிகளுக்கு சட்டப்படி இடமளித்து வருவதாகவும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் பள்ளிகளை நடத்துவதாகவும் அரசு அதிகாரிகள் கூறுகின்றனர்.

2016-ம் ஆண்டு இந்தோனேசிய சட்டம், குறைபாடுகள் கொண்டவர்களுக்கான சம உரிமை குறித்து பேசுகிறது. அச்சட்டத்தின்படி, சம ஊதியத்துடன் கூடுதலாக, முதலாளிகள் அவர்களுக்கேற்ற வசதி வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும். மேலும், அதற்கு இணங்காத நிறுவனங்கள் மீது அபராதமும் விதிக்கப்படும்.

அச்சட்டத்தின்படி வேலையில் இடஒதுக்கீடும் உள்ளது. அதன்படி, அரசு வேலைகளில் 2 சதவிகிதமும் தனியார் துறையில் ஒரு சதவிகிதமும் மாற்றுத்திறனாளிகளை வேலைக்கு அமர்த்த வேண்டும்.

பணியைத் தாண்டி மற்ற சில வேலைகளையும் தான் விரும்புவதாக மோர்கன் தெரிவித்தார்.

“பணி, கடினமாக உழைப்பதைத் தாண்டி இசை வாசிப்பது, பயணம், படங்கள் பார்ப்பது, வார இறுதிகளில் சினிமாவுக்கு செல்வது மிகவும் பிடிக்கும். கடைசியாக நான் குங் ஃபு பாண்டா 4 திரைப்படத்திற்கு சென்றேன்.

”எப்படி என் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கிறதோ, அப்படியே என் மற்ற நண்பர்களும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என நம்புகிறேன்.

”உலக டவுன் சிண்ட்ரோம் நாள் வாழ்த்துகள் - கற்பிதங்களை முறியடிப்போம்!”

https://www.bbc.com/tamil/articles/cxezldpk9m0o

அவுஸ்திரேலியா செல்லவுள்ள மாணவர்களுக்கான அறிவிப்பு!

4 weeks ago
03-14.jpg

வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா விதிமுறைகளை இந்த வாரம் முதல் கடுமையாக்க அவுஸ்திரேலியா தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவுஸ்திரேலியாவிற்கு வந்துள்ள குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளதாக சமீபத்திய தரவுகளின் பின்னணியில் அவர்கள் அந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளனர்.

குடியேற்றவாசிகளின் வருகை அதிகரிப்பால், நாட்டின் வாடகை வீட்டுச் சந்தையின் போட்டித்தன்மை எதிர்பாராத வகையில் வளர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

பட்டதாரி விசாக்கள் மற்றும் மாணவர் விசாக்களுக்கான ஆங்கில மொழித் தேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், சர்வதேச மாணவர்களுக்கு உணவு வழங்கும் நிறுவனங்கள் தொடர்ந்து விதிகளை மீறினால் அவற்றை இடைநிறுத்துவதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/296581

அமெரிக்காவில் தொடரும் இந்திய மாணவர்கள் மீதான தாக்குதல்…

4 weeks 1 day ago
03-3-603x375.jpg அமெரிக்காவில் தொடரும் இந்திய மாணவர்கள் மீதான தாக்குதல்…

 

அமெரிக்காவில் மேலும் ஒரு இந்திய மாணவர் உயிரிழந்துள்ளார்.

அமெரிக்காவில் போஸ்டன் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பாடப்பிரிவில் கல்வி பயின்று வந்த 20 வயதுடைய இந்திய மாணவர் ஒருவரே இவ்வாறு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில், இவ்வாண்டில் மட்டும் அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தை சேர்ந்த, 20 வயதுடைய அபிஜீத் பருச்சுரு அமெரிக்காவிலுள்ள காட்டுப் பகுதியிலிருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த மாணவனான அபிஜீத்தின் உடல், குண்டூரில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன.

இதற்கு முன்பாக கோல்கட்டாவை சேர்ந்த நடனக் கலைஞர் அமர்நாத் கோஷ் என்பவர் அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அதன்படி, அமெரிக்காவில் இவ்வாண்டில் இதுவரையான காலப்பகுதியில் இந்தியாவை சேர்ந்த 9 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, வொஷிங்டனில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், அமெரிக்கா முழுவதும் உள்ள இந்திய மாணவர்களுடன் காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தி வருதுடன், மாணவர்களுக்கு தேவையான அறிவுரைகளையும் வழங்கி வருகின்றனர்.

https://athavannews.com/2024/1374051

போர்க்களத்தில் காதலனை துணிச்சலாகக் காப்பாற்றிய ஆப்கன் இஸ்லாமிய இளவரசியின் கதை

4 weeks 2 days ago
ரபியா பால்ஜி, ஆப்கானிஸ்தான், தாலிபான்

பட மூலாதாரம்,HAMED NAWEED/LEMAR AFTAAB

படக்குறிப்பு,

ரபியா பால்ஜி

19 மார்ச் 2024, 02:44 GMT
புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

"மிக முக்கியமான விஷயம், இது ஒரு காதல் கதை."

இப்படிக் கூறியவர் பிபிசி உலக சேவையில் பணிபுரியும் அப்துல்லா ஷதன், அவர் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர். ஒரு காலத்தில் திரைப்பட நடிகராக இருந்தவர். 50 ஆண்டுகளுக்கு முன்பு அதே காதல் கதையைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார்.

அத்திரைப்படம் இளவரசி ரபியா பால்ஜியின் வாழ்க்கை வரலாறு. அவர் இப்போதும் நேசிக்கப்பட்டு போற்றப்படுகிறார்.

அவர், சமூகத் தடைகளை மீறி ஒருவரைக் காதலித்தார். அதற்காக அவரது சகோதரனே அவரைக் கொன்றார்.

“அவள் அன்பின் சின்னம். காதலுக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்தவள். அதுதான் இன்றும் அனைவரையும் ஈர்க்கிறது,” என்று அப்படத்தில் இளவரசி ரபியாவின் காதலனாக நடித்த ஷதன் கூறுகிறார்.

ஆனால், ரபியாவின் காதல் இரண்டு வழிகளில் புரிந்துகொள்ளப்படுகிறது. ஒரு வகையில் அவரது காதல் தெய்வீகமானதாகவும், ரபியா ஒரு முஸ்லிம் துறவியாகவும் கருதப்படுகிறார். மற்றொருபுறம் அவர் ஒரு பெண்ணியவாதியாக அவரது காதல் கலகமாக, உடல்சார்ந்ததாகக் கருதப்படுகிறது. இப்படிச் சொல்பவர் ஆஸ்திரேலிய தேசியப் பல்கலைகழகத்தில் மானுடவியலில் முனைவர் பட்ட ஆராய்ச்சி செய்யும் ஷமீம் ஹுமாயுன்.

 
தலைமுறைகள் கடந்தும் சொல்லப்படும் கதை

ஆனால், ரபியா, இஸ்லாம் கலாசாரத்தின் பொற்காலத்தைச் சேர்ந்த சிறந்த கவிஞர்களில் ஒருவர், மேலும் ஆப்கானிஸ்தானின் கற்பனையில் மிகவும் மதிக்கப்படும் நபர்களில் ஒருவர் என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற முனாசா எப்திகர் கூறுகிறார்.

பண்டைய ஆப்கானிஸ்தானின் பால்க் பகுதியைப் பூர்வீகமாகக் கொண்டவர் ரபியா. இது இன்று வடகிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ளது. அங்கு 9-ஆம் நூற்றாண்டில் கணிதம் மற்றும் வானியல் செழித்து வளர்ந்தது. அங்கு 10-ஆம் நூற்றாண்டில் புகழ்பெற்ற தத்துவஞானி மற்றும் விஞ்ஞானி அவிசென்னா பிறந்தார்.

ரபியா கி.பி. 940-இல் பிறந்தார் என்று நம்பப்படுகிறது. இருப்பினும் அவரது ஆரம்பகால வாழ்க்கையை பற்றிய விவரங்கள் குறைவு என்பதால் சரியான தேதி நமக்குத் தெரியவில்லை.

ஆனால், இக்கதை தலைமுறைகள் கடந்தும் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு கதைசொல்லியும் இக்கதையில் தங்கள் சொந்த விளக்கத்தின்படி அவர்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதுவதை முன்னிலைப்படுத்தி வெவ்வேறு அம்சங்களை வலியுறுத்துகின்றனர்.

எனவே இக்கதைக்குப் பல பதிப்புகள் உள்ளன.

எப்டிகார் என்பவர் எழுதிய கதைதான் இன்று பரவலாகச் சொல்லப்படுகிறது.

ரபியா பால்ஜி, ஆப்கானிஸ்தான், தாலிபான்

பட மூலாதாரம்,MUNAZZA EBTIKAR

படக்குறிப்பு,

ரபியா கி.பி. 940-இல் பிறந்தார் என்று நம்பப்படுகிறது. இருப்பினும் அவரது ஆரம்பகால வாழ்க்கையை பற்றிய விவரங்கள் குறைவு

அழகும் அறிவும் ஒன்றுகூடிய இளம்பெண்

அக்கதை இப்படித் துவங்குகிறது.

"... ஆயிரம் மசூதிகளுடைய, பால்க் அமீரின் மகளாக ரபியா பிறந்தார். பன்னீரில் குளித்து, பட்டால் அலங்கரிக்கப்பட்டு, தங்க ரதத்தில் அமர்த்தப்பட்டார். அவள் பிறந்த நாளை பால்க் மக்கள் கொண்டாடினர்...”

"ரபியா அரண்மனையில் வளர்ந்தார், அங்கு அவருக்கு கலை, இலக்கியம், வேட்டை, வில்வித்தை ஆகியவை கற்பிக்கப்பட்டன..."

அக்காலத்தில் அப்பகுதியில் பெண்களின் கல்வி கற்பது அசாதாரணமானது அல்ல, என்று லண்டன் பல்கலைக்கழகத்தின் கிழக்கத்திய மற்றும் ஆப்பிரிக்க ஆய்வுகள் பள்ளியின் ஆய்வாளர் நர்கஸ் ஃபர்சாத் பிபிசியிடம் கூறினார்.

"இஸ்லாத்துக்கு முந்தைய மரபுகள் மற்றும் கலாச்சாரங்கள் இஸ்லாமிய காலகட்டத்திலும் தொடர்ந்தன. எனவே செல்வந்தர்கள் மற்றும் பிரபுக்களின் மகன்களைப் போலவே அவர்களது மகள்களுக்கும் கல்வியறிவு வழங்கப்பட்டது," என்கிறார் நர்கஸ் ஃபர்சாத்.

மேலும் அவர், "ரபியா ஒரு மகிழ்ச்சியான மற்றும் பணக்கார தந்தையின் செல்ல மகள்" என்று கூறுகிறார்.

"சமானிட் தேசத்தின் அரசவைக் கவிஞரான ருடாக்கி, ரபியாவின் பேச்சுத்திறன், மொழித்திறன் மற்றும் கவியாற்றல் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டார் என்பதும் நமக்குத் தெரியவருகிறது," என்று அவர் மேலும் கூறுகிறார்.

சிலகாலம் எல்லாம் மகிழ்ச்சியாகவே இருந்தது.

"அவளது அழகும், வார்த்தைகளும் வசீகரமாக இருந்தன . அவளது பேச்சுத்திறன் பலரையும் ஈர்த்தது.”

"ரபியா தனது கவிதைகளை மக்கள்முன் வாசித்தபோது, அவரது சமகால கவிஞர்களும் எழுத்தாளர்களும் வியப்பில் ஆழ்ந்தனர். அவர் தனது பெற்றோரின் இதயங்களை மட்டுமல்ல, பால்க் மக்களின் இதயங்களையும் வென்றார்."

இருப்பினும், அவரது சகோதரர் ஹரிஸ் அவர்மீது கொடிய பொறாமை கொண்டிருந்தார்.

அவர்களது தந்தை மரணப்படுக்கையில் இருந்தபோது, அவருக்குப் பிறகு ரபியாவை நன்றாக கவனித்துக் கொள்ளுமாறு ஹரிஸைக் கேட்டுக்கொண்டார். ஆனால் ஹரிஸ்தான் ரபியாவின் கொடூரமான முடிவுக்குக் காரணமாக இருந்தார்.

 
ரபியா பால்ஜி, ஆப்கானிஸ்தான், தாலிபான்

பட மூலாதாரம்,FARHAT CHIRA

படக்குறிப்பு,

அவர் தனது கடைசி கவிதை வரிகளை அரச குளியலறையின் சுவர்களில் தனது சொந்த இரத்தத்தால் எழுதினார் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள்

ரத்தத்தால் எழுதிய கடைசி வரிகள்

எப்டிகாரின் கதை தொடர்கிறது.

"ஒரு நாள், ரபியா தனது பால்கனியில் ஒரு தோட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தபோது, ஒரு அழகான மனிதர் ஹரிஸுக்கு மது பரிமாறுவதைக் கண்டாள்…”

"ஹரிஸின் துருக்கிய அடிமையும் புதையல் காவலருமான அவரது பெயர் பக்தாஷ். அவர் ரபியாவின் இதயத்தைக் கவர்ந்தார். அந்த தருணமே ரபியாவின் துயரமான விதி தொடங்கியது..."

பக்தாஷுக்கு ரபியா தனது விசுவாசமான பணிப்பெண் ரானா மூலம் காதல் கடிதங்களை அனுப்பத் துவங்கினார்.

"அருகிலிருந்தும் விலகியிருப்பவனே, நீ எங்கே இருக்கிறாய்? வந்து என் கண்ணுக்கும் என் இதயத்துக்கும் மகிழ்ச்சியைக் கொடு, இல்லையேல் வாளை எடுத்து என் வாழ்க்கையை முடித்துவிடு…"

பக்தாஷும் ரபியாவுக்கு அதேபோல அன்பான மற்றும் கவிதை மிகுந்த பதில் கடிதங்களை எழுதினார்.

காந்தஹாரின் ஆட்சியாளர் பால்க் பகுதியைத் தாக்க முற்பட்டபோது, ஹரிஸ், தனது ஆலோசகர்களுடன் கலந்தாலோசித்த பிறகு, பக்தாஷின் உதவியின்றி தனது எதிரியைத் தோற்கடிக்க முடியாது என்பதை அறிந்தார்.

பக்தாஷ் தன் எதிரியைக் கொன்றால், அவன் விரும்பியதை அவனுக்குப் பரிசாகத் தருவதாக ஹரிஸ் சொன்னான். பக்தாஷ் வெற்றி பெற்றார், ஆனால் முயற்சித்து அதில் பலத்த காயமடைந்தார்.

"அவர் கிட்டத்தட்ட உயிரை இழந்துவிட்ட தறுவாயில், முகத்தை மூடிய ஒரு போர்வீரர் பக்தாஷைக் காப்பாற்றவும், போரில் வெற்றி பெற அவருக்கு உதவவும் போர்க்களத்திற்கு பாய்ந்து வந்தார். இந்த வீரர் வேறு யாருமல்ல, ரபியா தான்..."

ரபியாவும் பக்தாஷும் காதலிக்கிறார்கள் என்பதை அறிந்த ஹரிஸ், பக்தாஷை கிணற்றில் வீசவும், ரபியாவை ‘ஹமாம்’ என்று அழைக்கப்படும் அரண்மனையின் குளியலறையில் பூட்டவும் உத்தரவிட்டார்.

சில பதிப்புகள், ஹரிஸ் ராபியாவின் கழுத்து நரம்புகளை வெட்ட உத்தரவிட்டதாகவும், மற்றவை, அவளது மணிக்கட்டில் உள்ள நரம்புகளை அவளே வெட்டிக் கொண்டதாகவும் கூறுகின்றன.

ஆனால் அவர் தனது கடைசி கவிதை வரிகளை அரச குளியலறையின் சுவர்களில் தனது சொந்த இரத்தத்தால் எழுதினார் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள்.

"உன் காதலின் கைதி நான்; தப்பிப்பது சாத்தியமல்ல

"அன்பு என்பது எல்லைகளற்றக் கடல், புத்தியிருப்பவன் அதில் நீந்த விரும்ப மாட்டான்...

"உனக்கு கடைசி வரை அன்பு வேண்டுமென்றால் ஏற்றுக்கொள்ளப்படாததை ஏற்றுக்கொள், கஷ்டங்களை மகிழ்ச்சியுடன் எதிர்கொ, விஷம் அருந்து, ஆனால் அதை தேன் என்று சொல்..."

சில நாட்களுக்குப் பிறகு, ரானாவின் உதவியுடன், பக்தாஷ் கிணற்றில் இருந்து தப்பித்து, ஹரிஸின் தலையை வெட்டிக்கொன்று, குளியலறைக்குச் சென்றார்.

"தரையில் கிடந்த ரபியாவின் அழகான, உயிரற்ற உடலையும், சுவர்களில் ரத்தத்தால் எழுதப்பட்ட அவளது கடைசி காதல் கவிதைகளையும் மட்டுமே" அவன் கண்டான்.

அவன் தனது காதலியுடன் தன்னுயிரையும் விட்டுவிட்டான்.

 
ரபியா பால்ஜி, ஆப்கானிஸ்தான், தாலிபான்

பட மூலாதாரம்,SHAMIM HOMAYUN

படக்குறிப்பு,

பால்க் பகுதியிலுள்ள ரபியா ஆலயம் சமூகச் சீர்கேட்டின் இடமாகக் கருதப்பட்டதால் மூடப்பட்டது.

ஒரே பெண், இரண்டு முகங்கள்

"ரபியா இறந்த பல நூற்றாண்டுகளுக்குப் பிறகும், மற்ற கவிஞர்கள் அவரது நற்பண்புகளையும் அழகையும் குறித்துப் பேசினர்," என்று ஃபர்சாத் கூறுகிறார்.

அவர்களில் ஒருவர் முதல் சூஃபிக் கவிஞரான அபு சயீத் அபு அல்-கைர் (1049 இறந்தவர்). இவர் அந்தக் காதல் கதையின் நாயகி ஏன் ஒரு புனிதராகக் கருதப்படுகிறார் என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறார்.

வெளிப்படையாகப் பார்த்தால் அவரது கவிதைகள் தெய்வீகத்தைப் பற்றிப் பேசுவதிலிருந்து வெகு தொலைவில் இருந்தன. ஆனால், ரபியா உணர்ந்த அன்பின் தன்மையைப் பற்றி அல்-கைர் வியந்து பேசுகிறார்.

"அது மிகவும் தீவிரமானது, அது தெய்வீகமான இடத்திலிருந்து மட்டுமே வந்திருக்க முடியும்," என்று அல்-கைர் கூறியதை ஹுமாயுன் கூறுகிறார்.

அல்-கைர் எழுதிய பிரதி இப்போது நமக்குக் கிடைக்கவில்லை என்றாலும், 13-ஆம் நூற்றாண்டின் பாரசீகக் கவிஞர் ஃபரித் அல்-தின் அத்தாரால் மீண்டும் எழுதப்பட்டதிலிருந்து நாம் அறியலாம், என்கிறார்.

ரபியா ஒரு உண்மையான சூஃபி என்பதை நிரூபிப்பதே இந்த இரண்டு கவிஞர்களின் குறிக்கோள் என்று அவர் கூறுகிறார்.

அந்த விளக்கத்தின்படி, பக்தாஷ் மீதான அவளது காதல் வெறும் காமத்தால் தூண்டப்படவில்லை. மாறாக அவளுடைய காதல் தெய்வீக அன்பை வெளிப்படுத்தும் வழிமுறையாகும்.

இருப்பினும், வேறு ஒரு புரிதலின்படி ரபியா பெண்களின் தைரியத்திற்கான குறியீடாக இருக்கிறார். இந்தப் புரிதலின்படி ரபியா பழமைவாத எதிர்ப்பின் அடையாளமாகக் கருதப்படுகிறார்.

கடந்த 2018-ஆம் ஆண்டு காபூலில் நடந்த ‘குறிப்பிடத்தக்க ஆப்கான் பெண்களைப்’ பற்றிய ஓவியக் கண்காட்சியில்), ஆப்கானிஸ்தான் ஓவியரும் புகைப்படக் கலைஞருமான ராதா அக்பர், "ரபியா ஆணாதிக்கத்திற்கு எதிரான எதிர்ப்பின் சின்னம். காதலுக்காகவும் சுதந்திரத்திற்காகவும் ஆப்கானியப் பெண்கள் எதிர்கொண்ட ஒடுக்குமுறையின் நினைவூட்டல்," என்று ராபியாவை விவரித்தார்.

பல வருடங்களுக்கு முன்பு, ஆப்கானிஸ்தானின் முதல் திரைப்படமான ‘ரபியா பால்ஜி’ வெளியானபோது, பிரபல பத்திரிகையான ‘ஜ்வாண்டுன்’ இதழில் அதுபற்றி ஒரு கட்டுரை வெளியானது. அதன் முதல் வரி: "ரபியாவின் கதை கழுத்து நெரிக்கப்பட்ட நம் சமூகத்தின் பெண்களின் வாயிலிருந்து வெளிவந்த கதறல்."

 
ரபியா பால்ஜி, ஆப்கானிஸ்தான், தாலிபான்

பட மூலாதாரம்,WORLD DIGITAL LIBRARY, LIBRARY OF CONGRESS

படக்குறிப்பு,

ரபியா குறித்த திரைப்படத்தில் பெண்கள் காபூலில் 1970-களில் பிரபலமாக இருந்த நாகரீகமான பாணியில் ஆடம்பரமான, இறுக்கமான ஆடைகளுடனும் முடி அலங்காரத்துடனும் தோன்றினர்

தாலிபான்களிடமிருந்து காப்பாற்றப்பட்ட திரைப்படம்

ரபியா பால்ஜி படத்தில்தான் அப்துல்லா ஷதன் பக்தாஷ் வேடத்தில் நடித்தார். அதில் அவர் ரபியாவை காதலித்தார். குறிப்பாகச் சொல்வதெனில் அப்பாத்திரத்தில் நடித்த நடிகை சிமாவுடன். அவரையே அவர் திருமணமும் செய்து கொண்டார். இது அப்போது ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியது.

"ரபியா பால்ஜி மிகவும் பிரபலமான படமாகும்," என்று ஷதன் பிபிசி முண்டோவிடம் கூறினார். “சுமார் 40 பெண்கள் இதில் வேலை செய்தனர். இப்போது தாலிபான்களின் ஆட்சியில் அப்படி ஒரு படத்தை எடுக்கவே முடியாது," என்றார்.

அது மட்டுமல்ல. அப்படத்தில் ரபியா காதல்வயப்பட்ட, சுதந்திரமான, வலிமையான பெண். அவரும் மற்ற பெண்களும் காபூலில் 1970-களில் பிரபலமாக இருந்த நாகரீகமான பாணியில் ஆடம்பரமான, இறுக்கமான ஆடைகளுடனும் முடி அலங்காரத்துடனும் தோன்றினர்.

தாலிபான்கள் 1996-ஆம் ஆண்டு கடுமையான தணிக்கையை திணித்தபோது காபூலில் உள்ள தேசிய திரைப்படக் காப்பகத்தில் பணிபுரிந்தவர்கள், 6,000 விலைமதிப்பற்ற ஆப்கானிய திரைப்படங்களைப் பாதுகாத்தனர். அவர்கள் அவசரமாக ஒரு பொய்ச்சுவரைக் காட்டி அதற்குப் பின்னால் மறைத்து வைத்து, தாலிபான்களின் தணிக்கை பிடியில் இருந்து காப்பாற்றிய திரைப்படங்களில் இதுவும் ஒன்றாகும்.

பால்க் பகுதியிலுள்ள ரபியா ஆலயம் சமூகச் சீர்கேடின் இடமாகக் கருதப்பட்டதால் மூடப்பட்டது.

ஆனால், பள்ளிகள் முதல் மருத்துவமனைகள் வரை, பல பெண் நிறுவனங்கள், ‘ரபியா’ என்று பெயரிடப்பட்டன.

https://www.bbc.com/tamil/articles/cekervmdr94o

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் திடீர் தாக்குதல் - தாலிபன் அரசுடன் என்ன பிரச்னை?

1 month ago
ஆப்கானிஸ்தான் vs பாகிஸ்தான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், பாகிஸ்தானிலிருந்து கரோலின் டேவிஸ் & லண்டனிலிருந்து ஃப்ளோரா ட்ரூரி
  • பதவி, பிபிசி
  • 18 மார்ச் 2024, 12:10 GMT
    புதுப்பிக்கப்பட்டது 17 நிமிடங்களுக்கு முன்னர்

ஆப்கானிஸ்தானில் ஒரே இரவில் 2 இடங்களில் பாகிஸ்தான் நடத்திய திடீர் வான்வழித் தாக்குதல்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் எட்டு பேர் கொல்லப்பட்டதாக தாலிபன்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

திங்கள்கிழமை (மார்ச் 18) உள்ளூர் நேரப்படி 03:00 மணியளவில் நடந்த இந்த "பொறுப்பற்ற" தாக்குதல்களில், பாகிஸ்தானுடனான எல்லைக்கு அருகிலுள்ள வீடுகள் தாக்கப்பட்டதாக, தாலிபன் அரசின் செய்தித் தொடர்பாளர் ஸைபுல்லா முஜாஹித் தெரிவித்தார்.

பாகிஸ்தான் இதுகுறித்து இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை.

ஆனால், கடந்த சனிக்கிழமை பாகிஸ்தான் துருப்புகள் 7 பேரை அடையாளம் தெரியாத ஆயுதக்குழுவினர் கொன்றதற்காக, “வலுவான பதிலடியை கொடுப்போம்” என, அந்நாட்டு குடியரசு தலைவர் ஆசிஃப் அலி சர்தாரி உறுதியளித்ததைத் தொடர்ந்து இத்தாக்குதல் நடந்துள்ளது.

உயிரிழந்த பாகிஸ்தான் படையினர் இருவரின் இறுதிச்சடங்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ஆசிஃப் அலி சர்தாரி, இதற்கு காரணமானவர்கள் “யாராக இருந்தாலும், எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் பதிலடி கொடுக்கப்படும்” என தெரிவித்தார்.

வடக்கு வசீரிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் பாகிஸ்தான் ராணுவ தளத்தின் மீது சனிக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டது. ஆப்கானிஸ்தானிலிருந்து இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் கூறுகிறது. பாகிஸ்தான் அரசாங்கத்தின்படி, இத்தகைய தாக்குதல்களின் எண்ணிக்கை சமீப மாதங்களாக அதிகரித்து வருகின்றன.

பாகிஸ்தான் துருப்புகள் மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலுக்கு பதிலடியாகவே இன்று ஆப்கானிஸ்தானின் கோஸ்ட் மற்றும் பாக்டிகா மாகாணங்களில் தாக்குதல் நடைபெற்றதாக, பெயர் தெரிவிக்க விரும்பாத உள்ளூர் அரசு அதிகாரியை மேற்கோள் காட்டி ஏ.எஃப்.பி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

 
பாகிஸ்தானுக்கு தாலிபன் பதிலடி

தலிபான் நிர்வாகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் ஒரு அறிக்கையில், "ஆப்கானிஸ்தான் பிரதேசத்தின் பாதுகாப்பில் சமரசம் செய்ய யாரையும் அனுமதிக்காது. இந்த தாக்குதல்களில் கிழக்கு எல்லையான கோஸ்ட் மற்றும் பக்திகா மாகாணங்களில் ஐந்து பெண்கள் மற்றும் மூன்று குழந்தைகள் கொல்லப்பட்டனர்", என்று குறிப்பிட்டுள்ளார்.

தலிபான் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில், வான்வழித் தாக்குதல்களுக்கு பதிலடியாக எல்லையில் பாகிஸ்தான் துருப்புகளை அதன் பாதுகாப்புப் படைகள் குறிவைத்ததாகக் கூறியுள்ளது.

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையில் இரு நாட்டுப் படைகளுக்கும் இடையே மோதல்கள் நடந்ததாக அல்ஜசீரா மற்றும் பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் இடையே உச்சக்கட்ட பதற்றம்
வான்வழி தாக்குதல்களில் 8 பேரை கொன்றதாக பாகிஸ்தான் மீது ஆப்கானிஸ்தான் குற்றச்சாட்டு

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,

உயிரிழந்த பாகிஸ்தான் படையினரின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்ட ஆசிஃப் அலி சர்தாரி

ஆனால், தாலிபன் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ஸைபுல்லா முஜாஹித் சமூக ஊடகமான எக்ஸ் தளத்தில் வெளியிட்ட அறிக்கையில், "கட்டுப்பாடு இல்லாதது மற்றும் தங்கள் பிரதேசத்தில் உள்ள பிரச்னைகளுக்கு ஆப்கானிஸ்தானை குறை கூற வேண்டாம்" என்று பாகிஸ்தானை எச்சரித்தார்.

”இதுபோன்ற சம்பவங்கள், பாகிஸ்தானால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்,” என்றும் அவர் கூறினார்.

இந்த தாக்குதல்களில் "மக்கள் குடியிருந்த வீடுகள்" தாக்கப்பட்டதாகவும் இதில் ஐந்து பெண்கள் மற்றும் மூன்று குழந்தைகள் கொல்லப்பட்டதாகவும் அவர் கூறினார்.

2021-ம் ஆண்டில் தாலிபன்கள் நாட்டை மீண்டும் கைப்பற்றியதில் இருந்து ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டின் பிற்பகுதியில், பாகிஸ்தான் பல்லாயிரக்கணக்கான ஆப்கானியர்களை பாகிஸ்தானை விட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்தியது. பாகிஸ்தானில் தங்குவதற்கு அவர்களிடம் சரியான ஆவணங்கள் இல்லை என அந்நாடு கூறியது. பல அகதிகள் மற்றும் புகலிடம் கோரி வந்தவர்கள் பாகிஸ்தானை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டதாக மனித உரிமைக் குழுக்கள் விமர்சித்தன.

பாதுகாப்புக் காரணங்களுக்காக இதைச் செய்ததாக அந்த நேரத்தில் பாகிஸ்தான் காபந்து அரசாங்கத்தின் அமைச்சர்கள் கருத்து தெரிவித்தனர். ஆப்கானிஸ்தானை தாலிபன்கள் மீண்டும் கைப்பற்றிய பிறகு, அதனை ஆயுதக் குழுக்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டதாக சில ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், ஆயுதக் குழுக்களை ஆதரிக்கவில்லை என தாலிபன்கள் மறுத்துள்ளதாக, ஏ.எஃப்.பி செய்தி முகமை தெரிவித்துள்ளது.

https://www.bbc.com/tamil/articles/cx9zxqy4er5o

3ஆம் உலகப்போர் வெகு தொலைவில் இல்லை – ஜனாதிபதியானதும் புட்டின் எச்சரிக்கை!

1 month ago
spacer.png 3ஆம் உலகப்போர் வெகு தொலைவில் இல்லை – ஜனாதிபதியானதும் புட்டின் எச்சரிக்கை!

“அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளும் – ரஷ்யாவும் நேருக்கு நேர் மோதினால் மூன்றாம் உலகப் போர் ஏற்படும். ஆனால், அத்தகைய சூழலை இங்கு யாரும் விரும்பவில்லை” என ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற புட்டின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரஷ்யாவில் நடந்த ஜனாதிபதி தேர்தலில், 88 சதவீத வாக்குகளுடன் விளாடிமிர் புட்டின் வெற்றி பெற்றார்.

தொடர்ந்து ஐந்தாவது முறையாகவும் அவர் ஜனாதிபதி அரியணையில் ஏறியிருக்கிறார்.

இதன்போது, கருத்து தெரிவித்த விளாடிமிர் புட்டின்,

வாக்களித்து வெற்றி பெற செய்த மக்களுக்கு நன்றி.

அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளும் – ரஷ்யாவும் நேருக்கு நேர் மோதினால் மூன்றாம் உலகப் போர் ஏற்படும்.

ஆனால், அத்தகையச் சூழலை இங்கு யாரும் விரும்பவில்லை.

மூன்றாவது உலகப்போர் வெகு தொலைவில் இல்லை. ஒரே அடி தொலைவில் தான் இருக்கிறது.

அமெரிக்காவில் ஜனநாயகம் இல்லை. அங்கே இப்போது பெரிய குளறுபடியான சூழல் மட்டுமே நிகழ்கிறது.

நிலவரம் அப்படியிருக்க அவர்கள் ரஷ்ய தேர்தல் நியாயமாக நடத்தப்படவில்லை என்று போலி குற்றச்சாட்டுகளை முன்வைப்பது நகைப்புக்குரியது என அவர் தெரிவித்தார்.

https://athavannews.com/2024/1373835

காசாவின் அல்ஷிபா மருத்துவமனை மீது இஸ்ரேல் நள்ளிரவில் திடீர் தாக்குதல் - டாங்கிகளை பயன்படுத்தியும் தாக்குதல்

1 month ago

Published By: RAJEEBAN   18 MAR, 2024 | 12:07 PM

image

காசாவின் அல்ஸிபா மருத்துவமனை மீது இஸ்ரேல் நள்ளிரவில் தாக்குதலொன்றை மேற்கொண்டது என பிபிசி தெரிவித்துள்ளது.

மருத்துவமனைக்குள் டாங்கி மற்றும் துப்பாக்கி பிரயோக சத்தங்கள் கேட்கின்றன எனவும் தெரிவித்துள்ள பிபிசி  தாங்கள் மிகவும் துல்லியமான உயர் இலக்கை மையப்படுத்திய தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக இஸ்ரேலிய படையினர் தெரிவித்துள்ளனர் எனவும் செய்தி வெளியிட்டுள்ளது.

மருத்துவமனைக்குள் ஹமாஸ் அமைப்பினர் மீண்டும் ஒன்றுசேர்ந்து தாக்குதலில் ஈடுபடுகின்றனர் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

alshifa11.jpg

காசாநகரில் உள்ள மருத்துவமனையில் பதற்றநிலை காணப்படுகின்றது என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

டாங்கிகள் எங்களை சூழ்ந்துள்ளன நாங்கள் கூடாரங்களுக்குள் மறைந்திருக்கின்றோம் டாங்கிகளின் சத்தங்களை எங்களால் கேட்க முடிகின்றது என ஒருவர் தெரிவிக்கும் குரல்பதிவு கிடைத்துள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது.

சமூக ஊடகங்களில் வெளியாகும் உறுதிப்படுத்தப்படாத வீடியோக்களில் மருத்துவமனையை சுற்றியுள்ள பகுதிகளில் துப்பாக்கி சத்தங்களை கேட்க முடிகின்றது.

மருத்துவமனைக்குள் இராணுவத்தினர் காணப்படுகின்றனர். பலர் கொல்லப்பட்டுள்ளனர், காயமடைந்துள்ளனர், சிலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பேரழிவு நிலை காணப்படுகின்றது என ஊடகவியலாளர் ஒருவர் மருத்துவமனைக்குள் இருந்து தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிய படையினர் மிகவும் உறுதியான புலனாய்வு தகவல்களின் அடிப்படையில் செயற்படுகின்றனர் என இஸ்ரேலிய அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/179008

ரஸ்ய ஜனாதிபதி தேர்தலில் புடின் அமோக வெற்றி.

1 month ago

ரஸ்யாவில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் விளாடிமிர் புட்டின் அமோக வெற்றியை பதிவு செய்துள்ளார்.

தேர்தலில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 87 வீதமான வாக்குகள் புட்டினுக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி புட்டின் ஐந்தாம் தடவையாகவும் ரஸ்யாவின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

 

வாக்கு பதிவு

ரஸ்ய ஜனாதிபதி தேர்தலில் புடின் அமோக வெற்றி | Kremlin Vladimir Putin Claim Landslide

கடந்த மூன்று நாட்களாக ரஸ்யாவில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தக் காலப் பகுதியில் பல்வேறு எல்லைப் பகுதிகளில் உக்ரைன் படையினர் தாக்குதல் நடத்தியிருந்தனர்.

இந்த தேர்தலில் புட்டினை எதிர்த்து மூன்று வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தனர் என்பதுடன் அவர்கள் பெயரளவில் தேர்தலில் போட்டியிட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

புட்டினுக்கு எதிரான போட்டியிடக் கூடிய வலுவான வேட்பாளர்கள் எவருக்கும் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என மேற்குலக நாடுகள் குற்றம் சுமத்தியுள்ளன.

ரஸ்யாவின் அபிவிருத்தியை மேற்குலக நாடுகள் தடுக்கின்றன

ரஸ்ய ஜனாதிபதி தேர்தலில் புடின் அமோக வெற்றி | Kremlin Vladimir Putin Claim Landslide

 

எதிர்பார்க்கப்பட்டவாரே தேர்தலில் தாம் வெற்றியை பதிவு செய்ததாக புட்டின் தெரிவித்துள்ளார்.

நாட்டின் அபிவிருத்தியை மட்டுப்படுத்தும் நோக்கில் மேற்குலக நாடுகள் நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேற்குலக நாடுகளின் முயற்சிகளை முறியடித்து ரஸ்ய மக்கள் தங்களது ஒற்றுமையை தேர்தலில் வெளிப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தவும், இராணுவத்தை விஸ்தரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என புட்டின் தெரிவித்துள்ளார்.

இம்முறை தேர்தலில் 74 வீதமான வாக்காளர்கள் வாக்களித்துள்ளதாக ரஸ்ய அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

https://tamilwin.com/article/kremlin-vladimir-putin-claim-landslide-1710720576

 
 
 
 
 

தோழியை மணமுடித்தார் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர்

1 month ago
உலகின் கவனத்தை ஈர்த்துள்ள ஒருபாலின திருமணம் - தனது நீண்டகால தோழியை மணமுடித்தார் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர்

Published By: RAJEEBAN   17 MAR, 2024 | 01:02 PM

image

அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார அமைச்ச பெனிவொங் தனது நீண்டகாலதோழி சோபி அல்லோச்சசுடன் திருமணபந்தத்தில் இணைந்துகொண்டுள்ளார். 

penny_wong_11.jpg

அவுஸ்திரேலியாவின் இந்த ஒருபால் இனத்தவர்கள் திருமணம் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அடிலெய்ட் ஹில்ஸ் பகுதியில் சனிக்கிழமை இடம்பெற்ற இந்த திருமண நிகழ்வில் பிரதமர் அன்டனி அல்பெனிஸ் உட்பட  தொழில்கட்சியின் பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

சமூக ஊடகங்களில் இது குறித்த தகவல்களை பதிவிட்டுள்ள பெனிவொங் இந்த விசேடமான நாளை எங்களின் பல நண்பர்கள் குடும்பத்தவர்கள் எங்களுடன் பகிர்ந்துகொள்ள முடிந்தமை குறித்து மகிழ்ச்சியடைவதாக தெரிவித்துள்ளார்.

தனது வாழ்க்கை துணையுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட படத்தையும் பெனிவொங் வெளியிட்டுள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் 2007 இல் தனது வாழ்க்கை துணையை சந்தித்தார். இவர்களிற்கு இரு பெண்பிள்ளைகள் உள்ளனர். எனினும் இருவரும் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விடயங்களை மிகவும் இரகசியமாக பேணிவருகின்றனர்.

https://www.virakesari.lk/article/178934

ஐரோப்பாவில் அடுத்தடுத்து தகர்க்கப்படும் அணைகள் - என்ன காரணம்?

1 month ago
ஐரோப்பாவில் இடிக்கப்படும் பழைய அணைகள்

பட மூலாதாரம்,MIKKO NIKKINEN / STORYMAKERS 2021

கட்டுரை தகவல்
  • எழுதியவர், லுக்ரேசியா லோசா
  • பதவி, பிபிசி செய்தியாளர்
  • 16 மார்ச் 2024

செயற்கையாக கட்டப்பட்ட அணைகள் நீண்ட காலமாக ஐரோப்பாவின் நீர்வழித்தடங்களை ஆக்கிரமித்துள்ளன. இந்த பழைய அணைகள் காலப்போக்கில் பலவீனமடைந்து, தகர்க்கப்படும் போது, ஆறுகள் தாங்கள் இழந்த வழித்தடங்களை அணைத்துக் கொள்கின்றன. ஆறுகளின் வழித்தடங்களை மீட்கும் திட்டங்கள் தற்போது ஐரோப்பாவில் அதிகரித்து வருகின்றன.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, பின்லாந்தில் உள்ள ஹிடோலான்ஜோகி ஆற்றில் உள்ள அணைகளை கட்டுமானத் தொழிலாளர்கள் இடிக்கத் தொடங்கியபோது, சால்மன் மீன்கள் நீரில் செல்வதைக் கண்டு ஆச்சரியப்பட்டனர். அழிந்துவிட்டதாக நம்பப்பட்ட சால்மன் மீன்கள் பல வருடங்களுக்கு பிறகு ஆற்றில் காணப்பட்டன.

சுற்றுச்சூழல் மேம்படுவதற்கான ஒரு அறிகுறியாக இதைப் பார்க்கிறார் பாலினா லூஹி. "அதில் பெரிய மீன்கள் மட்டுமல்ல, பல சால்மன் குஞ்சுகளும் இருந்தன," என்று ஃபின்லாந்தின் சூழலியல் நிபுணர் லூஹி ஆர்வத்துடன் கூறுகிறார்.

"அவை ஏற்கனவே ஆற்றின் ஆழமான பகுதியில் முட்டையிட்டுக் கொண்டிருந்தன. அணையை அகற்றிய பிறகு அந்த இடம் எப்படி இருந்தது என்பதைப் பார்த்தபோது, உண்மையில் என் கண்களில் கண்ணீர் வந்தது." எனக் கூறுகிறார் லூஹி.

ஐரோப்பாவில் இடிக்கப்படும் பழைய அணைகள்

பட மூலாதாரம்,MIKKO NIKKINEN / STORYMAKERS 2021

மீட்கப்படும் நதிகளின் வழித்தடங்கள்

லடோகா ஏரியிலிருந்து பின்லாந்துக்கு இடம்பெயரும் நன்னீர் சால்மன் மீன்களுக்கு இந்த நதி ஒரு முக்கிய பாதையாக இருக்கிறது. ஆனால் 1911 மற்றும் 1925க்கு இடையில் முன்னெடுக்கப்பட்ட நீர் மின்சாரம் உற்பத்தி செய்யும் மூன்று அணைகளின் கட்டுமானம், சால்மன் மீன்கள் மற்றும் அவற்றின் முட்டையிடும் இடங்களுக்கு இடையில் புதிய தடைகளை உருவாக்கியது. சால்மன் மற்றும் பிற மீன்களான பழுப்பு ட்ரவுட் போன்றவை ஆற்றின் மற்றொரு பக்கத்தில் சிக்கிக்கொண்டன.

இன்று அணைகள் அகற்றப்பட்ட நிலையில், உயரமான மரங்களால் சூழப்பட்ட புதிதாக கட்டப்பட்ட ரேபிட்கள் வழியாக மீண்டும் தண்ணீர் ஓடுகிறது. ஒவ்வொரு முறை அணை அகற்றப்படும்போதும், சால்மன் மீன்கள் ஆற்றின் புதிய பகுதியை "தழுவிக் கொள்கிறது" என்கிறார் தென் கரேலியன் ரிக்ரியேஷன் ஏரியா அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனர் ஹன்னா ஒல்லிகைனென்.

பழைய அணைகளை கையகப்படுத்தி, அதை சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுலா வளர்ச்சிக்கு பயன்படுத்தும் பொறுப்பு இந்த அறக்கட்டளையின் கைகளில் உள்ளது. 2021ஆம் ஆண்டில் முதல் அணை அகற்றப்பட்ட பிறகு, மீன்களின் ஐந்து முட்டையிடும் கூடுகள் நீரில் காணப்பட்டன.

ஒரு வருடம் கழித்து, 2022 இலையுதிர் காலத்தில் ஒரு ஏக்கருக்கு 200 சாலமன் மீன்கள் (0.4 ஹெக்டேர்) என்ற சாதனையை எட்டியது. 2023 டிசம்பரில் ரிடகோஸ்கி என்ற மேல் அணையை இடிக்கும் பணி முடிந்ததும், சாலமன் மீன்களால் ஆற்றின் மேல் பகுதிகளுக்கும் அதன் துணை நதிகளுக்கும் செல்ல முடிந்தது.

ஆற்றின் ஆரோக்கியம் மட்டுமல்ல, பொருளாதார சூழலையும் கருத்தில் கொண்டு பல பத்தாண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட பணியின் விளைவாக மூன்று அணைகளும் அகற்றப்பட்டன என்கிறார் ஒல்லிகைனென். இந்த அணைகளின் பராமரிப்பு செலவுகள் மற்றும் கட்டாய சுற்றுச்சூழல் பாதுகாப்புகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அணைகளால் மின் உற்பத்தி நிலைய உரிமையாளர்களுக்கு லாபமில்லை என்று மதிப்பீடுகள் முடிவு செய்தன என ஒல்லிகைனென் கூறுகிறார். அதனால் அணைகள் அகற்றப்பட்டன.

எவ்வாறாயினும், மூன்று ஃபின்னிஷ் அணைகளின் அகற்றம் என்பது ஒரு தனிப்பட்ட வழக்கு அல்ல. ஐரோப்பா முழுவதும், பல பழைய அணைகள் அவற்றின் முடிவை நெருங்கி வருகின்றன அல்லது அவற்றின் பராமரிப்பு செலவுகள் அவை வழங்கும் லாபத்தை விட அதிகமாக உள்ளன. இது போன்ற பெரிய அணைகள் மட்டுமல்ல, லட்சக்கணக்கான சிறிய அணைகளும் ஐரோப்பிய நதிகளின் வழித்தடங்களை ஆக்கிரமித்துள்ளன.

 
ஐரோப்பாவில் இடிக்கப்படும் பழைய அணைகள்

பட மூலாதாரம்,MIKKO NIKKINEN / STORYMAKERS 2021

பெரிய அணைகளால் தொடரும் பிரச்னை

ஐரோப்பா மற்றும் அமெரிக்கா போன்ற அதிக தொழில்மயமான பகுதிகளில் உள்ள ஆறுகள் பல நூற்றாண்டுகளாக, சாலைகள் கட்டமைத்தல், விவசாயத்திற்கான நீர் எடுத்தல், நீர் ஆலைகள் மற்றும் மின்சாரம் உற்பத்தி செய்யும் கட்டமைப்புகள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளன.

ஆராய்ச்சியாளர்களின் மதிப்பீடுகளின்படி, உலகின் மூன்றில் ஒரு பங்கு ஆறுகள் மட்டுமே அதன் முழு வழித்தடத்தில் 1,000 கிமீக்கும் (621 மைல்கள்) அதிகமான தூரத்திற்கு சுதந்திரமாக பாய்கின்றன.

இத்தகைய தடைகள் தொடர் பிரச்னைகளை உருவாக்கியுள்ளன. அவை பல்லுயிர் இழப்பை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், மீன் மற்றும் நுண்ணுயிரிகளை பாதிக்கிறது. மேலும் ஆறுகளின் வளங்கள் மற்றும் வண்டல்கள் கீழ்நோக்கி பாய்வதைத் தடுக்கிறது. இதனால் மீன்வளம் மற்றும் அவற்றைச் சார்ந்த வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. அணைகள், ஆற்று நீரில் உள்ள வண்டல்களைத் தடுப்பதால், கீழ்நிலை நீரும் அதிக அரிக்கும் தன்மை கொண்டதாக மாறிவிடுகிறது.

நதியின் வழித்தடத்தில் ஏற்படும் இந்த துண்டிப்பு, நீர்வாழ் உயிரினங்களை பாதிக்கிறது. ஆற்றின் இயக்கவியல் மற்றும் வெப்பநிலையை மாற்றியமைக்கிறது என சான் பிரான்சிஸ்கோ எஸ்டூரி இன்ஸ்டிடியூட்டில் உள்ள மீள் நிலப்பரப்பு திட்டத்தின் அறிவியல் இயக்குனர் மெலிசா ஃபோலே விளக்குகிறார்.

ஐரோப்பாவில் இடிக்கப்படும் பழைய அணைகள்

பட மூலாதாரம்,MIKKO NIKKINEN / STORYMAKERS 2021

அழிவின் விளிம்பில் நன்னீர் மீன் இனங்கள்

இனப்பெருக்கம் செய்ய இடம்பெயரும் உயிரினங்களுக்கும் பல தடைகளை உருவாக்குகின்றன அணைகள். குறிப்பாக மீன்களின் எண்ணிக்கையில் ஏற்படும் தாக்கம். ஐநாவின் COP28 காலநிலை மாநாட்டில் வெளியிடப்பட்ட அறிக்கையில், உலகின் 25% நன்னீர் மீன் இனங்கள் அழியும் அபாயத்தில் இருப்பதாகவும், மேலும் அச்சுறுத்தலுக்கு உள்ளான 45% நன்னீர் மீன் இனங்கள் அணைகள் மற்றும் நதியிலிருந்து நீர் எடுப்பதால் எதிர்மறையான விளைவுகளை சந்திக்கின்றன என தெரிவிக்கப்பட்டது.

இது புலம்பெயர்ந்த மீன்களை மட்டுமல்ல, நீர்வழிப்பாதையில் வாழும் சிறிய மீன்களை கூட பாதிக்கிறது. பல்லுயிர் இழப்புக்கான ஐந்து முக்கிய காரணங்களில் பிராக்மெண்டேஷன் (Fragmentation) செயல்முறை கூட உள்ளது என்று ஆராய்ச்சி காட்டுகிறது.

36 ஐரோப்பிய நாடுகளில் குறைந்தது 1.2 மில்லியன் தடைகள் நதி ஓட்டத்தைத் தடுக்கின்றன எனவும், அதில் சுமார் 68 சதவீத தடைகள் 2 மீட்டருக்கும் குறைவான உயரம் கொண்டவை என ஆராய்ச்சி காட்டுகிறது. "20 செ.மீ அளவுக்கு சிறிய தடைகள் கூட சில உயிரினங்களின் இயக்கத்தை பாதிக்கலாம் அல்லது தாமதப்படுத்தலாம்" என்கிறார் ஸ்வான்சீ பல்கலைக்கழகத்தின் நீர்வாழ் உயிரியலில் பேராசிரியரும், அம்பர் ஒருங்கிணைப்பாளருமான கார்லோஸ் கார்சியா டி லீனிஸ்.

2016ஆம் ஆண்டு முதல், ஆம்பர் திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து கார்சியா டி லீனிஸின் ஒருங்கிணைக்கப்பட்ட குழு ஐரோப்பா முழுவதும் 2,000 கிமீ (1,243 மைல்) ஆறுகளின் வழித்தடங்களில் பயணம் செய்து, அவற்றின் துண்டிப்புகளை, தடைகளை வரைபடமாக பதிவுசெய்தது. அவர்கள் அணைகள் மட்டுமல்லாது, மதகுகள், பிற சிறிய தடுப்பணைகளையும் பதிவு செய்துள்ளனர்.

பயனற்ற 150,000 அணைகள்

உண்மையில் ஒரு அணை அல்லது தடையை அகற்றும் போது, பல காரணிகளை கருத்தில் கொள்ள வேண்டும். உரிமம் மற்றும் மாநில சட்டங்கள், பொறியியல் பணிக்கான நிதி மற்றும் சாத்தியக்கூறுகள் வரை. ஐரோப்பாவின் 150,000 நீர்வழித் தடைகள் இப்போது பயனற்றுப் போனதாகக் கருதப்படுகிறது. பழைய அணைகளுக்கு அதிக பராமரிப்பு தேவைப்படுகிறது, மேலும் அவை இடிந்து விழும் அபாயத்தில் உள்ளன.

ஐரோப்பாவில் ஆயுட்காலம் முடிந்துவிட்ட, காலாவதியான அணைகளுக்கு பல எடுத்துக்காட்டுகள் உள்ளன, அவற்றின் பராமரிப்பு செலவுகள் இப்போது ஆற்றல் உற்பத்தியின் நன்மைகளை விட அதிகமாக உள்ளன, 2016 இல் நிறுவப்பட்ட 'ஐரோப்பாவின் அணை அகற்றும் திட்டக் குழுவின்' மேலாளர் பாவோ பெர்னாண்டஸ் கரிடோ விளக்குகிறார். ஐரோப்பாவின் அணை அகற்றும் திட்டக் குழு 2022இல் குறைந்தது 325 தடைகளை அகற்றியுள்ளது, இது முந்தைய ஆண்டை விட 36% அதிகம்.

அணைகள் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதை ஒப்புக்கொள்வதால், ஆற்றல் உற்பத்தியில் நீர்மின்சாரத்தின் நன்மைகளை புறக்கணிக்க வேண்டும் என்று அர்த்தமல்ல. "பயன்பாட்டில் உள்ள அணைகளை தகர்க்கவோ அல்லது அகற்றவோ யாரும் நினைப்பதில்லை" என்று கார்சியா டி லீனிஸ் தெளிவுபடுத்துகிறார். "நாங்கள் காலாவதியான அணைகளை அகற்றுவதை மட்டுமே இலக்காகக் கொண்டுள்ளோம். அதனால் இனி சமூகத்திற்கு எந்த பயனுமில்லை மற்றும் நதியின் ஓட்டத்தை தடுக்கின்றன"

நாட்டிற்கு நாடு வேறுபட்டாலும், அணையை அகற்றும் செயல்முறைக்கு சட்டம் உதவும். ஐரோப்பாவில் அணைகளை அகற்றுவதில் ஸ்பெயின் நாடு முன்னணியில் உள்ளது. 2022இல் 133 அணைகள் தகர்க்கப்பட்டன. அதைத் தொடர்ந்து ஸ்வீடன் மற்றும் பிரான்ஸும் இதை முன்னெடுக்கின்றன. நதிகள் இணைப்பு என்பது ஐரோப்பிய ஆணையத்தின் இயற்கை மறுசீரமைப்புச் சட்டத்தின் மையப் பொருளாகவும் உள்ளது.

நவம்பர் 2023இல், ஐரோப்பிய உறுப்பு நாடுகள் தற்காலிக உடன்படிக்கைக்கு முன்வந்தன. 2030க்குள் ஆறுகளுக்கு 25,000 கிமீ (15,530 மைல்கள்) தடைகளற்ற நீர் வழித்தடத்தை சாத்தியமாக்க, மனிதனால் உருவாக்கப்பட்ட தடைகளை அகற்றுவதற்கான கடமையும் அடங்கும். இந்தச் சட்டம் பிப்ரவரி 27 அன்று ஐரோப்பிய பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டது.

ஐரோப்பாவில் மட்டும் இந்த பணிகள் நடக்கவில்லை. ஐரோப்பாவின் இத்தகைய முயற்சிகளுக்கு அமெரிக்காவில் நடைபெற்று வரும் அணைகள் தகர்ப்பு வேலைகளே முன்னுதாரணம் என பெர்னாண்டஸ் கரிடோ கூறுகிறார். அமெரிக்காவில் சராசரியாக 62 ஆண்டுகள் பழமையான 92,000 அணைகள் உள்ளன.

1999ஆம் ஆண்டு கென்னபெக் ஆற்றின் மீது எட்வர்ட்ஸ் அணை அகற்றப்பட்டதே அமெரிக்காவின் முதல் பெரிய அணை அகற்றப்பட்ட சம்பவம். 1837இல் கட்டப்பட்ட அந்த அணையின் உரிமம் 1997இல் காலாவதியானபோது, ஃபெடரல் எரிசக்தி ஒழுங்குமுறை ஆணையம் அதை புதுப்பிக்கவில்லை. ஆற்றின் சுற்றுச்சூழல் நன்மைகளுக்கு அது முன்னுரிமை அளித்தது. இதுவரை கிட்டத்தட்ட 2,000 அணைகள் அமெரிக்க நதிகளில் இருந்து அகற்றப்பட்டுள்ளன. அதாவது எட்வர்ட்ஸ் அணை அகற்றப்பட்டதிலிருந்து 76% அணைகள் அகற்றப்பட்டுள்ளன.

 
ஐரோப்பாவில் இடிக்கப்படும் பழைய அணைகள்

பட மூலாதாரம்,MIKKO NIKKINEN / STORYMAKERS 2021

அணைகள் இடிக்கப்படுவது எப்படி?

அணைகள் வெடிப்பொருட்கள் மூலமாக உடனடியாக உடைத்துவிட முடியாது. மாறாக, அணையை அகற்றுதல் என்பது நுட்பமாக திட்டமிடப்பட்ட ஒரு பொறியியல் பணி. ஹைடோலான்ஜோகி ஆற்றில், புல்டோசர்கள் படிப்படியாக கான்கிரீட் சுவர்களை உடைத்தன. இதனால் நீர் மெதுவாக வெளியேற்றப்பட்டது.

"அணைக்கு பின்னால் என்ன இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்வது செயல்முறையின் ஒரு பகுதியாகும். வண்டல் எங்கே முடிகிறது? வண்டல் அனைத்தும் தோண்டி எடுக்கப்படுகிறதா? பாதிப்பைக் குறைக்கும் உத்திகள் என்ன? என அனைத்தையும் ஆராய்வோம்" என்று ஃபோலி கூறுகிறார்.

இன்றுவரை மிகப்பெரிய நதி மறுசீரமைப்பு திட்டங்களில் ஒன்று பிரான்ஸின் நார்மண்டியில் உள்ள செலூன் ஆற்றில் நடந்துள்ளது. 2019 மற்றும் 2023க்கு இடையில் இரண்டு பெரிய அணைகள் அகற்றப்பட்டு, ஆற்றின் 60 கிமீ (37 மைல்) நீர்வழித்தடம் திறக்கப்பட்டது. 1920களில் இருந்து செயல்படும் இரண்டு அணைகளும் ஒரு நூற்றாண்டு காலமாக அட்லாண்டிக் சால்மன், லாம்ப்ரேஸ் மற்றும் ஐரோப்பிய ஈல்கள் போன்ற மீன்களின் இடம்பெயர்வை முற்றிலும் தடுத்துவிட்டன.

"கனரக பொறியியல் பணிகள் மூலம் நீர் மெதுவாக வெளியேற்றப்பட்டதால், அணையின் பின்புறம் குவிந்திருந்த வண்டல் மண் கரைகளை மீண்டும் கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்டது. தாவரங்கள் மிக விரைவாக மீண்டும் வளர்ந்தன, உண்மையில் வண்டல் அதிக வளங்கள் நிறைந்ததாக இருந்தது. தாவரங்கள் கரைகளை உறுதிப்படுத்த உதவியது மற்றும் நிறைய உயிரினங்களுக்கு நிழல் மற்றும் தங்குமிடம் உருவாக்கவும் அது உதவியது" என்று திட்டத்தைக் கண்காணித்து வரும் இன்ரேயில் உள்ள செலூன் அறிவியல் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் லாரா சொய்சன்ஸ் கூறுகிறார்.

அணையை அகற்றுவதற்கான இயற்பியல் கூறுகளை மட்டும் கருத்தில் கொள்ளக்கூடாது. அணைகள் அமைந்திருக்கும் நிலப்பரப்புகளுடன் உள்ளூர் மக்களுக்கு வலுவான தொடர்புகள் இருக்கும் என்பதால் அணைகள் அகற்றப்பட்டதன் பின்னணியில் உள்ள காரணங்களை அவர்களிடம் தெரிவிப்பதும் முக்கியம் என்று செலூன் திட்டம் அறிவுறுத்துகிறது.

"இந்த அணைகள் நீண்ட காலமாக இருக்கும் போது, ஒரு நதி சுதந்திரமாக ஓடுவது எப்படி இருக்கும் என்பதை மக்களுக்குக் காண்பிப்பது சவாலாக இருக்கும்" என்கிறார் ஃபோலே.

செலூன் ஆற்றில் அணை அகற்றும் பணிக்கு முன்பு, உள்நாட்டில் வசிக்கும் மக்கள் அணைகளுக்குப் பின்னால் உள்ள ஏரிகளை படகு சவாரி மற்றும் மீன்பிடித்தல் போன்ற பல நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தினர். ஆனால் நீர்த்தேக்கங்களில் நச்சு சயனோபாக்டீரியா வளர்ந்து கொண்டிருந்தது. இறுதியில் அந்த நடவடிக்கைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. " என இன்ரே செலூன் அறிவியல் திட்டத்தின் ஆராய்ச்சி இயக்குனர் ஜீன்-மார்க் ரூசல் கூறுகிறார்.

டென்மார்க்கின் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் மீன் சூழலியல் நிபுணர் கிம் பிர்னி-கௌவின் மற்ற அணைகளை அகற்றும் விஞ்ஞானிகளுடன் செலூன் ஆற்றுக்குச் சென்றபோது, உள்ளூர் மக்கள் மிகுந்த வருத்தமாக இருந்ததைக் கண்டனர். ஆனாலும் கூட, ஒருவருக்கு அதில் சந்தோஷம் இருந்ததாக பிர்னி-கௌவின் நினைவு கூறுகிறார்.

"அணை கட்டப்பட்டபோது அவரது தாத்தாவுக்கு அதில் ஈடுபாடு இல்லை. அந்த பகுதியின் நிலப்பரப்பில் ஏற்பட்ட மாற்றத்தை அவரது தாத்தா விரும்பவில்லை" என்று பிர்னி-கௌவின் கூறுகிறார்.

 
ஐரோப்பாவில் இடிக்கப்படும் பழைய அணைகள்

பட மூலாதாரம்,MIKKO NIKKINEN / STORYMAKERS 2021

அமெரிக்கா, ஐரோப்பாவில் அடுத்தடுத்து தகர்க்கப்படும் அணைகள்

அணைகளை அகற்றுவதால் அட்டகாசமான மாற்றங்கள் ஏற்படுகின்றன. செலூனில் தாவரங்கள் மீண்டும் வளர்ந்தது மட்டுமல்லாமல், மீன்கள் கூட மீண்டும் தென்பட்டன. இரண்டாவது அணை அகற்றப்பட்டதைத் தொடர்ந்து மேலும் சில சால்மன் மீன்கள் ஆற்றின் மேற்பகுதிக்கு வந்தன.

இதேபோல், ஐரோப்பிய விலாங்கு மீன்களும் இப்போது முழு நீர்ப்பிடிப்பையும் மீண்டும் ஆக்கிரமித்துள்ளன மற்றும் கடல் லாம்ப்ரே எனப்படும் மீன்களும் புதிய வாழ்விடங்களை முட்டையிடும் இடங்களாகப் பயன்படுத்துகின்றன.

மக்களுக்கும் அணையை அகற்றுவது நல்ல மாற்றத்தை ஏற்படுத்துகிறது. நீரின் நச்சுத்தன்மையை நீக்குவதுடன், மீட்டெடுக்கப்பட்ட ஆறுகளால் சுற்றுலா வாய்ப்புகளும் முன்னெடுக்கப்படுகின்றன. ஹிடோலான்ஜோகி ஆறு ஒரு சுற்றுலாத் தலமாக மாற தயாராக உள்ளது என்று ஒல்லிகைனென் கூறுகிறார்.

இதேபோல் அமெரிக்காவில் அணைகளை அகற்றுவதால் மக்கள் நதிக் கரைகளுக்குத் திரும்புகின்றனர். மைனே மாநிலத்தில் பெனோப்ஸ்கோட் நதியின் அணை அகற்றப்பட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, நீரின் தரம் மற்றும் நீச்சல், படகு சவாரிகள் மற்றும் வனவிலங்குகளைப் கண்டுகளிப்பது போன்ற நடவடிக்கைகளில் அதிகரித்துள்ளதாக ஒரு ஆராய்ச்சி கூறுகிறது.

மேலும், அணையை அகற்றுவதற்கு ஆதரவான முக்கிய பங்குதாரர்களில் ஒருவரான பெனோப்ஸ்கோட் இந்திய தேசத்துடன் ஆற்றின் சுதந்திரமான பாயும் நிலையை மீட்டெடுப்பது பெரும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்தது .

ஆரம்பத்தில் அணையை அகற்றும் திட்டம் சில சந்தேகங்களை ஏற்படுத்தியது என்றும் உள்ளூர் மக்கள் சிலர் கவலை தெரிவித்தனர் என்றும் ஆனால் இப்போது நீர் விளையாட்டு மைதானமாக மாறிவிட்டது, கயாக் போட்டிகள் நடத்தப்பட்டது. மக்கள் ஆற்றை இன்னும் அதிகமாக நேசிக்கிறார்கள் என்றும் கூறுகிறார் மூத்த விஞ்ஞானி ஜோசுவா ராய்ட்.

ஐரோப்பாவும் அமெரிக்காவும் நதிகள் இணைப்பை மீட்டெடுக்க அணைகளை அகற்றுவது ஒரு சாத்தியமான வழியாக இருக்கும் என்று நிரூபித்து காட்டினாலும், இதில் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. அமேசான், காங்கோ மற்றும் மீகாங் படுகை போன்ற முக்கிய நதிகளில் புதிய அணைகள் கட்டப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பது குறித்து ஆராய்ச்சியாளர்கள் கவலைப்படுகின்றனர்.

இதேபோன்ற கவலைகள் பால்கன் பகுதியிலும் உள்ளது. அங்கு ஏராளமான சிறிய நீர்மின் நிலையங்களை உருவாக்குவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. உலகில் வேறு எங்கும் சிறிய, குறைந்த திறன் கொண்ட நீர்மின் அணைகள் கட்டப்பட்டால் ஐரோப்பாவில் உள்ள அணைகளை அகற்றுவதில் அர்த்தமில்லை என்கிறார் கார்சியா டி லீனிஸ்.

"நாம் சற்று விரிவாக யோசிக்க வேண்டும். சிறிய அணைகள் ஒருபோதும் அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்யப் போவதில்லை, அவை மேலும் அதிக சேதத்தை ஏற்படுத்தப் போகின்றன. அதற்காக அணைகளே வேண்டாமென்று சொல்லவில்லை, ஆனால் நல்லதை விட சுற்றுச்சூழலுக்கு அதிக சேதத்தை ஏற்படுத்தும் பழைய அணைகளே எங்கள் இலக்கு" என்கிறார் கார்சியா டி லீனிஸ்.

https://www.bbc.com/tamil/articles/cndjyxprkw6o

நான் தோற்றால் இரத்தக்களறி - டிரம்ப்

1 month ago

Published By: RAJEEBAN   17 MAR, 2024 | 11:33 AM

image

2024 ஜனாதிபதி தேர்தலில் நான் தோற்றால் அது இரத்தக்களறியை ஏற்படுத்தும் என  முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சர்ச்சை கருத்தினை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்காவிற்கு வெளியே தயாரிக்கப்பட்ட கார்களிற்கு 100 வீத வரியை விதிப்போம் என தெரிவித்துள்ள டிரம்ப் நான் தெரிவு செய்யப்பட்டால் அந்த வெளிநாட்டு கார்களை விற்கமுடியாத நிலையேற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை டிரம்பின் இந்த கருத்து அவர் மற்றுமொரு ஜனவரி ஆறாம் திகதியை விரும்புகின்றார் என்பதை வெளிப்படுத்தியுள்ளது என ஜனாதிபதி ஜோ பைடனின் பிரச்சார பிரிவின் பேச்சாளர் ஜேம்ஸ் சிங்கெர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க மக்கள் டிரம்பின் தீவிரபோக்கினை தொடர்ந்து நிராகரித்துவருவதால் நவம்பர் தேர்தலில் அவர்கள் அவரை நிராகரிக்கப்போகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ள அவர் அமெரிக்க மக்கள் அவரின் வன்முறை மீதான விருப்பம் பழிவாங்கும் குணம் ஆகியவற்றை நிராகரிக்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/178924

Akira Toriyama Death-க்கு உலகம் முழுவதும் அஞ்சலி ஏன்? Dragon Ball உருவானது எப்படி?

1 month ago

Akira Toriyama: காமிக்ஸ் உலகில் நீண்ட நாட்களாக ஆதிக்கம் செலுத்தி வரும், உலக அளவில் பிரபலமான ஜப்பானிய மாங்காக்களில் ஒன்றான ட்ராகன் பால் என்ற மாங்கா தொடரை உருவாக்கிய அகிரா டொரியாமா  கடந்த மார்ச் 1ஆம் தேதி தனது 68வது வயதில் உயிரிழந்தார். ஒருவகையான மூளை ரத்தக்கசிவு நோயால் பாதிக்கப்பட்டு அவர் உயிரிழந்ததாக கடந்த வெள்ளிக்கிழமை தகவல் வெளியிடப்பட்டது. 

தங்கள் குழந்தைப் பருவத்தின் ஓர் அங்கமாக மாறிப்போன கதாபாத்திரங்களை உருவாக்கிய அகிரா டொரியாமாவுக்கு உலகம் முழுவதும் உள்ள அனிமே ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர். 

உலகம் முழுவதும் பிரபலமான டிராகன் பால் இரு நாடுகளிடையே ராஜ்ஜிய ரீதியிலான சச்சரவு ஏற்படக் காரணமாக இருந்தது என்பதை உங்களால் நம்ப முடிகிறதா?

அகிரா டொரியாமா டிராகன் பால் கதையை உருவாக்கியது எப்படி? காமிக் ரசிகர்கள் இடையே அது ஏற்படுத்திய தாக்கம் என்ன? போன்றவற்றை இந்த காணொளியில் விரிவாக பார்க்கலாம்.

மனித எலும்புகளின் சேகரிப்பகம்

1 month ago
இந்திய வணிகர் கிடங்கில் மீட்ட 1,500 குழந்தைகளின் எலும்புக் கூடுகள் - மருத்துவ உலகை புரட்டிப்போட்ட சம்பவம்
மனித எலும்புகளின் சேகரிப்பகம்
கட்டுரை தகவல்
  • எழுதியவர், எலியோனோர் ஃபிங்கெல்ஸ்டீன்
  • பதவி, பிபிசிக்காக
  • 40 நிமிடங்களுக்கு முன்னர்

சுமார் 5 கோடி மதிப்புள்ள மனித எலும்புகளைச் சேகரித்து வைத்துள்ளார் அமெரிக்காவை சேர்ந்த ஜான் பிச்சயா ஃபெர்ரி. சமூக ஊடகங்களில் பலர் இவரைப் பின்தொடர்கின்றனர்.

எலும்பியல் துறைக்கு இவரது பணி புத்துயிர் அளிக்கிறது. நியூயார்க் நகரின் புரூக்ளினில் உள்ள அவரது கிடங்கிற்குச் சென்றபோது, தான் சேகரித்த எலும்புகள் மற்றும் கண்டுபிடித்த கண்கவர் பொருட்களைப் பற்றிய ஒரு பார்வையை நமக்கு அளித்தார்.

'முறையாக சேகரிக்கப்பட்ட மனித எலும்புகள்' என்றால் என்ன? அவற்றைச் சேகரிப்பதால் எலும்பியல் துறைக்கு என்ன பயன்? மனித இனம் குறித்தும், அதன் வரலாறு குறித்தும் இந்த எலும்புகள் மூலம் எவ்வாறு அறிந்து கொள்ளலாம்?

 
மனித எலும்புகளின் சேகரிப்பகம்
மனித எலும்புகளின் சேகரிப்பகம்

"பல வீடுகளின் அடித்தளத்தில், பழங்கால குடியிருப்புகளின் பாதாள அறைகளில் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான மனித எலும்புகள் குவிந்து கிடக்கின்றன. அவற்றைக் கண்டுபிடிக்கும் மக்களுக்கு அதை என்ன செய்வதென்று தெரியவில்லை. முறையாகச் சேகரிக்கப்பட்ட மனித எலும்புகளைக் கொண்ட நாட்டின் மிகப்பெரிய மனித எச்சங்களின் சேகரிப்பகம் இது," என்கிறார் ஜான் பிச்சயா ஃபெர்ரி.

ஒருகாலத்தில் மருத்துவ ஆய்வுகளுக்காக எலும்புகளை விற்பனை செய்யும் நடைமுறை பிரபலமாக இருந்தது. 1980களில் அந்த முறை முடிவுக்கு வந்தது. அப்போது பெறப்பட்ட எலும்புகளை வாங்கித் தனது சேகரிப்பகத்தில் ஜான் வைத்துள்ளார்.

"மருத்துவ ஆய்வுகளுக்காக தங்கள் உடலை தானமாக அளித்தவர்களின் மனித எச்சங்கள் இவை. சட்டத்திற்குப் புறம்பாக கல்லறைகளில் இருந்தோ அல்லது பழங்கால புதைவிடங்களில் இருந்தோ இதைப் பெறவில்லை. இவை பழங்குடிகளின் எலும்புகளும் இல்லை. அத்தகைய பொருட்களை நான் வாங்குவதில்லை," என்கிறார் ஜான்.

அமெரிக்காஅல்லது ஐரோப்பாவைச் சேர்ந்த மருத்துவ மாணவர்களுக்கும் வல்லுனர்களுக்கும் 1980கள் வரை ஆய்வுப் பணிகளுக்காக அசல் மனித எலும்புகளை வாங்க வேண்டிய தேவை இருந்தது. ஆனால் இன்று அதுபோன்ற ஆயிரக்கணக்கான மனித எலும்புகள், ஏலத்தின் மூலமாக அல்லது குடும்பச் சொத்தாக பல தனி மனிதர்களின் பொறுப்பில் உள்ளது.

"ஒரு மாதத்திற்கு 30 முதல் 50 மின்னஞ்சல்கள் வரை எங்களுக்கு வருகின்றன. உதாரணமாக, 'எங்கள் தாத்தா இறந்துவிட்டார், அவரது வீட்டின் அடித்தளத்தில் இருந்த அவரது அறையைச் சுத்தம் செய்தபோது ஒரு மனித எலும்புக்கூடு கிடைத்தது. அதை வைத்து என்ன செய்வதென்று தெரியவில்லை, பார்த்தால் பயமாக இருக்கிறது' என்பது போன்ற மின்னஞ்சல்கள் அவை," என்கிறார் ஜான்.

தொடர்ந்து பேசிய ஜான், "இவை அமிலங்களைப் பயன்படுத்தி சுத்தம் செய்யப்பட்ட எலும்புகள் என்பதால் இதில் டி.என்.ஏ ஏதுமில்லை. அதனால் இவற்றை டி.என்.ஏ ஆய்வுகளுக்குப் பயன்படுத்த முடியாது. இவற்றைப் புதைப்பதும் சட்டப்படி குற்றம்.

அமெரிக்காவில் உள்ள பெரும்பாலான மருத்துவ அருங்காட்சியகங்கள் அதிக அளவிலான மனித எலும்புகளைக் கையாளும் விதத்தில் வடிவமைக்கப்படவில்லை. எனவே மனித எலும்புகளை வைத்திருப்பவர்களுக்கு இதை என்ன செய்வது என்ற கேள்வி எழுகிறது," என்று கூறுகிறார்.

 
மனித உடல்களுக்காக அதிகரித்த கல்லறைத் திருட்டுகள்
மனித எலும்புகளின் சேகரிப்பகம்

மனித எலும்புகள் குறித்து மேலும் தெரிந்துகொள்ளும் முன், மருத்துவ வரலாற்றின் ஒரு விசித்திரமான அத்தியாயத்தைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

"அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளில், 17 மற்றும் 18ஆம் நூற்றாண்டுகளின்போது கல்வித்துறையில் மனித உடல்கள், எலும்புகளுக்கான தேவை அதிகமாக இருந்தது. இதனால் கல்லறைகளில் இருந்து பிணங்கள் திருடப்படுவது அதிகமாக நடைபெற்றது. இதைத் தடுக்க எண்ணற்ற சட்டங்கள் இயற்றப்பட்டன. அதில் ஒன்று கொலைச் சட்டம், 1751.

அதன்படி ஒருவர் கொலைக் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவரது உடல் மருத்துவ ஆய்வுகளுக்குப் பயன்படுத்தப்படலாம். ஆனாலும்கூட அப்போது மனித எச்சங்களுக்கான தேவை குறையவில்லை. இந்த நிலை மோசமானதால், கல்லறைகளுக்கு இரும்பு வேலிகள், கூண்டுகள் போட வேண்டிய சூழல் ஏற்பட்டது," என்று கூறுகிறார் ஜான்.

உடற்கூறியல் சட்டம் 1832, உயிரற்ற மனித உடல்களை மருத்துவ ஆய்வுகளுக்காக பயன்படுத்த அனுமதி வழங்கியது. சிறைச்சாலைகள், தொழிற்சாலைகள், மருத்துவமனைகளில் இறந்தவர்களின் உடல்களை வாங்க 48 மணிநேரத்திற்கும் மேலாக யாரும் வரவில்லை என்றால், அந்த உடல்கள் ஆய்வுகளுக்கு வழங்கப்பட்டன.

இறந்தவர்களின் உடல்களை மருத்துவ ஆய்வுகளுக்காக தானமாக கொடுப்பதற்கான அனுமதியும் வழங்கப்பட்டது.

 
மனித எலும்புகளின் சேகரிப்பகம்
படக்குறிப்பு,

ஒருவர் கொலைக் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவரது உடல் மருத்துவ ஆய்வுகளுக்குப் பயன்படுத்தப்படலாம் என்ற சட்டம் 1751இல் இயற்றப்பட்டது.

இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட குழந்தைகளின் எலும்புக்கூடுகள்
மனித எலும்புகளின் சேகரிப்பகம்

"மருத்துவ எலும்பு வணிகம் 1800களில் தொடங்கி, 1920 முதல் 1984 வரையிலான காலகட்டத்தில் பெருமளவில் நடைபெற்றது" என்று குறிப்பிடுகிறார் ஜான்.

இவ்வாறு தொடங்கப்பட்ட எலும்பு வணிகம் உலகம் முழுவதும் பரவியது. 1950களில் எலும்புகளை ஏற்றுமதி செய்வதில் இந்தியா தான் முன்னணியில் இருந்தது.

"உங்கள் உறவினர்களின் உயிரற்ற உடல்களை மருத்துவ ஆய்வுகளுக்காக தானமாக வழங்கினால், அவர்களின் இறுதிச் சடங்குக்கான செலவை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் அல்லது ஒரு குறிப்பிட்ட தொகையைத் தருகிறோம் என அப்போது பல மருத்துவ நிறுவனங்கள் கூறின. இதனால் பல குழப்பங்கள் ஏற்பட்டன, பல குற்றங்களுக்கு அது வழிவகுத்தது" என்கிறார் ஜான்.

இந்தியாவில் 1985ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் வெளியான ஒரு அதிர்ச்சிகரமான செய்தியால், உலகளவில் இந்த வணிகம் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தது.

"ஒரு எலும்பு வணிகரின் கிடங்கில் இருந்து 1500 குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனால் இந்த முறைக்கு நாடு முழுவதும் தடை விதிக்கப்பட்டது," என்கிறார் ஜான்.

இந்தியாவில் போடப்பட்ட இந்தத் தடையால் மருத்துவ நிறுவனங்கள் செயற்கை எலும்புக்கூடுகளைப் பயன்படுத்தத் தொடங்கின. இன்று மருத்துவ எலும்பு வணிகம் என்பது ஒரு மறுவிற்பனை சந்தையாக மாறிவிட்டது. அமெரிக்காவின் லூசியானா, டென்னஸி, ஜார்ஜியா ஆகிய மாநிலங்களைத் தவிர்த்து பிற மாநிலங்களில் தங்களிடம் உள்ள மனித எலும்புகளை விற்க மக்களுக்கு அனுமதியுண்டு.

"எலும்புகளை நாங்கள் பொது மக்களுக்கு விற்பதில்லை. பள்ளிகள், பல்கலைக்கழகங்களே எங்களது முக்கியமான வாடிக்கையாளர்கள். தேடுதல் மற்றும் மீட்புக் குழு உறுப்பினர்களே எங்களது இரண்டாவது பெரிய வாடிக்கையாளர்கள்.

எங்களிடம் எலும்புகளை வாங்கி, மோப்ப நாய்களுக்கு சடலங்களைக் கண்டறிவதற்கான பயிற்சிகளை அளிக்கப் பயன்படுத்துகிறார்கள். மனித எச்சங்களின் நாற்றத்தை மோப்ப நாய்கள் இந்த எலும்புகள் மூலம் தெரிந்துகொள்ளும்" என்று கூறுகிறார் எலும்பு சேகரிப்பாளர் ஜான்.

தனது சமூக ஊடகப் பக்கங்கள் மூலமாக மனித எலும்புகள் குறித்த மக்களின் பொதுப் பார்வையை மாற்ற முயல்கிறார் ஜான்.

"இவை வெறும் காட்சிப் பொருட்கள் அல்ல. ஒரு காலத்தில் உயிரோடு வாழ்ந்த, நம்மைப் போன்ற மனிதர்களின் எலும்புகள் இவை. எனவே இவற்றை மரியாதையோடும், கண்ணியத்தோடும் கையாள வேண்டும். இவற்றைப் பாதுகாக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம்," என்கிறார் ஜான்.

https://www.bbc.com/tamil/articles/c25lpw82xr3o

ரஷ்யாவில் ஜனாதிபதி தேர்தல் இன்று நடைபெறுகிறது.

1 month ago
1-638x375.png ரஷ்யாவில் ஜனாதிபதி தேர்தல் இன்று நடைபெறுகிறது.

அதன்படி, இன்று முதல் 3 நாட்களுக்கு ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதுடன். ரஷ்யாவின் கிழக்கு பகுதிகளில் அந்நாட்டு நேரப்படி இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

இந்நிலையில், வாக்குரிமையை உணர்ந்து வாக்காளர்கள் செயற்பட வேண்டும் என ரஷ்ய ஜனாதிபதி புடின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உக்ரைன் மீது போர் தொடுத்துவரும் ரஷ்யா தற்போது ஜனாதிபதி தேர்தலை சந்தித்திருக்கிறது.

உக்ரைன் போரால் இராணுவச் செலவினம் அதிகரிப்பு, பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் ரஷ்யாவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெபெற்று வருகிறது.

உலகின் சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவராக வலம் வரும் புடின், சுமார் 20 வருடமாக ஜனாதிபதியாக பதவி வகித்து வருகிறார்.

இதனிடையே உக்ரைன் மீது போர் தொடங்கிய பிறகு புடினுக்கு உள்நாட்டில் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின.

மேலும் சமீபத்தில் ரஷ்ய எதிர்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னி மர்மமான முறையில் உயிரிழந்ததும் புடினுக்கு கடும் நெருக்கடியை கொடுத்தது.

இந்த தேர்தல் புடினின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தல் என்பதால், புடின் வெற்றி பெற்றி மீண்டும் ஆட்சி அமைக்க தீவிரம் காட்டி வருகின்றார்.

அதன்படி, இந்த ஜனாதிபதி தேர்தலில் புடின் சுயேட்சையாக போட்டியிடுகிறார்.

புடினை எதிர்த்து மார்க்சிஸ்ட் உள்ளிட்ட 3 கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இந்த தேர்தலில் வெற்றி பெற்று அடுத்த 06 ஆண்டுகளுக்கு ரஷ்யாவின் ஜனாதிபதியாக புடின் நீடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் சுமார் 11.4 கோடி பேர் வாக்களிக்க உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

https://athavannews.com/2024/1373584

பழுதடைந்த நிலையில் பல நாட்கள் கடலில் தத்தளித்த படகு - உணவு நீர் இன்றி குடியேற்றவாசிகள் பலர் பலி - மத்திய தரை கடலில் துயரம்

1 month ago

Published By: RAJEEBAN   15 MAR, 2024 | 10:42 AM

image
 
மத்தியதரை கடலில் இயந்திரம் பழுதடைந்ததை தொடர்ந்து படகு dinghy  நடுக்கடலில் பல நாட்கள் தத்தளித்ததால் குடியேற்றவாசிகள் பலர் உணவு நீரின்றி உயிரிழந்துள்ளனர்.

25 பேரை எஸ்ஓஎஸ் மெடிட்டரானி என்ற மனிதாபிமான அமைப்பின் படகுகள் இவர்களை  காப்பாற்றியுள்ளன.

லிபியாவின் ஜாவியா கடற்கரையிலிருந்து தாங்கள் புறப்பட்டதாகவும் பலநாட்களின் பின் மீட்கப்பட்டதாகவும் உயிர் தப்பியவர்கள் தெரிவித்துள்ளனர்.

migrants_2.jpg

படகு பயணத்தை ஆரம்பித்து மூன்று நாட்களின் பின்னர் அதன் இயந்திரம் பழுதடைந்ததாகவும் இதனால் தாங்கள் நடுக்கடலில் தத்தளித்ததாகவும் உயிருடன் மீட்கப்பட்ட குடியேற்றவாசிகள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் பெண்களும் ஒரு குழந்தையும் உள்ளதாக மீட்கப்பட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் கடலில் மூழ்கி இறக்கவில்லை உணவு குடிநீர் இன்மையால் உயிரிழந்தனர் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட படகினை தொலைக்காட்டிகளை வைத்து அவதானித்த அரசசார்பற்ற அமைப்பு இத்தாலிய கடலோர காவல்படையினருடன் சேர்ந்து மீட்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.

migrants1.jpg

உயிர்தப்பியவர்கள் மிகவும் பலவீனமான நிலையில் உள்ளனர் என அரசசார்பற்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

இருவர் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டனர் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் ஏனைய 23 பேரை எங்களின் கப்பலில்  வைத்திருக்கின்றோம் எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

ஒரு வார காலமாக கடலில் தத்தளித்ததால் படகில் இருந்தவர்கள் பெரும் துயரத்தில் சிக்குண்டனர். உணவும் குடிநீரும் விரைவில் தீர்ந்துவிட்டது என உயிர்தப்பியவர்கள் தெரிவித்தனர் என எஸ்ஓஸ்எஸ் அமைப்பின்  பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

migrants_1.jpg

படகு கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தவேளை பலர் உயிரிழந்தனர். தனது மனைவியையும் ஓன்றரை வயது குழந்தையையும் பறிகொடுத்த ஒருவரை பார்த்தேன். முதலில் குழந்தை உயிரிழந்துள்ளது நான்கு நாட்களின் பின்னர் தாயார் உயிரிழந்துள்ளார் என அரசசார்பற்ற அமைப்பின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/178775

பால் அலெக்சாண்டர்: 78 ஆண்டுகள் இரும்பு நுரையீரலுடன் வாழ்ந்த அதிசய மனிதர் காலமானார்

1 month ago
பால் அலெக்சாண்டர்: 78 ஆண்டுகள் இரும்பு நுரையீரலுடன் வாழ்ந்த அதிசய மனிதர் காலமானார்

பட மூலாதாரம்,GOFUNDME

கட்டுரை தகவல்
  • எழுதியவர், இடோ வோக் மற்றும் கேட் ஸ்னோடன்
  • பதவி, பிபிசி நியூஸ்
  • 5 மணி நேரங்களுக்கு முன்னர்

'இரும்பு நுரையீரல் கொண்ட மனிதர்' என்று அழைக்கப்பட்ட போலியோ போராளி பால் அலெக்சாண்டர் 78 வயதில் காலமானார்.

கடந்த 1952இல் பால் அலெக்சான்டர் தனது ஆறு வயதில் போலியோ நோயால் பாதிக்கப்பட்டார், இதனால் அவரின் கழுத்துக்கு கீழ் உள்ள பகுதி முழுமையாகச் செயலிழந்தது. இந்த நோயால் அவரால் சுதந்திரமாகச் சுவாசிக்க முடியாமல் போனது.

எனவே மருத்துவர்கள் அவரை உலோக சிலிண்டருக்குள் வைத்து அதன் மூலம் உயிர்வாழ வழிவகுத்தனர். வாழ்நாள் முழுவதும் அந்த இரும்பு சிலிண்டருடன் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அதன் பின்னர் அலெக்சாண்டர் சட்டப் படிப்பில் பட்டம் பெற்றார். மேலும், வழக்கறிஞராகப் பயிற்சி பெற்றார், அத்துடன் ஒரு சுய சரிதை நூலையும் வெளியிட்டிருக்கிறார்.

"பால் அலெக்சாண்டர், 'தி மேன் இன் அயர்ன் லங்'(The Man in Iron Lung) நேற்று காலமானார்" என்று நிதி திரட்டும் இணையதளம் ஒன்று வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது.

 
'பால் ஒரு அற்புதமான மனிதர்'
பால் அலெக்சாண்டர்: 78 ஆண்டுகள் இரும்பு நுரையீரலுடன் வாழ்ந்த அதிசய மனிதர் காலமானார்

பட மூலாதாரம்,PHILIP ALEXANDER

படக்குறிப்பு,

பாலின் சகோதரர், பிலிப் அலெக்சாண்டர்.

"இரும்பு சிலிண்டர் உதவியோடு வாழ்ந்த பால், கல்லூரிக்குச் சென்றார், ஒரு வழக்கறிஞரானார், மேலும் ஒரு எழுத்தாளராகவும் இருந்தார். பால் ஒரு அற்புதமான முன்மாதிரி," என்கிறார் பாலின் சகோதரர், பிலிப் அலெக்சாண்டர்.

பால் அலெக்சாண்டர் பற்றிக் குறிப்பிடுகையில் "எப்போதுமே பிறரை புன்னகையுடன் வரவேற்கும் அன்பான நபர் அவர்" என்று நினைவு கூர்ந்தார், மேலும் பாலின் புன்னகை புத்துணர்ச்சியூட்டக் கூடியதாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.

"என் சகோதரர் பால் என்னைப் பொறுத்தவரையில் ஓர் இயல்பான மனிதர். அனைத்து சகோதரர்களைப் போன்று நாங்களும் சண்டையிடுவோம், விளையாடினோம், நேசித்தோம், ஒன்றாக கச்சேரிகளுக்குச் சென்றோம். அவர் ஒரு இயல்பான சகோதரர், நான் அவரின் நிலை பற்றி ஒருபோதும் நினைத்ததில்லை," என்று பிலிப் பிபிசியிடம் கூறினார்.

நோயின் தாக்கத்தால், உணவு உண்பது உட்பட சுயமாக எந்த அன்றாடப் பணிகளையும் செய்ய முடியாமல் போன சூழலிலும், தனது சகோதரர் தன்னிறைவு பெற்ற மனிதராக வாழ்ந்ததாக பிலிப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

மேலும் "அவரது ராஜ்ஜியத்தில் அவரே ராஜா. அவருக்கு உதவும் நபர்களுக்கும் சிரமம் கொடுக்காமல் உதவுபவர்," என பிலிப் கூறினார்.

கடந்த சில வாரங்களில் பாலின் உடல்நிலை மோசமானது. அவரின் இறுதி நாட்களை தன் சகோதரருடன் கழித்தார். அவர்கள் மகிழ்ச்சியாக ஐஸ்கிரீம்களை பகிர்ந்து கொண்டனர்.

"அவரது வாழ்வின் இறுதி தருணங்களில் அவருடன் இருப்பது என் பாக்கியம்" என்று பிலிப் குறிப்பிட்டார்.

 
உலோக உருளைக்குள் வாழ்ந்தவர்
பால் அலெக்சாண்டர்: 78 ஆண்டுகள் இரும்பு நுரையீரலுடன் வாழ்ந்த அதிசய மனிதர் காலமானார்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பால் அலெக்சாண்டர் 1952இல் நோய்வாய்ப்பட்டபோது, அவரது சொந்த ஊரான டல்லாஸில் உள்ள மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து அவரது உயிரைக் காப்பாற்றினர். ஆனால் போலியோ பாதிப்பால் அவரால் சுயமாகச் சுவாசிக்க முடியவில்லை.

அதன் விளைவாக இரும்பு நுரையீரல் என்று அழைக்கப்படும் - ஒரு உலோக உருளை அவரது கழுத்து வரை உடலைச் சுற்றிப் பொருத்தப்பட்டது. அந்த உலோக உருளைக்குள்தான் அவர்தம் வாழ்நாளைக் கழிக்க வேண்டும் என்ற சூழல் ஏற்பட்டது.

செயற்கை இரும்பு நுரையீரலை பால் 'பழைய இரும்புக் குதிரை' என்றே குறிப்பிடுவார். அந்த பழைய இரும்புக் குதிரையால்தான் அவர் சுவாசித்தார். பெல்லோஸ் என்னும் உபகரணம் சிலிண்டரில் இருந்து காற்றை உறிஞ்சி, அவரது நுரையீரலை விரிவடையச் செய்து, காற்றை உள்வாங்கச் செய்தது. காற்று மீண்டும் உள்ளே நுழையும்போது, அதே செயல்முறை தலைகீழாக நிகழ்ந்து அவரது நுரையீரலைச் சுருங்க செய்தது.

பல ஆண்டுகளுக்குப் பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக அலெக்சாண்டர் சுயமாக சுவாசிக்கவும் கற்றுக்கொண்டார், இதனால் அவர் குறுகிய காலத்திற்கு அந்த இரும்பு நுரையீரலை விட்டு வெளியேற முடிந்தது.

இரும்பு நுரையீரல் பொருத்தப்பட்ட பெரும்பாலான போலியோ போராளிகள் போல, அவரும் நீண்ட காலம் உயிர்வாழ மாட்டார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் நீண்டகாலம் உயிர் வாழ்ந்தார். 1950களில் போலியோ தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட பிறகும், மேற்கத்திய நாடுகளில் போலியோவை ஒழித்த பிறகும் அவர் உயிர் வாழ்ந்தார்.

 
கின்னஸ் உலக சாதனை அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டவர்
பால் அலெக்சாண்டர்: 78 ஆண்டுகள் இரும்பு நுரையீரலுடன் வாழ்ந்த அதிசய மனிதர் காலமானார்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பால் உயர்நிலைப் பள்ளியில் தேர்ச்சி பெற்றார், பின்னர் தெற்கு மெதடிஸ்ட் பல்கலைக்கழகத்தில் பயின்றார். 1984இல், ஆஸ்டினில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பில் பட்டம் பெற்றார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வழக்கறிஞராகப் பயிற்சி மேற்கொள்ள அவருக்கு அனுமதி கிடைத்தது. அதன் பின்னர் பல ஆண்டுகளுக்கு வழக்கறிஞராகப் பணியாற்றினார்.

"நான் என் வாழ்க்கையில் ஏதேனும் செய்யப் போகிறேன் என்றால், அது கண்டிப்பாக மனம் சார்ந்த விஷயமாக மட்டுமே இருக்க முடியும் என்பதை நான் அறிவேன்’’ என்று பால் 2020இல் கார்டியன் செய்தி நிறுவனத்திற்கு அளித்தப் பேட்டியில் கூறினார்.

அதே ஆண்டு, அவர் தன் சுயசரிதை நூலையும் வெளியிட்டார், நண்பரின் உதவியுடன் ஒரு பிளாஸ்டிக் குச்சியைப் பயன்படுத்தி ஒரு விசைப் பலகையில் தட்டச்சு செய்து இந்த நூல் எழுதப்பட்டது. இதை எழுதி முடிக்க அவருக்கு எட்டு ஆண்டுகள் எடுத்ததாகக் கூறப்படுகிறது.

பாலின் சகோதரர் பிலிப், அந்த சுயசரிதை புத்தக வெளியீட்டைத் தொடர்ந்து, உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு அவரது சகோதரர் எவ்வளவு உத்வேகம் அளித்து முன்னோடியாகத் திகழ்கிறார் என்பதை உணர்ந்ததாகக் கூறினார்.

மருத்துவத்தில் ஏற்பட்ட முன்னேற்றங்களால் 1960களில் இரும்பு நுரையீரல் மருத்துவ முறை வழக்கற்றுப் போய்விட்டது, அதற்குப் பதிலாக வென்டிலேட்டர்கள் பயன்படுத்தப்பட்டன. ஆனால் அலெக்சாண்டர் இரும்பு சிலிண்டருக்கு பழகிவிட்டதால் அந்த உருளையிலேயே தொடர்ந்து வாழ்ந்து வந்தார்.

இரும்பு நுரையீரலில் அதிக காலம் வாழ்ந்தவர் என்று கின்னஸ் உலக சாதனை அமைப்பால் அவர் அங்கீகரிக்கப்பட்டார்.

https://www.bbc.com/tamil/articles/czdzkp5452go

காசாவில் பட்டினி ஒரு போர் ஆயுதமாக பயன்படுத்தப்படுகின்றது - ஐரோப்பிய ஒன்றியம்

1 month ago

Published By: RAJEEBAN   13 MAR, 2024 | 12:00 PM

image

காசாவில் பட்டினி  ஒரு போர் ஆயுதமாக பயன்படுத்தப்படுகின்றது என ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார கொள்கை தலைவர் தெரிவித்துள்ளார்.

காசாவிற்குள் போதியளவு மனிதாபிமான பொருட்கள் செல்ல முடியாமல் உள்ளதை மனிதர்கள் ஏற்படுத்திய பேரழிவு என ஜோசப்பொரொல் வர்ணித்துள்ளார்.

போதிய தரைப்பாதைகள் இல்லாததே காசாவில் உருவாகியுள்ள மனிதாபிமான நெருக்கடிக்கான காரணம் என  ஐநாவில் உரையாற்றுகையி;ல் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார கொள்கை தலைவர் தெரிவித்துள்ளார்.

மக்கள் தற்போது தங்களது உயிர்வாழ்தலிற்காக போராடுகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

காசாவிற்குள் மனிதாபிமான உதவிகள் செல்லவேண்டும் ஐரோப்பிய ஒன்றியம் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது இது மனிதனால் உருவான நிலைமை கடல் மற்றும் வான்வெளி மூலம் விநியோகங்களை மேற்கொள்வதற்கான மாற்றுவழிகளை ஆராய்ந்து வருகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வீதிவழியாக மனிதாபிமான உதவிகளை வழங்கும் நடவடிக்கைகள் செயற்கையாக முடக்கப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பட்டினி என்பது போர் ஆயுதமாக பயன்படுத்தப்படுகின்றது உக்ரைனில் இது இடம்பெறும்போது கண்டிக்கும் நாங்கள் காசாவிலும் அதேவார்த்தைகளை பயன்படுத்தவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/178604

Checked
Thu, 04/18/2024 - 14:33
உலக நடப்பு Latest Topics
Subscribe to உலக நடப்பு feed
texte-feed
svsv dfde fe